“இறைவா!!! நீயே அனைத்தும்”
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!
வணக்கம் அடியவர்களே , நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளால் சித்தன் அருள் வலை தலத்தில் "அன்புடன் அகத்தியர்" பதிவு எண் 995 முதல் 1165 வரை வெளிவந்த வாக்குகளில் கர்மா தொடர்பான வாக்குகளை மட்டும் எடுத்து இந்த பதிவில் அளித்துள்ளோம். உங்கள் கர்மங்களை அளித்தால் மட்டுமே வாழ்வில் முன்னேற்றம் அடைவது மிக எளிதாகும். இந்த வாக்குகளைப் படித்து உங்கள் புரிதலை ஆழப்படுத்துங்கள். சித்தர்கள் அருளால் உங்கள் கர்மங்களைச் சித்தர்கள் அருளால் நீக்கி , சித்தர்கள் அருளால் வாழ்வை வெற்றிகொள்ளுங்கள்.
============================================================================
சித்தன் அருள் - 1018 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை அருள்வாக்கு-2
ஓதிமலையில் குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு பாகம் 2.
அப்பனே பெண் பிறக்கும் பொழுது எவ்வாறு என்பதையும் கூட நிமித்தம் காட்டி தாயவள் எவ்வாறு என்பதை என்கூட நிமித்தம் காட்டி அப்பனே தன் பிள்ளைக்கு தாயவள் என்னென்ன வேண்டும் என்றுகூட நல் முறையாகவே செய்வாள். ஆனாலும் இதனை வளரும் பொழுது மனிதனின் மனதில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. கர்மத்தில் குதிக்கிறான். இவ்வாறு குதிக்க, குதிக்க அவன் தன் வாழ்க்கையை அவனே கெடுத்து கொண்டு இருக்கின்றான்.
நல் முறைகள் ஆகவே திருத்தல முருகனை நல் முறையாகவே வணங்கி வணங்கி சென்றுகொண்டே இருந்தாலே போதும் .
கர்மாக்கள் பல அழியும் என்பேன். ஆனாலும் அப்பனே முருகன் அதிவிரைவில் விடமாட்டான் என்பேன்.
அப்பனே நல் முறைகளாக உருவாக்குவதற்கு சமமான கர்மாக்களை போகன்(போகர் சித்தர் பழனி நவபாஷண சிலை உருவாக்குவதற்கு முன் ஓதிமலைக்கு வந்து சிலகர்மாக்களை கழித்து விட்டு சென்றதை குரு அகத்தியர் குறிப்பிடுகிறார்) இங்கு வந்துதான் கழித்தான் என்பேன்!
============================================================================
சித்தன் அருள் - 1022 - அருணாச்சலத்தில் குருநாதர் வாக்கு!
ஆடி அமாவாசை 08/8/2021 அன்று குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு உரைத்த இடம் திருவண்ணாமலை
ஆதி சித்தனை மனதில் எண்ணி செப்புகிறேன் அகத்தியன்.
அப்பனே இறைவனை விட அடுத்து பெரிது மனம் என்பேன்.
மனதை நல் முறையாக அடக்கி விட்டால் இவ்வுலகத்தில் மனம் எவ்வாறு என்பதையும் கூட இறைவனே அந்த மனதில் இறங்கி விடுவான் அப்பனே.
இந்த உலகத்தில் பெரியது என்றால் மனதை அடக்குவது தான் என்பேன்.
அப்பனே நல் முறையாக மாயையில் மனிதர்கள் விழ விழ மனிதர்களுக்கு ஆபத்து என்பேன் ஆனாலும் நான் விடமாட்டேன் மாய வலையில் நீங்கள் சிக்கிக் கொள்வதற்கு.
அப்பனே மனிதன் நினைப்பது இறைவனுக்கு சிரிப்பாகத்தான் இருக்கிறது நல் முறைகள் ஆகவே ஆனால் பிறப்பின் ரகசியம் பிறக்கும்போது மனதில் எண்ணங்கள் இல்லை. வளரும் போது சில எண்ணங்கள். அப்பனே இவ்வெண்ணங்கள் அழிப்பதற்கு அப்பனே
மாயையில் சிக்கிக் கொண்டு கர்மங்களை பலமாக பெற்றுக் கொள்வதற்கு ஆனாலும் இதனை நான் விட்டு விடுவதில்லை. அப்பனே என்னை வணங்குபவர்களுக்கு ஒன்றை மட்டும் நன்கு கெட்டியாக சொல்கின்றேன், கர்மத்தை சேர்க்க விடமாட்டேன் அதனை மட்டும் புரிந்து கொள்ளுங்கள்.
அப்பனே நல் முறைகள் ஆகவே அனைத்தும் நிறைவேறும் என்பேன் நல்முறையாக மெய் பொருள் என்பதை உங்களுக்கு காட்டிக் கொண்டே இருப்பேன்.
============================================================================
சித்தன் அருள் -1024 - அன்புடன் அகத்தியர் - முருகப்பெருமானின் அருள்வாக்கு!
நாகபஞ்சமி அன்று வடிவேலன் உரைத்த பொது வாக்கு.
இடம். அங்காளபரமேஸ்வரி அர்த்தநாரிஸ்வரர் ஆலயம் தர்மபுரி.
உலகை ஆளும் என் அப்பன் அம்மையை பணிந்துசொல்லுகின்றேன் கந்தனவன்.(கந்தன்)
ஞானப் பிழம்பை என் தந்தை நிச்சயமாய் வழங்குவான் என்பேன்.
இறைவன் என்றெல்லாம் திரிகின்றார்கள் மனிதர்கள் இறைவன் இறைவன் என்றெல்லாம் திரிகின்ற போது அவரவர் செய்த புண்ணிய பாவங்கள் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும் அவர்களே மனதில் நினைத்து.
அப்பொழுதுதான் நல் முறையாக அப்பனே தவறு செய்துவிட்டேன் என்று திருந்தி விட்டால் நல் முறையாக ஆசிகள் என்னுடைய ஆசிகள் ஆனாலும் பின் பல புண்ணியங்கள் நல் முறைகளாய் செய்யும் பொழுது அவன் தன் கர்மத்தை அவனே விலக்கிக் கொள்கின்றான். என்பேன்.…
நல் முறையாக மாற்றம் உண்டு
தெரியாமல் செய்கின்ற தவறுக்கு எதனை என்று கூற கர்மா கிடையாது எமதர்மன் அதனை எடுத்துக்கொள்வதில்லை. ஆனாலும் தெரிந்தே செய்கின்ற தவறுக்கு நிச்சயம் கர்மாவினை உண்டு. வருகின்றது வினை.
இதனையும் எவ்வாறு என்பதைக்கூட தெரிந்தும் இதற்கும் கூட விமோசனம் உண்டு என்பேன் எதனையும் என்பதைக்கூட எவ்வாறு என்பதையும் கூட இறைவனை வகுத்துக்கொண்டு இறைவனை நினைத்துக் கொண்டால் அக் கர்மவினை பின் பின் சம அளவில் நல் முறையாக இறைவன் எடுத்துக்கொண்டு நல் முறையாகவே இவ்வுலகத்தில் வாழவைப்பான் என்பேன். அதனால் தான் இறை பலங்கள் அனைத்திற்கும் தேவை என்பதைக்கூட நான் நிச்சயமாய் சொல்வேன் என்பேன்.
நல் முறைகள் ஆகவே இன்னும் சில உண்மைகளை தெரிவிக்கின்றேன்.
நின்று கொண்டிருக்கும் நல் முறைகளாய் யான் எப்பொழுதும் எங்கு என் வீடுகளிலும் எப்பொழுதும் நின்று கொண்டிருப்பேன் நின்று கொண்டிருப்பேன் எதனால் என்பதைக்கூட மனிதனுக்குத் தெரிவதில்லை தெரிவதில்லை இதனையும் சூட்சுமத்தை அறிவிக்கின்றேன் இப்பொழுதே எதனை என்றும் மனிதன் என்னிடத்தில் கேட்கும்பொழுது பின் நல் முறைகள் ஆகவே ஆசீர்வாதம் ஆசிர்வாதங்கள் கொடுத்து அனுப்புகின்றேன் ஆனாலும் அதனை பயன்படுத்தாமல் தவறான முறையில் பயன்படுத்திக் கொண்டு அனைத்தையும் இழந்து பின் நல் முறைகள் ஆகவே மீண்டும் தேடி வருகின்றான் அதனால்தான் யான் சொன்னேன் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் நின்றபடி . நின்றபடியே பார்த்துக் கொண்டேதான் இருப்பேன் எப்போதும் கூட கடைநாள் வரையிலும்கூட.
ஆனாலும் நல் முறைகள் ஆகவே என் தந்தை அமர்ந்து கொள்வான். அமர்ந்து கொள்வான் என்பதை கூட பின் பின் நல் முறைகள் ஆகவே அனைத்தும் கூறும்பொழுது, பின் உனது கர்மாக்கள் கழியட்டும் கழியட்டும் என்று கூட பின் கர்மத்தை கஷ்டங்களைக் கொடுத்து அழித்து கொண்டு இருப்பான் என் தந்தை.
ஆனாலும் பின் நல் மனதாய் என் தந்தைக்கு பிடித்துவிட்டால் ஏற்றங்கள். பின் உயர்ந்தோர். பிடித்தவாறு மனிதர்கள் எவரும் இல்லை என்பேன், என் தந்தைக்கு.
===========================================================================
சித்தன் அருள் - 1027 - அன்புடன் அகத்தியர் - திருவண்ணாமலை - ஆட்சி எங்களுடையதே!
22/8/2021 ஆவணி அவிட்டம் பௌர்ணமி அன்று குருநாதர் அகத்தியர் திருவண்ணாமலை திருத்தலத்தைப்பற்றி உரைத்த பொது வாக்கு
உரைத்த இடம். அம்மணி அம்மாள் ஜீவசமாதி. திருவண்ணாமலை.
ஆதி அண்ணாமலையை மனதில் துதித்து செப்புகின்றேன் அகத்தியன்!
அப்பனே நல் முறையாக, நல் முறைகள் ஆகவே இவ்விடத்தில் பலப்பல புண்ணியங்கள். நல்முறைகள் ஆகவே செய்தவன் தான் அண்ணாமலையை கிரிவலம் வர முடியும் நல் முறைகள் ஆகவே.
நல் முறைகள் ஆகவே அண்ணாமலை வலம் வருவது அதி சிறப்பு என்பேன் என்பேன் இதனையும் எவை எங்கு என்றும் கூறாமல் நல் முறைகளாக இறைவனை வணங்காவிடினும் நல் முறையாக வலம்வந்து வணங்கி வந்தால் பல பல சித்தர்கள் பல பல எண்ணிலடங்கா கோடி பின் ஞானிகளும் வலம் வருவார்கள் என்பேன். அப்பொழுது நல் முறைகள் ஆகவே வலம் வரும் பொழுது அவர்கள் தம் உராய்வின் போது (அருரூபமாக உரசி செல்வார்கள்)
சில கர்மாக்களை எடுத்துச் செல்வார்கள் என்பேன் இதுதானப்பா திருவண்ணாமலை என்கின்ற திருத்தலத்தின் சிறப்பு என்பேன்.
ஆனால் இதையோ தவிர்த்துவிட்டு மனிதர்கள் பின் நல் முறை ஆகவே சுற்றிவந்தால் பின் அதுவும் இதுவும் அனைத்தும் நடக்கும் என்றே யோசிக்கிறார்கள் ஆனாலும் அதுவே தவறு என்பேன்.
கர்மா நீங்கி நல் முறைகளாக முக்தி பெறுவதற்கு சரியான ஸ்தலம் இதுவே என்பேன்.
நல் முறைகளாக குழப்பங்கள் எவ்வாறு என்பதையும் கூட நினைக்கும் பொழுது நிச்சயமாய் இவனை(சிவனை) அண்ணாமலையில் சரண் அடைந்து விட்டால் இவன் தன் குறைகளை வைக்க மாட்டான் என்பேன்.
ஆனாலும் மனதில் எதையும் நினைக்கக் கூடாது என்பேன். அவை வேண்டும் இவை வேண்டும் என்று.
நல் முறை களாகவே வலம் வந்தாலே போதும் கர்மாக்கள் தொலையும்.
கர்மாக்கள் தொலைந்து புண்ணியங்கள் பெருகும் புண்ணியங்கள் பெருகும் பொழுது அனைத்தும் நிறைவேறும் என்பேன்.
நிறைவேறும் என்பேன் நல் முறைகள் ஆகவே ஏன் யாங்களும் சித்தர்களும் சித்தர்களின் பரிபூரண பின் மனிதர்களும் அன்பைப் பெற்று பின் அன்பின் பின் பெற்று தொடர்வதாலே முன் செய்த கர்ம வினை ஒருவனுக்கு நீங்க வேண்டும் என்றால் அண்ணாமலையே சிறப்பு ஸ்தலம் என்பேன். மற்றவையெல்லாம் பின்னே என்பேன்.
இதனால்தான் அண்ணாமலையின் ஒரு சிறப்பு உண்டு என்பேன் உண்டு என்பேன் அவன் மலையை மலையில் இன்னும் பல கோடி சித்தர்கள் தவம் செய்துகொண்டு இருக்கின்றார்கள்.
ஆனாலும் இதன் தவத்தை இப்பொழுதும் கூட மனிதர்கள் கெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆனாலும் சித்தர்களோ ஞானிகளோ நல் முறைகள் ஆகவே பொறுமை காத்து இருக்கின்றார்கள்.
ஆனாலும் இவையே என்று போகப்போக பின் இதனையே இப்படியே மனிதர்கள் செய்துகொண்டிருந்தால், செய்து கொண்டிருந்தாராயின் பின் எவை என்று கூறாமலேயே பின் கோபம்.
நல் முறைகளாக பின் கர்மத்தையும் எவ்வாறு சுமந்து நின்றாயோ எதனாலே பல புண்ணியங்கள் பெருகும் ஆனாலும் எதை எதை என்று நினைக்கும் மனது மனிதனின் கீழ்த்தரமான எண்ணங்களை கவனித்து சித்தர்கள் இனிமேலும் நிச்சயமாய் தண்டனைகள் கொடுப்பார்கள் என்பேன்.
இதனையும் நன்கு உணர குறைகள் இல்லை என்பேன்.
==============================================================================
சித்தன் அருள் - 1028 - அன்புடன் அகத்தியர் - ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஐராவதேஸ்வரர் ஆலயம்!
24/8/2021 அன்று ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஐராவதேஸ்வரர் ஆலயம் பற்றிய குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு.
வாக்குரைத்த ஸ்தலம். ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஐராவதேஸ்வரர் ஆலயம் . பள்ளசூளகரை. மல்லாபுரம், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.
ஆதி சித்தனை மனதில் தொழுது உரைக்கின்றேன் அகத்தியன்!
நல் முறைகள் ஆகவே இங்கு அமர்ந்து நல் முறைகள் ஆகவே தியானங்கள் செய்ய இறைவன் தோன்றி முன்னாளில் எவ்வாறு என்பதை நினைக்கும் பொழுது பின்பும் இப்பொழுது பின் தஞ்சை கோயில் திருத்தலத்தைப் பற்றி உண்மைகளாக எடுத்துரைக்க என்பதையும் கூட இங்கு வந்து சரணடைந்து கர்மாவை நீக்கி பின் ராஜராஜ சோழன் தஞ்சை திருக்கோயிலை கட்ட ஆரம்பித்தான் என்பேன்.
நல் முறைகள் ஆகவே இங்கு வந்து வழிபட்டு செல்வோர் அப்பனே சிறிது சிறிதாக கர்மத்தை போக்கிக் கொள்வார்கள் என்பேன்.
அனைத்து சித்தர்களின் ஆசிகள் கிடைக்கும் என்பேன்.
இதனால் இத்திருத்தலத்தை பின் நல் முறைகளாக அவர்களும் சிலசில விஷயங்களில் இதனையும் ஏற்று செய்தனர் என்பேன் அதனால்தான் இத்திருத்தலத்தை ஐதீஸ்வரர் என்று அழைக்கப்பட்டது.
நல் முறையாக அவர்களின் கர்மாவும் நீங்கி சென்றுவிட்டார்கள் எவ்வாறு என்பது கூட இங்கு வந்து நல் முறைகள் ஆகவே நிச்சயமாய் இங்கு வருபவர்கள் எவ்வாறு என்பதையும் கூட நினைக்கும் பொழுது பல கர்மாக்களை நிச்சயம் இங்கு விலக்கலாம் என்பேன்.
சித்தர்களின் ஆசி பெற்ற பூமி இது ஆனாலும் எவை எவை என்று உண்மைப் பொருள் எவை என்று தெரியாமலே மனிதன் சுற்றி வருகின்றான் என்பேன். அதனால்தான் அப்பனே சொல்கின்றேன் இனிமேலும் வரும் காலங்களில் துன்பங்கள் ஏற்படும் பொழுது, பின் அப்பனே மனிதனுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது கூட தெரியாமல் போய்விடும். அப்பொழுது இத்திருத்தலத்தை நாடி வந்தால் சில சில உண்மைகள் தென்பட்டு பின் ஆசீர்வாதங்களும் நல் முறைகளாக நல் முறைகள் ஆகவே கொடுக்கப்பட்டு அனைத்தும் நிறைவேறும் அனைத்து கர்மாக்களும் அழிக்க அழிக்க அழிந்து கொண்டே இருக்கும் என்பேன்.
நல் முறைகள் ஆகவே உயர்ந்த இடத்திற்குச் செல்லலாம். நினைத்தது நினைத்தவாறே பெற்றுக்கொள்ளலாம் என்பேன் ஆனாலும் தடை தாமதங்கள் சிறிது சிறிது நின்ற பின்தான் செய்வான், நல் முறைகள் ஆகவே இவ் ஈசன்.
எதனால் என்பதையும் கூட சிறிது சிறிதாக முதலில் கர்மத்தை நீக்குவான் என்பேன்.
தெரியாத இடங்கள் பல என்பேன்.
ஆனாலும் அங்கு சென்று சென்று மக்கள் எவ்வாறு என்பதையும் கூட உண்மை நிலை தெரியாமலே வணங்கிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் பல சூட்சமங்கள் தெரிவித்து அங்கு சென்று கலியுகத்தில் நல் முறையாக கர்மங்களை நீக்கி வாழுவது எப்படி என்பதையும் கூட வருங்காலங்களில் சொல்லிக் கொண்டே வருகின்றேன்.
கலியுகத்தில் கலியும் முற்றும் எவ்வாறு என்பதையும் கூட, பின் நல்லவைகள் எங்கெங்கு இருக்கின்றதோ அதை அதையெல்லாம் கலியவன் (கலிபுருஷன்) பின் தடுத்துக் கொண்டே இருப்பான். மக்கள் செல்ல அனுமதிக்க மாட்டான் அதனால் தான் இன்னும் சில நல் முறைகளாக திருத்தலங்கள் பற்றி அங்காங்கே யான் தெரிவிக்கின்றேன்.
ஆங்காங்கே சென்று கர்மத்தை நீக்கி நல் முறைகள் ஆகவே நல் முறைகளாக மோட்சத்தை பெற்றுக்கொள்ளுங்கள். இதுதானப்பா உண்மை.
அதன்படி பின் நல் முறைகளாக நல் முறையாகவே அங்கு அமர்ந்து தியானங்கள் செய்யவே பல பலப்பல பிறவிகளில் செய்த கர்மாக்கள் அழியும் என்பேன்.
கர்மாக்கள் அழிந்து புண்ணிய பலன்கள் மேலோங்கி அனைத்தும் நடக்கும் என்பேன்.
இங்கு வந்து செல்பவர்கள் பின் ஒரு பொழுதும் தாழ்ந்து விடமாட்டார்கள் என்பேன்.
உயர்ந்த அளவிற்கு எவ்வளவு உயரம் உயரத்தான் செய்வான் இங்கு இருக்கும் சிவன் என்பேன்.
==========================================================================
சித்தன் அருள் - 1030 - அன்புடன் அகத்தியர் - சிவன் கோயில், பாக்கம் - பொதுவாக்கு!
குருநாதர் அகத்தியர் பாக்கம் சிவன் கோயில் பற்றிய பொது வாக்கு.
வாக்குரைத்த இடம். பாக்கம் பாளையம். சிவன் கோயில், அணைகட்டு தாலுகா. வேலூர் மாவட்டம்.
உலகத்தின் முதல் சித்தனை பணிந்து வாக்குகள் செப்புகின்றேன் அகத்தியன்.
ஒன்றை கூறுகின்றேன் குறிப்பாக குறிப்பாக மனிதர்கள் கர்மத்தை தேடிக் கொள்வதில் வல்லவர்கள் என்பேன் ஏனென்றால் கர்மா அதிவிரைவில் அழைத்து சென்றுவிடும் ஆனாலும் புண்ணியங்கள் செய்வதற்கும் மனம் வராது என்பேன்.
இறைவனும் நல் முறையாக மனிதனை படைக்கின்றான் இப்புவி உலகத்திற்கும் அனுப்புகின்றான் ஆனாலும் மனிதன் மாயையில் சிக்கிக் கொண்டு எதனையோ எதனையோ நினைத்துக்கொண்டு வருந்திக் கொண்டு பின் கர்மாக்களை எதன் மூலம் தேர்ந்தெடுக்கிறான் என்றால் கர்மாக்களை உருவாக்குபவன் மனிதன் தான் என்பேன்.
அப்போது இறைவன் மீது எவ்வாறு குற்றம் சொல்ல இயலும்?
ஏன் இறைவன் மீது நீங்கள் குற்றம் சொல்லலாம்
உண்மை நிலை என்னவென்று மனிதர்களுக்குத் தெரிவதில்லை என்பேன் அன்பே கடவுள் கடவுள் மீது அன்பை வைத்து விட்டால் இறைவனும் அதைவிட பன்மடங்கு திரும்ப அன்பு செலுத்துவான் என்பேன் என்பேன் ஆனால் இதனையும் மனிதர்கள் புரிந்து கொள்வதில்லை.
மாயை மாயையே கண்ணை அடைத்து விடுகின்றது பின் கர்மாக்கள் இன்னும் ஒரு முறை உரைக்கின்றேன் இதைப்பற்றி. யோசியுங்கள் பலமாக கர்மம் யார்? உருவாக்குகின்றான்? என்று.
நிச்சயமாய் சொல்வேன் மனிதனே. மனிதர்கள் மாறாதவரை இந்த உலகம் மாறுவதாக இல்லை.
அப்பனே நடக்க வேண்டியது சரியான நேரத்தில் நடக்கும் கவலை விடுங்கள்.
நல் முறைகள் ஆகவே பல உலக அதிசயங்கள் இவ்வுலகில் நடக்கப் போகின்றது கலியுகத்தில் முறையாகவே ஆங்காங்கே இன்னும் சிவ ஸ்தலங்கள் எழும் என்பேன்.
ஈசனே அமைத்துக் கொள்வான் என்பேன் பல தேவர்களும் நல் மனிதர்களும் இனிமேலும் நடமாடுவார்கள் என்பேன் நாட்டிலே. ஆனாலும் யாங்களும் சித்தர்களும் மனிதர்களை நம்பி நம்பி ஏமாந்து கொண்டு போய்க்கொண்டே இருக்கிறோம் . பின் இவன் பக்தியாக இருந்து நல்லது செய்வான் என்று எண்ணினால் ஆனால் அவனோ பணத்திற்கு ஆசைப்பட்டு ஏதேதோ தொழிலில் இறங்கி அவன் கர்மத்தை சேர்த்துக் கொண்டே இருக்கின்றான்.
============================================================================
சித்தன் அருள் - 1033 - அன்புடன் அகத்தியர் - வணக்கம்பாடி அகிலாண்டேஸ்வரி சமேத ஆபத்சகாயேஸ்வரர்!
29/8/2021 அன்று வணக்கம்பாடி அகிலாண்டேஸ்வரி சமேத ஆபத்சகாயேஸ்வரர்(உற்றுற கேட்கும் ஈஸ்வரன்) ஆலயத்தைப்பற்றி குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு.
உலகை ஆளும் ஆதி மகேஸ்வரனை மனதில் எண்ணி வாக்குகள் உரைக்கின்றேன் அகத்தியன்.
இத்தலத்தில் பல பல பெருமைகள் பின் நல் முறைகள் ஆகவும் பூசலான் (பூசலார் நாயனார்) என்கின்ற ஞானியும் இங்கு வந்து நல் முறையாகவே பின்பற்றி பின் அனைத்தும் செய்வித்தான். மக்கள் கூட்டம் அலைமோதியது என்பேன்.
பின் நன்றாகவே வாழ்ந்து வந்தநிலையில் பலப்பல கர்மாக்களும் நீக்கி வந்தான் இவ் ஈசன்.
முன்னோர்கள் ஆசீர்வாதத்தால் அப்பனே நல் முறையாக நல் முறைகள் ஆகவே அனைத்தும் நடக்கும் என்பேன் முன்னேறலாம்.அவர்கள் அனைத்தும் செய்வார்கள் என்பேன் இத் தலத்திற்கு வருபவர்களுக்கு முறைகள் ஆகவே.
அதனால்தான் சித்தர் ஆட்சி சித்தர் பூமி என்பதெல்லாம் இனிமேலும் நடக்கும் பொழுது அப்பனே அனைத்தும் எழும் என்பேன் யாங்களும் நல் முறைகள் ஆகவே துணை புரிந்து அனைவராலும் அனைவரும் நல் முறைகள் ஆகவே வாழ்ந்து பின் இறையருள் சேர வேண்டும் என்பதே சித்தர்களின் கொள்கை என்பேன் இதனால் நாங்களே நிச்சயம் பல திருத்தலங்களுக்கு சென்று நல் முறைகளாக யார்? யார்? எதன் மூலம்? எதனை மூலம்? என்பதையும் கூட நியமித்து அத் திருத்தலத்தை உருவாக்கும் பொழுது அங்கு வருபவர்கள் நல் முறைகள் ஆகவே சில கர்மாக்களையும் நீக்குவார்கள் இதனால்தான் எங்களால் இவையெல்லாம் நடக்கும் என்பதே உண்மை.
அப்பனே பூசலார் உருவாக்கிய ஸ்தலம் இது அப்பனே அவனுக்கு வேலையே எவ்வாறு என்பதை கூட இதைத்தான் இதனைச் சுற்றி வட்டாரங்களில் உள்ள பல ஆலயங்கள் அவனால் உருவாக்கப்பட்டவை என்பேன். அதனால்தான் யான் சொன்னேன் மனதில் உள்ள காரியங்கள் எண்ணிக்கொண்டு ஈசனையும் எவ்வாறு என்பதையும் எண்ணிக்கொண்டு மனதில் எண்ணிக் கொண்டிருந்தால் அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பேன். இதுதான் இத்தலத்தின் சிறப்பு ஆகும்.
ஆலய முகவரி
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி ஞானபிரசுராம்பிகை உடனுறை ஆபத்சகாயேஸ்வரர் உற்றுற கேட்கும் ஈஸ்வரர் கோயில்
வணக்கம்பாடி கிராமம். ஆரணி சாலை.
திமிரி பேருராட்சி.
ஆற்காடு வட்டம் .
ராணிப்பேட்டை மாவட்டம்.
============================================================================
சித்தன் அருள் - 1034 - ஓதிமலையப்பர் தரிசனம்!
ஓதிமலையப்பன் தரிசனம் - குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு, மதுரை.
ஆதி சித்தனை மனதில் எண்ணி வாக்குகள் செப்புகிறேன் அகத்தியன்!
ஓதி மலையின் சூட்சுமத்தை இப்போது உரைக்கின்றேன் நல் முறைகள் ஆகவே நிச்சயமாய் நீங்கள் செல்லலாம் என்பேன் கார்த்திகை மாதத்தில் செல்லலாம் என்பேன் அங்கு பிள்ளையோனும் (பிள்ளையார்) முருகன் பின் ஐயப்பனும் சந்தோசமாக விளையாடுவார்கள் அப்பனே அவ் சூட்சுமத்தை சொல்கின்றேன் அவர்கள் விளையாடும் இடத்தை கூட .
அப்பனை இவ்வாறு எவ்வாறு இறைவன் எப்பொழுது வருவான் என்பது சீராக கவனித்து அங்கு சென்றால் பின் அவர்களும் பார்த்துவிட கர்மாக்கள் நீங்கும் என்பேன். ஆனால் மனிதனுக்கு இது புரியாமல் போய்விட்டது என்பேன். ஆனாலும் புண்ணிய செயல்கள் செய்யும் காரணத்தால் தானாகவே அதுபோன்று அமைவதும் உண்டு என்பேன்.
இதிலும் ஒரு சூட்சுமம் ஒன்று என்பேன் அப்பனே இவ்விடத்திற்கு ம் பழனிக்கும் குழந்தை வேலப்பர் (பூம்பாறை முருகன் கொடைக்கானல்) என்கின்றார்களே அதற்கும் சம்பந்தம் உண்டு என்பேன்.
அப்பனே உங்களுக்கும் சொல்கின்றேன் இவை மூன்று திருத்தலங்களும் சரி முறையாக தரிசனம் செய்தால் ஒரு நாளைக்கு அப்பனே நல்ல முறையாக விதிகள் மாறும் என்பேன்.
முதலில் தரிசிக்க வேண்டியது அப்பனே ஓதியப்பன்.
இரண்டாவதாக பழனி.
மூன்றாவதாக குழந்தை வேலப்பர்.
நல் முறையாக யான் சொல்லிவிட்டேன் இதில் தான் சூட்சுமம் அடங்கியுள்ளது என்பேன்.
அப்பனே போகன் குழந்தை வேலப்பரை இங்கு (பூம்பாறை) செய்து முடித்தான்.
ஆனாலும் இது இருக்க முருகனும் போகனிடம் ஒரு சூட்சுமத்தை கூறிவிட்டான் அப்பனே போகா நீ இங்கு அமைத்தாய் அமைத்தும் விட்டாய் ஆனாலும் மனிதர்கள் எவை என்று கூற இங்கே வருவார்கள் ஆனாலும் அப்பனே இதிலிருந்து நேர் திசையாக (பழனி) சென்று பின் அப்பனே அங்கே ஒருமுறை அமை.
அங்கு அமைத்தால் அப்பனே அவ்மலையைச் சுற்றி பல பல அற்புத தேவர்கள் தேவயானிகள் அப்பனே பறந்து சுற்றி செல்வார்கள் அப்பொழுது அங்கு சென்று மனிதன் அங்கு செல்ல அப்பனே தேவர்களும் தேவதைகளும் ஆசீர்வதித்து விடுவார்கள் அப்படி அங்கு சென்று செய்ய அனைத்து கர்மங்களும் விலகியே நிற்கும்
ஆனாலும் அப்பனே கர்மாக்களில் நூறில் ஐம்பதாவது கழித்து விடலாம் என்பேன்.
======================================================================
சித்தன் அருள் - 1034 - ஓதிமலையப்பர் தரிசனம்!
ஓதிமலையப்பன் தரிசனம் - குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு, மதுரை.
ஆதி சித்தனை மனதில் எண்ணி வாக்குகள் செப்புகிறேன் அகத்தியன்!
ஓதி மலையின் சூட்சுமத்தை இப்போது உரைக்கின்றேன் நல் முறைகள் ஆகவே நிச்சயமாய் நீங்கள் செல்லலாம் என்பேன் கார்த்திகை மாதத்தில் செல்லலாம் என்பேன் அங்கு பிள்ளையோனும் (பிள்ளையார்) முருகன் பின் ஐயப்பனும் சந்தோசமாக விளையாடுவார்கள் அப்பனே அவ் சூட்சுமத்தை சொல்கின்றேன் அவர்கள் விளையாடும் இடத்தை கூட .
அப்பனை இவ்வாறு எவ்வாறு இறைவன் எப்பொழுது வருவான் என்பது சீராக கவனித்து அங்கு சென்றால் பின் அவர்களும் பார்த்துவிட கர்மாக்கள் நீங்கும் என்பேன். ஆனால் மனிதனுக்கு இது புரியாமல் போய்விட்டது என்பேன். ஆனாலும் புண்ணிய செயல்கள் செய்யும் காரணத்தால் தானாகவே அதுபோன்று அமைவதும் உண்டு என்பேன்.
இதிலும் ஒரு சூட்சுமம் ஒன்று என்பேன் அப்பனே இவ்விடத்திற்கு ம் பழனிக்கும் குழந்தை வேலப்பர் (பூம்பாறை முருகன் கொடைக்கானல்) என்கின்றார்களே அதற்கும் சம்பந்தம் உண்டு என்பேன்.
அப்பனே உங்களுக்கும் சொல்கின்றேன் இவை மூன்று திருத்தலங்களும் சரி முறையாக தரிசனம் செய்தால் ஒரு நாளைக்கு அப்பனே நல்ல முறையாக விதிகள் மாறும் என்பேன்.
முதலில் தரிசிக்க வேண்டியது அப்பனே ஓதியப்பன்.
இரண்டாவதாக பழனி.
மூன்றாவதாக குழந்தை வேலப்பர்.
நல் முறையாக யான் சொல்லிவிட்டேன் இதில் தான் சூட்சுமம் அடங்கியுள்ளது என்பேன்.
அப்பனே போகன் குழந்தை வேலப்பரை இங்கு (பூம்பாறை) செய்து முடித்தான்.
ஆனாலும் இது இருக்க முருகனும் போகனிடம் ஒரு சூட்சுமத்தை கூறிவிட்டான் அப்பனே போகா நீ இங்கு அமைத்தாய் அமைத்தும் விட்டாய் ஆனாலும் மனிதர்கள் எவை என்று கூற இங்கே வருவார்கள் ஆனாலும் அப்பனே இதிலிருந்து நேர் திசையாக (பழனி) சென்று பின் அப்பனே அங்கே ஒருமுறை அமை.
அங்கு அமைத்தால் அப்பனே அவ்மலையைச் சுற்றி பல பல அற்புத தேவர்கள் தேவயானிகள் அப்பனே பறந்து சுற்றி செல்வார்கள் அப்பொழுது அங்கு சென்று மனிதன் அங்கு செல்ல அப்பனே தேவர்களும் தேவதைகளும் ஆசீர்வதித்து விடுவார்கள் அப்படி அங்கு சென்று செய்ய அனைத்து கர்மங்களும் விலகியே நிற்கும்
ஆனாலும் அப்பனே கர்மாக்களில் நூறில் ஐம்பதாவது கழித்து விடலாம் என்பேன்.
அப்பனே ஆனாலும் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அப்பனே போகன் எவ்வாறு என்பதையும் கூட பின் ஒரு யுகத்தில் பழனியிலும் சமாதி அடைந்து விட்டான். பின் மறு யுகத்திலும் கூட குழந்தை வேலப்பன் முருகன் அடியிலேயே அவன் இருக்கின்றான் ஆனாலும் மனிதர்கள் இதுவரை யாரும் உணர்ந்ததில்லை.
அப்பனே அங்கு செல்ல நல் முறையாக முருகனை வணங்க முருகன் வடிவிலேயே போகனையும் வணங்கலாம் என்பேன்.
அப்பனே இது எதனால் வந்தது என்று நீங்கள் கேள்வியும் கேட்கலாம் என்பேன்
இவைதனை உணர அப்பனே பின் நல் முறைகள் ஆகவே அப்பனே
முருகனும் கூறிவிட்டது என்னவென்றால்
யானும் வந்துவிட்டேன் நலன்களாக செய்துவிட்டேன். மீண்டும் உந்தனக்கு என்ன வேண்டும் போகா என்று கேட்க
பின் நல் முறைகள் ஆகவே போகனும் முருகனிடத்தில் எப்பொழுதும் உன் காலடியிலேயே இருக்க வேண்டும் என்று பணிந்து நின்றான் அதனால் தான் முருகன் தேர்ந்தெடுத்தான் என் காலடியிலேயே இரு அனைவருக்கும் ஆசிகள் கொடுத்துக் கொண்டே இரு என்று.
இங்கு வருபவர்கள் அனைத்து நோய்களையும் சீர் படுத்திக் கொள்வார்கள் என்பேன் அப்படி சீர்படுத்தி முடியாவிட்டாலும் சில மூலிகைகள் நிச்சயமாய் கிடைக்கும் என்பேன். அவ் மூலிகைகளை பயன்படுத்திக்கொண்டு வாழுங்கள் அப்பனே.
=============================================================================
சித்தன் அருள் - 1037 - ஸ்ரீ திருநிலை நாயகி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்!
15/9/2021 அன்று குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு! வாக்குரைத்த இடம்.
ஸ்ரீ திருநிலை நாயகி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் ஆலயம், சித்தருகாவூர் கிராமம், வந்தவாசி வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்.
ஆதி பரமனை மனதில் எண்ணி உரைக்கின்றேன் அகத்தியன்
இருக்கும்பொழுது இறையருள் பெற்று விட்டால் அப்பனே வேறு எதுவும் தேவை இல்லை என்பேன் இறையருளே அனைத்தும் கொடுத்துவிடும்.
ஆனாலும் மனிதன்
எதன் எதனோ மாயையில் சிக்கிக் கொண்டு அனைத்தையும் இழந்துவிட்டு திரும்பவும் இறைவனிடத்தில் வந்தால் அவன் என்ன செய்வான்? மகனே?
அப்பனே ஆனாலும் எவ்வாறு என்பதையும் கூட மனிதன் எதை நோக்கிச் செல்கின்றானென்றால் கர்மாவை நோக்கியே செல்கின்றான்.
இதனையும் பல தடவைகளில் பல உரைகளில் யான் சொல்லியே வந்திருக்கின்றேன் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே.
மனிதன் கர்மாவை சேர்ப்பதில் வல்லவன் என்பேன் அப்பனே இவ்வாறு என்பது கடைசியில் பின் எவ்வாறு என்பதையும் கூட கஷ்டங்கள் வந்தால் இறைவா இறைவா என்று ஓடோடி வருவது அப்பனே அதனால்தான் ஆறு அறிவுகள் இறைவன் பயன்படுத்தி கொள்வதற்காகவே கொடுத்திருக்கின்றான். ஆனாலும் மனிதர்களுக்கு அதை ஒழுங்காக பயன்படுத்தத் தெரியவில்லை மகனே. அப்பனே நல் முறைகள் ஆகவே இந்த ஆறு அறிவையும் ஒருவன் ஒழுங்காக கடைப்பிடித்தால் ஏழாவது அறிவு அவனுக்கு தெரிந்துவிடும் அவன் இறைவனையே காணலாம் என்பேன்.
=============================================================================
சித்தன் அருள் - 1039 - சிவன் வாக்கு -காசி!
1/10/2021 பிரம்மமுகூர்த்தத்தில் காசி கங்கைகரையில் - உலகையாளும் பரமேஸ்வரன் பார்வதி தேவியின் கேள்விகளுக்கு உரைத்த பொது வாக்கு
வாக்குரைத்த ஸ்தலம்: காசி. கங்கைகரை.
பார்வதி தேவி: தேவனே
படைக்கும் தொழில் பிரம்மா தொழிலையும் நல் முறைகள் ஆகவே அவன் தன் இஷ்டத்திற்கு படைத்துக் கொண்டே இருக்கின்றான் இவ்வுலகில், இதை எவ்வாறு தடுப்பது??
உலகையாளும் பரமேஸ்வரன்: தேவியே இதனை தடுக்க முடியாது கர்மங்களுக்கு ஏற்பவே பிறந்துகொண்டே வந்து கொண்டிருக்கின்றான் அதனால் பின் பல சித்தர்கள் இவ்வுலகத்தில் தோன்றி புண்ணியங்கள் செய் புண்ணியங்கள் செய் என்றெல்லாம் மனிதர்களுக்கு எடுத்துரைக்கின்றனர். ஆனாலும் மனிதன் இப் பேச்சைக் கேட்பதே இல்லை இதனால்தான் பிரம்மாவிற்கும் இனிவரும் காலங்களில் படைப்புத் தொழில் அதிகமாக உள்ளது என்பேன் புண்ணியங்கள் புண்ணியங்கள் செய்க !செய்க! என்றெல்லாம் கூறி சித்தர்கள் இப்புவி உலகத்தில் உலாவந்து கொண்டிருக்கின்றனர். ஆனாலும் மனிதன் திருந்தப் போவதாகவே இல்லை. அதனால் பிறப்பிற்கு காரணம் பிரம்மாவா?? தேவியே! மனிதன்தான் காரணம் என்பேன்.
பார்வதி தேவி:தேவாதி தேவனே எதனையும் இவ்வுலகத்தில் நடக்கும் என்கின்றானே?! மனிதன், மனிதன் சொல் பலிக்குமா???
உலகையாளும் பரமேஸ்வரன்:தேவியே இவையெல்லாம் பலிக்காது என்பேன் என்னைவிட மீறிய சக்திகள் இவ்வுலகத்தில் எதுவும் இல்லை.
ஆனாலும் மனிதன் அவை செய்து தருகின்றேன் இவை எல்லாம் நடக்கும் அதெல்லாம் நடக்கும் என்று கூட தன் பொய் நாக்கினால் எடுத்துரைக்கின்றான். ஆனாலும் கடைசியில் கர்மா அவனையும் விட்டுப் போவதில்லை பின் நிற்கும்பொழுது இவனையும் சொல்பவனும் அழிந்துவிடுகின்றான் செய்பவனும் அழிந்து விடுகின்றான். இதனால் என்ன லாபம்??.
பார்வதி தேவி:தேவனே ! இனிவரும் காலங்களில் மனிதர்களை யார்? காப்பது?
உலகையாளும் பரமேஸ்வரன்: சொல்கின்றேன் தேவியே! முதலில் காப்பது அகத்தியனே!
அகத்தியனே என்பேன். பின் இதனை அறிந்து யான் அகத்தியனிடம் சென்றேன்.
அகத்தியனே! நீ ஓடோடிச் இவ்வுலகத்தை காத்துக் கொண்டிருக்கின்றாய்!
ஆனாலும் மனிதர்கள் உன் பெயரை சொல்லி ஏமாற்றி ஏமாற்றி பிழைப்பு நடத்திக் கொண்டு வந்திருக்கின்றார்களே.
ஏன் அவர்களுக்கு திரும்பவும் நீ நல்லதே செய்து கொண்டிருக்கின்றாய் என்று கேட்கும்போது!
அகத்தியன் ஒரே வார்த்தை சொல்லி விட்டான்
அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு:- பிழைத்தால் பிழைக்கட்டும் என்று.
ஏன்? அப்படியாவது நன்றாக வாழட்டும் என்று.
உலகையாளும் பரமேஸ்வரன்: யானும் கூறினேன் அகத்தியனிடம்.
இவை ஆனால் மனிதனக்குள் மனிதன்களுக்கு போட்டிகள் .
அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு:- ஆனால் மனிதர்கள் சித்தர்கள் இடையே போட்டி போடுவது சரியா?
அதனால் அகத்தியனும் சொன்னான் அவந்தனக்கு கர்ம பலம் அதிகம் உள்ளது அதனால் தான் சித்தர்களிடமே போட்டிபோட்டு கொண்டிருக்கின்றான். இது அழிவிற்கு சமமானது.
=============================================================================
சித்தன் அருள் - 1040 - திருமூலர் வாக்கு!
3/10/2021 அன்று திருமூலர் உரைத்த பொதுவாக்கு
வாக்குரைத்த ஸ்தலம் : கங்கை கரை. காசி.
உலகையாளும் சிற்றம்பலனை பணிந்து வாக்குகள் உரைக்கின்றேன். மூலனவன். (திருமூலர்).
நல் முறையாக அனு கிரகங்கள் மனிதர்களுக்கு வந்து கொண்டே இருக்கின்றது ஆனாலும் மனிதன் அதை ஒழுங்காக பயன்படுத்த தெரிந்திருக்கவில்லை.
தெரிந்து கொண்டால் பின் அனைத்தும் நீங்கள் மனதில் நினைத்தவாறே நடக்கும் நடக்கும் என்பேன்.
மனிதன் உணர தான் கடமையை செய்துவர எத்துன்பமும் வருவதில்லை மனிதனுக்கு. தன் துன்பத்தை நிச்சயம் இறைவன் துடைப்பான் என்பேன்.
அதை விட்டுவிட்டு மனிதனே ஒழுங்காக வாழ கற்றுக்கொள். இனிமேலாவது பிழைத்துக் கொள்.
ஏன்? நீயும் இருக்கின்றாய். மனைவியும் இருக்கின்றாள். ஏன் உன் பிள்ளைகளை பற்றியும் நினைத்துப் பார். சிறிதாவது நினைத்துப்பார் அப்பொழுது தெரியும் நீ தான் கர்மம் சேர்த்துக் கொண்டு இருக்கின்றாயே?
இன்னும் உன் பிள்ளைகளையும் அவர்களுடைய பிள்ளைகளையும் கர்மத்தை சேர்த்து வைக்க வைக்கின்றாயா?
தெரிந்து கொள் வேண்டாம் இனிமேலும் நல் பாதையில் செல்க.
இறைவனை சொல்லி இறைவன் பெயரைச் சொல்லி பின் பொய் பேசி புறம் கூறி பின் அவனவன் வாழ்வதற்கு அவன் பணத்தை சேமித்து கொண்டிருக்கின்றான்.
பணத்தை சேமித்ததை விட அதனோடு கர்மாக்களையும் சேர்த்துக் கொள்கிறான் என்பதை அவனுக்கு தெரியவில்லை இதனால்தான் அறிவுள்ள முட்டாளே என்கின்றேன் மனிதனை.
இதனால் நல் முறைகளாக முதலில் நீ பிழைத்துக் கொள் பிழைத்துக் கொள் பின் இறைவன் நல் முறைகள் ஆகவே மனிதனை படைத்தான் எப்படி?
அப்படியே அவனுக்குத் தெரியும் மனிதர்களை காப்பாற்றுவதற்கு.
ஆனால் இவையன்றி நீயும் பிழைப்பதற்காக வே அதைச் செய் இதைச் செய் இவையெல்லாம் கூறிக்கொண்டே வந்துகொண்டிருந்தால் நீயும் கர்மத்தை சேர்த்துக் கொள்வாய் பின் உன் நிழலில் வருவோர் அனைவரையும் கர்மத்தின் பாதைக்கு எடுத்துச் செல்வாய்.
அதனால் இறைவனை நம்புங்கள் இறைவனை நம்புங்கள் இறைவனுக்கு நல் முறையாய் பின் இறைவனை தேடி அலையுங்கள்.
கர்ம பூமியில்
கர்மா மனிதனை சுமந்து கொண்டிருக்கின்றதா??
இல்லை
மனிதன் கர்மாவை சுமந்து கொண்டிருக்கின்றானா??
என்பதைக்கூட சந்தேகத்திலேயே திகழ்கின்றது .
இறைவனின் பலமே இங்கு அதிகமாகக் கூடிக்கொண்டிருக்கின்றது .
இதனால் மனிதனே யான் தான் இறைவன்
யான் தான் இறைவன் யான் குரு என்றெல்லாம் மனிதன் இனிமேலும் தன்னைத்தானே போற்றி கொள்வான்.
அது பொய் அதுதான் பொய் அங்கேதான் கர்மம் ஆரம்பிக்கின்றது.
யான் தெரியாமல் கூறுகின்றேன் கூறுகின்றேன் இவையே என்று யான் முருகனை பார்ப்பேன்
யான் ஈசனை பார்ப்பேன் .
யான் அகத்தியனை பார்ப்பேன் யான் சித்தனை பார்ப்பேன்.
யான் ஏன் எதனை எதனையோ என்று யான் இறைவனை நேசித்த தோடு பார்ப்பேன் என்று ஆனால் இதனை எல்லாம் எதற்காக என்று தெரியுமா??
பணம் சம்பாதிப்பதற்கே!
பணம் சம்பாதிப்பதோடு மட்டும் நின்று விடாமல் மனிதன் தன்னைத்தானே இழந்து கொண்டு.!
மனிதா இப்பொழுது தெரியாது நீ செய்யும் செயல்கள்.
தெரிந்து கொள்!
ஒருமுறையும் இனிமேலும் விளக்குகின்றேன் ஒருவர் இருவர் தனியாக சென்று தவறு செய்தாலே அது கர்மா நிலைக்கு சமம் ஆகின்றது தெரிந்து கொள்ளுங்கள் எதனை என்று கூட.
நல் மனதாக தூய உள்ளம் ஆக இருந்து விட்டால் ஏன் இறைவனைத் தேடி நீ அலையத் தேவையில்லை இறைவனே உன்னை தேடி வந்து நோக்குவான்.
இதனால் எங்கெங்கு சென்று எங்கெங்கெல்லாம் கர்மங்களை அழிக்க வேண்டும் என்பதைக் கூட அவனே உன் கையைப் பிடித்து இழுத்து அழைத்துச் செல்வான்.
அதை விட்டு விட்டு பின் பிழைப்பதற்காகவே பின் இறைவனை வைத்து பிழைத்துக் கொண்டிருந்தால்
நிச்சயம் கர்மாக்கள் உண்டு உண்டு உண்டு .
இதனால் பிறவிகள் உண்டு உண்டு உண்டு.
இறைவன் பெயரைச் சொல்லி ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாற்றாதே.
பொய்கள் எல்லாம் கூறி இவன் ஞானி போல் நடிப்பான் என்பேன்.
தான் தான் ஞானி தான் தான் சித்தன் தான் எண்ணுவதெல்லாம் சிறப்பு என்றெல்லாம் கூட மக்களை மயக்கி கடைசியில் பார்த்தால் அவன் கர்மா அவனை விட்டு விடாது.
பல நோய்களுக்கு ஆட்பட்டு பின் மறைந்து விடுகின்றான்.
ஆனால் அவனுடைய கர்மா பின் அவந்தனை அனுபவித்துவிட்டு இவன் பெயரை எவ்வாறு இவன் தன் யார் யார் மக்களுக்குச் சொன்னார்களோ இக் கர்மம் அவர்களுக்கும் சேர அவந்தனும் அழிந்து போவான் என்பேன்.
இதனால் கடைசியில் இறைவா இறைவா என்று வருவது நியாயமா
============================================================================
சித்தன் அருள் - 1044 - சிவபெருமான் வாக்கு, காசி!
20/10/21 பௌர்ணமி அன்று ஆதி சித்தன் சிவன் உரைத்த பொதுவாக்கு. இடம்: கங்கைகரை காசி.
காசி
காக்கும் சிவன்
ஈரேழு உலகத்தையும் காத்து அருளக் கூடிய நமச்சிவாயன் வாக்குகளை நாட்டுகின்றேன்.
இவைதன் காசிதன்னிலே!
காசி தன் பொருள் விளங்க காசி காசி எதனைக் குறிக்கின்றது?
காக்கும் சிவனே காசி என்பேன்.
இதனை மனிதர்கள் உணர வேண்டும் என்பேன்.
என்னிடத்தில் வந்து விட்டால் மற்றவையெல்லாம் யான் பார்த்துக்கொள்வேன் ஆனாலும் மனிதர்கள் தம் நிலையை அறிவதில்லை.
அறிவதில்லை பொய்யான பொய்யானவையே தேடித் தேடிச் சென்று கடைசியில் உண்மை என்ற பொருளை உணர்ந்து கொள்கின்றார்கள் பின்பு வருகின்றார்கள். ஆனாலும் அதனுள்ளே பல கர்மங்களை சேர்த்துக்கொண்டு சேர்த்துக்கொண்டு வருகின்றார்கள். அதனால் என்ன பயன்??
என்ன பயன்? என்னை அடைந்தாலும் சிறிது சிறிதாக முதலில் கர்மத்தையே நீக்குவேன் என்பேன்.
என்பேன் இதனால் சித்தர்களும் வருவார்களப்பா. இனிமேலும் நேரடியாகவே சில உபயங்களை தெரிவிப்பதற்கு.
காசி தன்னில் இப்பொழுது கூட இன்னொரு முறையும் உரைத்து விடுகின்றேன்.
காசி என்றால் காக்கும் சிவனே என்பேன்.
இதனையும் நன்குணர்ந்து. காசி தனில் என்னிடத்தில் வந்து விட்டால் யான் கர்மாவை போக்கி விடுவேன் அதி விரைவிலேயே.
ஆனாலும் நீ மனதார என்னை எண்ணி நல் முறையாய்
ஈசனே!
நமச்சிவாயனே!
யான் காசிக்கு ஒருமுறை வரவேண்டும் வரவேண்டும் நீதான் என்னை அழைத்துச் செல்ல வேண்டும் என்று வணங்கினாலே பணிந்தாலே போதுமானது.
யானே கையைப் பிடித்து அழைத்து வருவேன்.
ஆனால் மனிதனோ பின் அனைத்து கர்மாவும் செய்துவிட்டு காசியிலே நீராடினால் கருமம் தொலைந்துவிடும் என்கிறார்களே இது நியாயமா??
மக்களே மனிதர்களே மனித ஈனப்பிறவிகளே திருந்திக் கொள்ளுங்கள்.
தர்மங்கள் தானதர்மங்கள் செய்வதுண்டு மனிதர்கள் ஆனாலும் அதனை எதற்காக செய்கின்றார்கள் அதனை புரிந்து கொண்டு நல் முறைகளாக செய்தால் மட்டுமே தான தர்மங்களுக்கு பின் புகழ் உண்டு.
ஆனாலும் பின் இதை நினைத்து யான்தான் செய்தேன் யான்தான் செய்தேன் என்றால் நீயே செய்து கொள் உந்தனுக்கு.
தன் கடமையை பணி.
அவந்தன் கர்மாவும் நீ எடுத்துக்கொள்வாய் அதனால் உதவி செய்வதை யாராலும் எதனாலும் பின் எதனை என்றும் கூட உரைக்கக் கூடாது என்பேன்.
யான்(சிவன்) கூட பல மனிதர்களுக்கு உதவிகள் செய்கின்றேன்.
சொல்கின்றேனா??
கூறுங்கள் மனிதர்களே!
அதனால் உனக்கு இட்ட கட்டளை நீ சரியாக செய்து என்னிடத்தில் வந்து விடு இதுதான் நன்மையாக்கும் என்பேன்.
மற்றபடி விளம்பரங்கள் தேவையில்லை என்பேன்.
உண்மை பொருளுக்கு தேவையில்லை தேவையில்லை என்பேன்.
பொய்யான பொருளுக்கே விளம்பரங்கள் யான் பார்த்துக்கொண்டே இருக்கின்றேன் விளம்பரங்கள் என்ன தேவையா???
=============================================================================
சித்தன் அருள் - 1049 - அன்புடன் அகத்தியர் - பசுபதிநாத் ஆலய வாக்கு!
17/11/2021 அன்று பசுபதிநாத் ஆலயம் குறித்து குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு
வாக்குரைத்த ஸ்தலம். பசுபதிநாத் ஆலயம். காத்மாண்டு நேபாள்.
ஆதி ஈசனின் பொற்பாதத்தை தொழுது உரைக்கின்றேன் அகத்தியன்.
மனவருத்தங்கள் மனக்கஷ்டங்கள் இவையெல்லாம் இருக்கும் பொழுது எதனை என்று கூற எதனை என்று பின் படுத்த இவனை(பசுபதிநாதன்) சரணடைந்து விட்டால் அனைத்தையும் நீக்கி விடுவான்.
ஆனாலும் எதை என்று கூற சில மனிதர்கள் பின் இதை என்று கூற என்னால் போக முடியாது முடியாது என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள் ஆனால் அது தான் கர்மா என்பேன்.
அக் கர்மா இருக்கும் பொழுது நிச்சயம் இங்கு வரமுடியாது என்பேன்.
ஏன்? ஈசன் இங்கெல்லாம் தூரம் தூரமாய் சென்று சென்று ஸ்தலம் அமைத்து விட்டான் ?
ஏனென்றால் இவனை நாடி நாடி பார்த்தால்தான் கர்மங்கள் அழியும் மோட்சமும் கிட்டும் ஆனாலும் கர்மாக்கள் அழிய கர்மங்களும் அழிய விடுவதில்லை.
கர்மாக்கள் எவை என்று கூற மனிதர்களே பிழைத்துக் கொள்ளுங்கள்.
எங்கெல்லாம் பக்திகள் எங்கெல்லாம் ஈசனுடைய திருத்தலங்கள் இருக்கின்றதோ பின் பின் அங்கெல்லாம் சென்று வாருங்கள் நலமாகவே.
அங்கெல்லாம் சென்று தங்கி வர சில கர்மங்கள் விலகி ஓடும் இதனால் முக்தியும் கிடைக்கும் என்பேன்.
இங்கும் நல் விதமாகவே எவ்வாறு என்பதையும் கூட இங்கு பல சித்தர்கள் இன்னும் தங்கிக் கொண்டு தான் இருக்கின்றார்கள் சித்தன் நிலையைப் பெறுவதற்கு கர்மாக்களை அழிப்பதற்கு.
அதனால் கர்மாக்களை அழிக்கக்கூடிய சிறந்த திருத்தலங்களில் இவ்வாலயமும் ஒன்று.
இதனையும் அறிந்து பின் கஷ்டங்கள் பட்டு பட்டு வந்து விட்டால் இவன் தரிசனம் அனுதினமாக கொடுத்து பின் எங்கு? சென்றால் இவன் தன் கர்மா அழியும் என்பதை ஈசனே காண்பித்து விடுவான் சொல்லித் தந்து விடுவான்.
===============================================================================
சித்தன் அருள் - 1050 - அன்புடன் அகத்தியர் - முக்திநாத்/பசுபதிநாத்!
15/11/2021 அன்று குருநாதர் அகத்தியர் மற்றும் பிருகு மகரிஷி உரைத்த பொது வாக்கு
வாக்குரைத்த ஸ்தலம் முக்திநாத். நேபாள தேசம்.
பிருகு மகரிஷி வாக்கு
யானும் கூட இப்பொழுது இங்கு இருக்கின்றேன் என் அப்பன்களே
ஆனாலும் தெரிவதில்லை நாராயணனை அலைந்து திரிந்து ஓடோடி பார்த்தால் தான் கர்மங்கள் நீங்கும் ஆனால் இது மனிதர்களுக்கு தெரிவதே இல்லை.
ஏன்??? அங்கங்கே இருக்கும் திருத்தலங்களுக்கு ஏன் நாடவில்லை??? எதனால் என்பது கூட தெரிந்து கொள்ளுங்கள்.
கர்மா புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்ல விடாது என்பேன்.
பின் கர்மா இதனையும் அறிந்து பின் இறைவனை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வந்து விட்டால் அக் கர்மாக்களை இறைவன் ஏற்றுக்கொள்வான்.
அவர்களுக்கு நல்நேரம் இறைவனே கொடுப்பான்.
ஆனாலும் கர்மா விதிப்படி பின் கர்மா கர்மா என்றெல்லாம் இருக்கின்றார்களே மனிதர்கள் பின் எப்படி செல்லும்??
உதவும் குணம் இல்லை
தவறான எண்ணங்கள், போட்டி பொறாமைகள் இதுதான் மனிதனிடம் மிஞ்சி காணப்படுகின்றது.
இவ்வாறு இருக்க மனிதன் எவ்வாறு? நலமாக வாழ்வான்?
============================================================================
சித்தன் அருள் - 1051 - அன்புடன் அகத்தியர் - கோரக்கர் வாக்கு!
18/11/2021 அன்று கோரக்கர் சித்தர் உரைத்த பொதுவாக்கு! வாக்குரைத்த ஸ்தலம் : கோரக்கர்நாத் மந்திர், கோரக்பூர். உத்தரபிரதேசம்.
அண்ட சராசரங்களையும் படைத்துக் காக்குகின்ற பரமேஸ்வரனையும் பரமேஸ்வரியையும் பணிந்து கோரக்கன் செப்புகின்றேன்.
இக் கலியுகத்தில் மனிதர்கள் தீயவைகளுக்காகவே (யான் தயாரித்த போதை மயக்கத்திலேயே வைக்கும் மூலிகையை ) இதனையும் பின் ஏற்றம் மாற்றி ஏற்றம் ஏற்றி பின் பயன் படுத்துகின்றனர்.
ஆனாலும் அவர்களுக்கு பலமாக கர்மாக்கள் சேரும். சேரும் என்பதே உண்மை.
நீ செய்யும் கர்மம் நீ தான் அனுபவிக்க வேண்டும் என்பது விதி.
அதை தடுப்பதற்கு இவ்வுலகத்தில் மனிதர்கள் எவராலும் முடியாது முடியாது என்பேன்.
================================================================================
சித்தன் அருள் - 1054 - அன்புடன் அகத்தியர் - வைகுண்ட ஏகாதசி வாக்கு!
14/12/2021 அன்று ஏகாதசி திதியில் குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு.
ஆதி ஈசனின் பொற்பாதம் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.
சொல்கின்றேன் தீபங்கள் தீபங்கள் ஏற்ற ஏற்ற தெளிவுகள் பெருகும் என்பேன்.
ஆனாலும் மனிதனுக்கு தீபங்கள் எவ்வாறு ஏற்றுவது என்பதை கூட தெரியாமல் போய்விடுகின்றது.
பின் நவதானியங்கள் இட்டு அதன் மேலேயே தீபத்தை இடுதல் வேண்டும்.
அல்லது இவை என்று கூற பின் இதற்கு மேலும் பின் இவை என்று கூற பச்சரிசி இவை இவை என்று கூறு இருக்கும் பொழுது அதனை மாவாக இட்டு அதன் மேலே தான் தீபம் ஏற்ற வேண்டும்.
இவ்வாறு ஏற்றினால் தான் பின் இவை தன் உணர சில சில உயிரினங்கள் அதை உண்டு வர சில கர்மாக்கள் தொலையும் என்பேன்.
அவைதன் மகிழ்ச்சியும் இருக்குதப்பா அதனுள்ளே.
அவை மகிழ்ச்சியுற இவந்தனும்(தீபமேற்றும் பக்தன்) மகிழ்ச்சியாக இருப்பான்.
அதை தெரியாமல் தீபங்கள் ஏற்றிவிட்டால் மனக் குழப்பங்கள் மாறும் மாறும் என்பதெயெல்லாம் எல்லாம் பொய்யே அப்பா.
அப்பனே இதனையும் தெரிந்துகொண்டு இனிமேலும் இவ்வாறு இடுங்கள்.
இடுங்கள் என்பது மெய்யே.
அவை மட்டும் இல்லாமல் தீபங்கள் ஏற்றும் பொழுது எத்தனை தீபங்கள் ஏற்றுகின்றீர்களோ அத்தனை உயிருள்ள ஜீவராசிகளுக்கும் உணவு கொடுப்பது முக்கியம் என்பேன்.
இவ்வாறு கொடுத்தால்தான் சில நல் பல செய்திகள் இல்லம் தேடி வரும் நல்லவையும் நடக்கும் என்பேன்.
ஆனாலும் சில மனிதர்களுக்கு இவை தெரிவதே இல்லை என்பேன்.
பின் ஏதோ இதனை என்றும் தீபம் ஏற்றி விட்டால் அனைத்தும் நடக்கும் என்பது உறுதியாக பின் ஆனாலும் இவை தன் நடந்து விட்டாலும் பிற்பகுதியில் குறைவாகிவிடும்.
அதனால்தான் இவைதன் உணர்ந்து செய்ய வேண்டும் செய்ய வேண்டும் என்பேன்.
சூரியன் வருவதற்கு முன்பே எழுந்திருக்க வேண்டும்.
எழுந்திருக்க வேண்டும் .பிற உயிரினங்களுக்கு தானம் செய்ய வேண்டும்.
பின்பு பின் பலபல புலவர்கள் இயற்றிய திருநாமங்களையும் பின் சிவபுராணம் இவையன்று ராமாயணம் இவையன்றி கூற பலப்பல இதிகாசங்கள் உண்டு இவ்வுலகத்தில் என்பதைக்கூட புறநானூறு இவை தன் அகநானூறு இவை என்று உணர இன்னும் பல பல பல பல பதிகங்கள் ஓதி வருதல் என்பது கூட சிறப்பு.
பின்பு பின் இவை தன் உணர சூரியன் வரும் அப்பொழுது சூரியனை வழிபட்டால் இவ்வுலகம் எப்படி பின் சிறிது சிறிதாக வெளிச்சத்திற்கு வருகின்றதோ அப் போலவே மனிதன் வாழ்க்கையும் சிறிதுசிறிதாக வரும் பின் வெளிச்சத்திற்கு.
இவ்வாறு நடந்து கொள்ளாமல் இருந்தால் இன்னும் இருளிலேயே மூழ்கி விடுவான் மனிதன் என்பது மெய்யே.
திருமூலரின் உரையாடல்களை பின் ஓதி வருதல் அதிசிறப்பு.
இவையன்றி கூட அனுதினமும் இல்லத்தில் பின் கந்தசஷ்டி கவசத்தையும் பின் அதற்குப் பின்பு விஷ்ணு சகஸ்ர நாமத்தையும் லலிதாம்பிகை தேவி(லலிதா சகஸ்கரநாமம்) சரணத்தையும் ஓதி ஓதி வருவது பின் மனிதன் வெளிச்சத்திற்கு வருவான் என்பதே மெய்.
சொல்லிவிட்டேன் இதை சரி முறையாக பயன்படுத்தி வர பின் நல்லொழுக்கமாக வாழ்வீர்கள் என்பது மெய்யே.
=============================================================================
சித்தன் அருள் - 1055 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி/ஓதிமலை!
13/12/2021 இன்று குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு. வாக்குரைத்த ஸ்தலம். திருமலை திருப்பதி.
ஆதி ஈசனின் பொற் பாதத்தை பணிந்து உரைக்கின்றேன் அகத்தியன்.
இறைவா நீயே கதி என்று உணர்ந்து விட்டால் போதுமானது என்பேன் அப்பனே.
அனைத்தும் யாங்கள் செய்துவிடுவோம் அப்பனே.
(ஓதிமலையப்பன் சூட்சுமத்தை பற்றி அகத்தியர் 7/9/2021 அன்று உரைத்த ஜீவநாடி பாெதுவாக்கு
ஓதிமலையின் சூட்சுமத்தை இப்போது உரைக்கின்றேன். நல் முறைகள் ஆகவே நிச்சயமாய் நீங்கள் செல்லலாம் என்பேன். கார்த்திகை மாதத்தில் செல்லலாம் என்பேன். அங்கு பிள்ளையோனும் (பிள்ளையார்) முருகன் பின் ஐயப்பனும் சந்தோசமாக விளையாடுவார்கள். அப்பனே! அவ் சூட்சுமத்தை சொல்கின்றேன் அவர்கள் விளையாடும் இடத்தை கூட.
அப்பனே! இவ்வாறு எவ்வாறு இறைவன் எப்பொழுது வருவான் என்பது சீராக கவனித்து அங்கு சென்றால், பின் அவர்களும் பார்த்துவிட கர்மாக்கள் நீங்கும் என்பேன். ஆனால் மனிதனுக்கு இது புரியாமல் போய்விட்டது என்பேன். ஆனாலும் புண்ணிய செயல்கள் செய்யும் காரணத்தால் தானாகவே அதுபோன்று அமைவதும் உண்டு என்பேன்.
மூவரும் விளையாடும்பொழுது அப்பனே ஒரு மாதத்திற்கு முன்பு உரைக்கின்றேன் அப்பனே சென்று வாருங்கள் இன்னும் சிறப்பு.
முருகர், விநாயகர், ஐயப்பன் இணைந்து சந்தாேசமாக விளையாடக்கூடிய இடம் ஓதிமலை உச்சியில்.
ஓதிமலை உச்சியில் ஆலய சுற்றுபிரகாரத்தில். கார்த்திகை மாதத்தில் வரும் கடைசி சஷ்டி நாள்.
என்று குருநாதர் திரும்பவும் வாக்குரைத்திருந்தார்.
இவ்வருடத்தில் கார்த்திகை மாதத்தில் கடைசி சஷ்டி நாள் (09/12/2021 - வியாழன் அன்று)
சொல்கின்றேன் அப்பனே
நல் விதமாக இவை என்று கூற
அன்று கந்தன் அப்பனே ஐயப்பன் அப்பனே நல் விதமாகவே பின் இதனையும் அறிந்து பிள்ளையோனும்(பிள்ளையார்) நல்விளையாட்டாக விளையாடி பின் அனைவருக்கும் ஆசிகள் தந்துவிட்டார்கள். அன்றைய தினத்தில் அனைவருக்கும் ஆசிகளே.
இன்னும் மென்மேலும் சில சில வினைகளால் சில கஷ்டங்கள் ஏற்பட்டபின் இவர்களுக்கும் நல் விதமாகவே சிலசில கர்மங்களில் இருந்து நீக்கி விட்டான் பின் ஓதிமலையப்பன்.
பெருமாளுக்கு இவை யன்றி கூற இங்கே(திருமலை திருப்பதி) இருப்பான்.
மற்றொன்று அங்கேதான்(கோடகநல்லூர்) அவந்தனக்கு பிடித்த இடம்.
இன்னொன்றும் இருக்கின்றது அப்பனே நவதிருப்பதிகள் என்கிறார்களே அங்கெல்லாம் அப்பனே சனி தோறும் அவந்தன் ஒருநாள் வட்டம் விடுவான் என்பேன் அங்கு.
அவந்தனுக்கு பிடித்தமான ஒன்று ஸ்ரீவைகுண்டமும் ஒன்று. என்பதைப் போல் இன்னும் பன் பன் திருத்தலங்களும் இருக்க.
பின் உலகளந்த பெருமாள் இவையன்றி கூற காஞ்சியில் இருக்கின்றதே அவந்தனக்கு நல் விதமாக பிடித்தமான தலம் என்று கூறுவேன் அப்பனே.
இவ்வாறு அவந்தனக்கு பிடித்தாற்போல் பின் ஸ்தலங்களை நாம் தரிசிக்க தரிசிக்க கர்மங்கள் தீரும் என்பேன்.
அப்பனே இவையன்றி கூற அப்பனே நல் பூஜையில் யானே பெருமாளிடம் முறையிட்டு பின் சிறிது அப்பனே வானிலிருந்து மழை பொழிக என்று உத்தரவிட்டேன் அப்பனே.
நன்று எல்லோருக்கும் அப்பனே ஆசீர்வாதங்கள் அப்பனே இவ்வாறு என்பதையும் கூட அப்பனே இவ்வாறுதான் கர்மாவை தொலைக்க முடியுமே தவிர
அப்பனே எந்தனுக்கு அவை வேண்டும் இவை வேண்டும் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தால் நிச்சயம் கர்மாக்கள் தொலைக்க முடியாது என்பேன்.
அப்பனே இதனால் தான் சொல்கின்றேன். யானே சொல்கின்றேன்.
அப்பனே! அகத்தியா அகத்தியா எல்லாம் நீயே என்று சொல்லி இருங்கள்.
அப்பனே விதியை மாற்றும் தகுதி அப்பனே யானே படைத்திருக்கின்றேன். அப்பனே.
============================================================================
சித்தன் அருள் - 1056 - அன்புடன் அகத்தியர் - கந்தன் வாக்கு!
சித்தன் அருள் - 1056 - அன்புடன் அகத்தியர் - கந்தன் வாக்கு!
20/11/2021 கார்த்திகை தீப இரண்டாம் நாள் அன்று குருநாதர் அகத்தியர் /பிருகு மகரிஷி உரைத்த பொது வாக்கு
வாக்குரைத்த ஸ்தலம். திருவண்ணாமலை
ஆதி பரம் பொருளை மனதில் எண்ணி துதித்து பாடிட்டு உரைக்கின்றேன் அகத்தியன்.
ஏனென்றால் அப்பனே சிறுபிள்ளைத்தனமாக நீங்கள் கேட்பதை நான் இது நல்லவையா? கெட்டவையா? என்பதை யோசித்து தான் கொடுக்க வேண்டும்.
பெற்றவளுக்கு தெரியும் பின் பிள்ளைக்கு என்னென்ன தரவேண்டும் என்று.
ஆனாலும் அப்பனே அதன்மூலம் கர்மா வரக்கூடாது என்பேன்.
ஆனாலும் அப்பனே கர்மத்தை அனுபவிக்காமல் அனைத்தும் கொடுத்து விட்டால் அனைத்தும் வீணாகிவிடும்.
அதனால்தான் அப்பனே கர்மத்தை அனுபவித்தோடு அப்பனே நலன்கள் உண்டு என்பேன்.
ஆனாலும் அப்பனே இன்னும் ஒரு சூட்சுமத்தை சொல்லுகின்றேன் இவ் கர்மாக்களை அழிக்க எவராலும் முடியாது என்றேன்.
ஈசனால் மட்டும் என்னால் மட்டுமே முடியும் என்பேன்.
ஆனாலும் மற்றவையெல்லாம் பரிகாரம் பரிகாரம் என்று தேடிக் கொண்டு சென்றாலும் அப்பனே கர்மாவை அழிக்க முடியுமா???
இவையன்றி கூற
அப்பனே தரிசனங்கள் பலப்பல பார்த்துள்ளீர்கள் ஈசனை.
ஆனாலும் ஈசன் மனது வைத்தால் தான் கர்மம் நீக்க முடியும் என்பேன்.
இவ்வுலகத்தில் இன்னொரு சூட்சுமத்தையும் சொல்லுகின்றேன்.
கர்மா நீக்கவேண்டும் என்றால் ஈசனே முடிவெடுக்க வேண்டும் என்பேன்.
அப்பனே இவ்வுலகத்தில் "மன்னன்" ஈசனே! என்பேன்.
அப்பனே
காத்தல்
அழித்தல்
படைத்தல் இவ் மூன்றும் ஈசனுக்குத்தான் சொந்தம் என்பேன்.
இதனை அவன் ஆக்கியும் கொள்ளலாம் அழித்தும் கொள்ளலாம். படைத்தும் கொள்ளலாம் அப்பனே.
அப்பனே இவையன்றி கூற அதனால்தான் அப்பனே
ஈசனை வணங்குவதற்கும் "பயம்" வேண்டும் என்பேன் .
பயத்தோடு வணங்கினால் மட்டுமே அப்பனே அதுமட்டுமில்லாமல் அன்போடு வணங்கினால் மட்டுமே ஈசன் கருணை உள்ளவன்.
அதனை விட்டுவிட்டு அனைத்தும் செய்துவிட்டு இதனை (அண்ணாமலையே) வணங்கினால் ஈசனே அழித்து விடுவான்.
இது யாருக்கும் தெரிவதில்லை மனிதர்களுக்குகூட.
பிருகு மகரிஷி உரைத்த வாக்கு.
===============================
அகத்தியன் வாக்கும் அப்பனே தெரியும் உந்தனுக்கு!
அகத்தியன் ஒரு வாக்கை கொடுத்துவிட்டால் அப்பனே அதை காப்பாற்றியே தீருவான் அப்பனே.
ஆனாலும் கர்மா நிலை இருந்தாலும் அப்பனே சோதனைகள் இருந்தாலும். அவந்தன் மனநிலையை எப்படி என்று ஆராய்ந்து ஆராய்ந்து பிரம்மாவிடமே சண்டையிடுவான் மனிதர்களுக்காக.
============================================================================
சித்தன் அருள் - 1058 - அன்புடன் அகத்தியர் - ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம்!
6/12/2021 அன்று குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு.
வாக்குரைத்த ஸ்தலம்: ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம்., கொத்தகுரிக்கி அருவிக்கரை, பண்டப்பள்ளி. கிருஷ்ணகிரி மாவட்டம்.
ஆதி பகவானின் பாதம் போற்றி போற்றியே பணிந்து உரைக்கின்றேன் அகத்தியன்.
அப்பனே நல் விதமாக இன்னும் பல சூட்சமங்கள் உண்டு இவ்வுலகத்தில் அப்பனே.
மறைந்து கிடக்கும் பொருள்களெல்லாம் அப்பனே ஈசனே வெளிக்காட்டுவான் என்பேன்.
அங்கெல்லாம் சென்று தரிசித்தால் அப்பனே "நலமே...!!.
எண்ணற்ற கோடி பிறவியில் செய்த கர்மாக்கள் ஒழியும் என்பேன்.
இப்படித்தான் அப்பனே பல மனிதர்கள் அப்பனே பல நூற்றாண்டுகளுக்கு பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பிருந்தே அப்பனே வழிபட்டு வழிபட்டு கர்மாக்களும் விலகி ஓடி பின் நல் மனதாய் வாழ்ந்து வந்தார்கள் அப்பனே.
இன்னும் பல திருத்தலங்கள் இருக்கின்றன அப்பனே.
ஒவ்வொன்றாக ஒவ்வொரு முறையும் கூறுகின்றேன் அப்பனே.
இவ்வாறு செல்லச் செல்ல அப்பனே ஆன்மா பலன்கள் அதிகரிக்கும் அப்பனே நல் விதமாக கர்மங்கள் தொலையும் அப்பனே உடலிலுள்ள தோஷங்கள் எல்லாம் நீங்கும் .
அப்பனே நல்விதமாக உடம்பு நல் குளிர்ச்சி பெற்று அப்பனே ஒரு அரசனைப் போன்று உடம்பு வலிமை பெறும் என்பேன்.
இதனால் அப்பனே இன்னும் பல திருத்தலங்கள் மறைந்து கிடக்கின்றது அப்பனே அவையெல்லாம் சொல்கின்றேன் வரும் காலங்களில் அப்பனே.
அங்கெல்லாம் சென்று அமர்ந்து வந்தால் போதுமானது அப்பனே.
தானாகவே ஓடிடும் கர்மாக்கள் அப்பனே.
பல சித்தர்களும் யோகிகளும் தவம் செய்த இடத்திற்கு சென்றால் அப்பனே ஆன்மா பலம் மேலோங்கும் என்பேன்.
அப்பனே கர்மா பலன் நீங்கி நீங்கி அப்பனே நல்லொழுக்கத்துடன் வாழ்வார்கள் அப்பனே.
=============================================================================
சித்தன் அருள் - 1060 - அன்புடன் அகத்தியர் - குருநாதர் வாக்கு!
25/12/2021 அன்று குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு !
வள்ளி தெய்வானையோடு அன்பாக அமர்ந்திட்ட ஐயன் பாதம் போற்றி போற்றியே பணிந்து அகத்தியன் செப்புகின்றேன் வாக்குகள்.
அப்பனே நல்லாசிகள் அப்பனே அனைவருக்கும்.
அப்பனே இன்னும் பல கலியுகத்தில் எவ்வாறு எவ்வாறு நடைபெறும் என்பதையும் கூட தீங்குகளே பலமாக இருக்கின்றது அப்பனே.
அப்பனே முக்கால் பங்கு கர்மங்கள் அப்பனே முக்கால் பங்கு தீயவையே நடக்கும் என்பது விதியப்பா. கலியுகத்தில் ஆனாலும் கால்பங்கு அப்பனே இவையும் அப்பனே நல்லவை ஆனாலும் கர்மத்தினை மாற்றுவதற்கு மனிதர்கள் நீங்கள் உங்களிடத்தில் இருக்கின்றன.
=============================================================================
சித்தன் அருள் - 1063 - அன்புடன் அகத்தியர் - சுசீந்திரம் ஸ்தாணுமலையான்!
30/12/2021 அன்று குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு. வாக்குரைத்த ஸ்தலம். சுசீந்திரம் தாணுமாலயன் திருக்கோயில்.
ஆதி சிவசங்கரியின் பொற்பாதத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.
தன் ஒழுங்காக பயன்படுத்தி விட்டால் இறைவனை நேரில் தரிசிக்கும் பாக்கியம் இக்கலியுகத்திலே கிடைக்கும் என்பேன்.
அதனால் அதற்குரிய தகுதிகள் மனிதன் பின் படைத்துக் கொள்ள வேண்டும் என்பேன்.
ஆசைகள் மனிதனை விட்டு விட்டதா??
ஆசைகள் தான் பலத்த மனங்களால் கர்மாக்களை ஈர்த்துக் கொண்டு தான் இருக்கின்றது.
ஆனாலும் இறைவனை பக்தியோடு வணங்குகின்றார்களே தவிர அவர்களுக்கு ஆசைகள் பல பல என்பேன்.
இறைவனிடத்தில் தன் ஆசைகளுக்காகவே அனைத்தும் கேட்டுக்கொண்டு பின் செல்கின்றான்.
இறைவன் எப்படி தருவான்??
உறுதிப் படுத்திக் கொண்டே இருக்கும் கர்மங்கள் நிறைந்த பூமி இது.
பூமி இது கர்மங்களிலும் எதனையும் என்றும்கூட கடலில் பின் நீந்திக் கொண்டு இருக்கையில் எப்படி மனிதன் தேறுவான்??
இறைவா! இறைவா! என்று அழைத்துக் கொண்டிருந்தால் அக் கடலில் நீந்தி கொண்டிருப்பவனை யாங்களே தள்ளி விடுவோம்.
ஆனாலும் மனிதன் யாங்கள் நீந்துவோம் என்றுதான் தானாகவே கர்மத்தில் விழுகின்றான்.
எப்படி மனிதர்கள்??!!! இதனைத்தான் அப்பனே மனிதன் திருந்துவதாக இல்லை.
=============================================================================
சித்தன் அருள் - 1065 - அன்புடன் அகத்தியர் - திருச்செந்தூர் அழகன் வாக்கு!
31/12/2021 அன்று கந்தன் உரைத்த பொதுவாக்கு. வாக்குரைத்த ஸ்தலம். திருச்செந்தூர் செந்தில் கோட்டம்.
புவியை ஆள வந்த என் தாய் தந்தையினை மகிழ்ந்து மகிழ்ந்து சொற்களாக பரப்புகின்றேன் அழகனவன்.
பூசைகள் வரும் அளவிற்கும் கூட அன்பு இல்லை.
அன்பு இல்லை பூசைகள் செய்தால் இவை தன் வரலாற்றில் கர்மத்தை தன் அழிக்க முடியும் என்பது மனிதனின் எதிர்பார்ப்பு.
எதிர்பார்ப்பு பொய்யாகிவிடும் என்பேன்.
கலியுகத்தில் கலியுகத்தில் எதனையும் என்று நிரூபிக்கும் அளவிற்கு மந்திரங்களும் பலிக்காது தந்திரங்களும் பலிக்காது. எங்கள் அருள் இருந்தால்தான் அனைத்தும்.
ஆனாலும் பொய்யான மனிதனோ மந்திரத்தால் அது வரும் இவைதன் இப்படி வரும் இப்படி செய்தால் அப்படி வரும் என்பதெல்லாம் பொய்யே!!!
பொய்யே! ஆனாலும் அதை அதை தன் கர்மத்திற்கு ஏற்றவே சொல்லிக்கொண்டுதான் வந்து கொண்டிருக்கின்றான்.
ஆனாலும் பல நூல்களில் மந்திரங்கள் இருக்கின்றன எதற்காக ??பயன்படுத்த வேண்டும் ??எப்படி உரைக்க வேண்டும்?? என்பதை கூட தெரியாமல் சொல்லி விடுகின்றான் இதனால் மந்திரங்கள் நலம் தருமோ? என்று எண்ணி.
ஏமாற்றிப் பிழைப்பு நடத்துகின்றாயே!! அப்பனே இவை எல்லாம் வேண்டாம்.
வேண்டாம் இப்பொழுது தெரியும் பின் நலன்கள் ஆக. நலன்கள் ஆக நாம் பிழைத்துக் கொள்ளலாம் என்று.
ஆனாலும் இதில் கர்மா அடித்ததென்றால்? குடும்பத்தில் ஒருவர் கூட நன்றாக உள்ளார்கள் என்பதுகூட ஆச்சரியமான விஷயமே.
உண்மை என்பதை கூட கர்மத்தால் வந்த வினையை கர்மத்தால் அழிக்க முடியும். என்பதுதான் நிச்சயமான உண்மை.
புண்ணியங்கள் செய்யடா செய்தாலே போகும் என்பது உண்மை தான்.
தான் தான் செய்த கர்மத்தால் தானே அனுபவிக்கின்றான்.
பக்தி பக்தி என்று கூட திருத்தி கொண்டிருக்கின்றானா?? என்பது கூட பொய் இவ்வாறு கர்மத்தால் பல கர்மங்கள் பொய் பித்தலாட்டம் இவை தன் உணர்ந்து உணர்ந்து மனிதநேயத்திற்கு பார்த்தால் விருப்பம் உண்டா? இல்லை
ஆனாலும் வருவார்கள் திருடர்கள் தான் வருவார்கள்.
ஆனாலும் திருடனாக வந்து உட்கார்ந்து இவைதன் உணர ஆனாலும் அவ் பக்தன் இதை உணர மாட்டான்.
உணர மாட்டான் என்பேன்.
அனைத்தும் செய்வான் என்பேன் அவ் மனிதர்களுக்கு.
ஆனால் வந்தது அவ் மனிதர்களிடமிருந்து கர்மங்கள் இவனை சேர்த்துக் கொண்டது.
ஆனாலும் இவந்தனக்கு தெரியாமல் தெரிவதே இல்லை.
ஆனாலும் இவந்தன் பக்தனாக பொய் சொல்லிக்கொண்டு பணத்திற்காகவே செய்வான்.
அவ் கர்மங்கள் இவந்தனுக்கு வந்தால் அடியோடு அழிந்து விடுவான்.
பின்பும் சுமக்க வேண்டிய நிலையில் தன் பிள்ளைகள் உற்றார்கள் உறவினர்கள் அனைவருக்குமே அக் கர்மங்கள் வந்து சேரும் அனைவரையும் அழித்து விடும்.
கர்மங்கள் பலவகையிலும் மனிதனுக்கு ஆட்டுகின்றது கலியுகத்தில்.
அவ் பாவத்தை கழிக்க வேண்டுமென்றால் பின் முதலில் .
""அமைதியாக தியானம்!!! ""இறைவனை வணங்குதல்!
=============================================================================
சித்தன் அருள் - 1066 - அன்புடன் அகத்தியர் - மௌனகுரு ரெட்டி ஜீவசமாதி வாக்கு!
சமீபத்தில் குருநாதர் அகத்தியர் மௌனகுரு ரெட்டி சித்தர் சுவாமிகள் ஜீவ சமாதியில் உரைத்த பொது வாக்கு
பாகம் 1
வாக்குரைத்த ஸ்தலம்: மௌன குரு ரெட்டி சித்தர் சுவாமிகள் ஜீவசமாதி கட்டங்குடி அருப்புக்கோட்டை
ஆதி சித்தனை மனதில் எண்ணி வாக்குகள் செப்புகின்றேன் அகத்தியன்
அன்னதானங்கள் தொடர்ந்து செய்ய செய்ய கர்மங்கள் ஒழியும். பரிகாரம் என்று ஒன்று கூட தேவையில்லை.
கர்மாக்கள் இறைவனால் நீக்கமுடியும் என்பேன்.
புண்ணியத்தை நீக்கமுடியாது என்பேன்.
அதனால் புண்ணியம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
புண்ணியம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
புண்ணியத்தை சேர்த்துக் கொண்டால்
இறைவனாலயே ஒன்றும் செய்ய இயலாது என்பேன்.
யாங்கள் சொல்லிக் கொண்டே இருக்கின்றோம்.
புண்ணியங்கள் செய் புண்ணியங்கள் செய் என்று.
ஆனால் மனிதனோ யாங்கள் கர்மங்கள் செய்வோம் கர்மங்கள் செய்வோம் என்று தான் போய்க் கொண்டு இருக்கின்றான்.
அக் கர்மா பாதையில் சென்றால் பின் பிறவிகள் பிறவிகள் என்று எடுத்துக்கொண்டாகவேண்டும் என்பது நிலைமை. இப்பொழுது பாருங்கள் நீங்களே!!! யாரிடமிருந்து பிறவி ஏற்படுகிறது?? என்று.
நிலைமை மாறுவதற்கு புண்ணியங்கள் தான் அவசியம்.
அவை எவ்வாறு என்று கூட மனிதனுக்கு தெரியும் அதை பயன்படுத்தி கொள்ளுங்கள் என்பேன் கொள்ளுங்கள் என்பேன் அப்பனே அப்பொழுது கூட இறைவன் உங்கள் வாழ்க்கையையே மாற்றி விடுவான் இதுதானப்பா உண்மை.
அப்பனே கர்மாக்கள் செய்துகொண்டே இருந்தால் அப்பனே எவ்வாறு என்பதையும் கூட தெரியும் அளவிற்கு சொல்கின்றேன் ஒன்றை.
இவ்வாறு செய்து கொண்டிருந்தால் அவன் நன்றாகத்தான் இருப்பான் ஆனால் அப்பனே அவன் குலமே அழிந்துவிடும் என்பேன் கடைசியில்.
அப்பனே நல் முறைகளாக நல் முறைகளாக உயிரோடு இருப்பவர்களுக்கு எதற்காக?? மோட்சதீபம்?? மோட்ச தீபம் ஏற்றுவதால் கஷ்டங்கள் தான் ஏற்படும் இதனையுமன்றி கர்மாவின் பாதையை தேர்ந்தெடுக்காதீர்கள். அப்பனே மனிதனுக்குத் தெரியும் மோட்சதீபம் வீட்டில் ஏற்றக்கூடாது என்று அப்பனே நிச்சயம் சொல்கின்றேன் மோட்ச தீபத்தை ஏற்றினால் கஷ்டங்கள் தான் நீங்கள் படவேண்டும் உறுதியாகச் சொல்கிறேன் உங்களுக்கும் தெரிந்திருக்கும் நீங்களும் உணர்ந்திருப்பீர்கள் அப்பனே மோட்ச தீபம் ஏற்றினால் என்ன லாபம்? என்று.
குருவே இறந்தவர்களின் புகைப்படத்தை வைத்து வணங்கலாமா??
அம்மையே இவை எவ்வாறு நீ கூறலாம் என்பேன் ??
அம்மையே இப்பொழுது இறந்திருப்பவன் அவந்தன் பிறவியை எவ்வாறு கர்மத்தை சேர்த்திருந்தால் மறு உடம்பில் நுழைவான் பின் மறு உடம்பில் நுழைந்தாலும் மீண்டும் பிறப்புகள் எடுத்து விடுவானே இது என்ன? கேள்வி.
=============================================================================
சித்தன் அருள் - 1068 - அன்புடன் அகத்தியர் - மதுரை சக்தி மாரியம்மன் கோவிலில் வாக்கு!
வாக்குரைத்த ஸ்தலம். அகத்தியர் சன்னதி மாரியம்மன் கோயில் . பசுமலை. மதுரை.
ஆதி ஈசனின் பொற் பாதத்தை தொழுது உரைக்கின்றேன் அகத்தியன்.
நலன்களே என் அருள்களால் நலன்களே மிஞ்சும் என்பேன்.
மிஞ்சும் என்பேன் யான் வாரத்திற்கு ஒருமுறை இங்கு தங்கி தங்கி செல்கின்றேன் .
பின் அவ் நாளும் நல் பின் முறைகளாக உரைக்கின்றேன்.
பின் குருவாரம்(வியாழக்கிழமை) என்கிறார்களே . அவ் வாரத்தில்(கிழமையில்) யான் நல் முறைகள் ஆகவே தங்கித் தங்கி சென்றிருக்கையில் பின் அப்பொழுது கூட அனைவரும் நல் முறைகளாக வந்தார்கள் பல. பல என்பேன் அதனால் பல பல பேர்களுக்கும் நல் முறைகளாக ஆசிகள் தந்து கொண்டேதான் இருக்கின்றேன்.
மேன்மைகள் பெறும்.
ஆனாலும் சில கஷ்டங்கள் வந்து வாட்டுவதற்கும் எவ்வாறு என்ற புரிதல் நிலைக்கு ஏற்றவாறு அன்றைய தினத்தில் நல் முறைகளாக இங்கு அமர்ந்து வந்து துயிலெழுந்து சென்றுவிட்டால் ஆனாலும் சென்று விட்டு நல் முறையாய் பின் ஒரு மாதத்திற்கு இயலாதவர்களுக்கு அன்னம் அளித்து வந்தால் என்னுடைய அருளாசிகள் பலம். கர்மங்கள் அனைத்தும் விலகிப் போகும்.
நினைத்த காரியத்தை நினைத்த படியே நல் முறைகளாக சொல்கின்றேன் இப்பொழுது பக்கத்தில் உள்ள ஒரு மரம் இருக்கின்றதே அம் மரத்தை 108 முறைகள் சுற்றி நல் முறைகள் ஆகவே அன்னத்தை நல் முறைகள் ஆகவே இவையன்றி கூற பின்பு அரை(24+12=36) இதிலும் பாதிகூட்ட நல் முறைகளாக முப்பானாறு பேர்களுக்கு(36 நபர்களுக்கு) நல் முறைகளாக அன்னதானம் இவை இட்டு வந்தாலே தன் கர்மங்களும் கழியும் என்பேன்.
=============================================================================
சித்தன் அருள் - 1070 - அன்புடன் அகத்தியர் - சுப்பா ஞானியார் சுவாமி ஜீவசமாதி, அருப்புக்கோட்டை!
சமீபத்தில் குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு. வாக்குரைத்த ஸ்தலம் சுப்பா ஞானியார் சுவாமி ஜீவசமாதி அருப்புக்கோட்டை.
ஆதி சிவசங்கரியின் பொற்பாதத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.
சித்திரை வைகாசியில் நிச்சயம் இவந்தன் நல் முறைகளாகவே இவ் நல் முறைகளாக இதில் பாதியும் அதில் பாதியும் நல் முறைகள் ஆக சித்திரையில் கடைசி வைகாசியில் முதலில் நிச்சயமாய் இவன் இங்கு சுற்றி வருவான் என்பேன்.
(சித்திரை கடைசி 15 நாட்கள் வைகாசி முதல் 15 நாட்கள் = ஒரு மாதம்)
அதனால் இங்கு தங்குவது அனைத்து கர்மாக்களையும் நீக்கும் என்பேன்.
அப்பனே நல் முறைகளாய் இத்தலத்தில் அப்பனே பெருமைகள் என்னென்ன?? கூறுவது!!!
அப்பனே இங்கு பல கர்மாக்களை அழிக்கலாம் அழித்துவிடலாம் என்பேன்.
அப்பனே தொடர்ந்து நல் முறைகளாய் இங்கு கூட பின் ஓர் மண்டலம் பின் உறங்கச் சென்றால் அனைத்து கர்மங்களும் நிச்சயம் விமோசனம் அடையும் என்பேன்.
ஆனால் அது நடக்காத காரியம் என்பேன்.
அப்பனே எவ்வாறு என்பதைக் கூட அவன் கர்மா அவை போன்று இருக்கும் பொழுது நிச்சயம் வரமுடியாது தான் என்பேன் யானும் கூட .
அப்பனே நல்முறைகள் ஆகவே இவ்வாறு சில ஜீவசமாதிகள் நாடி நாடி செல்ல வேண்டும் என்பேன்.
இவ்வாறு சென்றால் தான் நம்தனக்கும் சில கர்மாக்கள் விலகும் என்பேன்.
ஆனாலும் "பாத்திரமறிந்து பிச்சையிடு"!!! என்று சொல்கிறார்களே. வருகிறதா!!! ஞாபகத்திற்கு!!!
அதனைப் போன்று தான் மகன்களே நல் முறைகள் ஆகவே எப்போது எதை தொழ வேண்டும் என்று தொழுதால் நிச்சயம் கர்ம வினை நீங்கும் என்பேன்.
இவன் நிச்சயமாய் ஒர் மாதம் இங்கே உறங்குவான். வெளியில் சுற்றுவான். பின் இதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.
==============================================================================
சித்தன் அருள் - 1072 - அன்புடன் அகத்தியர் - கைலாயநாதர் ஆலயம், பள்ளித்தெரு கிராமம், ஆம்பூர் வட்டம்!
வாக்குரைத்த ஸ்தலம்:-
அருள்மிகு உமாமகேஸ்வரி உடனுறை கைலாயநாதர் ஆலயம், பள்ளித்தெரு கிராமம், ஆம்பூர் வட்டம், திருப்பத்தூர் மாவட்டம்.
ஆதி சித்தனை மனதில் எண்ணி வாக்குகள் உரைக்கின்றேன் அகத்தியன்.
அப்பனே மிகவும் சக்தி வாய்ந்த ஸ்தலம் இது.
இவை என்று கூற இத்திருத்தலத்தில் இத்திருத்தலத்திற்கு வந்து அப்பனே தங்கி உறங்கி செல்பவர்களின் பின் தீவினைகள் அகன்று போகும் பவுர்ணமி நாளில் பின் இங்கு சிவ புராணத்தையும் கோளாறு பதிகத்தையும் பின் எவை என்று உணர 108 முறை ஓதி பின் அதனை நிர்வகித்து அமைதி காக்க பின் உடனே பின் திருமணம் கைகூடும்.
பின் கர்மங்களும் சிறிது சிறிதாக அகலுமப்பா.
இறைவனே கதி என்று நினைத்துவிட்டால் அப்பனே ஞானியர்களும் சித்தர்களும் இதற்கு மாற்றாக பின்பு எங்கு அழைத்துச் செல்ல வேண்டுமோ? அங்கு அழைத்துச் சென்று பின் கர்மாவையும் அழித்து விட்டு பின் மோட்ச கதியை அடைவார்கள் என்பதே திண்ணம் அப்பனே.
குறைகள் கொள்ளாதீர்கள்.
=============================================================================
சித்தன் அருள் - 1073 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் தரும் "கடைசி வாய்ப்பு"!
17/01/2022 அன்று பௌர்ணமி திதியில் குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு.
ஆதி சிவனின் திருத்தாள் போற்றி!!!! போற்றியே!! உந்தனை பணிந்து உரைக்கின்றேன் அகத்தியன்.
அப்பனே நீயும் முயற்சி செய்து அப்பனே உன்முயற்சியால் செய்த தர்மங்கள் தான் கடைசி வரையில் வரும் தர்மம் தலை காக்கும்.
அப்படி இல்லாமல் அப்பனே அனைவரிடமும் இருந்து பெற்று அப்பனே செய்தால் கர்மம் தான் உன்னை பிடித்துக் கொள்ளும்.அப்பனே.
தெரிந்துகொள்ளுங்கள் அப்பனே தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள். அப்பனே.
=============================================================================
சித்தன் அருள் - 1076 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமானின் அருள்வாக்கு!
அப்பனே மனிதர்கள் பணம் ஈட்டுவதற்காக பலவழிகளிலும் தொழில் செய்து ஈட்டுகின்றனர்.
அவ் தொழில்களில் முறையாக நேர்மையாக நடந்து பின் சம்பாதித்து வாழ்தல் வேண்டும்.
ஏழையின் வயிற்றில் அடித்து வாழ்வது சிறப்பாகாது. அது கடைசியில் பெரும் கர்மங்கள் ஆக மாறி விடும்.
அப்பனே அனைவரும் எப்படி எப்படியோ சம்பாதிக்கிறார்கள் அவர்கள் அனைவரும் நன்றாக தான் இருக்கின்றார்கள் என்று யாரும் நினைக்க கூடாது.
இதிலும் கூட சூட்சமங்கள் உள்ளது.
உங்கள் மனசாட்சிக்கு எதிராக எதையும் செய்யக் கூடாது என்பேன்.
அப்படி செய்தால் அப்பனே பின்வருவது பாவக் கணக்கில் என்பேன்.
விதி தன்னில் அப்பனே பின் அவரவர் செய்த பின் கர்மத்திற்கு தண்டனை அனுபவித்து ஆக வேண்டும் என்பதே .
அப்பனே இதை எவை என்று கூற குருவும் தடுக்க முடியாது என்பதே இயல்பு அப்பனே.
அப்பொழுது குரு சொன்னான்.
அப்பனே நீ செய்த கர்மாப்பா!! என்று கூட.
ஆனாலும் குருவோ நல் விதமாக பக்கத்தில் அமர்ந்து இருக்கின்றவனை அவனின் கர்மாக்களை நீக்கலாம் ஆனால் ஏன் நீக்கவில்லை என்று கூட நீங்கள் நினைக்கலாம்.
அவரவர் செய்கின்ற கர்மாக்களை அவரவர் அனுபவித்தே தீரவேண்டும்.
அப்பனே இவையன்றி கூற மனிதன் நினைத்தால் அனைத்தும் நிறைவேறும் என்பேன். நிச்சயம் நேர்மையாக நடந்தால் அனைத்தும் சாதிக்க முடியும் என்பேன்.
அப்பனே அவரவர் செய்த வினைகளுக்கு அவரவர் கஷ்டப்பட்டே தீரவேண்டும் அப்பனே.
அப்பனே நிச்சயம் இவ்வுலகத்தில் நல்விதமாக ஒன்றை மட்டும் சொல்கிறேன்
கர்மத்தை செய்தால் நிச்சயம் கர்மத்தை அனுபவிக்க வேண்டும்.
புண்ணியங்கள் செய்தால் அதற்குரிய பலன்கள் நிச்சயம் அனுபவிக்க வேண்டும் அப்பனே.
ஒன்றை மட்டும் சொல்கின்றேன் அப்பனே சித்தர்கள் வந்து அப்பனே எவ்வாறு என்பதையும் கூட அப்பனே சித்தனை வணங்கி வணங்குவதற்கும் தகுதிகள் வேண்டும் அப்பனே.
அது எவ்வகை தகுதியென்றால் அப்பனே எந்தனுக்கு ஏதும் தேவையில்லை என்று வந்துவிட்டால் அப்பனே யாங்கள் கொடுப்போம் அனைத்தும் கூட.
அதை யாராலும் தடுக்க முடியாது அப்பனே.
இதைத்தான் இனிமேலும் யாங்கள் செய்யப் போகின்றோம்.
பொறுத்திருந்து பாருங்கள்.
=============================================================================
சித்தன் அருள் - 1077 - அன்புடன் அகத்தியர் - அருள்மிகு உமாமகேஸ்வரி உடனுறை கைலாசநாதர் ஆலயம்!
24/1/2022 அன்று குருநாதர் அகத்தியர் அருள்மிகு உமாமகேஸ்வரி உடனுறை கைலாசநாதர் ஆலய திருப்பணி குறித்து திருப்பணி குழுவினருக்கு உரைத்த மறு வாக்கு./ மற்றும் உலகத்திற்கு உரைத்த பொது வாக்கு.
வள்ளி தெய்வானையோடு அன்பாக அமர்ந்திட்ட ஐயன் பாதம் போற்றி !!போற்றியே!! செப்புகின்றேன் அகத்தியன்.
அப்பனே மனிதனிடத்தில் பணங்கள் சேரும் ஆனாலும் பிரயோஜனம் இல்லை என்பேன் அப்பனே.
பணங்கள் சேரும்பொழுது அப்பனே பல வழிகளிலும் கர்மாக்களை சேர்த்து அப்பனே அவையன்றி கூற எதனையும் என்று கூற பணங்கள் எத்தனை எத்தனை விதமான பணங்கள் அப்பனே.
பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் வந்துவிட்டேன் புவியுலகில் அப்பனே.
தரித்திர மனிதர்கள் என்பேன் அப்பனே.
எங்களை தவறாக பயன்படுத்தி அப்பனே பொருளீட்டி அப்பனே வசதி படைத்து விட்டார்கள்.
ஆனாலும் அவர்களுக்கும் கர்மங்கள் என்று தெரியவில்லை அப்பனே.
நிச்சயம் யாங்கள் இக்கலியுகத்தில் அவர்களுக்கும் தண்டனை கொடுத்துக் கொண்டு வருகின்றோம். அவ் தண்டனைகள் பார்த்தால் அப்பனே பின் அதிர்ச்சிகள்.
அகத்தியன் பெயரைச்சொல்லி ஏமாற்றி கொண்டோம் அகத்தியன் என்ன பார்க்கத்தான் போகின்றானா?? என்ன?? பார்க்கவா போகின்றான்??? என்றெல்லாம் கூட என்னை வைத்து அப்பனே பொருளீட்டி விட்டார்கள்.
ஆனால் அது ""கர்மா ""என்று அவந்தனக்கு தெரியவில்லை அப்பனே.
அவன் அவன் கர்மா அவந்தன்.. அவன்தான் அனுபவிக்க வேண்டும் என்பேன் அப்பனே.
=============================================================================
சித்தன் அருள் - 1081 - அன்புடன் அகத்தியர் - குருநாதருடன் ஒரு அனுபவம்!
மனித ரூபத்தில் யான் உன்னிடத்திலே எவ்வாறு என்பதையும் கூட வருவேனப்பா.
வருவேனப்பா அடிக்கடி என்பேன்.
அப்பனே இவைபோன்று அப்பனே மனிதர்கள் செய்தாலே போதுமானது அப்பனே. யான் அப்பனே வந்து அப்பனே சில கர்மங்களை எடுத்து விட்டு செல்வேன் அப்பனே. ஆனாலும் இதை மனிதர்கள் யாரும் உணர்வதில்லை அப்பனே. அவை இவை என்று கூட அப்பனே புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் அப்பனே இன்னும்.
=============================================================================
சித்தன் அருள் - 1087 - அன்புடன் அகத்தியர் - குருநாதர் வாக்கு!
7/02/2022 அன்று குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு.
வள்ளி தெய்வானையோடு அன்பாக அமர்ந்திட்ட ஐயன் பாதம் போற்றியே பணிந்து வாக்குகள் செப்புகின்றேன் அகத்தியன்.
அப்பனே என்னையும் நாடி வந்து விட்டால் யான் கஷ்டங்கள் தான் முதலில் ஏற்படுத்துவேன். ஏனென்றால் அப்பனே கர்மா தீர வேண்டும். கர்மா தீர்ந்து கொண்டே சென்றால் அதன் மூலமே யான் பக்குவப்படுத்தி விடுவேன்.
அப்பனே இருபது!! முப்பது!! நாற்பது!! ஐம்பது !!அறுபது!! வருடங்களில் கூட கஷ்டங்கள் ஒவ்வொருவருக்கும் அப்பனே பத்து!! பத்து !!என்று எண். !! ஆகவே வகுக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் இவையெல்லாம் சேர்ந்து அப்பனே எங்களிடத்தில் வருபவர்களுக்கு ஒரே நேரத்தில் கொடுத்து விடுவோம்.
அதனால்தான் அப்பனே ஒரே நேரத்தில் கொடுத்தால் கஷ்டங்கள் அதையும் தாங்கி கொண்டால் அப்பனே வாழ்க்கையில் அப்பனே துன்பமே இல்லை அப்பனே.
அதனால்தான் எவை என்று கூற இதனால்தான் பத்து பத்து என்று அடுக்கடுக்காக பிரம்மன் எழுதி வைத்திருக்கின்றான்.
பத்து வருடங்கள் உண்மையாக வாழ்ந்தால் அப்பனே அடுத்த பத்து வருடங்கள் நல் விதமாக எவை என்று கூற இன்னமும் சூட்சமங்கள் உள்ளது அப்பனே.
=============================================================================
சித்தன் அருள் - 1091 - அன்புடன் அகத்தியர் - தர்மம் உயிர் காக்கும்!
அப்பனே ஒவ்வொருவரும் இப்பூவுலகில் வரும்பொழுது அவரவர் செய்த கர்ம வினையின் பயன் ஆகவே வாழ்க்கை அமைந்துவிடுகின்றது. முடிந்தவரை பிறருடைய துன்பத்தை நீக்க நல் முறையாக உதவி செய்திட்டு, தான தர்மங்கள் செய்து புண்ணியங்களை தேடிக்கொள்ள வேண்டும் புண்ணியங்களைச் செய்து கொண்டே இருந்தால் இறைவனே தேடி வருவானப்பா.
இதனால்தான் அப்பா சொல்கின்றோம் புண்ணியங்கள் செய் புண்ணியங்கள் செய்ய என்று எவன் ஒருவன் நல் முறையாக தான தர்மங்கள் செய்து புண்ணியங்கள் சம்பாதித்து வைக்கின்றானோ!!! அவந்தனுக்கு தக்க சமயத்தில் அந்த புண்ணியங்களே அவந்தனை காப்பாற்றும்.
=============================================================================
சித்தன் அருள் - 1093 - அன்புடன் அகத்தியர் - காசியில் அகத்தியர் வாக்கு!
1/3/2022 அன்று குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு! வாக்குரைத்த ஸ்தலம் .காக்கும் சிவன் காசி.கங்கைகரை.
ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகிறேன் அகத்தியன்.
அப்பனே காசியில் பல கர்மங்களை கழித்து விடலாம் என்பேன் .
இக்காசி தன்னில் மறைமுகமாக பலகோடி சித்தர்களும் பலரிஷி மார்களும் பல ஞானியர்களும் அலைந்து கொண்டிருக்கின்றனர்.
இப்பொழுது கூட இங்கே பின் கங்கை நீரில் நீராடிக் கொண்டு சென்றிருக்கின்றனர்.
அதனால் அவர்கள் உங்களை பார்த்தாலே போதுமானது என்பேன். பல பாவங்கள் தொலைந்து விடும்.
அதனால் பல ஞானியர்களுக்கும் பல சித்தர்களுக்கும் பலகோடி குருமார்களுக்கும் பின் நாடி வருபவை ஈசனை காண்பவன் கோடி கோடி யுகங்களாக இவ்காசியில் தான்.
கர்மங்களை தீர்த்துக் கொள்வதற்கான சரியான வழி காசியே என்பேன்.
அப்பனே ஈசன் காசியில் இருந்தே இன்றைய தினம் (மகா சிவராத்திரி) தன் பயணத்தைத் தொடங்குவான் என்பேன்.
அண்ணாமலையில் தன் கர்மத்தை போக்கிக் கொள்ளும் தகுதிகள் உள்ளது என்பேன்.
இதனால் நல் முன்னேற்றம் காண அண்ணாமலையில் சிவராத்திரி அன்று கூட ஈசனே வலம் வருவான் என்பது மெய்யே.
இதனால் பல கர்மங்களை தொலைத்து கொள்ளலாம் அவை மட்டும் இல்லாமல் பிரதோஷ காலத்திலும் வரும் வரும் நேரங்களில் கூட சித்தர்கள் யாங்கள் கிரிவலம் செல்வோம் அப்பொழுது கூட தெரிந்துகொள்ளலாம்.
ஆனாலும் இவை விட்டுவிட்டு மனிதன் உருவாக்கியது பௌர்ணமி அமாவாசை திதிகளில்.
யாங்கள் ஆனாலும் யாங்கள் ஏற்பதில்லை ஆனாலும் சுற்றி பாருங்கள் பௌர்ணமி அமாவாசை திதிகளில் சுற்றிப் பார்த்தால் மிச்சம் எவ்வாறு என்பதை கூட கஷ்டமே மிஞ்சும்.
=============================================================================
சித்தன் அருள் - 1101 - அன்புடன் அகத்தியர் - சிவவாக்கியர் வாக்கு!
20/3/2022 அன்று சிவவாக்கியர் உரைத்த பொதுவாக்கு வாக்குரைத்த ஸ்தலம். சிவன் மலை. காங்கேயம்.
ஆதிபகவானை மனதில் தொட்டு என் முழு முதற் கடவுளாகிய விநாயகப் பெருமானையும் தொட்டு என் உயிரினும் மேலான உயிரான என்றே நினைத்த முருகனையும் தொட்டு வாக்குகளாக விரவுகின்றேன் வாக்கியன்.
தன் கர்மத்தை போக்குவதற்காகவே அண்ணாமலை வருகின்றனர்.
எப்படி இறைவன் போக்குவான்???
அன்னத்தை அளித்துவிட்டாலே போக்குவானா?? என்ன??
என்ன?? முதலில் எண்ணுவது மற்றவர்களை நீயும் சரி சமமாக எப்பொழுது பார்க்கின்றாயோ அப்பொழுதுதான் நீ செய்த தர்மங்கள் செல்லுபடியாகும்.
அப்படி செல்லுபடியாகும் பின் அப்படி ஆகவில்லை என்றாலும் உன்னிடத்திலே தவறுகள் உள்ளது.
=============================================================================
சித்தன் அருள் - 1104 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் பொது வாக்கு!
22/01/2022 - அகத்திய மகரிஷி அடியவர் ஒருவருக்கு வாசித்த வாக்கில் உள்ள பொது வாக்கு.
ஆதி சிவன் பொற்க்கமலங்களை பணிந்து இசைகிறேன் அகத்தியன்.
அப்பனே கறை ( தீய வினைகள் ) , அப்பனே கறை யொன்றும் எவ்வாறு என்பதையும் புரிந்துகொண்டுவிட்டால் அதை நீக்க தெரியாது மனிதனுக்கு ஆனால் அப்பனே எங்களால் முடியும் என்பேன்.
அப்பனே சொல்கின்றேன் அப்பனே கிராம்பு, அப்பனே வெற்றிலை அப்பனே இவையென்று கூற சிறிதளவு வேப்பன் அப்பனே இவையென்று கூற சிறிதளவு பட்டை, லவங்கம், திப்பிலி முறையே என்று கூற மிக க்ஷேமம் இவற்றையெல்லாம் நல்முறையாக அரைத்து அப்பனே நீரில் பலமாக சூடேற்றி அப்பனே அடிக்கடி பின் உன்னுடன் உள்ள அனைவரையும் அருந்திவர சொல் அப்பனே நல்முறையாகவே நோய் தாக்காது என்பேன். இவற்றுடன் அடிக்கடி அப்பனே ஏலக்காய் நீரும் பருகி வா அப்பனே. இத்துடன் சிறிதளவு கொத்தமல்லி போல் பின் வாசனை எவை என்று கூற அதனையும் உண்டு வர பின் அடிக்கடி சிறிதளவு கற்பூரவல்லியும் அப்பனே உண்டு வரவும் அப்பனே. மற்றவர்களுக்கும் அப்பனே சொல்.
அப்பனே இனி வரும் காலங்களில் நோய் நொடிகள் அப்பனே அதிகமாக வரும் என்பேன் அப்பனே அதனை எதிர்ப்பதற்கு இருக்கிறது எளிய வைத்திய முறை
ஆனாலும் அதனை பயன்படுத்துவதில்லை. மக்கள் பயன்படுத்திக்கொண்டால் பிழைத்துக்கொள்வார்கள்.
இதுதானப்பா கர்மா நிறைந்த உலகம். இதுதானப்பா கலியுகம். ஆனாலும் நல்லோர்கள் யாங்கள் இன்னும் இருப்போம் அப்பனே நல்லோர்கள் இருக்க நல்விதமாக சில விந்தைகள் காண்பித்து அருள் கொடுத்து இன்னும் பலம் பெற பாடுபடுவோம் பாடுபடுவோம்.
=============================================================================
சித்தன் அருள் - 1105 - அன்புடன் அகத்தியர் - போகர் பெருமான் வாக்கு!
1/4/2022 அமாவாசை திதி அன்று போகர் சித்தர் உரைத்த பொதுவாக்கு. வாக்குரைத்த ஸ்தலம் திருவண்ணாமலை.
அகிலமெல்லாம் ஆளுகின்ற என் தாயவளை அகிலாண்டேஸ்வரியை எந்தன் சிறு குழந்தையை முருகனை பணிவுடன் வணங்கி செப்புகின்றேன் போகனவன்.
சில மூலிகைகளை எடுத்து அப்படியே உண்ணுவது சரியல்ல...........
என்னுடைய நாமம் எதையன்றி கூற குரு எவ்வாறு வருவது என்பதைக்கூட நினைத்துப்பார்த்தால் நிச்சயம் குரு மந்திரம் இல்லாமல் ஒரு ஒரு இதை கூட பின் பயன்படுத்த முடியாமல் தவிப்பான் மனிதன் இதனால் மூலிகைகளும் வேலை செய்யாது என்பேன்.
வேலை செய்து விட்டாலும் கர்மங்கள் ஓடாது. ஓடிவரும் கர்மங்கள் நிச்சயமடா...
மனிதருக்கு கர்ம உலகில் எதை என்று நல்லவன் கூற்று எடுத்து எடுத்து அருளக் கூடிய தகுதிகள் இருந்தால் தான் யானும் அவந்தனை அழைத்து குரு மந்திரம் உபதேசிப்பேன் உபசரிப்பேன் ஆனால் மனிதன் தகுதி உள்ளவனாக இல்லை.
காசுக்காக ஆசைப்பட்டவன் ஒருபோதும் ஞானியாகவும் இறையருளையும் பின் சித்தர்கள் அருளையும் பெற முடியாது .
ஏனோ தானோ என்று கூட ஒருவருக்கும் மனமில்லை புண்ணியம் செய்வதற்கு.
பின் புண்ணியம் எதற்காக செய்ய வேண்டும்???
தான் தான் எதை என்று கூற அவரவர் கர்மாபடியே நடக்கட்டும் என்று மனிதர்கள் விரும்புகின்றார்கள்.
என் குருவை (அகத்தியன் ) பெயரைச் சொல்லி ஏமாற்றுபவர்களை யான் நிச்சயம் வியாதியில் நுழையச் செய்வேன்..
சொல்லிவிட்டேன்... திருந்திக் கொள்ளுங்கள்.
இவையன்றி கூற என் தாயவள் அகிலாண்டேஸ்வரி யானே எதையன்றி கூற..... யானும் சாதாரண மனிதன்.
மனிதன் என்பதற்கிணங்க எவை என்று கூற யானே கஷ்டங்கள் பட்டவன் தான்.
ஆனால் பல வித்தைகள் எந்தனக்குத் தெரியும்.
தெரியும் ஆனால் ஏன் இந்த நிலைமை ஏனிந்த நிலைமை என்று யோசித்தால்??
எவை என்று கூற கர்மா......
ஆனாலும் இவையன்றி கூற என்னால் எத்தனை என்று கூற என்னாலே என் கர்மங்களை நீக்க முடியும்....
நல் நேரங்கள் எவ்வாறு வருகின்றது என்பதை சொல்லி விடுகின்றேன்.
""" நீ நல்லவை செய்தால் நல் நேரங்கள்"""......
"""" நீ!! தீயவை செய்தால் தீய நேரங்கள்"....
இவ்வளவு தான் வாழ்க்கை என்று சொல்லிவிட்டேன்....
அதனால் கிரகங்கள் சரியான நேரத்தில் அமைவது இல்லை கிரகங்கள் பின் கெட்ட நேரங்கள் அங்கிருந்தால்(ஜாதகத்தில்) என்றுகூட...
எதற்காக நீ!!!! நல்லதைச் செய்திருந்தால் அக் கிரகங்கள் கெட்ட எவையன்றி கூற நேரங்களையும் நல்லவைகளாக செய்யும்.
இவையன்றி கூற இப்பொழுது பார்த்தீர்களா!!!!! எதை என்று கூற நீ நல்லதை செய்தால் நல் நேரங்கள் என்று திரும்பவும் திரும்பவும் கூறிவிட்டேன்.
கெட்டதை செய்தால் கெட்ட நேரங்கள் இவைதான் பின் மனிதனுக்கு.
ஒன்றுமில்லை உலகத்தில் வாழ்வதற்கு கூடி வாழ்ந்தால் எதை என்று கூற கர்மாக்கள் தொலையும் ஆனால் மனிதா நீங்கள் கூடி வாழ மாட்டீர்கள் என்பது எனது கருத்தாகவே தோன்றுகின்றது.
மனிதன் நிலைமைகளைப் பார்த்தால் மனிதன் பொறாமை பட்டவன். கீழானவன்.
எவன் ஒருவன் பொறாமை படுகின்றானா அவந்தன் கீழானவன். கீழானவன்.
என்னுடைய அருள்கள் கிடைக்காது. கிடைக்காது ஆனால் வெறும் வாய் தான் மென்று கொண்டிருக்க வேண்டும்.
உண்மையான மனிதர்கள் உண்மையான மனிதர்கள் எவர் என்று சொல்கின்றேன்.
தன் மனசாட்சிக்கு எதிராக இல்லாமல் எவரையும் குறை கூறாமல் குறை கூறுவது தான் உண்டு தன் வேலை உண்டு இறைவனை நினைத்து இறைவன் தான் அனைத்திற்கும் காரணம் என்று கூட சொல்லிவிட்டால்..... இன்னும் சொல்வார்கள் சித்தர்கள்.... அப்பனே.
அதை விட்டுவிட்டு அப்பனே பொறாமைக்கார மனிதர்களே..... அகத்தியனை வணங்கிக் கொண்டும் பொறாமைக்கார மனிதர்கள்.
=============================================================================
சித்தன் அருள் - 1107 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் வாக்கு!
3/4/2022 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு.
வாக்குரைத்த ஸ்தலம். ஸ்ரீ லோபமுத்ரா தேவி சமேத அகத்தியர் கோயில். பாவாசாமி அக்ரஹாரம். ஒத்தை தெரு. திருவையாறு.
வள்ளி தெய்வானையோடு அன்பாக அமர்ந்திட்ட ஐயன் பாதம் போற்றியே வாக்குகள் பரப்புகின்றேன்.
உன் பிறவியைப் பற்றி ""அறி!!!... அப்பனே.
எதற்காக பிறந்தோம்?? எதற்காக? இவ்வுலகத்தில் வாழ்கின்றோம்?? என்று அப்பனே ஒர்நாள் தியானங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.அப்பனே!!
ஆனாலும் அப்பனே தியானங்கள் யாரும் கடைப்பிடிப்பதில்லை அப்பனே. தியானங்கள் எப்பொழுது செய்ய வேண்டுமென்றால்??? அப்பனே ""பிரம்ம முகூர்த்தத்திலே !!! அப்பனே நல்விதமாகவே செய்யும்பொழுது அப்பனே அவனைப்பற்றி அவந்தனுக்கே தெரியவரும் என்பேன்.
ஆனாலும் அப்பனே சோம்பேறியாகவே அப்பனே காலங்களைக் கழித்துவிடுவான் மனிதன்.
இன்னும் எதையன்றி கூற யாங்களே நல்லோர்களுக்கு உதவுவோம் அப்பனே வந்து வந்து இதுதான் அப்பனே இக்கலியுகத்தின் சிறப்பு என்பேன் அப்பனே.
மனிதனுக்கு தெளிவுகள் பிறக்க வேண்டுமென்றால் அப்பனே நல் விதமாக தியானங்கள் செய்ய வேண்டும் சொல்லிவிட்டேன் முன்பே எந் நேரத்தில் செய்ய வேண்டும் என்பதைக்கூட சொல்லிவிட்டேன். அப்பனே அவ் நேரத்தில் தியானங்கள் செய்தால் அப்பனே அனைத்தும் தெரிந்துவிடும்.
ஆனாலும் அப்பனே நிச்சயம் கர்மா செய்ய விடாது தான் என்பேன் அப்பனே இதுதான் உண்மை.
அதையும் மீறி செய்தால் அப்பனே நீ உண்மையான எதை என்று கூற அனைத்தும் அறிந்து விடுவாய் அப்பனே. எதை என்றும்.
ஆனாலும் தன்னைப் பற்றி அறியாமல் அப்பனே ஏதும் நடக்காது என்பேன் இவ்வுலகத்தில் அப்பனே.
முதலில் தன்னைப் பற்றி அறிய வேண்டும் தன்னை பற்றி அறிய வேண்டுமென்றால் தியானங்கள் மூலம் அறியலாம் அப்பனே.
இவையன்றி கூற தன்னைப் பற்றி அறிந்தாலே அனைத்தும் சாதித்து கொள்ளலாம் அப்பனே.
தன்னை அறியாமலே சென்று கொண்டிருக்கையில் அப்பனே இன்னொரு விஷயத்தையும் சொல்கின்றேன் அப்பனே!!!!
யார் ??யாருக்கு ??எதை ??எப்பொழுது?? செய்ய வேண்டும் என்பதை கூட இறைவன் நன்றாக கணித்துக் கொண்டிருக்கின்றான்.
அதை மீறி செய்தால் தான் அப்பனே தோல்விகள்.
ஆனாலும் அப்பனே பின் எதை என்று கூற அப்பனே இவை இவை என்று கூற மாற்றாமல் மாற்றுகின்றனர் மனிதர்கள் அப்பனே.
இப்பொழுது விதியில் ஒரு விளையாட்டு இருக்கின்றதென்றால் அப்பனே அவ் விளையாட்டை விட்டுவிட்டு மற்றொரு விளையாட்டுக்கு சென்றுவிடுவான் அப்பொழுது அவ் விளையாட்டு தோல்வியில்தான் முடியும் பிரம்மா எழுதிவைத்த விளையாட்டு வெற்றியில் தான் முடியும் அப்பனே. இது தான் உலகமப்பா.
அதனால் தான் மனிதன் அப்பனே தன் கடமையைச் செய்யாமல் வேறு ஒரு கடமையை செய்து கொண்டிருந்தால் இதனால் தான் தொல்லைகள் தோல்விகள் எல்லாம் வந்தடைகின்றன.
பின்பு எதை என்று கூற அறியாமல் பின்பு கஷ்டத்திலே மூழ்கி விடுகின்றான் அப்பனே.
இவை எல்லாம்... வீணே!!!!.... என்பேன் அப்பனே.
அதனால்தான் அப்பனே தம்தனக்கு என்ன எழுதி இருப்பதை எவ்வாறு என்பதை உணர்வதற்கு அப்பனே தன்னை அறிய நிச்சயம் வேண்டும் என்பேன் மனிதர்கள் அப்பனே.
=============================================================================
சித்தன் அருள் - 1109 - அன்புடன் அகத்தியர் - புலஸ்தியர் வாக்கு!
2/4/2022 அன்று புலஸ்தியர் பெருமான் உரைத்த பொது வாக்கு.
வாக்குரைத்த ஸ்தலம் அகத்தீஸ்வரர் கோயில் அகத்தியான் பள்ளி .கோடியக்கரை. வேதாரண்யம்.
அண்ட சராசரங்களையும் ஆண்ட இன்னும் ஆளுகின்ற இறைவனை பணிந்து என் குருநாதர் அகத்தியரையும் பணிந்து செப்புகிறேன் பல வாக்குகள்!!! இனிமேலும் செப்புவேன்.
இங்கே அமர்ந்து எதையன்றி கூற இங்கிருந்து எவை என்று கூற பின் நதிகள் இணையும் எவ்வாறு என்றுகூட கடல்கள் அலை மோதும் என்ற இடத்தில் கூட பின் நல்விதமாகவே
இவை என்று போதாதற்கு பின் அங்கே நீராடி இங்கே இவை என்று கூற அகத்தியன் பள்ளியைக்கூட சரணடைந்து விட்டால் பல தோஷங்கள் நிறைவேறும்.
இதைத்தான் இங்கே என் மூல குருநாதன் அகத்தியன் எவையென்று கூற இங்கே குருகுலம் அமைத்து அமைத்து பல மனிதர்களை... எவன் பாவம் செய்தவர்களையும் கூட அங்கே கடலில் நீராடி இங்கே பின் வந்துவிட்டால் பல வினைகள் அகற்றி விடும் பல அறிவுகள் மேம்படும். மேம்படும் இன்னும் சிறப்புக்கள் உண்டு.
அதனால் சில பாவ வினைகளுக்கு தீர்ப்பதற்கான வழிகள் இங்கே இங்கே எவையென்று கூற
பல பாவங்களை இங்கே எதை அனுபவிக்காமல் இருக்கின்றீர்களோ எவை என்று கூற அழித்துவிடலாம் என்பேன்.
அதனால் எவையன்றி கூற பின் இங்கே நீராடி (கடலில்) எதையென்று கூற....
இவ் அகத்தியன்பள்ளி (தற்போது அகத்தியான் பள்ளி என்று அழைக்கப்படுகிறது) என்று செப்புகின்றார்களே இதை தன் உணர உணர இங்கே வருபவர்கள் நிச்சயம் கர்மத்தை அழித்து தான் செல்வார்கள்...
அதனால் குறைகள் எவை என்று கூட இங்கிருந்து நிச்சயமாய் தனுஷ்கோடி சென்றடைய சென்றடைய அங்கும் பார்க்க பின் (கோடியக்கரை தரிசனம் செய்து விட்டு தனுஷ்கோடி தரிசனம்) ராமேஸ்வரத்தில் நீராட பாவங்கள் கரையும்.
இதனையுமென்று கூற இங்குமங்கும் நோக்கி பார்த்தால் இதுதான் உண்மை கர்மா நிலை.. கர்மா பின் மனிதனை பிறக்க வைக்கின்றது ஆனால் அக்கர்மாவை எப்படி அழிக்கலாம் என்பதை கூட மனிதனுக்கு தெரியாமல் போய்விட்டது.
அதனால் எதை என்று கூற எந்தனுக்கும் எவையென்று கூற இனிமேல் என் குருநாதன் சில கர்மாக்களை இவ்வுலகத்தில் அழித்தே தீருவான்.
ஆலய முகவரி.
அகத்தீஸ்வரர் கோயில் அகத்தியான் பள்ளி
கோடியக்கரை.
வேதாரண்யம்.
நாகப்பட்டினம் மாவட்டம்.
தமிழ் நாடு வேதாரண்யத்தில் இருந்து கோடியக்கரை செல்லும் வழியில் 2 கி.மி. தொலைவில் இருக்கிறது. நகரப் பேருந்து வசதிகள் வேதாரண்யத்தில் இருந்து இருக்கிறது.
இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
=============================================================================
சித்தன் அருள் - 1111 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் உரைத்தது ஸ்ரீ வாஞ்சியம்!
2/4/2022 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு.
வாக்குரைத்த ஸ்தலம் : ஸ்ரீ வாஞ்சிநாதசுவாமி ஆலயம், ஸ்ரீ வாஞ்சியம். திருவாரூர்.
அகத்தியரின் கட்டளை !!!!
ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.!!!
அப்பனே நலமாக நலமாக உண்டு என்பேன் ஆசிர்வாதங்கள் அப்பனே.
இங்கு வந்து நல் விதமாகவே அப்பனே பாசத்தோடு இறைவா!!!!!! என்று கூறிவிட்டால் !!அப்பனே இதையன்றி கூற சனிஸ்வரனுக்கும் அப்பனே சனிஸ்வரன் எவையென்று கூற எவையன்றி கூற என் பக்தன் !!!என்று அழகாகச் சொல்லி விடுவான். விலகி விடுவான் என்பது நிச்சயமாக உண்மை. அப்பனே.
""""விதியை மதியால் வெல்ல முடியும்""" என்று!!!!
ஆனால் அப்பனே விதி எவையன்றி கூற எவையென்று கூற மதி....
""""மதி தான் இறைவன் !!!!!!
மதி தான் இறைவன் என்று சொல்லிவிட்டேன்.
ஈசனும் எவை என்று கூற " சரி !!!!தன்போல்(அவ் மனிதனின் இஷ்டம் போல்) ஆகட்டும் என்று கூட எமதர்மனே!!! சித்ரகுப்தனே!!!! நில் என்று கூறி... இவையன்றி கூற இங்கு அருள் பாலிக்க வேண்டும் வந்தவர்களை நல்வழிப்படுத்தி நல்லோர் மனதை புரிந்து கொண்டு அவர்களுக்கும் நோய் நொடி இல்லாமல் வாழ்க்கை நீ கொடுக்க வேண்டும் என்று கூட ஈசன் சொல்லிவிட்டான். அழகாக.
அதனால் நல் விதமாக வந்து செல்பவர்களை எமதர்மனும் சித்திரகுப்தனும்... நல் விதியாக விதியில் சிலசில மாற்றங்கள் இருந்தாலும் அதையும் மாற்றிவிட்டு இவையன்றி கூற ஆனால் இதையன்றி கூற ....அவ் மனிதன் இப்பொழுதும் கூட எவை என்று கூற வந்து கொண்டே இருக்கின்றான். இத்தலத்திற்கு .
இப்பொழுது புரிகின்றதா!?? நலமாகவே!!! விதியும் மாறும்.!!! இவையென்று கூற... எமதர்மனும் நெருங்க முடியாது எவை என்று கூற சித்திரகுப்தனும் நல் வழியாக மனதில் என்ன வேண்டிக்கொண்டீர்களோ நிச்சயமாய்.... உண்டு என்பேன்.
=====================================================
எப்படி கர்மாக்களை ஜீவ சமாதியில் நீக்கவேண்டும் ?
=====================================================
பலப்பல சமாதிகளிலும் நல் விதமாகவே பின் ஞானிகள் தங்கி இருக்கின்றனர்.
அவ் தலத்திற்கு சென்று வந்தால் எவ்வாறு என்பதையும்கூட தன்னலம் காக்காது பிறர் மனதை எண்ணி அவர்கள் படியே இவ்வாறு என்பது கூட நடந்துகொண்டால் வெற்றி இது தான் அனைத்து ஞானிகளும் விரும்புவார்கள் என்பேன்.
""தன்னைப்பற்றி வேண்டி கொள்ளுதல் ஆகாது!!! எதையென்று கூற.
எவையன்றி கூற ஏனென்றால் சொல்லி விடுகின்றேன் சில ஜீவசமாதிகளில் வாழும் ஞானிகளை பற்றி இதையன்றி கூற அவர்களுக்கு எவை என்று கூற இதையும் கூட மற்றவர்களுக்கு மற்றவர்களுக்காகவே வணங்குவது தான் சிறப்பு என்பதை கூட அவர்களுக்கு தெளிந்து விட்டனர். அவர்களுக்கு தெரிந்து விட்டது.
அதனால் அங்கு சென்று பின் தன்னைப் பற்றியோ!!! தன் மனைவியைப் பற்றியோ!!! தன் சிந்தனையை பற்றியோ !!!
தான் நன்றாக இருக்க வேண்டும் தான் எப்படி செய்ய வேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் படுகுழியில் தான் உண்டு.
ஆனாலும் வெற்றி தருமே தவிர திரும்பவும் தோல்வி அதி விரைவிலே ஏற்படும்.
அதனால் பின் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் எவை என்று கூற அனைவரும் உயர வேண்டும் பின் இறைவா!!! அவர்களுக்கெல்லாம் கொடு!!!
இன்னும் ஏழை எளியோர் எல்லாம் உணவு இல்லாமல் பின் மாய்ந்து கிடக்கின்றார்கள்.. உயிர்பிழைத்து கொடு!!! என்றுகூட வேண்டிக்கொண்டால் பின் ஞானிகள் சந்தோஷம் அடைந்து அப்பனே!! இவந்தன் போல ஆட்கள் தேவை .
ஆனாலும் சிறிது சோதனைகள் வைத்தாலும் உயர்ந்த நிலைக்கு அடைந்து விடுவீர்கள் எவையென்று கூற.
=============================================================================
சித்தன் அருள் - 1117 - அன்புடன் அகத்தியர் - பிரம்மபுரீஸ்வரர் ஆலய வாக்கு!
7/4/2022 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த ஆலய பொதுவாக்கு
வாக்குரைத்த ஸ்தலம் :
அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் நித்யகல்யாணி அம்பாள்.
ஆலங்குடி நெடார்.கிராமம் மானாங்கோரை அஞ்சல் தஞ்சாவூர் மாவட்டம்.
அண்ட பிண்டங்களெல்லாம் ஆள்கின்ற!! இறைவா!! போற்றி!!! போற்றியே மனதில் நிறுத்தி செப்புகின்றேன் அகத்தியன்.
பல ஆண்டுகள் தவம் செய்து பின் ஈசன் கண் முன் தோன்றினான்!!!
தோன்றினான்!!! ராஜ ராஜ சோழனுக்கு!!
இதையென்று கூற நிறுவாமல் பின்...எதனையென்று பின்
""""""அப்பனே!!!!!!! என்று ஈசனும் அன்பாக அழைத்திட்டு .....
பின்!!! வந்துவிட்டாயா!!! வந்துவிட்டாயா!!!! என் அப்பனே!!!!உலகத்தைக் காத்தாளும் அப்பனே!!!
இதையென்றும் கூற அப்பனே!!
உன் நிழல்கள்
போதும் அப்பனே!!!
கர்மவினையை
நீக்கும்!! அப்பனே!!
கர்மத்தை அழிக்க வல்லானும் நீயே!!!
அழிக்க கூடியது!!
அழிக்க நிரூபிப்பது!!
எதனையென்று கூற இதனையும் பாடலாக பின்பற்றுவது.... ""நமச்சிவாயா"""!!! .... எனும் மந்திரத்தை தவிர வேறொன்றுமில்லை.
வேறொன்றுமில்லை!! சாலச் சிறந்தது!!!!!
என் அப்பனே!!!
என் முதல்வனே!!!
என் தவப்புதல்வனே!!!
அப்பனே!! அன்பானவனே!!
அன்பானவனே!!!!
இதையன்றி கூற மயக்கத்தில் ஆடிவிட்டான் சிறிது நேரம். ராஜராஜசோழன்
=============================================================================
சித்தன் அருள் - 1132 - அன்புடன் அகத்தியர் - காசியில் பார்வதி தேவி உரைத்த பொதுவாக்கு
8/5/2022 அன்று பார்வதி தேவி அம்பாள் உரைத்த பொதுவாக்கு
வாக்குரைத்த ஸ்தலம் .காக்கும் சிவன் காசி. கங்கை கரை.
கங்கையை முடிமேல் அணிந்தவனே!!!!
முக்காலமும் அறிந்தவனே!!!
உன்னை மனதில் தொழுது மனிதர்களுக்கு ஈகின்றேன் வாக்குகளாக.... உமையவள்.!!!!
அடியாட்கள் என் ஈசனின் அடியாட்கள் மனிதன் எப்படி கஷ்டங்கள் கொடுத்தாலும் திருந்தவில்லை என்று கூட அடியாட்கள் என்பதை யான் கிரகங்கள் என்று சொல்வேன்...
கிரகங்களும் இதையென்று என் ஈசனிடம் வந்தன!!!
வந்தன இனி எப்படி யாங்கள் கொடுப்பது??? எவ்விதமாகவும் மனிதர்களுக்கு தண்டனைகள் கொடுத்தாலும் அவன் திரும்பவும் திரும்பவும் பின் இதை! எதை? என்று கூற சிந்திக்காமலே கர்ம வினைகள் பாதிக்கின்றான் என்று கூட....
ஆனாலும் என் ஈசன் கடுமையாக எச்சரித்து விட்டான்!!!
கிரகங்களே!!!!! இவையன்றி கூற நிச்சயமாய் இவ்வுலகத்தில் உண்மையை பின் பேசுபவர்களுக்கு நீங்கள் ஒரு தீங்கும் செய்யக் கூடாது.
அப்படி புறம்பாகச் செய்தால் அவர்களுக்கு அங்கேயே தண்டனைகள் கொடுங்கள் நிச்சயமாய் ஏற்படுத்துங்கள் என்றுகூட.
ஆனால் இதில் சனிதேவனோ முந்திக் கொண்டான்..... யான் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றேன்....
அதனிடையில் ராகுவும் முந்திக் கொண்டான்... கேதுவும் முந்திக்கொண்டான்... யாங்கள் நிச்சயம் கஷ்டத்தை மனிதருக்கு அள்ளித் தருவோம் . ஆனாலும் உண்மையாக இருந்தால் அவ் கஷ்டத்தையும் கூட பின் பேரின்பமாக மாற்றுவோம்!!! உன்னிடத்தில் (ஈசனிடத்தில்) சேர்ப்பதற்கான வழிகள் செய்வோம்.
அதனால் இதில் கூட சனியோ!! ராகுவோ!!! கேதுவோ!!!! இவர்கள் நிச்சயம் ஒரு சாதகத்தில் வந்தால் அவர்கள் கணக்கை எப்படி என்று கூட தெரியாமல் தெரியாமல் கர்மத்தை கழித்து விடுவார்கள்...
ஆனால் அவ் கர்மத்தை போக்க.... பல பரிகாரங்களாம்!?
முட்டாள் மனிதர்களே!!!!! சிந்தித்துக் கொள்ளுங்கள்!!!!
சனி!! ராகு!! கேது!! இவர்களுக்கு பலம் எப்பொழுதும் அதிகமாக கொடுத்துவிட்டான். என் மனதில் உள்ள ஈசனே!!!
அதனால் அவர்கள் வந்தடைந்தால்(சாதகத்தில்) மனிதர்கள் எப் பரிகாரம் செய்தாலும் நிச்சயம் பலிக்காது....
ஏனென்றால் நீ செய்த கர்மத்திற்காகவே அதை நீ அனுபவித்தே ஆக வேண்டும்... ஆனால் மனிதர்களோ பொய் சொல்லி ஏமாற்றி ஏமாற்றி இவைகள்(ராகு கேது சனி) வருகின்றதே இதனை நிறுத்துவதற்கான வழிகள் யான் கூறுகின்றோம்!!! கூறுகின்றோம் என்றெல்லாம் பொய் சொல்லி ஏமாற்றி ஏமாற்றி பிழைப்பு நடத்தி அவன் கர்மத்தையும் இவன் சேர்க்கின்றபடியால் நிச்சயம் பின் கடைசியில் பார்த்தால்!! பார்த்தால்!! .....
""என் வாயால் சொல்லக் கூடாது!!!.... நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்!!!
இதையன்றி கூற அதனால் மனிதனே!! உண்மையான ஞானியாக, எதை அறிந்து கூட உண்மையான பக்தனாக இருந்துவிடு!!!
"நமச்சிவாயா"" என்று என் மணாளனை அழைத்துக் கொண்டே இரு!!! பக்தியோடு!!!.
நிச்சயம் என் மணாளன் எதையும் கேட்கவில்லை... அன்பு தானே கேட்கின்றான்!!!
கிரகங்கள் பிடிக்கும் பொழுது ஒருவன் சந்நியாசியாக மலையின் மீது போய் அமர்ந்து விட்டால் கிரகங்கள் நிச்சயம் ஒன்றும் செய்யாது.
ஆனாலும் அதற்கும் பந்த பாசங்களில் ஈடுபடக்கூடாது..!!
நிச்சயமாய் தவத்தை மேற்கொண்டால்....எந்தனுக்கு எதுவும் தேவையில்லை!! ஈசனே கதி என்று இருந்தால் கிரகங்கள் நிச்சயம் வேலை செய்யாது.
அதில் கூட ஆணவம் எல்லாம் வந்து விடக்கூடாது!!கூடாது இதனால்தான் பல ரிஷிகளும் பல ஞானியர் களும் எதை என்று கூறாமலே... நிச்சயம் கஷ்டங்கள் வரும் பொழுது அமைதியாக பல மலைகள் மீதும் காடுகள் மீதும் தவங்களை மேற்கொண்டனர்.
இதனால்(கிரகங்களின்) தாக்கம் குறைந்து விட்டது. ஆனால் எளிதில் கூட... அதனால் நினைத்ததை எளிதில் நடத்தி விடலாம்.
இதனால் தெரிந்து கொள்ளுங்கள்!!! மானிட ஜென்மங்களே!!!
ஆனாலும் ஏன் ஒன்றைச் சொல்கிறேன் நீ மனிதா ஏமாற்றுபவனிடம் சென்றால்... அவனும் ஏமாறுவான்... நீயும் ஏமாறுவாய்... அவனும் கர்மத்தை சேர்ப்பான் நீயும் கர்மத்தை சேர்க்கவேண்டும் தெரிந்துகொள்.
அதனால் உண்மையான படைப்பை படைத்தவனை நம்பு!!!! இவையன்றி கூற இதையென்றும் ஆனால் படைத்ததை எப்பொழுதும் நம்ப வேண்டாம்!!!
நிச்சயம் குருவாக பின் சித்தர்களை தொழுங்கள்..அவனே அனைத்தும் என்று இருங்கள் நிச்சயமாய் பல சித்தர்களும் செப்பி விட்டார்கள்.... மனிதனை நம்பிவிடாதே!!!! மனிதனை நம்பிவிடாதே !!!எளிதில் என்றுகூட!!!!!
ஆனாலும் திரும்பவும் நம்பி நம்பித்தான் ஏமாறுகிறார்கள். ஆனால் ஏமாந்து விடுதல் பின் கூட கர்மத்தை சேர்த்துக் கொள்கின்றார்கள்.
ஒன்றை சொல்கின்றேன் கர்மத்தை சேர்த்துக் கொள்வதில் மனிதன் வல்லவனுக்கு வல்லவன்!! தெரிந்து கொள்ளுங்கள்.
வேண்டாம் பிறவிகள் வேண்டாம் இனிமேலும் பிறவிகள் வந்துவிட்டாலே கஷ்டங்கள் தான் .
=============================================================================
சித்தன் அருள் - 1136 - அன்புடன் அகத்தியர் - சங்கரலிங்கம் ஆலயம், சங்கேஷ்வர்!
30/4/2022 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த ஆலய பொதுவாக்கு
வாக்குரைத்த ஸ்தலம் .சங்கரலிங்கம் ஆலயம். சங்கேஷ்வர். பெல்காம் மாவட்டம்
கர்நாடகா.
ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து உரைக்கின்றேன் அகத்தியன்.
ஏன் உன்னால் திருத்தலங்களுக்கு நாட முடியவில்லை???
கர்மா!! அப்பனே அனைத்தும் சம்பாதித்து விட்டு கடைசியில் அப்பனே இறைவனிடத்தில் வருகின்றாய் அப்பனே... என்ன பிரயோஜனம்?? அப்பனே!!!
இவையன்றி கூற அதனால் தான் அப்பனே திருந்திக்கொள்ளுங்கள் ....
=============================================================================
சித்தன் அருள் - 1139 - அன்புடன் அகத்தியர் - கோலாப்பூர் மஹாலக்ஷ்மி கோவில்!
29/4/2022 அன்று காகபுஜண்டர் ரிஷி உரைத்த பொதுவாக்கு
வாக்குரைத்த ஸ்தலம் : கோலப்பூர் மகாலட்சுமி ஆலயம்
உலகை ஆளும் நமச்சிவாயனை மனதில் எண்ணி வாக்குகளாக பரப்புகின்றேன் புஜண்டன்...
ஆன்மா எதை குறிக்கின்றது?? எவற்றிலிருந்து தோன்றுகின்றது?? எதை எதை என்று கூட தீபம் எதை இவற்றிலிருந்து கூட ஆன்மா இவற்றுக்கு வேறுபாடு உண்டு. இதனைத் தான் எங்கிருந்து செல்கின்றது பின்....
பெருமாளுக்கு நாமம்!!! இதில் கூட ஆன்மா அடங்கியுள்ளது.
ஈசனுக்கு இதையன்றி கூற அவந்தனக்கும் இட்ட திருநீறு!!!! இதிலும் அடங்கியுள்ளது ஆன்மா!!!!
இவையன்றி கூற இவைதனை புரிந்தாலே!!! மனிதா!!! நீ நிச்சயம் கர்மத்தை வென்று விடலாம்.
ஆனாலும் இதுவரை இதை புரிந்திருக்க ஆள் இல்லை!!!வருத்தம்!!! இதையன்றி கூற....
ஆனாலும் உண்டு உண்டு நிச்சயம் மெய்ஞானியர்களுக்கு, உண்மையான மனிதர்களுக்கு யாங்கள் இதை எடுத்துரைப்போம் இனிமேலும்.
( Refer Sithan Arul 1188 blog - https://siththanarul.blogspot.com/search?q=1188 )
=============================================================================
சித்தன் அருள் - 1142 - அன்புடன் அகத்தியர் - மகான் ஒடுகத்தூர் ஸ்வாமிகள்!
16/5/2022 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு.
வாக்குரைத்த ஸ்தலம் : மகான் ஒடுகத்தூர் ஸ்வாமிகள் ஜீவ சமாதி./ மடம்
அல்சூர் ஏரி சமீபம்.
ஹலசூரு கங்காதர் செட்டி சாலை, பெங்களூரு.
ஆதி பரமனை மனதில் எண்ணி உரைக்கின்றேன் அகத்தியன்.
ஏன் மனிதர்கள் கலியுகத்தில் பின் வேடதாரிகள்.போல் வேடம் போட்டுக்கொண்டு தன்னை வணங்க வேண்டும் என்ற எண்ணமே மிகுந்து காணப்படுகின்றது... அவர்கள் எல்லாம் பொய் பித்தலாட்டக்காரர்கள் என்பதை..கூட தெரியவில்லை.
ஆனால் சொல்லி விடுகின்றேன்....!!!! இப்படி கலியுகத்தில் இப்படி செய்து கொண்டுதான் வந்து கொண்டிருக்கின்றார்கள்.
அவனிடத்தில் அவன் கர்மா சேர்த்துக்கொண்டே இருக்கின்றான் அவன் இடத்தில் மீண்டும் மீண்டும் மனிதர்களும் போய் கர்மத்தை சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். தெரிந்து கொள்ளுங்கள் மனிதர்களே!!!!
பல மனிதர்களுக்கு சித்தர்கள் என்ற பெயரை சொல்லியும் எங்கள் பெயரை சொல்லியும் பின் யான் அகத்தியன்... எனக்கு அனைத்தும் தெரியும் எந்தனுக்கே இவ்வுலகத்தில் மரியாதை...
ஆனால் அனைத்தும் தெரிந்தவனுக்கு.... மரியாதை இல்லையப்பா....
இதுதான் உலகம்.!!!
இது தான் கர்மா பூமி!!!
இது தான் கலியுகம்!!
மீண்டும் ஒருமுறை சொல்கின்றேன்!!!!
பொய்களப்பா அனைத்தும் பொய்களப்பா!!!!
அவனிடத்தில் பின் இவையன்றி கூற அவன் ஞானியாக இருக்கின்றான் பொய்யானவனாக இருக்கின்றான்.
அவனைப்பற்றி.... யான் வரும் காலங்களில் ஒவ்வொருவரைப் பற்றியும் சொல்கின்றேன் என்னென்ன??? வேலைகள் செய்கின்றான்!!!! என்று கூட நிச்சயம் தெரிவிப்பேன்.
இவை போன்றே செயல்பட்டால்....
தரித்திர மனிதன் அனைத்து சுகங்களையும் கண்டு... கடைசி வயதில் இறைவனை நாடுகின்றான்... அனைத்து சுகங்களும் பொய் என்று கூட.... அவனைப் பற்றியும் தெரிவிக்கின்றேன்....
சென்று விடாதீர்கள்..... அவன் கர்மா சேர்த்துக்கொண்டிருந்தான்... அவன் மூலமும் வரும் கர்மா..... என்பதை தெரிந்து கொள்ளாத மனிதர்களே!!! திருந்துங்கள்.
உண்மையான பக்திகளை உருவாக்குவோம் இவ்வுலகத்தில் செம்மை பெற செய்வோம்.
=============================================================================
சித்தன் அருள் - 1145 - அன்புடன் அகத்தியர் - பாலராமபுரம் அகத்தியர் கோவிலில் முருகர் வாக்கு-2 !
பின் பிரம்மனுக்கு அனைத்தும் தெரியும்!!! எவை, எதை, என்று, எப்பொழுது எதை படைத்த மனிதன் இவ்வுலகத்தில் விட்டால் கர்மங்களை அனுபவிக்க முடியும் புண்ணியங்களும் அனுபவிக்க முடியும்...
இதனால் இங்கு அவன்(பிரம்மா) தான் பெரியவன்!!!
கலியுகத்தில் தானாகவே மனிதன் தன் கர்மத்தில் ஈடுபட்டு அழிந்து கொண்டுதான் இருக்கிறான்
அதிவிரைவில் இவை இவை என்று கூற பின் அடிக்கடி பொதிகை தன்னில்... யான் சென்று விடுகிறேன்....சென்றுவிடுகிறேன் என்றெல்லாம் சென்று விடுவான்.
ஆனாலும் மக்களைப் பார்த்து இப்படி கர்மா உலகத்தில் பிறந்து விட்டார்களே!!!! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கஷ்டங்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றதே!!!
என்று எண்ணி.... மக்களை பாதுகாத்து தான் கொண்டிருக்கின்றான். இரவு பகலுமாக.....
ஆனால் உண்மையில் மக்கள் நிச்சயமாய் உணரமாட்டார்கள் என்பது திண்ணமான!!! திண்ணமான உண்மை!!! யானே!!! சொல்கின்றேன்.
என்னிடத்திலே வருபவர்கள் எதை எதையோ நினைத்துத்தான் வருகிறார்கள்!!!!
தன் தொழில் சிறக்குமா!??
தன் பிள்ளைகள் நலமாக இருக்குமா!???
எவையென்று கூற தான் வாழ வேண்டுமே என்று எண்ணி!!அவை எல்லாம் கேட்டு விட்டால் நிச்சயம்.... ஆகாது என்பேன்!!!!
அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் அனைவரும் செல்வ செழிப்போடு இருக்க வேண்டும்.... என்று நீ நினைத்தால் நிச்சயம் உந்தனுக்கு அள்ளியும்... கொடுப்பேன்!!!
ஆனால் ஒருவர் கூட நிச்சயம் அவைதன் உணரமாட்டார்கள்!!!
அனைவரும் ஒன்றை மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும்.
நீங்கள் மற்றவருக்கு என்ன செய்தீர்களோ அவை தான் உங்களுக்கு நிச்சயமாய் வரும் என்பேன். இவைதான் கட்டளை!!!! இறைவனுடைய கட்டளை!!!!
பிரம்மாவின் கட்டளை!!!!
அதனால் பிரம்மா சரியாகவே கணித்து இங்கு அனுப்புகின்றான். அதுதான் இங்கு நடக்கப் போகின்றது... அதை மீறி ஒன்றும் நடக்கப்போவதில்லை.
ஆனால் நிச்சயம் நடக்கும் அகத்தியன் மனது வைத்தால்!!!!!!!!
விதியை மாற்றும் தகுதி அகத்தியனுக்கு மட்டுமே உண்டு!!! சொல்லிவிட்டேன்
ஆனாலும் இவையன்றி கூற அகத்தியனை வணங்க!!! வணங்க!!! சில சில கஷ்டங்கள் ஏற்படும்.
ஆனாலும் அகத்தியன் அதை பார்த்துக்கொண்டு அமைதியாக தான் இருப்பான்.
ஏனென்றால்?? கர்மா!! கழிய வேண்டும்!!!!
ஆனாலும் கைவிட மாட்டான்!!!!
அனைத்தும் கொடுப்பான்!!!!
இதனால் எவை என்று கூற சில சில வழிகளிலும் இங்கு நிச்சயமாய்... எவ்வாறு என்பதையும் கூட உணர்ந்து உணர்ந்து வருபவர்களுக்கு... நிச்சயம் அகத்தியன் விதியை மாற்றுவான்..... இவ்வளவு தான் உண்மை.
பல பேர்களுக்கும் விதியை மாற்றி அமைத்து இருக்கின்றான்.
ஆனால் அகத்தியனை நம்பி விட்டால் எவ்வாறு உண்மை நிலை புரிந்து எங்கு அழைத்துச் செல்ல வேண்டும்???
இவந்தனை எங்கெல்லாம் திரிய வைக்க வேண்டும்??? என்பதைக் கூட சரியாக கணித்து அங்கெல்லாம் பின் செல்ல வைத்து கர்மாக்களை சுத்தமாக அழித்து விடுவான்!!!!
இதனால் அனைத்து தெய்வங்களின் பரிபூரண அருளை பெற்று விடுவான்.
ஆனாலும் இரவு பகலாக உழைத்துக் கொண்டுதான் இருக்கிறான் அகத்தியன்.
தன்னை நம்பியவருக்கு கெடுதல் செய்யக்கூடாதே என்று எண்ணி!!! கர்மங்கள் எப்படி போக்கவேண்டும்??? என்று கூட...
அதனால் இத்தலம் ஓர் சிறப்பு வாய்ந்ததாகும்!!!!
நம்பி வந்து விட்டால் யானும் செய்வேன்!!!! அகத்தியனும் செய்வான்!!!!
எவையென்று கூற.... யாங்கள் சேர்ந்து பிரம்மாவிடமே முறையிடுவோம் சொல்லிவிட்டேன்!!!!
அகத்தியன் வேறல்ல!!!! யான் வேறல்ல!!!!!!.......இங்கு!!!!!
அதனால் யாரும் எவை என்று உணரவும் மாட்டார்கள்!!!!அதிவிரைவிலே!!!!!
புதிதாக வருவோர் இது அகத்தியனா?????!!!!!! இல்லை முருகனா!!!???? என்று கூட..... மனதில் தோன்றும் என்பேன்.
எளிதில் இயலாது என்பேன்.
காரியங்கள் இன்னும் நடக்கவுள்ளது. பல மனிதர்களுக்கும் இவை என்று கூற கலியுகத்தில் உண்மையான பக்திகள் பின் குறைந்து கொண்டே போகும்.
அதனால் நிச்சயம் தன் பக்தர்களை காப்பதற்கே அகத்தியன் திரிந்து கொண்டிருக்கின்றான்.
கர்மாக்கள் அழித்துக்கொண்டே எவை எதனை உணர்வின் மூலம் என்பதைக்கூட தன் மனிதனை இவ்வாறு நடத்தினால்!!! அவன் கர்மா நலமாகிவிடும்.... நலமாகிவிட்டு மோட்ச கதிக்கு அழைத்துச் செல்லலாம் என்று கூட...
அதனால் அகத்தியனை நம்பியவனுக்கு... நிச்சயம் கஷ்டங்கள் வரும் !!
மனதை தேற்றிக் கொள்ள வேண்டும். ஆனால் கிழவி இருக்காது இதுதான் உண்மை.
ஆனால் அகத்தியன் நிச்சயம் அனைத்தும் மாற்றி விடுவான் மாற்றி விட்டாலும் பிறவிகள் தோறும்.. பின் கடந்து கடந்து செல்ல வேண்டும்.
அதனால்தான் பிறவிக் கடலைக் கடக்க பின் அகத்தியன் எளிதாக உதவுவான். மற்றவர் யாரும் உதவ மாட்டார்கள் சொல்லிவிட்டேன்.
இதனை நன்கு உணர்ந்து மக்களே திருந்தி கொள்ளுங்கள்.
பிறவிக் கடலைக் கடக்க பின் அகத்தியன் எளிதாக உதவுவான். மற்றவர் யாரும் உதவ மாட்டார்கள் சொல்லிவிட்டேன்.
இதனை நன்கு உணர்ந்து மக்களே திருந்தி கொள்ளுங்கள்.
ஏதாவது உயிரினத்திற்காவது அனுதினமும் உணவு கொடுத்து வாருங்கள்.
அப்பொழுதுதான் பின் அகத்தியனும் பிரம்மாவிடம் சென்று முறையிடுவான்.
தான் வாழ வேண்டுமே என்று எண்ணி!!அவை எல்லாம் கேட்டு விட்டால் நிச்சயம்.... ஆகாது என்பேன்!!!!
அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் அனைவரும் செல்வ செழிப்போடு இருக்க வேண்டும்.... என்று நீ நினைத்தால் நிச்சயம் உந்தனுக்கு அள்ளியும்... கொடுப்பேன்!!!
ஆனால் ஒருவர் கூட நிச்சயம் அவைதன் உணரமாட்டார்கள்!!!
அனைவரும் ஒன்றை மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும்.
நீங்கள் மற்றவருக்கு என்ன செய்தீர்களோ அவை தான் உங்களுக்கு நிச்சயமாய் வரும் என்பேன். இவைதான் கட்டளை!!!! இறைவனுடைய கட்டளை!!!!
பிரம்மாவின் கட்டளை!!!!
=============================================================================
இறைவா !!!!! நீயே அனைத்தும்.
அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
சித்தன் அருள் - 1148 - ஸ்ரீ பாலசுப்ரமண்ய ஸ்வாமி ஆலயம், எரித்தாவூர்!
https://siththanarul.blogspot.com/2022/06/1148.html
26/5/2022 அன்று குருநாதர் அகத்தியபெருமான்/ முருகர் உரைத்த பொதுவாக்கு
வாக்குரைத்த ஸ்தலம் :ஸ்ரீ பாலசுப்ரமண்ய ஸ்வாமி ஆலயம். எரித்தாவூர். திருவனந்தபுரம்.
ஆதி ஈசனின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.
வருபவர்களையெல்லாம் சாய்த்தான். ஆனாலும் யான் சொன்னேன்.
முருகா!!!! எதையன்றி கூற தண்டித்து விடாதே!!!! மயக்க நிலையில் எல்லாரையும் இட்டுவிடு!!! அவரவர் கர்மா அவனவன் அனுபவிக்கட்டும்!!! என்று.
ஓர் மண்டலம்(48 நாட்கள்) நல் விதமாக....." நமோ நாராயணா " நமோ நாராயணா " என்று சொல்லிட்டு.... நல் விதமாக1008 முறை போற்றிட்டு... நல் விதமாகவே சில சில மனிதர்களுக்கும் தானங்கள் ஈந்து நல் முறையாகவே பத்மநாப சுவாமியை பார்த்தால் அவன் கர்மங்கள் நிச்சயம் அழியும் என்பேன்.
பத்மநாபன் பல பணங்களை ஒர் குகைக்குள் பின் நல் விதமாகவே குவித்து இருக்கின்றான் அதன் அடியிலே!!!!
இதனால் மனிதர்களுக்கும் எடுத்துச் செல்லுங்கள் என்று தாராளமாக கொடுப்பான்!!!எதையென்று கூற அதனால் தாராளமான மனசுகாரனாக அங்கே திகழ்கின்றான்.
ஏனென்றால் யானும் அதை அவந்தனுக்கு கூறிவிட்டேன்... இவ்வாறு தான் இருக்க வேண்டும் என்று கூட!!!
இதனால் அப்பனே தெரிந்துகொள்ளுங்கள் அப்பனே திருத்தலங்களைப் பற்றி அப்பனே மனிதன் அழித்துவிட்டான்.
பல பல பல மனிதர்கள் பலப்பல எங்கெங்கிருந்தோ இங்கு வழிபட்டு பின்பு பல தரித்திரங்களும் நீங்க!! நீங்க!! .. . எதையன்றி கூற பத்மநாப சுவாமியின் பற்று பின் பற்றாகவே இருந்தால் அனைத்தும் கொடுப்பான்.எதையென்று கூட....
ஆனாலும் இவன் அருள் இல்லாமல் இங்கே வரமுடியாது சொல்லிவிட்டேன்!!!
இதனால் பல விரதங்கள் எதையென்று.... ஓர் மண்டலம்(48 நாட்கள்) நல் விதமாக....." நமோ நாராயணா " நமோ நாராயணா " என்று சொல்லிட்டு.... நல் விதமாக1008 முறை போற்றிட்டு... நல் விதமாகவே சில சில மனிதர்களுக்கும் தானங்கள் ஈந்து நல் முறையாகவே பத்மநாப சுவாமியை பார்த்தால் அவன் கர்மங்கள் நிச்சயம் அழியும் என்பேன்.
பத்மநாபன் பல பணங்களை ஒர் குகைக்குள் பின் நல் விதமாகவே குவித்து இருக்கின்றான் அதன் அடியிலே!!!!
இதனால் மனிதர்களுக்கும் எடுத்துச் செல்லுங்கள் என்று தாராளமாக கொடுப்பான்!!!எதையென்று கூற அதனால் தாராளமான மனசுகாரனாக அங்கே திகழ்கின்றான்.
ஏனென்றால் யானும் அதை அவந்தனுக்கு கூறிவிட்டேன்... இவ்வாறு தான் இருக்க வேண்டும் என்று கூட!!!
இதனால் அப்பனே தெரிந்துகொள்ளுங்கள் அப்பனே திருத்தலங்களைப் பற்றி அப்பனே மனிதன் அழித்துவிட்டான்.
இவ்வாறு திருத்தலங்கள் சென்று சென்று பின் எதை என்று கூட மனிதன் நலம் பெற்று விட்டால் எப்படி வாழ்வது என்று உயர் செல்வாக்கு உடையவர்கள் அப்பனே மனிதனை தடுத்துவிட்டார்கள் அப்பனே புத்தகங்களை மாற்றியும் எழுதிவிட்டனர். அப்பனே!! தரித்திர மனிதன் அப்பனே இக்கலியுகத்தில் அப்பனே மனிதர்கள் பலவினைகளை சுமந்து எங்கு ?எங்கு ?செல்ல வேண்டும் ?!என்று தெரியாமல் அலைந்து கொண்டு இருக்கின்றார்கள் அப்பனே.
அதனால் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே... நலமாக நலமாக அப்பனே பிறவிக் கடலை நீந்துங்கள் அப்பனே ... பிறவிக் கடலை நீந்தாவிடில்... அப்பனே நீந்தி நீந்தி அப்பனே கஷ்டங்கள் தான் வரும் அப்பனே.
பணத்திற்காக சென்றடைந்தீர்கள் ...ஓடி!!! ஓடி!!! ஆனால் எதை எதையோ கர்மத்தை சேர்த்துக்கொள்ள ஓடோடிப் போய்க் கொண்டிருக்கிறீர்கள்.
ஆனால் படியேறி வாருங்கள் !!!!! கர்மத்தை தீர்க்க என்று முருகன் மனதில் நினைத்துக் கொண்டான்.
அதனால்தான் அப்பனே சொல்கின்றேன் அப்பனே!!!
ஏறுங்கள்!!!! கர்மம் கரையட்டும் அப்பனே!!!!!!
பின் எதையென்று கூற பணத்திற்காக ஓடுகின்றீர்களே... அப்பனே எதையென்று கூற.... அதனால் அப்பனே கர்மாக்களை சேர்த்துக்கொள்ள ஓடுகின்றீர்களே அப்பனே.... புண்ணியத்தை சேர்த்துக் கொள்ள ஓடோடி வாருங்கள் அப்பனே!!!!!
முருகனை காண அப்பனே!!!!
முருகனை எதை எதை என்று கூற பல பல வகையிலும் அப்பனே தெரியாத அளவிற்கும் கூட சில சில விதிகள் அமையாயிருப்பினும்...இவ் முருகன் நிச்சயமாய் மாற்றுவான் என்பேன் அப்பனே.
நல் விதமாக என்னிடத்திலும் இரவில் வந்து தங்கி பேசுவான்... பல உரையாடல்களை இப்பொழுதும் கூட அங்குமிங்கும் வந்துகொண்டுதான் இருக்கின்றான் முருகன்.
அப்பனே சொல்கின்றேன் அப்பனே!!! இளமையிலே தேடுங்கள் அப்பனே இறைவனை... அப்பனே நல் விதமாக... சென்றிட்டுவாருங்கள் ஆங்காங்கே அப்பனே!!!
கர்மம் ஒழியும் என்பேன் அப்பனே!!!
திருத்தலங்கள் எதற்காக??? எவையென்று கூற அப்பனே இன்னும் இன்னும் இன்னும் சூட்சமங்கள் மறைந்துள்ளன அப்பனே!!!
சில சில திருத்தலத்திற்கு சென்றால்... அப்பனே நலன்களே மிஞ்சும் என்பேன் அப்பனே.. எவையென்று கூற...
ஆனால் கர்மா சுமந்தே செல்கின்றான் மனிதன்! அக் கர்மாவையும் எப்படி எத் திருத்தலத்திற்கு சென்றால் நலமாகும் என்பதைக் கூட வரும் காலங்களில் எடுத்துரைக்கின்றேன் அப்பனே!!
இவையன்றி கூற அப்பனே பத்மநாபன் அப்பனே உயிரோட்டம் ஆகவே இருக்கின்றான்!!!! கேட்கும் வரத்தை அப்படியே தருவான்!!! ஆனாலும் அப்பனே எப்படி? போகவேண்டும் என்பதைக் கூட யான் சொல்லிவிட்டேன் அப்பனே... நல் விதமாக இன்னும் சொல்லிக் கொண்டே போவேன். அப்பனே!!!!
நல் விதமான வாக்குகள் ஆசிகள்!!! ஆசிகள் !!!உண்டு என்பேன்!!!!
=============================================================================
சித்தன் அருள் - 1149 - அன்புடன் அகத்தியர் - மருதோதய ஈஸ்வரமுடையார் சிவநேசவல்லி தாயார் திருக்கோயில். வி. கோயில்பட்டி
13/5/2022 அன்று திருமூலர் உரைத்த ஆலய பொதுவாக்கு வாக்குரைத்த ஸ்தலம் : மருதோதய ஈஸ்வரமுடையார் சிவநேசவல்லி தாயார் திருக்கோயில். வி. கோயில்பட்டி விக்கிரமங்கலம் . மேலக்கால் வழி சோழவந்தான் மதுரை.
அணுவுக்கு அணுவாக இயங்குகின்ற ஆதி ஈசனை மனதில் எண்ணி பரப்புகின்றேன் இத்தலத்தை பற்றி...மூலன்.
நிச்சயம் இதையன்றி இன்னும் இன்னும் வெற்றிக்கான படிகள் இங்கே...அமைந்துள்ளது. நன்கு கவனித்தால் நன்கு கவனித்தால் இதனை 108 முறை எவை இத்திருத்தலத்தை சுற்றிச் சுற்றி ஒவ்வொன்றையும் பற்றி தீர சிந்தித்தால்.. நிச்சயம் ஒரு மாற்றம் ஏற்படுவது உறுதி. அதனை யான் சொல்வதற்குள் நீங்களே பதிலளித்து பதிலுக்கும் கேள்விகளுக்கும் உண்டு. அதனையும் அறிந்து ஆனாலும் இதை அறிந்துவிட்டால் மனிதனுக்கு ஏதும் ஆசைகள் போகாது சொல்லிவிட்டேன்.
கொங்கணன் இருக்கும் இடம் பொக்கிஷம்!!! தங்கம்!!
இதையன்றி கூற ஆனாலும் வித்தைகள் பல பல ஆனாலும் கொங்கணனும் இன்னும் கூட.... எதிரிலே வலம் வந்து கொண்டிருக்கின்றான்.
மலையிலே.
இதனை நோக்கி [ இந்த ஆலயத்தில் தரிசனம் செய்து விட்டு திருப்பதி திருமலை தரிசனம் செய்ய வேண்டும் ]நோக்கி பின் விஷ்ணுவிடம் சென்றால் ஒற்றை அலை அளவிற்கும் கூட அதிவிரைவிலே ஆனால் நிச்சயம் பின் கோடிக்கணக்கில் குவித்து வைப்பான் கொங்கணன்.
ஆனாலும் இதற்கு கூட பெருமாள் விடமாட்டான்.
ஏன்? இவந்தனை பின் செல்வந்தனாக ஆக்கவேண்டும் என்று கூட...
அதனையும் பின் கடந்து கடந்து சென்றால் ஐயோ பாவம் என்று கொங்கணன் ஆசீர்வதித்து விட்டால் செல்வங்கள் மிகுந்து காணப்படுவான்.
ஆனால் பெருமாள் விடுவதே கடினம்.
இன்னும் சிறப்புக்கள் சித்தர்களின் ரகசியங்களை தெரிந்து கொள்வதற்கும் அதற்கும் தகுதிகள் நிச்சயம் நீங்கள் புண்ணியம் செய்தாலே பின் அதனையும் யாங்கள் தெரிவித்து விடுகின்றோம்.
=============================================================================
சித்தன் அருள் - 1150 - அன்புடன் அகத்தியர் - உச்சிஷ்ட கணபதி, திருநெல்வேலி வாக்கு!
வாக்குரைத்த ஸ்தலம் : உச்சிஷ்ட கணபதி கோயில் மணிமூர்த்தீஸ்வரம். திருநெல்வேலி மாவட்டம்.
ஆதி சித்தனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்.
நலமாக!!! நலமாக!!! இத்திருத்தலத்தில் பல அதிசயங்கள் உண்டு !!!என்பேன். உண்டு என்பேன் எதற்காக சிலசில பலத்த கர்மாக்கள் மனிதனுக்கு பின் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றது கலியுகத்தில். பின் எதனையென்று கூற.....
ஆனாலும் கர்மாக்கள் சிலவையே (சிறிதளவே) என்று எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆனாலும் பலத்த எதையென்று கூற உச்சம்பெற்ற... அப்பனே பாவங்கள் அப்பனே ""அஷ்டமா"" எதையென்று கூற அவ் ""அஷ்டமா!!!!!(8 வகையான பெரும் பாவங்கள்) கர்மாக்களை பெற்றவர்கள் எதையென்று கூற நிச்சயம் வாழ்வில் உயர மாட்டார்கள் என்பேன்.
எத்திருத்தலத்திற்கு சென்றாலும்... எதனை என்றாலும் கூட ஒன்றும் செய்ய இயலாது.
செய்ய இயலாது என்பேன்.
அதுமட்டுமில்லாமல் ஏதும் நடக்காது என்பேன்.அவ் அஷ்ட கர்மாக்களை நீக்கினால்தான் மனது தெம்படையும் என்பேன்.
அவை மட்டுமில்லாமல் அனைத்தும் நிறைவேறும் என்பேன். எதையென்று கூற பல பாக்கியங்கள் வந்து சேரும் என்பேன்.
அதனால் எதை என்று கூற அவ் அஷ்டகர்மத்தை வைத்துக் கொண்டு எங்கு சென்றாலும் நிச்சயம் இறைவனை அடைய முடியாது என்பேன்.
கஷ்டங்கள் தான் கூடிக்கொண்டே இருக்கும். இவையென்று கூற .....
ஆனாலும் இவை தன் முன் ஜென்மத்தில் வந்தவையா??
இந்த ஜென்மத்தில் வந்தவையா?? என்று கேட்டால் நிச்சயம் அனைத்து ஜென்மங்களிலும் இருந்து வந்தவை!! இச் ஜென்மத்திலிருந்தும் வந்தவையே என்பேன். பிறப்பெடுத்தும் கூட....
இதனால் எதை என்று கூற இத்திருத்தலத்திற்கு வந்து கொண்டே சென்று கொண்டிருந்தால் அவ் அஷ்ட கர்மாக்களை அழிக்க முடியும் என்பேன்.
ஆனாலும் அதற்கும் எதை என்று கூற இவ் பிள்ளையோன்(பிள்ளையார்) வரவழைக்க வேண்டும் என்பேன். இவன் அருள் இல்லாமல் நிச்சயம் இங்கு வர முடியாது என்பேன்.
ஆனாலும் பல மனிதர்கள் இங்கே வந்து வந்து பல அரசர்கள் இங்கே வந்து வந்து உயர்வுகள் பெற்றடைந்தனர்....
ஆனாலும் சில மனிதர்கள் மாய பிறப்பில் எதையென்று கூறாத அளவிற்கும் கூட... இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்பதைக்கூட மக்களின் கணிப்பு என்பதே இங்கு வந்தவர்கள் திடீர்!!! திடீரென்று கூட உயர்வுகள் பெற்றுக்கொண்டே செல்கின்றார்கள். செல்வங்களும் வந்து கூடிக் கொண்டே இருக்கின்றது. நலமுடன் வாழ்கிறார்களே ! ! என்று எண்ணி பலபல செய்கைகள் அற்ற பின் புத்தியில்லாத மனிதர்கள் இதனையும் கெடுத்து விட்டனர்.
ஆனாலும் இவ் உலகத்தின் முதல் எதையென்று கூற பின்... பின், ......"""அ"""" என்ற வடிவில் வந்தவனே கணபதியே!!!! எதையன்றி ஆனாலும் அவந்தன் விடுவானா!! என்ன???
அதனால் நிச்சயம் இக்கலியுகத்தில் எதை என்று கூற எதனை என்றும் கூறாத அளவிற்கும் கூட வெற்றிகள் உண்டு என்பதற்கிணங்க நிச்சயம் நல்லோர்களை இங்கு அழைத்துக் கொண்டுதான் இருக்கின்றான் இன்னமும்கூட!!!!!
அதனால் நல்லோர்கள் தான் நிச்சயம் இங்கு வந்தடைய முடியும் மோட்ச கதியையும் அடைய முடியும். எதையென்று கூற சில கர்மாக்களையும் பின் நீக்கமுடியும். சொல்லிவிட்டேன்.
இதனால் எதை எதை என்று கூற பாண்டியனும் (நெடுஞ்செழியன்) இங்கு வந்து பல பல பெருமைகளை இங்கு நிகழ்த்தினான் என்பேன்.
கட்டபொம்மனும் (வீரபாண்டிய கட்டபொம்மன்) எதையென்று கூற... இங்கே வந்து எதையென்று கூற பல பல வழிகளிலும் வழிபட்டு சென்று பல அதிசயங்களை நிகழ்த்தினான் என்பேன்.
எதையென்று கூற ஆனாலும் கர்மாக்கள் எவை என்று விடாமல் சென்று கொண்டு இருக்க ஆனாலும் அவ் கர்மத்தையெல்லாம்... இங்கு நீங்கும்.
இதனால் அஷ்ட கர்மாக்களை நீக்கினால் அஷ்ட சித்துக்களை பெறலாம்....எதையென்று கூற இவ் கணபதியே கொடுப்பான் என்பேன்.
ஆனாலும் அதற்கு தீர்வுகள் கணபதியிடமே உள்ளது....எதையென்று கூற யானும் இங்கு பல தடவை வந்திட்டேன்.எதையென்று கூற பல சித்தர்களும் இங்கு வந்து சென்று கொண்டுதான் இருக்கின்றார்கள். மறைமுகமாக!!!!
அதனால் நல்லோர்கள் தான் இத்திருத்தலத்தை வந்து அடைய முடியும்!!! மற்ற யாரும் எதை என்று கூற எவ்வாறு நினைத்தாலும் இங்கே வர முடியாது என்று சொல்லிவிட்டேன். எதனையுமென்று அறிவதற்கு...
அதனால் இன்னும் பல சூட்சமங்கள் உண்டு எதனை என்று அறியாத அளவிற்கும் கூட வெற்றிகள் உண்டு... அனைவருக்கும் என்பேன்.
இதனால் எங்கெங்கு??? பலப்பல திருத்தலங்களும் அப்பனே...எதையென்று கூற தெரியாத அளவிற்கும் மறைந்து போயிற்று!!!!!!! அப்பனே!
கலியுகத்தில் இத் திருத்தலங்களைப் பற்றி இன்னும் ஏராளம் ஏராளமான வாக்குகளும் காத்துக்கொண்டிருக்கின்றது என்பேன். எதையென்று கூற....
ஆனாலும் ஓர் பிறவியில் எவையென்று கூறும் அளவிற்கு கூட.... பாண்டியன்(நெடுஞ்செழியன்) வரலாற்றைப் பார்த்தால் தோல்வியுற்றதற்காக... ஓர் ரிஷி சொல்லிவிட்டான். இதனால் பல திருத்தலங்களுக்கு அலைந்தான் அலைந்தான் எங்கெல்லாம் அலைந்தான்.
எதனையென்று கூற வெற்றி கொள்ள வேண்டுமே!!!! என்று கூட பல திருத்தலங்களுக்கு அலைந்து திரிந்து ஆனாலும் வெற்றியும் சில நேரங்களில் பெற முடியவில்லை... ஆனாலும் யோசனை!!!! இவையென்று கூட பலமாகவே!!! பலமாகவே!!!!...
"ஈசனை!!! நோக்கி எதையென்று கூறாத அளவிற்கும் கூட பக்திகள் செலுத்தினான்!!!
ஈசனே!!!! நேரில் எதையென்று எவையென்று கூற ஆனாலும் வந்து கனவில்....எதையென்று ஆனாலும் சிலசில கர்மாக்களையும் நீ பெற்றிருக்கின்றாய்... அதை நிச்சயம் இங்குள்ள பின் திருத்தலத்திற்கு செல்!!! பின் நிச்சயமாய் அங்கே தங்கி "வா!!!! .....
பலக் கர்மங்கள்.. நிச்சயம் அழிந்திடும்.பின்பு வெற்றிகொள்வாய்.உன் பெயர்!!! புகழ்!!! எதையென்று கூற இவ்வுலகத்தில்...பின் உலகம் இருக்கும் வரை நிச்சயம் உன் பெயர் அழியாது.... என்று கூட கூறிவிட்டான். சொப்பனத்திலே!!!!
அதனால் சில சில வினைகள் ஆட்கொண்டு ஆட்கொண்டு இருந்தாலும் இங்கு வந்து வணங்குபவர்களுக்கு நல் விதமாகவே கர்மாக்கள் அழிந்துகொண்டே... போகும்!!!.
ஓர் முறை!!! இரு முறையல்ல!!!!
பலமுறை வந்தடைய வேண்டும்!!!!!
எதையென்று கூறும் எவை எவை என்று கூறும் அளவிற்கும் கூட இன்னும் வெற்றிகள் தான் உண்டு என்பேன்.
தித்திக்கும்...!!! இவந்தனை வந்தடைந்து விட்டால் இன்னும் ஏராளமான விஷயங்கள் நடக்கக்கூடும்.
ஆனாலும் இதையென்று தெரியாமலேயே பின் கர்மம் செய்து எவையென்று கூற... அனைத்தும் தெரிந்து கர்மா செய்து கொண்டிருந்தாலே இவந்தன் நிச்சயம் விடமாட்டான் என்பேன்.
கர்மா அழிக்கும்!!! எதையென்று கூற... அழித்து அருள் தரும் இடம் இத் திருத்தலம் என்பேன். எதையென்று கூற ஆனாலும் அப்பனே.... இங்கு உள்ளது நெல்லைப்பன் என்ற திருக்கோயில். ஆனாலும் அதன் அருகே திடீர் திடீரென்று சென்றுவிடுவார்கள். ஆனாலும் அப்பனே அவை எல்லாம் ஆகாது என்பேன்.
இங்கு சென்று நல் விதமாகவே அங்கு வணங்கினால்(முதலில் கணபதி தரிசனம் செய்து விட்டு நெல்லையப்பர் தரிசனம் செய்ய வேண்டும்) இன்னும் அப்பனே....
ஏராளம் என்பேன்... ஏராளம் என்பேன் வெற்றிகள் அதாவது எதை என்று கூற முதலில் இங்குதான் வரவேண்டும் ஆனாலும் பின் காலப்போக்கில் மனிதர்கள் எதை எதையோ சொல்லி பின் மனிதன் தன்மையையே மாற்றி விட்டான்.
ஆனாலும் இதைத் தான் முதலில் யான் செப்புவேன் அப்பனே சொல்லிவிட்டேன்.பின் நெல்லையப்பனை தரிசித்தாலும் அப்பனே எதை எதை என்று கூற சில கஷ்டங்கள் நிச்சயம் வரும்.
அதனால் எப்படி??? வணங்க வேண்டும் என்றால் அப்பனே..... திரும்பவும் சொல்கின்றேன் இங்கு வந்து நல்முறையாக தியானங்கள் செய்து பின்பு அங்கு சென்றால் தான் நிச்சயம் அருள் கிடைக்கும் செப்பிவிட்டேன் அப்பனே.
=============================================================================
சித்தன் அருள் - 1152 - அன்புடன் அகத்தியர் - மானகௌசிகேசர் ஆலயம், அகரம். ஆலங்குளம்.
27/5/2022 அன்று குருநாதர் அகத்தியர் உரைத்த ஆலய பொதுவாக்கு.
வாக்குரைத்த ஸ்தலம் :
ஸ்ரீ சிவகாமி அம்மன் உடனுறை மானகௌசிகேசர் ஆலயம், அகரம். ஆலங்குளம். தென்காசி மாவட்டம்.
ஆதிமூலனை மனதில் தொழுது செப்புகின்றேன் அகத்தியன்.
மனிதர்களை ஏற்படுத்தினோம்.... ஆனாலும் இவ்வாறு செய் !!அவ்வாறு செய்!!! என்றெல்லாம்.
ஆனால் மனிதனோ தன் நிலைமையை பார்த்து பின் எதை என்று கூற திருத்தலத்தை வடிவமைக்காமலே சென்று பின் பாதாளத்தில் விழுந்து கர்மத்தை அனுபவித்து மீண்டும் மீண்டும் பிறவிகள் ஏற்படுத்திக் கொண்டு வருகின்றான்.
இதனால் எதையென்று கூற ஆனால் இதனால்தான் பலம்மிகுந்த திருத்தலங்கள் இன்னும் ஏராளம் இருக்கின்றது இவ்வுலகத்தில் அப்பனே. அதை மீட்டெடுத்தாலே போதுமானது..அதன். திறமைகள் அதிகம் என்பேன் அப்பனே.
இதனால் பலபல எதை என்று கூறும் அளவிற்கும் கூட கலியுகத்தில் பல பெண்கள் எதையென்று கூற தவறான வழியிலே செல்வார்கள்!!! அவர்களெல்லாம் இங்கே வந்து நலம் பெறுவார்கள்!!!
இன்னும் பல பல வழிகளில் உண்மைகள் புரியும்!!!
பல நோய்நொடிகள் இல்லாமல் எதையென்று கூற நேர்மையாகவே வாழ்வார்கள் என்பதைக்கூட திண்ணமாக சப்தம் கேட்டது!!!!!
இதனால் பல வழிகளிலும் வந்தார்கள் ஆனாலும் எதையென்று கூற... பாண்டிய மன்னன் ஒரு யோசனை இட்டான்...
ஆனாலும் அகத்தியன் பல பல வழிகளிலும் பல உலகத்தை சுற்றி வந்து விடுவானே!!! இதனால் இங்கே நிறுத்த வேண்டும் என்று எண்ணி...
அகத்திய முனிவரே இதையன்றி கூற.... இவ்வளவு தலத்தை அமைத்தாயே!!! நீ எங்கும் போகக்கூடாது இங்கே தான் இருக்க வேண்டும் என்று கூட...
எதையன்றி கூற என் கால்களைப் பிடித்துக் கொண்டான்!! ஆனாலும் இவற்றின் என்று கூற சரி என்று கூட யான் அப்படியே நின்று விட்டேன்!!!
ஆனாலும் எதை என்று கூற என் உடம்பை எதை என்று கூற பின் வந்துவிட்டேன் ஆனாலும் என் உயிர் எதை என்றுகூட இங்கேயே நின்று விட்டது.... அதற்கும் வடிவம் கொடுத்து எதையென்று கூற சரி..... இவற்றின் வடிவில் இருந்து வந்தவையா... இல்லை... எதையென்றும் நிர்ணயிப்பது போலே..
.சரி பாண்டிய மன்னனே யான் இங்கேயே இருக்கிறேன்...எதையன்றி கூற என்று நிற்கும் அளவிற்கு கூட பாண்டிய மன்னனும் எதை என்று கூற அகத்திய முனிவரே நீ... இங்கே தான் இருக்க வேண்டும் என்று எண்ணி...
ஆனாலும் யானும் எதை என்று கூற இவ்வளவு பற்று கொண்டுள்ளானே!! மன்னன் என்று கூட இங்கேயே தங்கிவிட்டேன் பல நாட்கள்...
ஆனாலும் இப்பொழுது கூட இவையெல்லாம் எதை என்று கூற எந்தனுக்கு பல வழிகளிலும் கற்றுக் கொடுத்து தான் வந்து கொண்டிருக்கின்றது யானும் இங்கேதான் இருப்பேன்.... வருவேன் எதை என்று கூற பல மக்களையும் காப்பாற்ற....
=============================================================================
சித்தன் அருள் - 1153 - அன்புடன் அகத்தியர் - கந்தன் வாக்கு, கேதார்காட். கங்கைக்கரை காசி!
12/6/2022 வைகாசி விசாக திருநாள் அன்று கந்தன் உரைத்த பொதுவாக்குரைத்த ஸ்தலம் கேதார்காட். கங்கைகரை காசி.
அழகாக உலகை இயக்கிக்கொண்டிருக்கின்ற என் தந்தையையும் தாயையும் பணிந்து வேலனவன் செப்புகின்றேன் வாக்குகளாக!!!.....
நிச்சயம் மனிதர்களைச் சொல்கின்றேன் நீங்கள் கர்மாவை சம்பாதித்துக் கொண்டே இருக்கிறீர்கள்!!
இதனால் எவை நிச்சயம் தன் தன் கேட்காமலே நிச்சயம் அனைத்தும் வரும் என்பேன்.
மனக் குழப்பங்கள் வரும்!!! நோய்கள் வரும்!!!
ஆனால் எதையும் ஆசைப்படாமல் இறைவனே நீயே !!கதி!!! என்று நீ தான் காக்க வேண்டும்! என்று இருந்தால் நிச்சயம் எதிரே வந்து நிற்பான் என் தந்தை ஈசன்!!!!!
என் அம்மை பார்வதி!!! என் அன்பான குருவானவன்.
வரும் காலங்களில் சற்று தாய் தந்தையர் தன் பிள்ளைகளுக்கு இப்படித்தான் வாழ வேண்டும் என்ற ஒழுக்கத்தினை நிச்சயமாய் சொல்லித்தாருங்கள்!!!
அதை கேளாவிடினும் அதன் கர்மம் நிச்சயம் அதை அனுபவித்தே தீர வேண்டும்..
இன்னும் ஏராளமான இக் காசி!! தன்னில் பின் பல பிறவிகள் எடுத்து எடுத்து இன்னும் என் தகப்பனிடத்தில் எந்தனுக்கு சாவுகள் வரக்கூடாது பல மனிதர்களுக்கு நன்மைகள் செய்ய வேண்டும் என்று பல ஆன்மாக்கள் வேண்டிக்கொண்டன!!!!
இதனால் பல ஆத்மாக்கள் இங்கேயெல்லாம் தியானங்கள் செய்து கொண்டேதான் இருக்கின்றது!!!
இதனால் தான் இங்கு வந்தால்... அவர்கள் கண்ணில் பட்டால் கர்மம் போகும் என்பதை கூட... வரமாக யான் சொல்லிவிட்டேன்!!!!!
என்னை!! என் பெயரைச் சொல்லியும் கூட புசுண்டன் என்று கூட மக்களை ஏமாற்றுகின்றான்..
ஆனால் அவன் ஒரு முறை கூட நிச்சயம் காசி தன்னில்... ஆனால் பக்தன்!!! சித்தன்!!! ஞானி!!! என்றெல்லாம் பொய் கூறி உரைத்துக் கொண்டிருக்கின்றானே!!! என் தந்தையிடத்திற்கு (காசி) வரச் சொல்லுங்கள் பார்ப்போம்!!!!!!!!!!!
நிச்சயமாய் அப்பொழுது தெரியும்!!! உண்மையானவனா நீ???? என்று கூட.......!!!!
பயந்து பயந்து ஒளிந்து கொண்டிருக்கிறான்!!!
காசுகளுக்காக காசுகளால் ஏற்படுத்திக்கொண்டு எதை எதையோ செய்து செய்து ஆனால் கர்மா என்று ஒன்று இருப்பதை மறந்துவிட்டானே!!!! மனிதன்.
நிச்சயமாய் நிச்சயமாய் கர்மா வருவது எப்படி என்று எண்ணிப் பார்த்தால் தப்பித்துக்கொள்ளலாம்!!
அதனால் கடைசியில் கர்மா விடாது மனிதனே!!!!
என் தாய் தந்தையரும் (ஈசன் பார்வதி தேவி) மிக்க மகிழ்ச்சி ஆகவே இங்கு வலம் வந்து கொண்டே இருக்கின்றார்கள்!!! இதனால் பல பல பல பல சித்தர்களும் பல ஞானியர்களும் ரிஷிகளும் இங்கு வந்து அழகாகவே அதிகாலையிலே நீராடுகிறார்கள்!!!!
இதையென்று கூற பின் மேலே!!!! எதையென்று கூற இமயமலையிலிருந்து இன்னும் பல பரிசுத்தமான ஆன்மாக்கள் பின் உடம்பு தான் இல்லையே..... உயிரோடு நீராடிக் கொண்டிருக்கின்றது!!! அந் நீரானது வந்து கொண்டே தான் இருக்கின்றது!!!
நிச்சயம் பின் அதில் மூழ்கினால் கர்மங்கள் பல கர்மவினைகள் தீரும்!!!!
அதற்கும் என் தந்தையின் அருளாசிகள் பெற வேண்டும்!!!!
என் தந்தையின் அருள் ஆசிகள் பெற வேண்டும் என்பதற்கிணங்க யான் சொல்லி விடுகின்றேன்!!!!
அனுதினமும் அதிகாலையிலே என் தந்தையினை 108 முறை சுற்றியும் என் தாயவளை 108 முறை சுற்றியும்(ஈசனையும் பார்வதி தேவியையும் தனித்தனியாக 108 முறை சுற்றி வணங்க வேண்டும்) சுற்றியே மாதங்கள் வந்தால்.... பல மாதங்கள் இப்படியே செய்து கொண்டிருந்தால் நிச்சயம் என் தந்தையே அனுமதித்து விடுவான் இக் காசி தன்னில் நீராட!!!!!!
மற்றவையெல்லாம் செல்லாது!!!!! செல்லாது!!!!
சொல்லிவிட்டேன் ரகசியத்தை!!!!
இதை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்!!!
=============================================================================
14/6/2022 வைகாசி பௌர்ணமி அன்று பார்வதி தேவி அம்பாள் உரைத்த பொதுவாக்கு
வாக்குரைத்த ஸ்தலம் : திருப்பனந்தாள் குமாரசாமி மட ஆலயம் கேதாரேஷ்வரர் . கேதார்காட்.கங்கை கரை. காசி.
என் உள்ளமெல்லாம் பரவி நிற்கும் என் அன்பானவனை நேசித்து வணங்கி உமையவள் பரப்புகின்றேன் வாக்குகளாக!!!!!!!!
என் பிள்ளை அகத்தியனும் வலம் வந்து கொண்டே இருக்கின்றான்.... மனிதர்கள் எவரும் நல்படியாக !!நல்படியாக சிந்தனையில் இருப்பார்களா?!!! இருப்பார்களா?!!! நல்லெண்ணங்கள்!! நற்பண்புகள்!! என்றெல்லாம்!!!!
ஆனால் மனிதனோ என் பிள்ளையை வைத்து சம்பாதித்து சம்பாதித்து பல கர்மவினைகளை ஏற்படுத்தி தானே ஏற்படுத்தி கடைசியில் என் பிள்ளையை அகத்தியனை...யான் அகத்தியனை வணங்கினேனே !!என்று குறை கூறுவார்கள் இவ்வுலகத்தில்.
அப்படி குறை கூறியோர் அப்படி என் பிள்ளையை குறை கூறுபவர்கள் வாயை யான் நிச்சயம் அடைப்பேன். வாயை அடைப்பேன்.
=============================================================================
சித்தன் அருள் - 1155 - அன்புடன் அகத்தியர் - காசியில் பொது கேள்வி/பதில் வாக்கு!
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!
நம் குருநாதர் புண்ணிய பூமியான காசியில் கேதார்காட் ல் உள்ள திருப்பனந்தாள் குமாரசுவாமி மடத்தின் நிர்வாகத்தில் கீழுள்ள தெய்வப் புலவன் அய்யன் திருவள்ளுவர் சன்னதியில் சில அகத்திய அடியவர்கள் எழுப்பிய பொதுவான கேள்விகளுக்கு பதில் வாக்குகள் தந்தார் அவற்றைப் பற்றிய தொகுப்பு..
குருவே சரணம்!!! குரு பாதம் சரணம்!!! அகத்திய மாமுனியே உங்கள் பாதாரவிந்தங்கள் போற்றி!!! போற்றி !!!
குருவே!! காசி விசுவநாதர் ஞானவாபி சிவலிங்கம் குறித்து சில சர்ச்சைகள் சந்தேகங்கள் உள்ளன நீங்கள் எங்களுக்கு அதனைப்பற்றி வாக்கு உரைக்க வேண்டும்!!!
அப்பனே இதையன்றி கூற அப்பனே இன்னும் ஏராளம் அப்பனே அங்கே அடங்கி உள்ளது என்பேன் அப்பனே.... அதை வணங்கி வணங்கி அனைத்தும் அப்பனே அப்பனே இவையென்றும் பல கர்மாக்கள் விலகி ஓடியது... அதனை வைத்து எதை என்று கூற அதை தொட்டாலே அனைத்தும் வெற்றிதான் என்று இருந்தது... ஆனாலும் மாய மனிதர்கள் இதை அறிந்து நிச்சயமாய் மனிதர்கள் நன்றாக இருக்க வேண்டாம் என்று எண்ணி அதனை அப்படியே மறைத்து விட்டனர் அப்பனே.
ஆனால் யான் சொன்னேன் முன்னே. அப்பனே இன்னும் ஏராளமான அப்பனே ஈசனே எழுப்புவான் என்பேன் அப்பனே. அவனுடைய தரிசனங்களை நிச்சயம் அப்பனே மிரளத்தக்க இருக்கும் என்பேன் வரும் காலங்களில் சொல்லிவிட்டேன்.
குருவே - சுவடிகள் குறித்து பலவிதமான சந்தேகங்கள் மக்களிடையே உள்ளது அவற்றைப் பற்றி விளக்கம் தாருங்கள்!!!
அப்பனே இவையன்றி கூற ஜீவநாடி என்பது ஈசன் பின் பிரம்மா பின் விஷ்ணு அப்பனே இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து அனுமதிக்க வேண்டும். அப்பனே சித்தர்களின் அருளாசிகளோடு தேர்ந்தெடுக்கப்படும் அப்பனே.
உண்மையான சுவடிகள் பல ஆலயத்திற்கும் செல்லும் அப்பனே ஏன் ஈசனே வரவழைப்பான் அப்பனே!!! மாந்திரீக மாய சுவடிகள்... ஈசனுடைய ஆலயத்திற்கு வர முடியாது. ஏன் இவ் காசிக்கும் வரமுடியாது. அப்பனே.... அப்படியே வந்தாலும் அவையெல்லாம் செயலிழந்து போகும் அப்பனே.
அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே எதை என்று கூற அப்பனே எவனாவது பின் அப்பனே சுலபமாக நிச்சயமாய் இறைவனிடத்தில் காசுக்காக படிக்காமல் பின் நல் மனதாக சொல்கின்றார்களா நிச்சயம் இல்லை அப்பனே அப்பனே ஏமாற்றுகாரர்கள் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே எதை என்பதை கூட யான்.
அனைத்தும் காசுக்காகவே அப்பனே எதையென்று கூற அப்பனே நிச்சயம் இப்பொழுது காண்ட நாடிகள் என்று சொல்கின்றார்களே அவையெல்லாம் மனிதர்கள் எழுதியவை சொல்லிவிட்டேன் அப்பனே.
நம்பி நம்பி ஏமாந்து அப்பனே அதனால்தான் உண்மை நிலையைச் சொல்கின்றேன் அப்பனே..
காசுக்காகவே பலவற்றையும் உரைத்து அவந்தனும் கர்மாக்களை சேர்த்து விடுகின்றான் அப்பனே... இவர்களுக்கும் கர்மா சேர்ந்து விடுகின்றது அப்பனே
அப்பனே எங்கு தர்மங்கள் இருக்கின்றது அப்பனே சொல்லுங்கள். அவை மட்டும் இல்லாமல் நியாயங்கள் இல்லையப்பா.
ஆனாலும் இதையன்று கொண்டு உணர்ந்து யாங்களும் முயற்சி செய்து கொண்டே இருக்கின்றோம்.
ஆனாலும் அதில் கூட எங்களையே பின் நினைத்துக்கொண்டு எங்களையே வழிபட்டுக் கொண்டு நிச்சயம் நல்லோர்களும் கெட்டு பின் எதையன்று கூற பின் அவந்தனும் கெட்டு விட்டே சென்று கொண்டே இருக்கின்றான்.
எவ்வாறு நலமாகும்? அப்பனே !!!
உங்களுக்கே தெரியும் எப்படி எதையன்று கூற யார்?? யார்?? எதனை எதனை பயன்படுத்தி ஆனாலும் மர்மங்கள் பல ஒளிந்து உள்ளது இவ்நாடியில் அப்பனே.
பல நாடிகள் இருந்தாலும் அவற்றை எல்லாம் எப்படி இயக்குகின்றார்கள் என்பதையும்கூட ஆனாலும் எதை என்று கூற மாந்திரீகம், தாந்திரீகம் இதையன்றி கூற கையில் வைத்துக்கொண்டு விளையாடுகிறார்கள் அப்பனே இறைவனிடத்திலே.
அவையெல்லாம் ஈசன் பொருத்துக்கொண்டே இருக்கின்றான்.
அப்பனே உங்களுக்கும் தெரியாத பல விஷயங்கள் உண்டு அப்பனே...
மக்கள் பல பல சுவடிகளை நாடிச் சென்று ஆனாலும் அப்பனே மாந்திரீகத்தால் இயக்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்பது கூட மக்களுக்கு தெரியவில்லை பின் சுவடியில் மாந்திரீகத்தை வைத்து பார்க்கும் பொழுது காசுகளை கொடுத்தால் அவ் காசுகளையும் அவர்கள் பலத்த மாந்திரீகத்திற்கு செலவு செய்கின்றார்கள் அப்பனே அதனால் இதையன்றி கூற அப்பனே அவ் காசுகளும் அந்த வழியே செல்வதினால் பல பல வினைகள்!!!!
அவந்தனுக்கும் இவர்களுக்கும் ஏற்படுகின்றது அப்பனே அவ் மாந்திரீகத்தால் அழிவு தான் ஏற்படுமே தவிர ஒன்றும் நடக்கப்போவதில்லை பலப்பல சுவடிகளை நாடிச் சென்று அவர்கள் கேட்டதை எல்லாம் கொடுத்து அவர்கள் சொல்லுவதையெல்லாம் செய்து ..... எவ்வாறு என்பதையும் கூட அப்பனே எதையென்று கூற .....
ஆனால் நிச்சயம் அவ் மாந்திரீகத்தை பயன்படுத்துவர்கள் மட்டுமல்லாமல் அவர்களுக்கு உதவி செய்தவர்களுக்கும் கர்மங்கள் சேரும் எவையென்று கூற....
அப்பனே இவைதான் அப்பனே நடந்து கொண்டிருக்கின்றது சொல்லிவிட்டேன் அப்பனே
ஆனால் அதன் மூலம் அழிவு என்பதைக்கூட தெரியாமல் போய்விட்டது மனிதனுக்கு.அப்பனே!!! அதனால் அப்பனே அதனால் தான் நம்பி நம்பி ஏமாந்தது போதும் என்ற நிலைமையை யான் ஏற்ப்படுத்தி உங்களிடத்திலே யான் விட்டுவிட்டேன் அப்பனே.
நீங்கள் சரியாக எதை நினைக்கின்றீர்களோ அதைச்செய்யுங்கள். போதுமானது என்பேன் அப்பனே. அதனால் யான் சொல்லுவதற்க்கு ஒன்றும் இல்லை அப்பனே. நல்முறையாக என் பக்தர்களாக இருந்துவிட்டுச்செல்லுங்கள் அப்பனே போதுமானது.
என்னை அப்பனே நம்பியோரை யான் கைவிட்டதாக சரித்திரம் இல்லை அப்பனே.....
யானே முன்னின்று அப்பனே அனைத்தும் நல்விதமாகவே வழிநடத்திச்செல்வேன் .அப்பனே.
இனியும் மாற்றங்கள் உண்டு அப்பனே. அனைவருக்கும் என்னுடைய நல்லாசிகள்!
=============================================================================
சித்தன் அருள் - 1157 - அன்புடன் அகத்தியர் - காகபுசுண்டர் சித்தரின் திருவண்ணாமலை வாக்கு!
29/5/2022 அன்று காகபுஜண்டர் மகரிஷி உரைத்த பொது வாக்கு
வாக்குரைத்த ஸ்தலம் : திருவண்ணாமலை
நமச்சிவாயனை பணிந்து வாக்குகளாக பரப்புகின்றேன். புசுண்டனவன்...
உண்மையுள்ள ஞானிகள் நிச்சயம் மனிதர்களை மாற்றுவார்கள்.
ஆனாலும் யான் அகத்தியனுக்கு திருத்தலம் கட்டுகின்றேன்!!! முருகனுக்கு திருத்தலம் கட்டுகின்றேன்!!! ஈசனுக்கு திருத்தலம் கட்டுகின்றேன்!!! தேவிகளுக்கு திருத்தலம் கட்டுகின்றேன்!!! என்றெல்லாம் பொய் சொல்லி பணத்தை பிடுங்கி பின் ஆனால் அவன் வீடாக எண்ணிக் கொண்டு மீண்டும் மீண்டும் பணத்தை சம்பாதிக்கின்றான். பணத்தோடு கர்மத்தையும் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றான் என்பதை கூட அவன் உணரவே இல்லை!! உணரவே இல்லை!! இதையென்று மறுப்பதற்கு ஒன்றுமில்லை.
ஈசன் இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கின்றான் ஆனால் .....இவ் மலையின்(திருவண்ணாமலை) மீது அழகாக ஆடிக் கொண்டிருக்கின்றான்.
நலமாக நலமாக தேடி தேடி சென்று எதனையெல்லாம் மனிதன்.........
நிச்சயமாய்..... ஆனால் எவற்றையும் எதிர்பார்க்காமல் வணங்குகின்றானே அவன் தான் உயர்ந்த மனிதன்!!
அவந்தனுக்கு தான் இனிமேலும் அனைத்தும் கிடைக்கும்.!!
எதிர்பார்த்து எதிர்பார்த்து இறைவனை வணங்கினால் ஒன்றும் கிட்டாது!!!!
ஒன்றும் கிட்டாது மனக்குழப்பம் தான் கிட்டும்!!
பொய்யை நம்பி மனிதன் மீண்டும் பொய்யானவைகளையே செய்து செய்து கர்மத்தை ஏற்று ஏற்று கடைசியில் மடிந்து மடிந்து மடிந்து மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து எடுத்து கஷ்டங்கள் பட்டு பட்டு வருகின்றான்!!!
இது தேவையா ???மனிதா!!!
முட்டாள் மனிதனே இது தேவையா? எண்ணிக் கொள்!!!
அனைவருக்கும் இதை யான் பல வாக்குகளிலும் செப்பிக்கொண்டே வந்து கொண்டிருக்கின்றேன்.
அனைவருக்கும் அழகாக இறைவன் அறிவுகள் கொடுத்திருக்கின்றான். ஆனால் அதை பயன்படுத்தவே தெரியவில்லையே!!!
மனிதா ஆறறிவுகள் இறைவன் கொடுத்திருக்கின்றானே!!! அவ் ஆறறிவுகளை நீ பயன்படுத்தினால் நீ தான் உண்மையான மனிதன்.
ஆனால் அவ் ஆறறிவுகளை பயன்படுத்துவதில்லையே மனிதா!!????
அப்படி பயன்படுத்தினால் உயர்ந்தவனாக ஆகுவாய்!!!
=============================================================================
சித்தன் அருள் - 1158 - அன்புடன் அகத்தியர் - காகபுசுண்டர் திருப்பதி வாக்கு!
6/6/2022 அன்று காகபுஜண்டர் மகரிஷி உரைத்த பொது வாக்கு!! வாக்குரைத்த ஸ்தலம் : திருமலை திருப்பதி.
நமச்சிவாயனை பணிந்து வாக்குகளாக பரப்புகின்றேன் புசுண்டனவன்!!!
கலியுகத்தில் இறைவனை நாட!! நாட... கர்மாக்கள் ஆனாலும் எதை நிமித்தம் நிச்சயம் இறைவனே வழி விடுவான்.
அதனை விட்டுவிட்டு இன்னும் பரிகாரங்கள் ஆனாலும் தன் நிலைமையை என்ன நினைத்து எதை செய்தாலும் மனிதனுக்கு தோல்விகள் தான்.
ஆனாலும் நிச்சயமாய் பின் இறைவன் பலங்களை கூட்டி கொள்ளுங்கள்.... நிச்சயமாய் வாழ்வீர்கள் கலியுகத்தில்.
அதனால் தியானங்கள் செய்யுங்கள்!!! யான் சொல்வதை பின் இவை என்று கூற ஆனாலும் சொல்கின்றேன்.
யாங்கள் உரைப்பது நிச்சயம்... நல்லோர்க்குத்தான்!!! பின்.... கர்மம் இல்லாதவன் தான் ஓதவும் முடியும்.... சொல்லிவிட்டேன்!!!
பின் கர்மம் இருந்தால் நிச்சயம் எங்கள் வாக்குகளை கேட்கவும் முடியாது!! ஓதுதல் பின் மிகச் சிறப்பாக எதை என்று கூற உணர்ந்து கொள்ளவும் முடியாது!!!
இதுதான் கர்மா!!!
கர்மா பூமியில் பிறந்து விட்டு சித்தர்களை நாடி!!! நாடி!!!!......
யாங்கள் மனிதனை பிறவி கடலில் இருந்து நீக்குவதற்காகவே நிச்சயம் சித்தர்களும் ஞானியர்களும் ரிஷிகளும்!!!!
ஆனாலும் மனிதனோ யான் கர்மத்தில் தான் விழுவேன்!!!! பிறவி தான் எடுப்பேன் கஷ்டங்கள் தான் படுவேன் என்று கூட போய் திரிந்து கொண்டிருக்கின்றான்....
பைத்தியக்கார மனிதா!!!!
பைத்தியக்கார மனிதா!!!!
திருந்திக்கொள்!!!
=============================================================================
ஏன் சித்தன் அருள் வலைத்தளத்தில் உள்ள "அன்புடன் அகத்தியர்" நாடி வாக்குகளில் மட்டும் கர்மா இல்லை?.
ஏன்"அன்புடன் அகத்தியர்" நாடி வாக்குகளில் புண்ணியம் மட்டுமே உள்ளது.
ஏன் இவ் வாக்குகளை படிப்பவர்களுக்கும் புண்ணியம் மட்டுமே உண்டாகும்?
சித்தன் அருள் - 1562 - அன்புடன் அகத்தியர் - அயோத்யா அருள் வாக்கு!
19/1/2024 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு
ஆதி பகவானின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!!!!
அப்பனே நலன்கள் அப்பனே உலகத்தோர்க்கு !!!!!!!!!!
திருத்தலங்களுக்கு சென்றால் தான் அப்பனே அங்கு செப்பினால் தான் அப்பனே பின் எதை என்று அறிய அறிய எவரையும்!!!...........(கர்மா அண்டாது)
பின் இன்னும் புண்ணியங்கள் அப்பனே நலன்களாகவே!!!!!
அதை படிப்பவருக்கும் அப்பனே எவை என்று கூட ஓதுபவருக்கும் அப்பனே நிச்சயம் அவ் அவ் திருத்தலங்களில் கூட படித்தால் அப்பனே அதனால் தான் அப்பனே அவ் அவ் திருத்தலங்களுக்கு செல்ல சொல்லி அப்பனே நீங்கள் செல்லா விடிலும் எதை என்று அறிய அறிய எவை என்று கூட பின் நல்விதமாகவே இவந்தனை அனுப்பி
(அகத்தியர் மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா அவர்களை திருத்தலங்களுக்கு அனுப்பி)
அப்பனே அதன் மூலம் புண்ணியங்களை உங்களுக்கும் கூட சேர்த்து வைத்து கொண்டிருக்கின்றேன் அப்பனே.
இதனால் அப்பனே பின் அனைத்திற்கும் மேலானது அப்பனே எவை என்று கூற அன்பு என்பதை கூட!!!
அதனால் தான் அப்பனே அனைவருக்குமே நல்லதாகட்டும் என்பதே சித்தர்களின் தீர்ப்பு!!!!
அதனால் தான் அப்பனே கை விடுவதும் இல்லை அப்பனே உங்களையும் கூட.
=============================================================================
சித்தன் அருள் - 1161 - அன்புடன் அகத்தியர் - அகத்தியரும் சிறு குழந்தையும்!
4. ஏழைகள் அனைவரும் பணக்காரராக மாற வேண்டும்
குழந்தாய் இதை என்று கூற நிச்சயம் பின் இறைவன் கருணையால் நிச்சயம் பின் சில கர்மத்தை பின் அனுபவித்தாலும் நிச்சயம் இறைவன் பின் ஈசன் பார்த்துக் கொண்டே இருக்கின்றான் நல்லோர்களை நிச்சயமாய் உயர்த்தி வைப்பான் என்பது உண்மையே!!!
குருவே நல்லோர்களுக்கு சித்தர்களின் உண்மையான வாக்குகள் கிடைக்க வேண்டும் நீங்கள் வழிகாட்டி அருள் புரிய வேண்டும்?
அப்பனே ஆனாலும் நிச்சயம் எதையென்று கூற ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே
என்னை நம்பி வந்து விட்டால் அப்பனே நிச்சயம் அவர்களுக்கு அப்பனே ஏதாவது தவறான வழியில் சென்றாலும் நிச்சயம் யான் மீட்டெடுத்து நல்லது தான் செய்வேன் ஏனென்றால் அப்பனே அப்படிப்பட்ட பாசமிகுந்தவன் யான் சொல்லிவிட்டேன்.
அவை மட்டும் இல்லாமல் பல கர்மாக்கள் எதன் மூலம் வருகின்றது என்றால் அப்பனே பல பல மனிதர்கள் அப்பனே எதை என்பதை உணராமலே யான் சொல்லிவிட்டேன் முன்பே அப்பனே...
மாந்திரீகத்தால் அப்பனே எதை என்று கூற... அவர்களிடத்தில் நாடி நாடி சென்றால் அப்பனே... கர்மாக்கள் சேரும். அது அவர்களுக்கே தெரியாது அப்பனே.
இதனால் சுவடிகளும் பொய்யாகவே போய்க் கொண்டிருக்கின்றது அப்பனே!!!
வசிய தேவதைகளை வைத்துக்கொண்டு அப்பனே சரிமுறையாய் அப்பனே... இப்படி செய் அப்படி செய் அங்கெல்லாம் சென்றால் நடக்கும் என்பதெல்லாம் அப்பனே
இதனால்தான் அப்பனே சுவடிகள் பொய்த்து போய்க் கொண்டிருக்கின்றது!!!
அதனால்தான் யாங்கள் வந்தோம் அப்பனே!!!!
நிச்சயமாய் ஏனென்றால் அப்பனே இப்படியே சுவடிகள் சுவடிகள் என்று கூட அப்பனே சொல்லிக் கொண்டு அதை பின்பற்றி சித்தன் சொல்கின்றான் இன்னும் பல ஞானிமார்கள் சொல்லுகின்றார்கள் முருகன் சொல்கின்றான் என்றெல்லாம் அப்பனே தேவதைகளை வைத்து வசியம் செய்து அப்பனே செப்பி வருகின்றார்கள் அப்பனே!!!
அதனால் எங்கெல்லாம் எதை என்று கூற அப்பனே அதற்கு அடிமையாகி விட்டால் அப்பனே உங்களால் வாழவும் முடியாது என்பேன் அப்பனே. அதனையே சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும். இதனால் சில கர்மங்களும் தானாகவே வந்துவிடும் அப்பனே.
அதனால்தான் அப்பனே பின் யான் வரும் காலங்களில் இதைத்தான் சொல்லப் போகின்றேன்.
யாராரிடம் அப்பனே உண்மையான நாடிகள் இருக்கின்றது என்பதைப் பார்த்தால் அப்பனே இவையெல்லாம் மனிதன் எப்படி எல்லாம் பின்பற்றுகின்றான் என்பதைக் கூட பின் அவன் எல்லாம் எப்படி எல்லாம் வாழ்ந்திட்டான் என்பதையெல்லாம் வரும் காலங்களில் நிச்சயம் யான் உரைப்பேன்.
பொய்யை யான் நிச்சயம் பொய்யாக்குவேன் அப்பனே சொல்லிவிட்டேன்.
ஏனென்றால் சித்தர்கள் எதை என்று கூறும் அளவிற்கு கூட சித்தர்களை ஏமாற்றி ஏமாற்றி கடைசியில் பார்த்தால் அகத்தியன் இல்லை என்று சொல்லிவிடுவான்... முருகன் இல்லை என்று சொல்லிவிடுவான் ஈசன் இல்லை என்று சொல்லிவிடுவான் அப்பனே இதுதான் கலியுகத்தின் கட்டாயம்.
அப்பனே தெரிந்து கொள்ளுங்கள்!!! திருடர்களப்பா சொல்லிவிட்டேன்.
மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் பொய்கள் பின் பொய்கள் பேசிப் பேசி அதைச் செய்தால் இது நடக்கும் இன்னும் இன்னும் இரு மாதங்கள் பொறுத்துக் கொள்!!! உந்தனுக்கு யானே சொல்கின்றேன் அத்திருத்தலத்திற்கு செல் அப்பனே இவையெல்லாம் எவை என்று கூற ஆனாலும் அப்பனே!!!
அவைதன் அப்பனே வசிய எதை என்று கூற பின் மாந்திரீகத்தை வைத்துக்கொண்டு பின் வசிய தேவதைகளை வைத்துக்கொண்டு அப்பனே சொல்கின்றார்கள் அப்பனே.
அப்படி அவர்களிடத்தில் போக போக அப்பனே பின் வந்து கொண்டே இருக்குமப்பா குற்றங்கள்!!! ஏராளம் ஏராளம் என்பேன் அப்பனே.
அதனால் பின் அவர்களிடத்தில் செல்பவர்களுக்கும் கர்மாக்கள் இவையெல்லாம் பின் தானாகவே வந்து நிற்கும் என்பேன் அப்பனே.
அதனால் அப்பனே ஒன்றும் நடக்காது.... இன்னும் தீங்குகள் தான் அப்பனே இல்லத்தில் கூட பிரச்சினைகள் தான் சண்டைகள் தான்..... இவையெல்லாம் மாந்திரீகத்தால் அப்பனே.
அதனால்தான் அப்பனே சொல்லி விடுகின்றேன் அப்பனே
உண்மைகள் உண்டு!! உண்டு !!ஏராளம்!! என்பேன் .அப்பனே
எதை எதை பின்பற்றுவது என்று தெரியாமல் அப்பனே மனிதன் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றான் .அப்பனே அதனால் தான் அப்பனே சொல்கின்றேன்.
இதையென்று நன்கறிய யான் அருகிலேயே இருக்கின்றேன் என்று எண்ணிக் கொள்ளுங்கள்... யான் அனைத்தும் செய்து கொடுப்பேன்..... பல பல சித்தர்களும் வந்து வாக்குரைப்பார்கள் அப்பனே எதை எதை என்று கூறாத அளவிற்கு கூட....
ஆனாலும் மனிதர்களுக்கு தெரிவதில்லை அப்பனே.... இதுதான் தவறு என்பது கூட......
ஆனாலும் அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் சுவடிகளை படிப்பவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை கூட.....
ஆனால் இப்படி இருப்பதில்லை அப்பனே சில உயிர்களைக் கொன்றும் பலியிட்டும்... பின் நல்விதமாக யான் எதை என்று கூற அனைத்தும் சொல்வான்....
அது பலிக்குமா??? அப்பனே!!!
நீங்களே சொல்லுங்கள்!!!
அவை மட்டும் இல்லாமல் அப்பனே போதைப் பொருள்கள் உட்கொண்டு மறைவாகவே திரும்பவும் சுவடிகள் படிக்கின்றார்கள் அப்பனே.
அக்கர்மாக்கள் யாரிடம் சேர்கின்றது??? அப்பனே
இவையெல்லாம் யான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன்.
வரும் வரும் காலங்களில் உங்களுக்கெல்லாம் தெரியப்படுத்துவேன்.
அது மட்டும் இல்லாமல் அப்பனே இதை என்று கூற இவ்வளவு பணங்கள் கொடுத்தால் இதையெல்லாம் செய்கின்றேன்!!!! இப்படி எல்லாம்......
இறைவன் என்ன உங்களிடம் பணங்கள் கேட்டானா?? என்ன!!!
இறைவனுக்கு பல ஆசிரமங்கள் கேட்டானா ???என்ன.!!
இறைவன் பல திருத்தலங்களை உருவாக்கித் தா!! என்று கேட்டானா ??என்ன!!!
அப்பனே பொய்களைப்பா!!! பொய்!!!
இவ்வுலகமே பொய்!!!
இன்னும் முட்டாளாகவே இருக்காதீர்கள் அப்பனே
என்றால் இவ்வுலகம் அதிவிரைவில் யாரை எப்படி எல்லாம் ஏமாற்றலாம் என்று கூட அப்பனே......
ஆனாலும் ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே இப்படி சுவடி சுவடி என்று நீங்கள் எங்கு சென்றாலும் உங்களிடத்தில் பணம் இருக்கின்றது என்று இன்னும் பிடுங்கிக் கொள்வார்களப்பா!!! உங்களிடத்தில் உள்ள லட்சுமி தேவியும் சென்று விடுவாள் அப்பனே சொல்லிவிட்டேன்.
இனிமேல் சொல்லிவிட்டேன் யான் அப்பனே யான் ஆணித்தரமாக சொல்வேன் அப்பனே யாருக்காவது எதை என்று கூற சுவடிக்காக பின் எந்தனுக்கு இவ்வளவு பணங்கள் வேண்டும் என்று கேட்டால் நீங்கள் கொடுத்தால் அப்பனே இன்னும் உங்களிடத்தில் இருந்து பணங்கள் போய்க் கொண்டே தான் இருக்கும் சொல்லி விட்டேன். லட்சுமி தேவியை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்.
இப்படித்தான் மனிதர்கள் அழித்துக் கொண்டிருக்கின்றார்கள் எதை என்று கூற மாந்திரீகத்தில் அவர்கள் சொன்னதையெல்லாம்.. கேட்டு இங்கு செல் அங்கு செல் என்றெல்லாம் ஆனால் அவை உண்மையானவர்கள் செப்புவதில்லை அப்பனே.
வசிய தேவதைகளை வைத்து சொல்கின்றார்கள் அப்பனே அப்படி இருக்க கர்மாக்கள் தான் சேரும்.
எதை என்று கூற அப்பனே இன்னும் இன்னும் ஏராளம் அப்பனே உங்களுக்கு வரும் காலங்களில் யானே காண்பிக்கின்றேன்.... எப்படி எல்லாம் மாந்திரீகத்தால் செப்பி எதையெல்லாம் செப்பி எப்படி எல்லாம் செப்புகின்றார்கள் என்பதை கூட நான் உங்களுக்கு உணர்த்துவேன் அப்பனே.
ஏனென்றால் உண்மை நிலைகள் நிச்சயம் தெரிய வேண்டும் அப்பனே.
அப்பனே எதை என்று கூறாத அளவிற்கு கூட பொய்களப்பா பொய்கள்... பல் மடங்கு பொய்கள்..
அப்பனே ஒருவனால் என்ன கூற முடியும்???
இவ்வுலகத்தில் விதியின் பாதையை கணித்துக் கூறுவது சித்தர்கள் மட்டுமே!!
மற்றவர்களால் கூற முடியாது!!!
அப்பனே யான் சொல்கின்றேன் ஒன்றை... எதை என்று கூறாத அளவிற்கும்.... பின் பிரம்மன் தலைவிதியை எவ்வாறு எழுதி வைத்திருக்கின்றான்.. என்று கூறச் சொல்!!!! ஒரு சுவடியில்!!!!!!!
அப்பனே யாராலும் கூற முடியாது என்பேன் அப்பனே.
ஆனால் யான் கூறுவேன் உன் விதியை என்னவென்று கூட!!!!
அப்பனே மற்றவையெல்லாம் எப்படி செப்புவார்கள் தெரியுமா??
அப்பனே மூன்று மாதங்கள் பொறுத்துக் கொள் இன்னும் ஐந்து மாதங்கள் பொறுத்துக் கொள் அது மட்டுமில்லாமல் இத்திருத்தலத்திற்கு சென்று வா என்றெல்லாம் அப்பனே.
ஆனாலும் அப்பனே பின் வசிய தேவதைகளால் இவைகள் சொல்லும் பொழுது... அங்கு செல்கின்ற பொழுது அங்கு இறைவன் அப்பனே செவி சாய்ப்பதில்லை..... இறைவன் ஒன்றும் செய்ய மாட்டான்.
இவந்தன் இப்படி செய்கின்றான் என்று கூட கண்டுகொள்ளவே மாட்டான் சொல்லி விட்டேன் அப்பனே .
சுவடிகள் சுவடிகள் என்று அப்பனே சென்று பணத்தை கொடுத்து அப்பனே சரியான வழியில் அவர்கள் பணத்தை செலவு செய்வதில்லை அப்பனே பல தீய வழிகளில் செலவு செய்கின்றார்கள் அப்பனே அவ் கர்மாவும் உங்களை அடித்து விடும் அப்பனே.
என்னை வணங்குபவர்களுக்கு என் எப்பொழுதும் நிச்சயம் நன்மையே தான் செய்வேன் என்று கூட பல வாக்குகளிலும் சொல்லிவிட்டேன் அதனால் தான் அப்பனே சொல்கின்றேன் உண்மை பொருளைக் கூட....
மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் சுவடிகளை படிப்பவர்களும் எதை எதையோ செய்து கொண்டிருக்கின்றார்கள்... பொய் சொல்கின்றார்கள் அப்பனே பொறாமை படுகின்றார்கள் அப்பனே அப்பனே அதுமட்டுமில்லாமல் உள்ளத்தில் ஒன்று வெளியில் ஒன்று... அப்பனே யான் எப்படி எதையெல்லாம் கூறுவது என்று கூட.... எவை என்று கூற அப்படிச் சொன்னாலும் பின் கர்மங்கள் உங்களுக்கு எவை என்று கூறாமல்..... அதனால்தான் அப்பனே எவை என்று அறியாமல்…
இதை உணர இன்னும் மாற்றங்கள் உண்டு அப்பனே!!!!
இன்னும் சொல்கின்றேன் அப்பனே!!!
=============================================================================
சித்தன் அருள் - 1164 - அன்புடன் அகத்தியர் - ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்!
2/6/2022 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த ஆலய பொதுவாக்கு. வாக்குரைத்த ஸ்தலம்: ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் சமேத அகத்தீஸ்வரர் ஆலயம். வன்னி வேடு கிராமம். வாலஜா பேட்டை . ராணிப்பேட்டை மாவட்டம்.
புவனத்தை ஆளுகின்ற புவனேஸ்வரியையும் புவன நாதனையும் பணிந்து வாக்குகளாக செப்புகின்றேன் அகத்தியன்.
மக்கள் பின் எதை இப்பொழுது கூட அழிந்து போகின்றார்கள் ஆனாலும் அதனையும் யான் நிறுத்தி விட்டேன்!!! ஆனாலும் கலியுகத்தில் அழிய போகின்றார்களே!! அது எப்படி?? இன்னும் அழியப் போகின்றார்களே அதை எப்படி ??தடுத்து நிறுத்துவது?? என்று கூற.......
ஆனாலும் ஈசனோ!!!!
அப்பனே அது முடியாதப்பா!!!!!!
நிச்சயம் முடியாதப்பா!!!! ஏனென்றால் கர்மா பூமி!!!
அவனவன் செய்த கர்மாக்களுக்கு நிச்சயம் தண்டனைகள் அனுபவிக்க வேண்டும் என்று!!!!
ஆனால் இவ் அரசனோ ஈசனிடம் போராடினான்!! போராடினான்!!
இல்லை!! இல்லை!! ஈசனே!!!....... எப்படியாவது காக்க வேண்டும் என்று கூட......
ஆனால் பின் பிரம்மனோ இல்லை!! கர்மங்களுக்காகவே மனிதன் பிறக்கின்றான் அவையெல்லாம் அனுபவிக்க வேண்டுமே தவிர நிச்சயம் காப்பாற்ற முடியாது!!!
ஆனாலும்.... கருணை உள்ளவனாகவே இருக்கின்றான் அகத்தியன்!! அவனைப் போய் பார் என்று கூற!!!!
ஆனாலும் சரி என்று கூட ஓடோடி வந்தான் திரும்பவும் என்னிடத்திலே மகேந்திரவர்மன்!!!
இதனால்தான் சொல்கின்றேன் இதனால் தான் நிச்சயம் தான் தன் செய்த கர்ம வினைகள் நிச்சயம் திருத்தலங்களுக்கு அழைத்துச் செல்லாது என்பேன்!!!!
இதனால் சில சில வகையிலும் யான் சொல்லிக்கொண்டே இருப்பேன்!!!!
இதனையும் சரியாக ஆராய்ந்து ஆராய்ந்து சென்று கொண்டே இருந்தால் நன்மைகள் தான் ஏற்படும் என்பேன்!!!!
பல அரசர்களும் கர்ம வினையை இங்கே கழித்தார்கள் என்பது மெய்!!!!
இதனால் பல காலங்கள் இங்கே தவம் செய்தான் இவ் அரசன் முதலாம் மகேந்திர வர்மன்!!!!
அதனால் இன்னும் மாற்றங்கள் உண்டு !!!!
எதையன்றி கூற.... அதனால் யான் பல திருத்தலங்களையும் அமைத்தேன்!!!!
கர்மத்தை!! கர்மத்தை!! உருவாக்குகின்ற தலங்களும் எதையென்பதற்கிணங்க உருவாக்குவது எதையென்று அழிப்பதற்கு சமமானது உண்டா??
(விளக்கம் !!!மனிதர்கள் உருவாக்கும் ஆலயங்களுக்கு கர்மத்தை அழிக்கும் ஆற்றல் உண்டா?? சித்தர்கள் அமைத்த திருத்தலங்கள் மனிதர்கள் அமைக்கும் திருத்தலங்கள் இடையே வித்தியாசம் உண்டு)
அதனால் இத்திருத்தலத்தில் வந்து நிச்சயம் பின் வழிபட்டு அவை மட்டும் இல்லாமல் இன்னும் ஏனைய திருத்தலங்களுக்கும் வழிபட்டு வந்தால் நிச்சயம் கர்ம வினைகள் நீக்கி சுகத்தை கொடுக்கும்!!!!
ஏனென்றால் அப்படித்தான் யானும் பல வழிகளிலும் ஈசன் சொன்ன முறையிலே அமைத்தும் விட்டேன் ஈசன் அடிமையாகவே!!!!
ஒன்றை மட்டும் தெரிவிக்கின்றேன்!!!!
ஒருவன் தன் கர்மா பின் பலத்த பலத்த பின் காப்பாக இருக்குமானால் பின் நிச்சயம் இதுபோன்ற திருத்தலங்களை அடைய முடியாது என்பேன்!!!
இதனால் முழு முயற்சியோடு வந்து அகத்தியா!!! என்று கூட.... பின் பணிந்து!! பணிந்து!!!
அன்போடு வணங்கினாலே யானே!! அழைத்து வருவேன்!!! சொல்லிவிட்டேன்!!!
இது உண்மை!!!
கர்மாவை சேர்த்துக்கொண்டு இன்னும் பிறவா நிலையை பின் நிச்சயம் நீ அடைய மாட்டாய் என்று சொல்லிவிட்டேன்!!!!
மனிதர்களை கடைசியாக """"ஒரு முறை எச்சரித்து விடுகின்றேன்!!!!!
மனிதனால் ஒன்றும் நடைபெறுவது இல்லை மனிதனால் ஏதும் செய்ய முடிய மாட்டாது!!!!
இதனால் கர்மத்தை கர்மத்தால் தான் அழிக்க வேண்டும் என்பது நியதி!!!
இதனால் பிரம்மா இட்ட கட்டளையை( எழுதிய தலைவிதியை) ... யாரும் எங்கும் மாற்ற இயலாது!!!!!
ஆனால் எங்களைப் போன்ற சித்தர்களால் தான் நிச்சயம் மாற்ற முடியும்!!!!
ஆனாலும் அதுவும் கூட அதிலும் கூட மனிதன் இறங்கி விட்டான்!!!
யான் அகத்தியர் அருளைப் பெற்றவன்!!
யான் புசுண்ட முனியின் அருளை பெற்றவன்!!
யான் பார்வதி தேவியின் அருளைப் பெற்றவன்!!
யான் முருகனின் அருளைப் பெற்றவன்!!!
ஆனால் முருகனோ!!! நமச்சிவாயனோ!! யானோ!!
பின் நிச்சயமாய் பின் எதை என்று கூற என் அருளைப் பெற்றவன் என்பது எப்பொழுதும் யான் சொன்னதில்லை!! யாரும் சொல்வதற்கில்லை!!!
அதனால் எதையென்று கூற.... இதனால் எவை எவை என்று கூட பின் மனிதன் எப்படி பக்திக்கு வருகின்றான் என்று பார்த்து கொள்ளுங்கள்!!!
பின் அனைத்தும் எதை என்று கூட பின் அனைத்தையும் அனுபவித்து விட்டு கடைசியில் பக்திக்காவது சென்றால்... அனைத்தும் வந்துவிடும் என்று கூட!!!!
பல பக்தர்களை இப்படித்தான் பார்த்தேன்!!!
பொய்யான பக்தர்களை அப்பொய்யான பக்தர்களை எதை என்று கூட ஏற்கனவே அவன் கர்மத்தை சேர்த்துக் கொண்டிருக்கின்றான்!! அவனிடத்தில் சென்றால் பாதி கர்மா உந்தனுக்கு வந்தடையும்!!!
இது போலத்தான் நிச்சயம் மனிதர்கள் எவை என்று கூட தெரியாமலே கர்மத்தை ஏந்தி கொண்டு தான் இருக்கின்றார்கள்.
அதனால் உண்மையானவற்றை கடைப்பிடியுங்கள்!!!
இனியும் இன்னும் பல சிறப்பான திருத்தலங்களை எடுத்துரைப்போம்!!!
அங்கெல்லாம் சென்று கர்மம் தீர்த்து, சிறப்பாக வாழ்க்கையை வெற்றி கொண்டு மற்றவர்களுக்கும் உதவிட நன்று என்பேன்....
மற்றொரு வாக்கும் அதிவிரைவிலே செப்புவேன்!!!!
முற்றே!!!!!!!!!
=============================================================================
சித்தன் அருள் - 1166 - அன்புடன் அகத்தியர் - ரகுநாத்ஜி மந்திர். ஜம்மு காஷ்மீர்!
29/7/2022 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த ஆலய பொதுவாக்கு
வாக்குரைத்த ஸ்தலம் : ரகுநாத்ஜி மந்திர். ஜம்மு காஷ்மீர்.
குன்றினில் அழகாக அமர்ந்திருக்கும்!! குன்றா!!!!! போற்றி..... போற்றியே உந்தனை பணிந்து வாக்குகள் பரப்புகின்றேன் அகத்தியன்!!!!!
ஒவ்வொரு சாலிகிராமத்திலும் அவை உயிர் அடங்கி உள்ளது என்பேன்!!!!
இதனால் நிச்சயம் இங்குள்ள எவை என்று கூற ஒவ்வொரு பின் பரிசுத்த ஆன்மாக்களும் வரும்பொழுது நிச்சயம் அவ் அனுமான் ஜீவராசிகளும் நிச்சயம் பின் மனிதர்களை ஆசிர்வதித்து ஆசீர்வதித்து மேற்சொன்ன சில கர்மாக்களை அழித்து அழித்து நிச்சயம் மேல் நோக்கி தாம் தம் என்னென்ன நடக்க வேண்டுமோ அவை செம்மையாகவே நடக்கும் எதை என்று அறியாமலே!!
இதனால் என்றும் என்றும் ஜீவித்திருக்கும் ஜீவராசிகள் இப்பொழுது கூட உயிருள்ளதாகவே இருக்கின்றன!!!![ ஆலயத்தில் உட்பிரகாரத்தில் 12 லட்சத்து 25000 சாலிகிராமம் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. அனுமன் ரூபங்களின் அம்சமானது இன்னும் உயிர்ப்புடன் இருக்கின்றது]
=============================================================================
சித்தன் அருள் - 1168 - அன்புடன் அகத்தியர் - இடைக்காடர் சித்தர் வாக்கு!
1/8/2022 அன்று ஆடிபூரம் தினத்தன்று பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு பகவத் கீதை உபேதேசித்த இடத்திலிருந்து இடைக்காடர் சித்தமுனி உரைத்த வாக்கு
வாக்குரைத்த ஸ்தலம் ஜோதீஷர். குருஷேத்ரா ஹரியானா மாநிலம்.
அழகாக என் மனதில் குடியிருக்கும் ஈசனையும் ஈசனின் தேவியையும் பணிந்து வாக்குகளாக ஈகின்றேன் மனிதனுக்காகவே இடைக்காடன்!!!!
நிச்சயம் ராகு கேதுக்களே மோட்சத் தன்மையை பெற்றுத் தரும் கிரகங்கள்!!!
அதனால் ராகு கேதுக்கள் நிச்சயம் தம்தன் தசையில் வந்தால்(ஜாதகத்தில்) வந்துவிட்டால் எதையன்றி கூற கர்மத்தை அழித்துவிடும் வேரோடு!!!
இக் கிரகங்களுக்குத்தான் கர்மத்தை அழிக்கும் திறன்!!!
இதனால் பிறவிகள் இருக்காது அதனால் ராகும் கேதுவும் திசையில் வந்தால் நிச்சயம் கஷ்டங்கள் தான் பட வேண்டும் ஏனென்றால் நீ செய்த பாவங்களுக்கு தண்டனைகள் கொடுப்பவர்கள் ராகு கேது!!!
=============================================================================
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!
சர்வம் சிவார்ப்பணம்!!!!!
No comments:
Post a Comment