“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Tuesday, April 22, 2025

சித்தர்கள் ஆட்சி - 445:- அன்புடன் அகத்திய மாமுனிவர் - கோவை வடவள்ளி ஆலயத்தில் உரைத்த சத்சங்க வாக்கு ( April 2024 ) - பகுதி 12

 இறைவா !!!!! நீயே அனைத்தும்.

இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்


அன்புடன் அகத்திய மாமுனிவர் - கோவை வடவள்ளி ஆலயத்தில் உரைத்த சத்சங்க வாக்கு ( April 2024 ) - பகுதி 12

(இவ் தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்
1. சித்தர்கள் ஆட்சி - 431 - பகுதி 1
        2. சித்தர்கள் ஆட்சி - 434 - பகுதி 2
        3. சித்தர்கள் ஆட்சி - 436 - பகுதி 3
        4. சித்தர்கள் ஆட்சி - 437 - பகுதி 4
        5. சித்தர்கள் ஆட்சி - 438 - பகுதி 5
        6. சித்தர்கள் ஆட்சி - 439 - பகுதி 6
        7. சித்தர்கள் ஆட்சி - 440 - பகுதி 7
        8.     சித்தர்கள் ஆட்சி - 441 - பகுதி 8
        9.     சித்தர்கள் ஆட்சி - 442 - பகுதி 9
      10.     சித்தர்கள் ஆட்சி - 443 - பகுதி 10
      11.     சித்தர்கள் ஆட்சி - 444 - பகுதி 11
      12.     சித்தர்கள் ஆட்சி - 445 - பகுதி 12
)


(இப்போது வாக்குகள் அடியவர்களுக்கு வேகமாக குருநாதர் உரைத்துக்கொண்டே இருந்தார்கள். அந்த வாக்கிலிருந்து முக்கிய பொது வாக்குகளை இங்கு காண்போம். வாருங்கள் அடியவர்களே, கருணைக்கடல் வழங்கும் ஞான அமுதத்தை உள் வாங்கலாம்.) 

குருநாதர் :- 

1. அம்மையே யான் சொல்லியவற்றை (புண்ணியங்கள்) செய்து கொண்டே இரு. ஏன் எதற்கு என்றால் எப்போது எதைச் செப்பினால் பின் எவ் நேரம் அதனால்தான் காலங்கள் நேரத்திற்கு (ஏற்றவாறு யாங்கள் உங்களுக்கு) சொன்னால் நிச்சயம் அதாவது எங்களுக்கு (கால நேரங்கள் ஏதும்) இல்லை. ஆனால் அம்மையே உங்களுக்காவது அவ் நேரத்தில் சொன்னால்தான் புண்ணியங்கள் கூட கூடும் என்பேன். பின் நடக்கும் என்பேன். யான் அருகிலேயே இருப்பேன். அனுதினமும் கந்த சஷ்டி ஓதி வா. ஒரு முறை செந்தூருக்குச் சென்று வா. வெற்றிகளாகும். கவலையை விடு. 


2. (நித்திய அன்னதானம் செய்யும் ஒருவருக்கு உரைத்த வாக்கு. இந்த வாக்கை நித்திய அன்ன சேவைகள் செய்து வரும் அடியவர்கள் நன்கு மனதில் உள் வாங்கி நிறுத்த மிக்க நன்று. உத்வேகம் உங்களுக்குள் பிறக்கும் என்பது உறுதி. ) அப்பனே ஆனாலும் சில வகைகளிலும் கூட தொந்தரவுகள் வரும் அப்பனே. ஆனாலும் அவற்றையெல்லாம் மீறிச்சென்றால் , எம்முடைய ஆசிகளால் மீறிச்செல்வாய் என்பேன் அப்பனே. நலமாகவே ஆசிகள் என்பேன் அப்பனே. ஆனாலும் (அன்னதானம்) இதைத் தடுப்போர்,  பிற குற்றங்கள் கூறுவோரும் பல பல.  ஆனாலும் எனை நம்பி வந்துவிட்டாய் அப்பனே. நிச்சயம் செய்வாய் என்பேன் அப்பனே. நிச்சயம் கொடுக்கின்றேன் அதற்குத் தகுந்தாற்போல் என்பேன் அப்பனே. 

இவன்தான் அனைத்திற்கும் காரணம் என்றெல்லாம் அப்பனே சொல்வார்கள் அப்பனே. எதை எதையோ சொல்வார்கள் அப்பனே. அவற்றையெல்லாம் அப்பனே பின் இக் காதில் வாங்கிட்டு, பின் அக்காதின் வழியே, பின் சொல்வார்களே அப்பனே அது போல் விட்டு விட்டு, நீ செய்யும் புண்ணியங்கள், (நித்திய அன்ன சேவை) இதைச் செய்து கொண்டே இரு அப்பனே. நலன்களாகும் அப்பனே. 

யான் இருக்கின்றேன் அப்பனே. அருள்கள். எனையும் கூட எந்தனுக்கும் படைத்தாய் அப்பனே பின் உணவையும் கூட. நலன்களாகவே உண்டுவிட்டேன் அப்பனே. நிச்சயம் அப்பனே நலன்களை ஏற்படும் என்பது உறுதியப்பா. அப்பனே யானே கொடுத்திருக்கின்றேன் அப்பனே. ( தனி வாக்கு - யோகங்கள்) அனைத்தும் செய்துவிட்டேன் அப்பனே. இவையெல்லாம் செய்து முடிப்பேன் என்பேன் அப்பனே. அமைதியாக இரு அப்பனே. அனைத்தும் நல்குவேன் அப்பனே. 

அனைத்தும் நடக்கும் அப்பா. ஆசிகள். ஆசிகளப்பா. இன்னும் உயர்வான இடத்திலும் வகிக்கலாம். அப்பனே இன்னும் (தனி வாக்கு) நன்மைகளாக முடியும் அப்பனே. போராட்டம் பின் குறுக்கு நெருக்கு இதையும் யான் சொல்கின்றேன் அப்பனே பொறுத்திருந்தால். நலன்களாக ஆசிகளப்பா. 

( இவ் அடியவருக்கு மிக வேகமாக வாக்கு வந்தது. சுவடி ஓதும் மைந்தனால் படிக்க இயலாத அளவு வேகமாக வாக்குகள் புண்ணியம் செய்பவர்களுக்கு வரும் என்று உரைத்தார்கள். புண்ணியங்கள் அதிகமானால் வாக்கின் வேகம் அதிகரிக்கும்.

( சிறிது நேரம் கழித்து உடனே மீண்டும் அவ் நித்திய அன்ன சேவை நடத்தும் அடியவருக்கு கருணைக்கடல் வாக்குகளை நல்கினார்கள். ) 

அப்பனே அனைத்தும் நல்குவேன் அப்பனே. கவலை விடு. சில சில தோல்விகள் இருந்தாலும், மனக்குழப்பங்கள் இருந்தாலும், அவையெல்லாம் மாற்றி அமைத்து நிச்சயம் அப்பனே யானே அருள்வேன் அப்பனே. நிச்சயம் போபாமுத்திரயோடு ஆசிகளப்பா. ஆசிகள். 

3. (மற்றொரு அடியவருக்கு உரைத்த வாக்கு) நிச்சயம் அடிக்கடி கந்தன் ஆலயத்திற்குச் சென்று கொண்டே இரு அப்பனே. உயர்வுகள் உண்டு உண்டு வாழ்க்கையில். ஆசிகள். 

4. ( ஒரு அடியவர் அவர் தாய், தந்தை உடல் நலம் தொடர்பாக கேட்டபோது நம் அனைவருக்கும் பொதுவாக உரைத்த பொன்னான வாக்கு.) அப்பனே அனைவருக்குமே சொல்கின்றேன் அப்பனே. உடம்பு வயது ஆகும்பொழுது பழுதடையும் என்பேன் அப்பனே. இவை சாதாரணமானதே என்பேன் அப்பனே. 

அதனால்தான் அப்பனே இயற்கை வகைகளை உட்கொள்ள, உட்கொள்ள அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே. பின் ஈர் வருடம், பின் மூவருடம் ( 2 - 3 ஆண்டுகள்) உட்கொண்டே இருக்க வேண்டும் அப்பனே. 

இதனால் அப்பனே அனைவருக்குமே தெரிவித்து விடுகின்றேன் அப்பனே. இளம் வயதிலிருந்து வளர வளர பின் எலும்புகள் , பின் உள் உருப்புகள் தேய்ந்து அப்பனே நோய்களும் பின் சாதாரணமாகவே வருபவை அப்பனே. கவலைகளை விடுங்கள் அப்பனே. அனைவருக்கும் இது வருமப்பா. 

5. அனைத்தும் ஒரு பக்கத்திலிருந்தாலும் அவையெல்லாம் நீக்கிட்டு நீக்கிட்டு யான் நன்மைகள் செய்து கொண்டே இருக்கின்றேன் அப்பனே. உயர்த்துவேன் அப்பனே. 

செவ்வாய் தோறும் முருகனுக்குத் தீபம் ஏற்றி வழிபட்டுக்கொண்டே வா. உயர் நிலை பெறுவாய் அப்பனே. 

அவை மட்டுமில்லாமல் ராகு காலத்தில் சிறப்பாக பைரவனுக்கும் கூட தீபம் ஏற்றி நல் முறைகளாக , பின் பைரவ வாகனங்களுக்கும் கூட உணவளித்துக்கொண்டே இரு அப்பனே. மாற்றங்கள் ஏற்படுவது உறுதியப்பா. சில தீயவைகளும் அகற்றும் அப்பா. ஏவல் அகன்றும் அப்பா. அப்பனே பின் மனசு நிம்மதி ஏற்படும் அப்பா. 

நிச்சயம் ஈர் மண்டலம் செய்து கொண்டே இரு அப்பனே. நிச்சயம் ஓர் மண்டலம் இதில் கூட நன்மைகள் (புண்ணியங்கள், தான தர்மங்கள்) செய்ய,  அப்பனே எறும்புகளுக்கு நிச்சயம் ( உன் இஷ்டம் போல் இயன்ற பொழுதெல்லாம் இயன்றவரை  )  நீ செய்து கொண்டே இரு. (தனி வாக்குகள்) ஓர் முறை ஏழுமலையானிடத்திற்கச் சென்று வா. 

( இவ் அடியவருக்கு பல வாக்குகள் அருளினார்கள் கருணைக்கடல். பூர்வ ஜென்ம ரகசியங்களும் உரைத்தார்கள். இவ் அடியவரை மாயையில் மூழ்கடித்து இடைக்காடர் சித்தர் திருவண்ணாமலையில் இவ் அடியவரிடம் கர்மங்களை வாங்கிச்செல்வார் என்று உயர் நல் வாக்குகள் நல்கினார்கள்.

6. ( மற்றொரு அடியவருக்கு) மனிதன் என்றாலே குறை குறை என்றெல்லாம்  கூறிக்கொண்டிருப்பார்கள் அப்பனே. ஆனாலும் கவலையை விடு அன்பு மகனே. அப்பனே புரியாமல் இருந்தாலும் புரிய வைத்து, வாழ்கையை மாற்றி உந்தனுக்கு என்ன தேவை , ( உன்னை) சார்ந்தோருக்கும் உதவி அளிப்பேன் அப்பனே. 

மனிதன் என்றாலே கவலைகள் தொற்றுக் கொள்ளும் அப்பா. ஆனாலும் கவலையை விடு அப்பனே. யானே அவ் கவலையெல்லாம் நீக்கிவிடுகின்றேன் அப்பனே. நன்மைகள் தருகின்றேன் அப்பனே. ஆசிகள். ஆசிகளப்பா!!!! 

7. ( இப்போது மாமிசம் சாப்பிடுகின்றவர்கள் யார் யார் என்று கேள்விகள் கேட்டு வாக்கை நிறுத்தினார் கருணைக்கடல். இது வரை நல் முறையாக மழைபோல பொழிந்த நல்வாக்கு நிறுத்தப்பட்டது. மாமிசம் உண்பவர்கள் எழுந்து சுவடியின் முன் வந்தனர். ஆன்மீகத்தில் முதல் பாடம் கொல்லாமை அட்டாங்க யோகம் - இயமம்) 

அப்பனே  முதலில் மாமிசத்தை நிறுத்து. அனைவரும் நிறுத்தச் சொல். உயர்வுகள் வரும். அனைத்தும் வரும். 

( அடியவர் இவ் வாக்கை அனைவருக்கும் எடுத்துச் சொன்னார்கள். இதே வாக்கை மாமிசம் சாப்பிட்ட அனைவருக்கும் அங்கு எடுத்து உரைக்கப்பட்டது. மாமிசம் உண்டால் இறையருளே கிட்டாது.  மாமிசம் சாப்பிட்டால் பல தொல்லைகள் உண்டாகும் என்று எடுத்துரைத்தார் அங்கு உள்ள ஓர் அடியவர்.) 

8. (மற்றொரு அடியவருக்கு உரைத்த வாக்கு) 

அம்மையே எம்முடைய ஆசிகள் எப்போதும் இருக்குமம்மா. கவலை விடு. சில சில மனவருத்தங்கள், சில சில தோல்விகள் அம்மையே, எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை என்பேன் அம்மையே. அனைத்தும் என்னுடைய அருளால் எப்பொழுது எதை நிறைவேற்ற வேண்டும் என்பதையெல்லாம் யானே அறிவேன் அம்மையே. 

என் அருகிலே இருப்பதால் யான் பார்த்துக்கொள்கின்றேன். தைரியமாக இரு. இவ் அகத்தியன் இருக்கும் பொழுது என்ன கவலை. அறிந்தும் கூட எத்தனுக்கும் பல வகைகளிலும் கூட எதை எதை செய்யச் சொன்னார்களோ அதையெல்லாம் நீ செய்து விட்டாய் தாயே!! பொறுத்திரு!! என்னை நம்பி வந்து ஓடோடி வந்து தீபங்களெல்லாம் ஏற்றினாய் தாயே!!! பொறுத்திரு!!!

9. (மற்றொரு அடியவருக்கு) அம்மையே எம்முடைய ஆசிகள் பல கோடி !!!!!!!!!!!!!!! 

( கருணைக்கடலிடம் ஒரு ஆசி வாங்கவே பல பிறவிகள் ஆகும் என்ற நிலையில் இவ் அடியவருக்கு ஒரே வார்த்தையில் பலகோடி ஆசிகள் என்று உரைத்தார்.)


10. அப்பனே விதியில் கூட ஒன்றுமே எழுதாமல் அனுப்பிவிட்டான் பிரம்மனும் கூட. அப்பனே எப்படியப்பா. அதனால் (உனது விதியை) யான் எழுதிக்கொள்கின்றேன் இனிமேல். 

11. அப்பனே (என் அருள்கள்) இருப்பதனால்தான் வாக்குகள் சொல்லிக் கொண்டிருக்கின்றேன். 

12. ( ஒரு அடியவர் இறந்து விட்டார். ஆனால் வாழ்ந்து வருகின்றார். இறைவன் மகளாக, இறைவன் மடியிலேயே படுத்து உறங்குகின்றார் இவ் அடியவர் என்று வாக்கு உரைத்தார்கள்.) 

13. (ஒரு அடியவர் தொழில் , மற்றும் கடன் குறித்துக் கேட்ட போது) அப்பனே சென்னிமலை முருகனை தரிசித்துக் கொண்டே இரு அப்பனே. வாழ்க்கையில் உயர்வடைவாய். ( சென்னிமலை முருகன் ஆலயம் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த ஆலயத்திற்கு மேலும் ஒரு பெருஞ் சிறப்பு உண்டு. அது முருகப்பெருமானுக்கு எல்லா ஆலயங்களிலும் ஒலிக்கவிடப்படும் ‘கந்தசஷ்டி கவசம்’ பாடல் அரங்கேறிய திருத்தலம் இதுவாகும்.  ஈரோட்டில் இருந்து சுமார் 27 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, சென்னிமலை திருத்தலம். சஷ்டியில் விரதமிருந்து சென்னிமலை ஆண்டவனை வழிபடுவோருக்கு குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. திருமணம், விவசாயம், பிற தொழில் சார்ந்த செயல்களில் ஈடுபடும்போது, இத்தல முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்து சிரசுப்பூ உத்தரவு கேட்டு செயல்களைத் தொடங்குவதும் மரபாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஈரோட்டில் இருந்து தாராபுரம் செல்லும் வழியில் 28 கிலோமீட்டர் தொலைவிலும், பெருந்துறையில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலும் ஈங்கூர் ரெயில் நிலையத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலும் சென்னிமலை அமைந்துள்ளது. கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய ஸ்தலம்: கந்த சஷ்டி கவசம் இயற்றிய பாலன் தேவராய சுவாமிகள் காங்கேயம் அருகே உள்ள மடவிளாகத்தைச் சேர்ந்தவர். மைசூர் தேவராச உடையாருக்கு உதவியாளராகப் பணிபுரிந்து கொண்டிருந்தார். முருக பக்தரான இவர், ஐப்பசி மாதம், கந்த சஷ்டி தினத்தில் வேற்று மதத்தவர்களிடம் அனல்வாதம் (தான் எழுதிய நூலைச் சான்றோர்கள் முன், நெருப்பிலிட்டு, தீயில் கருகாமல் திரும்ப எடுத்து அரங்கேற்றுவது), புனல்வாதம் (கரைபுரண்டு ஓடும் ஆற்று வெள்ளத்தில், தான் எழுதிய நூலை இட்டு, நீரில் எதிர்கொண்டு செல்லும் சுவடிகளை எடுத்து அரங்கேற்றுவது)செய்து, கந்த சஷ்டி கவசத்தை அரங்கேற்றம் செய்ய முருகனை வேண்டினார். அதற்கு உரிய ஆலயமாக சென்னிமலையை, முருகப்பெருமானின் அருளாணையால் உணர்ந்து, இங்குக் கந்த சஷ்டி கவசத்தை சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக' என இத்தலத்துப் பெருமானை அழைத்து, அரங்கேற்றம் செய்து, பெருமை படைத்தார். அடியவர்கள் புண்ணியங்கள் பல செய்து, இவ் ஆலயம் அடிக்கடிச் சென்று வணங்கி, கந்தப்பெருமானின் அருள் பெறுக!!!) 


( நம் குருநாதர், நம் அன்புத் தந்தை, கருணைக்கடல், பிரம்ம ரிஷி, அகத்திய மாமுனிவர் அருளால்  April 2024, கோவை வடவள்ளி அகத்திய மாமுனிவர் ஆலயத்தில் , சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் திரு.ஜானகிராமன் அவர்கள் மூலம் ஜீவ நாடியில் உரைத்த அடியவர்கள் சத்சங்க கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்….)

ஆலய முகவரி :-

ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்திய மாமுனிவர் ஆலயம். வடவள்ளி, முல்லை நகர்,  மருதமலை அடிவாரம். கோயம்புத்தூர்.

Google map:- 


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!







No comments:

Post a Comment