அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடன்உறை பொதிகை வேந்தன் அகத்திய மஹரிஷி திருவடிகள் போற்றி போற்றி போற்றி!
அகத்திய மஹரிஷி நாடி - 13-7-2022 ( குரு பூர்ணிமா ஆசி வாக்கு )
ஆதி ஈசனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன.
அப்பனே நலமாக எம்முடைய ஆசிகள் கடை நாளும் இருக்க கவலைகள் ஏது?
அப்பனே ஒவ்வொரு விசயத்திலும் எதை என்று கூறாமலே நிச்சயம் வெற்றிகள். சில சிலவிடயங்களில் கவனங்களும் தேவை. ஆனால் நிச்சயம் இந்த அளவு என்னுடைய ஆசிகள் நீகவனமாக இல்லாவிட்டாலும் உன் தாயவள் லோபாமுத்ரா நிச்சயம் பாரத்துக்கொள்வாள்.
அதனால் எம்முடைய ஆசிகள் அப்பனே.
யானும் நிச்சயம் எதை என்று அறியாமலே நீங்கள் அமைத்தீர்களே ( மதுரை பசுமலையில் அமைந்துள்ள அன்னை லோபாமுத்ரா உடனுறை அகத்திய மஹரிஷி ஆலயம்) அங்கே கூட யான் இப்பொழுதுகூட ( இன்று குரு பூர்ணிமா 13-7-2022 புதன்கிழமை ) பின் அமர்ந்து கொண்டு பின் நல் ஆசிகள்அனைவர்க்கும் கொடுத்திட்டேன் அப்பனே நலமாக நலமாக அனைவருக்கும் எம்முடைய ஆசிகள்அப்பனே.
கடமையில் கண்ணாக இருந்தாலும்
நல்முறையாக என்னை நாடி வந்துவிட்டால் அப்பனே பாசம் இதையன்றி கூற அனைக்கும் என்பேன்அப்பனே. உலகத்தில் மிகச்சிறந்தது பாசம்தான் என்பேன் அப்பனே. அப்பாசத்தை என்மீது எவ்வளவுகாட்டுகின்றீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு யான் ஆசிகள் கொடுத்து அப்பனே பல இறைசக்திகளையும் கொடுத்து இறைவனையும் காண வைப்பேன் அப்பனே. நல் ஆசிகள்.
நல் ஆசிகள் இன்றளவும். அதனால் எக்குறையும் கொள்ள வேண்டாம் அப்பனே. உண்டு ஏற்றங்கள்.
நிச்சயம்வெற்றிகள் எதையன்று உணராமலே அப்பனே பக்குவங்கள் பட்டு விட்டாய் பல பல வழிகளிலும். அப்பனே பக்குவங்கள் பட்டால்தான் இறை பலங்கள் அதிகமாகும் என்பேன் அப்பனே. நலமாகவேநலமாகவே உண்டு ஏற்றங்கள் என்பேன் அப்பனே. எதை என்று அறியாத அளவிற்க்கும் கூடவருத்தங்கள் இருந்தாலும் யான் காப்பேன் கடை நாள் வரையிலும் அப்பனே.
உன் கடமையை சரியாக செய்து வா. மற்றவை எல்லாம் யான் அழகாக பாரத்துக்கொள்வேன்அப்பனே. நல்விதமாகவே உண்டு உண்டு இன்னும் ஏராளமான ஆசிகள்.
பல பக்குவங்கள் பட்டு விட்டாய். அனுபவத்தின் மூலமாகத்தான் இறைவனை காண முடியுமே தவிரமற்றவை எல்லாம் ஏதும் ஆகாது. அனுபவம் சாலச்சிறந்தது.
நிச்சயம் ஆசிகள். ஆசிகள். அன்பு மகனே. கவலைகள்இல்லை. எம்முடைய ஆசிகள். எம்முடைய ஆசிகள்.
நலமாக நலமாக ஆசிகள் அனைவருக்கும்.
- நாடி ஆசி முற்றே. சுபம்-
No comments:
Post a Comment