மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Wednesday, April 16, 2025

சித்தர்கள் ஆட்சி - 442:- அன்புடன் அகத்திய மாமுனிவர் - கோவை வடவள்ளி ஆலயத்தில் உரைத்த சத்சங்க வாக்கு ( April 2024 ) - பகுதி 9

                                      இறைவா !!!!! நீயே அனைத்தும்.

இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்


அன்புடன் அகத்திய மாமுனிவர் - கோவை வடவள்ளி ஆலயத்தில் உரைத்த சத்சங்க வாக்கு ( April 2024 ) - பகுதி 9

(இவ் தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்
1. சித்தர்கள் ஆட்சி - 431 - பகுதி 1
        2. சித்தர்கள் ஆட்சி - 434 - பகுதி 2
        3. சித்தர்கள் ஆட்சி - 436 - பகுதி 3
        4. சித்தர்கள் ஆட்சி - 437 - பகுதி 4
        5. சித்தர்கள் ஆட்சி - 438 - பகுதி 5
        6. சித்தர்கள் ஆட்சி - 439 - பகுதி 6
        7. சித்தர்கள் ஆட்சி - 440 - பகுதி 7
        8.     சித்தர்கள் ஆட்சி - 441 - பகுதி 8
        9.     சித்தர்கள் ஆட்சி - 442 - பகுதி 9
)

சுவடி ஓதும் மைந்தன் :- அப்பொழுது யார் மீது குற்றம்?

அடியவர்கள் :- எங்கள் மீது ( குற்றம் )

சுவடி ஓதும் மைந்தன் :- அதனால்தான் குருநாதர் சொல்கின்றார், என்னைத் தேடி வருபவர்களுக்கு நான் நல்லதுதான் செய்வேன். நன்மை எப்படிச் செய்வது? புண்ணியம் எப்படிச் செய்வது என்று. நீங்கள் உங்கள் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்கள். (குருநாதர் செய்தது போல்) அதே மாதிரி நீங்கள் என்ன உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்தீர்களோ, அதைத்தான் அவர்கள் செய்வார்கள். அப்பொழுது யார் மீது தவறு? 

அடியவர்கள் :- நம்மேல் தான்..

சுவடி ஓதும் மைந்தன் :- அவர்கள் வேலைக்குப் போகாதது யார் மீது தவறு? 

அடியவர்கள் :- நம்ம மேல்தான் தவறு.

சுவடி ஓதும் மைந்தன் :- இப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். புரியுதுங்களா ஐயா. 

குருநாதர் :- இதனால் பக்குவங்கள் முதலில் எப்படி உயிர் வாழ்வது என்பதைக் கூட நிச்சயம் அனைவரும்..உலகம் அழிவு நிலைக்குச் செல்கின்றது என்பதையெல்லாம் எடுத்துரைத்துக்கொண்டே இருக்கிறேன். ஆனால் ஒருவராவது இவ்வுலகத்தைக் காப்பாற்றுங்கள் என்று சொன்னார்களா? இதுதான் (மனிதனின் கீழ்மட்ட) அறிவு. அதனால் நீங்கள் பூஜ்ஜியத்திலேயே இருக்கின்றீர்கள். இன்னும் ஒரு பத்து சதவிகிதத்திற்குக் கூட வரவில்லை. உங்களுக்கெல்லாம் தந்து நீங்கள் என்னதான் செய்யப்போகின்றீர்கள் என்று கூறுங்கள்? நிச்சயம் அப்பனே ஒவ்வொருவராக நீங்கள் என்ன செய்யப்போகின்றீர்கள் என்று நிச்சயம் கூறி எந்தனுக்குச் சொல் அப்பனே. எந்தனுக்கும் தெரியும். ஆனால் அவர்கள் வாயால் சொல்லி கர்மமாவது செல்லட்டும் ( அவர்களை விட்டு நீங்கட்டும்).

சுவடி ஓதும் மைந்தன், அடியவர்கள் :- ( எப்படிச் சொல்வது என்ற புரிதல் விவாதம்) 

சுவடி ஓதும் மைந்தன் :- ( அங்குள்ள ஓர் அடியவரை நோக்கி ) ஐயா , சொல்லுங்கள் ( அனைவருக்கும் விளக்கிச் சொல்லுங்கள்). 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் :- நமக்கு பிரச்சினைகள் இருக்கு என்பதை நீங்கள் சொல்லித்தான் குருநாதருக்குத் தெரிய வேண்டும் என்பதல்ல. அவர்கள் கூப்பிட்டதால் நாம் இங்கு வந்துள்ளோம். நாமாக இங்கு வரவில்லை. அப்படி இருக்கும்பொழுது , நம்மை அவர் இங்கு கூப்பிட்டு இருக்கும் பொழுது அவருக்கு நமக்கு என்ன பிரச்சினை என்று தெரியாதா? நாம் ஏதோ மனத்தாங்கலுக்காகப் போய்ச் சொல்லுகின்றோம். ஆனால் ஏன் சொல்கின்றோம் என்றால் , அவருக்கும் தெரியும். எதற்காக நம்மை இங்கு கூப்பிட்டுள்ளார் என்றால், சில புண்ணியங்களுக்காக நம்மை கூப்பிட்டுள்ளார் குருநாதர். அதே நேரத்தில் அந்த புண்ணியத்திற்காக நம்மைக் கூப்பிட்டு இருந்தாலும் நம்மிடம் உள்ள புண்ணியங்களைக் கிளறி விடவேண்டும். காலையில் காகபுசண்டர் ஐயா சொன்னார்கள், புண்ணியத்தைக் கிளறி விடவேண்டும் என்று. அதைக் கிளறி விடுவதற்கு புண்ணியங்கள் செய்ய வேண்டும். நிறைய தர்மங்கள் செய்ய வேண்டும். தர்மங்கள் செய்தால் புண்ணியங்களைக் கிளறி விட முடியும். புண்ணியத்தைக் கிளறி விட்டால்தான், குருநாதர் வந்து , நம் கஷ்டத்தை அதாவது வினையை அகற்ற முடியும் என்று சொல்கின்றார்கள். அந்த புண்ணியங்கள் யார் யார் என்ன செய்யப்போகின்றீர்கள் என்பதை உங்கள் வாயால் சொல்லுங்கள். இங்கிருந்து போனபிறகு, நீங்கள் என்னென்ன செய்யப் போகின்றீர்கள். ஒவ்வொருவராக எழுந்து சொல்லுங்கள். பின் அமர்ந்து கொள்ளுங்கள். 

(நம் குருநாதர் கருணைக்கடல், பிரம்ம ரிஷி,  அகத்திய மாமுனிவர் அருளால், April  2024 கோவையில் காகபுசண்ட மாமுனிவர் உரைத்த  கேள்வி, பதில் வாக்கு ஆறு பதிவுகளாக இங்கு அடியவர்கள் மீண்டும் படித்து உங்கள் புண்ணியங்களைக் கிளறி  விடுவது எப்படி என்று தெரிந்து செயல்பட்டு வெற்றிவாகை சூடுக.

சித்தர்கள் ஆட்சி - 421- கோவை வாக்கு - பகுதி 1 
சித்தர்கள் ஆட்சி - 422- கோவை வாக்கு - பகுதி 2
சித்தர்கள் ஆட்சி - 425- கோவை வாக்கு - பகுதி 4
சித்தர்கள் ஆட்சி - 424- கோவை வாக்கு - பகுதி 3
சித்தர்கள் ஆட்சி - 426- கோவை வாக்கு - பகுதி 5
சித்தர்கள் ஆட்சி - 427- கோவை வாக்கு - பகுதி 6
)

( ஒவ்வொரு அடியவர்களும் அவர்கள் செய்யப் போகும் புண்ணியங்களைக் கருணைக்கடல் நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் முன்பு எடுத்து உரைக்க ஆரம்பித்தனர்.) 

அடியவர் 1 :- வாயில்லா ஜீவராசிகளுக்கு நீர் , தானியம், உணவு கொடுக்க உள்ளேன் ஐயா. நான் சம்பாதிப்பதில் என்னால் முடிந்த அளவு ஒரு பங்கு இல்லாதவங்களுக்குச் செய்கின்றேன் ஐயா. 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் :- ஏதாவது ஒரு (புண்ணியச்) செயல் நித்தமும் செய்யுங்கள். அதற்கப்புறம் மேல் நிலைக்கு ( பல வகைப் புண்ணியங்கள்) எடுத்துச் செல்லலாம். 

அடியவர் 2 :- என்னால முடிந்ததை எறும்புகளுக்குத் தர்மம் செய்கின்றேன் ஐயா. அதற்கு மேல் நல்ல நிலைமைக்கு வந்தால்,  இல்லாதவர்களுக்கு உதவ செய்வேன் ஐயா. 

குருநாதர் :- அப்பனே இவன் மீதே இவனுக்கு நம்பிக்கையில்லை என்பேன் அப்பனே. ஒன்றைக் குறிப்பிட்டானே, அதை நீ கேட்டாயா அப்பனே? நீயும் முட்டாள்தனமாகவே இருக்காதே எப்பேன் அப்பனே. அதாவது (எனக்கு) ‘நல்லது நடந்தால்’ என்று.…… அப்பனே, கூறு இதற்கு என்ன அர்த்தம் என்று? 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் :- அதாவது காலையில் புசண்டர் ஐயா என்ன சொன்னார்கள் என்றால் நம் எண்ணங்கள் தூய்மையாக இருந்தாலே போதுமானது.  புண்ணியச் செயல்களைச் செய்யுங்கள் என்று எடுத்துச் சொல்வதே புண்ணியம். முதல்தரமான புண்ணியம். நீங்கள் கையில் காசு இருந்தால்தான் புண்ணியம் செய்ய வேண்டும் என்று எல்லோரும் தவறாக நினைத்துக்கொண்டிருக்கின்றோம். அது கிடையாது. பிறருக்கு புண்ணியச் செயல்களை எடுத்துச் சொல்வதே பெரிய புண்ணியம். 

குருநாதர் :- அப்பனே மீண்டும் கேள் இவனை ( அடியவர் 2). 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் :- சொல்லுங்க. என்ன செய்வீர்கள்? 

அடியவர் 2 :- என்னிடம் இல்லை என்றாலும் மற்றவர்களுக்கு புண்ணியம் செய்ய வேண்டும். 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் :- நீங்கள் வீட்டுக்கு போன உடன், அதற்கு அப்புறம் என்ன செய்யப் போகின்றீர்கள்? நாளையிலிருந்து நித்தியமாக என்ன புண்ணிய காரியம் செய்யப் போகின்றீர்கள்? ஒரு காரியம் மட்டும் சொல்லுங்கள். 

அடியவர் 2 :- என்னால முடிஞ்ச அளவு ..

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் :- அதுதான் திட்டுகின்றார். முடிந்தால், முடிந்தால் என்று சொல்லாதீங்க. நீங்க என்ன செய்யப்போகின்றீர்கள் என்று சொல்லுங்கள்.

அடியவர் 2 :- வாயில்லா ஜீவராசிகளுக்கு தண்ணீர், உணவு..

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் :- எந்த ஜீவராசிகளுக்கு?

அடியவர் 2 :- காக்கை, பைரவர்..

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் :- காக்கை, பைரவர் இரண்டு பேருக்கும் தினசரி நாளையிலிருந்து வைக்கின்றீர்கள். சரி.

குருநாதர் :- அப்பனே ஒன்றைக் கேட்கின்றேன். அவந்தன் உண்ணுவதற்கே வழியில்லை. இதை எப்படிச் செய்வான் என்று கூறு?

அடியவர் 2 :- ஐயா நான் சாப்பிடும் சாப்பாட்டில்தான் இப்பவரைக்கும்  என்னால் முடிந்தவற்றை வைத்துச் சென்று கொண்டு இருக்கின்றேன்…

குருநாதர் :- அப்பனே நீ சம்பாதிப்பதில் சிறிது தானம் செய்ய வேண்டும். அதுதானப்பா எந்தனுக்கு மிக்க மகிழ்ச்சி என்பேன் அப்பனே. 

அடியவர் 2 :- கண்டிப்பாக செய்கின்றேன் ஐயா. 

குருநாதர் :- அப்பனே இப்படித்தான் சொல்வாய் அப்பனே. நிச்சயம் பார்த்துக்கொள்வோம் அப்பனே. 

அடியவர் 2 :- கண்டிப்பாகச் செய்வேன் ஐயா. 

( இவ் அடியவர் தொடர்பாக பல தன் வாக்குகள். அதில் உள்ள பொது வாக்குகள்) 

குருநாதர் :- அப்பனே (புண்ணியம்)  செய்யும் மனம் இருக்கின்றது அனைவரிடத்திலும். காசுகள் வேண்டும்  அல்லவா? எங்கப்பா போவான் அப்பனே? அதனால் உழைக்கச் சொல் அப்பனே. கடமையைச் செய்யச் சொல் அப்பனே. அனைத்தும் யானே தருகின்றேன். 

(வேலைக்குச் சென்று, பொறுப்பாக வேலை செய்து , தாய் தந்தையை அன்புடன் பார்த்துக்கொண்டு , வீட்டுப் பொறுப்பை எடுத்து முன்னின்று நடத்தும் தகுதி பெற்றிருந்தால்தான் ) அப்படி இருந்தால்தான் ஒரு பெண்ணையும் வைத்துக் காப்பாற்ற முடியும். இல்லையென்றால் காப்பாற்ற முடியாதப்பா. இறைவன் எப்படியப்பா கொடுப்பான்???

( பொது :- நன்கு உழைக்க வேண்டும். தாய் , தந்தையை அன்புடன் நடத்த வேண்டும். குடும்பச் சுமைகளை ஏற்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே திருமணம் புரிய இறைவன் வாய்ப்பு அளிப்பார். அதே போல் தன் கடமையை - தாய், தந்தை, மனைவி, குழந்தைகளை நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டும். தனது மாத சம்பாத்தியத்தில் ஒரு பகுதி தான, தர்மங்களுக்கு அளிக்க வேண்டும். அந்த புண்ணியங்களால், கேட்டது கிடைக்கும். புண்ணியங்கள் அவசியம் செய்க. ) 

( நம் குருநாதர் கருணைக்கடல் பிரம்ம ரிஷி, அகத்திய மாமுனிவர் அருளால்  April 2024, கோவை வடவள்ளி அகத்திய மாமுனிவர் ஆலயத்தில் , சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் திரு.ஜானகிராமன் அவர்கள் மூலம் ஜீவ நாடியில் உரைத்த அடியவர்கள் சத்சங்க கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்….)

ஆலய முகவரி :-

ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்திய மாமுனிவர் ஆலயம். வடவள்ளி, முல்லை நகர்,  மருதமலை அடிவாரம். கோயம்புத்தூர்.

Google map:- 


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!

No comments:

Post a Comment