இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.
அன்புடன் அகத்திய மாமுனிவர் 25.03.2026 அன்று திருப்பதியில் உரைத்த வாக்கு.
===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
===========================
ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன், அகத்தியன்.
அப்பனே, நலங்கள்.
அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, சரியாகவே, சில குறிப்பிட்ட நேரத்திலே, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட . அப்பனே, பின் அழகாக, தாயாருடனே, அப்பனே, பின் வலம் வருவான் அப்பனே, பின் அழகாக.
அப்பனே, சரியாகவே, அப்பனே, பின், அதாவது, எதை என்று அறிய. இதனால், அப்பனே, அழகாக, அனைவரையும் பார்த்துவிட்டான் என்பேன் அப்பனே.
அதனால், கவலை வேண்டாம் என்பேன், அப்பனே.
அப்பனே. பலபேர், அப்பனே, பின் மனதில், அப்பனே, பல அழுக்குகளை வைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பேன் அப்பனே.
ஆனாலும், அப்பனே, எதை என்று புரிய, அப்பனே, பின், நிச்சயம் மனதால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் வெளியில் நின்று, அப்பனே, “இறைவா” என்று, அப்பனே, பின் எதை என்று அறிய, அப்பனே, பின் தரிசித்தாலும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அவன் பார்ப்பான் என்பேன் அப்பனே.
கவலை வேண்டாம் என்பேன் அப்பனே நலமாகவே.
அப்பனே. இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அவனுடைய வேலையே , அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, சுற்றுவதுதான், நிச்சயம் தன்னில் கூட. இவ்மலையை சுற்றி வலம் வருவதுதான்.
ஆனாலும், அதிக அளவு புண்ணியங்கள் இருந்தால், நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட, அப்புண்ணியங்களே, நிச்சயம், பின், அதாவது, பின், அதாவது, பின் பெருமானும், நிச்சயம் அழகாக, பின் நிச்சயம் தன்னில் கூட. புண்ணியம் இருப்போரை, நிச்சயம், அதாவது, அமைதியாக, பின் தலை குனிந்தே நடந்து வருவான் நிச்சயம் தன்னில் கூட .
பின், அதாவது, எதை என்று புரிய. இதனால், புண்ணிய ஆன்மாக்கள் மட்டும், அவன் தன் பின் கண்களில் தெரியும். அதனால்தான், பின் புண்ணியம் செய்யுங்கள், புண்ணியம் செய்யுங்கள் என்றெல்லாம்.
அதாவது, புண்ணியங்கள் எவை என்று அறிந்து, அறிந்தும் கூட, பின் செப்பிக்கொண்டே, பல மனிதர்களுக்கு கூட.
இதனால், நல்லவற்றையாக, பின் நிச்சயம் எண்ணினால், நிச்சயம், அவன் நல் மனது மட்டும், பின், அதாவது, பின் வெளிச்சம் வருகின்றதே, அதுபோல், நிச்சயம், எதை என்று அறிய, நாராயணனுக்கு தெரியும் அப்பா.
இதனால்தான், அப்பா, எதை என்று புரிய, பின், அதாவது, பின் உள்ளே சென்றாலும், பல, பின் அழுக்குகள், பின் எதை என்று புரிய இருந்தாலும், நிச்சயம், அவனுக்கு இப்படித்தான் அருள்கள் கொடுக்கின்றான்.
புண்ணியம், அதாவது, எண்ணங்கள் சரியாக இருந்தால், வெளிச்சம் போல் இருக்கும்.
பின், அதாவது, அவன் தன் உடம்பு, பின் நிச்சயம் தன்னில் கூட. பின் அப்பொழுது பார்த்துவிடுவான், எதை என்று புரிய, அப்பனே.
இதேபோல், அப்பனே, பல மாற்றங்கள்.
அப்பனே, இறைவன் எப்படி பார்க்கின்றான் மனிதனை என்பதை.. எல்லாம் வருங்காலத்தில் விவரமாக தெரிவிக்கின்றேன் அப்பனே.
சரியாகவே, அப்பனே, இதை உணர்ந்து கொண்டால், அப்பனே, இறைவனை தரிசிக்கலாம் அப்பனே.
ஏன், எதற்காக ஓடுகின்றோம், இறைவனை காண என்றெல்லாம், அப்பனே, தெரியாமல் ஓடிக்கொண்டே தான் இருக்கின்றார்கள் என்பேன், அப்பனே உலகத்தில்.
அப்பனே, தெரிந்து கொண்டு, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட .
இதனால், அப்பனே, பல வரங்களை, நிச்சயம், அப்படி அப்படியே கேட்டதெல்லாம், பின் நாராயணன் கொடுத்துக் கொண்டிருந்தான், அப்பனே நலமாகவே. நலமாகவே, எது என்று. அப்பனே, உடனடியாக, உடனடியாக.
இதனால், அப்பனே, பின் உலகத்தோர், அப்பனே, பின், அதாவது, பெரும் செல்வந்தனாக ஆகிக்கொண்டே வந்தார்கள்.
ஆனாலும், அப்பனே, பின், அதாவது, எது என்று புரிய.
பின், அதாவது, நாராயணன் தாயார் மீது பல, பின், அதாவது, பின் அன்பு பெரிய, பின் மடங்கு வைத்திருந்தான் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
பின் எப்பொழுதும், நிச்சயம் தன்னில் கூட, பின் ஒருபொழுதும், எதை என்று அறிய, அப்படியே, பின் எதை என்று.
இதனால், எப்பொழுதும் கூட, பின், அதாவது, ஏழுமலையான் இடத்தில் வருபவர்கள் எல்லாம், நிச்சயம் தன்னில் கூட.
எப்பொழுதுமே, நிச்சயம், பின் சரியாகவே, பின் அன்னை தந்தையருக்கு அதாவது, ஏழு நாட்கள் அல்லது இன்னும் பல, பல நாட்கள், பின் அன்னைக்கு சேவைகள் செய்து, நிச்சயம் தன்னில் கூட, அறிந்து கூட.
என்னென்ன தேவைகள் என்று அறிந்து, பின் அனுதினமும், பின் அதாவது, பின் காலில் விழுந்து, பின் நல்விதமாகவே, எதை என்று புரிய, பின் என்ன, ஏது என்று கூட, (ஏழுமலையான் நாராயணரின் அன்னை) அவள், பின் மனம் சந்தோஷப்படுத்த வேண்டும்.
ஏனென்றால், பின் நாராயணனுக்கு, நிச்சயம், பின் தாயவளே பெரிதாகவே, பின் தெரிந்தாள்.
இதனால், எவை என்று புரிய, ஆனாலும், பின் தாயவளுக்கு ஒரு வருத்தம்.
நிச்சயம், மகனே, வருவோருக்கெல்லாம் , இவ்வளவு, அதாவது, நல்லோன் தீயோன் என்று பாகுபாடு இன்றி, பின் வரங்கள் கொடுத்துக் கொண்டே இருக்கின்றாய்.
ஆனாலும், ஏது என்று அறிய. அதாவது, இவ்வுலகத்தில், பின் எதை என்று புரிய, அதாவது, என்னைப்போல், நிச்சயம், பாசம், பின் வைத்துக்கொண்டோர் எவரும் இருக்கின்றார்களா என்றெல்லாம், நிச்சயம், நீ யோசித்தாயா என்று.
தாயே !!! எதை என்று புரிய.
பின் தேவையில்லை.
ஆனாலும், ஏதோ என்னை நம்பி வந்து விடுகின்றார்கள்.
ஆனாலும், அவர்களுக்கெல்லாம், நிச்சயம், பின் அருளாசிகள் கொடுத்து, நிச்சயம், பின் அவர்களை செல்வந்தனாக்கி, தேவையானதெல்லாம், நிச்சயம், அவர்களுக்கே, எதை என்று கூட, சந்தோஷமாகவே, அதுவே போதும்.
தாயே, நீ மட்டும் போதுமே. எதை என்று அந்த சந்தோஷத்திலே, நான் அனைத்து வரங்களும் கொடுக்கின்றேன்.
மகனே, கேளும். நிச்சயம், இவ்வாறாக, பின் நீ வரங்கள் எல்லாம் கொடுத்துக் கொண்டிருந்தால், நிச்சயம் தன்னில் கூட ஒருவன் செல்வந்தனாக ஆகிவிடுவான்.
ஆனாலும், தாய் தந்தையை மதிக்காமல், நிச்சயம் என்னென்னவோ செய்துவிடுவான்.
இதனால், இதிலும் தவறு உள்ளது.
இதனால், உன் வரத்தை சில காலம் நீ நிறுத்த வேண்டும் என்றெல்லாம், தாய்.
எப்படி, ஏது என்று அறிய.
தாயே, எப்படி இதை நீ சொல்கின்றாய் என்று, நிச்சயம் தன்னில் கூட.
யானும் அழகாகவே. ஏன், எதற்கு என்பதை எல்லாம், நிச்சயம், பல யுகங்களிலும் கூட பிறந்தேன், அல்லவா? பின் அப்பொழுதெல்லாம், அதாவது, நீ வரங்கள் கொடுத்தால், நிச்சயம், பின் செல்வந்தனாக. இதனால், தாய் தந்தையே மறந்து விடுகின்றார்கள்.
இதனால், நிச்சயம், சிறிது, பின் அதாவது, இப்பிரபஞ்சத்தின், அதாவது, எவை என்று அறிய.
அதாவது, சில பாவங்களும் கூட இப்படித்தான் வந்தடையும்.
பின் யாராக இருந்தாலும் கூட, பெற்றவர், பின் மனதை புண்படுத்தினால் என்றெல்லாம்.
இதனால், எதை என்று புரிய, அதனால், தாயே, ஏன் இப்படி சொல்கின்றாய் என்று.
பின் மகனே, கேளும். இப்படித்தான்.
பின் தெரியாமல் வரங்களை கொடுத்து விடாதே.
நிச்சயம், அதுவே ஒரு பாவமாக போய்விடும்.
அப்பா, அது போலத்தான் மனிதன் இக்காலத்தில் தெரியாமல், அதாவது, நான் புண்ணியங்கள் செய்கின்றேன், புண்ணியங்கள் செய்கின்றேன் என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட, பின் எதை என்று அறிய. அப்புண்ணியங்களே, பின் அதாவது, நிச்சயம் சாபமாகவும், நிச்சயம் தன்னில் கூட பாவமாகவும் போய்விடுகின்றது.
ஆனாலும், அதனால்தான், பின் இறைவன் அனைவருக்கும் கொடுப்பதில்லை புண்ணிய வாய்ப்பை, ஏது, ஏது என்று அறிய.
பின் நிச்சயம் தன்னில் ஒரு பெரிய, பின் வாய்ப்பை யாருக்கு தர வேண்டும் என்றே, நிச்சயம் ஏற்கனவே, பின் பல பிறவிகளில் உள்ள புண்ணியம் செய்தவர்களுக்கே, நிச்சயம் இப்பிறவியில் கூட, பின் புண்ணியம் செய்வதற்காகவே, பின் அனுப்பி, பின் அதாவது, அறிந்தும் கூட, பின் அனுப்பி, பின் எதன் மூலம், யார் மூலம், எதை என்று அறிய.
இதனால்தான், அப்பனே, நிச்சயம் மீண்டும் அமைதியாக உட்கார்ந்தான்.
அப்பனே. இப்பொழுதெல்லாம், அப்பனே, பிரசாதம் கொடுக்கின்றார்களே. அங்கு ஒரு, பின் பெரிய, அப்பனே, எதை என்று அறிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட . அப்பனே, அதாவது, பின் மரங்கள், செடிகள், அப்பனே, பூத்து குலுங்கின. அங்கேதான் உட்காருவான் என்பேன் அப்பனே. யோசித்தான்.
இப்பொழுதெல்லாம் அவை தன் பிரசாத கூடமாக ஆகிவிட்டது, அப்பனே. நிச்சயம் தன்னில் கூட.
===========================
# தற்போதைய TTD லட்டு கவுண்டர்கள் மற்றும் அன்னபிரசாத மண்டபம்.
===========================
அங்குதான், பின் அதாவது, இயற்கை சூழலில், பின் யோசித்தான். எப்படி, ஏது என்று அறிய.
மீண்டும், தாயே, எப்படி இவ்வாறெல்லாம் தெரிந்து கொள்வது?
ஒருவன் நிச்சயம் தாய் தந்தையை வணங்குகின்றானா என்பதை எல்லாம், பின் ஆனாலும் சிந்திக்க வைத்துவிட்டாய்.
ஆனாலும் அள்ளி அள்ளித் தருவேன். ஆனாலும் இப்பொழுது எப்படித்தான் தருவது என்று.
ஆனாலும் பின் தாயவள், அதாவது, நிச்சயம் தன்னில் கூட எவ்வாறாக, அதாவது, நீ வீடு வீடாக செல்.
அதாவது புரிந்து கொண்டும் கூட,
அதாவது யார் ஒருவர் தாயை மதிக்கின்றாரோ, அவர் உன்னையும் மதிப்பார் என்பதை எல்லாம்.
நிச்சயம் மதித்து பொருளிடுவான் என்பவை எல்லாம்.
இதனால் எதை என்று அறிய. இதனால் மீண்டும், அதனால் தர்மம் ஏந்துவனாக நீ செல் ஒவ்வொரு இல்லத்திற்கும் என்று.
அதாவது சென்றான் அழகாக எதை என்று புரிய. ஆனாலும் அதாவது வரங்கள் பின் கொடுத்திட்டான். பின் அதாவது நாராயணன் வரங்கள் கொடுத்திட்டு பின் இல்லமெல்லாம் சென்றான் நாராயணன். அங்கும் இங்குமாக இதனால் பின் ஒரு இல்லத்திற்கு சென்றான்.
பின் தாயே ஏதாவது பிச்சை இடுங்கள் என்று எதை என்று புரிய எங்களுக்கே இல்லை.
அதாவது பின் எங்களுக்கே நாராயணன் கொடுத்தது.
அதை உனக்கு கொடுத்து விட்டால் எங்கள் இல்லத்தில் இருந்ததெல்லாம் போய்விடும் என்று.
மற்றோர் எதை என்று கூட மீண்டும் பின் மறு இல்லத்திற்கு சென்றான்.
அதாவது நிச்சயம் அதாவது ஓடோடி நிச்சயம் ஆண் அவன் , அதாவது புருஷன் அவன், நிச்சயம் தன்னில் கூட (தர்மம்) இட வந்தான். ஆனால் மனைவி அவளோ நிச்சயம் ஏன் கொடுக்கின்றாய்? எதை என்று அறிய வைத்துக்கொள். இவ்வாறாக நீ கொடுத்துக் கொண்டே இருந்தால் பின் அதாவது பிள்ளைகளை நிச்சயம் நீ நடுத்தெருவில் தான் நிற்க வைப்பாய் எங்களையும் கூட என்றெல்லாம்.
நாராயணன் மீண்டும் அறிந்தும் புரிந்தும் கூட… இதேபோல் பல இல்லங்களில் கூட தர்மம் ஏந்த… ஆனாலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பேச்சையும்..
ஆனால் இன்னொரு இடத்திற்கு சென்றான். யானே தர்மம் ஈய வேண்டும். பின் அதாவது அவனவனுடைய கர்மா பின் அப்படித்தான் நடக்கும் என்றெல்லாம் நாராயணன் கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் தர்மம் எவை என்று அறிய.
அப்பனே சொல்லி விடுகின்றேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
அப்பனே நிலை பார்த்து அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே கொடுப்பது அப்பனே தர்மமே இல்லை என்பேன் அப்பனே.
மனிதன் தர்மம் செய்கின்றான், தர்மம் செய்கின்றான் என்றெல்லாம் அப்பனே ஏமாற்றி வருகின்றான், கலியுகத்தில் என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பின் யாராக இருந்தாலும் அப்பனே கேட்கின்றானா….. ஏதோ பின் தன்னிடத்தில் உள்ளதை கொடுப்பவனே… நிச்சயம் தன்னில் கூட அவன்தான் தர்மவான் என்பேன் அப்பனே.
நிச்சயம் பின் பாவமோ புண்ணியமோ அந்நேரத்தில் அப்பனே நீ எதையும் யோசிக்காமல் இதோ பின் என்னிடத்தில் இருப்பது இவ்வளவுதான் என்று கொடுக்கின்றானே, அதுதான் அப்பா புண்ணியம் எது என்று அறிய.
ஆனாலும் அவன் தீயோன் பின் நல்லோன் என்றெல்லாம் யோசிப்பதற்கு இங்கு நிச்சயம் நேரமே இல்லை. ஏன் எதற்கு நிச்சயம் தன்னில் கூட கொடுத்தது நிச்சயம் தன்னில் கூட அவனிடத்தில் பின் அதாவது ஏமாற்றவனாக இருந்தாலும் அவனிடத்தில் புண்ணியங்கள் பின் அதாவது கொடுத்தவனுக்கு வந்து சேரும் அவ்வளவுதான் எதை என்று அறிய.
பாவத்தை பின் அதாவது உன் பாவத்தை அவன் ஏற்றுக் கொள்கின்றான் அவ்வளவுதான்.
ஆனால் இதிலே எத்தனை எத்தனை…
ஆனாலும் பின் நல்லோர்கள் பின் எப்படி ஏது என்று அறிய பல பல புண்ணியவான்களிடம் நிச்சயம் இறையே பின் எப்படி ஏது என்று நிச்சயம் தன்னில் கூட சோதிப்பதற்கு பின் தர்மம் ஏந்தும்.
இப்படிப்பட்டவர்கள் பின் தோற்று பின் இருப்பது பின் அதாவது பல யுகங்களில் நான் பார்த்திருக்கின்றேன்.
இதனால் நிச்சயம் தன்னில் கூட… பிச்சையே அதாவது இல்லத்திற்கெல்லாம் சென்றான் எதை என்று புரிய.
ஆனாலும் இன்னொரு இல்லத்திற்கு சென்றான்.
ஆனாலும் எங்கள் இல்லத்தில் வேலை செய்கின்றாயா??? என்றெல்லாம் பின் பெண்ணவளே எதை என்று அறிய…
சரி செய்கின்றேன் தாயே….. என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட.
பின் அவை செய்… இவை செய்….என்பதை எல்லாம்…
ஆனாலும் நிச்சயம் பின் நாராயணனின் பாடல் ஒலித்துக் கொண்டே இருந்தது.
ஆனாலும் நிச்சயம் எதை என்று அறிய,
பின் “தாயே !!!! நாராயணன் எவ்வளவு பெரியவன் !!!!!”
அதாவது நாராயணனே சொல்கின்றான் இதை.
எவ்வளவு பெரியவன் (நாராயணன்) அவன் தன்….
அனைத்தும் கொடுத்திருக்கின்றானே…. யானும் ஏதோ பிச்சைக்காரன்.
அதாவது பின் ஏதாவது என்னிடத்தில் அதாவது ஏதாவது கொடுக்கலாம் அல்லவா என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட
பின் அதாவது யாங்கள் சுத்தம் உள்ளவர்கள் அதனால்தான் நாராயணன் கொடுத்தான். நீயோ சுத்தமில்லை. பாவம் செய்துவிட்டாய் என்று.
அப்பப்பா!!!! எதை என்று அறிய மீண்டும் அறிந்தும் கூட..
அதாவது என்ன பாவம் எனக்கு தெரிந்து யான் செய்யவில்லை என்று எதை என்று புரிய..
அப்பொழுது ஏன் இப்படி இருக்கின்றாய்?
யாங்கள் புண்ணியம் செய்தவர்கள் என்று.
ஆனாலும் இவர்களே பாவம் செய்தவர்கள் தான்.
ஆனாலும் நாராயணன், ஏதோ சில விஷயங்களுக்காக அடுத்து என்ன வருவது என்பதை எல்லாம் நிச்சயம் எதை என்று அறிய நாராயணன் உணர்ந்து.
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட
அதாவது தாயே !!!! நாராயணன் அழகாக கொடுத்தான் அல்லவா உங்களுக்கு??
நீங்களும் மற்றவர்களுக்காக கொடுக்க வேண்டும் அல்லவா?? என்றெல்லாம்.
யாங்கள் ஏன் கொடுக்க வேண்டும் ?
உன்னை விட்டுவிட்டால் பின் அதாவது என் புருஷனையும் நீ மாற்றி விடுவாய் எதை என்று அறிய அறிய என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட.
பின் அதாவது அவன் பெருக்கி கொண்டிருந்தானே அத்துடப்பத்தை எடுத்து வீசினாள்.
போ வெளியே…. என்று நிச்சயம் கூட மனம் நொந்து நிச்சயம் தன்னில் கூட
ஆனாலும் எங்கெங்கோ அலைந்தான்.
எங்கெங்கோ திரிந்தான் நாராயணன்.
அப்பனே பாருங்கள் கலியுகத்தில் இப்படித்தான் அப்பா.
அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவை என்று அறிய…
பல வழியில் கூட அப்பனே நாராயணன் ஏனென்றால் நிச்சயம் தன்னில் கூட மதிப்பு தெரிய வேண்டும் அல்லவா????
அன்னையின் மதிப்பு எது என்று புரிய அப்பனே கலியுகத்தில் அப்பனே எது என்று அறிய… எவை என்று புரிய… ஏது என்று அறிய அப்பனே அறிந்தும் கூட அப்பனே எதை என்று கூட…. ஏன் எதற்காக எவை என்று புரிய.
அப்பனே இது போல பல வழியிலும் கூட உண்மைதனை அறிந்து அறிந்து.
இதனால் அப்பனே பின் உண்மைதனை தெரிந்து கொண்டு அறிந்தால் கூட அப்பனே இவ்வுலகத்தில் அப்பனே பின் தர்மம் இல்லாமல் அப்பனே போய்க்கொண்டே இருக்கின்றது.
தெரிந்து கொண்டு ஏன் எதற்காக இவ்வளவு விஷயங்கள் மீண்டும் மனம் முறிந்து வந்தான் அப்பா.
பின் நாராயணன் தன் அன்னையிடம் தாயே எதை என்று அறிய உன்னைப்போல் நிச்சயம் யாரும் நிச்சயம் பாசம் வைக்கவில்லை.
இதனால் பல இடத்தில் சென்றேன்.
அதாவது என்னை வணங்குவனிடத்திலே நாராயணன் நாராயணன் என்று.. அனுதினமும் வணங்குவான்.
ஆனாலும் நானும் ஏமாந்து விட்டேன் பெரிய பக்தன் என்று.
ஆனால் அங்கு சென்று பார்த்தால் என்னென்ன லீலைகள் அவன் செய்து கொண்டிருக்கின்றான். இதனால் பல பக்தர்கள் வந்தனர்.
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட ஏதோ பின் ஒன்றுக்காகத்தான் வந்தார்கள் என்பதை எல்லாம் நான் உணர்ந்து விட்டேன்.
இதனால் என்ன ஏது என்று அறிய… இதனால் எவை என்று புரிய… இதனால் நிச்சயம் தன்னில் கூட… அறிந்தும் கூட…. இதனால் நிச்சயம் அதாவது எப்படி ஏது….
இதனால் பாசமே எவை என்று அறிய அதனால் பின் அன்னையும் சொன்னாள் ஏது என்று அறிய….. எது என்று புரிய புரிய…. இவை என்று அறிந்திருந்தும் கூட…. அவ் அன்னை அதாவது, மகனே நீயும் கேள்.
அதாவது பின் எங்கெல்லாம் சுற்றித் திரிந்து வந்தாயோ நிச்சயம் இவையெல்லாம் அறிந்து கூட அதாவது நீ சொல்….. உன் பக்தர்களை எல்லாம் நீ அருளாசி கொடுத்தாய் அல்லவா நிச்சயம்?
அதாவது அதை பின் அங்கங்கு செல்.
சென்று பின் யான் பின் நாராயணனுக்காக உயிரை கொடுக்கப் போகின்றேன் என்று.
வந்தால் வாருங்கள் என்றெல்லாம் நிச்சயம்.
அதாவது நாராயணன் அனைத்தும் கொடுத்தான். வாருங்கள் என்றெல்லாம் நிச்சயம் தன்னில்.
இதனால் பல வழியிலும் கூட பின் வந்தார் அல்லவா….. அவரவர் இல்லத்தில் சென்று நாராயணனுக்காக யான் உயிரை கொடுக்கப் போகின்றேன் யாராவது இருக்கின்றீர்களா இருக்கின்றீர்களா என்றெல்லாம் வாருங்கள் நிச்சயம் தன்னில்… எதை என்று புரிய… என்றெல்லாம்.
ஆனாலும் பல வழியில் கூட எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட நாராயணன் நிச்சயம் பல இல்லங்களுக்கு சென்று…
நாராயணனுக்காக யான் அதாவது உயிரை கொடுக்கப் போகின்றேன். நீங்களும் வாருங்கள் நிச்சயம் தன்னில் கூட.
நாராயணனுக்காக.
ஆனாலும் திரும்பவும் பின் நாராயணன் கொடுத்து விடுவான் என்பதை எல்லாம் அனைவருக்கும் தெரிவித்தான்.
ஆனாலும் அறிந்து கூட இவன் பைத்தியக்காரன் என்று அனைவரும் உணர்ந்து கொண்டனர்.
ஆனாலும் ஒரு இடத்திற்கு சென்று பின் அழகாக அவர்கள் பெரும் பக்தர்கள். நாராயணன் பக்தர்கள்.
ஆனாலும் பின் நிச்சயம் தன்னில் கூட வாருங்கள். நாராயணனுக்காக உயிரை கொடுப்போம். ஏனென்றால் நாராயணன் கேட்டதெல்லாம் கொடுத்துக் கொண்டிருக்கின்றான் என்றெல்லாம்.
ஆனாலும் அவர்கள் அட பைத்தியக்காரர்களே பின் ஏன் எதற்காக எதை என்று கூட நீ ஒரு பைத்தியமா???
பின் நாராயணன் அதாவது கண்ணுக்கு எங்கத்தான் தெரியப்போகின்றான்?
ஏதோ வணங்கினோம் கொடுத்தான் அவ்வளவுதான்.
பின் நிச்சயம் தன்னில் வணங்கிக் கொண்டே இருப்பதா??? பின் தேவைக்காக வணங்கினோம்.
பின் தேவையில்லாமல் எப்படி ஏது என்று அறிய என்றெல்லாம்..
அப்பனே கலியுகத்தில் இப்படித்தான் அப்பா!!!! பக்தி அப்பனே போகும் என்பேன் அப்பனே நிச்சயம்.
அப்பனே ஏதோ கஷ்டம் வந்தால் அப்பனே இறைவனை வந்து வணங்குவான் அப்பா நிச்சயம் தன்னில் கூட.
சரியாகி விட்டால் நிச்சயம் பின் அதாவது தான் வேலை பார்த்துக் கொண்டே போவான்.
கேட்டால் நிச்சயம் ஏன் ஏதோ கவலை அப்பொழுது வணங்கினேன்.
இப்பொழுது ஏன் யான் வணங்க வேண்டும்?
தேவைக்குத்தான்….
பின் தேவைப்படும்போது வணங்குகின்ற வணங்குகின்றேன் என்றெல்லாம் அப்பனே கதைகள் பேசுவான் அப்பா விதவிதமாக.
இதனால் அப்பனே எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட..
ஆனாலும் எதை என்று அறிய எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அதனால் மீண்டும் எதை என்று அறிய இவ்வாறே…
ஆனாலும் யாரும் பின் உயிரை எவை என்று கொடுக்க ஏது என்று அறிய பின் முடியவில்லையே என்பதை எல்லாம்..
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட தாயும் யோசித்தாள்.
அதாவது இவ்வாறு பின் தாயின் கண்களில் நீராக பெருக்கெடுத்து.
இதனால் மகன் இதுபோல் அலைகின்றானே நிச்சயம் அதாவது தாயவளுக்கும் அவ் சக்தி இருந்தது நிச்சயம். அனைத்தும் ஆனாலும் அமைதி காத்திருந்தாள்.
பின் மீண்டும் அதாவது அதாவது யாரும் இல்லையே என்று பின் நிச்சயம் பின் தாயவளிடம் எப்படி சொல்வது என்று ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டான் நாராயணனே.
இவ்வாறாக தாய் இப்படி எவை என்று….
யாருமே இல்லையே எவ்வாறெல்லாம் மனிதன் மனம் படைத்திருக்கின்றான் என்று..
மீண்டும் தாய் எதை என்று அறிய, அதாவது பின் மகன் வருந்துவதை பார்த்து அதாவது ஏது என்று அறிய, பின் அதாவது ஒரு பெண்ணாக தோன்றி, பின் நாராயணனே ஏன் வருந்துகின்றாய்?
நீ எனக்கு வரங்கள் பல கொடுத்தாய்.
ஆனாலும் இது நாராயணனுக்கும் தெரியும்.
ஆனாலும் பின் அப்பொழுதெல்லாம் வந்தவர்கள் யார் என்று நிச்சயம் தன்னில் கூட மறைத்து விடுவார்கள் அறிந்தும் கூட.
பின் ஏதோ எவை என்று அறிய தெரியாமல்.
இதனால் நிச்சயம் யான் உயிர் உயிர் எவை என்று கொடுக்கின்றேன் என்று.
ஆனாலும் பின் சந்தோஷப்பட்டான் அறிந்தும் கூட.
அதனால் நிச்சயம் வாரும் வாரும் என்றெல்லாம்.
நிச்சயம் மீண்டும் எது என்று அறிய இதனால் நிச்சயம் தன்னில் கூட தாயவள் நிச்சயம் மகிழ்வாள் என்று நினைத்துக் கொண்டான்.
நினைத்து ஏது என்று அறிய….. இதனால் மேலிருந்து அதாவது முதலில் அதாவது நாராயணன் எதை என்று புரிய… அதாவது இங்கிருந்து குதி என்று பார்ப்போம் என்று நிச்சயம் தன்னில் கூட.
அழகாக பின் எவை என்று அறிய நிச்சயம் அப்பெண்மணி குதித்தாள் எது என்று அறிய.
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட பின் அவன் சந்தோஷப்பட்டான்.
===========================
(திருப்பதி மலை உச்சியில் இருந்து கீழே குதிக்க வேண்டும் என்று நாராயணன் அவ் பெண்மணிக்கு சொல்ல , அதேபோல் , அவ் பெண்மணியும் கீழே குதித்தார்கள். )
===========================
ஏது என்று அறிய ஆனாலும் பின் நாராயணன் நிச்சயம் காப்பாற்றி விடுவோம் என்றெல்லாம் நிச்சயம் தன்னில்.
நாராயணனுக்கு தெரியும். ஆனாலும் பின் சோதிப்பு அவ்வளவுதான்.
நேராக வந்து இப்பொழுது பின் லட்சுமி நரசிம்மன் இருக்கின்றானே அங்கு விழுந்து, ஏது என்று அறிய பின் உடம்பு எவை என்று அறிய ஆனாலும் இது என்று அறிய..
===========================
திருப்பதி - அலிபிரி நடைபாதை (மோகால்ல மெட்டு): அலிபிரி வழியாக நடந்து செல்லும் பாதையில், 2850-வது படிக்கு அருகில் அழகான லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் உள்ளது.
கூகிள் மேப் லிங்க் :-
https://maps.app.goo.gl/1bvRZhwaPgN3EutL6
===========================
ஆனாலும் பின் மகனே என்று..
ஆனாலும் பின் நம்தனை மகனே என்று நிச்சயம் தாயவள் மட்டும்தான் முடிப்பாள் என்று பின் நிச்சயம் பின் வந்தான் பறந்து.
பின் தாயே எவ்வாறு என்று…
பார்த்தாயா மகனே…. இவ்வுலகத்தில் எது என்று புரிய பின் தேவைக்காற்பத்தான் அனைவருமே. நிச்சயம் யான்தான்… எனது மகன் அதாவது நிச்சயம் எப்பொழுதும் வருத்தப்படக்கூடாது என்பதற்கு இணங்க…
யானே மறுவேடத்தில் வந்து எது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட
அதனால் இப்பொழுது புரிகின்றதா???? பின் பாசம் எது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட..
===========================
# அன்னையின் சபதம்………
===========================
அதனால் நிச்சயம் பின் நீயே பின் இனிமேல் வரங்கள் கொடுத்தாலும் நிச்சயம் யான் இங்கு வந்து எடுத்துக் கொள்வேன் என்று பின் லக்ஷ்மி நரசிம்மமாக அங்கேயே பின்….. அதாவது சமாதி நிச்சயம் இருக்கின்றாள்.
அதனால்தான் (நாராயணன்) அவன்தன் வரங்கள் கொடுத்தாலும், இவன் எவை என்று அறிய தாய் தந்தை மதிக்காவிடில் நிச்சயம் வரங்களை பிடுங்கிக் கொண்டு எதை என்று அறிய.
நிச்சயம் அவனுடைய தாயும் கூட…
ஆனாலும் வரங்கள் நிச்சயம் தன்னில் கூட எவை என்று அறிய ஆனாலும் தாயும் எவை என்ற பேச்சை கேட்டு நிச்சயம் நடந்தால் மீண்டும் அவ்வரத்தை பின் தன் இல்லத்திலே எவை என்று அறிய பின் கொடுப்பாள் எவை என்று கூட அவள் தாய்.
அதனால் மிகவும் புண்ணியவான் …பின் நாராயணன் தாய்..
இதனால்தான் எது என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட அதனால்தான் பின் அறிந்தும் கூட பின் மலையில் ஏறுபவர்கள் நல்விதமாகவே பின் எவை என்று கூட பின் ஒரு ஏழு பின் நாட்கள் பின் தாய் தந்தைக்கு சேவை செய்ய வேண்டும் நிச்சயம் தன்னில் கூட எவை என்று அறிய.
ஏதோ எவை என்று அமைதியாக இருந்து பின் அப்புறம்தான் அப்புறம் எது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட பின் அகம் பின் அனைத்தும் பின் சுத்தங்கள் செய்ய வேண்டும் எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட.
சுத்த மனதாக இருக்க வேண்டும்.
இதனால் காலையில், மாலை வேளையில் நிச்சயம் தன்னில் கூட வருகின்றேன்.
உன்னால் முடிந்தவரை நிச்சயம் ஏதோ செய் என்றெல்லாம் அங்கேயே நிச்சயம் தன்னில் கூட பின் கேட்டு பின் எவை என்று அறிய நிச்சயம் நீ அதாவது முடிவெடுத்துவிட்டாலே… உன்னை நிச்சயம் தன்னில் கூட நாராயணன் பின் பார்ப்பான்.
அவ்வளவுதான் என்ன ஏது இவன் செய்கின்றான் என்று..
அதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே ஏன் இதற்காக எதற்காக இவையெல்லாம் சொல்கின்றேன் என்றால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட…
இறையை அப்பனே எப்படி வணங்குவது என்பதை எல்லாம் தெரிந்து கொண்டு வணங்க வேண்டும் என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட..
சரியாகவே இவ்வாறுதான் பின் நிச்சயம் அப்பொழுதிலிருந்து இப்பொழுது வரை வரங்கள் நிச்சயம் தந்து கொண்டே இருக்கின்றான் அப்பனே.
இன்னும் அப்பனே ஒளி விளக்காக நிச்சயம் அவள் தாயும் அங்கே இருந்து அப்பனே பல வழியில் கூட பல கர்மாக்களை பல மனிதர்களிடம் எடுத்து…
அப்பனே பின் தீயோர்களாகிலும் நிச்சயம் தன்னில் கூட பின் அன்னை தந்தைக்கு சேவை செய்ய வேண்டும் என்று நிச்சயம் பின் வரங்கள் கொடுத்துக் கொண்டே தான்.
இதனால் எது என்று அறிய, இதனால் எவை என்று புரிய, எப்பொழுதும் அதாவது நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக இருந்தால் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட பின் அழகாக பின் எவை ஏது என்று அறிய பின் அனுமானே நிச்சயம் வெளியில்… அதாவது அங்கிருந்து கோபுரவாசலில் வெளியே வருகின்ற பொழுது வணங்குவான் நிச்சயம் தன்னில் கூட.
தாய் தந்தை யார் சேவை செய்கின்றார்களோ அவர்களை உள்ளே சென்று ஆசீர்வதம் பெற்று வெளியே பின் வருகின்ற பொழுது, நிச்சயம் அனுமான் வணங்குவான். அனைத்தும் கொடுப்பான். ஆசிகள்.
இன்னும் நிச்சயம் இன்னும் இருக்கின்றது நாராயணனுடைய லீலைகள் ஒவ்வொன்றாக எடுத்துரைக்கின்றேன்
ஆசிகள்
ஆசிகள்
ஆசிகள்.
===========================
அகஸ்திய மாமுனிவரின் திருவாக்கு: இறை தரிசனம் மற்றும் அன்னை-தந்தை வழிபாட்டின் முக்கியத்துவம்
25.03.2026 அன்று திருப்பதிக் கரையில் அகத்திய மாமுனிவர் வழங்கிய உரையின் முக்கிய அம்சங்களையும், இறைவனுக்கும் அவன் தாய்க்கும் இடையிலான உரையாடல் வழி உணர்த்தப்பட்ட வாழ்வியல் உண்மைகளையும் தொகுத்து வழங்குகிறது.
1. நிர்வாகச் சுருக்கம் (Executive Summary)
அகத்திய மாமுனிவரின் இந்த வாக்கு, உண்மையான பக்தி மற்றும் தர்மத்தின் சாராம்சத்தை விளக்குகிறது. நாராயணனாகிய திருமால் தன் பக்தர்களுக்கு வாரி வழங்கும் வரங்கள், அவர்கள் தம் பெற்றோரை மதிக்காத பட்சத்தில் பயனற்றதாகிவிடும் என்பதே இவ்வுரையின் மையக்கருத்து. இறை தரிசனம் என்பது வெறும் புறக்கண்களால் காண்பதல்ல, அது ஒருவனின் புண்ணியக் கணக்கைப் பொறுத்தது. குறிப்பாக, கலியுகத்தில் மனிதர்களின் போலி பக்தியைச் சோதிக்க இறைவன் நிகழ்த்திய லீலைகளையும், அன்னைக்கு ஆற்றும் சேவையே இறைவனைச் சென்றடையும் எளிய வழி என்பதையும் இந்த வாக்கு விவரிக்கிறது.
2. இறை தரிசனமும் புண்ணியத்தின் பங்கும்
இறைவனைத் தரிசிப்பதற்கும் அவனது அருளைப் பெறுவதற்கும் ஒருவருக்குத் தேவையான அடிப்படைத் தகுதிகள் குறித்து மாமுனிவர் பின்வருவனவற்றை வலியுறுத்துகிறார்:
- புண்ணிய ஆன்மாக்கள்: நாராயணன் திருமலையைச் சுற்றி வலம் வருகிறார். ஒருவனின் புண்ணியங்கள் அதிகமாக இருந்தால் மட்டுமே, அவன் இறைவனின் கண்களில் படுவார். புண்ணியம் செய்தவர்கள் அமைதியாகவும் தலை குனிந்தும் பணிவுடன் மலையேறுவார்கள்.
- மனத்தூய்மை: பலர் மனதில் அழுக்குகளை வைத்துக்கொண்டு இறைவனைத் தேடுகிறார்கள். ஆனால், எண்ணங்கள் சரியாக இருந்தால் மட்டுமே ஒருவனது மனம் ஒளிபெறும். அந்த ஒளியைக் கொண்டே நாராயணர் ஒருவனுக்கு அருள் பாலிக்கிறார்.
- தரிசனத்தின் உண்மைப் பொருள்: வெளியிலிருந்து "இறைவா" என்று அழைத்தாலும், உண்மையான பக்தியை இறைவன் அறிவார். எதற்காக இறைவனைத் தேடி ஓடுகிறோம் என்பதைப் புரிந்துகொண்டு தரிசிப்பதே சிறந்தது.
3. அன்னை - மகன் உரையாடல்: வரங்களும் அதன் விளைவுகளும்
நாராயணனுக்கும் அவரது தாயாருக்கும் இடையே நடந்த உரையாடல், கலியுக மனிதர்களின் மனநிலையைத் தோலுரித்துக் காட்டுகிறது:
- தாயின் கவலை: பாகுபாடின்றி நாராயணர் வழங்கும் வரங்களால் மனிதர்கள் பெரும் செல்வந்தர்களாகிறார்கள். ஆனால், செல்வம் வந்தவுடன் அவர்கள் தம் தாய், தந்தையரை மதிக்கத் தவறுவதைச் சுட்டிக்காட்டி, அன்னை வருந்துகிறார்.
- தவறான வரங்கள்: பெற்றோர் மனதை புண்படுத்துவது பெரும் பாவம். தகுதியற்றவர்களுக்கு வழங்கப்படும் வரங்கள் அவர்களுக்குச் சாபமாகவும் பாவமாகவும் மாறக்கூடும் என்று அன்னை எச்சரிக்கிறார்.
- சோதனை: யார் உண்மையாகப் பெற்றோரை மதிக்கிறார்கள் என்பதை அறிய, நாராயணன் ஒரு யாசகனாக (பிச்சைக்காரனாக) மாறி பூமிக்குச் சென்று சோதிக்கத் துணிகிறார்.
4. கலியுக தர்மமும் போலி பக்தியும்: ஒரு கள ஆய்வு
இறைவன் ஒரு யாசகனாகச் சென்றபோது கண்ட காட்சிகள், மனிதர்களின் இரட்டை வேடத்தைப் பிரதிபலிக்கின்றன:
நிகழ்வு | மனிதர்களின் எதிர்வினை | இறைவனின் கவனிப்பு |
செல்வந்தர் இல்லம் | "உனக்குக் கொடுத்தால் எங்களிடம் உள்ளது தீர்ந்துவிடும்" என மறுத்தல். | தன்னிடம் உள்ளதைக் கொடுப்பவனே உண்மையான தர்மவான். |
தம்பதியினர் | கணவன் கொடுக்க வந்தாலும், மனைவி தடுத்து நிறுத்துதல். | கலியுகத்தில் நிலை பார்த்து கொடுப்பது தர்மமே இல்லை. |
பக்தியின் பெயரால் ஆணவம் | "நாங்கள் சுத்தமானவர்கள், நீ பாவி" என்று யாசகனை இகழ்ந்து துடைப்பத்தால் அடித்தல். | இறைவன் கொடுத்த செல்வத்தை வைத்துக்கொண்டு, இறைவனையே அடையாளம் காணத் தவறுதல். |
ஆபத்துக் கால பக்தி | கஷ்டம் வரும்போது மட்டும் இறைவனை வணங்கிவிட்டு, காரியம் முடிந்ததும் மறந்துவிடுதல். | கலியுகப் பக்தி பெரும்பாலும் சுயநலம் சார்ந்தது. |
5. அன்னையின் சபதமும் லட்சுமி நரசிம்மர் ஆலய வரலாறும்
உண்மையான பாசத்தை மெய்ப்பிக்க அன்னை மேற்கொண்ட செயலும், அதன் விளைவாக உருவான புனித இடமும் பின்வருமாறு விவரிக்கப்படுகிறது:
- உயிர்த் தியாகச் சோதனை: நாராயணனுக்காக உயிரைக் கொடுக்க யாராவது முன்வருவார்களா என்ற சோதனைக்கு எவரும் வரவில்லை. மாறாக, நாராயணனைப் "பைத்தியக்காரன்" என்று ஏளனம் செய்தனர்.
- அன்னையின் உருமாற்றம்: தன் மகன் வருத்தப்படுவதைக் காணச் சகியாத அன்னை, ஒரு பெண்ணாக உருமாறி வந்து நாராயணனுக்காக உயிரைத் தர முன்வருகிறார்.
- மலையிலிருந்து குதித்தல்: நாராயணன் சொன்னபடி அன்னை மலையிலிருந்து கீழே குதித்தார். அவர் விழுந்த இடமே தற்போது திருப்பதி - அலிபிரி நடைபாதையில் (மோகால்ல மெட்டு) 2850-வது படிக்கு அருகில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் ஆகும்.
- அன்னையின் சபதம்: "இனிமேல் நீ (நாராயணன்) வரங்கள் கொடுத்தாலும், பெற்றோரைக் கௌரவிக்காதவர்களிடமிருந்து அந்த வரங்களை நான் பிடுங்கிக்கொள்வேன்" என்று அன்னை சபதமேற்று அங்கே சமாதி நிலையில் உறைகிறார்.
6. பக்தர்களுக்கான வழிகாட்டுதல்கள்
திருமலைக்குச் செல்லும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளாக மாமுனிவர் குறிப்பிடுபவை:
- பெற்றோர் சேவை: மலை ஏறுவதற்கு முன் அல்லது பின், ஏழு நாட்கள் அல்லது குறிப்பிட்ட காலம் அன்னை தந்தையருக்குச் சேவை செய்ய வேண்டும். அவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்ற வேண்டும்.
- அகத்தூய்மை: புறத் தூய்மையை விட மனத்தூய்மையே முக்கியம். காலையும் மாலையும் சுத்தமான மனதுடன் இறைவனைச் சிந்திக்க வேண்டும்.
- அனுமனின் ஆசி: பெற்றோருக்குச் சேவை செய்துவிட்டு வரும் பக்தர்களை, கோபுர வாசலில் இருக்கும் அனுமன் வணங்கி, அவர்களுக்குப் பல ஆசிகளை வழங்குகிறார்.
7. முடிவுரை
இறைவன் வரங்களை அள்ளித் தருபவன் என்றாலும், அந்த வரங்கள் நிலைக்க வேண்டுமானால் மனிதன் அறநெறியுடனும், குறிப்பாகப் பெற்றோர் மீதான அன்புடனும் இருக்க வேண்டும். அன்னை-தந்தை வழிபாடே நாராயணனைச் சென்றடையும் நேரடி வழி என்பதை இந்தத் திருவாக்கு உறுதிப்படுத்துகிறது. இறைவனின் லீலைகள் இன்னும் தொடரும் என்ற ஆசியுடன் அகத்திய மாமுனிவர் தனது உரையை நிறைவு செய்கிறார்.
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.