22/8/2023 அன்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த பொதுவாக்கு வாக்குரைத்த ஸ்தலம் : திருச்செந்தூர்.
சித்தர்கள் யார் என்பதை கூட ரகசியத்தை யாராலும் இவ்வுலகத்தில் கண்டுபிடிக்க முடியாதப்பா!!!!!!
அப்படி கண்டுபிடித்துவிட்டால் அவன் உடனடியாக இறந்து விடுவானப்பா!!!!!!
அதனால் ரகசியங்கள் அப்பனே எதை என்று கூட சித்தனை மிஞ்சிய சக்தி இவ்வுலகத்தில் இல்லையப்பா!!!!!!
எதை என்றும் அறிய அறிய அதனால் சித்தர்களை வைத்து விளையாடுவது மிகப்பெரும் தவறப்பா!!!!!!
விளையாடிக்கொண்டு தான் இருக்கின்றார்கள் அப்பனே!!!!
அவர்களுக்கு அடிகளும் பலமாக பட்டுத்தான் கொண்டிருக்கின்றது!!!!.........
திருந்தவே இல்லை என்பேன் அப்பனே!!!!
எவை என்றும் அறிய அறிய போட்டி பொறாமைகள் நிறைந்தவர்கள் எதை என்றும் அறிய அறிய சித்தனை பின் நெருங்குவதற்கு தகுதி இல்லாதவர்கள் அப்பனே!!!!!
மற்றவர்களை குறை சொல்லி பேசுபவர்கள் அப்பனே சித்தனை நெருங்குவதற்கு தகுதியற்றவர்கள் என்பேன் அப்பனே!!!!!!
இதனால் அப்பனே பின் கோபப்படுபவர்களும் கூட காமத்தை நோக்கி செல்பவர்களும் கூட ஆசைகளில் எதை என்றும் மிதந்து கொண்டிருப்பவர்களும் கூட அப்பனே சித்தனை அப்பனே எவை என்று கூட நம்புவது ஆகாதப்பா!!!!
சொல்லி விட்டேன் அப்பனே!! எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே
சித்தனானவன் பெரும் கடலப்பா!!!!!! சொல்லி விட்டேன் அப்பனே!!!!
அவ் கடலை எதை என்று கூட கடக்க எதை என்றும் புரியாமலும் கூட எவை என்றும் அறியாமல்
விண்ணுக்கும் மண்ணுக்கும் அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!!!
🙏