மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Thursday, September 1, 2022

சித்தர்கள் ஆட்சி - 70 : அகத்திய மஹரிஷி வாக்கு - கலி விணை நீங்க.

 



அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடன்உறை பொதிகை வேந்தன் அகத்திய மஹரிஷி திருவடிகள் போற்றி போற்றி போற்றி!


கலி விணை நீங்க கணநாதன் திருவடி பற்றி கணநாதன் அருள் ஆசி தன்னில் அகத்தியன் செப்புகின்றேன் வாக்கினை. 


கலி காலம் என்பதை உணர வைக்கும் நிலை மனித வாழ்வில் ஏற்படும் நிலை உண்டு என்பேன். மனிதன் இன்னொரு மனிதனை அடக்கி ஆள வேண்டும் என்ற வேக்கை கலி மாயையில் ஏற்படும். அந்நிலை பல பாவ கர்மங்களை தனக்கும் தன் வம்சத்திற்கும் லாபம் என சேர்த்து பிறவி பிறவி பிறவி என கண்டு வாழும் நிலைக்கு அகப்பட்டு மேலும் உணரா நிலை கண்டு பிறவி பிணிகள் கண்டு கண்டு வாழ்வு தான். 


மனிதர்கள் வாழ்வில் இன்னல்கள் அற்ற நிலை வேண்டும் எனில் நற் கர்மங்களை நற்அகத்துடன் செய்து தானும் வாழ்ந்து பிற மனிதர்கள் வாழ்வில் நல்விணைகள் ஆற்றி இறை ஆசி பெற்று வாழ்ந்து பிறவி அகற்றி விட்டு இறையோடு கலந்து கொள்வதே நல்விணைகள் ஆகும். 


தானம் என்பது இருப்பதை கொடுப்பது. தர்மம் என்பது புரிந்து இல்லா நிலை தருவது தர்மம் ஆகும். தானத்தால் புண்ணியம் இல்லை என்பதே உண்மை. தர்மத்தால் ஆசி பெற்ற புண்ணியம் கிடைக்கும் என்பதே உண்மை ஆகும். 


தானத்திற்கும், தர்மத்திற்கும் விதையாக இருப்பது அகம் என்பதை மனிதர்கள் உணர நிலை இல்லை. தான் செய்வது அனைத்தும் மேன்மை என அக நிலை மயக்கம். இறை ஏட்டில் பதிவு என்பது உண்டு. 

தன் குடும்ப வாழ்க்கை நற்முறை கண்டால் போது என அகம் உள்ள மனிதர்கள் வாழ்வில் இன்று நல்நிலை ஆனால் அவை நிலை இல்லை. 

காலம் கலி எனினும் இறை அருள் பெற இறை தடத்தில் வியாபார வாக்கு. 

இறை அருள் அவ்வளவு கீழ் நிலையில் இருக்கிறது என மாயையில் தனது தனம் கொண்டு அதிகாரம் கொண்டு, தந்திரம் கொண்டு பெற முடியும் என நினைத்து வாழும் மனிதர்கள் காலத்திற்கு பதில் சொல்லும் நிலை இருக்கிறது என்பதே உண்மை ஆகும். 


உடலில் வேடம் மனதில் தந்திரம் மனிதர்கள் இடத்தில். இறை அறியாது சித்தர்கள் அறியாவண்ணம் என்று அகம் மனிதர்களுக்கு. கலி என வேடிக்கை பார்க்க வேண்டும் என்ற விதி இறை இடத்தில். இறைவனிடத்தில் இறை தடத்தில் நன்கு நாடகம் இந்த மனிதர்கள். மனநிலையோ தனத்தில் ஆனால் இறை தடத்தில் இறைவா இறைவா போற்றி என தந்திர துதி. துதி சுதி சேர்த்து ஓதி மனிதர்கள் நாடகம். 


உண்மை மனிதன் சிறு கற்பூரம் ஏற்றி வழிபட்டால் இறை அருள் அந்த மனிதனின் இன்னல் காணும் நிலையில் இறைவன் அருள் காத்து நிற்கும் என்பதே உண்மை ஆகும். 


குடிகள் வழியில் இறை வழிபாடு கூட தற்பெருமை. இது வழிபாடு அல்ல விளம்பர பாட்டு என்பதே உண்மை ஆகும். 

உறவுகள் என் உறவுகள் என கூறி தற்பெருமை காணும் மனிதன் ஒரு பிடி சாம்பல் எந்த உறவுகள் விரும்பும் சாம்பலை. 


தற்பெருமைக்கு அற்பணித்த மனிதர்கள் வாழ்வில் இறை அருள் எங்கு காணும்?. 

தன் தனம் உயர வேண்டும் தன் வாழ்வு உயர வேண்டும் என்று எண்ணத்தில் வாழும் மனிதர்களுக்கு இறை ஏட்டில் கர்மம் தான்.


மனிதர்கள் மிருகங்களை விட கொடிய நஞ்சு அகம் கொண்டவனாக மாறிய பின் ஏது இறை அருள்?. 

நவகிரகங்கள் மனிதர்கள் வாழ்வில் நடத்தும் செயல் யாவும் மனிதர்கள் வாழ்வில் சேர்த்த தீவிணை, நல்விணைகள் என உணர மனம் இல்லை. 

பரிகாரம் இருக்கிறது செய்து விட்டால் நவகிரகங்கள் அடிமை என நம்புகிறார்கள் இந்த மனிதர்கள். நடக்கும் நடக்கப்போகும் நாடகத்தை இறைவன் சாட்சி என்பதே உண்மை ஆகும். 

உன்னத மனிதர்கள் இன்னல்கள் கண்டாலும் இறை அருள் உண்டு என்பதே உண்மை. உன்னத மனிதர்கள் இறை அருளால் கடை தன்னில் உன்னதம் உன்னதம்.

வாக்கு முற்றே.


No comments:

Post a Comment