அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடன்உறை பொதிகை வேந்தன் அகத்திய மஹரிஷி திருவடிகள் போற்றி போற்றி போற்றி!
அருணகிரிநாதர் திருவடிகள் போற்றி!
ஆதி ஈசனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்.
ஆசிகள் ஆசிகள். எம்முடைய ஆசிகள் அப்பனே இன்னும்
ஏற்றங்கள் உண்டு. இதனால் கவலைகள்இல்லாமல் ஆனாலும்
நிச்சயம் ஒன்றைச்சொல்கின்றேன்.
மனிதனாக பிறப்பெடுத்தாலே நிச்சயம்கட்டங்கள் தானாகவே
தேரந்தெடுத்து வந்துவிடும்.
இதனை யான் பல மனிதர்களுக்கும் செப்பிவிட்டேன். ஆனால்
என்னுடைய அருகிலே நீங்கள் இருப்பதால் நிச்சயம் எதை என்று உணராமலேஅதனால் உங்களுடைய கடமையைச்செய்யுங்கள்.
நிச்சயம் யான் வழி நடத்நுவேன் கடை நாளும். அதனால்
குறைகள் இல்லை. இன்று அருணகிரி எதை என்று அறியாமலே
நிச்சயம் பின் ஆசிகள். வருவானப்பா. வாக்குகள் செப்புவானப்பா.
அருணகிரிநாதர் வாக்கு:-
இதனை என்று அறிவதறக்கு ஏதடா உரைக்கின்றேன் அருணகிரி. இதனையன்றும் மறைந்து மறந்துமறந்து வருவது ஏதடா?
ஏதடா பின் பிறவிகள்.
உங்களுக்கும் எதை என்று அறியாது அகத்தியனுடைய
ஆசிர்வாதங்கள் கடைநாளும் உண்டுடா.
உண்டு என்பதற்க்கு இணங்க மறந்துவருவது ஏதடா.
ஏதடா முற்றுப்பெற்று? முற்றுப்பெற்று வரும் வரும் காலங்களில்
ஏதடா இன்னும்சிறப்புக்கள். நீங்கள் அனைத்தும் எதை என்றும்
இன்னும் ஏராளமான ஆசிகள்.
முருகனடா என் தந்தையடா. இதையறிந்து யான் எதனையும்
ஏற்க்கும் திறனடா. இதனால் யான்உணர்ந்து உணர்ந்து
எந்தனுக்கு இன்பமே இல்லையடா வாழ்க்கையில்.
ஆனால் கடைசியில்இன்பம் மிகுந்து காணப்பட்டதடா. எதனால்? வாழ்வதெல்லாம் துன்பமடா யான். ஆனாலும் நிமித்தம்திமித்தம் காட்டி இன்பத்தை முருகனே தந்தானடா.
முருகனைக்காண எந்தனுக்கு இன்பமே. இதுதானடா இன்பம்.
மற்றவை எல்லாம் பொய்யடா.
பொய்யடா. பொய்யை வைத்துக்கொண்டு உண்மை
பேசுவதாடா? பேசுவதடா இல்லையடாமுட்டாளே.
அறிந்தும் அறியாமலும் நன்கு உணர்ந்து மனிதனின் நிலமைகள் கண்டால் அவன்தான்மனிதன். ஆனால் மனிதன் லீலைகளோ
எண்ணற்ற கோடிகள். கோடிகள் பிறவிகள் கடந்தாலும்மனிதன்
திருந்தப்போவது இல்லையடா.
அதனால் அகத்தியனை பக்கத்தில் வைத்துக்கொண்டு
தன்கடமைகளை சரியாக செய்து வந்தாலே போதுமடா.
ஆனாலும் அறிந்து அறிந்து உன்னுடைய தலத்திற்கும்
( மதுரை பசுமலையில் அமைந்துள்ளஅகத்திய மஹரிஷி ஆலயம். ) யான் வந்தேனடா. நன்கு ஆசிகள் தந்தேனடா.
அனைவருக்கும்ஆசிகள் அங்கேயேயடா. அகத்தியனும் அங்கு
அமரந்து கொண்டு இருக்கின்றானடா. இன்னும் ஏற்றங்கள்
உண்டடா.
( அருணகிரிநாதர் இங்கு பரிபூரணமாக தங்க உள்ளார் என்று
அகத்தியமஹரிஷி வாக்கு உரைத்து உள்ளார்)
இதனை மறுப்பதற்க்கு ஒன்றும் இல்லை. ஏதடா கீழ் விழுந்த
இதனை மறுப்பதற்க்கு ஒன்றும் இல்லை. ஏதடா கீழ் விழுந்த
பொழுதும் கீழ் விழுந்துநடக்கின்ற்பொழுதும் , நடந்து நிற்கின்றபொழுதும் ஏதடா வலிகள்.
வலிகள் வந்த பின்பும்நீக்குகின்ற தகுதிகள் யாருக்காவது
உண்டடா? உண்டடா ஒருவருக்கு மட்டுமே. அவ்வொருவனை
நீங்கள் மறுக்கும் பொழுது கூட வருவானடா நிச்சயம். கடமையில் கண். கண்ணில் கடமையா? கடமை பட்டிருக்க அகத்தியனின்
ஆசிர்வாதங்கள். நிச்சயம்.
எதற்க்கு என்று கூறடா? கூறிட்ட பின் வாழ்வதடா. வாழ்வதற்க்கு
பின் வந்ததடா வினை. வினையின்பின் செல்வதா?
புண்ணியத்தின் மீது அருகில் வருவதா.
வருவதடா புண்ணியங்களே. மிச்சம்காண்பது ஏதடா? ஆற்றின் நீர் போய்க்கொண்டே இருக்கின்றதடா. எதை என்று அறிவதற்க்கு
அதனை யான் காட்டுவேனடா கர்ம வினையை காட்டி
குறிக்கோள் காப்பேனடா. சல சல வென்றுகூட ஆனால் அர்த்தங்கள் இல்லையடா.
இல்லையடா எதற்க்கு மனிதன் பிறந்தான் என்று கூடயோசிப்பது இல்லையேடா. ஓடுகின்றானடா ஒடுகின்றானடா. ஓடிக்கொண்டே இருக்கின்றானடாதன் கடமையைக்கூட.
ஆனால் கடைசியில் பின் போய் சேர்வதோ பின் எதனை என்றும்
அறிவதற்க்கு உன்னால் முடியாதடா. ஓடுகின்றதடா ஆறு.
ஓடுகின்றதடா ஆறு, ஆறு, ஆறு ஆனால்கடையில் சேர்வது
எங்கடா? ஆனால் அதன் ஒரு துளி கூட எதனை எங்கே இருக்கின்றது என்றுகூற முடியாதடா காண்பதற்க்கு கடலில் சேர்கின்றதடா.
இதுதான் பிறவியடா.
ஓடுகின்று ஓடு ஓடு மனிதா. எப்பொழுது ( இறைவனை ) மறந்து
ஓடுகின்றாய் ஆனால் ஓடி ஓடிஉழைக்கின்றபோது எங்கேயோ போய் சேர்கின்றாய்.
ஆனால் ஒரு பிரயோஜனமும் இல்லையடாமனிதா உன்னால்
எதற்க்கு பிறவி. பிறவிபொழுதெல்லாம் பிறவி சாதாரண பிறவி
இல்லையடா. பிறவி இருந்தால் நிச்சயம் சாதிக்கும் திறன்.
சாதித்து இதனை எப்பொழுதும் மறவாது இருக்கவேணுமடா.
மற்றவை எல்லாம் யான் பிறவி இல்லை என்றுதான்
சொல்வேனடா.
அதனால் புத்தியுள்ள மனிதர்களே வாழ்ந்து காட்டுங்கள். வாழ்ந்து காட்டினால் இறைவனும் வந்துஉதவி செய்வானடா.
அதை விட்டு விட்டு பின் ஆற்றின்போலே பின் பெருக்கெடுத்து
ஓடி ஓடி அங்கெல்லாம் பாறைகள் இருக்கும்.
எவை எவையோ இருக்கும்.
அவைஎல்லாம் அடிபட்டு அடிபட்டுஅடிபட்டு கடைசியில் ஆனால் ஒன்றும் இல்லாமல் போய்விடுகின்றானே மனிதன்.
இதுதான் தரித்திரமனிதன்.
தரித்திர மனிதன் போல் இருக்காதீர்களடா. நிச்சயம் கந்தனின்
துணை பன் மடங்கு இருக்குதடா. அதனால் நிச்சயம் அதனால்
தானடா இன்றளவும் யான் வாக்குகள் செப்புகின்றேனடா.
செப்பித்து செப்பித்து போதனைகள் பல பல. அதனால் உன் அறிவுக்கு வேலை கொடடா? அறிவுஅறிவு.
அறிவின்பேரில் எதை உணர்வது. உணர்ந்து உணர்ந்து
அனைத்தும் தந்து கொண்டுஇருக்கின்றார்களடா சித்தர்கள்
உங்களுக்கு.
உணர்ந்து பின் பொய் என்பதே உண்மை.
உண்மைஎன்பதே பொய்.பொய் என்பதை மறந்து விட்டால்
மறப்பதற்க்கு ஏதடா தகுதிகள்.
தகுதிகள்உள்ளமையடா எதில் என்பது நிமித்தம் காட்டினால்
தகுதிகள் மனிதனுக்கு இல்லையடா.
என்னை குறிக்கோளாகவே யான் சொல்கின்றேனடா.
துன்பம் துன்பம் துன்பம். துன்பம் துன்பம்துன்பம். ( கவனிக்க 6 முறை துன்பம் என்ற வாரத்தையை ) எதனாலடா.?
ஆனால் கடைசியில்பாரத்தால் இன்பமடா. அவ்இன்பம்தான்
முருகனடா. அப்பொழுது தானடா என்னுடையமனசாட்சிக்கு
மனிதப்பிறவிக்கு அர்த்தமே வந்ததடா.
அதனால் பாரத்துள்ளயடா. இதை என்றும் அறியாதவர்க்கும் கூட மனம் பிதற்றி பிதற்றிவருகின்றதடா. எதற்க்காகடா? அதனால்
இறைவனை காண வேண்டும் ஆனால் நிச்சயம் கட்டங்கள் இட்டு இட்டு அவனை காண வேண்டி சொர்கமும் ரதமடா. ரதம் வந்ததடா எதற்க்காகடா? நிச்சயம்அழைப்பதறக்காகவடா.
இன்னும் உண்டு பன்மடங்கடா ஆசிகள். ஆசிகள் உன் திருத்தலத்திலே எண்ணத்தை மேம்படுத்திஅனைவரும் வந்தார்களடா.
அனைவருக்கும் யான் ஆசிகள். ஆனாலும் ஒவ்வொருவர்
நிலமையை பார்த்தால் கட்டங்களடா. யான் பைத்தியக்காரன்
என்று சொல்லிவிட்டேனடா.
நிச்சயம் வாழ்ந்து வாழ்ந்து வாழ்ந்நு ஆனால் ஈசனின் அருமை
புரியும் புதர். புரியாத புதர். புரியாதபுதர் இருந்தும் புரிவதற்க்கு
எங்கு உள்ளதடா அர்த்தங்கள் இல்லையடா.
மனிதப்பிறவிக்கேஅர்த்தமுள்ள வாழ்வு வையுங்கள்.
வைத்து வைத்து எதனையும் என்று கூற எங்கு வருகின்றீர்கள்?
எங்கு செல்கின்றீர்கள்? என்பதைக்கூட அறியாத மூடர்களே.
மூடர்களே இதனை திருத்துவதற்க்குவழி உண்டா?
வழி உண்டா உங்களுக்கும் இதனை என்று அறிவதற்க்கும்
அகத்தியன் ஒருவன்இருக்கின்றான். இதனால் நிச்சயம் மிச்சம்
புண்ணியங்கள் உண்டு.
உண்டு என்பதற்க்கு இனங்கவாழ்க்கை ஓடுகின்றதடா. ஓடிவிட்டு மீண்டும் பிறக்கின்றதடா. ஆனால் இது ஒரு பிறவி இல்லையடா.
இதனால் முற்றுப்பெற்ற பிறவியாக இருப்பதனால்தான் யான்
வந்தேனடா.
கந்தனுடைய அடிமைகள் நீங்கள் ஒரு காலத்தில். அதனையும்
அகத்தியன் சொல்வானடா. சொல்வானடா இன்னும் பன்மடங்கு.
மனிதர்களை மாற்றுவார்களடா சித்தர்கள். நிமித்தம் நிமித்தம்
காட்டி காட்டி. ஆனால் மனிதனின் நிலமைகள் மாய
நிலமைகளடா.
நிலமைகள் தந்து தந்துஏற்றுக்கொள்வதற்க்கு ஒன்றும்
இல்லையடா. ஒன்றும் இல்லையடா.
ஆனால் சேமிக்கும் திறன்பன்மடங்கடா. பன்மடங்கு ஆயிற்று
ஆனால் ஒன்றும் இல்லையடா. இதற்க்கு அர்த்தங்கள்உண்டடா.
மனிதன் நோக்குகின்றன் வாழ்வதற்க்கு ஆனால் இறைவனோ பைத்தியக்காரன் என்றேதிரிகின்றான் மனிதனை.
மனிதனை நேசித்து நேசித்து இறைவனை நோக்குகின்றான்.
நோக்குகின்றபொழுது நோக்கி பின் தாக்கி பின் வழி வகுத்தால் கழித்தலாக்கு கூட்டலாக்கு பின்பெருக்கலாக்கு .
பெருக்கலாக்கியும் திரும்பவும் வருவது பூஞ்சியமடா.
இதனை உணரந்தால் பின்கெட்டிக்காரனடா நீங்கள்.
உணராவிடில் இதனையும் கூட உங்களை எதனையன்று யான்
குறிப்பிடுவதடா.
நிச்சயம் உங்களுக்கு தெரிவிப்பேனடா பல பல விசயங்களை.
அதனை உணர்ந்து கொள்வதடா. கொள்வதறக்கு ஏது மதிப்புக்கள் உள்ளதடா. ஒன்றின் போல் பின் ஆயிரம். ஆயிரம் போல்
திரும்பவும் ஒன்றில் இருந்து. இதனையும் என்றும் அறிவதற்க்கு
நடுவில் எத்தனை மனிதர்கள்எத்தனை எத்தனை ஆனால்
பாகுபாடுகள்.
பாகுபாடுகள் இன்றி வாழந்திருந்தால் வாழ்வை வெறுத்து விட்டீர்களா.
வெறுத்து விட்டு வந்து ஊண் உடம்பு எங்கு. ஊண் உடம்பின்
மூலம் எதை எதையேநினைத்துக்கொண்டு.
இவ்வுடம்பை வைத்துக்கொண்டு சம்பாதித்து எங்கு சென்று
கடைசியில்பார்ததால் பின் உடம்பும் வீணாகின்றது.
ஆனால் ஆன்மவோ மீன்டும் பிறப்பு எடுக்கின்றது.
திரும்பவும் உடம்பை சேர்கின்றது. மனிதா இவை எல்லாம்
தேவையா?
அதனால் ஓடி ஓடி ஓடிச்சென்று கொண்டு , சென்று கொண்டு
சென்று கொண்டு அலுத்து இதனையும்அறிந்து உட்காரந்து
தூங்கு.
தூங்குகின்ற போது இதுதான் தன்மையடா. தூங்கி விட்டால் பின்
எழுப்புவதற்க்கு ஆள் இல்லையடா. ஆனால் உண்டடா இறை
பலங்கள். இதன் சக்தியால் நீங்கள்நிச்சயம் நடந்தோ நடந்து
நடந்து ஆனால் கடலில் மிதக்கின்றீர்கள் இப்பொழுது கூட.
மிதந்துமிதந்து அவ்நிச்சயம் அகத்தியன் இருக்கின்றானடா.
மிதப்பதாக இருந்தாலும்கூட்டிக்கொள்வானடா. சத்தியமடா.
இன்னும் லட்சியங்களடா.
இன்னும் மூலனும் ஆசிர்வாதங்கள். மூலனும் வந்து உரைப்பானடா. தேவையானதை கொடுத்துகொடுத்து ஆட்கொள்ளுவானடா.
இன்னும் மாற்றங்களடா. எம்முடைய ஆசிகள்.
எம்முடையஆசிகள்.
என்னுடைய புத்தகங்களை சிறிதாவது அனுதினமும் படிங்களடா. போதுமானதடா. நன்றி.
மனிதர்களாகு. மனிதர்களாக இன்னும் விளக்கங்கள் கூடிக்கொண்டே உள்ளது. கலியுகத்தில் கூடமாற்றங்கள் நிகழும் வண்ணம். உண்டடா.
உண்டடா ஆசிகள் என்னுடைய ஆசிகள்.
மறுவாக்கில்தெளிவாக குறிப்பிடுகின்றேனடா இன்னும்
லீலைகளைப்பற்றி. எதனை எதனை என்று கூடஎப்படிப்பட்ட
எப்படி எல்லாம் கடந்து வந்திருக்கின்றீர்கள் என்று பாரத்தால்
ஒன்றும் இல்லையடா. ஒன்றும் இல்லையடா.
இருக்கின்றது போல நினைக்கின்றீர்கள். இதுதான் நினைப்பு கூட மனிதனின் தன்மை ஆயிற்று. ஆயிற்று என்பதற்க்கும் கூட
அர்த்தங்கள் உண்டடா. உண்டடா. கேளடா. மனிதா , மனிததன்மையை மீறியது ஏதடா? ஏதடா வருந்துவது. வருந்தி வருந்தி பின்பு உட்காரந்து பின்புபடுத்துவது. படுத்திக்கொண்டு உறங்குவதா?
உறங்கிக்கொண்டு படுத்திருப்பதா? இதன்
அர்த்தம் எங்கே இருக்குதடா? சொல்லடா?
அர்த்தம் எங்கே இருக்குதடா? சொல்லடா?
ஆனாலும் உண்மைகள் நிலமைகள் மாறு படுமடா.
மாறுபட்டுவிட்டு வருமடா. வந்து என்று கேளுங்களடா.
கேட்டுப்பின் பின் ஊரந்து பின் வாழ்ந்து பின்வாழ்ந்துவிட்டு கடைசியில் ஏதடா? இவ்வுயிரின் ரகசியம். ஒருவனே உணர்வானடா
இறைவன். சக்தி.
சக்தியாக்கி கூட்டடா. கூட்டின்று வருவது கூட்டுக்களொடு
இருந்தாலே தன்மையடா. ஆனால்பித்தலாட்டக்காரனே மனிதன் என்பது. ஆனால் கூட்டோடு கூட்டு. வருங்காலத்துக்கு ஏற்றதடா.
ஏற்றதடா ஏற்றத்தோடு இருங்களடா. ஏற்றத்தற்க நல்மனதோடு.
மனத்தூய்மை இதனையும் அறிந்துஅழகாக குடிகொள்வானடா
இறைவன்.
மாயையடா. மாயை நிமித்தம். வந்தானடா போனானடா.
போடானடா ஒன்றும் புரயோஜனம்இல்லாமல்.
இதுதான் வாழ்க்கையடா.
வாழ்க்கையின் தத்துவத்தை உணரந்தவனடா நீங்கள். நிச்சயம் வாழ்ந்துவிட்டு சென்று விடுவீர்களடா.
இதனால் தன்மை புரியுமடா. இன்னும்சொல்கின்றேனடா
வாக்குகளாக. நிச்சயம். இன்னும் ஏராளமான தகுதிகள் உங்களிடத்திலே. நிச்சயம். நிச்சயம். ஆசிகள்.
- நாடி உரை முற்றே. சுபம்.
No comments:
Post a Comment