14/12/2021 அன்று ஏகாதசி திதியில் குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு.
ஆதி ஈசனின் பொற்பாதம் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.
உலகம் இருளில் போய்க்கொண்டு இருக்கும் வரும் காலங்களில்.
இதனையும் மீட்க பின்பு இறை வழிபாடு மிக மிகச் சிறந்தது என்பேன்.
என்பேன். இதனையும் உணர்ந்து வள்ளல் ராமலிங்கஅடிகளின் பின் அவந்தன் பாதையை (சுத்த சன்மார்க்க ஜீவ காருண்ய வழி) பின்பற்றினால் அனைவரும் பிழைத் துக் கொள்வது உறுதி.
உறுதியாக இவைதன் உண்டு என்பேன்.
உண்டு என்பதற்கிணங்க வருத்தங்கள் இனிமேலும் குடிகொள்ளும்.
இதனையும் உணர்ந்து சொல்கின்றேன்.
சொல்கின்றேன் தீபங்கள் தீபங்கள் ஏற்ற ஏற்ற தெளிவுகள் பெருகும் என்பேன்.
ஆனாலும் மனிதனுக்கு தீபங்கள் எவ்வாறு ஏற்றுவது என்பதை கூட தெரியாமல் போய்விடுகின்றது.
(1) பின் நவதானியங்கள் இட்டு அதன் மேலேயே தீபத்தை இடுதல் வேண்டும்.
(2) அல்லது இவை என்று கூற பின் இதற்கு மேலும் பின் இவை என்று கூற பச்சரிசி இவை இவை என்று கூறு இருக்கும் பொழுது அதனை மாவாக இட்டு அதன் மேலே தான் தீபம் ஏற்ற வேண்டும்.
இவ்வாறு ஏற்றினால் தான் பின் இவை தன் உணர சில சில உயிரினங்கள் அதை உண்டு வர சில கர்மாக்கள் தொலையும் என்பேன்.
அவைதன் மகிழ்ச்சியும் இருக்குதப்பா அதனுள்ளே.
அவை மகிழ்ச்சியுற இவந்தனும்(தீபமேற்றும் பக்தன்) மகிழ்ச்சியாக இருப்பான்.
அதை தெரியாமல் தீபங்கள் ஏற்றிவிட்டால் மனக் குழப்பங்கள் மாறும் மாறும் என்பதெயெல்லாம் எல்லாம் பொய்யே அப்பா.
அப்பனே இதனையும் தெரிந்துகொண்டு இனிமேலும் இவ்வாறு இடுங்கள்.
இடுங்கள் என்பது மெய்யே.
அவை மட்டும் இல்லாமல் தீபங்கள் ஏற்றும் பொழுது எத்தனை தீபங்கள் ஏற்றுகின்றீர்களோ அத்தனை உயிருள்ள ஜீவராசிகளுக்கும் உணவு கொடுப்பது முக்கியம் என்பேன்.
இவ்வாறு கொடுத்தால்தான் சில நல் பல செய்திகள் இல்லம் தேடி வரும் நல்லவையும் நடக்கும் என்பேன்.
ஆனாலும் சில மனிதர்களுக்கு இவை தெரிவதே இல்லை என்பேன்.
பின் ஏதோ இதனை என்றும் தீபம் ஏற்றி விட்டால் அனைத்தும் நடக்கும் என்பது உறுதியாக பின் ஆனாலும் இவை தன் நடந்து விட்டாலும் பிற்பகுதியில் குறைவாகிவிடும்.
அதனால்தான் இவைதன் உணர்ந்து செய்ய வேண்டும் செய்ய வேண்டும் என்பேன்.
No comments:
Post a Comment