“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Monday, September 2, 2024

சித்தர்கள் ஆட்சி - 393 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 9


 இறைவா !!!!! நீயே அனைத்தும்.

அன்புடன் அகத்திய மாமுனிவர் - மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 9

( இவ் தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்:-

சித்தர்கள் ஆட்சி -  379 - பகுதி 1
சித்தர்கள் ஆட்சி -  381 - பகுதி 2
சித்தர்கள் ஆட்சி -  382 - பகுதி 3
சித்தர்கள் ஆட்சி -  383 - பகுதி 4 
சித்தர்கள் ஆட்சி -  389 - பகுதி 5
சித்தர்கள் ஆட்சி -  390 - பகுதி 6
சித்தர்கள் ஆட்சி -  391 - பகுதி 7
சித்தர்கள் ஆட்சி -  392 - பகுதி 8
)

நம் குருநாதர்:- ( ஒரு அடியவரைக்  காலையில் 5 மணிக்குத்  தினமும் எழச் சொன்னார்கள். அப்படி எழுந்தால் யான்  நன்றாகச் செய்வேன் என்று உரைத்தார்கள்.  இத்துடன் இவ் அடியவர் தாய், தந்தைக்குச்  சேவை செய்யச் சொன்னார்கள். தாய் , தந்தைக்குச்  செய்யும் சேவை மகத்தான புண்ணியங்களை எளிதில் பெற்றுத்தரும் என்பதை அங்கு உள்ள அடியவர்கள் நன்கு உணர்ந்தனர்) 

அடியவர்  7:- ( அழகாகக்  குருநாதர் உரைத்தவற்றை எடுத்து உரைத்தார் அவ் அடியவருக்கு.) 

நம் குருநாதர்:- அப்பனே உன் பக்கத்தில் உள்ளோனை, அப்பனே உன் பிள்ளைகளை அழை. 

அடியவர் 10:- ( பிள்ளைகளை அழைத்தார் ) 

நம் குருநாதர்:- ( தனி வாக்குகள். இவ் அடியவர் குருநாதரை நம்பிக்கொண்டு உள்ளவர். தாய் , தந்தைக்குச்  சேவை செய்பவர்களே உலகத்திற்குச்  சேவை செய்ய இயலும். அதன் பின் பொது வாக்கு ஆரம்பமானது. )

நம் குருநாதர்:- அப்பனே சில பேருக்கு வேலை எளிதில் கிடைத்து விடுகின்றது. சிலபேருக்கு கிடைப்பதில்லை. ஏன் அப்பனே? பின் யாராவது சொல்லலாம் அப்பனே. 

அடியவர் 4:- பாவ கர்மா அதிகமாக உள்ளதால்..

நம் குருநாதர்:- அப்பனே அறிவு அறிவு என்று சொல்கின்றார்களே, அதுதான் அப்பனே. நீ நன்றாப்படித்தால் நன்றாக வேலை வருகின்றது. அப்பனே அவை மட்டும் இல்லாமல் படிப்பதற்குச்  சென்று பல வேலைகள் செய்கின்றார்கள் தவறான வேலைகள். பின் சரஸ்வதி அப்பனே உயர்த்துவாளா என்ன? பின் சரஸ்வதி இங்கு அருள் கொடுத்தால்தான் அறிவு, மலைமகள், திருமகள் எல்லாம் அப்பனே. இவை எல்லாம் அறிவின் வழியே வருகின்றது என்பேன் அம்மையே.

நம் குருநாதர்:- அப்பனே பல பேர்கள் ஏன் வேலைக்குச் செல்கின்றார்கள்? ஏன் செல்வதில்லை அப்பனே? 

அடியவர் 4:- கஷ்டங்கள் இல்லை. 

அடியவர் 12:- தேவைகள் இல்லை. Commitment இல்லை. 

நம் குருநாதர்:- (தனி வாக்குகள்) 

நம் குருநாதர்:- அனைத்தும் பார்த்துக்கொண்டே இருக்கின்றேன். அனைவரையும் பார்த்துக்கொண்டே இருக்கின்றேன். வேறு ஏதும் வேண்டுமா?

அடியவர் 12:- லோபாமுத்ரா அம்மாவிடமும், அப்பாவிடமும் எல்லோருக்கும் ஆசீர்வாதம்  வேண்டும். 

நம் குருநாதர்:- யான் வந்துவிட்டாலே பின் லோபாமுத்திரையும் வந்து விடுவாள் அம்மையே.

நம் குருநாதர்:- ( தனுசு , மீனம் தொடர்புடையவர்களை அழைத்தார்கள் ) 

நம் குருநாதர்:- ( தனி கேள்வி, பதில் வாக்குகள். எவ் கஷ்டங்கள் வந்தாலும் ஆலயங்களுக்குச்  சென்று வர நன்று. ஆலயங்கள் உள்ளே செல்ல முடியவில்லை என்றால் கூட ஆலய வாசல் படியையாவது நின்று விட்டு வர வேண்டும் என்று வாக்கு உரைத்தார்கள். ) 

நம் குருநாதர்:- சுய நலத்திற்காக மட்டும் இறைவனை வணங்கக்கூடாது என்பேன். அப்பனே அனைவருக்குமே ஒன்று சொல்கின்றேன் அப்பனே. முதலில் பணத்திற்காக விளையாடுவார்கள் அப்பா. யான் அதைச்செய்கின்றேன், இதைச் செய்கின்றேன் என்று. லட்சுமி ஒருவனிடம், ஒருவளிடம்  பணம் கொடுப்பாள் அப்பா. அதை அதை உன்னால் பயன்படுத்தவில்லை என்றால் தான் அப்பனே அது மற்றவனிடத்தில் சென்றுவிடும் அப்பா. மீண்டும் வருமா அப்பா? நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.

நம் குருநாதர்:- பணத்தாசைகள் மனிதனை விட்டுவிடாது என்பேன் அப்பனே. பணம் சென்றுவிட்டால் மீண்டும் நிச்சயம் யாங்களே வழிநடத்தினால்தான்  உண்டு.

சுவடி ஓதும் மைந்தன்:- ஐயா கவனம். பணம் போய்விட்டால் வராது. ஏன் பணத்தை கொடுக்கின்றீர்கள் என்று கேட்கின்றார். அந்த பணத்துக்கு சித்தர்கள் மனம் வைத்து ( திரும்பி வர ) உதவி செய்யவேண்டும் என்று உரைக்கின்றார். 

நம் குருநாதர்:- ( பொது வாக்கு ) அப்பனே பணத்தின் மீது இருக்கும் பக்தி இறைவனிடத்தில் இல்லையே!!! அப்பனே அவ்வாறு சென்றிருந்தால்தான் நீங்களும் இங்கு வந்திருக்கின்றீர்கள் அப்பனே. முதலிலேயே சொல்லிவிட்டேன் அப்பனே. கஷ்டம் ஒன்று கொடுத்தால்தான் இறைவனிடத்தில் வருகின்றார்கள் அப்பனே. கஷ்டம் கொடுக்கவில்லை என்றால் இறைவன் யாரோ!!! ( தனி வாக்குகள் ) 

நம் குருநாதர்:- அப்பனே செல்களைப்பற்றி சொன்னேன் அப்பனே. அதைப்பற்றி நீ எடுத்துரை? 

( நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர் அருளால் March 2024 மதுரையில் நடந்த கேள்வி,பதில் வாக்குகள் தொடரும்….)

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!