“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Saturday, October 19, 2024

சித்தர்கள் ஆட்சி - 402 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 13

 இறைவா !!!!! நீயே அனைத்தும்.



அன்புடன் அகத்திய மாமுனிவர் - மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 13

( இவ் தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்:-


சித்தர்கள் ஆட்சி -  379 - பகுதி 1
சித்தர்கள் ஆட்சி -  381 - பகுதி 2
சித்தர்கள் ஆட்சி -  382 - பகுதி 3
சித்தர்கள் ஆட்சி -  383 - பகுதி 4 
சித்தர்கள் ஆட்சி -  389 - பகுதி 5
சித்தர்கள் ஆட்சி -  390 - பகுதி 6
சித்தர்கள் ஆட்சி -  391 - பகுதி 7
சித்தர்கள் ஆட்சி -  392 - பகுதி 8
சித்தர்கள் ஆட்சி -  393 - பகுதி 9
சித்தர்கள் ஆட்சி -  398 - பகுதி 10
சித்தர்கள் ஆட்சி -  400 - பகுதி 11
சித்தர்கள் ஆட்சி -  401 - பகுதி 12
சித்தர்கள் ஆட்சி -  402 - பகுதி 13

( நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய இவ் மதுரை தொடர் வாக்குகளின் முதல் 12 பகுதிகள்  2024ஆம் ஆண்டில் மார்ச் மாதம் 17 ஆம் தேதி நடந்த சத்சங்கம் ஆகும். மறுநாள் (18-3-2024) காலையில் மீண்டும் சத்சங்கம் ஆரம்பம் ஆனது.  பகுதி 13 முதல் இவ்வாக்குகள் தொடர்கின்றது.) 

நம் குருநாதர்:- ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்.

சுவடி ஓதும் மைந்தன் :- (குருநாதர் அளித்த குறிப்பை அடுத்து அங்கு உள்ளவர்களை அழைத்தார்கள். கேள்வி பதில் ஆரம்பம் ஆனது)

நம் குருநாதர் :- ( ஓர் அடியவருக்கு ஞான வாழ்க்கை என்று விதி. அவ் அடியவருக்கு உரைத்த வாக்குகளில் உள்ள பொது வாக்குகள்) 

ஞான வாழ்க்கை அவ்வளவு சுலபம் இல்லை. பல இன்னல்கள் பட்டு, பட்டு அறிந்தும் கூட மனக்குழப்பங்கள் பட்டு பைத்திய நிலை ஏற்பட்டு பின் ஞான நிலை அடைவாய். 

உனையும் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன் உன் இல்லத்தில் இருந்தே.  சேவைகள் செய். யானே அருகில் இருக்கின்றேன். 

அனைவரிடத்திலும் ஒன்றைச்சொல்கின்றேன். யாருக்காவது இவ்வுலகத்தில் பின் நிச்சயம் மனிதனாயினும், நிச்சயம் பல பல வாயில்லா ஜீவராசிகளாயினும் நிச்சயம் மற்றவர்களுக்குப் பயன்பாடாகவே இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் இறைவனே கஷ்டத்தை அள்ளிக் கொடுப்பான். பின் அவை மட்டும் இல்லாமல் இறைவனிடத்தில் சேர்ந்து போவீர்கள். 

கலியுகத்தில் இன்னல்களும் இன்னும்  சோதனைகளும் பலமாக வரும் என்பேன். ஏன் எதற்கு என்றெல்லாம் தெரியாமல் கூட பக்தியைக் காட்டிலும் ( பக்தியைக் காட்டினாலும் கூட ) நிச்சயம் வரும் அம்மா.  ஆனால் புண்ணியம் செய்தவர்கள் நீங்கள். பல ஜென்மத்தில் புண்ணியம் செய்தவர்கள் ஆயினும் நிச்சயம் அகத்தியன் என்ற பெயரையே நீங்கள் வாயால் உச்சரிக்க முடியும். 

சுவடி ஓதும் மைந்தன்:- நீங்கள் அனைவரும் புண்ணியவாதிங்கதான். பல ஜென்மத்தில் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே அகத்தியன் என்ற வார்த்தையை…( உச்சரிக்க முடியும் ). 

நம் குருநாதர்:- ஆனாலும் எந்தனுக்கு கஷ்டங்கள். பின் வேலை இல்லை. இன்னும் பின் படிப்புகள் இல்லை என்பவர்களுக்கு மட்டுமே அதாவது ஏழ்மை இருப்பவர்களுக்கு மட்டுமே எந்தனுக்கு அதிக அளவில் பிடிக்கும் தாயே. அப்பொழுது யாருக்கு யான் செய்வது? இருப்பவனுக்குச்  செய்வதா? இயலாதவனுக்குச்  செய்வதா? 

சுவடி ஓதும் மைந்தன் :- பதில் சொல்லுங்க அம்மா. புரியுதா எல்லோருக்கும்? 

நம் குருநாதர்:- எதை என்று புரியப் புரிய. அப்பொழுதுதான் குழம்புவான். புத்திகள் வரும் என்பது. 

சுவடி ஓதும் மைந்தன்:- வேலை, காசு இல்லாம இருக்கும்போது, சாப்பாட்டுக்கு வழி இல்லாம இருக்கும் போது புத்தி வருமாம். அப்போதுதான் குருநாதர் போய் பக்கத்தில் உட்காருவார். என்னதான் இவர் செய்வார் என்று பார்க்கலாம் என்று. 

நம் குருநாதர்:- பரிகாரமாகவே நான் இருக்கின்றேன் உந்தனுக்கு. உந்தனுக்கு என்ன தேவையோ அதை யான் கொடுத்துக்கொண்டேதான் இருக்கின்றேன் இப்பொழுது கூட. 

அடியவர்:- நான் எங்கு இருக்க வேண்டும்?

நம் குருநாதர்:- எங்கேயாவது இரு. அனைத்தும் என்னிடம்தான். 

அடியவர்:- நன்றி தந்தையே. 

நம் குருநாதர்:- யாராவது தந்தைக்கு நன்றி கூறுவார்களா? நீயே பின்னுக்கு போகின்றாய். 

அடியவர்:- அம்மையப்பா மன்னித்து விடுங்கள்

நம் குருநாதர்:- தவறு செய்தவன்தான் தந்தையிடம் மன்னிப்பு கேட்பான்.

அடியவர்:- அம்மையப்பா, அகத்தீசா!!!!!!

( நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர் அருளால் March 2024 மதுரையில் நடந்த கேள்வி,பதில் வாக்குகள் தொடரும்….)

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!