மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Wednesday, April 2, 2025

சித்தர்கள் ஆட்சி - 438:- அன்புடன் அகத்திய மாமுனிவர் - கோவை வடவள்ளி ஆலயத்தில் உரைத்த சத்சங்க வாக்கு ( April 2024 ) - பகுதி 5

 

                                       இறைவா !!!!! நீயே அனைத்தும்.

இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்



அன்புடன் அகத்திய மாமுனிவர் - கோவை வடவள்ளி ஆலயத்தில் உரைத்த சத்சங்க வாக்கு ( April 2024 ) - பகுதி 5

( இவ் தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்
1. சித்தர்கள் ஆட்சி - 431 - பகுதி 1
        2. சித்தர்கள் ஆட்சி - 434 - பகுதி 2
        3. சித்தர்கள் ஆட்சி - 436 - பகுதி 3
        4. சித்தர்கள் ஆட்சி - 437 - பகுதி 4
        5. சித்தர்கள் ஆட்சி - 438 - பகுதி 5

)

குருநாதர் :- அப்பனே அதனால் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள். அதாவது என் பக்தர்கள் ஆகிவிட்டீர்கள் அப்பனே. அதாவது என் பிள்ளைகள் ஆகினும் முதலில் வழி காண்பிப்பேன் அப்பனே. அப்பொழுதுதான் அவ் வழியில் என்ன செய்ய வேண்டும், அவ்வழியில் எப்படிப் போக வேண்டும் என்று. ஆனால் வழியே தெரியவில்லை உங்களுக்கு. அப்பனே எப்படியப்பா? அறிந்தும் கூட. 

ஆனாலும் அப்பனே சொல்கின்றேன் அப்பனே. அதாவது ஒன்றாம் வகுப்பிலேயே தேர்ச்சி பெறவில்லை. பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறவேண்டும் என்று நீங்கள் கேட்கின்றீர்கள் அப்பனே. இன்னும் ஒன்பது என்ன ஆகிவிட்டது அப்பனே? நிச்சயம் நீங்கள் கூற வேண்டும். 


——————-
( இறை வழியில் முதல் வகுப்பு - அட்டாங்க யோகத்தில் இயமம். அதாவது செய்யக்கூடாததைச் செய்யாமல் இருப்பது
அவற்றுள் முக்கியமானவை 
கொல்லாமை (அகிம்சை, பிறவுயிர்களைத் துன்புறுத்தாமை ), பொய்யாமை (பொய் சொல்லாமை, சொல்லாமைவாய்மை, சத்யம், உண்மையைக் கடைப்பிடித்தல்), கள்ளாமை (திருடு/களவு செய்யாமை), கள்ளுண்ணாமை, காமம் இன்மை (காமம் கடத்தல், துணைக்கு துரோகம் இழைக்காமை ).
இவை அனைத்தும் தவிர இன்னும் பல திருக்குறளில் உண்டு. இது குறித்த திருமந்திரப் பாடல்:-  

இயம நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரம்
சயமிகு தாரணை தியானஞ் சமாதி
அயமுறும் அட்டாங்க மாவது மாமே
(திருமந்திரம் : 3:1:4)
)
—————


சுவடி ஓதும் மைந்தன் :- (நீண்ட விளக்கங்கள்) பதில் சொல்லுங்க ஐயா. 

அடியவர்கள் :- (அமைதி)

குருநாதர் :- அப்பனே நிச்சயம் ஒரு சிறு பிள்ளைக்குத் தன் தந்தையானவன் இப்படி இருந்தால் நல்லது. நிச்சயம் இப்படி இருந்தால் பின் உயர்ந்து போகலாம் என்று முதலில் சொல்வானப்பா. பின் அதைக் கடைப்பிடித்தால் தான் அப்பனே, அன்போடு அணைத்துக்கொண்டு அனைத்தும் சொல்வானப்பா. அதே போலத்தான் அப்பனே. யான் சொல்லியதை நீங்கள் கேட்க, ( யான் காட்டிய வழியில் ) நடந்து சொன்றால் யானும் உங்களைக் கட்டி அனைத்து, உங்கள் விதியில் உள்வதையெல்லாம் சொல்வேன் அப்பனே. போதுமா? இன்னும் வேண்டுமா?

அடியவர்கள் :- போதும் ஐயா. 

குருநாதர் :- அப்பனே, இன்னும் மாற்றங்கள்தான் ஏற்ப்படுவது உறுதியப்பா. என்ன வேண்டும் கேள் இப்பொழுது?

அடியவர் 4:- சாமி நீங்க பார்த்து என்ன நல்லது செய்யவேண்டுமோ,   செய்யுங்கள் சாமி. 

குருநாதர் :- அப்பனே என்னதான் செய்ய வேண்டும் மகனே?

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேளுங்கள் ஐயா.

அடியவர் 4 :- என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கே தெரியும் சாமி.

குருநாதர் :- அப்பனே நான் எதையும் செய்யமாட்டேன். அப்பொழுது அப்படியே செய்யமாட்டேன் (என்று) அப்படியே சென்று விடலாமா?

அடியவர்கள் :- ( பலத்த சிரிப்பு )

அடியவர் 4 :- அப்படி எல்லாம் சொல்லாதீங்க சாமி. 
( சற்று நேரம் கழித்து )
சாமி , ஓதிமலை, பழனி, பூம்பாறை ஒரே நாளில் செல்ல வேண்டும் என்று கூறி இருந்தீர்கள். ஒரே நாளில் போக வேண்டுமா? இல்லை இது ஒருநாள், அது ஒருநாள் என்று போகலாமா? 

குருநாதர் :- அப்பனே ஒரு நாளைக்கு 3 முறை உண்ணுகின்றாய் அல்லவா? ஒரு முறை உண்ணுவிடு. பத்து நாட்கள் பொறுத்து,  இன்னொரு முறை உண்ணு. அப்பனே இன்னும் பத்து நாட்கள் பொறுத்து , இன்னொரு முறை. இதை ஒத்துக்கொள்ளலாமா? ஆனால் நடுவில் எதுவுமே உண்ணக் கூடாது. 

அடியவர் 4:- தெரிந்து கொள்ளலாம் என்று கேட்டேன் சாமி.

அங்கு உள்ள மற்றொரு அடியவர் :- இல்லை. இல்லை. குருநாதர் ஒன்று சொல்லும்பொழுது நமக்கு எது (easy) எளிதாக உள்ளதோ அதை யோசிக்கின்றோம். கஷ்டத்தை யோசிப்பதில்லை. கஷ்டத்தைச் செய்தால்தான் கர்மா போகும். அதனாலதான் கஷடப்படுங்க என்று சொல்கின்றார். (கோளறு பதிகம் அதை) 108 முறை சொல்ல வேண்டும் என்று ( குருநாதர் நமக்கு வெற்றி கிடைக்கச் ) சொன்னால், அதில் முதல் 4 வரி மட்டும் சொன்னால் போதுமா , முழுவதும் 40 வரியும் என்று கேட்கின்ற பொழுதே நம்ம கஷ்டப்படும் தயார் இல்லை என்றபொழுது ( எப்படி நம் கர்மா/கஷ்டம் நீங்கும்?). 

( அந்த விதி மாற்றும் அதி முக்கிய பல ரகசியங்கள் அடங்கிய வாக்கு உங்கள் பார்வைக்கு இங்கு

————

( சித்தன் அருள் - 1034 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலையப்பர் தரிசனம்!

ஒரு சூட்சுமம் ஒன்று என்பேன் அப்பனே இவ்விடத்திற்கு ம் பழனிக்கும் குழந்தை வேலப்பர் (பூம்பாறை முருகன் கொடைக்கானல்) என்கின்றார்களே அதற்கும் சம்பந்தம் உண்டு என்பேன்.

அப்பனே உங்களுக்கும் சொல்கின்றேன் இவை மூன்று திருத்தலங்களும் சரி முறையாக தரிசனம் செய்தால் ஒரு நாளைக்கு அப்பனே நல்ல முறையாக விதிகள் மாறும் என்பேன்.

(1) முதலில் தரிசிக்க வேண்டியது அப்பனே ஓதியப்பன்.

(2) இரண்டாவதாக பழனி.

(3) மூன்றாவதாக குழந்தை வேலப்பர்.

நல் முறையாக யான் சொல்லிவிட்டேன் இதில் தான் சூட்சுமம் அடங்கியுள்ளது என்பேன்.

அப்பனே போகன் குழந்தை வேலப்பரை  இங்கு (பூம்பாறை)  செய்து முடித்தான். 

ஆனாலும் இது இருக்க முருகனும் போகனிடம் ஒரு சூட்சுமத்தை கூறிவிட்டான் அப்பனே போகா நீ இங்கு அமைத்தாய் அமைத்தும் விட்டாய் ஆனாலும் மனிதர்கள் எவை என்று கூற இங்கே வருவார்கள் ஆனாலும் அப்பனே இதிலிருந்து நேர் திசையாக (பழனி) சென்று பின் அப்பனே அங்கே ஒருமுறை அமை.

அங்கு அமைத்தால் அப்பனே அவ்மலையைச் சுற்றி பல பல அற்புத தேவர்கள் தேவயானிகள் அப்பனே பறந்து சுற்றி செல்வார்கள் அப்பொழுது அங்கு சென்று மனிதன் அங்கு செல்ல அப்பனே தேவர்களும் தேவதைகளும் ஆசீர்வதித்து விடுவார்கள் அப்படி அங்கு சென்று செய்ய அனைத்து கர்மங்களும் விலகியே நிற்கும்

ஆனாலும் அப்பனே கர்மாக்களில் நூறில் ஐம்பதாவது கழித்து விடலாம் என்பேன்.

அப்பனே ஆனாலும் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அப்பனே போகன் எவ்வாறு என்பதையும் கூட பின் ஒரு யுகத்தில் பழனியிலும் சமாதி அடைந்து விட்டான். பின் மறு யுகத்திலும் கூட குழந்தை வேலப்பன் முருகன் அடியிலேயே அவன் இருக்கின்றான் ஆனாலும் மனிதர்கள் இதுவரை யாரும் உணர்ந்ததில்லை.

அப்பனே அங்கு செல்ல நல் முறையாக முருகனை வணங்க முருகன் வடிவிலேயே போகனையும் வணங்கலாம் என்பேன்.) 

( வாருங்கள் மீண்டும் சத்சங்க வாக்கின் உள் செல்வோம் ) 
——————-

குருநாதர் :- அப்பனே இதை மட்டும் கேட்கின்றாயே, ஆனாலும் ஒன்றைச் சொல்கின்றேன். இதனால் யான் எங்கு என்ன விட்டேன். அதைப் பற்றி மறந்துவிட்டாயே?  ( மரைதமலை ஞானிகுறித்து கேள்வி கேட்டு, மீண்டும் ஆரம்பித்தார்கள் அந்த வாக்கினை)

குருநாதர் :- அப்பனே (மருதமலை) முருகனே வந்து தூக்கினான் என்று சொன்னேன் மகனே. உறங்கிக்கொண்டிருந்தாயா? கூறு மகனே? இவை எல்லாம் நியாயமா அப்பனே. பின் விளக்கிச் சொன்னால் யாருமே புரிந்து கொளளாமல் நடக்கின்றார்கள் அப்பனே. அப்பொழுது எப்படியப்பா யான் நல்லது செய்ய முடியும்?

சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கம் )

குருநாதர் :- அப்பனே அறிந்து கொள் அப்பனே. இப்பொழுது அனைவரிடத்திலும் சொல்ல வேண்டும் நீ. கோளறு பதிகத்தை யான் சொல்லி விட்டேன். நிச்சயம் நீங்கள் அனைவருமே சொல்ல வேண்டும். அப்படிச் சொல்லவில்லை என்றால் பாவம் எந்தனுக்குத்தான் வந்து சேரும் என்று நீ சொல்.

அடியவர் 4 :- எல்லோரும் கோளறு பதிகம் படிங்க. நீங்க படிக்கவில்லை என்றால் பாவம் எனக்கு வந்து சேர்ந்துவிடும் என்று சொல்லிஇருக்கின்றார் ( நம் குருநாதர்). அதனால் நீங்க தயவு செய்து படியுங்கள். எல்லோரும் நல்லா இருப்பதற்கு வழியைப் பாருங்கள்.

குருநாதர் :- இது போலத்தான் அப்பனே, பின் சொல்லிக்கொண்டே இருந்தால் , அவை, இவை என்று. அப்பனே ஒன்றைச் சொல்லுகின்றேன் அப்பனே. சுய நலத்துக்காக இறைவனை வணங்கக் கூடாது. வணங்கக் கூடாது.  சொல்லிவிட்டேன். அப்பனே தேவையானவற்றை, உன் நடத்தையில்தான் இருக்கின்றது. சொல்லிவிட்டேன் அப்பனே மீண்டும் மீண்டும். உன் நடத்தையில்தான் இருக்கின்றது. நீங்கள் எப்படி நடக்கின்றீர்களோ அப்பனே, நல் எண்ணங்களோடு, அதாவது உயர்ந்த எண்ணங்களோடு நடந்தால் அப்பனே, இறைவனே கொடுப்பான் அப்பனே. அப்படி இல்லையென்றால் அப்பனே நிச்சயம் கொடுக்கமாட்டானப்பா. கொடுக்கமாட்டானப்பா. 

அப்பனே இப்பொழுதெல்லாம் பொய்கள் சொல்லி அப்பனே சிறு பிள்ளையிலேயே அப்பனே தாய் தந்தையை ஏமாற்றி எதை எதையோ செய்கின்றார்கள் அப்பா. அதனால்தானப்பா சிறுவயதில் இருந்தே, யாங்கள் கஷ்டத்தைக் கொடுத்து அடித்து அப்பனே சில சில தவறுகள், செய்து செய்து இவ்வுலகத்தையே கெடுத்துவிட்டார்கள் மனிதர்கள் அப்பனே. இவ்வுலகத்தை கெடுத்தது யார் அப்பனே? 

அடியவர்கள் :- மனிதர்கள். 

குருநாதர் :- அப்பனே புரிகின்றதா? அப்பனே இன்னும் கெடுத்து , விட்டு விட்டால், இன்னும் கெடுத்து விடுவார்கள் அப்பனே. அப்போது மனிதர்களை என்ன செய்யலாம்? 

அடியவர்கள் :- மனிதர்களை….

குருநாதர் :- அப்பனே தண்டனை கொடுப்போம் அப்பனே. இதிலிருந்து தப்பித்துக்கொள்வது எவ்வாறு என்பது நீ கேட்கலாம் அல்லவா?  ஏன் கெட்கவில்லை? இதுதான் உன்னுடைய அறிவா? 

அடியவர் 4 :- இல்ல சாமி. பேசிக்கொண்டு இருந்தீர்கள். குறுக்க பேசக் கூடாது என்று.

குருநாதர் :- அப்பனே பேசு அப்பனே. உன் தந்தைதான் பேசிக்கொண்டிருக்கின்றான். 

அடியவர் 4 :- நீங்களே நல்லதை எடுத்துச் சொல்லிவிடுங்கள் சாமி. 

குருநாதர் :- அப்பனே சொல்லிக்கொண்டே இருக்கின்றேன். ஆனால் செய்யவில்லை என்றால் யான் என்ன செய்வது? 

அப்பனே உன் பின்னே இருக்கின்றானே அவந்தனக்கு வேலை வாங்கிக்கொடுத்தேன் அப்பனே. எங்கேயாவது பிழைத்துக்கொள் என்று. ஆனால் போகவில்லை அப்பனே. ஆனாலும் அவனை என்ன செய்யலாம் என்று நீயே கூறு? அவனைப் பார்கக் கூடாது. நீ கூறு? 

அடியவர் 4 :- கண்டிப்பாக ஏதாவது நீங்கதான் நல்லது செய்யனும் சாமி. வேற என்ன செய்வது? 

குருநாதர் :- அப்பனே நாம் அதாவது நாம்தம் சோம்பேறிகளாக இருக்கும்பொழுது, இறைவன் மேல் பழி போடக்கூடாதப்பா. ஏனென்றால் சோம்பேறிதான் இறைவனை அதாவதை பழி போட்டுவிடுவான். யான் உந்தனையே கெட்டியாகப் பிடித்துக்கொள்கின்றேன். உந்தனுக்கே அனைத்தும் சேவை செய்கின்றேன். அப்பனே கடுமையாக முயற்சி எடுத்து, அப்பனே அறிந்தும் கூட நல் வேலைகளைச் செய்து, கடமைகளைச் செய்து வந்தால்தான் அப்பனே, இறைவனும் சந்தோஷப்படுவான் அப்பனே. கடமையைச் செய்யாமல் இறைவனை கெட்டியாக அனைத்துக்கொண்டாலும் எட்டி உதைப்பானப்பா.

சுவடி ஓதும் மைந்தன் :- தன் கடமையைச் செய்யனும். உங்களுக்கு என்ன கடமை?

அடியவர் :- என் வீட்டை நல்லபடியாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்பா, அம்மாவுக்குச் செய்ய வேண்டிய கடமையை ( சேவைகள் )  செய்யனும்.

சுவடி ஓதும் மைந்தன் :- அதெல்லாம் செய்ய வேண்டும். இந்த வயதில் உங்கள் கடமை என்ன? அப்பா அம்மாவைப் பார்த்துக்கொள்ள வேண்டும். வேலைக்கு போக வேண்டும். சம்பாதிக்க வேண்டும். மனைவியை காப்பாற்ற வேண்டும். குழந்தையை காப்பாற்ற வேண்டும். இதுதான் கடமை. இதைச் செய்து கொண்டே வாங்க என்று சொல்கின்றார். 

( நம் குருநாதர் கருணைக்கடல் பிரம்ம ரிஷி அகத்திய மாமுனிவர் அருளால்  April 2024, கோவை வடவள்ளி அகத்திய மாமுனிவர் ஆலயத்தில் உரைத்த சத்சங்க கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்….)

ஆலய முகவரி :-

ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்திய மாமுனிவர் ஆலயம். வடவள்ளி, முல்லை நகர்,  மருதமலை அடிவாரம். கோயம்புத்தூர்.

Google map:- 


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!

No comments:

Post a Comment