“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Tuesday, April 22, 2025

சித்தர்கள் ஆட்சி - 446:- அன்புடன் அகத்திய மாமுனிவர் - கோவை வடவள்ளி ஆலயத்தில் உரைத்த சத்சங்க வாக்கு ( April 2024 ) - பகுதி 13

  இறைவா !!!!! நீயே அனைத்தும்.

இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்


அன்புடன் அகத்திய மாமுனிவர் - கோவை வடவள்ளி ஆலயத்தில் உரைத்த சத்சங்க வாக்கு ( April 2024 ) - பகுதி 13

(இவ் தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்
1. சித்தர்கள் ஆட்சி - 431 - பகுதி 1
        2. சித்தர்கள் ஆட்சி - 434 - பகுதி 2
        3. சித்தர்கள் ஆட்சி - 436 - பகுதி 3
        4. சித்தர்கள் ஆட்சி - 437 - பகுதி 4
        5. சித்தர்கள் ஆட்சி - 438 - பகுதி 5
        6. சித்தர்கள் ஆட்சி - 439 - பகுதி 6
        7. சித்தர்கள் ஆட்சி - 440 - பகுதி 7
        8.     சித்தர்கள் ஆட்சி - 441 - பகுதி 8
        9.     சித்தர்கள் ஆட்சி - 442 - பகுதி 9
      10.     சித்தர்கள் ஆட்சி - 443 - பகுதி 10
      11.     சித்தர்கள் ஆட்சி - 444 - பகுதி 11
      12.     சித்தர்கள் ஆட்சி - 445 - பகுதி 12
      13.     சித்தர்கள் ஆட்சி - 446 - பகுதி 13
)



(வணக்கம் அடியவர்களே. இப்போது நாம் இவ் சத்சங்க வாக்கின் இறுதிப் பகுதிக்கு வந்து விட்டோம். புண்ணியங்கள் அனுதினமும் அவசியம் செய்க. உங்கள் குழந்தைகளுக்கும், பிள்ளைகளுக்கும் கட்டாயம் முதலில் புண்ணியங்கள் பல செய்ய வையுங்கள் முதலில். வாருங்கள் இவ் தொடர் வாக்கின் நிறைவுப் பகுதிக்குச் செல்வோம்.) 

( நம்மில் பலருக்கும் ஏன் கடன் சுமைகள் என்று தெரியாது. அனைத்திற்கும் காரணம் நாம் முற்பிறவியில் செய்த தவறுகளே. இது குறித்த வாக்கு ஒன்று)

அடியவர் :- ஐயா கடன் தொல்லை அதிகமாக உள்ளது. 

குருநாதர் :- அப்பனே , பிறவிக் கடனை எப்பொழுது தீர்க்கப்போகின்றாய்? 

அடியவர் :- சொல்லுங்க ஐயா.

குருநாதர் :- அப்பனே பிறவிக் கடனைப் பற்றிச் சொல்கின்றேன் அப்பனே. அதாவது ( ஒரு மகிமை புகழ் மாநகரத்தில் உள்ள மாபெரும் இறைவிக்கு ) அறிந்தும் கூட பல வழிகளிலும் கூட உந்தனுக்கு உதவிகள் செய்கின்றேன் என்றெல்லாம் முற்பிறவியிலே ( நீ கூறினாய்). ஆனாலும் பின் (மகிமை புகழ் இறைவி) ___தாயே மிகப் பெரிய அளவில் உன்னை உயர்த்திவிட்டாள். ஆனாலும் அனைத்தும் பின் அதாவது என்னென்ன பின் சொன்னாயோ அதையெல்லாம் நீ செய்யவில்லை அப்பனே. இதனால் ____ ( இறைவியின் பெயர்) தாயிடம் சென்று பின் அதாவது இப்பிறப்பில் எதைச் செய்தேன். எப்பிறப்பில் எந்தனுக்குத் தெரியவில்லை தாயே..மன்னித்து விடு. நிச்சயம் இப்பிறப்பிலாவது எந்தனுக்கு அறிந்தும் கூட. இதனால் அப்பனே இவ்வாறு அவளிடத்தில் வேண்டிக் கொண்டு  நிச்சயம் பிற உயிர்களுக்கு தானம் செய். நிச்சயம் அவள் நினைத்தால் நிச்சயம் அனைத்தும் நிறைவடைந்துவிடும் வாழ்க்கையும் கூட. இன்னும் உயரத்தில்தான் இருக்கின்றது. இதைச் செய் முதலில். 

( வணக்கம் அடியவர்களே, நமது வாழ்வில் நமது கடன்களுக்குப் பின்னால் இப்படி ஒரு விதியில் சிக்கல்கள் இருக்கும். எந்த மனிதர்களாலும் இதனை அவிழ்க்க இயலாது. புண்ணியங்கள் செய்யச் செய்யச் சித்தர்கள் உங்களுக்கு வழி காட்டுவார்கள். புண்ணியம் செய்வது ஒன்றே மட்டுமே நம் வாழ்வில் உயர்வடைய நமக்கு உள்ள ஒரே வழி.

( பல தனிவாக்குகள் ) 

புண்ணியங்கள் நிறைந்த உலகத்தில் (மனிதன்) பாவத்தைச் சேர்த்துக்கொண்டே இருக்கின்றான் இக்கலியுகத்தில். ( தனி வாக்குகள்.) 

(ஒரு அடியவருக்கு) வயது ஒரு தடையே இல்லை எங்களிடத்திலிருந்தால். 

(மற்றொரு அடியவருக்கு) அப்பனே அறுபடைகளுக்கும் சென்று வா. நீ நினைத்த காரியம் நிச்சயம் நிறைவேறும். 

( இப்போது சத்சங்கத்தின் நிறைவுப் பகுதி. கருணைக்கடல் இவ் சத்சங்கத்தின் ஒட்டு மொத்த வாக்குகளைப் பின்வருமாறு உரைத்தார்கள்.) 

குருநாதர் :- அப்பனே அனைவருக்குமே எம்முடைய ஆசிகள் அப்பனே. (இங்கு வந்த) அனைவருக்கும் (வாக்குகள்) சொல்லிவிட்டேன். மாற்றங்கள் ஏற்றங்கள் அனைவருக்குமே உண்டு.  யான் சொல்லியவற்றை நிச்சயம் கடைப்பிடிக்க நன்று. 

அனைவருக்குமே, இங்குள்ள அனைவருக்குமே பல பிரச்சினைகள் வாழ்க்கையில். அவை மட்டும் இல்லாமல் பாவங்கள், அவையெல்லாம்  ஆனாலும் உங்களுக்குச் சந்தோசம் அடைய வேண்டியவற்றைக் கூடச் சொல்லி, நிச்சயம்  பலவினைகள் , பலவற்றையும் கூட. நிச்சயம் யான்தான் மாற்றி அமைக்க வேண்டும். 

அதனால்தான் நீங்கள் புண்ணியம் செய்யுங்கள்.  சொல்லி விட்டேன். (நீங்கள் புண்ணியங்கள்) அதைச் செய்யாமல்,  என்னாலும் (உங்கள் வினைகளை, விதிகளை) மாற்ற முடியாது !!!!!!!!! சொல்லிவிட்டேன் !!!!!!

அனைவருக்குமே, அதாவது என்னை நம்பி ஓட வந்துவிட்டீர்கள். அதனால் வாக்குகள் செப்பிவிட்டேன். அடுத்த முறை நீங்கள் நிச்சயம் பின் இவ்வாறு ( பல புண்ணியங்கள் ) செய்திட்டு வந்தாலே , நிச்சயம் சில சில வழிகளிலும் கூட நிச்சயம் உத்தரவிட்டுச் செய்யச் சொல்வேன். உயர்வும் வைப்பேன். எம்முடைய ஆசிகள் !!!!!. 

அனைவருக்கும் எம்முடைய ஆச்சிகள் !!!!! ஆசிகளப்பா !!!!! .

( வாக்கு முடிந்தும் மீண்டும் சில அடியவர்கள் கேள்விகள் கேட்க , கருணைக்கடல் மீண்டும் வாக்குகள் அருளினார்கள்.) 

அடியவர் :- (தெரியாமல் சிலவற்றைக் கேட்டதால்) மன்னித்துக்கொள்ளுங்கள் ஐயா. 

குருநாதர் :- அம்மையே கவலை விடு. நிச்சயம் தெரியாதவர்களுக்கும் கூட நல்வழிப்படுத்துவதே… என்னுடைய ஆசிகள் அம்மையே. இதனால் அடுத்த முறை (பல வகை புண்ணியங்கள்) யான் சொல்லியவற்றைச் செய்து கொண்டு வா. நிச்சயம் அருளாசிகள். இன்னும் உன் வாழ்க்கையேப் பற்றி யான் சொல்லுகின்றேன் அம்மையே. 

குருநாதர் :- 

அப்பனே ஆசிகள். அனைவருக்குமே எம்முடைய ஆசிகள் அப்பனே. அனைவரையுமே யான் பார்த்துவிட்டேன். அப்பனே பின் இன்னும் இன்னும் அப்பனே ஆசிகள்!!!! 
ஆசிகள்!!!! 
போதுமப்பா!!!! அடுத்த முறையும் (வாக்கு) கேளுங்கள் அப்பனே. அவரவர் வினையைக்கூடத் தீர்க்க அப்பனே அறிந்தும் கூட ….

( இப்போது எதையுமே கேட்காத மற்றொரு அடியவருக்கு உரைத்த அமுத வாக்கு)

அப்பனே எனையே நம்பிக்கொண்டு வந்துவிட்டாய் ஓடோடி. எம்முடைய ஆசிகள் கடைநாளும் உண்டு என்பேன் அப்பனே. நலமாகவே எக்குறையும் கொள்ள வேண்டாம் அப்பனே.  இவ்வுலகத்தில் அனைவருமே அனாதைகள்தான் அப்பனே. (உனை) பார்த்திட்டேன் அப்பனே. அதனால் யானே சொந்தம் என்பேன் அப்பனே லோபாமுத்திரையோடு. கந்தனும் இருக்கின்றான். ஈசனும் இருக்கின்றான். யான் சொந்தம் இருக்கும் பொழுது கவலையை விடு அப்பா. யான் உந்தனுக்கு என்னென்ன தேவையோ அதைத் தருகின்றேன் அப்பனே. அனைவருமே கேட்பார்கள் அதை இதை என்று அப்பனே. நீ எதையும் கேட்கமாட்டாய் என்பது எனக்குத் தெரியுமப்பா!!!!! கவலையை விடு. அனைத்துமே உந்தனுக்குத் தருகின்றேன் அப்பனே. 

இதேபோலத்தான்  இருக்க வேண்டும் அனைவருமே. எதையும் கேட்கக்கூடாது. பின் குழந்தைகள், பின் அவை இவை என்றெல்லாம், அவை வேலைகள் என்றெல்லாம் , அவையெல்லாம் மறையக்கூடியது அப்பா. பின் மறையக்கூடாததை ( இறைவனை ) பின் உயர்ந்த உள்ளத்தில் இருக்கவேண்டும் என்பேன் அனைவரிடம் கூட. உயர்ந்த உள்ளம் இருந்துவிட்டால் அங்கு இறைவன் நிச்சயம் குடிகொள்வான் என்பேன். ஆனால் இல்லையே.  

ஆசைகள்!!!!! பேராசைகள்!!!! அவ் ஆசைகள், பேராசைகளே மனிதனைக் குழியில் தள்ளிவிடுமப்பா. கவலையை விடு. 

“அப்பனே சொந்த பந்தங்கள் அனைத்தும் யானே.” !!!!!! 

சொல்லிவிட்டேன் அப்பனே. ஆசிகள் !!!!!!!!! ஆசிகள் !!!!!!!!!
மறுவாக்கும் சொல்கின்றேன். பல ரகசியங்களும் அப்பனே. போதுமப்பா !!!!! அனைவருக்குமே எம்முடைய ஆசிகள் !!!!!

(சத்சங்க நிறைவு வாக்கு) 

குருநாதர் :- அப்பனே எம்முடைய ஆசிகள் !!!!!!!!! 

நிச்சயம் அனைவருக்குமே நிச்சயம் யான் சொல்லியதை நீர் , மோர் தானங்கள் செய்யச் சொல் அப்பனே. அடுத்த வாக்கும் உரைக்கின்றேன் அப்பனே. அதி விரைவிலேயே வருவேன். பார்ப்பேன். ஆசிகள்!!! ஆசிகள்!!! அனைவருக்கும் ஆசிகள்!!! 


( நம் குருநாதர், நம் அன்புத் தந்தை, கருணைக்கடல், பிரம்ம ரிஷி, அகத்திய மாமுனிவர் அருளால்  April 2024, கோவை வடவள்ளி அகத்திய மாமுனிவர் ஆலயத்தில் , சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் திரு.ஜானகிராமன் அவர்கள் மூலம் ஜீவ நாடியில் உரைத்த அடியவர்கள் சத்சங்க கேள்வி, பதில் வாக்குகள் நிறைவு அடைந்தது. இவ் சத்சங்க வாக்குகளை அடியவர்கள் அனைவருக்கும் வகுப்பு எடுத்து உலகம் முழுவதும் அனைவருக்கும் சொல்லுங்கள். நம் தலைமுறைகளை நன்கு வாழவைக்கும் மகத்தான வாக்குகள். அன்ன சேவை செய்யும் அடியவர்கள் அனைவரும் அன்ன சேவை செய்யும் இடங்களில் முதலில் சிவபுராணம் படித்து, இவ் சத்சங்க வாக்குகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லி பின் அன்னமிட அவ் அடியவர்களுக்கு உயர் தர முதல் வகைப் புண்ணியங்கள் உண்டாகும். தர்மம் செழித்து ஓங்குக. ) 

ஆலய முகவரி :-

ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்திய மாமுனிவர் ஆலயம். வடவள்ளி, முல்லை நகர்,  மருதமலை அடிவாரம். கோயம்புத்தூர்.

Google map:- 

https://maps.google.com/?q=11.024868,76.916664

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!


சித்தர்கள் ஆட்சி - 445:- அன்புடன் அகத்திய மாமுனிவர் - கோவை வடவள்ளி ஆலயத்தில் உரைத்த சத்சங்க வாக்கு ( April 2024 ) - பகுதி 12

 இறைவா !!!!! நீயே அனைத்தும்.

இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்


அன்புடன் அகத்திய மாமுனிவர் - கோவை வடவள்ளி ஆலயத்தில் உரைத்த சத்சங்க வாக்கு ( April 2024 ) - பகுதி 12

(இவ் தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்
1. சித்தர்கள் ஆட்சி - 431 - பகுதி 1
        2. சித்தர்கள் ஆட்சி - 434 - பகுதி 2
        3. சித்தர்கள் ஆட்சி - 436 - பகுதி 3
        4. சித்தர்கள் ஆட்சி - 437 - பகுதி 4
        5. சித்தர்கள் ஆட்சி - 438 - பகுதி 5
        6. சித்தர்கள் ஆட்சி - 439 - பகுதி 6
        7. சித்தர்கள் ஆட்சி - 440 - பகுதி 7
        8.     சித்தர்கள் ஆட்சி - 441 - பகுதி 8
        9.     சித்தர்கள் ஆட்சி - 442 - பகுதி 9
      10.     சித்தர்கள் ஆட்சி - 443 - பகுதி 10
      11.     சித்தர்கள் ஆட்சி - 444 - பகுதி 11
      12.     சித்தர்கள் ஆட்சி - 445 - பகுதி 12
)


(இப்போது வாக்குகள் அடியவர்களுக்கு வேகமாக குருநாதர் உரைத்துக்கொண்டே இருந்தார்கள். அந்த வாக்கிலிருந்து முக்கிய பொது வாக்குகளை இங்கு காண்போம். வாருங்கள் அடியவர்களே, கருணைக்கடல் வழங்கும் ஞான அமுதத்தை உள் வாங்கலாம்.) 

குருநாதர் :- 

1. அம்மையே யான் சொல்லியவற்றை (புண்ணியங்கள்) செய்து கொண்டே இரு. ஏன் எதற்கு என்றால் எப்போது எதைச் செப்பினால் பின் எவ் நேரம் அதனால்தான் காலங்கள் நேரத்திற்கு (ஏற்றவாறு யாங்கள் உங்களுக்கு) சொன்னால் நிச்சயம் அதாவது எங்களுக்கு (கால நேரங்கள் ஏதும்) இல்லை. ஆனால் அம்மையே உங்களுக்காவது அவ் நேரத்தில் சொன்னால்தான் புண்ணியங்கள் கூட கூடும் என்பேன். பின் நடக்கும் என்பேன். யான் அருகிலேயே இருப்பேன். அனுதினமும் கந்த சஷ்டி ஓதி வா. ஒரு முறை செந்தூருக்குச் சென்று வா. வெற்றிகளாகும். கவலையை விடு. 


2. (நித்திய அன்னதானம் செய்யும் ஒருவருக்கு உரைத்த வாக்கு. இந்த வாக்கை நித்திய அன்ன சேவைகள் செய்து வரும் அடியவர்கள் நன்கு மனதில் உள் வாங்கி நிறுத்த மிக்க நன்று. உத்வேகம் உங்களுக்குள் பிறக்கும் என்பது உறுதி. ) அப்பனே ஆனாலும் சில வகைகளிலும் கூட தொந்தரவுகள் வரும் அப்பனே. ஆனாலும் அவற்றையெல்லாம் மீறிச்சென்றால் , எம்முடைய ஆசிகளால் மீறிச்செல்வாய் என்பேன் அப்பனே. நலமாகவே ஆசிகள் என்பேன் அப்பனே. ஆனாலும் (அன்னதானம்) இதைத் தடுப்போர்,  பிற குற்றங்கள் கூறுவோரும் பல பல.  ஆனாலும் எனை நம்பி வந்துவிட்டாய் அப்பனே. நிச்சயம் செய்வாய் என்பேன் அப்பனே. நிச்சயம் கொடுக்கின்றேன் அதற்குத் தகுந்தாற்போல் என்பேன் அப்பனே. 

இவன்தான் அனைத்திற்கும் காரணம் என்றெல்லாம் அப்பனே சொல்வார்கள் அப்பனே. எதை எதையோ சொல்வார்கள் அப்பனே. அவற்றையெல்லாம் அப்பனே பின் இக் காதில் வாங்கிட்டு, பின் அக்காதின் வழியே, பின் சொல்வார்களே அப்பனே அது போல் விட்டு விட்டு, நீ செய்யும் புண்ணியங்கள், (நித்திய அன்ன சேவை) இதைச் செய்து கொண்டே இரு அப்பனே. நலன்களாகும் அப்பனே. 

யான் இருக்கின்றேன் அப்பனே. அருள்கள். எனையும் கூட எந்தனுக்கும் படைத்தாய் அப்பனே பின் உணவையும் கூட. நலன்களாகவே உண்டுவிட்டேன் அப்பனே. நிச்சயம் அப்பனே நலன்களை ஏற்படும் என்பது உறுதியப்பா. அப்பனே யானே கொடுத்திருக்கின்றேன் அப்பனே. ( தனி வாக்கு - யோகங்கள்) அனைத்தும் செய்துவிட்டேன் அப்பனே. இவையெல்லாம் செய்து முடிப்பேன் என்பேன் அப்பனே. அமைதியாக இரு அப்பனே. அனைத்தும் நல்குவேன் அப்பனே. 

அனைத்தும் நடக்கும் அப்பா. ஆசிகள். ஆசிகளப்பா. இன்னும் உயர்வான இடத்திலும் வகிக்கலாம். அப்பனே இன்னும் (தனி வாக்கு) நன்மைகளாக முடியும் அப்பனே. போராட்டம் பின் குறுக்கு நெருக்கு இதையும் யான் சொல்கின்றேன் அப்பனே பொறுத்திருந்தால். நலன்களாக ஆசிகளப்பா. 

( இவ் அடியவருக்கு மிக வேகமாக வாக்கு வந்தது. சுவடி ஓதும் மைந்தனால் படிக்க இயலாத அளவு வேகமாக வாக்குகள் புண்ணியம் செய்பவர்களுக்கு வரும் என்று உரைத்தார்கள். புண்ணியங்கள் அதிகமானால் வாக்கின் வேகம் அதிகரிக்கும்.

( சிறிது நேரம் கழித்து உடனே மீண்டும் அவ் நித்திய அன்ன சேவை நடத்தும் அடியவருக்கு கருணைக்கடல் வாக்குகளை நல்கினார்கள். ) 

அப்பனே அனைத்தும் நல்குவேன் அப்பனே. கவலை விடு. சில சில தோல்விகள் இருந்தாலும், மனக்குழப்பங்கள் இருந்தாலும், அவையெல்லாம் மாற்றி அமைத்து நிச்சயம் அப்பனே யானே அருள்வேன் அப்பனே. நிச்சயம் போபாமுத்திரயோடு ஆசிகளப்பா. ஆசிகள். 

3. (மற்றொரு அடியவருக்கு உரைத்த வாக்கு) நிச்சயம் அடிக்கடி கந்தன் ஆலயத்திற்குச் சென்று கொண்டே இரு அப்பனே. உயர்வுகள் உண்டு உண்டு வாழ்க்கையில். ஆசிகள். 

4. ( ஒரு அடியவர் அவர் தாய், தந்தை உடல் நலம் தொடர்பாக கேட்டபோது நம் அனைவருக்கும் பொதுவாக உரைத்த பொன்னான வாக்கு.) அப்பனே அனைவருக்குமே சொல்கின்றேன் அப்பனே. உடம்பு வயது ஆகும்பொழுது பழுதடையும் என்பேன் அப்பனே. இவை சாதாரணமானதே என்பேன் அப்பனே. 

அதனால்தான் அப்பனே இயற்கை வகைகளை உட்கொள்ள, உட்கொள்ள அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே. பின் ஈர் வருடம், பின் மூவருடம் ( 2 - 3 ஆண்டுகள்) உட்கொண்டே இருக்க வேண்டும் அப்பனே. 

இதனால் அப்பனே அனைவருக்குமே தெரிவித்து விடுகின்றேன் அப்பனே. இளம் வயதிலிருந்து வளர வளர பின் எலும்புகள் , பின் உள் உருப்புகள் தேய்ந்து அப்பனே நோய்களும் பின் சாதாரணமாகவே வருபவை அப்பனே. கவலைகளை விடுங்கள் அப்பனே. அனைவருக்கும் இது வருமப்பா. 

5. அனைத்தும் ஒரு பக்கத்திலிருந்தாலும் அவையெல்லாம் நீக்கிட்டு நீக்கிட்டு யான் நன்மைகள் செய்து கொண்டே இருக்கின்றேன் அப்பனே. உயர்த்துவேன் அப்பனே. 

செவ்வாய் தோறும் முருகனுக்குத் தீபம் ஏற்றி வழிபட்டுக்கொண்டே வா. உயர் நிலை பெறுவாய் அப்பனே. 

அவை மட்டுமில்லாமல் ராகு காலத்தில் சிறப்பாக பைரவனுக்கும் கூட தீபம் ஏற்றி நல் முறைகளாக , பின் பைரவ வாகனங்களுக்கும் கூட உணவளித்துக்கொண்டே இரு அப்பனே. மாற்றங்கள் ஏற்படுவது உறுதியப்பா. சில தீயவைகளும் அகற்றும் அப்பா. ஏவல் அகன்றும் அப்பா. அப்பனே பின் மனசு நிம்மதி ஏற்படும் அப்பா. 

நிச்சயம் ஈர் மண்டலம் செய்து கொண்டே இரு அப்பனே. நிச்சயம் ஓர் மண்டலம் இதில் கூட நன்மைகள் (புண்ணியங்கள், தான தர்மங்கள்) செய்ய,  அப்பனே எறும்புகளுக்கு நிச்சயம் ( உன் இஷ்டம் போல் இயன்ற பொழுதெல்லாம் இயன்றவரை  )  நீ செய்து கொண்டே இரு. (தனி வாக்குகள்) ஓர் முறை ஏழுமலையானிடத்திற்கச் சென்று வா. 

( இவ் அடியவருக்கு பல வாக்குகள் அருளினார்கள் கருணைக்கடல். பூர்வ ஜென்ம ரகசியங்களும் உரைத்தார்கள். இவ் அடியவரை மாயையில் மூழ்கடித்து இடைக்காடர் சித்தர் திருவண்ணாமலையில் இவ் அடியவரிடம் கர்மங்களை வாங்கிச்செல்வார் என்று உயர் நல் வாக்குகள் நல்கினார்கள்.

6. ( மற்றொரு அடியவருக்கு) மனிதன் என்றாலே குறை குறை என்றெல்லாம்  கூறிக்கொண்டிருப்பார்கள் அப்பனே. ஆனாலும் கவலையை விடு அன்பு மகனே. அப்பனே புரியாமல் இருந்தாலும் புரிய வைத்து, வாழ்கையை மாற்றி உந்தனுக்கு என்ன தேவை , ( உன்னை) சார்ந்தோருக்கும் உதவி அளிப்பேன் அப்பனே. 

மனிதன் என்றாலே கவலைகள் தொற்றுக் கொள்ளும் அப்பா. ஆனாலும் கவலையை விடு அப்பனே. யானே அவ் கவலையெல்லாம் நீக்கிவிடுகின்றேன் அப்பனே. நன்மைகள் தருகின்றேன் அப்பனே. ஆசிகள். ஆசிகளப்பா!!!! 

7. ( இப்போது மாமிசம் சாப்பிடுகின்றவர்கள் யார் யார் என்று கேள்விகள் கேட்டு வாக்கை நிறுத்தினார் கருணைக்கடல். இது வரை நல் முறையாக மழைபோல பொழிந்த நல்வாக்கு நிறுத்தப்பட்டது. மாமிசம் உண்பவர்கள் எழுந்து சுவடியின் முன் வந்தனர். ஆன்மீகத்தில் முதல் பாடம் கொல்லாமை அட்டாங்க யோகம் - இயமம்) 

அப்பனே  முதலில் மாமிசத்தை நிறுத்து. அனைவரும் நிறுத்தச் சொல். உயர்வுகள் வரும். அனைத்தும் வரும். 

( அடியவர் இவ் வாக்கை அனைவருக்கும் எடுத்துச் சொன்னார்கள். இதே வாக்கை மாமிசம் சாப்பிட்ட அனைவருக்கும் அங்கு எடுத்து உரைக்கப்பட்டது. மாமிசம் உண்டால் இறையருளே கிட்டாது.  மாமிசம் சாப்பிட்டால் பல தொல்லைகள் உண்டாகும் என்று எடுத்துரைத்தார் அங்கு உள்ள ஓர் அடியவர்.) 

8. (மற்றொரு அடியவருக்கு உரைத்த வாக்கு) 

அம்மையே எம்முடைய ஆசிகள் எப்போதும் இருக்குமம்மா. கவலை விடு. சில சில மனவருத்தங்கள், சில சில தோல்விகள் அம்மையே, எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை என்பேன் அம்மையே. அனைத்தும் என்னுடைய அருளால் எப்பொழுது எதை நிறைவேற்ற வேண்டும் என்பதையெல்லாம் யானே அறிவேன் அம்மையே. 

என் அருகிலே இருப்பதால் யான் பார்த்துக்கொள்கின்றேன். தைரியமாக இரு. இவ் அகத்தியன் இருக்கும் பொழுது என்ன கவலை. அறிந்தும் கூட எத்தனுக்கும் பல வகைகளிலும் கூட எதை எதை செய்யச் சொன்னார்களோ அதையெல்லாம் நீ செய்து விட்டாய் தாயே!! பொறுத்திரு!! என்னை நம்பி வந்து ஓடோடி வந்து தீபங்களெல்லாம் ஏற்றினாய் தாயே!!! பொறுத்திரு!!!

9. (மற்றொரு அடியவருக்கு) அம்மையே எம்முடைய ஆசிகள் பல கோடி !!!!!!!!!!!!!!! 

( கருணைக்கடலிடம் ஒரு ஆசி வாங்கவே பல பிறவிகள் ஆகும் என்ற நிலையில் இவ் அடியவருக்கு ஒரே வார்த்தையில் பலகோடி ஆசிகள் என்று உரைத்தார்.)


10. அப்பனே விதியில் கூட ஒன்றுமே எழுதாமல் அனுப்பிவிட்டான் பிரம்மனும் கூட. அப்பனே எப்படியப்பா. அதனால் (உனது விதியை) யான் எழுதிக்கொள்கின்றேன் இனிமேல். 

11. அப்பனே (என் அருள்கள்) இருப்பதனால்தான் வாக்குகள் சொல்லிக் கொண்டிருக்கின்றேன். 

12. ( ஒரு அடியவர் இறந்து விட்டார். ஆனால் வாழ்ந்து வருகின்றார். இறைவன் மகளாக, இறைவன் மடியிலேயே படுத்து உறங்குகின்றார் இவ் அடியவர் என்று வாக்கு உரைத்தார்கள்.) 

13. (ஒரு அடியவர் தொழில் , மற்றும் கடன் குறித்துக் கேட்ட போது) அப்பனே சென்னிமலை முருகனை தரிசித்துக் கொண்டே இரு அப்பனே. வாழ்க்கையில் உயர்வடைவாய். ( சென்னிமலை முருகன் ஆலயம் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த ஆலயத்திற்கு மேலும் ஒரு பெருஞ் சிறப்பு உண்டு. அது முருகப்பெருமானுக்கு எல்லா ஆலயங்களிலும் ஒலிக்கவிடப்படும் ‘கந்தசஷ்டி கவசம்’ பாடல் அரங்கேறிய திருத்தலம் இதுவாகும்.  ஈரோட்டில் இருந்து சுமார் 27 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, சென்னிமலை திருத்தலம். சஷ்டியில் விரதமிருந்து சென்னிமலை ஆண்டவனை வழிபடுவோருக்கு குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. திருமணம், விவசாயம், பிற தொழில் சார்ந்த செயல்களில் ஈடுபடும்போது, இத்தல முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்து சிரசுப்பூ உத்தரவு கேட்டு செயல்களைத் தொடங்குவதும் மரபாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஈரோட்டில் இருந்து தாராபுரம் செல்லும் வழியில் 28 கிலோமீட்டர் தொலைவிலும், பெருந்துறையில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலும் ஈங்கூர் ரெயில் நிலையத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலும் சென்னிமலை அமைந்துள்ளது. கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய ஸ்தலம்: கந்த சஷ்டி கவசம் இயற்றிய பாலன் தேவராய சுவாமிகள் காங்கேயம் அருகே உள்ள மடவிளாகத்தைச் சேர்ந்தவர். மைசூர் தேவராச உடையாருக்கு உதவியாளராகப் பணிபுரிந்து கொண்டிருந்தார். முருக பக்தரான இவர், ஐப்பசி மாதம், கந்த சஷ்டி தினத்தில் வேற்று மதத்தவர்களிடம் அனல்வாதம் (தான் எழுதிய நூலைச் சான்றோர்கள் முன், நெருப்பிலிட்டு, தீயில் கருகாமல் திரும்ப எடுத்து அரங்கேற்றுவது), புனல்வாதம் (கரைபுரண்டு ஓடும் ஆற்று வெள்ளத்தில், தான் எழுதிய நூலை இட்டு, நீரில் எதிர்கொண்டு செல்லும் சுவடிகளை எடுத்து அரங்கேற்றுவது)செய்து, கந்த சஷ்டி கவசத்தை அரங்கேற்றம் செய்ய முருகனை வேண்டினார். அதற்கு உரிய ஆலயமாக சென்னிமலையை, முருகப்பெருமானின் அருளாணையால் உணர்ந்து, இங்குக் கந்த சஷ்டி கவசத்தை சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக' என இத்தலத்துப் பெருமானை அழைத்து, அரங்கேற்றம் செய்து, பெருமை படைத்தார். அடியவர்கள் புண்ணியங்கள் பல செய்து, இவ் ஆலயம் அடிக்கடிச் சென்று வணங்கி, கந்தப்பெருமானின் அருள் பெறுக!!!) 


( நம் குருநாதர், நம் அன்புத் தந்தை, கருணைக்கடல், பிரம்ம ரிஷி, அகத்திய மாமுனிவர் அருளால்  April 2024, கோவை வடவள்ளி அகத்திய மாமுனிவர் ஆலயத்தில் , சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் திரு.ஜானகிராமன் அவர்கள் மூலம் ஜீவ நாடியில் உரைத்த அடியவர்கள் சத்சங்க கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்….)

ஆலய முகவரி :-

ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்திய மாமுனிவர் ஆலயம். வடவள்ளி, முல்லை நகர்,  மருதமலை அடிவாரம். கோயம்புத்தூர்.

Google map:- 


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!







Saturday, April 19, 2025

சித்தர்கள் ஆட்சி - 444:- அன்புடன் அகத்திய மாமுனிவர் - கோவை வடவள்ளி ஆலயத்தில் உரைத்த சத்சங்க வாக்கு ( April 2024 ) - பகுதி 11

                                           இறைவா !!!!! நீயே அனைத்தும்.

இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்


அன்புடன் அகத்திய மாமுனிவர் - கோவை வடவள்ளி ஆலயத்தில் உரைத்த சத்சங்க வாக்கு ( April 2024 ) - பகுதி 11

(இவ் தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்
1. சித்தர்கள் ஆட்சி - 431 - பகுதி 1
        2. சித்தர்கள் ஆட்சி - 434 - பகுதி 2
        3. சித்தர்கள் ஆட்சி - 436 - பகுதி 3
        4. சித்தர்கள் ஆட்சி - 437 - பகுதி 4
        5. சித்தர்கள் ஆட்சி - 438 - பகுதி 5
        6. சித்தர்கள் ஆட்சி - 439 - பகுதி 6
        7. சித்தர்கள் ஆட்சி - 440 - பகுதி 7
        8.     சித்தர்கள் ஆட்சி - 441 - பகுதி 8
        9.     சித்தர்கள் ஆட்சி - 442 - பகுதி 9
      10.     சித்தர்கள் ஆட்சி - 443 - பகுதி 10
      11.     சித்தர்கள் ஆட்சி - 444 - பகுதி 11
)

(நம் குருநாதர், அன்புத் தந்தை, கருணைக் கடல் , பிரம்ம ரிஷி, அகத்திய மாமுனிவர் அவர்கள் அங்கு உள்ள அடியவர்கள் என்னென்ன புண்ணியங்கள் செய்ய உள்ளீர்கள் என்று கேட்டு அதன் பின் அவர்களுக்கான வாக்குகள் உரைத்தார்கள். இதன் தொடரச்சியாக…) 

அடியவர் 6:- ஈ, எறும்புக்கு , காக்கா,  குருவிக்கு, கோமாதாவிற்கு இல்லாத ஒருத்தருக்கு சாப்பாடு கொடுத்துக்கொண்டு இருக்கின்றேன்.  பைரவருக்கும். இன்று மட்டும் செய்யவில்லை ஐயா, இங்க வந்ததனால். 

குருநாதர் :- அறிந்தும் கூட அம்மையே (விதியை மாற்றும் தனி வாக்குகள்…..) 

அடியவர் 7 :- எறும்புகளுக்கு தானம் செய்கின்றேன். 

குருநாதர் :- அம்மையே வாயில் சொல்லக்கூடாது. நிச்சயம் செய்ய வேண்டும். இதனால் நீ செய்தால் உன் பிள்ளைகளுக்குத்தான் புண்ணியமாகப் போகும். அனைத்தும் உன் பிள்ளைகளுக்கும் சொல்லிக்கொடு தாயே. அனைத்தும் செய்யட்டும். நன்று நன்று. ஆசிகள் ஆசிகள். 

அடியவர் 8 :- (……………………..) 

குருநாதர் :- ( தனி வாக்குகள் - பிரம்ம தேவரிடம் பேசிய பின்பு மறு வாக்கு. ) 

அடியவர் 9 :- நீர் மோர் தானம் செய்து கொண்டு உள்ளேன். 

குருநாதர் :- ( தனி வாக்குகள் )

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் :- ( புண்ணியம் செய்து கொண்டு இருப்பவர்களைப் பற்றி குருநாதருக்கே தெரியும். இனி புண்ணியம் செய்ய உள்ளவர்கள் என்ன நீங்கள் செய்ய உள்ளீர்களோ அதை சொல்லிவிட்டு, குருநாதரிடம் வாக்கு பெற்றுக் கொள்ளுங்கள். )

அடியவர் 10 :- ( வாயைத் திறக்காமல் மனதிலேயே சொல்லியதால் )

குருநாதர் :- அம்மையே சொல்லிவிட்டேன்.

அடியவர்கள் :- (சிரிப்புக்கள்)

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் :- அம்மா புரியுதுங்களா உங்களுக்கு? நீங்க மனசுலேயே  சொன்னீங்க. குருநாதரும் அதே போல் உரைக்கின்றார்கள். நீங்க வாய் திறந்து சொல்லுங்கள்.

குருநாதர் :- அம்மையே, அனைத்தும் உன் நன்மைக்காகத்தான் சொல்லிக்கொண்டிருக்கின்றேன். (புண்ணியங்கள்) செய்தால் சொர்கம். 

சுவடி ஓதும் மைந்தன் :- (விளக்கங்கள்)

அடியவர் 10 :- என்னால முடிந்த அளவு வாயில்லா ஜீவராசிகளுக்கு …

குருநாதர் :- ( இவ் அம்மை ஒரே ஒரு அடி புண்ணியத்தை நோக்கி நகர ஆரம்பித்தவுடன் அதாவது என்ன புண்ணியம் செய்ய உள்ளேன் என்று முதல் முறையாக வாய் திறந்தவுடன், கருணைக்கடல் இவ் அடியவருக்குக் கருணை மழை வாக்கு பொழிந்தார்கள். ஒரு அடி எடுத்து வைத்தற்கே இப்படி என்றால்…) 

நலன்களாகவே ஆசிகள் தாயே. நிச்சயம் குறைகள் நீங்கும். சில குறைகள் இருந்து கொண்டே இருக்கின்றது. நிச்சயம் சிறிது காலம் அப்படித்தான் இருக்கும். நல்முறையாக மாற்றம் அடையும். கவலையை விடு. இவ்வாறு நல்முறையாக (புண்ணியங்கள்) செய்து கொண்டே இருந்தால் (விதி) மாற்றங்கள் தாயே. 

(வணக்கம் அடியவர்களே, இந்த வாக்கிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது - எவ் குறை இருந்தாலும், குருநாதர் பாதங்களை இறுகப் பற்றிக்கொண்டு , புண்ணியங்கள் அனுதினமும் தொடர்ந்து மனம் தளராமல்  செய்து கொண்டே இருந்தால்,  உங்கள் விதிகள்/வாழ்வு குருநாதர் அருளால் மாற்றம் அடையும். உங்கள் மாத வருமானத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி உங்களால் இயன்ற புண்ணியங்கள் செய்து கொண்டே இருங்கள். நீங்கள் செய்யும் புண்ணியங்கள் அது ஒன்றே உங்களுக்கு நல்வாழ்வு அளிக்கும் மந்திரத் திறவுகோல். வாருங்கள், கருணைக்கடல் அருளும் ஞான அமுதத்தைப் பருகுவோம்.) 

அடியவர் 11 :- நான் மலைப் பிறதேசத்துக்குச் சென்றால் , அங்கு அன்ன தானம் செய்வதற்கு, அங்கு நான் சென்று service செய்கின்றேன் (அகத்திய மாமுனிவர்) தாத்தா. அதற்கப்புறம் (………..) கோவில் கும்பாபிஷேகத்திற்கு நன்கொடை கொடுக்கின்றேன் என்று சொல்லியிருக்கின்றேன். என்னால் என்ன (புண்ணியங்கள் செய்ய) முடியுமோ அதை செய்து கொண்டே இருக்கின்றேன். 

குருநாதர் :- அம்மையே எம்முடைய ஆசிகள் இருக்கின்றதம்மா. நன்முறைகளாகவே இதனால் விரும்பியதை எளிதில் அடைந்து விடலாம் என்பேன். ( ………. தனி வாக்குகள் …… ) இறைவன் பேச்சைத் தவிர யார் பேச்சையும் கேட்பதில்லை என்று (இரு).  ( தனி வாக்குகள்) உயர்ந்த நிலை அடைவாய். நல் ஆசிகள். 

அடியவர் 11 :- ( சில சந்தேகங்கள் ) 

குருநாதர் :- (தனி வாக்குகள்) எங்கும் செல்வதில்லை இவ் அகத்தியன். சொல்லிக்கொண்டே இருப்பான் அம்மையே. யான் சொல்லியதை முதலில் பயன்படுத்து. நிச்சயம் வாக்குகள் இன்னும் உண்டு. 

அடியவர் 11 :- உங்களுடைய ஆசிகள் தினமும் வேண்டும்.

குருநாதர் :- இப்பொழுது அதாவது ஏன் (இங்கு வாக்குகள் உந்தனுக்குச்) சொல்லிக்கொண்டே இருக்கின்றேன் என்றால்,  என்னுடைய அருள்கள் இருப்பதனால்தான் சொல்லிக்கொண்டிருக்கின்றேன். நிச்சயம் (யான் சொல்லியவற்றை ) கடைப்பிடி. 

அடியவர் 11 :- கோளறு பதிகம் படிக்கச் சொன்னீர்கள். 

குருநாதர் :- அம்மையே முதலில் படி. இதைச் செய்தாலே அடுத்த படிக்கு யானே அழைத்துச் செல்வேன் வாக்குகள் உரைத்து. 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் :- ( தினமும் கேளறு பதிகம் படிக்க வேண்டும்.  ஒரு நாளைக்கு 108 முறை) இதைச் செய்யவே ஒரு 5 மணி நேரம் ஆகும். 

அடியவர் 12 :- தினம் ஒரு வேளை உணவு கஷ்டப்படுபவர்களுக்குக் கண்டிப்பாகக் கொடுக்கின்றேன். 

குருநாதர் :- அப்பனே நிச்சயம் அப்பனே நல்லதே செய்வேன் அப்பனே. நல்முறைகளாகவே. (தனி வாக்குகள்) நிச்சயம் சில கர்மாக்களப்பா. அவ் கர்மாவை நீக்கி அப்பனே அனைத்தும் நல்குவேன் அப்பனே. உடம்பை சரியாக கவனித்துக் கொள் அப்பனே. பல இயற்கை மூலிகைகளை உட்கொள் அப்பனே. ( தனி வாக்குகள்.) நலமாக ஆசிகள். ஆசிகள். 

அடியவர் 13 :- (……………)

குருநாதர் :- (………..) உந்தனை அப்பனே ஏதாவது ஒரு வேலைக்கு  பயன்படுத்த வேண்டும் என்பது என்னுடைய எண்ணமப்பா. நிச்சயம் அது போகப்போக தெரியுமப்பா. நிச்சயம் ஆசிகள். எதையும் கேட்டுவிடாதே அப்பனே. எந்தனுக்குத் தெரியுமப்பா உன் நிலைமை. ஆசிகள். ஆசிகள். 

அடியவர் 14 :- குடும்பக் கடமையைச் செய்யனும். அம்மா அப்பாவை நல்லபடியாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். 

குருநாதர் :- அப்பனே கவலைகள் இல்லை. அப்பனே சனீஸ்வரன் சில தொல்லைகள் கொடுக்கத் தயாராகிக்கொண்டே ஆனாலும் அப்பனே பின் ராமனின் அருளும் எதை என்று அறிய அறிய அப்பனே அனுமானின் அருள்களும் இருக்க, அப்பனே நிச்சயம் சனி தோறும் அனுமானின் (ஆலயத்திற்கு)  இடத்திற்குச் சென்று கொண்டே இரு அப்பனே நலன்கள். நிச்சயம் நினைப்பது பின் சிறிது தடங்களாயினும் பின் அனுமானே நிறைவேற்றி வைப்பான் அப்பனே. என்றுடைய ஆசிகள் அப்பனே. கவலையை விடு. எப்பொழுது நினைத்தாலும் ராம ஜெபத்தை மனதில் எண்ணிக்கொண்டே இரு. ஆசிகள். 

அடியவர் 15 :- அன்னதானம் செய்து கொண்டு இருக்கின்றேன் சாமி. (தனி கேள்விகள்) 

குருநாதர் :- ( தனி வாக்குகள் ) இன்னும் சொல்லிக்கொண்டே இருந்தால் அப்பனே உன் மனது வேதனைக்குள்ளாகி விடும். நிச்சயம் அருளாசிகள் அப்பனே. கவலையை விடு அப்பனே. யானே எதைச் செய்ய வேண்டும் என்று என்னிடத்தில் விட்டுவிடு அப்பனே. நிச்சயம் நீ எதனையும் கேட்டுவிடாதே. எவரிடத்திலும் கேட்டுவிடாதே அப்பனே எதையும் கூட. உன் கடமையைச் செய்துகொண்டே இரு அப்பனே. ( தனி வாக்குகள்.) கவலையை விடு. ஆசிகள் ஆசிகள் லோபாமுத்திரையோடு. 

அடியவர் 16 :- (……………) 

குருநாதர் :- அனைவருக்குமே உண்டு என்பேன் அம்மையே வயதாக வயதாக. இதனால் அம்மையே சொல்லிவிட்டேன். பலவகையான இயற்கை மூலிகைகளை எடுத்துக் கொள். அப்பனே சொல். 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் :- அம்மா மூலிகை எடுத்துக்கொள்ளுங்கள். திரிபலா, திரிகடுகம். காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல், வில்வம், துளசி, வேப்பிலை இதெல்லாம் எடுத்துக் கொள்ளுங்கள். 

அடியவர் 16 :- தினமும் காக்கைக்கு, மயிலுக்கு , எறும்புக்கு, கோமாதாவுக்கு செய்கின்றேன் சாமி. நீர் மோர் கொடுக்கின்றேன் சாமி. அன்னதானம் முடிஞ்ச அளவு செய்கின்றேன் சாமி. 

சுவடி ஓதும் மைந்தன் :- நல்லதே செய்வார் அம்மா. 

அடியவர் 16 :- சரிங்க சாமி. 

அடியவர் 17 :- (………………) 

குருநாதர் :- அப்பனே எம்முடைய ஆசிகள். சில பக்குவங்கள் படவே சில சில வருத்தங்கள் அப்பனே. ஆனாலும் கவலையை விடு. அப்பனே என்னருகிலேயே இருக்கின்றாய் அப்பனே நலமாக. கந்தனும் இருக்கின்றான் அப்பனே நலமாக. இதனால் குறையை விடு. மனிதன் என்றாலே குறைதானப்பா. ( விதி குறித்த தனி வாக்கு ) அவையெலாம் அகற்றுகின்றேன் அப்பனே. தைரியமாக இரு. யானே இருக்கின்றேன் உன்னருகில் அப்பனே. கொடுக்கின்றேன் அப்பனே விரும்பியதெல்லாம். ஆனாலும் பொறுத்திருக்க வேண்டும் அப்பனே. 

( நம் குருநாதர் கருணைக்கடல் பிரம்ம ரிஷி, அகத்திய மாமுனிவர் அருளால்  April 2024, கோவை வடவள்ளி அகத்திய மாமுனிவர் ஆலயத்தில் , சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் திரு.ஜானகிராமன் அவர்கள் மூலம் ஜீவ நாடியில் உரைத்த அடியவர்கள் சத்சங்க கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்….)

ஆலய முகவரி :-

ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்திய மாமுனிவர் ஆலயம். வடவள்ளி, முல்லை நகர்,  மருதமலை அடிவாரம். கோயம்புத்தூர்.

Google map:- 


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!

Friday, April 18, 2025

சித்தர்கள் ஆட்சி - 443:- அன்புடன் அகத்திய மாமுனிவர் - கோவை வடவள்ளி ஆலயத்தில் உரைத்த சத்சங்க வாக்கு ( April 2024 ) - பகுதி 10

   இறைவா !!!!! நீயே அனைத்தும்.

இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்


அன்புடன் அகத்திய மாமுனிவர் - கோவை வடவள்ளி ஆலயத்தில் உரைத்த சத்சங்க வாக்கு ( April 2024 ) - பகுதி 10

(இவ் தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்
1. சித்தர்கள் ஆட்சி - 431 - பகுதி 1
        2. சித்தர்கள் ஆட்சி - 434 - பகுதி 2
        3. சித்தர்கள் ஆட்சி - 436 - பகுதி 3
        4. சித்தர்கள் ஆட்சி - 437 - பகுதி 4
        5. சித்தர்கள் ஆட்சி - 438 - பகுதி 5
        6. சித்தர்கள் ஆட்சி - 439 - பகுதி 6
        7. சித்தர்கள் ஆட்சி - 440 - பகுதி 7
        8.     சித்தர்கள் ஆட்சி - 441 - பகுதி 8
        9.     சித்தர்கள் ஆட்சி - 442 - பகுதி 9
      10.     சித்தர்கள் ஆட்சி - 443 - பகுதி 10
)

குருநாதர் :- அப்பனே அனைவருக்கும் சொல்கின்றேன் அப்பனே. திருமணம் என்றால் நிச்சயம், அதாவது தாய் தந்தையர் சேர்த்து வைத்த பொருளிலே வாழ்பவன் ஓர் நாள்லில்லை ஓர் நாள் அப்பனே நிச்சயம் தெருவோரம் வரவேண்டியதுதான் அப்பனே.  பிச்சை எடுக்க வேண்டியதுதான் அப்பனே. தன்னால் முயற்சி செய்து,  தான் இல்லம் அமைத்து , அப்பனே பெற்றோர்களுக்கு நன்மை செய்து , அப்பனே பின் தானே தொழிலை உருவாக்கி , செய்பவனே அப்பனே இவ்வுலகத்தில் உத்தமனப்பா. பின் பெண்ணை நம்பி வந்தாலும் காப்பாற்றுவானப்பா. எக்குறைகளும் வராதப்பா. மற்றவை எல்லாம் வீணப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்பா, அம்மா தயவில் வாழ்பவர் மனிதனே இல்லை என்று சொல்கின்றார். ஐயா தவறாக நினைத்துக்கொள்ள வேண்டாம். 

அடியவர்:- சரிங்க ஐயா.

சுவடி ஓதும் மைந்தன் :- அப்பா சேர்த்து வைத்தது, அம்மா சேர்த்து வைத்தது எல்லாம் வாழ்க்கையே இல்லை. தன்னுடைய சுய முயற்சியால் வீடு கட்டி, சம்பாதித்து (வாழ்வில்) முன்னுக்கு வருபவர் யாரோ அவருக்குத்தான் எந்த ஒரு குறையும் வராது. சும்மா அப்பா அம்மா இடத்தில் உட்கார்ந்து வாழ்ந்தோம் என்றால் முடிந்துவிட்டது வாழ்க்கை என்று சொல்கின்றார். புரியுதுங்களா? அப்போ தன்னுடைய முயற்சி மூலம் முன்னேற வேண்டும். நீங்கள் (வாழ்வில்) முன்னேறி, அம்மா அப்பாவிக்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும். நீங்கள் முன்னேறி நான்கு காசுகள் எடுத்து வந்து கொடுக்க வேண்டும். இது உங்களுக்கு இல்லை. இது பொது (வாக்கு). எல்லோருக்கும் சொல்கின்றார். அதைக் கொடுத்து, அதன் பின்னர் வீடு நீங்களே அமைத்துக்கொண்டால் , அந்த முயற்சியில் வருபவர்களுக்கு வாழ்க்கை நன்றாக இருக்கும். எந்த ஒரு குறையும் வராது. இதை மீறிச் சென்றால் சத்தியமாக (வாழ்வில்) குறை வரும். ஐயா புரிந்து கொண்டீர்களா ஐயா? அப்போது சிறு வயதிலிருந்தே (குழந்தைகளுக்கு) கற்றுக் கொடுங்கள். 

(குழந்தைகளைப் பார்த்து) அப்பா எங்களுக்கு உள்ள சொத்துக்களை வைத்து நாங்கள் வாழ்ந்துவிட்டுப் போய்விடுவோம். ஒழுங்காகப் படி. முன்னுக்கு வா. நாங்கள் வீடு கட்டியதைப் போல் , அதே மாதிரி நீயும் (உன் சுய சம்பாத்தியத்தில்) வீடு கட்டு. நான் நன்கு வேலை, தொழில் செய்வது போல் நீயும் வேலை செய் என்று சொல்லிக் கொடுத்தால்தான் உங்கள் குழந்தைகளின் வாழ்க்கை நன்றாக இருக்கும். அப்பா அம்மா சொத்துக்களில் பிள்ளைகள் வாழ்ந்தால் அடித்து எப்போதும் தெருவோரத்தில் பிச்சை எடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார் !!!!. 
அம்மா இதல்லாம் உண்மையம்மா. அப்போ பிள்ளைகளுக்கு (பெற்றோர்கள்) என்ன கற்றுக் கொடுக்க வேண்டும்? அப்பா அம்மா சேர்த்த சொத்துக்களில் வாழக்கூடாது. 

(சுவடி ஓதும் மைந்தன் அங்கு உள்ள ஒரு அடியவரைப் பார்த்து அவருக்கு வாக்கு கேட்கப் போகின்றேன் என்ற கூறியவுடன், இப்போது நம் அன்பு குருநாதர் அங்கு உள்ள ஒரு அடியவரைக் காப்பாற்றிய வாக்கு ஒன்றை உரைத்தார்கள். இது போல் பலருக்கும் நடந்து கொண்டே உள்ளது. ஆனால் அதனை உணர்வதற்குப் புண்ணியங்கள் வேண்டும். பின் வரும் வாக்கை உங்கள் வாழ்க்கையுடன் ஒப்பிட , உங்களுக்குக் கருணைக்கடல் செய்த அற்புதங்கள் உங்களுக்கே புரியவரும்) 

குருநாதர் :- (ஒரு அடியவரைப் பார்த்து) அப்பனே பல தவறுகள். சிக்கிக்கொண்டிருப்பாய் அப்பனே ஒரு விசயத்தில் . ___ உன்னை அழைத்து ___ அடைத்திருப்பார்கள். தப்பித்துவிட்டேன் அப்பனே. (காப்பாற்றி விட்டேன் ) இனிமேலாவது ஒழுக்கமாக வாழக் கற்றுக் கொள். (தனி வாக்குகள்) 

அப்பனே ஒரு அடி எடுத்து வை. யான் பார்த்துக்கொள்கின்றேன். 

( மீண்டும் பொது வாக்கு ஆரம்பம்)

குருநாதர் :- ( குருநாதர் வாக்கை எடுத்து உரைத்த அடியவரைப் பார்த்து ) அப்பனே கேட்க வில்லையே நீ. அப்பனே உன் கடமையை மறந்து விட்டாய் நீயும் கூட. 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் :- ( மீண்டும் என்னென்ன புண்ணியங்கள் அடியவர்கள் செய்ய உள்ளார்கள் என்று கேட்க ஆரம்பித்தார்) அம்மா நீங்க என்ன புண்ணியம் செய்யப் போகின்றீர்கள்? 

அடியவர் :- அனுதினமும் பைரவருக்கு ஒரு வேளை உணவு , ஏதாவது ஒன்று (கொடுக்க உள்ளேன்). கண் பார்வையற்றவர்களுக்கு அன்னதானம் வாரத்தில் ஒருநாள் , என்னால் முடிந்த அளவு (செய்வேன்). 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் :- சிறப்பு. அம்மா எல்லோரும் மனதில் ஒன்றை வைத்துக்கொள்ள வேண்டும். 

சுவடி ஓதும் மைந்தன் :- அம்மா, நீங்கள் சொல்வதையெல்லாம் குருநாதர் கேட்டுக்கொண்டே உள்ளார்கள். நீங்கள் என்னென்ன சொல்கின்றீர்களோ அப்படியே கேட்டுக் கொண்டே உள்ளார்கள். அதைத் தவற விட்டால் , பொறுப்பு கிடையாது ( நல்லதல்ல ). 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் :- (நம் குருநாதர்) அடுத்த முறை (நாடி) வாக்கு கேட்க வந்தால், போன முறை சொன்னவற்றைச் செய்யவில்லை என்று ஒரே வார்த்தையில் அடித்து விடுவார். உனக்கு வாக்கு கிடையாது என்று. 

குருநாதர் :- அப்பனே அனைவரும் என் முன்னே நின்று சொல்ல வை அப்பனே.

சுவடி ஓதும் மைந்தன் :- எல்லோரும் இங்கு (சுவடியின்) முன் வந்து நின்று சொல்லிவிட்டுப் போகச் சொல்கின்றார். நான் தர்மத்தைக் காப்பேன் என்று.


குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் :- ஒவ்வொருவராக (மும்மூர்த்திகளின் ஆசி பெற்ற, இவ்வுலகின் ஒரே ஒரு சுவடி - அதன் முன்) வாருங்கள். தர்மம் நிச்சயமாகச் செய்ய வேண்டும். ஆனால் நம் சுய கடமைகளை மறக்காமல் செய்ய வேண்டும். நம் வீட்டுக் கடமைகளைச் செய்து விட்டு, தாய் தந்தையரை மதிக்க வேண்டும் நிச்சயமாய். இது எல்லாம் செய்தால்தான் அதற்கப்புறம் மேற்கொண்டு புண்ணியங்கள் நமக்கு வரும். இதை மறந்து விட்டு , நாம் வெளியில் போய் அந்த தர்மம் செய்தேன், இந்த தர்மம் செய்தேன் என்றால் செல்லவே செல்லாது. வீட்டுக் கடமையைத் தவறாமல் செய்து , பெற்றோரை மதித்து,  ( இல்லத்தில் - தாய் , தந்தை, மனைவி, கணவன், குழந்தைகள் ) அதற்கப்புறம், இந்த மாதிரி அனைவருக்கும் (உதவி, நன்மைகள், புண்ணியங்கள்) செய்தால்தான் அடுத்து நிற்கமுடியும் ( வெற்றிகரமாக வாழ முடியும்). 
ஒவ்வொருவராக (மகிமை புகழ் சுவடியின் முன்னர்) வந்து சொல்லுங்கள். 

( நம் குருநாதர் , கருணைக்கடல், அகத்திய மாமுனிவர் சுவடியின் முன்பு வந்து நின்று ஒவ்வொரு அடியவர்களும் அவர்கள் செய்ய உள்ள தான, தர்மங்களை எடுத்து உரைக்க ஆரம்பித்தனர். அவர்கள் உரைத்தவுடன் நம் அன்புத் தந்தை, கருணைக்கடல் குருநாதர் வாக்குகளை அருளினார்கள்.) 

அடியவர் 1  :- ஊனமுற்றவர்களுக்குக் கல்வி, படிக்க வசதியில்லாத குழந்தைகளுக்கு நான் உதவி செய்கின்றேன். 

குருநாதர் :- ( அருமையான தனி வாக்குகளை அருளினார்கள் நம் கருணைக்கடல்.) 

(இங்கு ஒரு அடியவர் பின்னால் இருந்து செய்யப் போகும் புண்ணியங்களைப் பற்றி உரைக்க, உடனே நம் குருநாதர் கருணைக்கடல் அவ் அடி வருக்கு வாக்கு உரைக்க ஆரம்பித்தார்கள். ) 

சுவடி ஓதும் மைந்தன் :- அம்மா நீங்கள் சொன்னவுடன் வாக்கு இங்க வருகின்றது. அந்த அம்மா ஒரு வார்த்தை சொன்னாங்க, அதற்குத் தகுந்த மாதிரி இங்க வாக்கு வருகின்றது ஐயா. 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் :- அப்படியா?

சுவடி ஓதும் மைந்தன் :- அப்போ நீங்க என்ன சொல்கின்றீர்களோ அதற்குத் தகுந்த மாதிரி இங்க வாக்கு வருகின்றது. 

அடியவர் 2 :- மரக்கன்று வைக்கின்றேன். நிழல் தரும் புண்ணியம் செய்கின்றேன் ஐயா. அப்புறம் நீர் வந்து என்னை தானம் பன்னச் சொன்னாங்க. நான்  ரெகுலராவே நீர் எல்லா பறவைகளுக்கும் தானம் செய்கின்றேன் ஐயா. 

குருநாதர் :- ( அருமையான தனி வாக்கு இவ் அடியவருக்கு உரைத்தார்கள். இவ் அடியவர் தொடர்ந்து நீர் தானம் செய்து வருகின்றார். குருநாதர் ஏற்கெனவே உரைத்த வாக்கு “ நீர் தானம் பெரும் புண்ணியமப்பா”. அந்த தனிவாக்கில் உள்ள ஒரு முக்கிய வாக்கை இங்கு அனைவர் நலம் கருதிப் பொது வாக்காக இங்கு அடியவர்கள் பார்வைக்கு வெளியிடுகின்றோம்.) 

ஆனாலும் நிச்சயம் நல்லெண்ணத்தோடு, நல் முறைகளாக  ஜீவராசிகளுக்கு உதவி செய்து கொண்டே இரு. யானே விதியை மாற்றுகின்றேன். நன்றாக விரும்பியதை நிச்சயம் அடைந்து விடுவாய் எளிதில் கூ. நன்மைகளாகட்டும். ஆசிகள். 

——-
( வணக்கம் அடியவர்களே, ஜீவராசிகளுக்கு நீர் தானம், அன்ன தானங்கள் செய்வதை உடும்புப் பிடியாக இறுகப்பற்றுங்கள். மிகப் பெரும் புண்ணியம் உங்களுக்குக் கிட்டும். வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து எந்த பலனும் எதிர்பார்க்காமல் தொடர்ந்து செய்து கொண்டே வாருங்கள். முக்கியமாக உங்கள் குழந்தைகளுக்கு நீர் மற்றும் அன்ன தானங்களை வாயில்லா ஜீவராசிகளுக்கு அனுதினமும் செய்யச் சொல்லுங்கள் இப்போதே. கடுமையான விதியையே மாற்றும் வல்லமை கொண்டது வாயில்லா ஜீவராசிகளுக்கு நீங்கள் செய்யும் இவ் மகத்தான புண்ணியங்கள். இது குறித்த மற்றொரு மகத்தான மகிமை புகழ் வாக்கு. 

சித்தன் அருள் - 1125 - அன்புடன் அகத்தியர் - ஸ்ரீ பஞ்சமுகி ஹனுமான் ஆலயம்!

(மராட்டிய மாமன்னர் வீர சிவாஜி) அவ் சுய(சுயம்பு) லிங்கங்களையும் பின் பார்த்து இச் சுய நல்விதமான ஆஞ்சநேயனையும் பார்த்து வணங்கி விதவிதமான வெற்றிகளை கண்டு நவிழ்ந்து வந்தான்.

வீர சிவாஜி ஒரு புண்ணியம் செய்வித்தான். எதையன்றி கூற காடு மேடு களாக மலைகளாக செல்கின்ற பொழுது அவ்வரசன் (சிவாஜி) பல மனிதர்களுக்கு உதவி செய்தான். அப்படி மட்டுமில்லாமல் பல ஜீவராசிகளுக்கும் (நீர் மற்றும் அன்ன சேவை) உதவி செய்தான், உதவிகள் செய்து செய்து பின் நல் முறையாகவே அவ் ஜீவராசிகளும் மனமுவந்து வாழ்த்தி விட்டன (நீர் தானம் , அன்ன தானம்). இதனால் பன்மடங்கு உயர்வுகள் பெற்று விட்டான் அவன்.

குருவே நமஸ்காரங்கள். ஆஞ்சநேயரின் பரிபூரண அருள் கிடைக்க எவ்விதம் வழிபாடு செய்ய வேண்டும்???

அப்பனே! வாயில்லா ஜீவராசிகளுக்கும் உதவிட அவந்தன் அருள்கள் பலமாகும் அப்பனே.!!!! )
———

அடியவர் 3 :- ( ஒரே ஒரு வார்த்தையில் தான் செய்ய உள்ள புண்ணியங்களை,  பதிலாக உரைத்தார் கருணைக்கடல் முன்.) 

குருநாதர் :- அம்மையே ஓரே ஒரு வார்த்தையில் முடித்துவிட்டாய். யானும் ஒரே வார்த்தையில் முடித்து விட்டேன். நல்லதே செய்கின்றேன்.

( பின்வரும் வாக்கு ஒரு முக்கிய வாக்கு. யாரும் தயவு செய்து எந்த ஒரு வழியிலும் இறைவனிடம் பேரம் பேசாதீர்கள். காசு முடிந்து வைப்பது, தலை முடி இறக்குதல் இன்னும் பல வேண்டுதல்கள் வைத்து அது நடக்க வேண்டும் அதனால் நான் இது செய்கின்றேன் என்று எந்த நிலையிலும் இறைவனிடம் பேரம் பேச வேண்டாம். பிறருக்கும் எடுத்துச் சொல்லுங்கள்)


அடியவர் 5 :- நான் ( ஒரு அதி உச்ச உயர் கல்வி ) படித்துக்கொண்டுள்ளேன். வேலை கிடைத்தவுடன் ( புண்ணியங்கள் செய்ய ஆரம்பிக்கின்றேன் ஐயா). 

குருநாதர் :- அம்மையே செய்யத்தேவையே இல்லை. 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் :-  யாரும் டீல் (deal) எல்லாம் வைக்காதீர்கள் தயவு செய்து. இது கிடைத்தால் நான் செய்கின்றேன் என்று. நீங்க (முதலில்) செய்யுங்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :- நீங்க செய்யத் தேவையே இல்லை என்று சொல்கின்றார். 

அடியவர் 5 :- இல்லை. இல்லை. அந்த வேலை கிடைத்தற்கு அப்புறம் ஒரு பெண் குழந்தைக்குக் கல்விக்கு (உதவி செய்கின்றேன்). 

குருநாதர் :- அப்படியெல்லாம் நிச்சயம் இறைவனிடம் பேரம் பேசுகின்றாயா என்ன? 

அடியவர் 5 :- பேரம் பேசவில்லை ஐயா. எனக்கு இப்ப கையில் காசு இருந்தால்... 

குருநாதர் :- அம்மையே , அப்பொழுது நீ அறிவாளியாக இருந்தால் இப்பொழுது நீ பட்டம் கேட்கின்றாய் அம்மையே. எவ்வாறு (இது நியாயம்?). பின் அறிவே இல்லையே அம்மையே. இறைவா நிச்சயம் என்னால் முடிந்தவரை நிச்சயம் யான் கொடுப்பேன். அனைத்து ஜீவராசிகளுக்கும் என்னால் முடிந்தவரை அதாவது தர்மத்தைப் பற்றி பிற மனிதர்களுக்கும் உரைப்பேன் என்று சொல்லவில்லையே? வாயில் வரவில்லையே? அம்மையே தகுதிக்கு ஏற்பத்தான்,  இதில்கூட அறிவுகளே இல்லை அம்மையே. நிச்சயம் யார் உந்தனுக்குக் கொடுக்கின்றார்களோ அவனைத்தான் யான் பிடிக்க வேண்டும். 

சுவடி ஓதும் மைந்தன் :- (மிகவும் வருத்தத்துடன்) அம்மா அப்படியெல்லாம் கேட்கக் கூடாதம்மா. 

அடியவர் 5 :- என்னுடைய ஆசையைத்தான் நான்…

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் :-  உங்க ஆசையில்லை. உங்களால் என்ன செய்ய முடியும்..

சுவடி ஓதும் மைந்தன் :- (உங்களால் என்ன முடியுமோ) அதைச் சொல்லிவிடுங்கள். 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் :- (நம் குருநாதர்) பிறருக்குப் புண்ணியத்தையாவது எடுத்துச் சொல்லுங்கள் என்று சொல்கின்றார். 

அடியவர் 5 :- அது செய்கின்றேன். கண்டிப்பாகச் செய்கின்றேன். அப்புறம் மரம் நடுகின்றேன். 

சுவடி ஓதும் மைந்தன் :- அது போலச் செய்யுங்கள். கண்டிப்பாகத் தருவார் என்று சொல்கின்றார். அம்மா நம்ம கொஞ்சம் அறிவுடன் ( கவனமாக) கேட்க வேண்டும். ஐயா நான் எல்லாம் செய்கின்றேன் நீங்க என்று சொல்லியிருந்தால்  (நன்றாக வாக்கு) முடிந்திருக்கும். சுற்றிக்கொண்டு வராதீர்கள். 

அடியவர் 5 :- கண்டிப்பாகச் சொல்வதெல்லாம் செய்கின்றேன் ஐயா. 

சுவடி ஓதும் மைந்தன் :- கண்டிப்பாகச் நல்லது நடக்கும். அவர் சொன்னதெல்லாம் செய்யுங்கள். கண்டிப்பாக செய்வார். நல்லது அம்மா. 

( நம் குருநாதர் கருணைக்கடல் பிரம்ம ரிஷி, அகத்திய மாமுனிவர் அருளால்  April 2024, கோவை வடவள்ளி அகத்திய மாமுனிவர் ஆலயத்தில் , சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் திரு.ஜானகிராமன் அவர்கள் மூலம் ஜீவ நாடியில் உரைத்த அடியவர்கள் சத்சங்க கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்….)

ஆலய முகவரி :-

ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்திய மாமுனிவர் ஆலயம். வடவள்ளி, முல்லை நகர்,  மருதமலை அடிவாரம். கோயம்புத்தூர்.

Google map:- 

https://maps.google.com/?q=11.024868,76.916664

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!

Wednesday, April 16, 2025

சித்தர்கள் ஆட்சி - 442:- அன்புடன் அகத்திய மாமுனிவர் - கோவை வடவள்ளி ஆலயத்தில் உரைத்த சத்சங்க வாக்கு ( April 2024 ) - பகுதி 9

                                      இறைவா !!!!! நீயே அனைத்தும்.

இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்


அன்புடன் அகத்திய மாமுனிவர் - கோவை வடவள்ளி ஆலயத்தில் உரைத்த சத்சங்க வாக்கு ( April 2024 ) - பகுதி 9

(இவ் தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்
1. சித்தர்கள் ஆட்சி - 431 - பகுதி 1
        2. சித்தர்கள் ஆட்சி - 434 - பகுதி 2
        3. சித்தர்கள் ஆட்சி - 436 - பகுதி 3
        4. சித்தர்கள் ஆட்சி - 437 - பகுதி 4
        5. சித்தர்கள் ஆட்சி - 438 - பகுதி 5
        6. சித்தர்கள் ஆட்சி - 439 - பகுதி 6
        7. சித்தர்கள் ஆட்சி - 440 - பகுதி 7
        8.     சித்தர்கள் ஆட்சி - 441 - பகுதி 8
        9.     சித்தர்கள் ஆட்சி - 442 - பகுதி 9
)

சுவடி ஓதும் மைந்தன் :- அப்பொழுது யார் மீது குற்றம்?

அடியவர்கள் :- எங்கள் மீது ( குற்றம் )

சுவடி ஓதும் மைந்தன் :- அதனால்தான் குருநாதர் சொல்கின்றார், என்னைத் தேடி வருபவர்களுக்கு நான் நல்லதுதான் செய்வேன். நன்மை எப்படிச் செய்வது? புண்ணியம் எப்படிச் செய்வது என்று. நீங்கள் உங்கள் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்கள். (குருநாதர் செய்தது போல்) அதே மாதிரி நீங்கள் என்ன உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்தீர்களோ, அதைத்தான் அவர்கள் செய்வார்கள். அப்பொழுது யார் மீது தவறு? 

அடியவர்கள் :- நம்மேல் தான்..

சுவடி ஓதும் மைந்தன் :- அவர்கள் வேலைக்குப் போகாதது யார் மீது தவறு? 

அடியவர்கள் :- நம்ம மேல்தான் தவறு.

சுவடி ஓதும் மைந்தன் :- இப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். புரியுதுங்களா ஐயா. 

குருநாதர் :- இதனால் பக்குவங்கள் முதலில் எப்படி உயிர் வாழ்வது என்பதைக் கூட நிச்சயம் அனைவரும்..உலகம் அழிவு நிலைக்குச் செல்கின்றது என்பதையெல்லாம் எடுத்துரைத்துக்கொண்டே இருக்கிறேன். ஆனால் ஒருவராவது இவ்வுலகத்தைக் காப்பாற்றுங்கள் என்று சொன்னார்களா? இதுதான் (மனிதனின் கீழ்மட்ட) அறிவு. அதனால் நீங்கள் பூஜ்ஜியத்திலேயே இருக்கின்றீர்கள். இன்னும் ஒரு பத்து சதவிகிதத்திற்குக் கூட வரவில்லை. உங்களுக்கெல்லாம் தந்து நீங்கள் என்னதான் செய்யப்போகின்றீர்கள் என்று கூறுங்கள்? நிச்சயம் அப்பனே ஒவ்வொருவராக நீங்கள் என்ன செய்யப்போகின்றீர்கள் என்று நிச்சயம் கூறி எந்தனுக்குச் சொல் அப்பனே. எந்தனுக்கும் தெரியும். ஆனால் அவர்கள் வாயால் சொல்லி கர்மமாவது செல்லட்டும் ( அவர்களை விட்டு நீங்கட்டும்).

சுவடி ஓதும் மைந்தன், அடியவர்கள் :- ( எப்படிச் சொல்வது என்ற புரிதல் விவாதம்) 

சுவடி ஓதும் மைந்தன் :- ( அங்குள்ள ஓர் அடியவரை நோக்கி ) ஐயா , சொல்லுங்கள் ( அனைவருக்கும் விளக்கிச் சொல்லுங்கள்). 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் :- நமக்கு பிரச்சினைகள் இருக்கு என்பதை நீங்கள் சொல்லித்தான் குருநாதருக்குத் தெரிய வேண்டும் என்பதல்ல. அவர்கள் கூப்பிட்டதால் நாம் இங்கு வந்துள்ளோம். நாமாக இங்கு வரவில்லை. அப்படி இருக்கும்பொழுது , நம்மை அவர் இங்கு கூப்பிட்டு இருக்கும் பொழுது அவருக்கு நமக்கு என்ன பிரச்சினை என்று தெரியாதா? நாம் ஏதோ மனத்தாங்கலுக்காகப் போய்ச் சொல்லுகின்றோம். ஆனால் ஏன் சொல்கின்றோம் என்றால் , அவருக்கும் தெரியும். எதற்காக நம்மை இங்கு கூப்பிட்டுள்ளார் என்றால், சில புண்ணியங்களுக்காக நம்மை கூப்பிட்டுள்ளார் குருநாதர். அதே நேரத்தில் அந்த புண்ணியத்திற்காக நம்மைக் கூப்பிட்டு இருந்தாலும் நம்மிடம் உள்ள புண்ணியங்களைக் கிளறி விடவேண்டும். காலையில் காகபுசண்டர் ஐயா சொன்னார்கள், புண்ணியத்தைக் கிளறி விடவேண்டும் என்று. அதைக் கிளறி விடுவதற்கு புண்ணியங்கள் செய்ய வேண்டும். நிறைய தர்மங்கள் செய்ய வேண்டும். தர்மங்கள் செய்தால் புண்ணியங்களைக் கிளறி விட முடியும். புண்ணியத்தைக் கிளறி விட்டால்தான், குருநாதர் வந்து , நம் கஷ்டத்தை அதாவது வினையை அகற்ற முடியும் என்று சொல்கின்றார்கள். அந்த புண்ணியங்கள் யார் யார் என்ன செய்யப்போகின்றீர்கள் என்பதை உங்கள் வாயால் சொல்லுங்கள். இங்கிருந்து போனபிறகு, நீங்கள் என்னென்ன செய்யப் போகின்றீர்கள். ஒவ்வொருவராக எழுந்து சொல்லுங்கள். பின் அமர்ந்து கொள்ளுங்கள். 

(நம் குருநாதர் கருணைக்கடல், பிரம்ம ரிஷி,  அகத்திய மாமுனிவர் அருளால், April  2024 கோவையில் காகபுசண்ட மாமுனிவர் உரைத்த  கேள்வி, பதில் வாக்கு ஆறு பதிவுகளாக இங்கு அடியவர்கள் மீண்டும் படித்து உங்கள் புண்ணியங்களைக் கிளறி  விடுவது எப்படி என்று தெரிந்து செயல்பட்டு வெற்றிவாகை சூடுக.

சித்தர்கள் ஆட்சி - 421- கோவை வாக்கு - பகுதி 1 
சித்தர்கள் ஆட்சி - 422- கோவை வாக்கு - பகுதி 2
சித்தர்கள் ஆட்சி - 425- கோவை வாக்கு - பகுதி 4
சித்தர்கள் ஆட்சி - 424- கோவை வாக்கு - பகுதி 3
சித்தர்கள் ஆட்சி - 426- கோவை வாக்கு - பகுதி 5
சித்தர்கள் ஆட்சி - 427- கோவை வாக்கு - பகுதி 6
)

( ஒவ்வொரு அடியவர்களும் அவர்கள் செய்யப் போகும் புண்ணியங்களைக் கருணைக்கடல் நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் முன்பு எடுத்து உரைக்க ஆரம்பித்தனர்.) 

அடியவர் 1 :- வாயில்லா ஜீவராசிகளுக்கு நீர் , தானியம், உணவு கொடுக்க உள்ளேன் ஐயா. நான் சம்பாதிப்பதில் என்னால் முடிந்த அளவு ஒரு பங்கு இல்லாதவங்களுக்குச் செய்கின்றேன் ஐயா. 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் :- ஏதாவது ஒரு (புண்ணியச்) செயல் நித்தமும் செய்யுங்கள். அதற்கப்புறம் மேல் நிலைக்கு ( பல வகைப் புண்ணியங்கள்) எடுத்துச் செல்லலாம். 

அடியவர் 2 :- என்னால முடிந்ததை எறும்புகளுக்குத் தர்மம் செய்கின்றேன் ஐயா. அதற்கு மேல் நல்ல நிலைமைக்கு வந்தால்,  இல்லாதவர்களுக்கு உதவ செய்வேன் ஐயா. 

குருநாதர் :- அப்பனே இவன் மீதே இவனுக்கு நம்பிக்கையில்லை என்பேன் அப்பனே. ஒன்றைக் குறிப்பிட்டானே, அதை நீ கேட்டாயா அப்பனே? நீயும் முட்டாள்தனமாகவே இருக்காதே எப்பேன் அப்பனே. அதாவது (எனக்கு) ‘நல்லது நடந்தால்’ என்று.…… அப்பனே, கூறு இதற்கு என்ன அர்த்தம் என்று? 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் :- அதாவது காலையில் புசண்டர் ஐயா என்ன சொன்னார்கள் என்றால் நம் எண்ணங்கள் தூய்மையாக இருந்தாலே போதுமானது.  புண்ணியச் செயல்களைச் செய்யுங்கள் என்று எடுத்துச் சொல்வதே புண்ணியம். முதல்தரமான புண்ணியம். நீங்கள் கையில் காசு இருந்தால்தான் புண்ணியம் செய்ய வேண்டும் என்று எல்லோரும் தவறாக நினைத்துக்கொண்டிருக்கின்றோம். அது கிடையாது. பிறருக்கு புண்ணியச் செயல்களை எடுத்துச் சொல்வதே பெரிய புண்ணியம். 

குருநாதர் :- அப்பனே மீண்டும் கேள் இவனை ( அடியவர் 2). 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் :- சொல்லுங்க. என்ன செய்வீர்கள்? 

அடியவர் 2 :- என்னிடம் இல்லை என்றாலும் மற்றவர்களுக்கு புண்ணியம் செய்ய வேண்டும். 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் :- நீங்கள் வீட்டுக்கு போன உடன், அதற்கு அப்புறம் என்ன செய்யப் போகின்றீர்கள்? நாளையிலிருந்து நித்தியமாக என்ன புண்ணிய காரியம் செய்யப் போகின்றீர்கள்? ஒரு காரியம் மட்டும் சொல்லுங்கள். 

அடியவர் 2 :- என்னால முடிஞ்ச அளவு ..

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் :- அதுதான் திட்டுகின்றார். முடிந்தால், முடிந்தால் என்று சொல்லாதீங்க. நீங்க என்ன செய்யப்போகின்றீர்கள் என்று சொல்லுங்கள்.

அடியவர் 2 :- வாயில்லா ஜீவராசிகளுக்கு தண்ணீர், உணவு..

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் :- எந்த ஜீவராசிகளுக்கு?

அடியவர் 2 :- காக்கை, பைரவர்..

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் :- காக்கை, பைரவர் இரண்டு பேருக்கும் தினசரி நாளையிலிருந்து வைக்கின்றீர்கள். சரி.

குருநாதர் :- அப்பனே ஒன்றைக் கேட்கின்றேன். அவந்தன் உண்ணுவதற்கே வழியில்லை. இதை எப்படிச் செய்வான் என்று கூறு?

அடியவர் 2 :- ஐயா நான் சாப்பிடும் சாப்பாட்டில்தான் இப்பவரைக்கும்  என்னால் முடிந்தவற்றை வைத்துச் சென்று கொண்டு இருக்கின்றேன்…

குருநாதர் :- அப்பனே நீ சம்பாதிப்பதில் சிறிது தானம் செய்ய வேண்டும். அதுதானப்பா எந்தனுக்கு மிக்க மகிழ்ச்சி என்பேன் அப்பனே. 

அடியவர் 2 :- கண்டிப்பாக செய்கின்றேன் ஐயா. 

குருநாதர் :- அப்பனே இப்படித்தான் சொல்வாய் அப்பனே. நிச்சயம் பார்த்துக்கொள்வோம் அப்பனே. 

அடியவர் 2 :- கண்டிப்பாகச் செய்வேன் ஐயா. 

( இவ் அடியவர் தொடர்பாக பல தன் வாக்குகள். அதில் உள்ள பொது வாக்குகள்) 

குருநாதர் :- அப்பனே (புண்ணியம்)  செய்யும் மனம் இருக்கின்றது அனைவரிடத்திலும். காசுகள் வேண்டும்  அல்லவா? எங்கப்பா போவான் அப்பனே? அதனால் உழைக்கச் சொல் அப்பனே. கடமையைச் செய்யச் சொல் அப்பனே. அனைத்தும் யானே தருகின்றேன். 

(வேலைக்குச் சென்று, பொறுப்பாக வேலை செய்து , தாய் தந்தையை அன்புடன் பார்த்துக்கொண்டு , வீட்டுப் பொறுப்பை எடுத்து முன்னின்று நடத்தும் தகுதி பெற்றிருந்தால்தான் ) அப்படி இருந்தால்தான் ஒரு பெண்ணையும் வைத்துக் காப்பாற்ற முடியும். இல்லையென்றால் காப்பாற்ற முடியாதப்பா. இறைவன் எப்படியப்பா கொடுப்பான்???

( பொது :- நன்கு உழைக்க வேண்டும். தாய் , தந்தையை அன்புடன் நடத்த வேண்டும். குடும்பச் சுமைகளை ஏற்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே திருமணம் புரிய இறைவன் வாய்ப்பு அளிப்பார். அதே போல் தன் கடமையை - தாய், தந்தை, மனைவி, குழந்தைகளை நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டும். தனது மாத சம்பாத்தியத்தில் ஒரு பகுதி தான, தர்மங்களுக்கு அளிக்க வேண்டும். அந்த புண்ணியங்களால், கேட்டது கிடைக்கும். புண்ணியங்கள் அவசியம் செய்க. ) 

( நம் குருநாதர் கருணைக்கடல் பிரம்ம ரிஷி, அகத்திய மாமுனிவர் அருளால்  April 2024, கோவை வடவள்ளி அகத்திய மாமுனிவர் ஆலயத்தில் , சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் திரு.ஜானகிராமன் அவர்கள் மூலம் ஜீவ நாடியில் உரைத்த அடியவர்கள் சத்சங்க கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்….)

ஆலய முகவரி :-

ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்திய மாமுனிவர் ஆலயம். வடவள்ளி, முல்லை நகர்,  மருதமலை அடிவாரம். கோயம்புத்தூர்.

Google map:- 


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!

Sunday, April 13, 2025

சித்தர்கள் ஆட்சி - 441:- அன்புடன் அகத்திய மாமுனிவர் - கோவை வடவள்ளி ஆலயத்தில் உரைத்த சத்சங்க வாக்கு ( April 2024 ) - பகுதி 8

                                         இறைவா !!!!! நீயே அனைத்தும்.

இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்



அன்புடன் அகத்திய மாமுனிவர் - கோவை வடவள்ளி ஆலயத்தில் உரைத்த சத்சங்க வாக்கு ( April 2024 ) - பகுதி 8

(இவ் தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்
1. சித்தர்கள் ஆட்சி - 431 - பகுதி 1
        2. சித்தர்கள் ஆட்சி - 434 - பகுதி 2
        3. சித்தர்கள் ஆட்சி - 436 - பகுதி 3
        4. சித்தர்கள் ஆட்சி - 437 - பகுதி 4
        5. சித்தர்கள் ஆட்சி - 438 - பகுதி 5
        6. சித்தர்கள் ஆட்சி - 439 - பகுதி 6
        7. சித்தர்கள் ஆட்சி - 440 - பகுதி 7
        8.     சித்தர்கள் ஆட்சி - 441 - பகுதி 8
)

குருநாதர் :- அனைவருமே என்னிடத்தில் கேட்கின்றீர்கள் ( எனக்கு அவை வேண்டும், இவை வேண்டும் என்று. ஆனால் ) நீங்கள் என்ன செய்தீர்கள் என்று என்னிடத்தில் தெரிவிக்க வேண்டும்? 

சுவடி ஓதும் மைந்தன் :- எல்லோரும் என்னிடம் கேட்கின்றீர்கள். நீங்கள் என்ன செய்துள்ளீர்கள் என்று கேட்கின்றார் ( நம் குருநாதர் ). 

அழகாக விளக்கம் அளிக்கும் அடியவர்:- நீங்கள் என்ன புண்ணியம் செய்தீர்கள் என்று சொல்லிவிட்டுக் கேளுங்கள் (நம் குருநாதரிடம்). நமக்கே நன்கு தெரியும் நாம் ஏதும் (புண்ணியங்கள்) செய்யவில்லை என்று. நாம் அனைவரும் நமது பிரச்சினைகளை (தேவைகளை) மட்டும் சொல்லவருகின்றோம் (கேட்கின்றோம்). நாம் பிறருக்கு நல்லதைச் செய்யச் செய்ய , நமது பிரச்சினைகள் தானாகத் தீரும் என்று குருநாதர் காலையிலிருந்து சொல்கின்றார். நமக்குள் ஒரு உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். பிறருக்கு நான் உதவியாக இருப்பேன் என்று மனதாலோ, சொல்லாலோ, செயலாலோ, வாக்காலோ நான் பிறருக்கு உறுதுணையாக இருப்பேன் என்று. உடனே செயல்படுத்துங்கள். அதற்கு அப்புறம் வாக்கு கேளுங்கள். நம் குருநாதர் நம்மை வழிநடத்துவார்கள்.

குருநாதர் :- இன்று நிச்சயம் அனைவருக்குமே ஒரு பின் சிறப்பான ஒன்றைச் சொல்கின்றேன். அதைச் செய்தாலே (வெற்றியடையலாம்). அனைவரும் போய் அவரவர் இடத்தில் உட்காருங்கள். 

(அடியவர்கள் அனைவரும் கலியுக வரலாற்றில் மிக முக்கியமான வகுப்பைக் கேட்கத் தயாராக , சத்சங்க வகுப்பில் குருநாதர் சுவடியின் முன் அமைதியாக அமர்ந்தார்கள்.) 

குருநாதர் :- அப்பனே யான் சொல்லிக் கொடுக்கின்றேன். அதை அவர்கள் இடத்தில் சொல். 

( இப்போது குருநாதர் சொல்லச் சொல்ல உடனே அடியவர்கள் அனைவரும் அப்படியே உரைத்தனர். இது பொது வாக்கு. அனைவருக்கும் நீங்கள் எடுத்துச் சொல்ல வேண்டிய, நீங்கள் அனுதினமும் சொல்ல வேண்டிய வாக்கு. வாழுங்கள் அந்த மகத்தான வாக்கின் உள் செல்வோம்.) 

குருநாதர் :- தர்மம் செய்வேன்.
அடியவர்கள் :- தர்மம் செய்வேன்.

குருநாதர் :-அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
அடியவர்கள் :-அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.


குருநாதர் :-போட்டி, பொறாமைகள் நீக்குவேன்.
அடியவர்கள் :-போட்டி, பொறாமைகள் நீக்குவேன்.


குருநாதர் :- அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்.
அடியவர்கள் :- அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்.


குருநாதர் :- பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்.
அடியவர்கள்  :- பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்.


குருநாதர் :- அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்.
அடியவர்கள் :- அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்.


குருநாதர் :- அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல், பிறரும் கூட வாழவேண்டும்.
அடியவர்கள் :- அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.


குருநாதர் :- பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்.
அடியவர்கள் :- பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்.


குருநாதர் :- பிறருக்காக உழைக்க வேண்டும்.
அடியவர்கள்  :- பிறருக்காக உழைக்க வேண்டும்.


குருநாதர் :- பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும்.
அடியவர்கள்   :- பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும்.


குருநாதர் :-அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல் மகனே.
அடியவர்கள்  :-அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல் மகனே.

( இந்த உறுதிமொழியைப் பின் வரும் பதிவிலும் படித்து அறிந்து உடனே செயல் படுத்தவும். சித்தன் அருள் - 1595 - அன்புடன் அகத்தியர் - கோவையில் அகத்தியர் உத்தரவு!)

( அகத்திய மாமுனிவர் பக்தர்கள், அடியவர்கள் இதனைத் தினமும் அதி காலையில் ஒரு மந்திரம் போலச்சொல்லுங்கள். அனைவரிடத்திலும் சொல்லுங்கள். அன்ன சேவை , வழிபாடுகள் மற்றும் அனைத்து பொது இடத்திலும் மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். செயல் படுத்துங்கள். இந்த வாக்குகள் உங்கள் எண்ணமாகட்டும். உங்கள் எண்ணங்கள் சொல்லாகட்டும். உங்கள் சொல் அனைத்தும் குருநாதர் காட்டிய வழியில், செயல்களாகட்டும். இதை அனைவரும் கடைப்பிடித்தால் அடுத்த முறை பிரச்சினை என்று இறை அருளால் உங்களுக்கு வரவே வராது. 

குருநாதர் அகத்திய மாமுனிவர்  வாக்கு - தினசரி அனைவரும் எடுக்க வேண்டிய உறுதிமொழி:- 


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்.
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்.
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்.
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்.
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும். 
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல் மகனே.

)

குருநாதர் :  அப்பனே ஏன் நீங்கள் பிரச்சினை பிரச்சினை என்று என்னிடத்தில் வந்து,  பின் அப் பிரச்சினை நீக்கு , இவ் பிரச்சினை நீக்கு என்று ( கேட்கின்றீர்கள் ). ஆனாலும் அப்பனே ( உங்களின் ) அவ் பிரச்சினை ( எல்லாம் ) நீக்குவதற்கு அப்பனே உன்னிடத்தில் என்ன உள்ளது என்பதைக்கூட அப்பனே கூறுங்கள் அப்பனே? 

சிறு புண்ணியங்கள் இருந்தால்தான் அப்பனே அதையும் நீக்க முடியும் என்பேன் அப்பனே. அப்பனே உயிரே போகின்றது என்ற கண்டம் வருகின்றது ( என்றாலும் கூட ) ஆனாலும் அப்பனே அறிந்தும்கூட அதை நீக்குவதற்கும் புண்ணியங்கள் அவசியமாகின்றது. ( நீங்கள் செய்யும் ) அப்புண்ணியங்களை வைத்து பிரம்மாவிடம் பேசுவேன் அப்பனே யான்!!! அறிந்தும் கூட இவ்வாறு அவன் புண்ணியங்கள் செய்திருக்கின்றான் என்று. 

ஆனால் நீங்கள் செய்யவே இல்லை அப்பனே. அப்பொழுது எப்படியப்பா பிரம்மாவிடம் எடுத்துக்கூறி  ( யான் செய்ய இயலும்?)

அப்பனே பிரம்மன் கேட்கின்றான் அப்பா “அகத்தியனே, அறிந்தும் கூட உன்னை ஏதோ ஒரு அறிந்தும் கூட சுய நலத்திற்காகவே வணங்குகின்றார்கள். புண்ணியமே செய்வதில்லை. ஆனால் மக்களுக்காக விதியை மாற்று, மாற்று என்று நீங்கள் சொல்கின்றீர்கள்” என்று. 

அப்பனே யான் தலை குனிய வேண்டியதாயிற்று அப்பனே!!!!!!! 

( வணக்கம் அடியவர்களே , நமது அன்பு குருநாதர் , கருணைக்கடல்,  அகத்திய மாமுனிவர்  அவர்களை  இப்படி நமக்காகப் பிரம்மனிடத்தில் தலை குனிய வைக்கலாமா? அடியவர்களே. அகத்திய மாமுனிவர் அருளிய இந்த மகிமை புகழ்  உறுதிமொழி  வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்ற உத்தரவிடும் வண்ணம், அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும் வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். இந்த உறுதிமொழிப்படி இனி நாம் அனைவரும் நடந்து நம் அன்பு குருத் தந்தையின் பெருமையைக் காப்போம். உலகில் தர்மம் செழிக்க உத்வேகத்துடன் உழையுங்கள்.  நமது அன்பு குருநாதர் , கருணைக்கடல், அகத்திய மாமுனிவர் அருளால். உங்கள் பிரச்சினைகள் தவிடு பொடியாகிவிடும். வாருங்கள் அன்பு அடியவர்களே, உறுதிமொழி வழி நடந்து நமது அன்பு குருநாதர் , கருணைக்கடல்,  அகத்திய மாமுனிவர்  அவர்களுக்கு நாம் செய்யும் புண்ணியச் சேவைகள் மூலம் பெருமை சேர்ப்போம்.)

குருநாதர் :- இதனால் புண்ணியங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். நிச்சயம் அவ்வாறு வளர்த்துக்கொண்டால் நிச்சயம் அவ் புண்ணியங்களே, உங்களைக் காக்கும் சொல்லிவிட்டேன். அப்படியில்லை என்றால் நிச்சயம் தரித்திரம்தான். 

குறை குறை என்கின்றார்களே! எதற்குக் குறை வருகின்றது? நிச்சயம் அறிந்தும் கூட உங்களிடத்திலேயே குறை ( கெட்ட கர்மா ) இருக்கின்றது. அதனால்தான் குறையே வருகின்றது. அக்குறையை நீக்க , பின் ஒரே ஆயுதம் புண்ணியம். 

சுவடி ஓதும் மைந்தன் :- புரிகின்றதா ஐயா?

குருநாதர் :- அறிந்தும் கூட என்னால் ( புண்ணியங்கள்) செய்ய முடியவில்லையே என்று சொல்பவர்களுக்கும், பின் அதிகாலையில் நிச்சயம் இறைவனை நினைத்து இறைவா எந்தனுக்கு ஏதாவது செய் என்று கேட்டுக்கொண்டே இருங்கள். கேட்டுக்கொண்டே இருங்கள். நிச்சயம் இறைவன் தருவான். ஆனாலும் எதையும் கேட்கக்கூடாது என்று யானே (முன்பு) சொன்னேனே , ஆனாலும் ஏனென்றால் சோம்பேறியானவனுக்கே இதை யான் சொல்வேன். 

சுவடி ஓதும் மைந்தன் :- (விளக்கம்)

குருநாதர் :- அப்பனே கலியுகத்தில் இறைவன் இல்லை என்றே சொல்வான் மனிதன். அப்பனே தன் பிரச்சினைகளுக்காக ஓடுவான் (பலரிடம்) என்பேன் அப்பனே. ஆனால் என்ன செய்தால் பிரச்சினை தீரும் என்பது தெரியாதப்பா. ( ஜோதிடம், பூசை, பரிகாரம்) அதனில் சிக்கிக்கொண்டு,  பணங்களை பறித்து, மீண்டும் (உங்களை) பாவத்தில் நுழைப்பான் அப்பா. இது தேவையா? வேண்டாமப்பா. முதலில் பக்குவங்களைப் பெற வேண்டும். அப்பனே பக்குவங்கள் யாருக்கும் இல்லையப்பா. 

அடியவர்கள் :- (அமைதி)

குருநாதர் :- பக்குவங்கள் பின் பெற்றால்தான் வாழ்க்கை. அவ் பக்குவங்கள் பெறவில்லை என்றால் வாழ்க்கையே வீணாகப் போய்விடுமப்பா !!!!!!!. சொல்லிவிட்டேன் அப்பனே. அகத்தியன் (உங்கள்) நன்மைக்காகத்தான் சொல்லிக்கொண்டிருக்கின்றான் அப்பனே. என்னை நம்ப வந்துவிட்டீர்கள் அப்பனே. நிச்சயம் அகத்தியனை நம்பி வந்துவிட்டால், அப்பனே நிச்சயம் பாதுகாத்து , உயர் இடத்தில் வைப்பான் அப்பனே. அத்தகுதி உங்களிடத்தில் இல்லை அப்பனே. பின் அத்தகுதி உங்களிடத்தில் இல்லை என்றால்,  யான் கொடுத்தும் பலனில்லை. சொல்லிவிட்டேன். 

அடியவர்கள் :- (அமைதி)

குருநாதர் :- அப்பனே அறிந்தும் கூட அப்பனே ஏன் இறைவன் அனைவருக்கும் செய்வதில்லை அப்பனே. அனைவருக்கும் பாவங்கள் இருக்கின்றது என்பேன் அப்பனே. இதனால் பக்குவங்கள் பெற்றுக் கொண்டு, அப்பனே நீர் மோர் தானம், அப்பனே நீர் தானமும், மோர் தானமும் இன்னும் பல பல வகைகளில் கூட தானங்கள் செய்து வாருங்கள் அப்பனே. நிச்சயம் (உங்களுக்கான தனி) வாக்குகள் பெற்றுக் கொள்ளலாம் அப்பனே. 

அதாவது அப்பனே, இதைத்தன் எதற்காகச் சொல்கின்றேன் (என்றால்) அப்பனே,  நீங்கள் பின் நிச்சயம் வாழ்வதற்கே என்பேன் அப்பனே. உங்களையே, அதாவது நீங்களே உங்களைப் பார்க்க முடியவில்லை. இதனால் பிறரை எப்படித்தான் பார்க்கப்போகின்றீர்கள் என்பேன் அப்பனே. அதனுள்ளே அப்பனே என் சகோதரன், என் சகோதரி, என் தாய் , என் தந்தை என்றெல்லாம் அப்பனே, முதலில் உன்னைப் பாருங்கள் என்பேன் அப்பனே. அவை எல்லாம் தனித்தனி ஆன்மாதானப்பா. அப்பனே சொல்லிவிட்டேன். எப்பொழுதாயினும் உன்னிடத்திலிருந்து பிரிந்து செல்லலாம் அவ் ஆன்மா. இதற்காகவா போராட்டங்கள். முட்டாள்களே !!!! அறிவில்லாதவர்களே !!!! அறிவில்லாதவனுக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாதப்பா. நீ செய்யும் புண்ணியங்களால்தான் யான் கொடுக்க முடியும். சொல்லிவிட்டேன் அப்பனே. புண்ணியங்கள் இல்லையப்பா!!!! புண்ணியங்கள் இல்லையப்பா!!!! தான் மட்டும் வாழ வேண்டும். தனக்காக வாழ வேண்டும். தன் பிள்ளைகளுக்காக வாழ வேண்டும் என்றால் அப்பனே அவன் பிணமப்பா!!!!. 

சுவடி ஓதும் மைந்தன் :- ( தன் கடமைகளைச்  செய்து கொண்டு) பிறருக்காக வாழ வேண்டும் என்று சொல்கின்றார். புரிகின்றதா ஐயா? 

அடியவர்கள் :- (அமைதி)

குருநாதர் :- இதனால் சொல்லிவிட்டேன் அப்பனே. ஆன்மா தனித்தனியப்பா. அதாவது நம் பிள்ளை, அதாவது சொந்த பந்தங்கள் இருந்தாலும் அவ் ஆன்மா சென்றுவிடுமப்பா. அப்பொழுது எங்கப்பா சொந்தங்கள்? தாய் எங்கே? தந்தை எங்கே? அண்ணன் எங்கே? தங்கை எங்கே? அப்பனே கூறுங்கள்?

அடியவர்கள் :- (அமைதி)

குருநாதர் :- இதனால் அப்பனே சித்தன் வழியில் வருபவர்கள் முதலில் பல ரகசியங்களைத் தெரிந்து கொண்டே ஆக வேண்டும். தெரியாமல்  சொன்னாலும் , வீணாகப் போய்விடுவீர்கள். பிரச்சினைகளுக்குக் காரணம் என்றால் அப்பனே தன் தன் ஆன்மா என்பேன் அப்பனே. தன்னை முதலில் அப்பனே நல்லொழுக்கத்தோடு மாசில்லா வாழ்க்கை  எதை என்று அறிய அறிய மாசுகள் நீக்குங்கள் அப்பனே மனதிலிருந்து. அனைவருமே நமக்கு சொந்தங்கள் என்று எண்ணிக்கொள்ளுங்கள். அப்பொழுது இறைவன் வருவானப்பா. கையைப் பிடித்து உன்னைத் தூக்கிச் செல்வானப்பா. 

அவை விட்டுவிட்டு குடும்பம் நன்றாக இருக்க வேண்டும், பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் எவை என்று அறிய அறிய நீ சொல்லிக் கொடுத்ததைத்தான் (உன்) குழந்தைகள் செய்யுமப்பா. அதனால்தான் அப்பனே முதலிலேயே யாங்கள் அதாவது என்னைத் தேடி வருபவர்க்கெல்லாம் நல்லது செய்து கொண்டிருக்கின்றேன் அப்பனே. அதே போலத்தான் அப்பனே,  உன் பிள்ளைக்கு நீ நல்லது செய்தால் நல்லதாகவே வளரும். அனைத்தும் செய்யும் அப்பனே. அப்படி இல்லையென்றால் நீ தான் அதற்குக் காரணம் கூட. உன் பிள்ளைக்கு நீ (புண்ணியங்கள்) நல்லது செய்  என்றெல்லாம் நீங்கள் கற்றுக் கொடுக்கவேயில்லை அப்பனே. அப்பொழுதே உங்கள் மீதே உங்களுக்கு நம்பிக்கையில்லையா ??? என் பிள்ளை நன்றாக இருக்க வேண்டும். நீங்கள் கூறிக்கொண்டிருக்கின்றீர்கள். எப்படியப்பா நியாயம்?

( நம் குருநாதர் கருணைக்கடல் பிரம்ம ரிஷி, அகத்திய மாமுனிவர் அருளால்  April 2024, கோவை வடவள்ளி அகத்திய மாமுனிவர் ஆலயத்தில் , சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் திரு.ஜானகிராமன் அவர்கள் மூலம் ஜீவ நாடியில் உரைத்த அடியவர்கள் சத்சங்க கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்….)

ஆலய முகவரி :-

ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்திய மாமுனிவர் ஆலயம். வடவள்ளி, முல்லை நகர்,  மருதமலை அடிவாரம். கோயம்புத்தூர்.

Google map:- 

https://maps.google.com/?q=11.024868,76.916664

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!