மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Thursday, April 4, 2024

சித்தர்கள் ஆட்சி - 371 : திருச்செந்தூர் அழகன் வாக்கு! - 31/12/2021 அன்று கந்தன் உரைத்த பொதுவாக்கு. வாக்குரைத்த ஸ்தலம். திருச்செந்தூர் செந்தில் கோட்டம்.

 “இறைவா!!! அனைத்தும் நீ”



31/12/2021 அன்று கந்தன் உரைத்த பொதுவாக்கு. 

வாக்குரைத்த ஸ்தலம். திருச்செந்தூர் செந்தில் கோட்டம். 


புவியை ஆள வந்த என் தாய் தந்தையினை மகிழ்ந்து மகிழ்ந்து சொற்களாக பரப்புகின்றேன் அழகனவன். 


இவ்வுலகில் இன்னும் பல மாற்றங்கள் உண்டு


உண்டு .


இதற்கு பதிலாக என் தாய் என் தந்தை நலமே அருளால் நலமே உண்டு என் பக்தர்களுக்கு குறைகள் இல்லை.


ஆனாலும் பின்வருவனவற்றை பார்த்தால் உலகத்தில்  மாயை என்னும் வலையில் சிக்கிய மனிதனை மீட்டெடுப்பதற்காகவே  வருகின்றது போலே தெரிகின்றது.

தெரிகின்றது, பார்த்தால் மனிதனின் உண்மையான உருவம் உண்டு.

உண்டு என்பதற்கிணங்க இன்னும் பல மனிதர்கள் வருவார்கள் .

வருவார்கள் என் தாய் தந்தை நிச்சயமாய் நல்லோர்களே பிறப்பெடுத்து  வருவதற்கான வழிகளும் செய்வார்கள்.

இவ்வாறு செய்வதனால் இவ்வுலகத்தில் அநியாயம் அக்கிரமங்கள் தாழ்ந்து நீதி தர்மம் இவையெல்லாம் ஏற்படும் 

ஏற்படும் முயற்ச்சிக்கள் சித்தர்களும் பலமாக செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.


இருக்கின்றார்கள் என்பதற்கிணங்க வரும் வரும் காலங்களிலும் உண்டு சித்தன் சித்தர்கள் இவைதன் நிச்சயமாக பின் இறைவனை வேண்டி வேண்டி சித்தர்களே வேண்டி வேண்டி எவை மனதார இறங்கி வருகின்றார்களோ மனிதர்கள்  அவர்களுக்கு சித்தர்களே காட்சியளிப்பார்கள் என்பதும் மெய்யே.


மெய்யே !


ஆனாலும் மனிதனின் உருவங்கள் பலமற்று கிடக்கின்றது போல தெரியும். 


என்பதைப் போல் மனிதனின் செயல்கள் பலமாக இருக்கின்றன. என்பதற்கிணங்க வரும் மனிதர்கள் பொய்யான மனிதர்களே. 


மனிதர்களே நிச்சயமாய் உணர்ந்து கொள்ளக்கூடிய அளவிற்கு பின் கஷ்டங்கள் நேரிடும் என்பேன் கலியுகத்தில்.


ஏனென்றால் கஷ்டங்கள் பின் பட்டு பட்டு திருந்தினால் தான் வாழ்க்கை வளமாக மாறுமென்பது சித்தர்களுக்கு உரித்ததாக.


உரித்ததாக! 


சித்தர்களின் பெயர்களை சொல்லிக்கொண்டு ஏமாற்றி தான் நடத்தி வருகின்றார்கள் இன்றளவும்.


ஆனாலும் சித்தர்கள் வருவதை எண்ணி முன்கூட்டியே வருவார்களா? சித்தர்கள் வருவார்களா?


ஆனாலும் மனதின் உள்ளே பின் பக்திகள் ஆனால் வெளியில் வேஷங்கள் இதனையும் கண்கூடாக பார்ப்பதென்றால் நிச்சயம் சித்தர்களே கஷ்டத்தை வழங்குவார்கள் என்பது உறுதியானது.


உறுதியானதாக சொல்கின்றேன் திருந்தி விடுங்கள் மனிதர்களே திருந்தாவிடிலும் நிச்சயம் யார் யார் எவர் எவர் என்று கூறுகின்றீர்களோ?? அவ் சித்தனே உன்னை நிச்சயமாக தண்டிப்பான் என்பது உறுதியான பேச்சு .


என் பேச்சு தப்பாது என்பேன்.


தப்பாது என்பேன்!


பொய் தான் உலகம் எதற்காக என்று கூற பார்த்துக்கொண்டே இருந்தால் பணத்திற்காகவே மனிதன் பலபல பூசைகள். பூசைகள் வரும் அளவிற்கும் கூட அன்பு இல்லை.


அன்பு இல்லை பூசைகள் செய்தால் இவை தன் வரலாற்றில் கர்மத்தை தன் அழிக்க முடியும் என்பது மனிதனின் எதிர்பார்ப்பு. எதிர்பார்ப்பு பொய்யாகிவிடும் என்பேன்.


என்பேன்! இதனையும் யாங்கள்தான் முடிவெடுக்க கூடும் என்பேன். 


என்பேன்!


இதனையும் அறிந்து இன்னும் பல மனிதர்கள் திருந்த வழியில்லை.


 வழியில்லை இதை என்று கூற!


தான் வாழ வேண்டும் தன் மக்கள் வாழ வேண்டும் என்பதற்காகவே குறியாக உள்ளார்கள். 


குறியாக உள்ளார்கள் என்பதற்கிணங்க இறைவனை மறந்து  போய்விடுகின்றனர்.


மறந்து போய்விடுகின்றனர் என்பதற்கே சரித்திரம் இல்லை


சரித்திரம் சரித்திரமாக யான் உணர்ந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றேன்.


கண் திறந்தவகையிலும் இப்பொழுதும் கூட நான் பார்த்திட்டேன் ஆசீர்வாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் வழங்கிட்டேன். வழங்கிட்டேன் என்பதைக்கூட கண் திறந்து பார்த்தேன். பார்த்தேன் பார்த்துக் கொண்டேதான் இருக்கின்றேன்.


அதில்கூட பின் ஆயிரம் சமமான பக்தர்கள் வந்தால் ஓர் பக்தன் "முருகா!! முருகா!! என்று மனமுவந்து பின் வருவான் அதனையும் யான் அப்பொழுது கண்திறந்து பார்ப்பேன் அவ் ஆயிரம் பக்தர்களுக்கும் உண்டு.


ஆனாலும் உண்டு என்பதற்கு இணங்க அவர் தம் உணர்வது இல்லை.


ஏதாவது ஒன்றை ஆசைக்காக கேட்டுத்தான் செல்கின்றார்கள். 


இதனையும் பலமுறை பல பல ஸ்தலங்களில் யான் உரைத்து வருகின்றேன்.


உரைத்ததற்கேற்ப அகத்தியனும் வந்து கொண்டே தான் இருக்கின்றான் தாங்கள் இடத்திலே.


இடத்திலேயே என்பதற்கிணங்க நிச்சயமாய் அன்பு செலுத்தினால் கூடவே சித்தர்கள் வருவார்கள் என்பதே நிச்சயம்.


இதை விட்டுவிட்டு மந்திரங்கள் தந்திரங்கள் பின் இதை பின்பற்றும் பொழுது நிச்சயமாய் மனிதனே நீயே உன் வினையால் அழிந்து விடுவீர்கள் என்பதே நிச்சயம்.


இவ்வாறுதான் நடக்கப்போகின்றது என்பேன்.


என்பேன் !


இதற்கிணங்க  பலமாக பல  திருத்தலங்களுக்கும் சென்று இன்னும் ஒன்றும் ஆகவில்லையே ?என்று கூட மனிதர்கள் பல பல பல யோசித்துத்தான் இருக்கின்றனர். 


ஆனாலும் பல திருத்தலங்களுக்கு வருபவர்களை யான் என் தந்தை மற்றும் இதர சித்தர்களும் பார்த்து பார்த்து பார்த்து தான் வருகின்றனர்.


ஆனாலும் இவர்களுக்கு கஷ்டம் இருக்கும் பொழுது இறைவனிடத்தில் உள்ளானா??? இல்லை தவிர்த்து சென்று விடுவானா??? என்பிதற்கிணங்கவே வருகின்றனர் .


ஆனாலும் கஷ்டத்தை கொடுக்கும் பொழுது இறைவனே இல்லை என்ற நிலைமைக்கு வரும் பொழுது அவன் தன் பொய்யானவன் என்று காட்டிவிடும் பொழுது அவந்தனுக்கு வாழ்க்கையே படுமோசமாக ஆகிவிட்டது ஆகியும் போனது போனது இன்னும் நிச்சயமாய் போகும் என்பேன்


கலியுகத்தில் கலியுகத்தில் எதனையும் என்று நிரூபிக்கும் அளவிற்கு மந்திரங்களும் பலிக்காது தந்திரங்களும் பலிக்காது.  எங்கள் அருள் இருந்தால்தான் அனைத்தும்.


ஆனாலும் பொய்யான மனிதனோ மந்திரத்தால் அது வரும் இவைதன் இப்படி வரும் இப்படி செய்தால் அப்படி வரும் என்பதெல்லாம் பொய்யே!!! 


பொய்யே! ஆனாலும் அதை அதை தன் கர்மத்திற்கு ஏற்றவே சொல்லிக்கொண்டுதான் வந்து கொண்டிருக்கின்றான். 


ஆனாலும் பல நூல்களில் மந்திரங்கள் இருக்கின்றன எதற்காக ??பயன்படுத்த வேண்டும் ??எப்படி உரைக்க வேண்டும்?? என்பதை கூட தெரியாமல் சொல்லி விடுகின்றான் இதனால் மந்திரங்கள் நலம் தருமோ? என்று எண்ணி.


ஆனாலும் கவலைகள். கவலைகள்.


உங்களுக்கும் சொல்கின்றேன் மந்திரத்தைப்பற்றி மந்திரம் ஏதாவது கூறினாலென்றால் என் தந்தையனே ""நமச்சிவாயா!! இது பெரும் மந்திரம்  இவ் மந்திரத்தை எப்படி? சொல்ல வேண்டும்? என்றால் பின்  இவை என்று கூட பின் மார்பளவு நீரில் உள்ளே மூழ்கி "நமச்சிவாய!! " நமச்சிவாய!! என்று செப்புதல் அதி சிறப்பைத் தரும் என்பேன்.


அதனை விட்டுவிட்டு நமச்சிவாய!! நமச்சிவாய!! என்று சொன்னாலும் வீணே!! 


வீணே!!  என்னுடைய மூல மந்திரமான ""சரவணபவ!!""முருகா !! இவைதன் ""அழகா!!  இவைதன் இதன் கூட ""வேங்கைய்யா!! இதனையும் என்று என்று நிரூபிக்க """"அழகனவன்!!!!!! நானே!!


இதனையும் எப்போழுதும் வாழ்ந்து கொண்டே இருப்பேன் சிறு பிள்ளையாகவே!! 


இதனையும் உண்டு இதனையும் அற்று விட்டு எதனையும் அற்று விட்டு வந்தால் என் மகனாகவே!!  உன் பிள்ளையாகவே உங்களுக்கும் எதனையும் என்று நிரூபிக்க உங்களுக்காகவே யான் பிள்ளையாகவே வாழ்ந்து விடுவேன் 


""முருகா!! "" முருகா!! என்று ஆசை வார்த்தை கூறி விட்டால் யான் ஓடோடி வந்து விடுகின்றேன். ஆசைக்காகவே பாசத்திற்காகவே. ஆனாலும் ஒருவர் கூட அழைப்பதில்லை.


தன் பிள்ளையை நினைத்து தன் பிள்ளை நன்றாக இருக்க வேண்டும் தன் சந்ததிகள் நன்றாக இருக்க வேண்டும் சொந்த பந்தங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பது தான் வேண்டுவதுதான் மனிதனின் குறிக்கோளாக உள்ளது. அதையும் மீறி, தாண்டி , ""முருகா!!               ""என் குழந்தை நீயே ""என்று அழைத்தால் நிச்சயம் யான் ஓடோடி வந்து விடுகின்றேன்.


இதுதான் மெய்"! அப்பனே!


மெய் அப்பனே!! என்பதை உணர்ந்து நிச்சயம் மந்திரங்கள் கடலில் பின் ஆழப்பகுதியிலே பின் உச்சரிக்க வேண்டும். இவைதான் உண்மை அப்பொழுதுதான் அவ் மந்திரங்களுக்கு சக்தி என்பேன். அதனை விட்டுவிட்டு மந்திரங்கள் ஜெபித்தாலும் வீணே!! 


அதைவிட முக்கியமானது எங்களுடைய அருள் இல்லாமல் மந்திரங்கள் ஜெபித்தால் பொய்யாக போய்விடும் என்பதே உண்மை.


ஆனாலும் ஜெபித்து தான் கொண்டிருக்கின்றார்கள் மனிதர்கள்.


இவைதனை லட்சமாக சொல்ல வேண்டும்   கோடியாக சொல்லவேண்டும் பன்மடங்கு சொல்ல வேண்டும் பன்மடங்கு சொல்லிவிட்டால் பின் இறைவன் நேரடியாக தரிசனத்தை காண்பிப்பான் என்பதைக்கூட மனிதன் பொய்யான வாக்கை கூறி ஏமாற்றுகின்றான். 


ஏமாற்றிப் பிழைப்பு நடத்துகின்றாயே!! அப்பனே இவை எல்லாம் வேண்டாம்.


வேண்டாம் இப்பொழுது தெரியும்  பின் நலன்கள் ஆக. நலன்கள் ஆக நாம் பிழைத்துக் கொள்ளலாம் என்று.


ஆனாலும் இதில் கர்மா அடித்ததென்றால்? குடும்பத்தில் ஒருவர் கூட நன்றாக உள்ளார்கள் என்பதுகூட ஆச்சரியமான விஷயமே.


விஷயம் தன்னை நிச்சயமாய் சித்தர்களும் வழிவழியாய் வந்தவர்களே  வழிவழியாய் வந்தவர்களே 


இனிமேலும் தவசித்தன் தவழ்ந்து கொண்டிருக்கின்றான். எவ்வாறு எத்தனை முன்னிருந்து நடத்துவது, நடப்பது, வீணா!!!??? என்று அறிந்தது உண்மையா உண்மை இல்லை இவ்வுலகத்தில் போலியானவை பல.


 பல பல போலியானவை தான் இன்னும்    கலியுகத்தில்.


அதனால் தெரிந்து நடந்து அறிவின் படி நடந்து கொண்டால் யானே வந்து உதவிடுவேன். பல உதவிகளும் செய்வேன் இதுதான் கலியுகத்தில் சிறப்பு என்பேன்.


மனிதர்களே!! நிச்சயமாய் இறைவனை நீங்கள் தேடி செல்ல தேவையில்லை.


மனதோடு அன்பாக  எதையும் யாருக்கும் துரோகம் இல்லாமல் நல் விதமாக அன்போடு!! பாசத்தோடு!! அரவணைப்போடு!!  பின் வாழ்ந்து வந்தால் யாங்களே !!ஏன்? சித்தர்களே ஏன்? என் தந்தையே தேடி வந்துவிடுவான். இவைதன் உணர்ந்து செயல்பட்டால் அவந்தனை மென்மேலும் உயர்த்தி விடுவான் என்பதே திண்ணம்.


திண்ணமான வாக்கு !!


வாக்குகள் உங்களுக்கும் உண்டு.


ஆனாலும் மனிதனின் செயல் உண்மையானதா? பொய்யானதா? இவற்றிற்கும் அப்பாற்பட்டதா? உண்மை ஏதும் இல்லை மனிதனிடத்தில்.


இவ்வளவு தான் யான் சொல்வேன்.


கடவுள் ,கடவுள், கடவுள் எவ்வாறு எதனை என்று ஏன்? கூறுகின்றீர்கள்?


உள்ளே அன்பாக அமர்ந்து விட்டு தியானம் செய்தாலே உள்ளே வந்துவிடுவான் ஓடோடி.


என் தந்தையவன்(ஈசன்) மிக்க கோபக்காரன் ஆகவே தவழ்ந்து நிற்கின்றான் என்பது அனைவரும் அறிந்ததே.


ஈசன் கோபக்காரன்


ஈசன் பின் இல்லத்தில் இருந்தாலும் எவை என்று இருந்தாலும் ஈசனை நம்பி விட்டால் கெடுதல்கள் என்று பல மனிதர்கள் சொல்லி அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றனர்.


ஆனாலும் இவ்வுலகத்தில் கருணை உள்ளவன் என் தந்தை.


ஆனாலும் இதையன்றி கூற இவை என்றும் என்றும் அளவிற்கு உயர்ந்த இடத்தை பிடிக்க பின் நமச்சிவாயா என்று அன்போடு அழைத்துக் கொண்டே இருந்தால் இருந்தால் என்பதற்கிணங்க வருவான் வந்து அருள்வான் என் தந்தை.


என் தாய், தாயவளும் பல மர்மங்கள் ஒளித்து வைத்திருக்கின்றார் இவ்வுலகத்தில். பரமேஸ்வரி இவ்வுலகத்தை என் தாய் அவளே நிச்சயமாய் என் தாயவளும் இதனை உணர்ந்து உணர்ந்து மக்களை பின் ஏதாவது ஒரு முறையில் திருத்தலாமா!? திருத்தலாமா!?


சிறு பிள்ளைகள் ஆகவே இருக்கின்றார்களே என்று எண்ணி எண்ணி வருந்தி வருந்தி வருகின்றாள். 


ஆனாலும் மக்கள் திருந்த போவதாகத் தெரியவில்லை.


இதனையும் பல சித்தர்கள் உரைத்துக் கொண்டேதான் வந்து கொண்டிருக்கின்றார்கள்.


ஏனென்றால் இதை உணர்வதற்கு சமமான சக்திகள் இவ்வுலகத்தில் உண்டு.


மனிதனிடத்திலே பிறக்கும்பொழுதே சக்திகள் அனைத்தும் தவழ்ந்து வருகின்றது.


ஆனாலும் அதனையும் மனிதன் ஏற்பதாக எப்படி?? தெரியும்!? தெரியவரும்??


தெரியவரும் என்பதற்கிணங்க மாய தந்திர மந்திர இவையெல்லாம் பொய்யே! பொய் என்பன என்னிடத்தில் இவையெல்லாம் பலிக்காது என்பேன். ஆனாலும் வருகிறார்கள் மாய தந்திரங்களை செய்து என்னிடத்தில். """யான் விட்டுவிடுவேனா!! என்ன????? பார்ப்போம்!! என்று கூட அவர்களுக்கு நிச்சயமாய் கஷ்டங்கள் தான் யான் தருவேன் என்பது மெய்யே!!! 


மெய்யே!!! இதனையும் என்று கூற எங்களையும் எதை என்று கூற யாரும் ஒன்றும் செய்ய இயலாது என்பது தான் மெய்யே!!!


இதனால் மனிதன் முட்டாள் தனமாகவே போய் சென்றுகொண்டு தன் மாயையில் விழுந்து அழித்துக் கொண்டிருக்கின்றான்.


அவ் அழிவிற்கு காரணமாக எவை என்று கூற மீண்டும் வரும் பொழுது பின் மந்திரங்கள் தந்திரங்கள் இவையெல்லாம் செய்தால் பிழைத்துக் கொள்ளலாம் என்று தவறாக கணக்கை போடுகின்றான். அது பொய் அப்பனே.


இதனையும் யாங்களும் உணர்ந்து உணர்ந்து சித்தர்களும் ஆங்காங்கே தவழ்கின்றார்கள் இன்னும் சில எதனையும் யாருக்கு எப்பொழுது அருள் வழங்க வேண்டும் என்பதை கூட தெரிந்து வைத்துள்ளார்கள் சித்தர்கள்.


ஆனாலும் இதனையும் என்று கூற அருள்கள் வழங்கி விட்டால் அவந்தனுக்கு பணத்தின் மீது மோகம் கொண்டு உள்ளது என்பதைக் கூட சித்தர்கள் புரிந்து கொண்டு, சநன்கு தெரிந்து வைத்து கொண்டு இருக்கின்றார்கள்.


இதனால் பின் பின் வாக்குகளாக பின் அகத்தியனும் பின் உரைக்கும் பொழுது நல்லோர்காகவே பாடுபடுகின்றான் அகத்தியன்.


அகத்தியன் என்பதற்கிணங்க அதிலும்  அர்த்தங்கள் பல உண்டு.


பல உண்டு !! புசுண்ட முனியும்  (காக புஜண்டர்)  நிச்சயமாய் தன் வேலையை செய்யப்போகின்றான்.


பலப்பல யுகங்களாக யுகங்களாகவே தேடி வருவதற்கு முன்பாகவே இவ்வுலகத்தில் படைத்திருக்கின்றான் போல் தெரிகின்றது என்பதற்கு புசுண்ட முனியே காரணமாகின்றான் .


காரணம் ஆகின்றான் என்பதற்கிணங்க ஒவ்வொரு வடிவிலும் வந்து நிச்சயமாய் புசுண்ட முனி மனிதர்களை கொல்வான் என்பதே நிச்சயம்.


அழிவின் காலம் வந்துவிட்டது.


வந்துவிட்டது போல மழையாலும் இதனையும் என்று பூமியாலும் சிலசில தீங்குகளாக  எங்கு எதனையும் என்று நிரூபிக்கும் அளவிற்கு புசுண்ட முனி  இதைத்தான் செய்வான் என்பது நிச்சயம்.


ஏனென்றால் பல யுகங்களில் வாழ்ந்து வாழ்ந்து மண்ணில் மனிதர்கள் பல புண்ணியங்களை செய்துள்ளனர் மகிழ்ச்சியாக இருந்தது புசுண்ட முனிக்கு. 


ஆனாலும் புசுண்டனோ!! என் தந்தையிடமே கேட்டுக் கொண்டதற்கிணங்க, உன் இஷ்டம் போல் நடந்து கொள். என்பதையும் கூட தெரிவித்து விட்டான்.


இதனால் புசுண்ட முனியும் நிச்சயமாய் கலியுகத்தில் வந்து வந்து பின் அழிவுகளைதான் ஏற்படுத்துவான் என்பது திண்ணம். 


திண்ணம் என்பதற்கிணங்க போகன் (போகர் சித்தர்)  என் அடிமையாக கடை நாளும் இருந்தான். அனைத்தும் சொல்லிவிட்டேன் போகனுக்கும். அவந்தன் அருள்கள் பெற்றுவிட்டால் நோய் நொடிகள் குணமாகும் என்பதை கூட மனிதனுக்கு தெரியாமல் வாழ்ந்து வருகின்றான்.


அவை செய்தால் இவை தன் இதை உண்டால் அவை நடக்கும் நடந்து விட்டாலும் இவைதன் இவ் மூலிகையை உட்கொண்டால் நலமாகிவிடும் என்பதெல்லாம் பொய்யான கணக்கை காட்டி வரும் வரும் காலங்களில் என்னவென்று தெரியாமலே உண்டு கொண்டிருப்பான்.


ஆனாலும் இதற்கெல்லாம் போகன் காரணமாகின்றான்.


போகனின் அருள் இருந்தால் நிச்சயம் ஏதாவது ஒன்றை ""தண்ணீர்கூட!!! உட்கொண்டால் நலம் ஆகிவிடும். போகனே என்று மனதாலே நினைத்துக்கொண்டு. இதுதானப்பா உண்மை.


உண்மை என்பதை கூட கர்மத்தால் வந்த வினையை கர்மத்தால் அழிக்க முடியும். என்பதுதான் நிச்சயமான உண்மை. புண்ணியங்கள் செய்யடா செய்தாலே போகும் என்பது உண்மை தான்.


இதற்கும் காத்திருக்கின்றான் என் பக்தன். 



ஓர் பக்தனை பற்றி எடுத்துரைக்கிறேன் அருணகிரி (அருணகிரிநாதர்) இருக்கின்றானே! அவந்தன் மெய்யான பாடுகள் பாடுகள் பட்டு பட்டு அவந்தனக்கு என்  பக்திகள் மேலே குறைகள் இல்லை அவந்தனும் பல சோதனைகளை சோதித்த பொழுது யான் அவந்தனும் என்னை விட்டு விடவில்லை "முருகா!! "முருகா!! "கந்தா!! "கந்தா!! என்றெல்லாம் "சுப்ரமணியா!! என்றெல்லாம் ஓடோடி வந்தான் கொடுத்தேன் கஷ்டங்கள் ஆனாலும் பல கஷ்டங்களைத் தாங்கி அப்பொழுது கூட உண்மையான பகுதியாக இருந்தான் அவந்தனுக்கு நேரடியாக காட்சி தந்தேன்.


ஆனாலும் இப்பொழுது அவன் போல் யாரும் இல்லை என்றுகூட யானும் தலை குனிகின்றேன்.


இதனையும் முன் நிறுத்தும் பொழுது இல்லையப்பா கலியுகத்தில் போலிகள் அதிகம்.


இதனையும் தான் பெற்று நல்லோர்கள் ஆக வாழ்ந்து வந்தால் உண்மைதனை நிலை நிறுத்துவார் என்பதுதான். 


ஆனாலும் இதனையும் என்று கூற """செந்தூர்!!! இதனையும் அடித்து சொல்ல வருபவர்களுக்கும் உண்டு. ஆறு அறிவுகளை யான் கொடுப்பேன் இங்கு. ஆறு அறிவுகளை எப்படி உபயோகிக்கும் முறையும் யான் சொல்லித் தருகிறேன். ஆனாலும் இங்கு வந்து வந்து என் அருளைப் பெறவேண்டும். இவ்வாறு பெற்றுவிட்டால் இக்கலியுகத்தில் எவ்வாறு வாழ்ந்திட வேண்டும் என்பது கூட புத்தியை யான் தெரிவித்து விடுவேன்.


ஆனால் வருவது! கஷ்டமா??! இயல்பா??!!  முற்பகுதியா??!! இதனை என்றும் அறியாத அறியாத

மனிதர்கள் முட்டாள்களே!.


இதனையும் யாங்கள் சொல்வோம் வரும் காலத்திலும்.


வரும் காலத்திலும் ஆறாவது அறிவை பயன்படுத்துவதாக தெரியவில்லை என்பதற்கிணங்க வருத்தங்கள் சித்தர்களுக்கே. 


சித்தர்கள் நிச்சயமாய் இவ்வுலகத்தை காக்க வந்தவர்கள் என்பதே மெய்யே!. 


ஆனாலும் அவர்களை வைத்து பொய் சொல்லி ஏமாற்றி திரிப்பவர்கள் நீங்கள் அதிபுத்திசாலி.


இப்பொழுது நினைத்துக் கொள்ளலாம் புத்திசாலித் தனமாகவே!!


ஆனாலும் இதன் விளைவு யான் யோசிப்பதற்கு யான் சொல்வதற்கு இல்லை.



இல்லை !!


தான் தான் செய்த கர்மத்தால் தானே அனுபவிக்கின்றான்.


சாதகம்(ஜாதகம்) இவை தன்  சாமியார் யார்? என்ற கேள்விகளுக்கும் உண்டு உண்டு என்பதற்கிணங்க மெய்யான பக்தர்கள் பக்தர்களுக்கும் உண்டு.மற்றவை தெளிவு படுத்த இவ்வாறு நடந்திருக்க. 


அவையெல்லாம் நன்றாக போய்க்கொண்டு இருக்கும் படியால் நன்மை இல்லை தீமை இல்லை   பல காரியங்கள் இவை தன் ஹோமங்கள் பல உண்டு


உண்டு என்பதற்கிணங்க இவையெல்லாம் செய்து திரிகின்றான் மனிதன்.


ஆனாலும் அவனுடைய பாவங்கள் யார் நீ? எதற்காக செய்கின்றீர்கள்? எதற்காக உணர்ந்து கொண்டிருக்கின்றீர்கள்? அவர் பாவத்தை அவன் எவ்வாறு ?செய்தான்? என்பதை கூட மனிதனுக்கு சிறிதளவு கூட தெரிவதில்லை.


ஆனாலும் பக்தி பக்தி என்று கூட திருத்தி கொண்டிருக்கின்றானா?? என்பது கூட பொய் இவ்வாறு கர்மத்தால் பல கர்மங்கள் பொய் பித்தலாட்டம் இவை தன் உணர்ந்து உணர்ந்து மனிதநேயத்திற்கு பார்த்தால் விருப்பம் உண்டா? இல்லை என்று எதனையும் என்று கூற


ஒருவன் இருக்கின்றான் சொல்கின்றேன் ஒரு கதை போலவே!!! ஒருவன் இருக்கின்றான் பக்திமானாக பக்திமானாக இருந்து யான் பக்திமான் என்னிடத்தில் வந்தால் அனைத்து குறைகளும் நீங்கி விடும். நீங்கிவிடும் யான் அவ் ஹோமங்கள் இவ் ஹோமங்கள் இதனை!! பல மந்திரங்களை சொல்லித் தருகின்றேன் என்று கூட்டமாக கூட்டுவான் இனிமேலும். ஆனாலும் வருவார்கள் திருடர்கள் தான் வருவார்கள்.


ஆனாலும் திருடனாக வந்து உட்கார்ந்து இவைதன் உணர ஆனாலும் அவ் பக்தன் இதை உணர மாட்டான்.


உணர மாட்டான் என்பேன்.


அனைத்தும் செய்வான் என்பேன் அவ் மனிதர்களுக்கு.


ஆனால் வந்தது அவ் மனிதர்களிடமிருந்து கர்மங்கள் இவனை சேர்த்துக் கொண்டது.


ஆனாலும் இவந்தனக்கு தெரியாமல் தெரிவதே இல்லை.


ஆனாலும் இவந்தன் பக்தனாக பொய் சொல்லிக்கொண்டு பணத்திற்காகவே செய்வான். அவ் கர்மங்கள் இவந்தனுக்கு வந்தால் அடியோடு அழிந்து விடுவான். பின்பும் சுமக்க வேண்டிய நிலையில் தன் பிள்ளைகள் உற்றார்கள் உறவினர்கள் அனைவருக்குமே அக் கர்மங்கள் வந்து சேரும் அனைவரையும் அழித்து விடும். இதனால்தான் சொல்கின்றேன். மனிதனுக்கு பக்தன் என்பது தான் தெரியும். யான் பக்தன் யான் புலவன் யான் அறிஞன் யான் சித்தன் யான் கடவுள் என்பதெல்லாம் மனிதனுடைய பொய்யான நாக்கிலே சொல்லி வருகின்றான். ஆனாலும் சொல்லிச்சொல்லி வாய்ப்பதாக தெரியவில்லை. அவந்தனுக்கு கடைசியில்  என்ன ஆகப் போகின்றது என்பதை தெரியாமல் பிதற்றுகின்றான். இதைச் சொல்லும்போது மனிதனுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் ஆனால் எங்களுக்கே வேதனையாக இருக்கும். இப்படி தெரியாமல் அழிந்து விடுகின்றானே என்று!! என்றுதான் உண்டு உண்டு நலன்கள்.


உண்மைப் பொருளை கண்டுணர்ந்து தெளிந்து இதனையும் என்றும்கூட ஆசீர்வாதங்கள் என்னுடைய ஆசீர்வாதங்கள் பெறுவதே பலமாகும் என்பது மெய்.


இன்றளவும் உங்களை யான் பார்த்து விட்டேன் ஆசீர்வாதங்கள் தந்துவிட்டேன்


இவ்வுலகத்தில் விதியை மாற்றும் சக்தி "அகத்தியனுக்கும் உண்டு.!


"அகத்தியனுக்கும் உண்டு.!


"அகத்தியனுக்கும் உண்டு.!


என்பதைச் சொல்வேன்.


அதனால் அகத்தியனுக்கும் ஆனாலும் தெரிவதில்லை மனிதர்கள் ஏதோ ""அகத்தியா!!! என்று கூப்பிட்டால் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்துவிடுவான் என்று.


"""அது உண்மையே!!!!!


ஆனாலும் மனிதனை பார்த்து! பார்த்து! சலித்து, விட்டான் அகத்தியனும் கூட.


இதனால்தான் அகத்தியனும் எச்சரிக்கையோடு தான் இருக்கின்றான்.


மனிதனிடம் இவ்வாறு நடந்தால் தான் உண்டு என்று என்பது.


அதனால் ஏமாற்றியது போதும் என்பதைக்கூட இனிமேலும் அகத்தியன் பெயரைச் சொல்வதற்கு நிச்சயம் தண்டனை உண்டு.


ஏனென்றால் கருமங்கள் அப்படி செய்திருக்கின்றான். அகத்தியன் பெயரைச் சொல்லி.


இதனையும் நன்கு உணர்ந்து இனிமேலும் மந்திரங்களையும் தந்திரங்களையும் எவைதன் உணர காசுக்காக நீங்கள் அதில் நுழைந்து விட்டால் பின் யாங்கள் இதனையும் என்றும் கூட


யாம் முருகன் மந்திரம் செப்பினோம்!!

பின் நமச்சிவாய மந்திரம் செப்பினோம்!!

பரமேஸ்வரி மந்திரம் செப்பினோம்!!

பிள்ளையோன் (கணபதி) மந்திரம் செப்பினோம்.

இவை தன் வராகி மந்திரம் ஜெபித்தோம்.


இவையன்றி பல பல தெய்வங்களின் மந்திரங்கள் ஜெபித்தோம் ஆனாலும் ஒன்றும் பிரயோஜனமில்லை இறைவனே இல்லை என்ற நிலைக்கு நீங்கள் வாய் திறந்து சொல்ல கூடாது. சொன்னால் நிச்சயம் அங்கேயே நீங்கள் பாவத்தை ஏற்பீர்கள் என்பேன்.


எதனை என்று !!


உங்களை மனிதர்களை நம்ப சொன்னார்களா????


யாங்கள் இருக்கின்றோம்.


நேரடியாக வாருங்கள்.!!!!!


எவை என்று கூற ""யாங்கள் ஆசீர்வதிக்கின்றோம் !!!.


என்பதே மெய்.!!!!


இதனையும் யாங்கள் சொல்வதற்கு  உண்டா?? 


உண்டா? என்பதற்கிணங்க யுக  யுகங்களிலும் யாங்கள் இதனை என்று கூற எங்களை இவை என்று கூற பக்திகள் செலுத்தியது நிச்சயமாகவே நேரடியாக தரிசனம் கொடுத்தோம்.

ஆனாலும் இக்கலியுகத்தில் கொடுக்க யாங்கள் தயாராக இருந்து கொண்டிருக்கின்றோம்.

ஆனால் மனிதன் தயாராகவில்லை. தயாராகவில்லை

இதனையும் சித்தர்கள் நிச்சயமாய் போராடி கொண்டு மாற்றுவார்கள் மனிதர்களை.

மனிதர்களை ஒவ்வொருவரையும் கீழே வைத்துவிடுவார்கள்.

வைத்துவிடுவார்கள் என்பதற்கிணங்க மனிதனின் செயல்கள் இக்கலியுகத்தில் நிறைவேறுவதாக தெரியவில்லை.


தெரியவில்லை யாங்களே உற்ற துணையாக உங்களுக்கும் கடை நாளும் வருவோம்.


வருவோம் !!!பிறப்பறுத்தும் தருவோம் ....!!


தருவோம் என்பதற்கிணங்க என் மூத்தோனும் பிள்ளையானின் (கணபதி) அருளும் உங்களுக்கு உண்டு. உண்டு என்பதற்கிணங்க அனுதினமும் அவந்தனையும் வணங்கி வந்தால் "அறிவுகள் மேம்படும்!!!! அறிவுகள் மேம்படும் என்றால் உங்கள் அறிவுகள் மேம்பட்டு அறிவுகளோடு வாழக் கற்றுக் கொண்டு இருப்பதோடு வாழ கற்றுக் கொள்வீர்கள். இதுதான் என் பிள்ளையோனின் முன்பிருந்தே சொல்லிய வாக்கு.


வாக்கு என்பதற்கிணங்க ஏதாவது ஒரு குழப்பங்களோ? ஏதாவது ஒரு தடங்கல்களோ இருந்தால் என் மூத்தோனை வணங்கி வணங்கி வணங்கி வலம் வந்தால் அவந்தனே சொல்லித் தருவான் அறிவுகளும் கொடுத்து விடுவான். அவ் அறிவின் மூலம் பிழைத்துக் கொள்ளலாமே!!


பிழைத்துக் கொள்ளலாமே உண்டு மக்களே. 


மக்களும் உண்டு இவ்வுலகத்தில் எதற்காக?? வணங்குகின்றோம்?? என்பதே தெரியவில்லை!!!


மூத்தோனை(கணபதியை) வணங்கினால் அறிவுகள் மேம்பட்டு விடும்.

இதனால் நல் பாதைகள் சென்றுவிடுவான் என்பதே உண்மை.

என் மூத்தோனை வணங்கி வணங்கி ஆனாலும் மூத்தோனும் பல அறிவுகளை கொடுத்து விட்டான்.

அவர்களும் இன்றைய அளவில் பெரிய மனிதனாக தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் பிள்ளையோன் எதனை என்று கூற எப்படி வந்தது என்று கூட இப்பொழுது தலை குனிகின்றான்.

அவந்தனுக்கு இவ்வளவு அறிவுகள் கொடுத்துவிட்டோமே இவந்தன் தீய செயல்கள் எல்லாம் செய்து கொண்டிருக்கின்றான் என்று...!!!


ஆனாலும் இதனைத்தான் ஏற்றவாறு பின் நல் மனிதனாக இன்னும் பிறப்பெடுத்தல் அவசியம்.


யானும் இதனையும் இடைக்காலத்தில் வருவோருக்கும் என்னுடைய தரிசனம் இங்கு காட்டுவேன்.


ஆனாலும் நல் மனிதர்களுக்கு யான் தரிசனம் நிச்சயம் காட்டுவேன்.காட்டுவேன்.


இதையும் அகத்தியன் யான் யார் யாருக்கு காட்டுவேன் என்பதற்கிணங்க அகத்தியனும் பல நூல்களில் சொல்லிக்கொண்டே இருப்பான்.


"" முருகனை இங்கு காணலாம் என்று.!!!!


இதனையும் முன்னிறுத்தி முன்நிறுத்தி செல்வதற்கோ வழி இல்லை என்பதே மனிதனின் குறைகள்.


மனிதனின் குறைகளை பார்த்தால் எண்ணி எண்ணி வருந்துவதாகவே உண்டு.


உண்டு உண்டு இன்னும் நலம் உங்களுக்கு நீங்கள் நினைத்தாற் போலவே வாழ்வீர்கள் என்பேன்.


ஆனாலும் இதனையுமன்றி


அனுதினமும் என்னுடைய இதனையும் என்று கூற இப்போது பஸ்பமாக (திருச்செந்தூர் பன்னீர் இலை விபூதி) தந்துவிட்டார்கள்.


அதையும் சிறிது அளவே எடுத்து போகனையும் (போகர் சித்தர்) பின்பற்றி சிறிதளவே பின் நீரில் இட்டு அதனை அருந்தி வாருங்கள்.


பல நோய்களுக்கும் மருந்தாகும்.


அதையும்கூட கலப்படம் செய்து விட்டான் மனிதன்.!!


ஆனாலும் இதனையும் என்று கூற இதனையும் பலப் பல யுகங்களில் கூட இப்படித்தான் நோயைத் தீர்த்துக் கொண்டார்கள் மனிதர்கள் பலர். 


ஆனாலும் இதையே செய்து கொண்டிருந்தால் நிச்சயம் முருகா என்று கூட போகன் சொல்லிவிடுவான். அவ் மூலிகையை எங்கு பறிக்க வேண்டும் என்பது!!


அதையும் கற்றுத்தந்து உணர்ந்துகொண்டு இன்னும் உலகத்தில் இதனையும் இன்னும் பல பல மூலிகைகளையும் அருகில் வைத்துக்கொண்டே மனிதன் திரிந்து வருகின்றான்.


""வருகின்றான் ""மடிகிறான்!!...


பக்கத்திலேயே தன் மூலிகையை வைத்துக்கொண்டு கூட அதையும் தின்று தீர்க்காமல்.!!!!


இதுதானப்பா கர்மங்கள் என்பது.!!!!


கர்மங்கள் என்பது உண்டா??


புண்ணியங்கள் என்பது உண்டா??


உண்டு..... கர்மங்கள் பலவகையிலும் மனிதனுக்கு ஆட்டுகின்றது கலியுகத்தில்.


அவ் பாவத்தை கழிக்க வேண்டுமென்றால் பின் முதலில் .


""அமைதியாக தியானம்!!! ""இறைவனை வணங்குதல்!


"" நேர்மையாக இருத்தல்!!


இவையெல்லாம் இருந்தால் பாவங்கள் கரைந்து  யாங்களே என்னிடத்தில் அழைத்து வருவேன். 


யாங்கள் என்பதற்கிணங்க இன்னும் சித்தர்கள் வருவார்கள் வருவார்கள்.


இடைக்காடனும் (இடைக்காட்டு சித்தர்)) 


இனிமேலும் கிரகங்களை கட்டுப்படுத்த உண்டு.


உண்டு!! உண்டு!! என்பதற்கிணங்க நல்லோர்களை கட்டுக்குள் கிரகங்களும் நீக்கி விடுவான்.


நீக்கி விடுவான் என்பதற்கிணங்க இடைக்காடனும் இனிமேலும் கிரகங்களை செயல் இழக்கச் செய்வான் என்பேன்.


இதுதான் உண்மை அதனால் மனிதனின் செயல் அவை நடக்கும் இவை நடக்கும் இவை இங்கு பேச்சாக இருந்தது அவை அங்கு பேச்சு ஆகின்றது என்பதெல்லாம் நடக்காது வீணான வேலை.


கட்டுப்படுத்திக் கொண்டு விடுவான் இடைக்காடன்.


இன்னும் வாக்குகளாக உண்டு உண்டு.


அன்பு மகன்களே!!!!!! நிச்சயமாய் கவலைகள் இல்லை.


யான்!! யான் கூட நல் அறிந்தே உங்களையும் அழைத்து அகத்தியனும் அழைத்து வந்து விட்டான்.


பாடல்களும் எவ்வாறு என்பதையும் கூட நீங்கள் பாடிய போதே !!!


யான் ஆடினேன் என்பதே மெய்.


இவை என்று கூற இதனால்தான் ஆடிப் பாடித் துதித்து வந்தால் நீங்கள் ஆடிப் பாடித் துதித்து வந்தால் எந்தனக்கும் சந்தோஷம்.


யானும் உங்களுடன் ஆடுவேன்.


ஆடல் வல்லேன் எப்பொழுதும் இளமையிலேயே


என்னுடைய அருளே இருந்தால் எப்பொழுதும் நீங்கள் இளமையாகவே வலம் வரலாம் என்பேன். 


என்னுடைய அருளும் இருக்குதப்பா!!!


இதனால் கவலைகள் இல்லை என்றும் நல்வாக்கு நல்வாக்கும் மென்மேலும் சொல்கின்றேன்.


பல சித்தர்களும் இனிமேலும் வாக்குகளாக செப்பு செப்பி இவற்றின் போல் நடந்து வந்தால் குற்றங்கள் இவ்வுலகத்தில் கிடையாது.


தர்மத்தை நிலைநாட்டவே சித்தர்கள் போராடுவார்கள் இனிமேலும்.


இனிமேலும் நல்லோர்கள் வருவார்கள் யாங்கள் பிறக்க வைப்போம்.


அதர்மத்தை வெல்வோம்


தர்மத்தை நிலை நாட்டுவோம்.


அடுத்த வாக்கும் அகத்தியன் உரைப்பான்.



ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!


சர்வம் சிவார்ப்பணம்!!!!!

No comments:

Post a Comment