மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Wednesday, October 2, 2024

சித்தர்கள் ஆட்சி - 396 :- அகத்திய மாமுனிவர் உரைத்த நவராத்திரி வழிபாடுகள்.




இறைவா நீயே அனைத்தும்.


வணக்கம் அகத்தியர் அடியவர்களே,  நாளை முதல் நவராத்திரி துவங்குகின்றது 


இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் வட இந்தியாவில் தமிழ்நாட்டிலும் ஒன்பது நாட்களுக்குரிய தேவியின் பெயர்கள் மாறி மாறி உள்ளதை குறித்து குருநாதரிடம் கேட்ட பொழுது:-


எல்லா தேவியும் ஒன்றுதான். தேவியை நினைத்துக் கொண்டு செய்தாலே போதுமானது என்று இன்று ரிஷிகேஷ்ல் கங்கை கரையில் வைத்து குருநாதர் வாக்குகள் கூறினார். அனைவரையும் இந்த நவராத்திரி வழிபாடை கண்டிப்பாக என் பக்தர்கள் அனைவரும் செய்ய வேண்டும் என்றும் கூறியிருக்கின்றார். 



நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் உரைத்த நவராத்திரி வாக்குகள் ஒரு அட்டவணை வடிவத்தில்


இறைவா !!!!! நீயே அனைத்தும்.

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் உரைத்த நவராத்திரி வாக்குகள் ஒரு அட்டவணை வடிவத்தில்
நவராத்திரி
நாள்
குருநாதர் வாக்கு: "எல்லா தேவியும் ஒன்றுதான். தேவியை நினைத்துக் கொண்டு செய்தாலே போதுமானது" (மகேஸ்வரி, கௌமாரி, வராகி, மகாலெட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நரசிம்ஹி, சாமுண்டி... முறையே. சைலபுத்ரி, பிரமசாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காளராத்திரி, மகாகௌரி, சித்திதாத்திரி)நவகிரகம் - தானியங்கள் - அதிதேவதை

( குருநாதர் நவராத்திரியில் நவகிரகங்களுக்கும் உரித்தான தானியங்கள் மற்றும் அதனுடன் உப்பு வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறி இருக்கின்றார்)

அடியவர்கள் கிழமையுடன் இந்த தானியங்களை இணைத்து குழப்பிக்கொள்ள வேண்டாம். 9 நாட்களும் 9 தானியங்கள் உப்பு வைத்து வைத்து வழிபடவேண்டும்.
குருநாதர் வாக்கு: தேவி எவ்ரூபத்திலும் வரலாம் நவநாட்கள் (நவராத்திரி).
(1)

3/10/2024

வியாழன்


பிரதமை திதி
மகேஸ்வரி தேவிசூரிய பகவானுக்குரிய.... கோதுமை... மற்றும் உப்பு... வைத்து தேவி மகேஸ்வரியை நினைத்தும், நவகிரக அதிபதிகள் சூரியனுக்கு அதிபதி சிவன் வழிபாடு செய்ய வேண்டும்.

1)
தினமும் முன்னோர்களையும் கூட சூரியனையும் நமஸ்கரித்தும், சந்திரனை நமஸ்கரித்தும் வரவேண்டும்

2)
இது மட்டும் இல்லாமல் கன்னிப் பெண்களுக்கு ஏழைப் பெண்களுக்கு மஞ்சள் குங்குமம் மஞ்சள் கயிறு ரவிக்கை துணி வளையல் இனிப்புகள் இயலாதவர்களுக்கு அன்னதானங்கள் கொலு பொம்மை வைத்து வழிபாடு என ஏற்கனவே குருநாதர் முன் வாக்குகளில் உரைத்ததையும் இங்கு நினைவுபடுத்துகின்றோம்.

அவர்களை வரவேற்று வீட்டிற்கு அழைத்து நல்விதமாக இனிப்பு பரிமாறி உணவளித்து முடிந்தவரை உதவிகள் செய்து அவர்கள் மனம் மகிழும் படியான செயல்களை செய்தால் தேவியவள் மகிழ்ந்து உங்களையும் ஆசீர்வதிப்பாள்!!

அன்றைய நாட்களில் முடிந்தவரை இல்லாதவர்களுக்கு அன்னத்தையும் வழங்கிடல் வேண்டும் தான தர்மங்கள் செய்து புண்ணியத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும் !! அப்பனே !

ஒவ்வொரு நவராத்திரி இரவிலும் கூட புண்ணிய நதிகளில் நீராடி நவராத்திரியில் வழிபட்டால் உங்களுக்கு மேன்மைகள் உண்டு. உங்களுக்கு அனைத்தும் கிட்டும். அனைத்தும் வரும்.




(2)

4/10/2024

வெள்ளி


துவிதியை திதி
கௌமாரி தேவிசந்திரனுக்கு உரிய... தானியம் நெல் மற்றும் உப்பு வைத்து சந்திரனுக்குரிய அதிபதி பார்வதி தேவி வழிபாடு
(3)

5/10/2024

சனி ( தர்ம தேவன், தர்ம தேவதை நாள் )


திருதியை திதி
வாராகி தேவிசெவ்வாய் அதிபதி முருகன்
துவரை பருப்பு... மற்றும் உப்பு வைத்து வழிபாடு
(4)

6/10/2024

ஞாயிறு


சதுர்த்தி திதி
வைஷ்ணவி தேவிபுதன் அதிபதி விஷ்ணு வழிபாடு. பச்சைப் பயிறு மற்றும் உப்பு
(5)

7/10/2024

திங்கள்


பஞ்சமி திதி
இந்திராணி தேவிகுரு பகவான் அதிபதி பிரம்மா தக்ஷிணாமூர்த்தி. கொண்டைக்கடலை மற்றும் உப்பு வைத்து வழிபாடு
(6)

8/10/2024

செவ்வாய்

சஷ்டி திதி
லட்சுமி தேவிசுக்கிர பகவானுக்குரிய அதிபதி லஷ்மி தேவி இந்திரன் வருணன் வழிபாடு. சுக்கிரனுக்கு உரிய தானியம் மொச்சைக்கொட்டை மற்றும் உப்பு வைத்து வழிபாடு.
(7)

9/10/2024

புதன்


சப்தமி திதி
ஸ்கந்தமாதா தேவிசனி பகவானுக்குரிய ஐயப்பன் ஆஞ்சநேயர் வழிபாடு. எள் மற்றும் உப்பு வைத்து வழிபாடு
(8)

10/10/2024

வியாழன்

அஷ்டமி திதி
துர்கா சாமுண்டி தேவிராகு பகவானுக்குரிய அதிபதி காளி துர்க்கை. உளுந்து மற்றும் உப்பு வைத்து வழிபாடு
இந்த நவ நாட்களில் கடைசி இரண்டு தினத்தன்று கன்னிப் பெண்களை போற்றி!!! உடுக்க உடையும் மஞ்சள் குங்குமமும் ஏழை கன்னி பெண்களுக்கு இயன்றதை கொடுக்க வேண்டும் நல்விதமாக அவர்களை வீட்டிற்கு அழைத்து அவர்களை தேவியென போற்றி அவர்களுக்கு நல்விதமாக உணவுகள் வழங்க வேண்டும் அவர்கள் மனம் மகிழும் படியான உணவுகளும் இனிப்புகளும் கொடுத்து அவர்களை தேவி என கருதி வணங்க வேண்டும் இப்படி செய்தால் தேவியவளின் பரிபூரணமான அருள் கிட்டுமப்பா!!!
(9)

11/10/2024

வெள்ளி

நவமி திதி
சரஸ்வதி தேவிகேது பகவானுக்குரிய அதிபதி விநாயகர் சண்டிகேஸ்வரர். கொள்ளு மற்றும் உப்பு வைத்து வழிபாடு
நவராத்திரில் பெண் தெங்வங்கள் நம் இல்லத்திற்கு வருவது நம் முன்னோர்களால் மட்டும் தான். நவராத்திரி தினங்களில் ஒவ்வொரு நாளும் தீபம் ஏற்றி மஞ்சள் குங்குமம் வளையல் பூக்கள் என ஒன்பது நாளும் ஒவ்வொரு ரவிக்கை துணி வைத்து தேவியை வணங்கி வருதல் வேண்டும். அப்படி நவராத்திரி முடிந்தவுடன் 9 ரவிக்கை துணி உள்ளிட்ட மஞ்சள் குங்குமத்தை ஆலயத்திற்கு அல்லது ஏழை பெண்களுக்கு அளித்திடல் வேண்டும். நிச்சயம் ஒவ்வொரு தினத்திலும் ஒரு அம்பாளை வேண்டிக்கொண்டு, நன்முறைகளாக கொடுங்கள். ஏதாவது ஒரு திருத்தலத்தில் இல்லையென்றாலும் நிச்சயம் ஏதாவது பெண்ணுக்கும் நிச்சயம் இதை அளிக்க சில தரித்தரங்கள் நீங்கும்.உங்களுக்கு ஏதும் செய்யவில்லை. மற்றவர்களுக்காகவே செய்கின்றீர்கள். இதுதான் இங்கு சூட்சமம்
இதனால் அப்பனே இவையெல்லாம் நல்விதமாகவே அப்பனே பின்பு அமாவாசையில் ( அதாவது நவராத்திரி முடிந்த பிறகு வரும் அமாவாசை ஐப்பசி அமாவாசையில் இந்த நவதானியங்களையும் உப்பையும் எடுத்துச் சென்று ஆற்றில் அல்லது கடலில் விட வேண்டும். அதாவது நவராத்திரி முடிந்த பின் வரும் அமாவாசை அதாவது ஐப்பசி அமாவாசையில் இந்த நவதானியங்களையும் உப்பையும் கடலில் அல்லது ஆற்றில் கொண்டு விட வேண்டும் ) அப்பனே பின் நல்விதமாக இவையெல்லாம் எடுத்துக்கொண்டு அப்பனே புண்ணிய நதிகளிலும் கூட அப்பனே நல்விதமாகவே அறிந்தும் கூட அப்பனே எதை என்று கூட கடலிலும் கூட அப்பனே மீண்டும் அப்பனே இவையெல்லாம் இடும்பொழுது அப்பனே நல்விதமாக முன்னோர்களை நினைத்து அப்பனே சில வகையிலும் கூட!!இதனால் அப்பனே உப்பு.... சாதாரணம் இல்லை என்பேன் அப்பனே!!! அனைத்து கிரகங்களையும்கூட அப்பனே ஈர்க்கும் தன்மை என்பேன் அப்பனே . ஏற்கனவே சொல்லிவிட்டேன் அப்பனே...
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!


இவை அனைத்தும் நவராத்திரி ஒன்பது நாட்களுக்கு வைத்து வழிபாடு செய்துவிட்டு அதன் பிறகு நவராத்திரி முடிந்த பிறகு வரும் நவதானியங்களையும் உப்பையும் எடுத்துச் சென்று அமாவாசை ஐப்பசி அமாவாசையில் இந்த நவதானியங்களையும் உப்பையும் எடுத்துச் சென்று ஆற்றில் அல்லது கடலில்  விட வேண்டும். கடலில் அல்லது நதிகளில் சென்று  இட்டு விட்டு முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்து விட்டு வர வேண்டும். 


இது மட்டும் இல்லாமல் கன்னிப் பெண்களுக்கு ஏழைப் பெண்களுக்கு மஞ்சள் குங்குமம் மஞ்சள் கயிறு ரவிக்கை துணி வளையல் இனிப்புகள் இயலாதவர்களுக்கு அன்னதானங்கள் கொலு பொம்மை வைத்து வழிபாடு என ஏற்கனவே குருநாதர் முன் வாக்குகளில் உரைத்ததையும் இங்கு நினைவுபடுத்துகின்றோம் அதனுடன் சேர்த்து இதையும் செய்து வர நலம்....


அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் ஒன்பது நாட்கள் (நவராத்திரி) என்பதெல்லாம் யான் ஏற்கனவே உரைத்திருந்தேன் அப்பனே


இவை தன் இணங்க அப்பனே பின் (நவராத்திரியில்)ஒவ்வொரு நாளுக்கும் கூட அப்பனே முதலில் பின் எவை என்று அறிந்தும் கூட அப்பனே எதை என்று அறிய அறிய இதனால் அப்பனே நல்விதமாக 


(1) சூரியனுக்கும் அப்பனே பின் 

(2) சந்திரனுக்கும் அப்பனே நல்ல விதமாகவே அறிந்தும் கூட அப்பனே பின் 

(3) குருவினுக்கும் அப்பனே 

(4) ராகுவானவனுக்கும் அப்பனே இன்னும் அப்பனே 

(5) புதன் ஆனவனுக்கும் அப்பனே இன்னும் அறிந்தும் கூட 

(6) சுக்கிரனுக்கும் அப்பனே 

(7) கேதுவானவனுக்கும் அப்பனே பின் 

(8) சனியவனுக்கும் இன்னும் அப்பனே அறிந்தும் கூட எதை என்று புரிய புரிய 

(9) செவ்வாய்க்கும் இன்னும் அப்பனே பின் அறிந்தும் கூட அப்பனே மறைமுகமான கிரகங்கள் கூட அப்பனே 


அப்பனே (கிரகங்கள்) 9 என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள் அனைவருமே கூட!!!!


அப்பனே இன்னும்இரண்டு அப்பனே கண்ணுக்கு அறிந்தும் கூட ஆனாலும் அறிந்தும் கூட  ராகு கேது கண்ணுக்குத் தெரியாது என்று


ஆனாலும் அப்பனே இன்னும் இரண்டு எதை என்று அறிய அறிய அப்பனே இதை தன் அப்பனே பின் எதை என்று அறிய அறிய பிற்பகுதி யான் உரைக்கின்றேன் அப்பனே 


இதனால் அப்பனே அவ்வவ் கிரகத்திற்கு அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட என்ன எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று கூட அதாவது சனீஸ்வரனுக்கு அப்பனே எவை என்று கூட பின் அதாவது இன்னும் சூரியனுக்கு எவை என்று அறிய அப்பனே... தானியங்கள் எல்லாம் இருக்கின்றதப்பா இவையெல்லாம் அப்பனே பின் புரட்டாதி... அதாவது அப்பனே பின் அமாவாசை முன்னே அறிந்தும் கூட அப்பனே இதனால் அப்பனே பின் அதாவது இல்லத்திலே அப்பனே அதாவது பின் கடல் எதை என்று கூட பின் அங்கிருந்து உப்பை எடுத்து கொண்டு அப்பனே நல்விதமாக அப்பனே பின் இல்லத்தில் வைத்து அப்பனே பின் சூரியனுக்கு என்ன தானியங்கள் என்று அப்பனே ஒவ்வொரு நாளும் இட வேண்டும் அப்பனே மற்றொரு நாள் சந்திரனுக்கு இவ்வாறாக அப்பனே பின் நவ (கிரகங்களுக்கும்) அறிந்தும் கூட அப்பனே


ஆனாலும் அப்பனே நல்விதமாக நவகிரகங்களுக்கு தானியங்கள்


(நெல், கோதுமை, துவரை, எள், உளுந்து, பச்சைப்பயறு, கொண்டைக் கடலை, மொச்சை பயிறு, கொள்ளு போன்ற ஒன்பது வகை தானியங்களைத்தான் நவதானியங்கள் தானியங்கள் என்பர். இவையே நவ கிரகங்களுக்கு உரிய தானியங்கள் ஆகும்.


கோதுமை சூரிய பகவானின் தானியம் ஆகும்


நெல் : இது சந்திர பகவானின் தானியம் ஆகும்


துவரை : 'துவரை' இது செவ்வாய் பகவானின் தானியம் ஆகும்


பச்சைப்பயறு : 'பச்சைப்பயறு' இது புதனின் தானியம் ஆகும்.


கொண்டைக்கடலை : இது குரு பகவானின் தானியம் ஆகும்.


மொச்சை : இது சுக்கிர பகவானின் தானியம் ஆகும்.


கருப்பு எள் : இது சனி பகவானுக்கு உரிய தானியம் ஆகும்.


உளுந்து : இது ராகு பகவானின் தானியம் ஆகும்.


கொள்ளு : இது கேது பகவானின் நவ தானியம் ஆகும். 


குருநாதர் நவராத்திரியில் நவகிரகங்களுக்கும் உரித்தான தானியங்கள் மற்றும் அதனுடன் உப்பு வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறி இருக்கின்றார்)


அப்பனே இவ்வாறாக இட்டுக் கொண்டே அறிந்தும் கூட பின் நல்விதமாகவே அப்பனே முன்னோர்களையும் கூட சூரியனையும் நமஸ்கரித்தும் சந்திரனை நமஸ்கரித்தும் அப்பனே ஏன் எதற்கு அப்பனே சூரியனை  அப்பனே எவை என்று கூட???


பின் சூரியனில் உள்ள எவை என்று அறிய அறிய பலமும் கூட அப்பனே பின் வந்து கொண்டே இருக்கும் இவ் திங்களில் (மாதத்தில்) பின் சந்திரனின் கூட!!!!!(பலம்)


இதனால் அப்பனே இவையெல்லாம் நல்விதமாகவே அப்பனே பின்பு  அமாவாசையில்


அதாவது நவராத்திரி முடிந்த பிறகு வரும் அமாவாசை ஐப்பசி அமாவாசையில்  இந்த நவதானியங்களையும் உப்பையும் எடுத்துச் சென்று ஆற்றில் அல்லது கடலில்  விட வேண்டும் 


அதாவது நவராத்திரி முடிந்த பின் வரும் அமாவாசை அதாவது ஐப்பசி அமாவாசையில் இந்த நவதானியங்களையும் உப்பையும் கடலில் அல்லது ஆற்றில் கொண்டு விட வேண்டும்.....


அப்பனே பின் நல்விதமாக இவையெல்லாம் எடுத்துக்கொண்டு அப்பனே புண்ணிய நதிகளிலும் கூட அப்பனே நல்விதமாகவே அறிந்தும் கூட அப்பனே எதை என்று கூட கடலிலும் கூட அப்பனே மீண்டும் அப்பனே இவையெல்லாம் இடும்பொழுது அப்பனே நல்விதமாக முன்னோர்களை நினைத்து அப்பனே சில வகையிலும் கூட!!


இதனால் அப்பனே உப்பு.... சாதாரணம் இல்லை என்பேன் அப்பனே!!!


அனைத்து கிரகங்களையும்கூட அப்பனே ஈர்க்கும் தன்மை என்பேன் அப்பனே 


ஏற்கனவே சொல்லிவிட்டேன் அப்பனே...


கடலுக்கு அப்பனே பின் அறிந்தும் கூட அடியில் ஓரிடம் இருக்கின்றது என்பேன் அப்பனே அங்கு பின் எதை என்று அறிய அறிய அப்பனே இன்னும் அப்பனே சக்திகள் வெளிக்கொண்டே வரும் அப்பா.  அப்பனே அவ் சக்தி அதிகமானால் இன்னும் வெடிக்கும் அப்பா அறிந்தும் கூட அதனால் சமநிலைப்படுத்த வேண்டும் அப்பனே 


அவையெல்லாம் யாங்கள் பார்த்துக் கொள்கின்றோம் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே ஏனைய வாக்குகள் செப்பினால் தான் உங்களுக்கும் தீர்வுகள் கிடைக்கும் என்பேன் அப்பனே 


இதனால் அப்பனே இவ்வாறாக இருந்து அப்பனே பின் பரிசுத்தமாக இதனால் அப்பனே அதாவது இவ் ஆன்மாக்கள் அனைத்து கிரகங்களுக்கும் செல்லும் அப்பா 


அப்பனே எவை என்று அறிய அறிய பின் தெரியாதப்பா 


இதனால்தான் அப்பனே மீண்டும் அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே இதனால் அப்பனே... அங்கொன்று சொல்கின்றான் இங்கு ஒன்று சொல்கின்றான் அகத்தியன் என்றெல்லாம் நீங்கள் யோசிப்பீர்கள் என்பேன் அப்பனே...


அனைத்தையும் ஒன்றாக இணைக்கும் பொழுது தான் உங்களுக்கு தெரியும் அப்பா பல ரகசியங்கள் என்பேன் அப்பனே 


அதனால் அப்பனே சாதாரணமில்லை என்பேன் அப்பனே 

புதிய புதிய கண்டுபிடிப்புகள் எவை என்று அறிய அறிய இதனால் அப்பனே பின் இவ்வாறு பின் முன்னோர்கள் ஆன்மா பரிசுத்தம் அடையும் பொழுது தான் அப்பனே பின் எவை என்று அறிய அறிய பின் நவராத்திரி அறிந்தும் கூட அப்பனே பின் உணர்ந்து உணர்ந்து கூட 


இதனால் அப்பனே நிச்சயம் அதாவது தேவிகளுக்கு எவை என்று அறிய அறிய அப்பனே ஒவ்வொரு நாளும் (நவராத்திரியில் நவ தேவிகள்) என்னென்ன செய்ய வேண்டும் என்பவை எல்லாம் அப்பனே அழகாக செப்பி உள்ளேன் என்பேன் அப்பனே!!


(சித்தன் அருள் 1461.


அம்பாளை !!!


(மகேஸ்வரி, கௌமாரி, வராகி, மகாலெட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நரசிம்ஹி, சாமுண்டி... முறையே. சைலபுத்ரி, பிரமசாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காளராத்திரி, மகாகௌரி, சித்திதாத்திரி)


(சித்தன் அருள் நவராத்திரி வாக்கு 1190. சித்தன் அருள் 1225 


மிக முக்கியமாக சித்தன் அருள் 14 61 இதை முக்கியமாக படிக்கவும் குருநாதர் நவராத்திரி தினங்களில் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த வாக்குகளில் கூறியுள்ளார் அனைவரும் படித்து உணர்ந்து கொள்ளவும் கூகுள் வலைதளத்தில் சித்தன் அருள்  இந்த எண்களை டைப்பிங் செய்து பார்த்தால் அந்த வாக்குகள் வரும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்)


இவை எல்லாம் அப்பனே பின் நல்விதமாகவே அப்பனே இதனால் பூசைகள் எவை என்று அறிய அறிய அப்பனே அனைத்திற்கும் கூட அப்பனே எவை என்று அறிய அறிய


இரும்பு சார்ந்த அப்பனே புத்தகங்கள் சார்ந்த அனைத்திற்கும் கூட


(சரஸ்வதி பூஜையில் புத்தகங்கள் ஆயுத பூஜை துர்கா பூஜை அன்று இரும்பு சாதனங்கள்)


மேலிருந்து அப்பனே பின் ஒரு வரி அதாவது பின் ஒரு வரியானது (கோடானது) பின் எவை என்று கூட


அப்பனே அதாவது எதை என்று கூட பின் மின்சாரத்தின் உள்ளே அப்பனே சிறு கம்பிகள்(சிறு கம்பிகள் வழியாக மின்சாரம் பாய்வதைப் போல மேலிருந்து கண்ணுக்குத் தெரியாத ஒரு கதிர்வீச்சு கோடுகள் விழுந்து கொண்டுதான் இருக்கின்றது) அதேபோலத்தான் அப்பனே பின் அனைத்திற்கும் கூட மேலிருந்து வீழ்ந்து கொண்டே இருக்கின்றது என்பேன் அப்பனே. 



இவை சரியாக வீழ்ந்தால்தான் அப்பனே மனிதனால் ஒழுங்காக வாழ முடியும் அப்பா 


அப்பனே இதனால்தான் எவை என்று அறிய அறிய அப்பனே கிரகங்களின் தாக்கங்கள் கூட அப்பனே முன்னோர்களின் தாக்கங்கள் கூட அப்பனே பின் தாக்க கூடாது... அதை விட்டு விலகி இருக்க வேண்டும். 


எப்படி விலகி இருக்க வேண்டும்??? எப்படி விலகி இருக்க முடியும்???


அப்பனே யான் சொல்லியதை கடைப்பிடித்தாலே போதுமானதப்பா 


அப்பனே விலகி இருக்கலாம் அப்பனே. 


விலகி இருந்தால் தான் அப்பனே உங்களுக்கு அனைத்தும் கிட்டும் என்பேன் அப்பனே 


அப்பனே அப்படி இல்லை என்றால் ஒன்றும் கிட்டாதப்பா 


இதனால்தான் அப்பனே நன்முறைகளாகவே அப்பனே பின்பு நல்ல விதமாக அம்பாளை எவை என்று அறிய அறிய ஒவ்வொரு நாளும் நவராத்திரியில் அப்பனே ஒவ்வொரு கிரகத்தின் அதிபதியான அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட வணங்கி வருதல்


(சூரியன் - சிவன்

சந்திரன் - பார்வதி

செவ்வாய் - முருகன்

புதன் - விஷ்ணு

வியாழன் - பிரம்மா, தட்ணாமூர்த்தி

சுக்கிரன் - லட்சுமி, இந்திரன், வருணன்

சனி - சாஸ்தா (ஐயப்பன்) ஆஞ்சநேயர்.

ராகு - காளி, துர்க்கை, மாரியம்மன்

கேது - விநாயகர், சண்டிகேஸ்வரர்)


ஏன் எதற்கு என்று கூட அப்பனே சிறப்பு சூரியனின் அப்பனே பின் மனைவிகள் அப்பனே எதை என்று அறிய அறிய 


(சூரியனின் மனைவிகள் சாயாதேவி சந்தியா சரண்யா உஷா) 


ஏன் எதற்கு என்றெல்லாம் அப்பனே இதற்கும் காரணங்கள் உண்டு என்பேன் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட எதை என்று புரிய புரிய 


இதனால் ஒவ்வொரு நாளும் மீண்டும் அப்பனே எவை என்று கூட சூரியனையும் சந்திரனையும் நினைத்து ஒவ்வொரு நாளும் கூட நவகிரகங்களை முறையாகவே ஒவ்வொரு நாளும் கூட அப்பனே பின் சூரியனுக்கு என்ன படைக்க வேண்டும்??? சந்திரனுக்கு என்ன படைக்க வேண்டும்??? என்றெல்லாம் அம்பாளிடம் படைத்து அப்பனே பின்பு அறிய அறிய எவை என்றும் புரிய புரிய நல்விதமாகவே அப்பனே அவற்றிற்கெல்லாம் படைத்தால் அப்பனே தேவை என்று கூட மகிழ்வார்கள் என்பேன் அப்பனே எவை என்று அறிய முன்னோர்கள் என்பேன். அப்பனே 


இதனால் அப்பனே எவை என்று கூட அப்படியே அப்பனே அவர்களும் கூட அதாவது அவ் முன்னோர்களின் ஆத்மாக்கள் கூட சந்தோஷம் அடைந்து விடும் என்பேன் அப்பனே 


இவ் சந்தோசத்தை அப்பனே பின் ஆத்மாக்கள் அடைந்து விட்டு பின் இங்கேயே இருந்து விடலாம் என்று எண்ணுவார்கள் என்பேன் அப்பனே அப்பனே... இதனால் அப்பனே என்ன லாபம்??


(இவர்களை அதாவது ஆத்மாக்களை நமது வீட்டில் இருக்கும் நமது உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஆத்மாக்களின் செல்களை மீண்டும் அனுப்புவதற்கு ஐப்பசி திங்களில் பச்சை கற்பூரம் இட்டு நதிகளில் நீராட வேண்டும்.. துலாஸ்நானம்) முன்னோர்களின் ஆத்மாக்கள் மீண்டும் மேலே செல்லும் கார்த்திகை மாதத்தில் முருகன் செவ்வாய் கிரகத்திலிருந்து இறைவன் எனும் காந்தகத்தில் ஆத்மாக்களை முக்தி மோக்ஷம் அடைவதற்கு காந்தகத்தில் ஒட்ட வைப்பதற்கு முருகன் செயல்படுவார் மார்கழி மாதத்தில் ஆத்மாக்களுக்கு இறுதி தீர்ப்பு ஏற்படும். மேலே ஒட்ட முடியாமல் கீழே விழும் ஆத்மாக்களுக்கு மீண்டும் தை மாதத்தில் வரும் அமாவாசை அன்று பித்ரு தர்ப்பணம் செய்து மீண்டும் மேலே அனுப்புவதற்கு கடைபிடிக்க வேண்டும் என்று ஏற்கனவே பல வாக்குகளில் குருநாதர் கூறியிருக்கின்றார் இங்கு அதை நினைவு படுத்துகின்றோம்)


இதனால்தான் அப்பனே தற்பொழுது நிலைமைகள் எல்லாம் பின் எதை என்று கூற பட்டாசு என்கின்றார்களே அவை தான் அப்பனே வெடிப்பார்கள் என்பேன். அப்பனே!!


(ஐப்பசி மாதத்தில் வரும் தீபாவளி பட்டாசு வெடிக்கும் ரகசியம்) 


அதை வெடிப்பதற்கும் கூட இதற்கும் கூட (தங்கியிருக்கும் ஆத்மாக்கள்) அப்பனே மீண்டும் அதை பின் எவை என்று கூட பின் திருப்பி செல்லும் அப்பா 


அப்பனே அறியாமல் வணங்கி விடாதீர்கள் என்பேன் அப்பனே புரியாமலும் வணங்கி விடாதீர்கள் என்பேன். அப்பனே


============================================================

வணக்கம் அடியவர்களே, 


நம் அன்பு குருநாதர் அகத்திய மாமுனிவர் உரைத்த அனைத்து நவ ராத்திரி வாக்குகளும் படிக்க:- 


சித்தர்கள் ஆட்சி YouTube தளத்தில் 6 வீடியோ பதிவுகள் உள்ள நவராத்திரி playlist உங்கள் பார்வைக்கு. அனைவருக்கும் பகிருங்கள். தேவியின் இறை அருள் பெற்று நலமாக வாழ. 


main play list link

https://www.youtube.com/playlist?list=PLr-rfmzhELfpOCuDGJZhLaGYCHHxIH2K4


(1.1) நவராத்திரி வாக்கு

சித்தன் அருள் - 1190 

https://youtu.be/zpYXIbTe_R0


(1.2) நவராத்திரி எதற்காக கொண்டாடுகிறார்கள்?

சித்தன் அருள் - 1533

https://youtu.be/dhnjL-8qcgA


(1.3) சுக்கிர கடாட்சம் பெறும் நவராத்திரி ரகசியங்கள்

சித்தன் அருள் - 1533- மானசா தேவி மலைக்கோவில். ஹரித்துவார். உத்தர்கண்ட் மாநிலம்.

சித்தன் அருள் - 1225  - பஞ்சவடி வாக்கு - 2

https://youtu.be/tuTXHEDs8Ws


(1.4) நவராத்திரி சூட்சும ரகசியங்கள்

சித்தன் அருள் - 1461

https://youtu.be/qnkDoDPvw9Q


(1.5) நவராத்திரி வழிபாட்டு ரகசியங்கள்

சித்தன் அருள் - 1668 - காசி மீர்காட் கங்கை கரை!

https://youtu.be/o9wZB4GIDb8


(1.6) புரட்டாசி, ஐப்பசி மாதத்தில் முன்னோர்கள் வழிபாடு.காவிரி  நதி - ரகசியங்கள்

சித்தன் அருள் - 1490 

https://youtu.be/nZf6y4kVppo


அனைத்து அடியவர்களுக்கும் பகிருங்கள். 


=====================================================


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!

No comments:

Post a Comment