“இறைவா!!! அனைத்தும் நீ”
உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-
17/11/2021 அன்று பசுபதிநாத் ஆலயம் குறித்து குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு
வாக்குரைத்த ஸ்தலம். பசுபதிநாத் ஆலயம். காத்மாண்டு நேபாள்.
ஆதி ஈசனின் பொற்பாதத்தை தொழுது உரைக்கின்றேன் அகத்தியன்.
அப்பனே இவையன்றி கூற இவ் பசுபதி நாதனை குறித்து கூறுகின்றேன்.
பின் எதை எதனை கஷ்டங்கள் இட்டாலும் இவந்தனிடத்தில் வந்துவிட்டால் அப்பனே கஷ்டங்கள் எவ்வாறு என்பதையும் கூட மறைந்து போய்விடும்.
இவந்தனே அனுப்புவான் இங்கு சென்று வர. ஏன் உதாரணத்திற்காக சொல்கின்றேன்.
போகனே (போகர் சித்தர்) பைத்தியமாக இங்கு திரிந்து கொண்டு இருந்தான் என்பேன்.
ஆனாலும் இதனையுமன்றி ஈசனே அனுப்பினான் பின் என் மகன் கந்தனிடத்தில் செல்லுக என்று.
ஆனாலும் அலைந்தான் திரிந்தான் கடைசியில் கந்தனிடம் சென்றுவிட்டான் ஆனால் கந்தனோ போகனை புகழ் அடைய செய்துவிட்டான்.
ஆனாலும் இதைத் தான் சொல்கின்றேன் மனவருத்தங்கள் மனக்கஷ்டங்கள் இவையெல்லாம் இருக்கும் பொழுது எதனை என்று கூற எதனை என்று பின் படுத்த இவனை(பசுபதிநாதன்) சரணடைந்து விட்டால் அனைத்தையும் நீக்கி விடுவான்.
ஆனாலும் எதை என்று கூற சில மனிதர்கள் பின் இதை என்று கூற என்னால் போக முடியாது முடியாது என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள் ஆனால் அது தான் கர்மா என்பேன்.
அக் கர்மா இருக்கும் பொழுது நிச்சயம் இங்கு வரமுடியாது என்பேன்.
எத்தனை என்று கூற ஆனாலும் இதை தன் அவந்தனை இங்குதான் தரிசிக்க வேண்டுமென்று முயற்சி செய்துவிட்டால் வந்துவிட்டால் அப்பனே வழியும் காட்டி விடுவான்.
ஆனால் ஏன்? ஏன்? எதனையும் என்று கூற ஈசனின் ஆங்காங்கே விளையாட்டுக்கள் பலம் என்பேன்.
ஈசன் திருவிளையாடலும் மனிதர்களுக்கு பலம் என்பேன்.
ஏனென்றால் ஈசன் எங்கெங்கெல்லாம் இருக்கின்றான் தூர தேசங்களில் ஆனால் இதற்கெல்லாம் ஒரு வாய்ப்பு உண்டா?
உண்டா? என்பதற்கிணங்க உண்டு என்பேன்.
ஏன்? ஈசன் இங்கெல்லாம் தூரம் தூரமாய் சென்று சென்று ஸ்தலம் அமைத்து விட்டான் ? ஏனென்றால் இவனை நாடி நாடி பார்த்தால்தான் கர்மங்கள் அழியும் மோட்சமும் கிட்டும்
ஆனாலும் கர்மாக்கள் அழிய கர்மங்களும் அழிய விடுவதில்லை.
இது கலியுகம் கலியுகத்தின் காலம் என்பதற்கிணங்க பக்திகள் இன்னும் குறையும் என்பேன் இதுதான் உலகம் பக்தி குறைந்து அநியாயங்கள் ஆட்டங்கள் ஆடும்.
இவ்வுலகத்தில் எவை எவை என்று கூற ஆனாலும் சொல்கின்றேன் ஈசன் அடிக்கடி பின் பலத்த திருவிளையாடல்கள் விளையாடிக் கொண்டே இருப்பான்.
கர்மாக்கள் எவை என்று கூற மனிதர்களே பிழைத்துக் கொள்ளுங்கள். எங்கெல்லாம் பக்திகள் எங்கெல்லாம் ஈசனுடைய திருத்தலங்கள் இருக்கின்றதோ பின் பின் அங்கெல்லாம் சென்று வாருங்கள் நலமாகவே. அங்கெல்லாம் சென்று தங்கி வர சில கர்மங்கள் விலகி ஓடும் இதனால் முக்தியும் கிடைக்கும் என்பேன்.
இனிமேலும் பின் மனிதன் ஒழுங்காக வாழ முடியாமல் போய்விடும் தரித்திரமும் சேரும் என்பேன்.
இத் தரித்திரத்தை சேர்த்துக் கொள்ளாதீர்கள் என்பேன். நல் விதமாகவே நல் முறைகள் ஆகவே உரைத்து உரைத்துக் கொண்டேதான் வந்து கொண்டிருக்கின்றார்கள் சித்தர்கள். ஆனாலும் மனிதன் எதை எதையோ நினைத்து இதையெல்லாம் மதிக்கலாமா? என்றெல்லாம் என்பது போல் மதிக்காமல் சென்று கொண்டிருக்கின்றான் எவை என்று கூற.
எவை என்று கூறக் கூற பணத்தின் மேலே புத்திகள் இருக்கின்றது மனிதனுக்கு ஆனாலும் புத்திகள் எப்போது பணத்தின் மீது இருக்கின்றதோ அப்பொழுதே இறைவன் விலகி விடுவான் அதை எண்ணிக் கொள்க.
ஆனாலும் இறைவன் நினைத்தால் அனைத்தும் தந்து விடுவான் இதனால் நல் முறையாக பசுபதீஸ்வரன் பலப்பல சக்திகள் இவனிடத்தில் உண்டு என்பேன்.
இங்கும் நல் விதமாகவே எவ்வாறு என்பதையும் கூட இங்கு பல சித்தர்கள் இன்னும் தங்கிக் கொண்டு தான் இருக்கின்றார்கள் சித்தன் நிலையைப் பெறுவதற்கு கர்மாக்களை அழிப்பதற்கு.
அதனால் கர்மாக்களை அழிக்கக்கூடிய சிறந்த திருத்தலங்களில் இவ்வாலயமும் ஒன்று.
இதனையும் அறிந்து பின் கஷ்டங்கள் பட்டு பட்டு வந்து விட்டால் இவன் தரிசனம் அனுதினமாக கொடுத்து பின் எங்கு? சென்றால் இவன் தன் கர்மா அழியும் என்பதை ஈசனே காண்பித்து விடுவான் சொல்லித் தந்து விடுவான்.
அப்பனே நல் முறையாக நல் விதமாகவே இன்னும் பல கோடி வாக்குகள் உண்டு இன்னும் பல ஆசீர்வாதங்களும் உண்டு யானும் இத்திருத்தலத்தில் வந்து தங்கி உறங்கி சென்று இருக்கின்றேன்.
ஆனாலும் அப்பனே மனிதப்பிறவி எடுத்தாலே கஷ்டங்கள் உண்டு. ஈசன் தன் நாடகத்தை நடத்திக் கொண்டே தான் இருப்பான் திருந்துங்கள் மனிதர்களே திருந்துங்கள் அடுத்த வாக்கும் சொல்கிறேன் அதிவிரைவிலே!
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!
சர்வம் சிவார்ப்பணம்!!!!!
No comments:
Post a Comment