மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Tuesday, May 24, 2022

சித்தர்கள் ஆட்சி - 63 : மதுரை பசுமலை அகத்திய மஹரிஷி ஆலய பொது நாடி வாக்கு


அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடன் உறை அகத்திய மஹரிஷி பாதம் போற்றி போற்றி போற்றி!!!







 

( திருமுறை வகுப்பு காட்சிகள் ) 


மதுரை அகத்திய மஹரிஷி பொது ஆலய நாடி 23/5/2022


ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன். 


அப்பனே இவையன்றி கூற கவலைப்பட அவசியம் இல்லை. யான் இருக்கும் பொழுது அப்பனே ஏன் கவலைகள் அப்பனே. இவையன்று கூற அப்பனே முக்காலத்தையும் யான் உணரந்தவன். எந்தனுக்கு தெரியும் நீங்கள் அமைத்திருப்பீர்களா என்று எண்ணி அப்பனே உங்கள் கடமையை செய்ய பழகுங்கள். மற்றவை எல்லாம் யான் பார்த்துக்கொள்கின்றேன் அப்பனே அதனால் குற்றங்கள் இல்லை குறைகள் இல்லை அப்பனே. 


எதற்க்காக அப்பனே இறைவன் அப்பனே மனிதர்கள் மீதுதான் பரிதவிக்க வேண்டும். ஆனால் அப்பனே மனிதர்கள் இறைவன் மீது பரிதவிக்க அவசியம் இல்லை. அது போன்று தான் அப்பனே சொல்லிவிட்டேன். யான் இருக்கின்றேன். யான் அனைத்தும் பார்த்துக்கொள்கின்றேன் அப்பனே. 


பெருமாளும் நல்முறையாக அங்கு வருவோருக்கும் தரிசனங்கள் கொடுத்து அனைத்தையும் செய்து கொண்டேதான் இருக்கின்றான். அதனால் அப்பனே நலமே மிஞ்சும் என்பேன். இறை பலத்தை அதிகமாக அதிகமாக உன் கடமையை செய் போதுமானது என்பேன் அப்பனே. அப்பனே தர்மத்தை கடைபிடிக்க வேண்டும் என்பேன் அப்பனே. நல்முறைகளாக பல மனிதர்களுக்கும் அங்கு வருபவர்களுக்கு எதை என்று கூற அப்பனே நிச்சயம் அப்பனே நல்விதமாக உணவை பரிமாறக்கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே. நல்முறையாகவே வரும் வரும் காலங்களில் நிச்சயம் எதை என்று கூற ஏதாவது நல்முறைகளாகவே கொடுத்ருள வேண்டும் அப்பனே. 


அப்பனே பின் ஆலயத்தையும் உறுவாக்கிவிட்டீர்கள் ஆனால் அப்பனே இதை என்று கூற அதை எல்லாம் யாங்கள் பார்த்துக்கொள்கின்றோம். இனிமேலும் எதை என்று கூற அன்னத்தையும் இடும் வேலையையும் யாங்கள் பார்த்துக்கொள்வோம் அப்பனே நல்முறைகளாக. ஏதாவது ஒன்றை மக்களிக்கு கொடுத்து வந்தால்தான் புண்ணியங்கள் பெருகும் என்பேன் அப்பனே.  அப்படி இயலாமல் அப்பனே எதையன்றி கூற அதனால் வருத்தங்கள் தேவை இல்லை அப்பனே. நல்விதமாகவே வரும் வரும் காலங்களில் ஏதாவது ஒரு எண்ணிக்கையில் நிச்சயமாய் கொடுக்க நன்று என்பேன் அப்பனே. பெருமாளும் அப்பனே நல் முறையாக ஆசிர்வாதங்கள் கொடுத்துக்கொண்டேதான் இருக்கின்றான். 


ஆனாலும் அப்பனே மனவேலை எந்தனுக்கும் எவை எவை என்று கூற. இப்படி அமைத்து விட்டு பின் இவையன்றி கூற அங்கங்கே சென்று விட்டார்களே என்ற எண்ணமும் எந்தனுக்கு வருகின்றது. அதனால் அப்பனே ஓர் முறை அனைவரும் கூடி நிச்சயம் அங்கு வந்து பாடல்களை பாட வேண்டும் செப்பிவிட்டேன் அப்பனே. அவர் அவர் வேலையை அவர் அவர் பாரத்துக்கொண்டு இருக்கின்றார்கள். ஆனாலும் அப்பனே இப்படியே சென்று கொண்டு இருந்தால் யான் நிச்சயம் அதில் கூட கை எதை என்று கூற ஆனாலும் அப்பனே நீங்கள் வெகு தொலைவில் இருக்கின்றீர்கள். 




அப்பனே நலமாக நலமாக என்னுடைய ஆசிகள் இருக்கும்பொழுது நலமாகவே இன்னும் சிறப்புக்கள் தோன்றும் என்பேன் அப்பனே. நல்முறையாக அப்பனே யானும் பார்த்துக்கொண்டே இருக்கின்றேன் அங்கே வாசகத்தை ( திருவாசகம் ) அப்பனே குழந்தைகள் பாடும் பொழுது. அவர்களுக்கும் நல் ஆசிகள். இன்னும் உயரச்செய்ய வேண்டும். யானும் பலமுயற்சிக்கு எதை எதை என்று கூற அப்பனே இதைத்தன் தொடரந்து செய்ய புண்ணியங்கள் ஏற்படும் என்பேன் அப்பனே. இன்னும் அதை சுற்றி நல்விதமாக உயர் பெரியோரின் அப்பனே ஆசிகள் கிடைத்து இன்னும் பன்மடங்கு ஆகட்டும் என்பது கூட எனது ஆசிகள் என்பேன் அப்பனே. எவையன்றி கூற வரும் காலங்களில் இதற்க்கும் சம்பந்தம் ஆன சில மனிதர்கள் அப்பனே வருவார்களப்பா. எதை எதை என்று கூற இதற்க்கும் கடைக்க ( கலைக்க )  ஆனாலும் அப்பனே நிச்சயமாய் யான் விடவும் மாட்டேன் என்பேன் இன்னும் பல பல தளங்களிலும் ( பல பல ஆலயங்களிலும் ) இதனை நிச்சயம் இயற்றவேண்டும் ( தினமும் திருவாசகம் பாராயணம் செய்ய வேண்டும் ) என்பேன் அப்பனே. அப்போதுதான் இறைவன் நிச்சயம் நல்முறையாக ஆசிகள் கொடுத்துக்கொண்டே வருவான் என்பேன் அப்பனே. 



அப்பனே இன்னும் இன்னும் ஒவ்வொரு வாக்கில் ஒவ்வொரு சிறப்பை யான் கற்பித்தே வருகின்றேன் அப்பனே நல்முறைகளாகவே உண்டு உண்டு என்பேன் அப்பனே. இதனால் நால்வரும் ( அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ) இங்கே ( மதுரை பசுமலை அகத்திய மஹரிஷி ஆலயத்தில் ) வந்து மகிழ்சியாக தங்கிவிடுகின்றனர் அப்பனே என்பேன் அப்பனே. எவர்களது இந்த குழந்தைகள் பாடும் பாடலை பார்த்து அவைகளுக்கும் ( நால்வர்களுக்கும் ) மிக்க சந்தோசங்களப்பா சொல்லிவிட்டேன். எவை எவை என்று கூற அதனால் அப்பனே எவை என்றுகூற உயர் ஞானிகளுக்கு எது சந்தோஷமோ அதையும் அப்பனே நல்விதமாக ஆக்கினால் அவர்கள் வாழ்க வாழ்க என்று சொல்ல ( வாழ்த்த ) நிச்சயமாய் அப்பனே பல கர்மங்கள் போய்விடும் ( அங்கு அமர்ந்து இந்த பாடல்களை பாடும் அனைவருக்கும்  ) இவை மனிதர்களுக்கு அப்பனே எப்படி செப்புவது அப்பனே. சிறு வயதில் இருந்தே தர்மத்தை கடைபிடிக்க வேண்டும் அப்பனே நல்விதமாக எதை எதை என்று கூற அதனால் அப்பனே தர்மத்தை கடைபிடிக்க கடைபிடிக்க எதாவது எதையன்றி கூற அப்பனே நல்முறையாக திருவாசகத்தையும், தேவாரப்பாடல்களையும் பாடி வந்தால் அவர்களுக்கு தானாகவே தர்மத்தை பிடிக்க நல்விதமாக மாறும் என்பேன் அதனால் அப்பனே தெரிவித்துக்கொண்டேன் அப்பனே தர்மத்தை (சிறுவர்களைக்கொண்டே ) பிடிக்கப்பிடிக்க இன்னும் மாற்றங்கள் உண்டு என்பேன்.


அப்பனே வாழ்க்கையின் தத்துவத்தை புரிந்து கொண்டிருப்பாய் இப்போழுது கூட. இதுதான் அப்பனே வாழ்க்கை. அப்பனே வாழ்க்கையில் அடிபட்டு அடிபட்டு எதை என்று கூற அனைத்தும் தெரிந்து கொண்டால்தான் அப்பனே அனைத்தும் தெரியும் எவையன்று கூற இறைவனும் அருகில்  வருவான் என்பேன். மற்றவை எல்லாம் ஏதோதான் கூட என்று சென்று கொண்டு இருந்தால் நிச்சயம் ( இறைவன் நம் அருகில் ) வர இயலாது. 


——பொது நாடி உரை முற்றே ——



Monday, May 16, 2022

சித்தர்கள் ஆட்சி - 62 : இறைவா! இறைவா!! இறைவா!!! இறைவா!!!! இறைவா!!!!!




அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடன் உறை அகத்திய மஹரிஷி




அகத்திய மஹரிஷி பாதம் பணிந்து இறைவனை எப்படி வணங்க வேண்டும் என்ற எளிய முறையைஉலக மக்கள் அனைவருக்கும் பயன்பட வேண்டும் என்ற உந்துதலால் இங்கு பதிவிட்டுள்ளோம்அகத்திய மஹரிஷி ஆசியால் நாடி அருளாளர் திரு.ஜானகிராமன் ஐயா மூலம் பலநாடிவாக்குகள்சித்தன் அருள் வளைதலத்தில் வெளியானதுஅந்த வாக்கில் இறைவனை எப்படி வணங்கினால்நண்மை என்ற எளிய முறைகளை மட்டும் எறத்தாழ 75 நாடி வாக்குகளில் இருந்து தனியாகஒருங்கினைத்து இங்கு பதிவிட்டுள்ளோம்நன்றி திரு.ஜானகிராமன் ஐயாசித்தன் அருள்  தளம்.


இங்கு இறைவனின் சக்தியை விட உயர்ந்தது எதுவும் இல்லை.

-அன்புடன் அகத்தியர் - பொதிகை நாடி வாக்கு-1!

அப்பனே, நல் முறையாக எதனை செய்தால், என்றெல்லாம் தோன்றும். எதுவும் வேண்டாம். அகத்தியனை நினைத்துக் கொள்ளுங்கள். அப்பனே, பின் மகன்களுக்கு எதை செய்யவேண்டும் என்று எமக்குத்தெரியும். அதை யான் செய்கின்றேன். அதை விட்டுவிட்டு, அது வேண்டும், இது வேண்டும் என கேட்டுக் கொள்ளாதீர்கள்.  அன்பு மட்டும்தான் இந்த மாய உலகில் சிறந்தது. ஆகவே அன்பை செலுத்துங்கள், போதுமானது.

-அன்புடன் அகத்தியர் - பொதிகை நாடி வாக்கு-2!

இவ்வுலகில் நலமாக வாழ மூலாதாரமாக இருப்பது இறை சக்தி ஒன்றுதான். இறை சக்தி இருந்தால், பின் நல் முறையாய் அனைத்தும் தேடி வந்துவிடும். உங்கள் அனைவருக்கும் நல்முறையாய் இறை அருளை பெற்று தருவதற்கு, மூலகாரணமே அகத்தியன் என்பேன்.

-அன்புடன் அகத்தியர் - கோடகநல்லூரில் கொங்கணவர் பொதுவாக்கு!

அன்பே தெய்வம் என அன்றே கூறி சென்றுவிட்டான். இறைவனிடம் அன்பை செலுத்துங்கள். அது போதும்.

-அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு!

நேரடியாக யான் வந்து நின்றாலும் அவன்தான் என்னையும் கண்டுகொள்வதே இல்லை.  இதற்குப் பெயர்தான் பக்தியா? பக்தி செலுத்த கோபங்கள், தாபங்கள் விலக்க வேண்டும். என்றால்தான் என்னை அடையலாம்.

என் இடத்திலே வந்து கூட சில கேள்விகள் ( பொருள் ஆசை ) கேட்கின்றனர். ஆனாலும் ஒருவர் கூட என்னை வேண்டும் என்று கேட்பதில்லை. அன்பை அன்றி வேறு ஒன்றை யாங்கள் எதிர் பார்ப்பதில்லை.

-ராமேஸ்வரத்தில் சிவபெருமான் வாக்கு!

இனி நாளும், ஒவ்வொரு பிரச்சினையும், ஒவ்வொரு குடும்பத்தில் நேரும் என்பேன். இதனால், இறைவனை பாடிப்பாடி தொழுதால் மட்டுமே, விடிவுகாலம் உண்டு என்பேன்.

இறைவனை வணங்கினால் மட்டுமே, விடிவுகாலம் உண்டு. மற்றவை எல்லாம் ஆகாது என்பேன்.

மனமாற்றங்கள் வேண்டாம் அப்பனே! அப்பனே, மனதுள், இறைவன் இருக்கின்றான் என்று பலமாக பிடியுங்கள். இறைவன் இருக்கின்றான் என்று பிடித்தால் மட்டுமே, வரும் காலங்களில் தப்பித்துக் கொள்ளமுடியும்.

இறைவன் அனைவரையும் காப்பாற்றுவான். ஆனாலும் மற்றவைகள் எல்லாம் இறைவனை நோக்கி இல்லாத போது, பின் கீழ் நோக்கி விழுதலே ஆகும். ஆனாலும், அவை போன்று செயல்பட விடாதீர்கள் என்பேன்.

ஒழுக்கமாக வாழ கற்றுக் கொள்ளுங்கள். கற்றுக் கொள்ளுங்கள். ஏதும் தேவை இல்லை. இறைவனை அன்பால் வணங்குங்கள். போதுமானது.

அன்பு, கருணையோடு, பகைமை இல்லாமல் இறைவனை வணங்குங்கள். எல்லாமே நீதானப்பா இன்று இறைவனை நோக்கி வணங்குங்கள். போதுமானது.

-அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - 17/06/2021

அப்பனே மனிதர்களுக்கு மேன்மையான எண்ணம் வேண்டும்! மேன்மையான எண்ணம் எவ்வளவு இருக்கிறதோ, அவர்களே முன்னேறி செல்வார்கள். அப்பனே மேன்மையான எண்ணம் இல்லை எனில், இறைவனை எவ்வளவு தேடினாலும், இறைவன் கிடைக்க மாட்டான். மேன்மையான எண்ணங்களும் சிந்தனைகளும் தர்ம காரியங்களும் ஈடுபடுவதும் இறைவனைக் காண வழி செய்யும் அப்பனே!

யாருக்கும் தீங்கு செய்யாத குணமும், யார் மீதும் பொறாமை இல்லாத குணமும், இருந்தால் வாழ்க்கையில் எல்லாவித முன்னேற்றமும் கிட்டும் அப்பனே!

அறம் செய்ய விரும்பு தமிழ் எழுத்துக்களில் முதல் எழுத்து அ என்றால் அறம் அப்பனே! அறம் என்றால் தர்மம் நல்வழிகளில் யார் தர்மம் செய்து வருகிறார்களோ அவர்களுக்கு இறைவன் நிச்சயம் காட்சி தருவான்! அது வேண்டும் இது வேண்டும் என்று பலனை எதிர்பாராமல் எவரொருவர் தர்ம காரியங்களில் ஈடுபட்டு புண்ணியம் நல் முறையாக செய்து வருகிறார்களோ அவர்களுக்கு நிச்சயம் இறை தரிசனம் உண்டு அப்பனே!

அப்பனே அகத்தியா நீயே பார்த்துக்கொள் என்று வணங்கி விட்டால் போதும் நான் பார்த்துக்கொள்வேன்! என்னிடம் அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்கக்கூடாது! அகத்தியா அகத்தியா என்று அன்பால் வணங்கினால் போதுமானது எனக்கு தெரியும் பிள்ளைகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது அப்பனே!

நல் முறையாக இப்போதே சொல்லி விடுகிறேன் அப்பனே! பிரம்மதேவனுக்கு எந்த மாதிரியான மனிதர்களை பிடிக்கும் என்று சொல்லிவிடுகிறேன் அப்பனே! பொறாமை குணங்கள் இருக்கக்கூடாது. சாந்தமான மனதாய் இருக்க வேண்டும். தியானங்கள் செய்ய வேண்டும். தன்னைப்போல் பிறரை எண்ண வேண்டும். இவை போன்ற எண்ணங்கள் இருக்கும் மனிதர்களை பிரம்மதேவன் விரும்புவான், அவனும் பிரியப்பட்டு தலையெழுத்தை மாற்றி தருவான் அப்பனே!

மனிதர்கள் அவர்கள் செய்யும் புண்ணியச் செயல்களை இறைவா உன்னருளால் அனைத்தும் நன்றாக நடக்கட்டும் என்று கூறி எவரொருவர் செய்து வருகிறார்களோ அவர்களுக்கு நிச்சயம் பலனுண்டு அப்பனே.

கஷ்டத்திலும் நிலையாக நின்று இறைவனை நினைத்து இறைவா நீயே என் கதி என்று நினைத்தால் அந்த இறைவனே வந்து அழைத்துச் செல்வான் அப்பனே.

-அன்புடன் அகத்தியர் - சுருளிமலையில் பொதுவாக்கு!

அன்பாக இறைவனை வணங்கினால் அவன் தானே இறைவனே முழுமைப்படுத்தி அவன்பால் ஈர்த்து அனைத்தும் செய்து விடுவான்.
அப்பனே அனைத்தும் நீயே அனைத்தும் நீயே கதி! உந்தனுக்கு தெரியும் எவை கொடுக்கவேண்டும் என்று பின் நல் முறைகளாக வணங்கி செல்லுங்கள் இறைவன் அனைத்தும் கொடுப்பான் மகிழ்ச்சியான வாழ்வையும் கொடுப்பான்.
அப்பனே நல் முறைகளாக சிறு குழந்தை தனமாக எவ்வாறு என்பதையும் கூட சிறு குழந்தையாகவே இருந்து கொண்டால் கடைசி நாள்வரை இறைவனே பார்த்துக் கொள்வான், அனைத்தும் செய்வான் அப்பனே நல் முறைகள் ஆகவே!

-அன்புடன் அகத்தியர் - ஓதிமலை அருள்வாக்கு-1

அப்பனே பெண் பிறக்கும் பொழுது எவ்வாறு என்பதையும் கூட நிமித்தம் காட்டி தாயவள் எவ்வாறு என்பதை என்கூட நிமித்தம் காட்டி அப்பனே தன் பிள்ளைக்கு தாயவள் என்னென்ன வேண்டும் என்றுகூட நல் முறையாகவே செய்வாள். ஆனாலும் இதனை வளரும் பொழுது மனிதனின் மனதில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. கர்மத்தில் குதிக்கிறான். இவ்வாறு குதிக்க, குதிக்க அவன் தன் வாழ்க்கையை அவனே கெடுத்து கொண்டு இருக்கின்றான்.

அதேபோல் அப்பனே சிறுபிள்ளையாக எவ்வாறு வந்தாயோ அதேபோல் கடை நாள் வரை இருந்துவிட்டால் அனைத்தையும் நல்குவான் என்பேன் ஆனால் மனிதர்கள் இவ்வாறு இருப்பதில்லை.

-அன்புடன் அகத்தியர் - ஓதிமலை அருள்வாக்கு-2

இறைவனை நம்புங்கள், எங்களை நம்புங்கள். எங்களை நம்புபவர்களுக்கு நாளும் கோளும் எதுவும் செய்யாது என்பேன். நல்ல விதமாக வாழுங்கள் என் அப்பன்களே! 

-அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு!

விதியின் பாதையிலே சென்று நான் மதியால் வெல்ல வைப்பேன் என்பேன்.

இப்பூவுலகில் எதனை எதனை தேடிச் சென்று திரிந்தாலும் அதெல்லாம் அழியக்கூடியது அப்பனே.

இறைவனே மெய் என்பதை உணர்ந்து விட்டால் அப்பனே இறைவனே வந்து உதவி செய்வான் யானும் உதவிகள் செய்வேன் அப்பனே.

எவ்வாறு என்பதை கூட சூரியனும் ஒருநாள் மறைந்துவிடும். சந்திரனும் ஒரு நாள் மறைந்துவிடும். இவையெல்லாம் இயக்கும் தகுதி அப்பனே இறைவனிடத்தில் மட்டுமே.

இறைவனுடைய அனுகிரகம் பெற்று நல் முறையாக இயங்கிக் கொண்டு தான் இருக்கின்றது.

மனதை நல் முறையாக அடக்கி விட்டால் இவ்வுலகத்தில் மனம் எவ்வாறு என்பதையும் கூட இறைவனே அந்த மனதில் இறங்கி விடுவான் அப்பனே.

இந்த உலகத்தில் பெரியது என்றால் மனதை அடக்குவது தான் என்பேன்.

அப்பனே மனிதன் நினைப்பது இறைவனுக்கு சிரிப்பாகத்தான் இருக்கிறது நல் முறைகள் ஆகவே ஆனால் பிறப்பின் ரகசியம் பிறக்கும்போது மனதில் எண்ணங்கள் இல்லை. வளரும் போது சில எண்ணங்கள். அப்பனே இவ்வெண்ணங்கள் அழிப்பதற்கு அப்பனே

-அருணாச்சலத்தில் குருநாதர் வாக்கு!

இறைவனை வகுத்துக்கொண்டு இறைவனை நினைத்துக் கொண்டால் அக் கர்மவினை பின் பின் சம அளவில் நல் முறையாக இறைவன் எடுத்துக்கொண்டு நல் முறையாகவே இவ்வுலகத்தில் வாழவைப்பான் என்பேன். அதனால் தான் இறை பலங்கள் அனைத்திற்கும் தேவை என்பதைக்கூட நான் நிச்சயமாய் சொல்வேன் என்பேன்.

ஒன்றை மட்டும் சொல்கின்றேன் இறைவா அனைத்தும் நீயே என்று பின் அவனிடத்தில் விட்டுவிடு பின் அனைத்தும் நடக்கும் என்பேன்.
அதைவிட்டுவிட்டு நல் முறைகளை அதைச் செய்கிறேன் இது நடக்கும் இதைச் செய்கிறேன் அது நடக்கும் அவை வேண்டும் இவை வேண்டும் என்று சென்று கொண்டு இருந்தால் நிச்சயம் கிடைக்காது என்பேன்.
இறைவன் மனிதனுக்கு கஷ்டத்தை தருவதை கூட மனிதனுக்குத் தெரிவதில்லை கஷ்டத்தின் மூலம் அனுபவத்தை பெற வேண்டுமே தவிர பின் மனக்குழப்பங்கள் ஆகிவிடக் கூடாது என்பேன் அப்படி மனக்குழப்பம் ஆகிவிட்டால் அவன் வாழ்க்கை வீணாகிவிடும் இதனால் தான் கஷ்டம் வரும்பொழுது இறைவா இறைவா என்று அழைத்தாலே போதுமானது கஷ்டங்கள் பகுதியாய் குறைந்துவிடும் என்பேன்.

மற்றவர்களுக்காக அனைவரும் நல் முறைகள் ஆகவே மற்றவர்களுக்காக உழைக்கின்றவன் எங்களுடைய அருளை எப்பொழுதும் பெறுவான் இதைத்தான் யான் செப்புகின்றேன். இதனை தெரிந்து கொள்ளுங்கள் மற்றவர்களுக்காக வாழ வேண்டும் என்பதனை கூட.

எதை என்றும் எதனை என்றும் கூட தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே நாங்கள் தரிசனம் தருவோம்செய்வோம்நிச்சயம் செய்வோம் என்பதைக்கூட இதனை திரும்பவும் உரைக்கின்றேன்.
பின் பின் எவ்வாறு என்பதையும் கூட தொழுது நிற்கும் பொழுது யானே அறிவேன்  பின் இறைவனே நீ என்னிடத்தில் வந்து விடு என்று கூறி விட்டால்  நானே நிச்சயம் வந்துவிடுவேன் என்பதுகூட உண்மை ஆனால் மனிதர்கள் இதுபோல் யாரும் அழைத்ததில்லை மகனே.

-அன்புடன் அகத்தியர் - முருகப்பெருமானின் அருள்வாக்கு!


கர்மா நீங்கி நல் முறைகளாக முக்தி பெறுவதற்கு சரியான  ஸ்தலம் இதுவே என்பேன்.
நல் முறைகளாக குழப்பங்கள் எவ்வாறு என்பதையும் கூட நினைக்கும் பொழுது நிச்சயமாய் இவனை(சிவனை) அண்ணாமலையில் சரண் அடைந்து விட்டால் இவன் தன் குறைகளை வைக்க மாட்டான் என்பேன்.
ஆனாலும் மனதில் எதையும் நினைக்கக் கூடாது என்பேன். அவை வேண்டும் இவை வேண்டும் என்று.
நல் முறை களாகவே வலம் வந்தாலே போதும் கர்மாக்கள் தொலையும்.
கர்மாக்கள் தொலைந்து புண்ணியங்கள் பெருகும் புண்ணியங்கள் பெருகும் பொழுது அனைத்தும் நிறைவேறும் என்பேன்.

நல் முறையாக நல்லெண்ணத்தோடு மந்திரமும் ஜபத்தால் தான் அதன் பலன் பலம் பல மடங்கு ஆகும் என்பேன்.

அதனை தவிர்த்து பின் அவை வேண்டும் இவை வேண்டும் என்று என்றெல்லாம் மந்திரங்கள் கூறி கொண்டு இருந்தால் பின் மனிதனுக்கு அழிவுகள்.

புரிந்துகொள்ளுங்கள் நல்லெண்ணத்தோடு பின் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு எண்ணினாலே போதுமானது. இறைவன்   தனக்கு செய்வான் 
இறைவன் அனைத்தும் செய்வான் என்பேன்.


அப்படியிருக்க எனக்கு பணம் வேண்டும் பொருள் வேண்டும் புகழ் வேண்டும் என்றெல்லாம் நினைக்கும் பொழுது பின் அவற்றில் ஒன்றைக் கூட நிச்சயமாய் இறைவன் தரமாட்டான் என்பேன்.

இறைவனை மனதால் எண்ணி கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு முன்னேறி வா இறைவன் அனைத்தும் தருவான் என்பேன்.
அப்பனே சொல்கின்றேன் சிறுவயதில் எவ்வாறு என்பதையும் கூட நல் முறையாகவே இறைவனையே தாய் தந்தையராக ஏற்றுக்கொண்டு நல் முறைகள் ஆகவே வணங்கி வந்தால் எத்துன்பமும் வராது என்பேன் .
வராது என்பேன் இதனுள் சூட்சமங்கள் இன்னும் பல உண்டு என்பேன்.

இறைவனிடத்தில் பிரார்த்தனைகள் செய்யும் பொழுதும் நல் முறைகளாக செய்யுங்கள் என்பேன் போட்டி பொறாமைகள் வேண்டாம் என்பேன்.

-அன்புடன் அகத்தியர் - திருவண்ணாமலை - ஆட்சி எங்களுடையதே!

அனைவரும் நல் முறைகளாக ஒழுக்க சீலராக வாழுங்கள் என்பேன் இவ்வாறு வாழ்ந்து விட்டாலே போதுமானது. இறைவன் நம்மிடையே இருந்து கொள்வான் எப்பொழுதும் கூட நல் முறைகள் ஆகவே.

இறைவனை பிடித்து இறைவா நீதான் அனைத்தும் என்று செல்ல அனைத்தும் இறைவன் அருளால் நடக்கும் என்பேன்.

-அன்புடன் அகத்தியர் - ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஐராவதேஸ்வரர் ஆலயம்

இன்பம் துன்பம் எதன் இடத்தில் இருந்து வருகின்றது என்று பார்த்தால் அனைத்தும் மனிதர்கள் இடத்தில் இருந்துதான் வருகின்றது என்பதை யான் சொல்வேன்.

இன்பம் வரும் பொழுது ஆடி விட்டு துன்பம் வரும் பொழுது துன்பம் வரும் பொழுது தான் இறைவனிடத்தில் நாடிச் செல்கின்றார்கள் அதனால்தான் முதலில் இன்பம் கொடுப்பான் இறைவன் அப்பொழுது நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பேன்.

அத் இன்பத்திலும்தாழ்வான மனது இல்லாமல் நல்ல எண்ணங்களுடன் புண்ணியங்களை செய்தால் துன்ப காலத்தில் இன்பமாகவே மாறிவிடும் என்பேன்.

உண்மை நிலை என்னவென்று மனிதர்களுக்குத் தெரிவதில்லை என்பேன் அன்பே கடவுள் கடவுள் மீது அன்பை வைத்து விட்டால் இறைவனும் அதைவிட பன்மடங்கு திரும்ப அன்பு செலுத்துவான் என்பேன் என்பேன் ஆனால் இதனையும் மனிதர்கள் புரிந்து கொள்வதில்லை.

ஈசனை மட்டும் நம்புங்கள்.

இவ்வுலகத்தில் ஈசனை விட பெரிய சக்தி எதுவும் இல்லை என்பேன்.

அனைத்திற்கும் காரணமானவன் ஈசன் இருக்கும்பொழுது ஆனாலும் மனிதர்கள் எதையோ எண்ணிக் கொண்டு அதைச் செய்தால் இது நடக்கும் எதைச் செய்தால் அது நடக்கும் என்று எண்ணிக் கொண்டு அலைந்து அலைந்து திரிந்துகொண்டு பொய்யான உலகத்தில் மெய்ப்பொருள் என்ன என்பதுகூட தெரியாமல் வாழ்ந்து வருகின்றனர் ஆனாலும் அனைத்தும் வீணே.

ஈசனை விட சக்திகள் இவ்வுலகத்தில் ஏதும் இல்லை என்பேன்.

நம்பினால் நம்பி பாருங்கள் தெரியும் சக்திகள் எதில் இருந்து வருகின்றது என்பது.

அதனால்தான் நாங்கள் நம்பிக்கை நம்பிக்கை என்று எடுத்து சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

எதன் மீது நம்பிக்கை வைத்தாலும் அது வீணாக போய்விடும் இறைவன் மீது நம்பிக்கை வைத்தால் எப்போதும் வீணாகாது என்பேன்.

சோதனைகள் சோதனைகள் தந்து தான் மீட்டு  கொள்வான் ஈசன்.

ஈசனே என் கதி என்று நினைத்துக் கொண்டு வாழுங்கள் நல் முறைகள் ஆகவே உங்களுக்கு அனைத்தும் செய்வான் என்பேன்.

அப்பனே மெய் என்பது என்னவென்றால் இறைவனே மெய் அவ் மெய்யை  பிடித்து விட்டால் பின் அனைத்தும் நலமே. ஆனால் அப்பனே முட்டாள் மனிதன் இதை உணர்வதும்  இல்லை அப்பனே.

மனக்குழப்பம் கொள்ளாதீர்கள் அப்பனே மனக்குழப்பம் கொண்டால் அப்பனே மனிதனின் நோய்க்கு மூலாதாரமே மனக்குழப்பம் தான் நல் முறையாக இறை பக்தியை பின் கடைப்பிடித்து நல்ல கதி அடையலாம் என்பேன்.

அப்பனே  நல் முறைகளாக நாம் என்று சொன்னால் தான் அனைத்தும் நடக்கும் என்பேன்.

நான் என்ற வார்த்தைகள் ஈசன் அடியில் இருக்கக் கூடாது என்பேன்.

நல் முறைகளாக ஈசனை வணங்குபவர்கள் நான் என்னுடையது நான்தான் என்றெல்லாம் சொல்லக்கூடாது என்பேன்.

அப்பனே ஈசன் மனிதர்களுக்கு ஓர் அறிவு அதிகமாக படைத்துவிட்டான் ஆனால் அந்த அறிவை இதுவரை மனிதர்கள் பயன்படுத்தியதாக சரித்திரமே இல்லை என்பேன்.

ஆனாலும் அதனைப் பயன்படுத்திக் கொண்டால் பின் இறைவனையே காணலாம் என்பேன்.

-அன்புடன் அகத்தியர் - சிவன் கோயில்பாக்கம் - பொதுவாக்கு!

அப்பனே எவை வேண்டும் என்றுகூட கேட்டாலும் அப்பனே தன் சுயநலத்திற்காக வே இறைவனை வேண்டுகிறார்கள் அதை நாங்கள் ஏற்பதில்லை மகன்களே எப்பொழுதும் கூட.

அப்பனே எல்லோருக்கும் ஒன்றை தெரிவியுங்கள் அப்பனே அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று வணங்க வேண்டும் இதனை தெரிவித்து விட்டால் இறைவனுக்குத் தெரியும் அப்பனே.

-அன்புடன் அகத்தியர் - சிதம்பரம்!

தன் குலதெய்வத்தை நல் முறைகள் ஆகவே அமாவாசை திதி அன்றுவரை வணங்கி வந்தால் குலதெய்வத்தின் அருள் ஆசிகளும் முன்னோர்களின் அருளாசி களும் பலம் பெற்று அனைத்தும் நிறைவேறும் என்பேன்.

அப்பனே பிறவியை நல் முறையாக உபயோகிக்க வேண்டும் என்பேன். தான் நன்றாக இருக்க வேண்டும் தன் பிள்ளைகள் நன்றாக இருக்கவேண்டும் தன் காந்தர்வங்கள் இருக்க வேண்டும் என்றுதான் நிறைய மனிதர்கள் பின் நினைத்து நினைத்து இறைவனை வேண்டுகிறார்கள் ஆனாலும் ஒருவன் கூட இறைவா உன்னை எவ்வாறு காணலாம்? உன்னை எங்கு தரிசிக்கலாம் எல்லாம் நீயே இறைவா அனைத்தும் நீயே இறைவா என்றெல்லாம் கூட ஒருவனும் வணங்குவது இல்லை.

அப்பனே சுயநலத்திற்காக எதைச்செய்தாலும் இறைவன் நிச்சயமாய் கொடுக்கமாட்டான்.

யான் சொல்கின்றேன் அப்பனே இறைவன் முறையாகவே மனிதனுக்கு ஆறாம் அறிவை படைத்தான் ஆனால் அப்பனே அவ் ஆறாவது அறிவை பின் எவரும் பின்பற்றுவதே இல்லை இதுவரை.
யான் பின் முன் வாக்கிலும் இதைத்தான் சொன்னேன் ஆறாவது அறிவை பயன்படுத்துங்கள் பயன்படுத்துங்கள் என்று.

ஆறாவது அறிவை பயன்படுத்தினால் அப்பனே இறைவனை நல் முறைகளாக ஏழாவது அறிவுக்கு அழைத்துச் செல்வான் என்பேன்.

ஏழாவது அறிவில் அப்பனே இறைவனை காணலாம்.

அதைவிட எட்டாவது அறிவில் நல் முறைகள் ஆகவே அப்பனே அனைத்து சித்திகளும் நல்ல முறையில் கிடைக்கும் .அப்பனே. 

எட்டாவது அறிவில் அட்டமா சித்திகளும் கிடைக்கும்

ஆனாலும் அப்பனே இன்னும் ஆறாவது அறிவிற்கே மனிதன் இதுவரை வரவில்லையே அப்பனே.

-அன்புடன் அகத்தியர் - திருவண்ணாமலை!

என்னைவிட மீறிய சக்திகள் இவ்வுலகத்தில் எதுவும் இல்லை.

இன்னும் பல கஷ்டங்களில் மனிதர்களுக்கு கஷ்டங்கள் மிகுந்து காணப்படுகின்றது அவையெல்லாம் ஓட ஒன்றே பக்தி பக்திக்கு வந்தால்தான் இவையும் பிறந்து சிறந்து விளங்குவதோடு மனிதர்களுக்கு பெருமை சேர்க்க முடியும்.

அம்பிகை:- தேவாதி தேவனே! விடிவுகாலம்! இல்லையா? இவ்வுலகத்திற்கு?ஆதி ஈசன்:-
தேவியே !உண்டு என்பேன்.பொய் கூறுதல் கூடாது .தன் கஷ்டத்தால் வாழவேண்டும். அனைவரும் நன்றாக இருக்க வேண்டும். நன்றாக இருக்க வேண்டும். ஒழுக்கத்தில் சிறந்தவையாக இருக்க வேண்டும்.சிறுவயதிலிருந்தே பக்தியை கடைப்பிடிக்க வேண்டும்.என்னால் படைக்கப்பட்ட அனைத்து உயிரும் எந்தனக்கு சொந்தமானது.அவையெல்லாம் பின் அவை தன்னில் அழிவை மனிதனால்
அதனை அழித்து விடக்கூடாது.
ஒரு மனிதனுக்கு கோபம் வந்துவிட்டால் அவன் அனைத்திற்கும் அடிமையாவான் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
என்னுடைய அடியார்களுக்கும் சித்தர்கள் அடியவர்களுக்கும் சித்தர், அகத்தியரை வணங்குபவர்களுக்கு கோபங்கள் நிச்சயம் வரக்கூடாது வரக்கூடாது வரக்கூடாது என்பேன்.
அதை மீறி வந்தால் அவன் பொய்யானவனே.

சொல்கின்றேன் தேவியே!இவ்வுலகத்தில் என்னைவிட மீறிய சக்திகள் இல்லை
இல்லை இல்லை... அதனை விட்டுவிட்டு மற்றவைகளிடம் தேடிச் சென்றால்
அதன் மூலம் நிச்சயம் அழிவுகள் உண்டு. தேவியே.

ஒன்று சேருங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே விடிவெள்ளி உண்டு என்பேன்.

-1/10/2021 பிரம்மமுகூர்த்தத்தில் காசி கங்கைகரையில் - உலகையாளும் பரமேஸ்வரன் பார்வதி தேவியின் கேள்விகளுக்கு   உரைத்த பொது வாக்கு

எங்கெல்லாம் பக்திகள் எங்கெல்லாம் ஈசனுடைய திருத்தலங்கள் இருக்கின்றதோ பின் பின் அங்கெல்லாம் சென்று வாருங்கள் நலமாகவே.
அங்கெல்லாம் சென்று தங்கி வர சில கர்மங்கள் விலகி ஓடும் இதனால் முக்தியும் கிடைக்கும் என்பேன்.

புத்திகள் எப்போது பணத்தின் மீது இருக்கின்றதோ அப்பொழுதே இறைவன் விலகி விடுவான் அதை எண்ணிக் கொள்க.
ஆனாலும் இறைவன் நினைத்தால் அனைத்தும் தந்து விடுவான்.

அப்பனே மனிதப்பிறவி எடுத்தாலே கஷ்டங்கள் உண்டு. ஈசன் தன் நாடகத்தை நடத்திக் கொண்டே தான் இருப்பான் திருந்துங்கள் மனிதர்களே திருந்துங்கள்

-17/11/2021 அன்று பசுபதிநாத் ஆலயம் குறித்து குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு 


நாராயணனை அலைந்து திரிந்து ஓடோடி பார்த்தால் தான் கர்மங்கள் நீங்கும் ஆனால் இது மனிதர்களுக்கு தெரிவதே இல்லை.

கர்மா புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்ல விடாது என்பேன்.
பின் கர்மா இதனையும் அறிந்து பின் இறைவனை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வந்து விட்டால் அக் கர்மாக்களை இறைவன் ஏற்றுக்கொள்வான்.

என் மகளின் அருளைப் பெற்றுவிட்டால் நிச்சயம் நிச்சயம் சக்தி வாய்ந்த பதவிகள் ஏற்பட்டு எப்போதும் கூட வந்து கொண்டே இருக்கும் எப்போதும் கூட வந்து கொண்டே இருக்கும் ஊற்று நீரைப் போல.

ஆனாலும் இவள்தன் எதனை என்று குறிப்பிட்ட பெருமாளுடைய அருளும் ஈசனுடைய அனுகிரகம் இல்லாமல் இங்கு ஒருவரையும் அனுமதிக்க மாட்டாள் அவள்.  என் பிள்ளை லக்ஷ்மி.

-அன்புடன் அகத்தியர் - முக்திநாத்/பசுபதிநாத்!


வரும் என்பதெல்லாம் மனிதர்கள் இறை அன்பு என்பதை புரிந்து கொள்வதே இல்லை.
இறையின் பாதையைத் தேர்ந்தெடுத்து விட்டால் அவை நன்றாக அமையும் என்பதைக் கூட தெரிவதில்லை இறைவனை மனிதன் ஒரு பொழுது போக்காகவே பார்க்கின்றான்.
இறைவன் எதனை தர வேண்டும் என்று எண்ணித்தான் மனிதனுக்கு தருவான் என்பது மனிதனுக்கு தெரிவதே இல்லை.

2021 அன்று கோரக்கர் சித்தர் உரைத்த பொதுவாக்குவாக்குரைத்த ஸ்தலம் : கோரக்கர்நாத் மந்திர்கோரக்பூர்உத்தரபிரதேசம்

தீபங்கள் தீபங்கள் ஏற்ற ஏற்ற தெளிவுகள் பெருகும் என்பேன்.
ஆனாலும் மனிதனுக்கு தீபங்கள் எவ்வாறு ஏற்றுவது என்பதை கூட தெரியாமல் போய்விடுகின்றது. 
பின் நவதானியங்கள் இட்டு அதன் மேலேயே தீபத்தை இடுதல் வேண்டும்.
அல்லது இவை என்று கூற பின் இதற்கு மேலும் பின் இவை என்று கூற பச்சரிசி இவை இவை என்று கூறு இருக்கும் பொழுது அதனை மாவாக இட்டு அதன் மேலே தான் தீபம் ஏற்ற வேண்டும்.
இவ்வாறு ஏற்றினால் தான் பின் இவை தன்  உணர சில சில உயிரினங்கள் அதை உண்டு வர சில கர்மாக்கள் தொலையும் என்பேன்.
அவைதன் மகிழ்ச்சியும் இருக்குதப்பா அதனுள்ளே.
அவை மகிழ்ச்சியுற இவந்தனும்(தீபமேற்றும் பக்தன்) மகிழ்ச்சியாக இருப்பான்.
அதை தெரியாமல் தீபங்கள் ஏற்றிவிட்டால் மனக் குழப்பங்கள் மாறும் மாறும் என்பதெயெல்லாம் எல்லாம் பொய்யே அப்பா.
அப்பனே இதனையும் தெரிந்துகொண்டு இனிமேலும் இவ்வாறு இடுங்கள்.
இடுங்கள் என்பது மெய்யே.



-14/12/2021 அன்று  ஏகாதசி திதியில் குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு

அப்பனே கஷ்டங்கள் இல்லாமல் வாழ்ந்தாலும் அப்பனே அது மனிதனுக்கு அப்பனே இயல்பல்ல. மனிதன் என்ற தன்மையை இழந்து விடுவான் என்பேன்.
அப்பனே இவை என்று கூற அப்பனே பெரிய மகான்கள் அப்பனே ஞானியர்கள் ஏன் சித்தர்கள் இவர்கள் எல்லாம் கூட கஷ்டப்பட்டுதான் வந்தார்கள் என்பேன்.
இப்படி இவ்வாறு பின் அனைத்தும் இழந்து இழந்து பின் இவையன்றி கூட கஷ்டங்கள் பட்டால்தான் இறைவன் அருள் புரியும் என்பேன்.
ஆனாலும் அப்பனே இதனையும் என்று கூற சிலருக்கு அனைத்தும் கொடுத்துக் கொண்டே இருப்பான் ஆனாலும் இறைவன் அப்பனே அவந்தன் நினைக்க நேரங்கள் இல்லாமல் சென்று விடும்.
ஆனாலும் இறைவனே சில நேரங்களில் கஷ்டங்கள் கொடுத்த பின் இறைவன் தன் பால் இறைவன் தான் என்ற உண்மை நிலைக்கு பின் ஏற்படுத்துவான் என்பது உறுதியானது.

இறைவா நீயே கதி என்று உணர்ந்து விட்டால் போதுமானது என்பேன் அப்பனே.
அனைத்தும் யாங்கள் செய்துவிடுவோம் அப்பனே.
இதனையும் நன்கு உணர்ந்து அப்பனே சித்தர்கள் ராஜ்ஜியமே அப்பனே உறுதியானது என்பேன்.

அகத்தியா அகத்தியா எல்லாம் நீயே என்று சொல்லி இருங்கள்.
அப்பனே விதியை மாற்றும் தகுதி அப்பனே யானே  படைத்திருக்கின்றேன். அப்பனே.



-13/12/2021 இன்று குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்குவாக்குரைத்த ஸ்தலம்திருமலை திருப்பதி

தாய் தந்தையரை எவ்வாறு மதிக்கின்றீர்களோ அதையும் யான் பார்த்து தான் நிச்சயம் ஆசீர்வதிப்பேன்.

தாய் தந்தையரை மதிக்காதவர்களை யான் என்னிடத்தில் வந்தாலும்கூட கண்டுகொள்ள மாட்டேன் என்பதை உறுதியாக கூறுகின்றேன்.

பக்தி என்பதை எவ்வாறு என்று சொல்கின்றேன்.

முருகா அனைத்தும் நீயே என்ற எண்ணத்திற்கு எப்பொழுது வருகிறீர்களோ?  தூய எண்ணங்கள் எப்பொழுது வருகின்றதோ?

போட்டி பொறாமைகள் எப்பொழுது வராமல் நின்றுகொண்டு இருக்கின்றதோ பின் இதனையும் தாண்டி பின் அனைத்தும் இறைவனுடைய செயலே என்று எவன் நினைக்கிறானோ அவனிடத்தில் யான் பரிபூரணமாக இருப்பேன்.

இதில் தான் சூட்சமம் உள்ளது துன்பம் எவருக்கு வருகின்றதோ.     அவரிடத்திலே நிச்சயமாய் இறைவன் இருப்பான். குடி கொண்டு இருப்பான்.

அன்புடன் இறைவனை வணங்கினாலே போதுமானது.

எதையும் கொடுக்க வல்லவன் இறைவன்

என் தந்தை ஈசனே திருவாசகத்தை எழுதினான் எழுதினான் என்பதற்கிணங்க அனைத்து விஷயங்களும் அதிலேயே அடங்கி உள்ளது.

அது பெரும் பொக்கிஷம் ஆனாலும் அதனை கூட உணராமல் செய்து கொண்டிருக்கின்றான் மனிதன்.


-11/11/2021 அன்று கந்தன் ஜீவநாடியில் உரைத்த பொது வாக்கு
வாக்குரைத்த ஸ்தலம்மாதேஸ்வரன் மலை கர்நாடகா.

ஈசனை கருணையோடு பின்பு கண்டு கண்டு தரிசித்தால் பல வினைகள் தீர்ந்து போகும் என்பேன்.
தீர்ந்து போகும் என்பேன் ஆனாலும் மனிதர்களோ பின் எவை எவை தன் சுயநலத்திற்காக வேண்டுகிறார்கள்.
அப்படி வேண்டுபவர்களுக்கு நிச்சயமாய் நமச்சிவாயனே அருள மாட்டான் என்பதுதான் மெய்.
அனைத்தும் நீயே என்று இரு போதுமானது.
அனைத்தும் ஈசன் கருணையோடு ஈசன் செய்வான்.
இவ்வுலகத்தில் மிக்க கருணை உள்ளவன் ஈசன்.
ஆனாலும் அதை யாரும் புரிந்து கொள்வதற்கு தயாராக இல்லை என்பேன் இவ்வுலகத்தில்.

கர்மாக்களை அழிக்க எவராலும் முடியாது என்றேன்.

ஈசனால் மட்டும் என்னால் மட்டுமே முடியும் என்பேன்.

இவ்வுலகத்தில் இன்னொரு சூட்சுமத்தையும் சொல்லுகின்றேன்.
கர்மா நீக்கவேண்டும் என்றால் ஈசனே முடிவெடுக்க வேண்டும் என்பேன்.
அப்பனே இவ்வுலகத்தில் "மன்னன்"  ஈசனே! என்பேன்.
அப்பனே
காத்தல்
அழித்தல் 
படைத்தல் இவ் மூன்றும் ஈசனுக்குத்தான் சொந்தம் என்பேன்.
இதனை அவன் ஆக்கியும் கொள்ளலாம் அழித்தும் கொள்ளலாம். படைத்தும் கொள்ளலாம் அப்பனே.
அப்பனே இவையன்றி கூற அதனால்தான் அப்பனே
 ஈசனை வணங்குவதற்கும்  "பயம்" வேண்டும் என்பேன் .
பயத்தோடு வணங்கினால் மட்டுமே அப்பனே அதுமட்டுமில்லாமல் அன்போடு வணங்கினால் மட்டுமே ஈசன் கருணை உள்ளவன்.
அதனை விட்டுவிட்டு அனைத்தும் செய்துவிட்டு இதனை (அண்ணாமலையே)  வணங்கினால் ஈசனே அழித்து விடுவான்.
இது யாருக்கும் தெரிவதில்லை மனிதர்களுக்குகூட. 

அப்பனே நலமாக என்றென்றும் அமைதியாக இருந்தால் மட்டுமே இவ்வுலகத்தில் போதுமானது .
ஈசனே கருணையோடு வந்து உதவிடுவான் அப்பனே.

அப்பனே எவை என்று கூற அப்பனே இன்னொரு விஷயத்தையும் கூறுகின்றேன்.
அப்பனே ஏழையான மனதையே இறைவன் விரும்புகின்றான். அப்பனே.

இவையே இருந்தால் போதுமே அப்பனே இறைவன் தன்னுடனேயே இருப்பான் கடை நாள் வரையிலும் அப்பனே.

அப்பனே இவையன்றி கூற அப்பனே ஆடம்பரத்தையும் மனிதனே ஏற்படுத்தியவன் என்பேன்.
ஈசன் அவ்வாறு கேட்டதில்லை ஒரு பொழுதும் கூட.



-20/11/2021 கார்த்திகை தீப இரண்டாம் நாள் அன்று குருநாதர் அகத்தியர் /பிருகு மகரிஷி உரைத்த பொது வாக்கு 
வாக்குரைத்த ஸ்தலம்திருவண்ணாமலை 

இறைவனோடு சேர்ந்து விட்டால் நல் மாற்றங்கள் நிச்சயம் நிகழும் என்பேன்.

இறைவனை பக்தியோடு வணங்குகின்றார்களே தவிர அவர்களுக்கு ஆசைகள் பல பல என்பேன்.

இறைவனிடத்தில் தன் ஆசைகளுக்காகவே அனைத்தும் கேட்டுக்கொண்டு பின் செல்கின்றான்.

இறைவன் எப்படி தருவான்??

இறைவன் பின் தருவதற்கு எவ்வாறு என்பதையும் கூட ஆனாலும் இதையன்றி  கூற இறை பக்தியை செயல்பட்டு வருபவர்களும் இனிமேல் வருவார்கள் என்பேன்.

இறை சிந்தனையோடு இறை பக்தியோடு இன்னும் இறைவனே நீயே என்று எப்பொழுது மனிதனுக்கு தோன்றுகின்றதோ அப்பொழுது நிச்சயமாய் பன்மடங்கு உயர்வுகள் கிடைக்கும் என்பேன்.

அதையும் விட்டுவிட்டு எவ்வாறு இதனையும் என்று கூற அதை பெறுவோமா? இதை பெறுவோமா? என்றெல்லாம் மக்கள் கூட்டம். ஒரு கூட்டம்.

இதனையும் என்று கூற யார் கெடுப்பது? இதனையும் என்று கூற இவ்வாறு தோஷங்களா?? இவ்வாறு வருகின்றதா?? இவ்வாறு வருகின்றது.      என்பதுபடியால் அவ்வாறு சென்றடைந்தால் இவை தீருமா ?தீராதா? இவையெல்லாம் மனிதனுக்கு குழப்பமாக உள்ளது.

ஆனால் இவையெல்லாம் மனதில் நினைத்துக் கொண்டு இறைவனை மறந்து விடுகின்றான்.

ஆனால் திருத்தலங்களுக்கு வரும்பொழுது இறைவா என்று வணங்கி விடுகின்றான்.

இதனையுமென்று நியாயமாகாது! செல்லாது !என்பேன்.

இறைவனை எப்படி? வணங்குவது? என்பதை கூட இன்னும் தெரியாமல் தவித்துக் கொண்டு இருக்கின்றான் மனிதன்.

இதனைத்தான் யான் சொல்வேன் மனிதரிடத்திலே தவறு இருக்கின்றது தவறு இருக்கின்றது என்பேன்.

இதனால் இறைவனை குறை கூறி ஒன்றும் நடக்கப்போவது இல்லை.

இதனால் பக்தியே சிறந்தது.

இறைவனே அனைத்திற்கும் காரணம் இறைவனே காரணம் என்பதெல்லாம் மனிதன் எப்பொழுது? உணர்ந்து விடுகின்றானோ !! அப்பொழுதே அவந்தனக்கு அனைத்துமே நடக்கும்.

பக்தியோடு சிரத்தைதோடு அனைவருக்கும் நல் உதவியை செய்து பல அன்னதானங்கள் இட்டு பல அன்னதானங்கள் இட்டு அன்னை தந்தையரை மதித்து சேவைகள் செய்து வந்து திருத்தலம் வந்தால் கூட இறைவன் நிச்சயமாய் நிற்ப்பான் என்பேன்.

அங்கே ஆசிகள் தருவான் என்பேன்.

தருவான் என்பேன் இறைவனே வா மகனே என்று கூட அழைப்பான் என்பேன்.

ஆனால் தரித்திர மனிதன் இவையெல்லாம் செய்வதே இல்லை.

செய்வதே இல்லை என்பதற்கு இணங்க இறைவனை மட்டும் வந்து வணங்கிட்டு எந்தனுக்கு அதை தா! இதை தா! என்று சொல்லிக்கொண்டு இருந்தால் இறைவன் ஒன்றும் வேலைகாரன் இல்லை மனிதர்களுக்கு.

அப்பனே ஒவ்வொன்றும் மனிதன் கையிலே இருக்கின்றது.

மனிதன் தவறாகவே பயன்படுத்துகின்றான்.அப்பனே.

எங்களைப் போன்று சித்தர்களை நல் விதமாக வணங்கிட்டு வந்து இதனை என்றும் கூற இறைவா எப்படி? வாழ்வது? எப்படி? உறுதியாக வாழ்வது? எப்படி போய்ச் சேருவது? என்பதையெல்லாம் பின் மனதார நேசித்துக் கொண்டு

இறைவா! இறைவா! என்று அழைத்துக் கொண்டிருந்தால் அக்  கடலில் நீந்தி கொண்டிருப்பவனை யாங்களே (கரை சேர உதவி புரிந்து ) தள்ளி விடுவோம்.

ஆனாலும் மனிதன் யாங்கள் நீந்துவோம் என்றுதான் தானாகவே கர்மத்தில் விழுகின்றான்.

மனிதனாக பிறந்து விட்டால் பிறக்கும் பொழுதே இன்பம் துன்பம் இவையன்றி கூற இதனை என்றும் எவ்வாறு என்றும் கூட வந்து விடுகின்றது.

அதனால் அப்பனே துன்பம் இல்லாமல் வாழ்வது என்பது அப்பனே அது இறைவனுக்கு கூட ஆகாது என்பேன்.

துன்பம் எதனால் வருகின்றது சிந்தித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.


அப்பனே பின் மனிதனால் தான் வருகின்றது. தம் தம் கைகளால் தான் வருகின்றது.

அதனையும்  விட்டு விட்டால் அப்பனே எவ்வாறு என்பதைக்கூட இறைவா இறைவா என்று இருங்கள் போதுமானது.

பல பல யுகங்கள் பல பல பிறப்புக்கள் அப்பனே இறைவனை காண முடியாது.

பல பக்திகளை நாட வேண்டும் இரவும் பகலுமாக அப்பனே

இரவும் பகலுமாக அப்பனே இறைவனுக்காகவே சேவை  செய்ய வேண்டும். ஆனாலும் கலியுகத்தில் இறைவன் இறைவனை சுலபமாக பார்த்துவிடலாம்.

அப்பனே இதனையும் வரும் காலங்களில் உரைக்கின்றேன் எப்படி பார்ப்பது என்பது .

அப்பனே கலியுகத்தில் காத்துகொண்டிருக்கின்றான் இறைவன் மனிதனுக்கு தரிசனம் கொடுக்க.

ஆனாலும் மனிதன் அதனை உணர்வதாகவே தெரியவில்லை.

மனிதன் மனிதன் பற்று பின் எதை என்று கூற ஆசைகளை பார்த்தால் அப்பப்பா வீணாகிவிடும் என்பதைக்கூட யான் திரிந்து கொண்டு அலைந்து கொண்டே இருக்கின்றேன்.

ஆனால் மனிதன் தன் கடமைகளை விட்டுவிடுவதாக இல்லை.

இறைவனும் பார்ப்பதாக இல்லை என்பேன்.

இதனால் ஆசைகள் ஆசைகள் என்று கூட அதன் பகுதியிலேயே எவ்வாறு என்பதையும் கூட மனிதன் மாயை பின்னே போய்க் கொண்டிருக்கிறான்.

இறைவன் பின்னே வருவதற்கு யாரும் இல்லையப்பா.

ஆனாலும் பொய் பக்திகள் தான் செலுத்துகின்றார்கள் இவ்வுலகத்தில்.

அப்பனே எதற்காக தன் பிள்ளைகள் இவையன்றி கூற தம் தன் நன்றாக அவர்கள் நன்றாக பின் இவை கிடைக்குமா? பணம் கிடைக்குமா? இவையெல்லாம் பின் சலித்து விட்டான் இறைவன்.

இறைவனே கேட்டு கேட்டு காதுகளால்.

அப்பனே இதனையன்றி கூற அதனால் எதனையும் கேட்காமல் மனதோடு அமைதியோடு தியானம் செய்தாலே இறைவனுக்கு படைத்தவனுக்கு தெரியாதா??

என்ன தரவேண்டும் என்று கூட.

அதனால் நிச்சயம் படைத்தவன் இறைவன் எவ்வாறு என்பதையும் கூட அவந்தனுக்கு  தெரியும்.

நீயே தா என்று கூட அவந்தனை சொல்லிவிட்டால். 

ஆனாலும் சிறு சோதனைகள் வருமே தவிர அனைத்தும் கொடுத்துவிடுவான் அப்பனே.

சலித்துவிட்டான் என்பதற்கிணங்க கேட்டுக்கேட்டு ஆனாலும் அன்பினால் வணங்குபவர்கள் எவரும் இல்லையப்பா இவ்வுலகத்தில்.

அப்பனே இதனை கண் கூடாகவே பார்த்துக் கொண்டு வந்திருக்கின்றேன்.

அப்பனே ஈசனை மறைமுகமாக கேட்டுக் கொண்டே தான் இருக்கின்றேன்.

ஒரு தடவை அப்பனே எவ்வாறு என்பதையும் கூட அகத்தியா இங்கு வா என்று கூட இத்தலத்திலே என்னை அழைத்தான்.

ஈசா சொல் என்று யானும் கூற

ஒரு மாதம் இங்கே இரு என்னிடத்திலே இருந்து ஆசிகள் வழங்கு என்று கூட என்னை உள்ளே அனுப்பி விட்டான்.

யானும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றேன்

ஒவ்வொரு மனிதனும் பித்தலாட்டங்கள் பொய்கள் பின் எவை என்று கூற

எதை வேண்டுவது? எதை வேண்டக் கூடாது? என்பதெல்லாம் யானே முன் நின்று யானே ஈசனை அழைத்து விட்டேன்.

அப்பப்பா உன் லீலைகள் உன் திறமைகள் பலம் என்பேன்.

இதற்கு எந்தனக்கு தேவை இல்லை யான் மனிதனுக்கு திருத்தி விடுகிறேன் அதனால் நீயே இங்கு இரு என்று கூட யான் சொல்லிவிட்டேன்.

அப்படிப்பட்ட மனிதர்கள் அப்பனே இப்புவியுலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் அப்பனே.

எங்கள் ஆட்சி அப்பனே நல் விதமாக

-30/12/2021 அன்று குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்குவாக்குரைத்த ஸ்தலம்சுசீந்திரம் தாணுமாலயன் திருக்கோயில். 

கஷ்டங்கள் பின் பட்டு பட்டு திருந்தினால் தான் வாழ்க்கை வளமாக மாறுமென்பது சித்தர்களுக்கு உரித்ததாக.

உரித்ததாக! 

அன்பு இல்லை பூசைகள் செய்தால் இவை தன் வரலாற்றில் கர்மத்தை தன் அழிக்க முடியும் என்பது மனிதனின் எதிர்பார்ப்பு.

எதிர்பார்ப்பு பொய்யாகிவிடும் என்பேன்.

கலியுகத்தில் கலியுகத்தில் எதனையும் என்று நிரூபிக்கும் அளவிற்கு மந்திரங்களும் பலிக்காது தந்திரங்களும் பலிக்காது.  எங்கள் அருள் இருந்தால்தான் அனைத்தும்.

எப்போழுதும் வாழ்ந்து கொண்டே இருப்பேன் சிறு பிள்ளையாகவே!! 

இதனையும் உண்டு இதனையும் அற்று விட்டு எதனையும் அற்று விட்டு வந்தால் என் மகனாகவே!!  உன் பிள்ளையாகவே உங்களுக்கும் எதனையும் என்று நிரூபிக்க உங்களுக்காகவே யான் பிள்ளையாகவே வாழ்ந்து விடுவேன் 

""முருகா!! "" முருகா!! என்று ஆசை வார்த்தை கூறி விட்டால் யான் ஓடோடி வந்து விடுகின்றேன்.

ஆசைக்காகவே பாசத்திற்காகவே

ஆனாலும் ஒருவர் கூட அழைப்பதில்லை.

தன் பிள்ளையை நினைத்து தன் பிள்ளை நன்றாக இருக்க வேண்டும் தன் சந்ததிகள் நன்றாக இருக்க வேண்டும் சொந்த பந்தங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பது தான் வேண்டுவதுதான் மனிதனின் குறிக்கோளாக உள்ளது. அதையும் மீறி, தாண்டி , ""முருகா!!               ""என் குழந்தை நீயே ""என்று அழைத்தால் நிச்சயம் யான் ஓடோடி வந்து விடுகின்றேன்.

இதுதான் மெய்"! அப்பனே!

மனிதர்களே!! நிச்சயமாய் இறைவனை நீங்கள் தேடி செல்ல தேவையில்லை.

மனதோடு அன்பாக  எதையும் யாருக்கும் துரோகம் இல்லாமல் நல் விதமாக அன்போடு!! பாசத்தோடு!! அரவணைப்போடு!!  பின் வாழ்ந்து வந்தால் யாங்களே !!ஏன்? சித்தர்களே ஏன்? என் தந்தையே (ஆதி ஈசனே உன்னை ) தேடி வந்துவிடுவான். இவைதன் உணர்ந்து செயல்பட்டால் அவந்தனை மென்மேலும் உயர்த்தி விடுவான் என்பதே திண்ணம்.

திண்ணமான வாக்கு !!

கடவுள் ,கடவுள், கடவுள் எவ்வாறு எதனை என்று ஏன்? கூறுகின்றீர்கள்?

உள்ளே அன்பாக அமர்ந்து விட்டு தியானம் செய்தாலே உள்ளே வந்துவிடுவான் ஓடோடி.

என் தந்தையவன்(ஈசன்) மிக்க கோபக்காரன் ஆகவே தவழ்ந்து நிற்கின்றான் என்பது அனைவரும் அறிந்ததே.

ஈசன் கோபக்காரன்

ஈசன் பின் இல்லத்தில் இருந்தாலும் எவை என்று இருந்தாலும் ஈசனை நம்பி விட்டால் கெடுதல்கள் என்று பல மனிதர்கள் சொல்லி அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றனர்.

ஆனாலும் இவ்வுலகத்தில் கருணை உள்ளவன் என் தந்தை.

ஆனாலும் இதையன்றி கூற இவை என்றும் என்றும் அளவிற்கு உயர்ந்த இடத்தை பிடிக்க பின் நமச்சிவாயா என்று அன்போடு அழைத்துக் கொண்டே இருந்தால் 

இருந்தால் என்பதற்கிணங்க வருவான் வந்து அருள்வான் என் தந்தை.

இவ்வுலகத்தில் விதியை மாற்றும் சக்தி "அகத்தியனுக்கும் உண்டு.!

"அகத்தியனுக்கும் உண்டு.!

"அகத்தியனுக்கும் உண்டு.!

என்பதைச் சொல்வேன்.

அதனால் அகத்தியனுக்கும் ஆனாலும் தெரிவதில்லை மனிதர்கள் ஏதோ ""அகத்தியா!!! என்று கூப்பிட்டால் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்துவிடுவான் என்று.

"""அது உண்மையே!!!!!

மூத்தோனும் பிள்ளையானின் (கணபதி) அருளும் உங்களுக்கு உண்டு.

உண்டு என்பதற்கிணங்க அனுதினமும் அவந்தனையும் வணங்கி வந்தால் "அறிவுகள் மேம்படும்!!!!

அறிவுகள் மேம்படும் என்றால் உங்கள் அறிவுகள் மேம்பட்டு அறிவுகளோடு வாழக் கற்றுக் கொண்டு இருப்பதோடு வாழ கற்றுக் கொள்வீர்கள்.

இதுதான் என் பிள்ளையோனின் முன்பிருந்தே சொல்லிய வாக்கு.

ஏதாவது ஒரு தடங்கல்களோ இருந்தால் என் மூத்தோனை வணங்கி வணங்கி வணங்கி வலம் வந்தால் அவந்தனே சொல்லித் தருவான் அறிவுகளும் கொடுத்து விடுவான்.

அவ் அறிவின் மூலம் பிழைத்துக் கொள்ளலாமே!!

பிழைத்துக் கொள்ளலாமே உண்டு மக்களே. 

மக்களும் உண்டு இவ்வுலகத்தில் எதற்காக?? வணங்குகின்றோம்?? என்பதே தெரியவில்லை!!!

மூத்தோனை(கணபதியை) வணங்கினால் அறிவுகள் மேம்பட்டு விடும்.

இதனால் நல் பாதைகள் சென்றுவிடுவான் என்பதே உண்மை.

பாவத்தை கழிக்க வேண்டுமென்றால் பின் முதலில் .

""அமைதியாக தியானம்!!! ""இறைவனை வணங்குதல்!

"" நேர்மையாக இருத்தல்!!

இவையெல்லாம் இருந்தால் பாவங்கள் கரைந்து  யாங்களே என்னிடத்தில் அழைத்து வருவேன். 

என்னுடைய அருளே இருந்தால் எப்பொழுதும் நீங்கள் இளமையாகவே வலம் வரலாம் என்பேன். 


-31/12/2021 அன்று கந்தன் உரைத்த பொதுவாக்கு
வாக்குரைத்த ஸ்தலம்திருச்செந்தூர் செந்தில் கோட்டம். 

எவனொருவன் நீயே ஒரு நல்வழி விடு என்று கேட்பானா? என்று தவித்துக்கொண்டு இருக்கின்றான் இவ்வாலயத்தில் இருப்பவன். ஆனாலும் ஒருவன் கூட அதை கேட்கவில்லை.
என் பிள்ளைகள் நன்றாக இருக்கவேண்டும் எனக்கு பணம் வர வேண்டும் சொத்துக்கள் வரவேண்டும் மேற்படிப்புகள் படிக்க வேண்டும் பெரிய இல்லத்தை அமைக்க வேண்டும் என இப்படி கேள்விகளையே கேட்டுக் கொண்டிருக்கின்றான் மனிதன்.
இவந்தன் என்ன உங்களுக்கு வேலையாளா?? 
அப்பனே இவன்  இடத்திலும் நல் முறையாக சக்திகள் உள்ளது என்பேன் அமைதியாக இவனிடத்தில் தியானம் மட்டும் செய்தால் போதுமானது அனைத்தும் கொடுப்பான் அதைவிட்டுவிட்டு அப்பனே எதை எதையோ கேட்டுக் கொண்டிருந்தால் இவந்தனுக்கு மனக்குழப்பம்  பின் எதுவும் நடக்காது என்பேன்.

அப்பனே பக்குவங்கள் பெறவேண்டும். பக்குவங்கள் பெற்றால்தான் இறையருள் பலமாக இருக்கும் என்பேன் அதை விட்டு விட்டு இறைவன் ஸ்தலத்திற்கு சென்று சென்று கொண்டிருந்தால் என்ன லாபம்?
சென்று கொண்டிருந்தால் அங்கு பல உபயங்களையும் நீங்கள் செய்ய வேண்டும் என்பேன் நல் முறைகளாக சில சேவைகள் நிச்சயம் செய்ய வேண்டும் என்பேன் அதை செய்யாமல் நேரடியாக இறைவனிடம் வந்து இது தா அது தா என்று கேட்டாள் இறைவன் கொடுப்பானா என்ன நிச்சயமாய் கொடுக்கமாட்டான் என்பேன் ஆனால் புண்ணியத்தை நீங்கள் செய்தால் இறைவன் எவ்வாறு என்பதும்கூட உன்னையே தேடி வந்துவிடுவான் என்பேன்.

உள்ளே இறை பலங்கள் அதிகரிக்க அதிகரிக்க தொந்தரவுகள் நீங்கும். நீங்கும் என்பேன்.

அப்பனே விதியைக் கூட மதியால் வென்று விடலாம் அவ் மதி என்னவென்றால் இறைவனின் அருள் என்பேன். இறைவனருள் இருந்தால் அப்பனே  நல் முறைகள் ஆகவே விதி என்ன ?
மதி என்ன?
கதி என்னடா??? 
அப்பனே ஆனாலும் வயதாகி விட்டதே தவிர என்னவென்று எதுவும் உங்களுக்கு தெரியவில்லை நீங்கள் என்ன கேள்விகள் கேட்கப் போகிறீர்கள் என்பதும் எந்தனக்குத் தெரியும்.
ஒவ்வொருவரும் எதை எதையோ நினைத்துக் கொண்டு 
அவை பிரச்சனை !
இவை பிரச்சனை ! 
இது வருமா ?
அது வருமா? பிள்ளைகள் படிப்பா? என்பதுதான் நீங்கள் கேட்டுக்கொண்டு இருப்பீர்கள் . இதனை யான் பல முறை பார்த்துவிட்டேன் அப்பனே.
எதையும் கேட்காமல் இருப்பது நல்லதே என்பேன்.
தூய மனதோடு இறைவன் சிந்தனையிலேயே இருங்கள் அப்பனே நல் படியாகும் மோட்சங்கள் பெறுவதற்கு வழிகளும் யான் கூறுவேன் என்பேன்.

ஆனாலும் புத்திகள், மதிகெட்ட புத்திகள் மதி அழிந்து பின்னாளில் நிலையற்றதை தேடிச்சென்று மனிதன் அழிவைத் தேடிக் கொண்டிருக்கும் பொழுது பின் இதிலிருந்தும் இரண்டு விதிகள் உண்டு .
இன்பம் துன்பம் துன்பத்திலே மனிதன் செல்கின்றான் எதற்காக ?மாயையா? அல்லது இறை அருளா?  துன்பம் எதிலிருந்து வருகிறது ?
என்பதால் பின் துன்பத்தில் இன்பம் எதை என்றும் இவை இரண்டும் கலந்து பார்த்தால் இன்பம் துன்பம் இருவழிகள் ஆனாலும் இவ்வாறு என்பதை நினைத்துப் பார்க்கும் அளவிற்கு மனிதன் துன்பப் பாதையில் செல்கின்றான் இன்பப் பாதையில் பின் பின் நிறைவாகவே இருக்கின்றது.
ஒருவன் கூட இன்ப பாதையில் செல்வது இல்லை ஏனென்றால் துன்பப் பாதையிலேயே செல்கின்றான்.
 எதற்கு?
துன்பங்கள் பாதையில் செல்கின்ற பொழுது அவனே அவன் தன் துன்பத்தை அவனே தேடிக் கொள்கிறான். ஆனால் இன்பமான பாதை யாரும் அதில் இல்லையப்பா.
துன்பப் பாதை என்றால் சொல்கின்றேன் கேள் அவை வேண்டும்! இவை வேண்டும் !
அது வேண்டும் !
இது வேண்டும் !
பின் பொருள்கள் வேண்டும்! 
பின் பின் பல சொத்துக்கள் சேர்க்க வேண்டும்! பின் இல்லங்கள் அமைய வேண்டும்! என்பதையெல்லாம் எதிர்நோக்கும் பொழுது துன்ப வழியில் செல்லும் பொழுது துன்பத்திற்கு காரணம் யாரென்று கூட பின் தெரிகின்றதா? மக்களே!
ஆனாலும் 
இன்பப் பாதை யில் ஒருவன் கூட இனியும் எவ்வாறு என்பது கூட வந்துவிட்டால் நல்லது என்பேன் இன்பத்தின் மீது நல் முறைகளாக இந்தப் பாதையில் செல்லும்போது 
கூட 
இறைவா! 
இறைவா! 
இறைவா !
என்று சொல்லிக் கொண்டே செல்லுங்கள் பின் இது கடைசி வரை இன்பமாகவே மாறும் ஆனால் அவ்வழியில் யாரும் இல்லை என்பேன்

ஏன்?  எதற்காக? ஈசனுக்கு வில்வத்தை படைக்கிறார்கள் என்பதைக் கூட யாருக்கும் தெரிவதில்லை என்பேன்.
அப்பனே அதைத் தின்று பாருங்கள் தெரியும் ஈசனே பேசுவான் உங்களிடம்.

அப்பனே இவைதன் உணர்ந்து நன்கு தெளிவு பெற்றால் இவைதனை நன்கு சாப்பிட்டால் நல் முறைகளாக உடம்பில் ஒரு குறைகளும் வராது என்பேன்.
வராது என்பேன் அப்பொழுது தான் இறைவன் நிச்சயமாய் கண்களுக்குத் தெரிவான்  என்பேன்.

அப்பனே இவை என்றும் கற்பூரத்தை ஏற்றுகிறார்களே இதனைப் பற்றியும் ஒரு உரிமை சொல்கின்றேன்.

அப்பனே பச்சை கற்பூரத்தை மாதம் ஒருமுறை எவன் உண்ணுகிறானா அவனிடம் இறைவன் நின்று பேசுவான்.

அப்பனே இப்பொழுதும் கூட சொல்லி வைக்கின்றேன் சுத்த சன்மார்க்கத்தை சரி முறையாக கையாள்வது எவன் என்றால் அப்பனே அவனிடத்தில் இறைவனே தேடி வந்துவிடுவான் என்பேன்.
அதைச் செய்யுங்கள் முதலில்.
பின் வாக்குகளாக அனைத்தும் கேளுங்கள் யான் சொல்கின்றேன்.
அப்பனே வள்ளலார் முறைப்படி பின்பற்றினால் ஒரு கடுகளவும் குறை வராது என்பேன். இது நிச்சயம்.

கர்மாக்கள் இறைவனால் நீக்கமுடியும் என்பேன்.
புண்ணியத்தை நீக்கமுடியாது என்பேன்.
அதனால் புண்ணியம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
புண்ணியம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
புண்ணியத்தை சேர்த்துக் கொண்டால்
இறைவனாலயே ஒன்றும் செய்ய இயலாது என்பேன்.



-சமீபத்தில் குருநாதர் அகத்தியர் மௌனகுரு ரெட்டி சித்தர் சுவாமிகள் ஜீவ சமாதியில் உரைத்த பொது வாக்கு


இவ்வுலகில் எதுவும் பெரிதில்லையப்பா.

இறையருளே மிகப் பெரியது.

இறையருளை பெற்று விட்டால் அனைத்தும் இறைவன் தருவான் என்பேன் அதனால் எதையும் கேட்கத் பட தேவையில்லை என்பேன் அன்பை மட்டும் செலுத்துங்கள் அன்பை மட்டும் செலுத்துங்கள் இதுவே போதுமானது

எதையும் எவை என்றும் எதனையென்றும் மனிதனால் பெறமுடியாது என்பேன் இறைவன் நினைத்தால் தான் அனைவருக்கும் அனைத்தும் நடக்கும் என்பேன்.

அதனால் தான் சொல்கின்றேன் எதுவும் பின் நல் முறைகள் ஆகவே அன்போடு அகத்தியா!!! நல்முறையாக முருகா!!! பின் ஈசா!!! என்றெல்லாம் வணங்கி வந்தாலே அவந்தனை பெயர் வைத்து அழைத்தாலே பின் ஓடோடி வந்து விடுவான்.

ஆனால் அதற்கு தகுந்தார்போல் மனிதர்கள் ஒழுக்க சீலராக வாழ வேண்டும் என்பேன்.

ஒழுக்கம் நல் முறைகள் ஆகவே பிறந்த விட்டால் அவந்தனை தேடி பின் அனைத்தும் வந்துவிடும்.

ஒழுக்கம் இல்லை என்றால் அப்பனே எது வந்தாலும் நிற்காது என்பேன்.

அப்பனே இதனால்தான் எவ்வாறு என்பதும்கூட வள்ளுவன் கூட ஒழுக்கத்தைப் பற்றி சிறப்பாக கூறி இருக்கின்றான் அப்பனே.

இக்காலத்திலும் ஒழுக்க சீலராக அப்பனே இருப்பவர்கள் கூட அழிந்து போவார்கள் எதனை என்று கூறும் அளவிற்கு கூட.

ஆனாலும் ஒழுக்கம் நல் முறைகளாக இருந்து விட்டால் அவனிடம் நற்பண்புகள் பெருகும் பெருகும் அவனிடத்தில் ஆசைகள் இருக்காது என்பேன்.

இதனால் அப்பனே அன்புடன் இறைவனை வணங்குவான். அனைத்தும் இறைவன் கொடுப்பான் என்பேன்.

அப்பனே தன் பிள்ளைகள் தன் இல்லங்கள் தன் சொந்த பந்தங்கள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்பதை எல்லாம் பின் கேட்கக் கூடாது என்பேன்.

அவ்வாறு கேட்டாலும் இறைவன் செய்யமாட்டான் அப்பனே.

இறைவனே நீ என்று நீ என்று கூட இறைவனே அனைத்தும் உந்தனுக்கே தெரியும் என்று பின் நல் முறைகளாக கேட்டுவிட்டால் அனைத்தும் தருவான்.

ஆனாலும் அறியாத முட்டாள்கள் எதை எதையோ கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.

எந்தன் அருள் இல்லாமல் எதையும் செய்ய முடியாது என்பேன்.

நிலையானது எவை என்றால் இறைவனே!!! அதனால்தான்

இறைவனைப் பற்றிப் பற்றி பற்றிக் கொண்டே இருந்தால் நீ இறைவனைப்பற்றி பற்றற்று இருந்தால் அனைவரும் நன்றாகவே வாழ்ந்து விடுவார்கள்.

நிலையானது நிலையற்றது இவ்வுலகில் எவ்வாறு என்பதையும் கூட அனைத்தும் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான உள்ளதென்பது நிலையானது இறைவன் அருளே!!!

மற்றவையெல்லாம் நிலையற்றது.

ஆனால் முட்டாள் மனிதன் நிலையற்றதையே தேடிக் கொண்டிருக்கிறான்.

அப்பனே நல் முறைகள் ஆகவே அனைத்தும் எந்தனது இல்லை இறைவா உன்னிடத்திலேயே ஒப்படைத்து விடுகின்றேன் என்ற ஒரு நிலையில் யோசித்தால் பின் இறைவன் பார்த்துக்கொள்வான்.

ஆனாலும் ஒருவன் கூட அதை போல் நினைப்பதும் இல்லை .

இதுவரை ""யான்"" பார்த்ததும்!!! இல்லை....

நல் முறைகள் ஆகவே """பிறருக்காகவே வாழ வேண்டும்!!!என்ற கொள்கையை பிடித்தால் உந்தனுக்காக!!! இறைவன் வாழ்வான்.

அதை விட்டுவிட்டு தான் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணினால் ??

நிச்சயம் இது முடியாது என்பேன்.


-வாக்குரைத்த ஸ்தலம்அகத்தியர் சன்னதி மாரியம்மன் கோயில் . பசுமலைமதுரை

ஈசனை நாடிவிட்டால் பின்  எடுத்துச் செல்வான் எங்கேயோ.!! அதுதான் உண்மையான வாழ்க்கை மற்றவையெல்லாம் போலியே என்பதை உணர்ந்து கொள்க.

மனிதன் இங்கு வந்து சென்றாலும் இறைவனிடத்தில் பின் கஷ்டங்களே நிரம்பி உள்ளது ஆனாலும் பின் ஏன்?? இறைவனை வணங்க வேண்டும்??!! என்று மனதை மாற்றிக் கொள்கிறார்கள்.

ஆனாலும் அப்பனே இவையன்று பின் உணர பின்பு இறைவனே கதி என்று நினைத்துவிட்டால் அப்பனே ஞானியர்களும் சித்தர்களும் இதற்கு மாற்றாக பின்பு எங்கு அழைத்துச் செல்ல வேண்டுமோ? அங்கு அழைத்துச் சென்று பின் கர்மாவையும் அழித்து விட்டு பின் மோட்ச கதியை அடைவார்கள் என்பதே திண்ணம் அப்பனே.

குறைகள் கொள்ளாதீர்கள்.

-அருள்மிகு உமாமகேஸ்வரி உடனுறை கைலாயநாதர் ஆலயம்பள்ளித்தெரு கிராமம்ஆம்பூர் வட்டம்திருப்பத்தூர் மாவட்டம். 


ஒழுங்காக பக்தியை கடைப்பிடித்தால் இவ்வுலகத்தில் அப்பனே உங்களால் அனைத்தும் மாற்ற இயலும் அப்பனே.

வரும் வரும் காலங்களில் அப்பனே இவையன்றி ன்று கூற நீங்கள் ஒழுங்காக வாழ்ந்துவிட்டால் யாங்களே  சித்தர்களே அப்பனே கையைப் பிடித்து இழுத்து செல்வோம்  அப்பனே. அதனை மேற்கொண்டால் .

அப்பனே எதையும் எதிர்பாராமல் இறைவா என்று இருங்கள்.

அனைத்தும் உந்தனக்கு வழங்குவான் என்பேன் அப்பனே.

அப்பனே தன் நிலைகள் உயரவேண்டும் தன் தன் இனத்திற்கு இனம் சேர வேண்டும் புகழ் சேர வேண்டும் ஆனாலும் அனைத்தும் அழியக் கூடியது தான் கேட்கின்றான் மனிதன்.

அப்பனே உண்மைப்பொருள் தான் உலகத்தில் நிரந்தரமானது இறை அருள் என்பேன்.

அவ் இறையின்  அருளைப் பெற மனிதனே நீ கடுமையாக உழைக்க வேண்டும்.

அப்பனே பணம் சம்பாதிப்பதற்கு நீ கடுமையாக உழைக்கின்றாய். 

ஏன்??  இறைவன் அருளைப் பெறுவதற்கு நீ கடினமாக உழைப்பது இல்லை????

அப்பனே இறைவனை வணங்கி வந்தால் இறைவனை வணங்கினால் நிச்சயம் கஷ்டம் இதுதான் அப்பனே இவ் கஷ்டத்திலும் இறைவா இறைவா என்று உணர்ந்து கொண்டே இருந்தால் நிச்சயம் இறைவன் இறை பலங்கள் அதிகரித்து இறைவன் மூலமாக அனைத்தும் செய்து வைப்பான் உந்தனுக்கு.

-17/01/2022 அன்று பௌர்ணமி திதியில் குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு.


அப்பனே நலமாக நலம் ஆக அப்பனே எவை என்று கூற அப்பனே நல் விதமாக அப்பனே ஈசனுக்கு சேவைகள் செய்து கொண்டிருக்கின்றீர்கள் அப்பனே விதமாக உங்கள் குடும்பத்தை ஈசனே பார்த்துக்கொள்வான் என்பேன்.

(மனங்கள்) மாறும்பொழுது அப்பனே மாயையில் சிக்கிக் கொள்வான் என்பேன்.

மாயையில் சிக்கிக் க்கொண்டு அழிந்து விடுவான். இதுதானப்பா கலியுகத்தில் நடக்கப்போகின்றது என்பேன்.

ஆனாலும் அப்பனே இவற்றையெல்லாம் உணர்ந்து """" ஈசனே சரணாகதி""""" என்று வந்துவிட்டால் அப்பனே ஈசன் அவ் மாயைத்திரையை கிழித்து விடுவான் என்பேன்.அப்பனே.

அப்பனே உண்மை பொருளை நம்பி விட்டீர்கள் நீங்கள். அப்பனே, இறையருள் பலமாக அப்பனே ஈசனே அனைத்தும் பார்த்துக்கொள்வான் என்பேன்.

""அவனுடைய சக்திகள்"" எவ்வாறு என்பதைக் கூட அப்பனே சொல்லமுடியாது என்பேன்.

அப்பனே அழிவுகள் வரும் என்பேன் அப்பனே அப்பொழுது கூட அவனின் சடைமுடியை ஈசன் அருளை பெற்றவர்கள் பிடித்துக்கொள்வார்கள் என்பேன் அப்பனே அதனால் துன்பம் இல்லை என்பேன் அப்பனே.

அப்பனே அழிவுகள் பலமாகவே வரும் என்பேன் அப்பனே வரும் வரும் காலங்களில் அப்பனே.

அதை மனிதன் மனிதனால் தீர்க்கமுடியாது என்பேன் அப்பனே.

""ஈசன் ஒருவனே "" என்பேன் அப்பனே.

அப்பனே """ஈசன் ஒருவனே இவ்வுலகத்திற்கு""".

அதனால்தான் மூலனும் (திருமூலர் சித்தர்) அப்பனே அறிந்து அறிந்து அப்பனே ஒருவனே தெய்வம் என்றுகூட அப்பனே இதற்காகவே பல பிறவிகள் பின் மூலன் தெய்வத்தை உணர்ந்து உணர்ந்து தெய்வம் இருக்கிறானா?? இல்லையா?? என்றுகூட அப்பனே சில நேரங்களில் தவத்தின் வழியே அப்பனே ஆண்டாண்டுகளாக செய்து செய்து இறைவனை பார்த்தால் !!!யார் ? என்று கடைசியில் பார்த்தால்!!!

!!!! உண்மைப் பொருள் ஈசனே!!! என்று அவந்தனுக்கு(திருமூலருக்கு) விளங்கிவிட்டது.

அப்பனே இதுதான் அப்பொழுதுதான் அவன் மனம் அப்பனே """ஈசன் ஒருவனே""" அப்பனே ஆனாலும் எதனையும் என்று கூற அனைத்தும் கொடுக்கமுடியும் !!!அப்பனே இவ்வுலகத்திற்கு என்பதை கூட யாரால்?? கொடுக்க முடியும்!! என்பதைக்கூட உணர்ந்துவிட்டான் அப்பனே.மூலன்.

அதனால்தான் அப்பனே உணர்ந்து உணர்ந்து பல ஆண்டுகள் தவம் செய்து அப்பனே பல வரிகளில் சொல்லிட்டு போனான் ""ஒருவனே தெய்வன் அவன் தான் ஈசன்""!!!

உண்மை பொருள் எதுவென்றால் ஈசனை நாடுவது!!!!

அவந்தனை நாடி விட்டால் அப்பனே சிறிது குழப்பங்கள் வரும் சில கஷ்டங்கள் வரும்.

ஆனாலும் அப்பனே கைவிடமாட்டான் அப்பனே.

பணம் தான் தெய்வம் என்று வணங்குவான் என்பேன்.

ஆனாலும் அவை தன் நிச்சயம் பின் காக்காது என்பேன்.

அப்பனே அவையன்றி கூற அப்பனே இறைவனே காப்பான் என்பது அப்பனே உண்மை.

ஆனாலும் அப்பனே மனிதனிடத்தில் பணங்கள் சேரும் ஆனாலும் பிரயோஜனம் இல்லை என்பேன் அப்பனே.

பணங்கள் சேரும்பொழுது அப்பனே பல வழிகளிலும் கர்மாக்களை சேர்த்து அப்பனே அவையன்றி கூற எதனையும் என்று கூற பணங்கள் எத்தனை எத்தனை விதமான பணங்கள் அப்பனே.

பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் வந்துவிட்டேன் புவியுலகில் அப்பனே.

தரித்திர மனிதர்கள் என்பேன் அப்பனே.

மனிதனுக்கு அப்பனே அறிவுகள் இல்லை என்பேன்.அப்பனே.

அப்பனே இவையன்றி கூற சிந்தனையில் அப்பனே இறைவனை வையுங்கள் அப்பனே நல் விதமாக மாற்றங்கள் ஏற்படும் என்பேன்.

மாயையில் இருந்து மீண்டு வருவதற்கு ஒரே காரணம் தான் உண்டு.

அதுதான் இறை பலம் என்பேன்.

அப்பனே இறை பலம் பெற்றுவிட்டால் அப்பனே நலன்களே மிஞ்சும் என்பேன் அப்பனே.

தர்ம சிந்தனையுடன் வாழ வேண்டும்.  அதுதானப்பா அப்பனே திருத்தலம்.

அப்பனே திருத்தலம் எங்கே? உள்ளது அப்பனே உன் மனதிலே உள்ளது அப்பனே.

உன் மனம் நன்றாக இருந்தால் அங்கே யான் குடி கொள்வேன் அப்பனே.

மற்ற இடங்களில் எல்லாம் யான் குடிகொள்ள போக மாட்டேன் என்பேன்.

அப்படி அவ் தலங்களை அமைத்தாலும் அப்பனே அங்கெல்லாம் உண்மைப் பொருள் இல்லை என்பேன்.

-அன்புடன் அகத்தியர் - அருள்மிகு உமாமகேஸ்வரி உடனுறை கைலாசநாதர் ஆலயம்!

தன்னலமற்ற பொது சேவையும்நற்குணங்களும்தான தருமங்களும்எவனொருவன் சரியாக செய்து வருகின்றானோ அவன் எம்மைத் தேடி வரத் தேவையில்லை யாங்களே அவனைத் தேடிச் செல்வோம்

——-அன்புடன் அகத்தியர் - குருநாதருடன் ஒரு அனுபவம்!

சேவைகளை செய்யவே அப்பனே நல் விதமாக செய்து கொண்டே இரு அப்பனே. மற்றவை அப்பனே உன் குடும்பத்தையும் யான் பார்த்துக்கொள்கின்றேன். எது தேவையோ அதை கொடுக்கின்றேன். உன் குழந்தைகளுக்கும் நல் வாழ்க்கையை அமைத்துத் தருகிறேன் உன் கடமையை சரிவர நீ செய்து வா அப்பனே.

அப்பனே இதனால்தான் சொல்கின்றேன் அப்பனே இவையன்றி கூற ஏதும் இயலாதவர்களுக்கு எல்லாம் மனிதர்கள் அப்பனே தம் தம் இயன்ற அளவு அப்பனே உதவிகள் செய்து வந்தால் யாங்களே அப்பனே மனித ரூபத்தில் வந்து அப்பனே அவர்களை அணைத்துக் கொள்வோம் பாசத்தையும் காட்டுவோம் அப்பனே இது கலியுகத்தில் நிச்சயமாய் இனிமேலும் நடைபெறும் என்பேன்.

தில்லை என்கின்றார்களே!!! அப்பனே இவையன்றி கூற அனைத்தும் அவனிடத்தில் எந்தனுக்கு ஏதும் தேவையில்லை என்று கூட அவந்தனிடத்தில் சென்று விட்டால் ...

அவந்தன் உந்தனக்கு எவை என்று கூறும் அளவிற்கு கூட அவந்தன் இல்லை என்றே சொல்லி விட மாட்டான் என்பேன்.

இதுதானப்பா தில்லை.!!!

இல்லை என்ற வார்த்தைக்கு அர்த்தம் உண்டு என்பேன்.

மீண்டும் சொல்கின்றேன் அப்பனே.

அப்பனே எவை என்று கூற *இன்பம் துன்பம் என்பது அப்பனே மனித வாழ்க்கையில் வருவது சகஜமே என்பேன் அப்பனே.

அவையெல்லாம் கடந்து சென்றால் தான் இறைவனை தரிசிக்க முடியும் என்பேன்.

-அன்புடன் அகத்தியர் - குருநாதருடன் ஒரு அனுபவம்!

சில எண்ணத்தை விட்டுவிட்டு இறைவன்பால் செலுத்துங்கள் போதுமானது.

இறைவனே அனைத்தும் கற்றுக் கொடுப்பான்.



-1/02/2022 அன்று தை அமாவாசை திதியில் காகபுஜண்டர் ரிஷி உரைத்த பொதுவாக்குவாக்குரைத்த ஸ்தலம்திருவண்ணாமலை 

மனிதர்கள் நினைத்தால் ஈசனை நிச்சயமாய் எவ்வாறு என்பதையும் கூட அமைக்க முடியாது திருத்தலத்தை.

ஈசனே நினைக்க வேண்டும் என்பேன்.

அப்பனே இவ்வுலகத்திற்கு படியளந்தவன் ஈசன் என்பேன்.

அப்பனே நல்விதமாக அப்பனே இக்கலியுகத்திலும் மக்களை ஈசனே காப்பான் என்பேன்.

அப்பனே இவையன்றி கூற ஆனால் அப்பனே ஒருமுறை நீங்கள் அண்ணாமலை சென்று அப்பனே நல் விதமாக அப்பனே தர்மத்தை ஏந்த வேண்டும் என்பேன்.

ஈசனே அப்பனே மனித ரூபத்தில் வந்து தானம் இடுவான் என்பேன் அப்பனே.

அப்பனே இதனால் அப்பனே மேலோங்கும் என்பேன். அப்பனே குறைகள் இல்லை அப்பனே. உங்கள் அனைவருக்கும் மோட்ச பிறவி என்பேன் அப்பனே ஈசனே கொடுத்துவிடுவான் அப்பனே.

பல வழிகளிலும் பலப்பல பலப்பல திருத்தலங்கள் யான் தான் எழுப்ப வேண்டும் என்பது கூட மனிதனின் செயல்கள் ஆனால் மனிதனால் ஒன்றும் முடியாது அப்பனே.

ஈசனால் மட்டுமே முடியும் ஈசன் நினைத்தால்தான் உண்டு என்பேன்.

அதனால்தான் அப்பனே இவனருளாலே எதனையும் என்று கூற அனைத்தும் நடக்கும் என்பது விதியப்பா.

ஆனாலும் மனிதன் நினைத்துக் கொண்டிருக்கிறான் அப்பனே ஆனாலும் அதை உருவாக்குவோம் இதை உருவாக்குவோம் என்று கூட.

ஆனாலும் ஈசன் அருள் இல்லாமல் எதனையும் உருவாக்க முடியாது என்பதுதான் திண்ணம் அப்பனே. அதற்கும் காலங்கள் வந்தால்தான் உண்டு என்பேன் அப்பனே.

-அன்புடன் அகத்தியர் - சிவகாமேஸ்வரர் ஆலயம்காவனுர்!


அப்பனே துன்பம் இல்லாமல் எவரும் இவ் உலகில்  வர இயலாது எதனையும் என்று கூட அப்பனே இதனையுமென்று நன்கு அறிந்து விட்டால் அப்பனே உண்மைநிலை தெரிந்துவிடும் அப்பனே.

துன்பம் வந்தால் தான் அப்பனே பக்குவங்கள் பிறக்கும். பக்குவங்கள் பிறந்தால்தான் அனுபவங்கள் பிறக்கும் அனுபவங்கள் பிறந்தால் தான் இறைவனை காண இயலும். 

உலகில் பிறந்த அனைவருக்கும் தானாகவே வந்துவிடும் மன சஞ்சலங்கள். அதனால்தான் அப்பனே மனதை அடக்க வேண்டும் என்பேன்.

இதனால்தான் அப்பனே  பரிகாரங்கள்!! அப்பனே பல பூஜைகள்!! அப்பனே பல மந்திரங்கள்!! எவற்றிற்காக தெரியுமா???

அப்பனே மனதை அடக்குவதற்காகத்தான். ஆனாலும் அப்பனே மனதை அடக்கினால் அப்பனே ஒன்றும் தேவை இல்லையப்பா.

இறைவன் குடி கொள்வான் மனதில் கூட அப்பனே எவை என்று கூற அதனால் தான் அப்பனே சொல்கின்றேன் அப்பனே மனமது செம்மையானால் மந்திரங்கள் தேவையில்லை என்று யான் முன்பே உரைத்திருக்கிறேன். இவையன்றி கூற அப்பனே மனிதன் மனதை அடக்க வேண்டும் என்பேன் அப்பனே.

அகத்தியன் இருக்கும் பொழுது என் தந்தை இருக்கின்றான் என்று தான் சொல்ல வேண்டுமே தவிர துன்பம் அவை இவை எல்லாம் அப்பனே தானாகவே வருபவை என்பேன்.

நல்வழியில் போகும்பொழுது சில பிரச்சனைகள் நிச்சயமாய்  வரும் என்பேன். அவையெல்லாம் எதிர்த்து நின்றால் இறைவன் தரிசனம் நிச்சயம் கிடைக்கும் என்பேன்.

அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே நல்வழியில் போகும் பொழுது இறைவன் அப்பனே சில சோதனைகளை செய்வான் அவன் தாங்கிக் கொள்கின்றானா?? என்று கூட.
அவ் சோதனைகளிலிருந்து மைண்டு வந்துவிட்டால் இறைவன் தரிசனம் அப்பனே உங்களை நோக்கி வரும் என்பேன் அப்பனே.

பத்து பத்து என்று அடுக்கடுக்காக பிரம்மன் எழுதி வைத்திருக்கின்றான்.

பத்து வருடங்கள் உண்மையாக வாழ்ந்தால் அப்பனே அடுத்த பத்து வருடங்கள் நல் விதமாக எவை என்று கூற இன்னமும் சூட்சமங்கள் உள்ளது அப்பனே.

அவை என்று கூற இன்னமும் சொல்கிறேன் கேளுங்கள் எவை எவை என்று கூற அடுத்த அடுத்த வாக்குகளும் அப்பனே.

இவையன்றி கூற! அதனால்தான் அப்பனே தெரிந்து கொள்ளுங்கள்

இதில் கூட ஒரு வருடம்அப்பனே கூட்டி இன்னொரு வருடமும் கூட்டினால் அப்பனே பன்னிரெண்டு(10+1+1=12) இவற்றிற்கும் சான்றுகள் எவ்வாறு என்பதைக்கூட உண்டு என்பேன் இவற்றை பற்றியும் தெளிவாக அனைத்தும் அப்பனே.

எவ்வாறு என்பதையும் கூட வட்டம் எதனால் வட்டம் ஏற்பட்டுகின்றது அப்பனே வட்டத்தோடு வாழ வேண்டும் அப்பொழுதுதான் அப்பனே இறைவன் காட்சி அளிப்பான். வட்டத்திலிருந்து வெளியே வந்துவிட்டால் அப்பனே மனிதனின் செயல்கள் அப்பனே எல்லை மீறிக் கொண்டு அப்பனே அழித்து விடுவான்.

அதனால்தான் முதலிலேயே வட்டம் அப்பனே வட்டத்தை நோக்கித்தான் அப்பனே சிறிது நேரம் சிந்தியுங்கள் ஓய்வாக இருக்கும்போது வட்டத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் அப்பனே அவ்வட்டத்தில் எவ்வாறு வாழலாம் என்பதை கூட உங்களுக்கு அறிவுகள் கொடுக்கின்றேன். அப்பனே.

ஆனாலும் அவ் வட்டத்திற்குள் மனிதன் வெளியே வந்துவிட்டால் அப்பனே ஒன்றும் செய்ய இயலாது.

அதனால்தான் முதலிலே பின் பூஜ்ஜியத்திற்கே மதிப்பு என்பேன் அப்பனே.

அதில் எவ்வாறு மனிதன் வாழலாம்?? என்று கூட தெரிந்துவிட்டால் அப்பனே மற்றவையெல்லாம் ஒன்றிலிருந்து பல கோடிகள் வரை வாழ்ந்து விடலாம் என்பேன்.

இதுதானப்பா வாழ்க்கை.

அப்பனே இறைவனை வணங்குவதால் என்ன பயன்?? எவ்வாறு என்பதையும் எதனையும் என்று கூற மனதாலும் எதையும் நினைத்து  கூடாது வணங்கினால் அப்பனே முதன்மை ஏற்படும் என்பேன்.

நல் விதமாக அப்பனே எவை என்று கூற எதை என்று பேராற்றல் இவை இவ்வுலகத்தில் உண்டு என்பேன் அப்பனே .

அப்பனே வட்டத்தை இடவேண்டும் அவ் வட்டத்திற்குள் எவ்வாறெல்லாம் வாழலாம் என்று அப்பனே தெரிந்து கொண்டு நல் முறையாகவே எவ்வாறு என்பதையும் கூட கடைப்பிடித்தால் அப்பனே அப்பனே இவையன்றி கூற உலகத்திலுள்ள அனைத்தும் கிடைக்கும் என்பேன்.

எவ்வாறு என்பதையும் கூட இதனையும் திரும்பவும் சொல்கின்றேன் அவ் வட்டத்திற்குள் வெளியே வந்தால் அப்பனே முடிந்துவிட்டது அவரவருடைய செயல் அவரவரையே பாதிக்கும் கடைசியில் மாய்ந்து விடுவான் அப்பனே.

இவையன்றி கூற அவ் வட்டத்திற்குள் எப்படி எல்லாம் வாழ வேண்டும் என்பதைக்கூட யான் எடுத்துரைக்கிறேன் வரும் வரும் காலங்களில் அப்பனே குறைகள் இல்லை.

துன்பம் வருவதை யாராலும் தடுக்க முடியாது என்பேன். பிரம்மா எழுதி வைத்திருப்பதை அப்பனே ஆனாலும் நல் முறையாக சில தான தர்மங்கள் நல் விதமாக புண்ணிய காரியங்கள் செய்து வந்தால் அப்பனே அப்பனே நல்விதமாக பக்திகளும் யாருக்கும் துன்பம் அளிக்காமல் அப்பனே எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் இறைவா!! இறைவா அனைத்தும் நீயே!!! நீயே!!!

உன்னையே நம்பி கொண்டிருக்கின்றேன்!! என்றிருந்தால் நிச்சயம் யாங்கள் எடுத்துரைப்போம் பிரம்மாவிடம் கூறி அப்பனே,மாற்றத்தை.

அப்பனே உண்டு இவ்வுலகில் நிச்சயம் மாற்றம் நல்லோர்களுக்கு.


-7/02/2022 அன்று குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு.

அப்பனே தீமைகள் வைத்தால்தான் துன்பங்கள் வைத்தால்தான் அப்பனே இறைவனை நெருங்க முடியும் என்பேன்.

மூலாதாரம் என்பது இறை பலமே என்பேன்.
இவ் இறை பலத்தைப் பெற்று விட்டால் அப்பனே அனைத்தும் நடக்கும் அனைத்தும் நிறைவேறும் என்பேன்.
அதனால் முதலில் பணத்திற்கே மரியாதை அப்பனே இப்புவியுலகில்.
பணத்தைத் தேடித் தேடி சென்றாலும் அப்பனே கிட்டாது என்பேன்.
இறை பலத்தை தேடித்தேடி சென்றால் அப்பனே அனைத்தும் கிட்டிவிடும்.
அப்பனே நல் உள்ளங்கள் கிட்டி நல் முதன்மையான பின் வழிகளில் அப்பனே இவை என்று கூற இன்னும் மேன்மைகளைப் பெற்று அப்பனே வாழ வழி வகுப்பான் ஈசன் என்பேன்.
அதனால் அப்பனே இனிமேலும் அப்பனே பின் எவனிடம் அப்பனே எதனை கொடுக்க வேண்டும் என்பது கூட ஈசன் முடிவெடுத்து விட்டான்.
இவந்தனிடத்தில் பணம் கொடுத்தால் இவந்தன் மற்றவர்களுக்கு உதவி செய்து பல புண்ணியங்களை இவந்தனும் பெற்று மற்றவர்களை  வாழவைப்பான் என்பதற்கிணங்க யாரிடம் பொருள்கள் கொடுக்க வேண்டுமோ!!! அவனிடத்தில் மட்டுமே இனிமேலும் பொருள்கள் கொடுப்பான். மற்றவர்களிடமிருந்து எடுப்பான் என்பது மெய்யப்பா.
இவையன்றி வரும் வரும் காலங்களிலும் பார்க்கலாம் என்பேன். 

அப்பனே முதலில் இறை பலத்தை தேடுங்கள் தேடுங்கள் என்றெல்லாம் சொல்கிறோம்.
இறை பலத்தைத் தேடி விட்டால் உங்களுக்கே அறிவுகள் ஏற்படும்.

மனிதப்பிறவி அப்பனே மனிதப்பிறவி பின் பெரும் பிறவியப்பா!!
இதை சரியாக பயன்படுத்திக் கொண்டால் அப்பனே இவ்வுலகத்தை ஆட்டிப் படைக்கலாம் மனிதனால்.
ஆனால் முட்டாள் மனிதனோ!!! (இறைவனை வணங்காமல்) அப்பனே எவை எவையோ!!! என்று எண்ணி அப்பனே தன்னை தானே கெடுத்துக் கொண்டு தன்னிடம் இருக்கும் அனைவரையும் கெடுத்துக் கொண்டு இருக்கின்றான் அப்பனே.
இவைதான் உலகமப்பா.

அப்பனே இவையன்றி கூற வரும் வரும் ராகு காலத்தில் அப்பனே நல்விதமாக அப்பனே எவ்வாறு என்பதை கூட ஞாயிறு தோறும் வரும் ராகு காலத்தில் பைரவனை(கால பைரவர்) வணங்கினால் இன்னும் பெரியதப்பா!!!!!  நிச்சயம் மாற்றங்கள் ஏற்படும் என்பேன்.

இதனை நிச்சயம் செய்ய வேண்டும் என்பேன். அவைமட்டும் இல்லாமல் இன்னொரு விஷயத்தையும் சொல்கின்றேன் அப்பனே வரும் வரும் ராகு காலத்தில் அப்பனே நல் விதமாகவே அனுமானுக்கு அப்பனே வெற்றிலை மாலை சாற்றி தன் எண்ணத்தில் உள்ள குறைகள் பின் அவனுக்கு அவனிடத்தில் சொன்னால் அப்பனே அதி அற்புதம் நடக்கும் என்பேன் அப்பனே.

ஆனாலும் இவையெல்லாம் கூட இதுவும் ராகு காலத்தில் செய்துவிட வேண்டும் என்பேன் ஞாயிறு தோறும் . ஆனால் பல மக்களுக்கு இது தெரியாமல் போய்விட்டது அப்பனே.

சொல்லிவிட்டேன் சூட்சுமத்தை அப்பனே.

-15/02/2022 அன்று குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு!
வாக்குரைத்த ஸ்தலம் ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் பீடம்கிருஷ்ணகிரி.


காசி லோபமுத்ரையின் கோட்டை. அவளும் இங்கே சுற்றி திரிவாள் என்பேன். இங்கேயே பல பூஜைகளும் பிரார்த்தனைகளும் செய்வாள் என்பேன்.

அப்பனே இவ்வுலகத்தில் அனைத்தும் பொய்யப்பா இறைவன் தான் மெய்யருள்.

ஈசனும் உரைத்து விட்டான் இதனைப்பற்றி. என் வழியில் வந்தவர்களை நான் நிச்சயமாய் பல திருத்தலங்களுக்கு பல சூட்சுமங்களை எடுத்துரைப்பேன் என்பேன்.

என்பேன் என்பதற்கிணங்க இல்லையப்பா அதனால் என்னை நாடி வருபவர்களும் நான் நிச்சயமாய் புண்ணியத்தை சேர்க்க வைப்பேன் இனிமேலும்.

இறையருளை முதலில் பெறுங்கள் அப் பின் புண்ணியங்களை எப்படி தேர்ந்தெடுப்பது என்பதை சொல்கின்றேன்.புண்ணியங்கள் செய்திருந்தாலும் இறையருளை பெற வில்லையென்றால் அப்பனே வீணப்பா.  அனைத்தும் வீணப்பா.அதனால் முதலில் இறையருளை பெறவேண்டும் என்பதை ஒவ்வொரு வாக்காக கூறுகின்றேன்.பின்பு புண்ணியங்கள் எப்படி செய்யலாம் என்பதையும் தெரிவிக்கின்றேன் அப்பனே.

அப்பனே நல் விதமாக தீபம் ஏற்றி அவ் தீபத்தின்  ஜோதியை பார்த்து நல் விதமாக மனதிலே நிறுத்தினாலே போதுமானது இறைவன் சுலபமாகவே கண்ணுக்கு தென்படுவான் என்பேன் அதனால் பின் அவ் ஒளியை பாருங்கள் போதுமானது என்பேன்.

-1/3/2022 அன்று குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்குவாக்குரைத்த ஸ்தலம்  .காக்கும் சிவன் காசி.கங்கைகரை


அப்பனே அவை மட்டும் இல்லாமல் பரிசுத்தமான ஒரு மூலிகையும் சொல்கின்றேன் அப்பனே தேவதாரு எனும் மூலிகை உண்டு என்பேன். அதனை நல்விதமாகவே பின் அதன் இலைகளை சூடேற்றி அனுதினமும் காய்ச்சி வந்தால் அப்பனே பின் காந்தகம் போல் இறைத்தன்மை ஈரக்கும் என்பேன். ஆனால் முட்டாள் மனிதன் யான் சொல்லிக்கொண்டே இருக்கின்றேன் இதைக்கூட பின்பற்றவில்லை அப்பனே.


-அகத்திய மஹரிஷி வாக்கு 14.3.2022 - வாக்கு உரைக்கப்பட்ட தலம்:- திருவண்ணாமலை

இவ்வுலகத்தில் பின் பணங்கள் தேவையில்லை வாழ்வதற்கு. புண்ணியங்கள் தான் அவசியமாகின்றது.

புண்ணியத்தை ஒருவன் எப்பொழுது பெற்றுக் கொள்கின்றானோ?? அவந்தனைத்தேடி அனைத்தும் வரும்.

பின் பணங்கள் பணங்கள் என்று பின்னால் அலைந்தாலும் பின் புண்ணியங்கள் இல்லை என்றாலும் பணங்கள் அவை பின் அவந்தனை பாதுகாக்காது என்பேன்.

பக்தி என்பதை உன் மனதில் செலுத்து.

அன்பை செலுத்து.

மற்றவை இயலாதவர்களுக்கு பின் போய் உணவிடு.(அன்னதானம்). போதுமானது.

இறைவனை நாடு .!!!ஒழுக்கத்தை கடைபிடி.!!! நற்பண்புகளை மனதில் இட்டு நல் எண்ணங்களை வளர்த்து வளர்த்து வர இறையருள் குவியும்.

ஆனாலும் ஒன்றை கேட்கின்றேன் அனைத்து மனிதர்களையும். ஏன்?? இளமையில் பின் இறைவனிடம் நாட்டம் போகவில்லை?? எவன் ஒருவருக்கு இளமையிலேயே அதாவது 15 ,16, வயதுகளிலே பின் இறைவனை பிடித்துக் கொள்கின்றானோ அவந்தன் நிச்சயமாய் உயர் படுவான்.

ஆனால் 16, எவை என்று கூற 20, 25, வயதுகளில்  இவை தன்னில் மனிதனுக்கு பக்திகள் சிறப்பாக இல்லை.

இல்லை என்பதாலும் இதை என்று கூற ஒரு குறிப்பிட்ட கால அளவில் கூட அனைத்தையும் இழந்து விட்டு பின் எதிரே நிற்பான் எதிரே நிற்பான் இறைவனிடத்தில்.

இறைவனிடத்தில் எதற்காக வணங்குகின்றோம் என்பதை கூட தெரியாமல் வணங்குகின்றான்.

வணங்குகின்றான் மேன்மையாவதற்கு. ஆனால் இறைவன் செய்வானா?? என்ன??

ஓர் உபயத்திற்காகவே இறைவனை பயன்படுத்துகின்றான்.

ஆனால் இறைவன் நிச்சயமாய் உதவிட மாட்டான்.

நற்பண்புகள் நீண்ட ஒழுக்கங்கள் உயர்ந்த மேன்மைகள் மேன்மை எண்ணங்கள் இவையெல்லாம் பொய் சொல்லாமை.!!! பிறர் மனதை காயப்படுத்தாமை.!!! பிற உயிர்களைக் கொல்லாமை.!!!

சுத்த சன்மார்க்கத்தில் வள்ளலான்( வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்) இவைதான் பின்பற்றினால் மட்டுமே மனிதன் மனிதனாக வாழ முடியும்.

மனதில் நிறுத்து இறைவன் நாமத்தை மனதில் நிறுத்து இறைவன் நாமத்தை என்று சொல்வேன்.

புண்ணியங்களை பெற்றுத்தர இறைவனே வழி வகுப்பான் என்பேன்.

சரியான நேரத்தில் ஒழுங்காக வழிபட்டு வாருங்கள் இறைவனை மனதில் தொழுங்கள்.

மனதில் தொழுதிட்டு வந்தாலே இன்னும் இறை சக்திகள் பலமாக பலமாக வரும்.

ஒன்றைச் சொல்கின்றேன் பக்தியை நீ செலுத்தினால் உன்னிடத்திலே இறைவன் தங்கி அனைத்தையும் செய்து கொண்டே இருப்பான்.

இதனால் எவ்வித குறைகளும் வராது. வராது என்பேன் என்பதை நிச்சயம் சொல்வேன்.

இன்பம் துன்பம் நிச்சயமாய் எதிர்பாராமல் வரும் ஆனாலும் இதை தடுப்பதற்கு இறைவனிடத்திலே.

புண்ணியங்கள் இருந்தால்தான் துன்பம் இன்பம் இவை எவை என்று பாவத்திற்கு தண்டனை இன்பம். துன்பம் புண்ணியத்திற்கு தண்டனை.

ஆனால் இதை மனிதன் இதுவரை உணர்ந்ததில்லை துன்பம் வந்தால் இறைவன் இல்லை இறைவன் இல்லை என்று சொல்கின்றான்.

ஆனால் துன்ப நேரத்தில் தான் இறைவன் பக்கத்திலே இருக்கின்றான் என்று பல நூல்களில் உரைத்து விட்டோம் இப்பொழுது புரிகின்றதா?? எதை என்று கூறும் அளவிற்கு கூட.

அதனால் துன்பம் வந்தால் மனம் பக்குவப்படும்.

பக்குவப்பட்டால் இறைவனை நேரடியாக காணலாம் .

-18/3/2022 பங்குனி உத்திரம் / பௌர்ணமி அன்று பிரம்ம முகூர்த்தத்தில்  காகபுஜண்டர் ரிஷி உரைத்த பொது வாக்கு 


இவ் மலையில் யானும் உணவருந்தி யானே. இவ் மலையையும் ஒர் முறை தங்கம் ஆக்கியும் கொடுத்தார் ஈசன் எந்தனுக்கு. எடுத்துச் செல் என்று.ஆனாலும் யான் இவையெல்லாம் எந்தனுக்கு ஏது?  என்று ஈசனையே கேட்டவன்.அறிவதற்கு ஒன்றுமில்லை ஒன்றுமில்லை என்பதற்கிணங்க ஒன்றும் இல்லை என்பதற்கு இணங்க சென்னிமலை இதற்கும் இவையன்றி கூற பின்பு இங்குதான் தங்கம் வேண்டாம் என்று சொன்னாய் பின் இதை எடுத்துக் கொள் என்று கூட பார்வதி தேவி.ஆனாலும் நீ என் அம்மையாகவே இருக்க கூடாதா!?? அம்மையாகவே இருந்திட்டுச் செல்.இவ் அன்பு போதும் எந்தனக்கு.அது வேண்டாம் பின் அவ் மலையும் கல்லாகி விட்டது. இப்பொழுது தெரிகின்றதா?? தெரிகின்றதா?? உயர் பெரியது!! எது வென்று?!!!குறிக்கின்றது அன்பு.இவ் அன்பை இறைவன்பால் செலுத்தினாலே செலுத்தினாலே இறைவன் பன்மடங்கு செய்வான்.

உள்ளத்தில் வை இறைவனை போதுமானது.

மனதில் நிறுத்தடா இறைவனை"!! குடி கொள்வானடா இறைவன்.அப்பொழுது நீ ஏற்காமல் ஏற்றுவிட்டு தீபம் உன் உள்ளத்தில் எரிய வை. இறைவன் வந்துவிடுவான்

இறைவனிடத்தில் சென்றால் பின் ஏதாவது நடந்து விடுமா ??என்று கூட வருவான் பிச்சை உண்ண. ஆனால் ஒன்றும் நடக்கப்போவதில்லை.... மனிதா!!! உன்னிடத்திலே திறமைகள் சரியாக யூகித்துக்கொண்டு  யூகித்து கொண்டு இப்படிப் பின் மனதில் ஆசையின்றி அன்பு மூலமே இறைவனை பெறமுடியும்.

வாக்கியனை சோதிக்க வேண்டும் என்று முருகன் எண்ணி விட்டான்.ஆனாலும் அதை யான் அறிந்து விட்டேன்.ஆனாலும் முருகன் அதற்கும் மேலாகச் சென்று அறிந்து விட்டான். வாக்கியன் அனைத்தும் உணர்ந்தவன்.உணர்ந்தவன் இவந்தனை எப்படியோ பின் யான் முருகன் என்று தெரிய விடாமல் இவந்தனிடம் விளையாட்டை துவங்க வேண்டும் என்று எண்ணி.ஆனாலும் முருகன் வந்து விட்டான். ஆனாலும் அப்பொழுது முருகன் என்று கூட எந்தனுக்கு தெரியாமல் செய்துவிட்டான் முருகனே.ஆனாலும் ஒன்றைக் கேட்டான். எந்தனை. எவ்வாறு என்பதை கூட.இறைவன் எங்கு இருக்கின்றான்???? என்று சொல் என்று கேட்டுவிட்டான்!!!முருகன்.!!யானும் திகைத்தேன்.!!!திகைத்தேன் எப்படி வாக்குகள் உரைப்பது?? உரைப்பது என்பதைக்கூட.ஆனாலும் யான் சொல்லி இருக்கின்றேன் எதனை என்று கூட....
"""" என்னுள்ளே இருக்கின்றான்""" என்று கூட சொல்லிவிட்டேன்.ஆனால் நகையாடினான் முருகன்...உன்னுள்ளே இருக்கின்றானே!!!!! பின் வெளியே எடு என்று யான் பார்க்கவேண்டும் என்று கூட.......ஆனாலும் யான் திகைத்து விட்டேன், யான் திகைத்து விட்டேன் எப்படி? வெளியே எடுப்பது?? என்பதைக்கூட...ஆனாலும் முருகன் நகைத்தான் """எடு...!!! எடு..!!! என்று கூட.ஆனாலும் என்னால் முடியவில்லை. முடியவில்லை ஆனாலும் முருகன் என் பக்கத்திலே அமர்ந்து இருக்கின்றான்.
"" யான் முருகா......!!!!!!!!! என்று கூப்பிட்டேன்.ஆனாலும் அதற்கும் நகைத்தான்!! முருகன்.என்னை மதி மயக்கி ஆக்கிவிட்டான் முருகன்.ஆனாலும் இதனையுமின்றி இன்னும் பெரிய விஷயங்கள் என்னவென்றால்?? வருவது உண்மையே.!!ஆனாலும் பின்பு முருகனும் திரும்பவும் கேட்டான்.எங்கே இருக்கின்றான்??? இறைவன் எங்கிருக்கிறான்????வரச்சொல் என்று கூட.....ஆனாலும் மாயை கண்ணை மறைத்தது.!!!கண்ணை மறைத்தது ஆனால் தெரிந்து கொண்டேன் என்னுடைய பலத்தால் !!சக்தியால்.!!!முருகா...!!! நீ முருகன்..!! தான்.ஏன்?? என்னிடம் இப்படி விளையாடுகின்றாய் !!!என்று கூட.ஆனாலும் முருகன் சொன்னான்!!!! சொல்லியதை சொல்லியதாக வாக்குகளாக காப்பாற்ற வேண்டும் வாக்கியனே....
"" முதலில் வரச்சொல் இறைவனை..... உனது உள்ளத்தில் இருக்கின்றான் என்று சொன்னாயே!!!!முதலில் வரச்சொல் ...என்று கூட.ஆனால் ஒரு வார்த்தை யான் சொன்னேன்...
''''''''' முருகன் மயங்கிவிட்டான்......!!!!!முருகா!!!! உன் பால் யான் அன்பு கொண்டேன் அதனால்தான் நீ இங்கு வந்து விட்டாய்!!!!இப்பொழுது தெரிகின்றதா!!!!??என் "" மனதில் வந்தவன் நீயே""" என்று!!!!!இதனைத்தான் உணர்ந்து உணர்ந்து அன்பினால் மட்டுமே இறைவனை வெல்ல முடியும்.மற்றவைகளால் வெல்ல முடியாது.... வெல்ல முடியாது என்று கூட.

இதுதான் இதுதான் விதி என்னவென்று முதலில் பிறக்கும்போதே எழுதி வைத்திருக்கும் இதுதான் நடக்கும் இதைத் தவிர இதை தவிர ஒன்றும் நடக்காது.நடக்காது ஆனாலும் நடக்கும் நடக்கும் எப்படி என்றால் இறைவன் பின் இறைவன் மீது பக்தி அளவுகடந்த அன்பும் இருந்தால்தான் பின் விதியினை வெல்லலாம்.மற்றபடி மந்திரங்கள் தந்திரங்கள்  எச்செபத்தையும் செய்தாலும்... மானிடா ஆகாது.
எதற்காக எதற்காக ஓடோடி உழைக்கின்றாய் ஒன்றுமில்லை... விதியில் எழுதப்பட்டிருப்பதை யாராலும்...ஆனாலும்.  அன்பு அன்பால் மாற்றமுடியும் அன்புதான் இறைவன். இறைவன்பால் மனதில் வைத்துக்கொண்டு இரு.
அன்பு வைத்தால் இறைவன் உனக்காக எதையும் செய்ய காத்திருக்கின்றான்.

அன்பிற்குதான் உண்டோ!!!,உண்டோ!!! எக்காலம் .எக்காலம்... இறைவன்... அன்பு இறைவன், பாசம், கருணை, இவை எல்லாம் ஒரே வரிசையில் வரக்கூடியது. இவ் ஒரே வரிசையில் சென்று கொண்டிருந்தாலே இறைவன் ஒரே வரிசையில் நீண்டு உன்னிடத்திலே.. வருவான்.தெய்வம் ,தெய்வத்தை நோக்கி எதற்காக திரிந்து கொண்டு இருக்கின்றாய் மனிதா?? சிறிது காலம் யோசிக்கிறாயா!!!  தெய்வத்தை எதற்கு வணங்குகின்றாய் என்று தெரிகின்றதா???தெரிகின்றதா??? இல்லை!! புத்திகள்!! புத்திகள் அன்போடு வணங்கு மனிதா பின். மாயை மாயத்தில் சிக்கிக்கொண்டு அழிந்து கொண்டு பிறப்பெடுத்து பிறப்பெடுத்து.... தேவையா??? பிறப்பை யாராலும் பின் ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது எதனால்?? பிறப்பை தடுத்துக் கொள்ளலாம் என்றால். """அன்பு"""...!!

உன் வேலையை பார்த்தாலே சரியான முறையில் அன்பை செலுத்தினாலே இறைவன் ஓடோடி வருவான்.

-20/3/2022 அன்று சிவவாக்கியர் உரைத்த பொதுவாக்கு வாக்குரைத்த ஸ்தலம்சிவன் மலைகாங்கேயம்.

அப்பனே மனிதன் என்பவன் இவ்வுலகத்தில் பிறக்கும் பொழுது இன்பமும் துன்பமும் வந்து விடுகின்றது. ஆனாலும் அப்பனே இன்பம் இருக்கும் பொழுது இறைவனை கான கானக்கான மனம் துதிப்பதில்லை( அதாவது வணங்குவதில்லை ). ஆனாலும் துனபத்தில் வரும்பொழுது கூட அப்பனே இறைவனைக் கான்கின்றான் ( அதாவது பயத்தில் வணங்குகின்றான்). ஆனாலும் அப்பனே விதி என்பது எதுவென்று தெரிவதில்லை.இன்பத்திலும் “இறைவா! இறைவா!!” என்று சொல்லிக்கொண்டே இருந்தால் துன்பத்தில் “ ( தன் ) கையை உயரத்திக்கான்பிப்பான் எப்பேன் இறைவன்” . இதுதானப்பா உண்மை.  அதனால் இன்பம் துன்பம் மாறி மாறி வருவது இயல்பே அதனால் அப்பனே கட்டங்கள் இல்லை என்பேன்.அப்பனே துன்பத்திலும் உன் அருகிலே யான் இருக்கிறேன் அப்பனே கவலை இல்லை.

-22/01/2022 - அகத்திய மகரிஷி அடியவர் ஒருவருக்கு வாசித்த வாக்கில் உள்ள பொது வாக்கு.


காசுக்காக ஆசைப்பட்டவன் ஒருபோதும் ஞானியாகவும் இறையருளையும் பின் சித்தர்கள் அருளையும் பெற முடியாது என்று சொல்லிவிட்டேன்.

அனைத்தும் இறைவனுடைய செயல் என்று யாரொருவன் எண்ணுகின்றானோ!! 

அவனே உயர்ந்த மனிதன்.

இறைவனிடத்தில் யான் நன்றாக இருக்க வேண்டும், தன் மனைவி நன்றாக இருக்க வேண்டும், தன் பிள்ளைகள் நன்றாக இருக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டால்.... நிச்சயம் ஆகாது என்பேன்.

அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணிப்பார்!!!!

கூடி வாழ்ந்தால் எதை என்று கூற கர்மாக்கள்  தொலையும்

கஷ்டங்கள் அனைத்தும் தாங்கிக் கொண்டால் தான் இறைவன் தரிசனம் கொடுத்து அவந்தனுக்கு புண்ணியச் செயல்களை செய்வித்து இன்னும் பன்மடங்கு உயர்த்துவான் இறைவன். இனிமேலும்.

-1/4/2022 அமாவாசை திதி அன்று போகர் சித்தர் உரைத்த பொதுவாக்குவாக்குரைத்த ஸ்தலம் திருவண்ணாமலை. 


அப்பனே மனிதனிடத்தில் அப்பனே வெற்றிக்கு வழியில்லை அப்பனே இறைவன் தான் வெற்றிக்கு வழி என்பதைக்கூட தெரிவித்து நல்படியாக ஆக்குவேன் என்பது குறி. 

எதற்காக பிறந்தோம்?? எதற்காக? இவ்வுலகத்தில் வாழ்கின்றோம்?? என்று அப்பனே ஒர்நாள் தியானங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.அப்பனே!!

ஆனாலும் அப்பனே தியானங்கள் யாரும் கடைப்பிடிப்பதில்லை அப்பனே. தியானங்கள் எப்பொழுது செய்ய வேண்டுமென்றால்??? அப்பனே ""பிரம்ம முகூர்த்தத்திலே !!! அப்பனே நல்விதமாகவே செய்யும்பொழுது அப்பனே அவனைப்பற்றி அவந்தனுக்கே தெரியவரும் என்பேன்.

அப்பனே பல பல மனிதர்கள் அப்பனே ஒவ்வொரு யுகத்திலும் பல பல பக்திகள் பின்பற்றினார்கள் ஆனாலும் அப்பனே கலியுகத்தில்  அவ்பக்திகள் அழிந்து விட்டது ஆனால் அப்பனே "'இறைவா"...!!! என்று சொன்னாலே வந்து நிற்பான் அப்பனே. இறைவன் எதையன்றி கூற.

ஆனாலும் அப்பனே மனிதன் அதுபோல் அன்பாக வணங்குவது இல்லையே என்பதுதான் கேள்விக்குரியது.

ஆனாலும் அப்பனே அன்பாக வணங்கி விட்டாலே இறைவன் ஓடோடி வந்து விடுவான் தன் பக்தன் இருக்கின்றான் என்று கூட. அப்பனே.

தன்னைப் பற்றி அறியாமல் அப்பனே ஏதும் நடக்காது என்பேன் இவ்வுலகத்தில் அப்பனே.

முதலில் தன்னைப் பற்றி அறிய வேண்டும் தன்னை பற்றி அறிய வேண்டுமென்றால் தியானங்கள் மூலம் அறியலாம் அப்பனே.

இவையன்றி கூற தன்னைப் பற்றி அறிந்தாலே அனைத்தும் சாதித்து கொள்ளலாம் அப்பனே.

தன்னை அறியாமலே சென்று கொண்டிருக்கையில் அப்பனே இன்னொரு விஷயத்தையும் சொல்கின்றேன் அப்பனே!!!!

யார் ??யாருக்கு ??எதை ??எப்பொழுது?? செய்ய வேண்டும் என்பதை கூட இறைவன் நன்றாக கணித்துக் கொண்டிருக்கின்றான்.

அதை மீறி செய்தால் தான் அப்பனே தோல்விகள்.

ஆனாலும் அப்பனே பின் எதை என்று கூற அப்பனே இவை இவை என்று கூற மாற்றாமல் மாற்றுகின்றனர் மனிதர்கள் அப்பனே.

இப்பொழுது விதியில் ஒரு விளையாட்டு இருக்கின்றதென்றால் அப்பனே அவ் விளையாட்டை விட்டுவிட்டு மற்றொரு விளையாட்டுக்கு சென்றுவிடுவான் அப்பொழுது அவ் விளையாட்டு தோல்வியில்தான் முடியும் பிரம்மா எழுதிவைத்த விளையாட்டு வெற்றியில் தான் முடியும் அப்பனே. இது தான் உலகமப்பா.

அதனால் தான் மனிதன் அப்பனே தன் கடமையைச் செய்யாமல் வேறு ஒரு கடமையை செய்து கொண்டிருந்தால் இதனால் தான் தொல்லைகள் தோல்விகள் எல்லாம் வந்தடைகின்றன.

பின்பு எதை என்று கூற அறியாமல் பின்பு கஷ்டத்திலே மூழ்கி விடுகின்றான் அப்பனே.

இவை எல்லாம்... வீணே!!!!.... என்பேன் அப்பனே.

அதனால்தான் அப்பனே தம்தனக்கு என்ன எழுதி இருப்பதை எவ்வாறு என்பதை உணர்வதற்கு அப்பனே தன்னை அறிய நிச்சயம் வேண்டும் என்பேன் மனிதர்கள் அப்பனே.

ஆறாவது அறிவிற்க்கு வாருங்கள் அப்பனே அனைவரும் கூட.

அவ் ஆறாவது அறிவிற்கு வந்துவிட்டால் அப்பனே யான் அழைத்துச் செல்கின்றேன் அப்பனே.

ஆறாவது அறிவு என்பது நம்பிக்கை இறைவன்பால் செலுத்துதல்!!!, நன்மை செய்தல்!!! அப்பனே கோபம் கொள்ளாமை!!!, பொறாமை கொள்ளாமை!!! அப்பனே தெரிந்துகொள்ளுங்கள் அப்பனே. 

கருணை மனதாகவே சொல்கின்றேன் அப்பனே மனிதன் இன்னும் ஆறாவது அறிவுக்கே வரவில்லையென்றால் அப்பனே புரிந்துகொள்ளுங்கள் எவை என்று கூற.

ஆனால் ஜீவராசிகளோ ஆறாவது அறிவிற்கும் வந்துவிட்டது அப்பனே...

எவை என்று கூற ஆனால் மனிதனால் ஏன்?? வரமுடியவில்லை ??அப்பனே!!!

வாருங்கள்!!! அப்பனே....

அனைவரும் திறமை மிக்கவர்களே... அப்பனே பார்த்து நல் விதமாக நடந்து சென்று கொண்டு இருந்தாலே போதுமானது அப்பனே. 

அனைத்தும் தேடிவரும் அப்பனே அதனால்தான் அப்பனே எவையன்றி கூற மனிதன் எதை என்று கூற ஓர் எதை என்று பின் போகும்பொழுது எதற்கும் பிரயோஜனம் இல்லாமல் தான் போகின்றான்.

அதனால் பிரயோஜனம் உள்ளவைகளாக மாற்ற வேண்டுமென்றால் அப்பனே இறைவனே கதி என்று இருக்க அப்பனே நல்லவை.என்பேன்.

அதை விட்டுவிட்டு அப்பனே இவையன்றி ன்றி கூற அதன் பின்னே இதன் பின்னே ஓடினால் அப்பனே கடைசியில் வருவது துன்பமே என்பேன் அப்பனே.

அதனால் துன்பத்திற்கு காரணம் மனிதன் தான் என்பேன் அப்பனே.

மனிதனுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை கூட யாங்கள் அறிவோம் அதை ஆனாலும் எவை என்று கூற ஆனாலும் மனிதன் நினைத்துவிடுகின்றான். யாங்கள் எங்களாலும் செய்ய முடியும் என்றுகூட அப்பொழுதுதான் அவந்தன் விளையாட்டே தொடங்குகின்றது.... இறைவன் விளையாடுவான் என்பேன்.

இதை அனைவருக்கும் சொல்லிவிட்டேன் இதை என்று கூற என்னால் ஒன்றும் செய்ய இயலாது என்று அமைதியாக இருந்தாலே போதுமானது இறைவன் நோக்குவான் என்பேன் மனிதர்களை.

அதை விட்டுவிட்டு யான்தான் பெரியவன் எந்தனக்கு அனைத்தும் தெரியும்... யான் முன்னே செல்கின்றேன் எவை என்று கூற அனைத்தும் யானும் செய்ய முடியும் என்று சொன்னால் அங்கேயே முதல் குழியில் விழுந்து விடுகின்றான் மனிதன்.

ஆனால் பின்பு கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு அப்படியே என்னால் அப்பனே எதை என்று கூற இறைவனே...... என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று கூட திரும்பவும் இறைவனிடத்தில் வருகின்றான் அது முதலிலேயே தெரிந்து கொண்டால் நல்லது என்பேன்.

அதனால் தான் இப்பொழுதும் சொல்வேன் என்னால் ஒன்றும் முடியாது இறைவா!!!! நீ பார்த்துக் கொள்... இதுதான் இறைவனுக்கு பிடித்த விஷயம் இறைவனுக்கு பிடித்த விஷயம் தெரிந்து கொள்ளுங்கள் மக்களே!!

-3/4/2022 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்குவாக்குரைத்த ஸ்தலம்ஸ்ரீ லோபமுத்ரா தேவி சமேத அகத்தியர் கோயில்பாவாசாமி அக்ரஹாரம்ஒத்தை தெருதிருவையாறு. 


என் அகத்தியனை அகத்தில் உள்ளவனை வணங்கிட்டால் பிறவிகள் இல்லை பிறவிகள் இல்லை இதுதான் இனிமேலும் பல மனிதர்களுக்கு.

நிச்சயம் எதை என்று கூற

மனதார அகத்தியா!!! அகத்தியா!!! அகத்தியன் தந்தையே!!!தாயே!!! அனைத்தும் நீயே என்று சொல்லிவிட்டால் கருணையுள்ளவன் மனிததிருடர்களுக்கும் உதவிடுவான். என் தந்தை அகத்தியன். 

விதியின் வழியே சென்றால்தான், கஷ்டங்களை அனுபவித்தால்தான் பிறவிகள் அறுபடும்!!! அறுபடும்.!!!

பின் மேன்மைகள் பேசும் இவ்வுலகத்திலும் பேசும் உந்தனை.(ராமன் நாமம் உலகில் நிலைத்து நிற்கும்.) 

இவ் கஷ்டத்தை படவில்லை என்றால் ராமன் யார் ?? என்று தெரியாமல் போய்விடும் என்று கூட என் குருநாதன் அகத்தியன் சரியாக சொன்னான்.

-2/4/2022 அன்று புலஸ்தியர் பெருமான் உரைத்த பொது வாக்குவாக்குரைத்த ஸ்தலம் அகத்தீஸ்வரர் கோயில் அகத்தியான் பள்ளி .கோடியக்கரைவேதாரண்யம்



அப்பனே ""அசைக்க முடியாத நம்பிக்கை"" நம்பிக்கை இருந்தால் தான் அப்பனே இறைவனும் அழகாக பாதுகாத்துக்கொள்வான் என்பேன் வரும் காலங்களில்.

ஆனாலும் அப்பனே இவையன்றி கூற எதை எதையோ நினைத்து இறைவனிடம் வந்தாலும் அப்பனே இவையன்றி கூற ஆனாலும் அப்பனே அசைக்க முடியாத நம்பிக்கை  அசைக்க முடியாத ...இதையன்றி கூற பக்தி இவற்றின் மூலம் இறைவனை நேரடியாகவே காணலாம் .

யான் பல வாக்குகளிலும் சொல்லி விட்டேன்.......

 """"விதியை மதியால் வெல்ல முடியும்""" என்று!!!! 

ஆனால் அப்பனே விதி எவையன்றி கூற எவையென்று கூற மதி....

""""மதி தான் இறைவன் !!!!!!

மதி தான் இறைவன் என்று சொல்லிவிட்டேன். இறை பலத்தின் மூலம் அப்பனே அதனால் இவையன்றி கூற

இவ் ஆலயம் எவ்வாறு என்பதையும் கூட சரியாக  எதையென்று கூற ஆனாலும் ஈசனும் சொல்லி விட்டான் எதையன்றி கூற

ஓர் முறை அப்பனே பக்தியாக பக்தியாக இருந்த ஈசன் பக்தன் ஒருவன் எவையன்றி கூற அவந்தனுக்கும் குறிப்பிட்ட ஆயுள் காலம். நிறைவடைய போகின்றது ஆனாலும் இவையன்றி கூற.....

நான் உலகத்தில் என்ன தவறு செய்தேன்???? இவ்வுலகத்தில்.... இறைவா!!!  இறைவா!!! என்றெல்லாம் ஈசனிடத்தில் பக்தி கொண்டான்.

ஆனாலும் நேரடியாக ஈசனிடம் வந்து தொழுதான் தொழுது வேண்டினான் என்பதற்கிணங்க எவ்வாறு  என்பதையும் கூட எந்தனுக்கு.. இவ்வாறு ஏன்?? இவ் வயதிலே என்னை இழுத்துக் கொண்டு இருக்கின்றாய் இதையன்றி  கூற நீதான் காப்பாற்ற வேண்டும்... என்பதைக்கூட ஈசன் அடிமையாக இவற்றை நினைத்து நினைத்து ஈசனிடம் முறையிட...

ஆனாலும் இவையன்றி கூற அதனுள்ளே பின் எவை என்று கூற பின் வந்துவிட்டான் எமன்!! எமதர்மன்!!.... இவையன்றி கூற.

ஆனாலும் இதற்கு அறியாமல் பின் என்னிடத்திலே இவையென்று கூற யானும்(அகத்திய பெருமான்) இங்கேதான் இருந்தேன் விஷயங்கள் நடக்கும் பொழுது.எவையன்றி கூற. 

ஆனாலும் ஈசன் ஈசனை கெட்டியாக பிடித்துக்கொண்டான் (அவ் மனிதன்) ஆனாலும் இவையன்றி கூற ஆனாலும் அவர்களும் வந்தார்கள் எவையென்று கூற...... சித்திரகுப்தனுடன்

வந்து இவையன்றி கூற இவன் ஆயுட்காலம் முடிந்துவிட்டது இவையன்றி கூற யாங்கள் எடுத்துச் செல்வோம்.. அழகாக இவந்தனை என்று கூற..ஈசனிடம். 

ஆனாலும் ஈசனோ!!!! இல்லை!!! இல்லை!!!! 

இவந்தன் புண்ணிய கணக்கு இன்னும் பலமாக பலமாக இருக்கின்றது.

ஆனாலும் இவன் மனது நம்பிக்கை வைத்து இறை பலத்தோடு இறைவனுக்கே சேவை செய்து கொண்டு இருந்தால் இறைவன் நாமத்தை செப்பிக்கொண்டே இருந்தால்... தலைவிதி மாறும் என்பது இவனுடைய குறிக்கோள்.

ஆனால் நிச்சயம் மாறும் அவைமட்டுமில்லாமல் பல பேர்களுக்கும் நல் விதமாகவே வழி காட்டுதல் வேண்டும்.....

வழிகாட்டுதல் வேண்டும் என்பதற்கிணங்க பல ஆலயங்களுக்கும் நற்பணி செய்ய வேண்டும் தொண்டு செய்ய வேண்டும் எனது கடமை.

எந்தனுக்காக!!! இல்லை..!! இவ்வுலகத்தோர்க்கே!!!! என்று கூட இவன் மனம் இருக்கின்றது அதனால் நிச்சயம் மாற்ற வேண்டும் என்பதைக்கூட ஈசன் சரியாக எமதர்மனிடத்திலேயே சொல்லிவிட்டான்.

இதனால் அப்பனே சரி என்று நன்றாகவே இவையன்றி கூற.. கூறி விட்டு ஆனாலும்.....நிறுத்து!!!! என்றுகூட அவ் மனிதன் எவ்வாறு என்பதையும் கூட

ஈசனே!!! என்னை காப்பாற்றி விட்டாய்.

ஆனாலும் பல மனிதர்கள் நல்லோர்கள் இவ்வுலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் அவர்களும் முயற்சி செய்து இவ்வுலகத்தை காக்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

அதனால் இவை என்று கூற பல மனிதர்கள் இங்கு வந்து சென்றால் தலைவிதி நிச்சயமாய் நீங்கள் எதை என்று கூற எவையன்றி கூற ""பிரம்மனிடத்திலும் ஓதுதல் அதி சிறப்பு.... இவையன்றி கூற ..ஓதி... இதனையென்று உணராமலே..இவ் தர்மனிடமும்(யமதர்மன்) கூறிவிடவும்...இங்கே தங்கி விடு என்று  கூட .

நிச்சயமாய் சத்தியம் வாங்கிக்கொள் என்பதற்கு எதையென்று உணர அவ் மனிதனும் ஈசனிடத்திலும் முறையிட.. 

ஆனாலும் ஈசனும் எவை என்று கூற  " சரி !!!!தன்போல்(அவ் மனிதனின் இஷ்டம் போல்) ஆகட்டும் என்று கூட எமதர்மனே!!! சித்ரகுப்தனே!!!!  நில் என்று கூறி... இவையன்றி கூற இங்கு அருள் பாலிக்க வேண்டும் வந்தவர்களை நல்வழிப்படுத்தி நல்லோர் மனதை புரிந்து கொண்டு அவர்களுக்கும் நோய் நொடி இல்லாமல் வாழ்க்கை நீ கொடுக்க வேண்டும் என்று கூட ஈசன் சொல்லிவிட்டான். அழகாக.

அதனால் நல் விதமாக வந்து செல்பவர்களை எமதர்மனும் சித்திரகுப்தனும்... நல் விதியாக விதியில் சிலசில மாற்றங்கள் இருந்தாலும் அதையும் மாற்றிவிட்டு இவையன்றி கூற ஆனால் இதையன்றி கூற ....அவ் மனிதன் இப்பொழுதும் கூட எவை என்று கூற வந்து கொண்டே இருக்கின்றான். இத்தலத்திற்கு .

அவந்தன் பெயரை எவ்வாறு உச்சரிப்பது என்பதைக்கூட மனிதர்கள் எவ்வாறு என்பதைக்கொள்ள நலன்களே!!! அதனால் சொல்லி விடுகின்றேன் அடுத்தடுத்த வாக்குகளில் நலமாகவே.

இப்பொழுது புரிகின்றதா!?? நலமாகவே!!! விதியும் மாறும்.!!! இவையென்று கூற... எமதர்மனும் நெருங்க முடியாது எவை என்று கூற சித்திரகுப்தனும் நல் வழியாக மனதில் என்ன வேண்டிக்கொண்டீர்களோ நிச்சயமாய்.... உண்டு என்பேன்.

நலமாக நலமாக எவை?? எப்பொழுது?? எதை?? என்று கூற அப்பனே நல் விதமாக மாற்றங்கள் உண்டு....

பலப்பல சமாதிகளிலும் நல் விதமாகவே பின் ஞானிகள் தங்கி இருக்கின்றனர்.

அவ் தலத்திற்கு சென்று வந்தால் எவ்வாறு என்பதையும்கூட தன்னலம் காக்காது பிறர் மனதை எண்ணி அவர்கள் படியே இவ்வாறு என்பது கூட நடந்துகொண்டால் வெற்றி இது தான் அனைத்து ஞானிகளும் விரும்புவார்கள் என்பேன்.

""தன்னைப்பற்றி வேண்டி கொள்ளுதல் ஆகாது!!! எதையென்று கூற. 

எவையன்றி கூற ஏனென்றால் சொல்லி விடுகின்றேன் சில ஜீவசமாதிகளில் வாழும் ஞானிகளை பற்றி இதையன்றி கூற அவர்களுக்கு எவை என்று கூற இதையும் கூட மற்றவர்களுக்கு மற்றவர்களுக்காகவே வணங்குவது தான் சிறப்பு என்பதை கூட அவர்களுக்கு தெளிந்து விட்டனர். அவர்களுக்கு தெரிந்து விட்டது.

அதனால் அங்கு சென்று பின் தன்னைப் பற்றியோ!!! தன் மனைவியைப் பற்றியோ!!! தன் சிந்தனையை பற்றியோ !!!
தான் நன்றாக இருக்க வேண்டும் தான் எப்படி செய்ய வேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் படுகுழியில் தான் உண்டு.

ஆனாலும் வெற்றி தருமே தவிர திரும்பவும் தோல்வி அதி விரைவிலே ஏற்படும்.

அதனால் பின் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் எவை என்று கூற அனைவரும் உயர வேண்டும் பின் இறைவா!!! அவர்களுக்கெல்லாம் கொடு!!!

இன்னும் ஏழை எளியோர் எல்லாம் உணவு இல்லாமல் பின் மாய்ந்து கிடக்கின்றார்கள்.. உயிர்பிழைத்து கொடு!!! என்றுகூட வேண்டிக்கொண்டால் பின் ஞானிகள் சந்தோஷம் அடைந்து அப்பனே!! இவந்தன் போல ஆட்கள் தேவை .

ஆனாலும் சிறிது சோதனைகள் வைத்தாலும் உயர்ந்த நிலைக்கு அடைந்து விடுவீர்கள்.

இப்படி சென்றால் இறைவன் நல்வழி காட்டுவான் இறைவன் நல்வழி காட்டுவான் என்பதைக்கூட ஆனாலும் சொல்லிப் பாருங்கள் அது புண்ணியம்.

ஆனாலும் கேட்காவிடிலும் அதுவும் பல மடங்கு புண்ணியம் உந்தனுக்கு எவையன்றி கூற...

ஆனாலும் எளிமையாக எடுத்துக் கொள்ளுதல் கூடாது என்பேன். 

பல பல இதிகாசங்களையும் படித்து இப்படித்தான் வாழவேண்டும் என்பதையும் கூட இனிமேலும்  வரும் பிள்ளைகளுக்குச்(குழந்தைகளுக்கு) சொன்னால் வாழ்க்கை வளமாகும் எவையென்று கூற.

தன் தன் பிள்ளைகளுக்கு அனைத்தும் நலமாக வேண்டும் என்பது கூட மனிதர்களின் நினைப்பு.

ஆனாலும் சொல்கின்றேன் சிறுவயதிலிருந்தே இப்படித்தான் வாழ வேண்டும்  பல இறை பலங்களையும் இப்படித்தான்.. வாழ்ந்து ஜெயித்தார்கள் என்பதைகூட அவந்தனுக்கு சிறு வயதிலே அவள்தனக்கும் சிறுவயதிலே(ஆண் பெண் குழந்தைகளுக்கு) சொல்லிவிட்டால் அவர்கள் வளர வளர இப்படித்தான் வாழ வேண்டும் உலகத்தில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து விடுகின்றது.

இப்படிப்பட்ட பிள்ளைகள் உயர்வார்கள்!!! உயர்வார்கள்!!! உயர்ந்த நிலைக்கு செல்வார்கள்!!!

அவை மட்டும் இவையன்றி கூற அதனால் இப்படி சொல்லுங்கள் எவையன்றி ஆனால் குழந்தை பிறந்து விட்டது அவந்தன் அவன் பால் (அவர்கள் போக்கிலே) வளரட்டும் என்று விட்டு விட்டால் அப்பனே ஒன்றும் செய்ய இயலாது.

கடைசியில் தன் பிள்ளை இப்படி வாழ்கின்றானே!!!! என்றுகூட கேள்விக்குறியாகிவிடும்.

அப்பொழுது இறைவனிடத்தில் சென்றாலும் என்ன லாபம்???  இவையன்றி கூற

அதனால்தான் சிறுவயதிலிருந்தே சொல்லிக்கொடுங்கள் பக்தியை!!!!

ஓரு பக்தியை நிலைநிறுத்தி இறை பக்தியோடு  பக்தியோடு அன்புகூர்ந்து அனைத்தும் எவ்வாறு என்பதையும் கூட உணர்ந்து உணர்ந்து விட்டால் அவன் இவ்வுலகத்தை ஆளுவான் என்பது சமமான விளக்கம். 


-2/4/2022 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்குவாக்குரைத்த ஸ்தலம் : ஸ்ரீ வாஞ்சிநாதசுவாமி ஆலயம்ஸ்ரீ வாஞ்சியம்திருவாரூர்

பாம்பே!! 
என்ற பொழுது
ஈசனே!!
 ஞாபகத்தில் 
வர வேண்டும்
 இதுதான் உண்மை!!
ஈசனே பாம்போ!!! 
என்னை !!
யானே 
ஈசனை பாம்பன் 
என்றுதான் 
அழைப்பேன்!!!

-4/4/2022 அன்று பாம்பாட்டி சித்தர் உரைத்த பொதுவாக்குவாக்குரைத்த ஸ்தலம் : தஞ்சை பெருவுடையார் திருக்கோயில்

ஈசனிடத்தில் வேண்டிக் கொண்டன...  ஐந்தறிவுள்ள ஜீவராசிகள்.

எதனையும் என்றுள்ள!! என்றுள்ள!! ஆறறிவு படைத்த மனிதனுக்கு புத்திகள் இல்லை.

ஆனாலும் எவற்றிற்கு எதையென்று கூற யாங்கள் என்ன தவறு செய்தோம்???

ஆனாலும் எங்களை இப்படி வாட்டுகின்றாயே!! நீ என்று ஈசனிடம்... உரைத்தன எதை என்று கூற ஐந்தறிவு உள்ள ஜீவராசிகள்.

ஆனாலும் இதற்கு ஈசனோ!! யான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்க!! கேட்க... யாங்கள் எப்போதெல்லாம் தாழ்ந்து விடுகின்றோமோ!!! மனிதர்களும் தாழ்ந்து விட வேண்டும்.

ஏனென்றால் எதற்கும் யாங்கள் யாருக்கும் துரோகம் செய்வது இல்லை!!

நம்பிக்கை  எதையன்றி கூற பொய் சொல்லுவதும் இல்லை !!பொறாமை கொள்ளுவதும் இல்லை!! இதையன்றி  கூற ஆனால் மனிதனிடத்தில் அனைத்து புத்திகளும் தாழ்ந்து வருகின்றது.

இதனை ஒன்று எதனையென்று கூறும் கூறும் என்று கூற நீ நிச்சயம் பின் பின்பற்ற வழிவகுக்க வேண்டும். இதனையும் என்று கூற.

ஆனாலும் ஈசனோ!! சரி இதையன்றி கூற நல் எதை முறையாக ஆனாலும் நீங்கள் எப்போதெல்லாம் தாழ்ந்து பின் இதனையும் அறிவதற்கு பின் தாழ்ந்து தாழ்ந்து மனம் வருத்தங்கள் கொள்கின்றீர்களோ!!! அப்பொழுது மனிதர்களும் பல மடங்கு தாழ்ந்து விடுவார்கள்... இதுதான் உண்மையப்பா...!!

அதனால் என்னவென்று மனிதர்களுக்கு யான் செப்புவது???

செப்பிவிட்டேன் ஐந்தறிவுள்ள ஜீவராசிகளுக்கு...இவ் சித்திரை திங்களில்... எதை என்று கூற அனைத்தும் பின் நீர், மற்றும் பிற பிற வகைகளான உணவுகளையும் கொடுக்க கொடுக்க அவைதன் மகிழ !!மகிழ!! தான் மனிதன் இனிமேலும் நிச்சயமாய் வாழ்வான் என்பது நிச்சயமான வாக்கு.

எப்பொழுது ஒருவன் பின் அனைத்து மக்களும் நன்றாக இருக்கின்றான் என்று எண்ணுகின்றானோ!! அவந்தனுக்கு யாங்களே அனைத்தும் செய்வோம் வழிகளும் காட்டி இறைவனையும் பார்க்க வைப்போம்.

இவ் வாழ்க்கை பின் சுகத்திற்காகவே!!! சிறும் சுகத்திற்காகவே!!!

அதை ஆசைப்பட்டால் பின் பெரிய பெரிய பாதிப்புகள் வரும் ஆனாலும் அவையெல்லாம் விட்டுவிட்டு இறைவன் பால் வந்துவிட்டால் அனைத்தும் அனைத்தும் நல்கும்.

மனிதனே நீ வேண்டுகின்றாய்!!!! 

அவ் வேண்டுவதற்கு நீ என்ன செய்தாய்?? புண்ணியங்கள்!!!

அதனால்தான் அவ் ஜீவராசிகளுக்கு கொடுத்தால் நிச்சயம் ஈசன் மனம் மகிழ்ந்து பின் ஜீவராசிகளும் மகிழ்வித்து வாழ்க என்று மனதார வாழ்த்தும் என்பதையும் மெய்யப்பா!!!!!

இதனால் செய்க!!  

இதுதான் உண்மை அதை விட்டுவிட்டு இவ் மாதத்தில்  அது நடக்கும்!!! இவ் கிரக பெயர்ச்சிக்கள் ராகுகாலம் இவையெல்லாம் சொல்லி கொண்டே வந்தால்... நிச்சயம் அறிவிழந்து அறிவிழந்து தவித்து விடுவீர்கள்!!!!

கிரகங்கள் காலங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றது ஆனால் மனிதா!!! நீ மாறவில்லையே!!!

ஆனாலும் நீ மாற்றிக் கொண்டால் போதுமானது கிரகங்களும் மாறிக்கொள்ளும்!!!

நீ எப்படி மாறிக்கொள்ள வேண்டும் என்றால் தர்மத்தை நிலை நாட்ட வேண்டும்!!!

வேண்டும்!! அப்பனே!!! மற்றவர்களையும் நன்றாக அதாவது ஐந்தறிவு உள்ள ஜீவராசிகளையும் நிச்சயமாய் நன்றாகவே பார்க்க கற்றுக்கொள்ளவேண்டும். 

அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்!!

இப்படி செய்தால் இறைவன் மனமிரங்கி யாங்களும் மனமிரங்கி வந்து உங்களுக்கு செய்வோம்!!!

சித்தர்களை வந்து தொழுபவர்கள். தொழுபவர்களை காலத்தை வெல்லச் செய்வோம்!!! இது உறுதியான!! இது உறுதியானது என்போம்.

உன் புத்தியை கூர்மையாக்கி முதலில் அறிவைப் பயன்படுத்தி தெரிந்து கொள்ளுங்கள் அவ் அறிவை பயன்படுத்தினால் மட்டுமே இறைவனை காண முடியுமே தவிர மற்றவை எல்லாம் மனிதன் மனிதனை பின் சொல்லிக் கொடுத்தாலும் ஒன்றும் லாபம் இல்லை.

வயதுகள் ஆக ,ஆக, இறைவன் விதவிதமாக நல் விதமாக பக்தியை செலுத்தினால் இறைவன் எப்படி நடத்தலாம்?? இறைவன் நேரடியாகவே வருவான் கலியுகத்தில் இது தான் உண்மையப்பா!!!!

உண்மையை செய்!! நல்லதையே நினை!! நல்லதே நடக்கும்.

இவையன்றி கூற வள்ளலான் வழிகளை பின்பற்றுங்கள் மக்களே!! திருந்திக் கொள்ளுங்கள்!! திருந்திக் கொள்ளுங்கள்!! 

-16/4/2022 சித்ரா பவுர்ணமி அன்று காகபுஜண்டர் ரிஷி உரைத்த பொதுவாக்குவாக்குரைத்த ஸ்தலம் திரயம்பகேஷ்வரர் ஜோதிர்லிங்கம்நாசிக் மாவட்டம்மகாராஷ்டிரா. 

தவம் மேற்கொண்டான்!!!

மேற்கொண்டான் மேற்கொண்டான் தன் மனதில் உள்ளவற்றை தன் நினைப்பாக தோன்றித் தோன்றி தோன்றித் தோன்றி ""ஈசனே ""!!!என்று கதியாக இருந்து நமசிவாயா!!!! என்று இரவும் பகலுமாக...

உறங்கவில்லை!! இதையென்று உண்ணவில்லை!!! பின் நமச்சிவாயனே என்று. 

பல விஷ ஜந்துக்கள் இவனை தீண்டினஆனாலும் இதையன்றி கூற இவந்தனுக்கு ஒன்றும் ஆகவில்லை.

ஏனென்றால் "நமச்சிவாய" மந்திரம் பலம்!மிக்கது! என்பதை கூட... யாருக்கும் தெரியாமல் போய்விட்டது இப்பொழுதும் கூட....

அவ் மந்திரத்தின் பலன் நிச்சயம் செப்புவர்களுக்கு கஷ்டங்கள் ஏற்படலாமே தவிர... ஆனால் விடிவெள்ளி ஒரு இனிப்பே!!!! 

இனிப்பே!! என்பதற்கிணங்க தவங்கள்!! மேற்கொண்டு, மேற்கொண்டு... ஆனாலும் ஈசன் இன்னும் சோதித்தான்......

சோதித்து, சோதித்து,  பல பல இளவரசிகளும் இவன் கண் முன்னே தோன்றி..!!! எவையன்றி கூற ஆனாலும் இவன் எதற்கும் மயங்கவில்லை.

மயங்கவில்லை !!ஆனால் இதையன்றி கூற...... """" எதற்கும் மயங்காதவன் ராஜராஜ சோழன்""" அதனால் தான் இப்பொழுதும் கூட இவன் பெயர்!! பெயர்!! பெயரைச் சொல்லிச், சொல்லி.....

அதனால் தான் சொல்கின்றேன் மனிதர்களுக்கும் .....

"""எதையும் விரும்பாதவர்களே!!!! பின் இவ்வுலகத்தில் பேசுவார்கள்!!! பல காலம்!! இறைவனே பேசுவான். ஆனாலும் மனிதர்களும் பேசுவார்கள் சில மனிதர்களைப் பற்றி.

ஆனாலும் எளிதில் மறந்து விடலாம் ஏனென்றால் இதற்கும் அறிவதற்கும் இன்னும் விளக்கங்கள் யான் வருகின்ற வாக்குகளில் செப்புகின்றேன்.

செப்புகின்றேன் என்பதற்கிணங்க ஆனாலும் கடைசியில் பின் அனைத்தும் எதையன்றி கூற பின் பல ஆண்டுகள் தவம் செய்து பின் ஈசன் கண் முன் தோன்றினான்!!! 

தோன்றினான்!!! ராஜ ராஜ சோழனுக்கு!! 

முதலில் சொல்லியது ஈசன்!!!

அகத்தியன் போல் இவ்வுலகத்தில் கருணை உள்ளவர் யாரும் இல்லை!!!

ஒருவரை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் அளவிற்கு தகுதிகள் படைத்தவன் அகத்தியன்.

ஆனால் அவன் மீது பற்றாத பற்று!! நம்பிக்கை வைத்து விட்டால் கைவிடமாட்டான் இவ்வுலகத்தில்.  அது எவரேனும் சரி!!!!
திருடனாக இருந்தாலும் சரி!!
நல்லோர் ஆக இருந்தாலும் சரி!!!
மாற்றிவிடுவான் எளிதில் அகத்தியன்.

ஆனால் நம்பிக்கை வேண்டும் !!!நம்பிக்கை வேண்டும் அன்பு வேண்டும்!! அவ் அன்பிற்கு பன்மடங்கு செய்வான் என்பது குறிக்கோளாக.!!!

அதனைத்தான் ஆனாலும் ராஜராஜசோழன் அங்கிருந்தே  முதலில் குருவை ""அகத்தியா""!!!! என்று அழைத்து விட்டான்.

ஆனாலும் இதையன்றி அறிவதற்கு வந்துவிட்டேன்.

குருவே!!! உன்னால்தான் ஈசன்.. எந்தனுக்கு இவையன்றி கூற... சொன்னாய் என்பதைகூட குருவின் பெருமையை அழகாகவே அழகாகவே எடுத்துரைத்தான்  ராஜராஜ சோழன். இதையன்றி கூற.

ஆனாலும் நன்று!! விளக்கங்கள் தெரிவதற்கு ஒன்றுமில்லை!!
ஒன்றுமில்லை !! இதனால் இவையன்றி  கூற உன் விருப்பம் என்னவென்று??கேள்!!!  என்று ஈசனும் வினாவினான்!!! 

இதையன்றி கூற,கூற, பின் இதையன்றி கூற.... 

""எந்தனுக்கு இவ்வுலகத்தில் ஏதும் ஆசைகள் இல்லை!!!
உன்னை பார்த்தவுடனே..

ஆனாலும் இவ்வுலகத்தில் செய்யாததை!! யான் செய்து முடிக்க வேண்டும் என்பதுதான் எனது குறிக்கோள்.

அதனால் நீ!! அதைத் தான்(வரம்) கொடுக்க வேண்டும் என்று ஈசனிடம். எதனை என்று அழகாக கேட்டு விட்டான்.

ஆனால் ஈசன் சொன்னான் ""நிச்சயம் உன் புகழ் இவ்வுலகத்தில் யாராலும் எதையன்றி கூற...  கூறமுடியாது!  ஈடில்லாத அளவிற்கு.!!

பின் நீ எதனை? விரும்பினாயோ!! இவ்வுலகத்தில் அதுவும் நிச்சயமாய் யாராலும் ஜெயிக்க முடியாது!!!  பின் இதனையும் பின்பற்றி வரவும் முடியாது....!!

அதுபோல் வரத்தை பெற்றுக்கொள்!! என்று இணங்க பின்
அழகாகவே !!அழகாகவே.!!

ஆனாலும் பின் விதியில் (ராஜ ராஜ சோழன்) கூட இல்லை ஆனாலும் மாற்றி விடுகின்றேன்!! இதனால் தான் இதையன்றி கூற விதியையே மாற்றி அமைத்து யாரும் செய்ய முடியாத அளவிற்கு பின் செய்வித்தான்!!! ( தஞ்சை பெரிய கோயில்) ராஜராஜசோழன்.

ஆனால் ஈசனும் !!

மகனே!! பொறுத்திரு!!!

இவையன்றி கூற இதையென்று கூற.... 

முதலில் அகத்தியனுக்கு நன்றி சொல்!!! என்று கூற. 

ஆனாலும் இதையன்றி கூற ஆனாலும் இவையன்றி கூறும் அளவிற்கு கூட பக்திகள் சிறந்தவையால்.. 

""" யானே இங்கு வந்தேன் அவனை பார்க்க இதுதானப்பா அன்பு!!!

இதனால் இறைவனிடத்தில் அன்பு செலுத்தினால் சரியாக சரியாக மனதில் இவ்வாறு தான் வாழவேண்டும் பல மனிதர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டுமென்று எண்ணினால் நிச்சயம் யான் தேடி வருவேன் அவந்தனை. 

இதற்கு சான்றாக ராஜராஜ சோழனே!!!!  

அவந்தனையே யான் குறிக்கோள் ஆக காட்டுகின்றேன்!!

அப்பனே!! இதையன்றி கூற அதனால் இத்தலமும் விசித்திரமானது!!!

இங்கு வந்து செல்பவர்கள் விதிகள் மாறும் !!மாறும்!! என்பேன்.

இதையன்றி கூற பின் அவர்களுக்கு என்னென்ன தேவை என்பதை கூட பின் ஈசனே கொடுப்பான்!!! ஆராய்ந்து!!!

ஆனாலும் இவையன்றி கூற... ஆனாலும் அதற்கு தகுதிகளாக நீங்கள் இருக்க வேண்டும்.!!!

இருக்க வேண்டும்!!! ராஜராஜ சோழன் எப்படி தவம் செய்தான்!!!!  என்பதைக்கூட....

ஏதும்?? நினைக்காமல் ஈசனுடைய மனமிரங்கி செய்தால்... பின் விதியும் மாற்ற வல்லான்...

இப்பொழுது கூட பின் பிரம்மனே விதியை மாற்றுவான் என்பதற்கிணங்க.....

"" ஈசனும் விதியை மாற்றுவான் இத்தலத்தில் !!!

ஈசனே!!! பிரம்மா, விஷ்ணுவாக இருந்து இதையன்றி கூட...விதியை மாற்றிவிடுவான் எளிதில்.

இவையன்றி கூற இறைவனிடத்தில் பக்தி செலுத்துங்கள்!!!

செலுத்துங்கள் இன்னும் பல பல வழிகளிலும்!!

மனிதன்!!!!

அவனுக்கே!! யாங்கள் அனைத்தும் கொடுப்போம்

ஈசனை பிடித்தால் சரித்திரம் பேசும்!!!!!

பிறர் அறியாமை தாம் தன் நிலைமையில் அறிய வைத்துவிட்டால் இது பெரும் புண்ணியமப்பா!!!

இப்புண்ணியத்திற்கு ஈடு!! இணை!! இல்லையப்பா!!

மனிதனுக்கு நல்வாழ்க்கை வேண்டுமென்றால் விதியைத்தான் எவ்வாறு என்பதை கூட பின் பிரம்மன் எழுதி வைத்து விட்டான். 

ஆனால் ஈசனால் அதை நிச்சயம் மாற்ற முடியுமென்றால் இவ் ஆலயமே!!!  என்பேன். 

எந்தனுக்கும்(அகத்தியருக்கும்) பல முறை உரைத்துவிட்டான் ஈசன்!!! எதையன்றி கூற... 

அகத்தியனே!!!!! 

மனிதனை திருத்துவது சுலபமில்லை எவையன்றி கூற... நீயும் திருத்துவேன் திருத்துவேன் என்று சொல்லிக்கொண்டே இருக்கின்றாய்.

ஆனாலும் நிச்சயமாய் யான்(அகத்தியர்) திருத்துவேன்.... எந்தனுக்கு அவ்வளவு எதையன்றி கூற ஆனால்... முடியட்டும் சென்று வா !!!என்று கூட எதை என்று கூற பின் சேவைகள்!! சேவைகள்!! என்றே கூட என் நிலைமைகள் மாறிவிட்டது மாறிவிட்டது ஈசன் எவையன்றி கூற....

முதலில் எவையன்றி கூற எவையென்று எடுத்தாலும் என்னைத்தான் ஈசன்...

அகத்தியா!!! அங்குச் செல்!!! அகத்தியா!! அங்குச் செல்!! என்றெல்லாம் சொல்வான்.

ஆனால் கடைசியில் கேட்டேன் ஒர் வார்த்தை!!! ஈசனிடம்!!! எதையன்றி கூற...

ஈசா!!!! எத்தனையோ தேவர்கள் எத்தனையோ முனிவர்கள் சபதம் செய்து தவம் செய்து கொண்டிருக்கின்றார்களே!!! 

என்னை மட்டும் ஏன்?? நீ சென்றால் அங்கு நலமாகிவிடும், இங்கு சென்றால் நலமாகும் என்றெல்லாம் அனுப்புகின்றாயே!!!  வேதனைக்குரியது ஈசா!!! எனறு யானும் கேட்டுவிட்டேன்!!!

அதனால் ஈசன்!! ஒரு வார்த்தை சொன்னான்!!! 

"""அகத்தியனே!!! எந்தனுக்கு இவ்வுலகத்தில் சமமானவன் நீயே!!! என்று சொல்லிவிட்டான்..

கண்ணீர் மல்கியது!! எந்தனுக்கு!!!! 

அதனால் தான் என்னால் அனைத்தும் முடியும் என்று சொல்லிவிட்டேன் மக்களே!!

-7/4/2022 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த  ஆலய பொதுவாக்கு 

புண்ணியங்கள் ஆனாலும் செய்ய முடியவில்லையே!!! இறைவா !!!என்று தேடி வந்து விட்டாலும் அவந்தனை புண்ணியப் பாதையில் அழைத்துச் செல்வான் இவ் இறைவன்!!(சென்னீஸ்வரர்). இவ் இறைவன்!!! சொல்லி விட்டேன் யான்.!! 

இதன்போலே!! புண்ணியங்கள் செய்து செய்து பல வெற்றிகளை குவித்து விடலாம் என்பேன்.



-7/4/2022 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த ஆலய பொதுவாக்கு
வாக்குரைத்த ஸ்தலம் : அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில்வாணத்திரையன் பட்டினம் கிராமம்உடையார் பாளையம்ஜெயம் கொண்டான் வட்டம்அரியலூர் மாவட்டம்.

தெய்வத்தின் அருள் சக்தியைவிட இங்கே வேறொன்றுமில்லை  இவையென்று கூற... இதன்படியே பின் பல திருத்தலங்களுக்கு சென்று விட்டால் மனோவசிய சக்திகள் நம் உள்ளத்தில் நுழையும் என்பேன்.

இவ்வாறு நுழைந்தால் நன்மைகள் ஏற்படும் என்பேன். கிரகங்கள் எதையென்று கூற கட்டுப்பாடுகள் வராது என்பேன்.

இவர் தான் உணர உணர அதனால் தான் பல திருத்தலங்களை பற்றிச் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன்.

அங்கெல்லாம் சென்று கொண்டே வந்தால் நிச்சயம் மீண்டு கொள்ளலாம் வாழ்க்கையின் தத்துவத்தை புரிந்து கொள்ளலாம்!!! நடந்துகொள்ளலாம்!! உண்மை நிலையை அறிந்து, பின் இக்கால நிலையைப் போக்கி தன் காலத்தையும் வென்றுவிடலாம்!! இதுதான் உண்மை.
செப்பிவிட்டேன்!!!! 

தெய்வ பலங்கள் அப்படி இல்லை.... சோதனைகளைத் தரும் அதையும் தாண்டினால் அனைத்தும் கொடுத்துவிடும். இயல்பில்லா வாழ்க்கையையும்  கொடுத்து விடும்...இதையென்று கூற கொடுத்து கொடுத்து நல்வழியாக்கி இறையருள் பெற்று பலமாக இப்பிறவி மோட்சமும் அடையும்.. என்பது நிச்சயமான வாக்கு அதனால் இதனை பல வழிகளிலும் யாங்கள் சித்தர்கள் பல பல வழிகளிலும் பின் திருத்தலங்களை அமைத்தோம்...

-16/4/2022 அன்று சித்ரா பவுர்ணமி அன்று குருநாதர் அகத்தியர் உரைத்த ஆலய பொது வாக்கு .

வாக்குரைத்த ஸ்தலம் : ஸ்ரீ மகாலக்ஷ்மி ஆலயம்சாரொட்டிஎன்எச். 8 தேசிய நெடுஞ்சாலைதஹானுதானே மாவட்டம்
மகாராஷ்டிரா மாநிலம். 

ஒரு புண்ணியம் செய்வித்தான் ( மராட்டிய மாமன்னர் சத்ரபதி சிவாஜி) எதையன்றி கூற காடு மேடு களாக மலைகளாக செல்கின்ற பொழுது அவ்வரசன் (சிவாஜி) பல மனிதர்களுக்கு உதவி செய்தான் அப்படி மட்டுமில்லாமல் பல ஜீவராசிகளுக்கும் உதவி செய்தான் உதவிகள் செய்து செய்து பின் நல் முறையாகவே அவ் ஜீவராசிகளும் மனமுவந்து வாழ்த்தி விட்டன. இதனால் பன்மடங்கு உயர்வுகள் பெற்று விட்டான் அவன்.

பல ஆலயங்களை வணங்கினான். வணங்கி வணங்கி வெற்றிகள் வெற்றிகளைக் குவித்துக் கொண்டே சென்றான்.ஆனாலும் இவையன்றி கூற சில தீயவர்கள் இவந்தன் பின் எப்படி?? பின் வெற்றிகள் கொள்கின்றான்?? என்று எண்ணி பின் இவையன்றி கூற  அவ் தீயவர்கள் சில ஆட்களை ஏற்படுத்தி மறைமுகமாக இவந்தனை தூதிட்டு ( சிவாஜியை தூதுவனாக ஆட்களை வேவு பார்க்க) இவன் என்ன செய்கின்றான்? என்று பின் பார்க்கச் சொன்னார்கள்.இவையன்றி கூற ஆனாலும்  சிவாஜி பின் எதனையுமென்று பின் அறுவடையாக உண்டு உண்டு இதனால் மறைமுகமான பலபல பின் உண்மையான பின் எழுந்தருளியுள்ள (சுயம்பு) ஒளி வடிவமான பின் இறைவன், ஆலயங்கள் ,ஜீவசமாதிகளுக்கு சென்றான். ஆனாலும் இவைதன் உண்டு உண்டு என்பதற்கிணங்க சென்றுகொண்டே இருந்தான் இதனால் மேன்மையான பலன்கள் இவந்தனுக்கு உண்டாயிற்று.

-அன்புடன் அகத்தியர் - ஸ்ரீ பஞ்சமுகி ஹனுமான் ஆலயம்!
-16/4/2022 சித்ரா பவுர்ணமி / வட இந்திய ஹனுமான் ஜெயந்தி அன்று குருநாதர் அகத்தியர் உரைத்த ஆலய பொது வாக்கு .
வாக்குரைத்த ஸ்தலம் .ஸ்ரீ பஞ்சமுகி ஹனுமான் ஆலயம்மோடி தம்பாடிவாப்பி தாலுக்காவல்சாட் மாவட்டம்குஜராத் மாநிலம்.
மனிதனுக்கு என்னென்ன? வேண்டும்!? என்று தேவைகளை பூர்த்தி செய்ய மனம் துடிக்கின்றது!!

இதுதான் மாயை!!!

அவ் மாயையை நிறுத்திவிட்டால் இறைவனை நேரடியாகவே காணலாம்....!!!! தரிசனத்தையும் கூட.

முதல் இவ்வுலகத்தில் முதல் இறைவனே..... ஈசனே!!!! என்பேன் யான். 

எதனையென்று அனைத்து பிரம்மாக்களையும் பார்த்து விட்டேன். 

ஆனால்???!!!  ஈசனோ!!  காணகிடைக்காத அற்புதம்!!!!!!!!

இதனையும் அதனால் இவனை நம்பி நம்பி தொழுவோர்க்கு ஒரு குற்றங்களும் இல்லை.

குற்றங்கள் இல்லை நாராயணனும் நாராயணனும் அழகாக பார்த்துக் கொண்டிருக்கின்றான்.

ஈசன் அருளைப் பெற்றுவிட்டால் நாராயணனும் எளிதில் இறங்கி விட்டு அனைத்து ஐஸ்வர்யங்களையும் கொடுப்பான்.

இதுதான் விதியின் பாதை. வகுத்த கட்டாயம்.

வரட்டும் என்னுடைய ஆலயங்களுக்கு!!!!!

பின் வினைகளை யான் தீர்ப்பேன்... என்பதை கட்டாயமாக குறிப்பிட்டுள்ளான் ஈசனே!!!

சாதாரண மனிதனுக்கும் இரங்குவான் அகத்தியன்.!! வரும் வரும் காலங்களில்.

அதை புரிந்து கொண்டு நலமாகவே நடந்தால் நிச்சயம் எங்கள் அருளால் யாங்கள் காத்து புண்ணியப் பாதைக்கு அழைத்துச் சென்று பின் முக்தியை பெற்றுத்தருவோம்.!!!

பின் இறைவனையும் காண வைப்போம்!!!

எங்களால் முடியும்!!!!!. அனைத்தும் கூட....

சித்தர்களால் முடியாதது இவ்வுலகத்தில் ஏதுமில்லை!!!!

யாங்கள் சொன்னாலே இறைவனும் எதையென்று....

ஈசனும் இவையென்று சரி என்று சொல்லி விடுவான்.!!!!

பிரம்மாவும் சரியென்று சொல்லிவிடுவான்!!!!

எதையென்று கூற விஷ்ணுவும் சரியென்று சொல்லி விடுவான்.!!!!

இன்னும் வரும் வரும் காலங்களில் துன்பங்கள் பெருகும்!! நோய்கள் ஏற்படும்!!

அதனால் அத்துன்பத்தை எப்படி ?? பின் போக்க வேண்டுமென்றால்??? 

கருணை!!! கருணை பொங்கும் இல்லத்திலே இறைவன் அழகாக விளையாடுவான்..

அவ் கருணை பொங்கும் இல்லம் என்பதால் எதனையுமென்று குறிப்பிடுகிறேனென்றால்""உன் மனதே!! என்பேன்.

அதை முதலில் நீ செம்மைப்படுத்து. அங்கே இறைவன் குடி கொள்வான்.

இறைவன் சொன்ன பாதை ஏதும் வராது.....

கோவங்கள்!!! பொறாமைகள்!!! காமங்கள்!!! பின் எதனையும் விரும்பாத.... இறைவனை மட்டுமே விரும்பும் அப்பொழுது விரும்பி வந்தால் இறைவன் நேரடியாக தரிசனம் கொடுத்து உன்னை ஆட்கொண்டு. 

மகனே..!!!.. என்ன வேண்டும்??? என்று கூட கலியுகத்தில் சுலபமாகவே கேட்டறிவான் இதுதான் உண்மை.

இறைவனை நாடு!! நாடு!! நாடிநாடி வந்தாலே போதுமானது உன் தீங்குகள் அழியும் பாவங்கள் கரையும் பின்பு இதனையுமென்று அறிவதற்கு ஒன்றுமில்லை.

இறைவனே இதையென்று  இப்படி செய்க!!! என்று உன்னிடத்தில் வந்து விடுவான்.

அதன் பின் உன்னை யாரும் அசைக்கவும் முடியாது என்பேன்!!.

எதனையென்று ஆனாலும் கஷ்டங்கள் கொடுத்துக் கொண்டே இருக்கின்றான் பல மனிதர்களுக்கு இறைவன்.
சோதனை என்றுதான் நினைத்துக் கொள்ள வேண்டும்.

ஆனாலும் ஐயோ இவ்வளவு கஷ்டங்களா!! என்று மனமுவந்து பின் உட்கார்ந்து விட்டால் இறைவனும் இவந்தன் வீண்!! இவந்தனுக்கு என்ன செய்வது?? செய்தாலும் பிரயோஜனம் இல்லை என்று சென்றுவிடுவான்.
இதுதான் மெய்யப்பா!!!

அதனால் ஒருவன் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் இறைவா!!! இறைவா!!! என்று நினைத்தாலே நிச்சயம் இக்கலியுகத்தில் இறைவன் காட்சி தருவான்!!! காட்சி தருவான்!!!.... யாங்களே அழைத்துச் செல்வோம் இறைவனிடத்தில்...

பக்தியை கடைபிடியுங்கள்!!!

பக்தியை கடைப்பிடித்தால் ஒழுக்கங்கள் நிறையும்!!!

ஒழுக்கங்கள் நிறைந்தால் குடும்பங்கள் செழிப்புகள் அடையும்.

குடும்பங்கள் செழித்தால்.. இவ் நாட்டில் உள்ள அனைத்தும் மாறும்.

முதலில் குழந்தைகளுக்கு கற்றுத் தாருங்கள் ஒழுக்கங்களை...!!! 

இதையன்றி கூற இவை ஆனாலும் பின் அவ் ஒழுக்கங்கள் கற்றுக் கொடுக்கவில்லை என்றால்  உந்தனை நிச்சயம் ஒழுக்கம் இல்லாமல் அக்குழந்தைகள் உன்னையே அழித்துவிடும்.

உங்களை முதலில் நீங்கள் நம்புங்கள் அப்பொழுது தெரியும் இறைவன். இறைவனைப் பிரார்த்தியுங்கள்... நல் முறையாகவே!!


நல் முறையாகவே பிரார்த்தித்தே வந்தால் நிச்சயம் இறைவனே வருவான் நிச்சயம் இக்கலியுகத்தில்...

நம்தனை இயக்குபவர்கள் இறைவன் என்றால் ஆனாலும் இதை தன் உணர உணர நிச்சயம்..



 ஓர் பிள்ளையை இயக்குபவன் தாய். இயக்குபவன் தன் தந்தை அதற்கும் மேலாக இயக்குபவன் தெரியும் தெரிந்து கொள்ளுங்கள் இதையென்றெல்லாம்...

தன்னை அறிந்து கொள்க!!! என்றெல்லாம் யாங்கள் பல வாக்குகளிலும் செப்பி விட்டோம்...

தன்னை அறியாதவாறு ஒன்றும் நடக்கப்போவதில்லை!!!

நடக்கப்போவதில்லை அப்படி நடந்து விட்டாலும் அதை எளிதில் இறைவன் பறித்துக் கொள்வான்...

இதனால்தான் சொல்கின்றேன்.... பக்தி என்ற பாதையை அனைத்து நலன்களையும் கொடுக்கும். கொடுக்கும்!!!

-22/4/2022 அன்று காகபுஜண்டர் ரிஷி உரைத்த பொது வாக்கு 

கீதை(பகவத்கீதை) ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டும்... எதை?? இன்னும் ராமாயணத்தையும் கூட எவையெவை என்று கூற ஒவ்வொரு இடத்திலும் இருக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் அதற்கு பூஜைகள் செய்ய இவையன்றி கூற இன்னும் வாசகம் ,திருவாசகத்தை எவையென்று கூற இன்னும் இன்னும் பல பல விதமான பாகவதம் எதையன்றி கூற இன்னும் பல பல நூல்கள் காணப்படுகின்றது இதனையெல்லாம் இல்லத்தில் அமைத்து பின் இதனையும் ஏதாவது மனதில் தோன்றியவாறு ஒரு பாடலையாவது அனுதினமும் படித்தாலே போதுமானது இறை பலங்கள் அதிகமாக காணப்படும்.

என் குருநாதனை ( அகத்திய மஹரிஷி) வணங்குவோருக்கு நிச்சயமாய் பிறவிகளே இல்லையப்பா!!! பிறவிகளே இல்லையப்பா!!!

யான் ஆணித்தரமாக கூறி விடுகின்றேன்.

-22/4/2022 அன்று புலஸ்தியர் பெருமான் உரைத்த பொது வாக்கு 

இவற்றை உணர்ந்தாலே அப்பனே கோபங்களும் வளராது அப்பனே காமங்களும் வளராது அப்பனே.

இதையென்று கூற அப்பனே என்றுமே எதையுமே வளராது என்பேன் அப்பனே.

அப்பனே பல சித்தர்களும் சொல்லிக் கொண்டே இருக்கின்றார்கள்.எதையன்றி கூற அப்பனே நல் முறையாக நல் மனதாக அன்பை மட்டும் செலுத்தினாலே யாங்கள் வருவோம் வருவோம் என்றெல்லாம்.

அப்பனே கஷ்டங்கள் பட்டு பட்டு அப்பனே ஆனாலும் இதையன்றி கூற இவ்வாறு இறைவனுக்கே சேவை அன்பாக மூலம் இயற்றினால் அப்பனே!!! இறைவனே வந்து ஆட்கொண்டு அப்பனே எளிதில் முடித்து விடுவான். அதுவும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது இக்கலியுகத்தில் அப்பனே.!!!

கலியுகத்தில் அப்பனே எதையென்று கூற முன்னேற்ற பாதையில் செல்லலாம்.அப்பனே. இறைவனை வைத்தே செல்லலாம் என்பேன். மற்றவைகள் வீண்!! அப்பனே.

அன்பே அன்பின் வழியாகத்தான் இறைவனை காண முடியும்.அவ் அன்பின் வழியாய் அனைத்தும் நிறைவேற்றுவான் அப்பனே எதையென்று கூற ...

அதனால் அப்பனே.... எதற்கும் ஆசைப்படாமல் அப்பனே எவை எவையென்று கூற அப்பனே மூலனும் சொன்னான் அப்பனே

எதன் மீது பற்று வைக்க?? பற்றே வைக்க வேண்டாமே.... துறந்து விடு அனைத்தும் கூட.. நிச்சயம் ஈசன் வந்து அழைத்துச் செல்வான் கையோடு...

அன்பே அன்பின் வழியாகத்தான் இறைவனை காண முடியும்.அவ் அன்பின் வழியாய் அனைத்தும் நிறைவேற்றுவான் அப்பனே எதையென்று கூற ...

அதனால் அப்பனே.... எதற்கும் ஆசைப்படாமல் அப்பனே எவை எவையென்று கூற அப்பனே மூலனும் சொன்னான் அப்பனே

எதன் மீது பற்று வைக்க?? பற்றே வைக்க வேண்டாமே.... துறந்து விடு அனைத்தும் கூட.. நிச்சயம் ஈசன் வந்து அழைத்துச் செல்வான் கையோடு...

பொறாமை பட்டால் யான் எதையும் செய்ய மாட்டேன்.!!!!! சொல்லிவிட்டேன் அப்பனே..கனிவாக.

அப்பனே !!!அன்போடு ஒன்றிணைந்து இணைந்து வாழுங்கள்!!! ஒற்றுமையாகவே.

அப்பனே """ஒற்றுமையே வலிமை!!!!! என்பதைக்கூட அனைவருக்குமே தெரியும் அப்பனே. இவ்வாறு இருந்தால் தான் மனிதன் இனிமேலும் காத்துக்கொள்ள முடியும் அப்பனே.

தர்மம் !!!தர்மம்!!! உயர்ந்து நிற்க வேண்டும்.

என் வழியில் வந்தவர்கள் அப்பனே பொறாமைகள் படக்கூடாது அப்பனே!!!

 """தான் !! என்ற அகங்காரம் வந்துவிடக்கூடாது.....அப்பனே!!!!

அனைத்தும் இறைவன் செயல் என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்.

அப்பனே தன்னைப்போல அப்பனே பிறரையும் எண்ணும் எண்ணம் வேண்டும்.

அப்பனே அப்படி எண்ணி முடித்தால் கருணை வேண்டும். அக் கருணை தான் இறைவன் அப்பனே.

அவை வந்துவிட்டால் அப்பனே அனைத்தும் கற்றுக் கொடுப்பான் இறைவன் என்பேன் நேரடியாகவே வந்து. அழைத்துக் கொள்வான் அப்பனே தம்தன் இல்லங்களுக்கு.!!! அப்பனே.

அப்பனே அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
அப்பனே இவையன்றி கூற திருத்தலங்கள்!!! திருத்தலங்கள்!!! என்றெல்லாம்.

ஆனால் அப்பனே அவையெல்லாம் யான் சொல்வேன்....இறைவனின் இல்லங்களே என்று கூட.

ஆனாலும் அதற்கு தகுதி படைத்தவர்கள் தான் தன் இல்லத்திற்கும் இறைவன் அழைப்பான் சொல்லிவிட்டேன் அப்பனே.

பின் தகுதி இல்லாதவர்களுக்கு அப்பனே நீங்கள் முயன்றாலும் அங்கே நிச்சயம் செல்ல இயலாது என்பேன்.

அதனால் யான் """திருத்தலங்களை இல்லம்!!!! என்றே குறிப்பிடுவேன் சொல்லிவிட்டேன் அப்பனே.

அப்பனே உண்மைப் பொருளை உணர்க...!!!!

அப்பனே எதையன்றி கூற அதனால் இவையென்றும் எதனையென்றும் கூற அப்பனே சொல்கின்றேன் அப்பனே.

அப்பனே!!! ஓர் செல்வந்தன் எதையன்றி கூற ஓர் இல்லத்தை அமைக்கின்றான் ஆனாலும் அப்பனே சாதாரண மனிதன் எதையன்றி கூற  அவ் இல்லத்திற்கு சென்றடைய முடியுமா ?? 

அப்பனே !!!ஆனாலும் அப்பனே !!

அவந்தன் நல்லோன்,!!! பக்தன்!!! எதையன்றி கூற பின் எவையன்றி கூற செல்வந்தனுக்கு புரியும் அப்பனே.

நல் விதமாக இவந்தன் என்று கூட... அதனால் அழைப்பான் என்பேன் அப்பனே.

அதுபோலத்தான் அப்பனே!!!  நல் மனதாக......

 பிறரைக் கெடுக்கும் மனம் வேண்டாம் அப்பனே.

பொய் சொல்லாமை வேண்டும் !!அப்பனே.

எதையென்று கூற.... """பிற உயிர் கொல்லாமை.!!!!!

ஏற்க வேண்டும் அப்பனே ஐந்தறிவு உள்ள ஜீவராசிகளை தன் போல ,தன் போலவே பார்க்க வேண்டும் .!!!!

இப்படி இருந்தால் """இறைவன் பின் ""ராஜா அலங்காரத்தோடு"""" தன் இல்லத்திற்கு அழைப்பான் என்று சொல்லிவிட்டேன்.

அப்பனே இதுதான் விஷயமப்பா. மற்றவையெல்லாம் திருத்தலங்களுக்கு சென்றாலும் ஒன்றும் ஆகப் போவதில்லை.

அப்பனே  !!! உங்களை அழைக்க வேண்டும் இறைவனே!!!!!

அன்புடன்!!! வாப்பா..!!!! என்று கூட.

அப்பனே அதனால் அப்பனே!!! இவையெல்லாம் செய்யாவிடில் நிச்சயமாய் இறைவனின் இல்லத்திற்குச் செல்ல ஆகாது என்பேன்.

அப்பனே !!!இல்லம் !!திருத்தலம்!! என்று குறிப்பிட்டு விட்டேன்.

அப்பனே நலமாக!! நலமாக !!அப்பனே இன்னொன்றையும் சொல்கின்றேன் அப்பனே

பிறப்புக்கள் இல்லையப்பா.. எங்களை நம்பியவர்களுக்கு நிச்சயம் யான், யாங்களே அகற்றுவோம்.

அப்பனே !! மற்றவருக்காக உழை!!!!!

உந்தனுக்காக இறைவன் உழைப்பான்.!!!!

அப்பனே!!! இதுதான்ப்பா!!! உண்மையப்பா!!!! மெய்யப்பா!!!!!

இறைவன் பக்தி எப்பொழுதும் அழியாது என்பேன்.

இறை பக்தி இருந்தால் அப்பனே அனைத்தும் தேடிவரும்.

அப்பனே சிந்தித்து வாழ வேண்டும் அப்பனே.......

மனிதனுக்கும் இறைவன் பலமாக அறிவுகள் கொடுத்துவிட்டான். இதனால் அப்பனே அவ் அறிவை சரியாக பயன்படுத்தினால் மட்டுமே வாழ்க்கையில் விடிவெள்ளி!!!!! உண்டு என்பேன் அப்பனே.

இன்னும் பல சூட்சமங்கள் ரகசியங்களோடு பல வாக்குகளும் செப்புவார்கள் என்பேன் சித்தர்கள்.

அப்பனே நலமாகும்!!!! என்னுடைய ஆசிகள் அனைவருக்கும் கூட....

-23/4/2022 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு

அப்பனே மனதும் மனதை பக்குவப் படுத்தினால் மட்டுமே அப்பனே உயர்ந்து கொள்ள முடியும் அதனால் மனதை பக்குவப்படுத்திக் கொண்டீர்கள் என்றால் இனிமேலும் சித்தர்கள் ஒவ்வொருவருக்கும் அப்பனே இப்படி செய்!! அப்படி செய் !! என சில சில உபதேசங்களும் உரைப்பார்கள் .அதன்படியே நடந்து கொண்டால் அப்பனே வாழ்க்கையில் நிச்சயம் தோல்வி என்பது வராது என்பேன் .

அதை விட்டுவிட்டு அப்பனே எவை என்று கூற மனிதன் அதைச் சொன்னான் இதைச் சொன்னான் என்றெல்லாம் போய் திரிந்து கொண்டு இருந்தால்!!! அப்பனே உன் வாழ்க்கையும் அழிந்துவிடும் அவன்தான் பிழைத்துக் கொள்வான் சொல்லிவிட்டேன்.

ஆனால் அவனையும் யாங்கள் பார்த்துக் கொள்வோம் அப்பனே. எதையென்று கூற வீணான வார்த்தைகளை கூறி கூறி உசுப்பேத்துவார்கள் அப்பனே. அதனால் என்பதால் அப்பனே தான் வாழ்வதற்கே என்று சொல்வேன் அப்பனே.

அவையெல்லாம் விட்டுவிடுங்கள் அப்பனே.

மறைமுக பொருளை பிடித்துக் கொள்ளுங்கள், பிடித்துக் கொள்ளுங்கள் அப்பனே!! என்றென்றும் கடை நாளும் யான் துணையிருப்பேன் நிச்சயம் அப்பனே.

என்னுடைய பக்தன் அப்பனே  நிச்சயம் பொய் கூற மாட்டான் அப்பனே.

இதைச் செய் அதைச் செய் என்றெல்லாம் சொல்ல மாட்டான்.

அகத்தியனை பிடித்துக்கொள் என்று தான் சொல்வான். சொல்லிவிட்டேன்.

விதியை!! எம்மால் மாற்ற முடியும்!! மாற்ற முடியும்!! நிச்சயமாக அப்பனே. பலவாக்குகளிலும் சொல்லிவிட்டேன். அதனால் அப்பனே நீங்கள் சரியாக, ஒழுக்க சீலர்களாக!!நல்லோர்களாக!! புத்திமான்களாக!! அறிவாளியாக அப்பனே பக்திமான்களாகவே இருந்துவிட்டால் நிச்சயம் யான் இறங்கி நிச்சயம் அப்பனே விதியையும் மாற்றுவேன்.

அப்பனே """விதியையும் மாற்றும் சக்தி""", யான் பெருமையாகவே கூறுவேன்!!!    """"அகத்தியனுக்கு மட்டுமே""""  என்றுகூட.....

அப்பனே எதையன்றி கூற அதனால் அப்பனே அலைவதை விட்டுவிடுங்கள் அப்பனே.

வரும் வரும் காலங்களில் அப்பனே வாயில்லா ஜீவராசிகளுக்கு நிச்சயம் உணவளியுங்கள். பாசத்தை காட்டுங்கள்.

அப்பனே இவையென்று கூற இதுவே முதல் பாடமாகும் அப்பனே...இதை செய்யாதவர்களுக்கு எவையென்று கூற அப்பனே....

முதல் பாடத்திலேயே தேர்ச்சி பெறவில்லையென்றால்?... அப்பனே எவ்வாறு?? அனைத்தும் கிடைக்கும் என்பதை கூட....

அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் நீ இறைவனிடத்திலேயே போய்ச் சென்றாலும்!!! ஒன்றும் நடக்கப்போவதில்லை.

அதனால் அன்பு கருணை அப்பனே பாசம் இவைதன் இருந்தால் மட்டுமே இறைவனை நேரடியாக தரிசிக்க முடியும்.

அப்பனே!!! கருணையுள்ள மனதில் இறைவன் குடி கொள்கின்றான்.அப்பனே....

அவ் கருணை வருவதற்கும் அப்பனே எதையென்று கூற நிச்சயம் நல்லோர்கள் அப்பனே இவையிவை என்று சொல்ல அப்பனே கருணை உள்ள மனதில் இறைவனே குடி கொள்கிறான் அப்பனே...

அவை விட்டுவிட்டு அப்பனே  அதைச் செய்!!! இதைச் செய்!!! அப்பனே என்றெல்லாம் கூறிக் கொண்டே இருந்தால் அப்பனே ஆகாது. ஒன்றுமில்லாமல் ஆகிவிடுவான் என்பேன் அப்பனே.

முதல் வகுப்பில் நீங்கள் தேர்ச்சி பெற வேண்டுமானால் அப்பனே முதலில் வாயில்லா ஜீவராசிகளிடம் கருணை கொள்ளவேண்டும் என்பேன் அப்பனே.

கருணை பொங்கும் இல்லத்திலே.... கருணை தான் எதையன்றி கூற இல்லம்...அவ் கருணையோடு மனதில் அப்பனே இருந்தாலே இறைவன் அழகாகவே குடிகொள்வான்.

இவையன்றி கூற எவையென்று கூற அப்பனே அதனால் உன்னுள்ளே இறைவனைத் தேடு!!! உன்னுள்ளே இறைவனைத் தேடு!!!

பிறருக்காக வாழ வேண்டுமென்று குறிக்கோளோடு வாழுங்கள் அப்பனே... அப்பொழுது யாங்களே உங்களுக்கு அனைத்தும் கொடுப்போம் அப்பனே.

உண்மையான பொருளை இறைவனை அப்பனே அதை... நன்று பற்றிக்கொண்டாலே இறைவன் பல வகையிலும் பல ரூபத்திலும் வந்து கற்றுக் கொடுப்பான் அப்பனே.

இவையன்றி கூற அப்பனே யான் சொல்லிக் கொண்டே வருகின்றேன்.

மூலனின்(திருமூலர்) வாக்கை ஒவ்வொரு விதமாக ஒவ்வொரு நாளும் படியுங்கள் அப்பனே!!! தெளிவுகள் பெறுவீர்கள் அப்பனே.

பஞ்சபாண்டவர்களுக்கு அப்பனே ஈசன் நல்விதமாகவே காட்சியளித்தான் என்றால்...பல கஷ்டங்களை அவர்களும் பட்டார்கள் அதனால் ஈசனே எதையென்று கூற....ஈசனே !!!ஈசனே!!! எவையென்று கூற... அந்த அளவிற்கு அவர்களின் பக்தி , அன்பு, கருணை இவையெல்லாம் நன்றியோடு இருந்தார்கள் அப்பனே.

அவர்களும் வந்த வழிகளிலெல்லாம் சென்ற வழிகளிலெல்லாம் அப்பனே ஐந்தறிவு உள்ள ஜீவராசிகளுக்கு அப்பனே பலவழிகளிலும் உதவிகள் செய்தார்கள்.

அதனால்தான் அப்பனே ஈசனே!!!! இரங்கினான்.

இப்பொழுது புரிகின்றதா?!! அப்பனே...

ஆனாலும் கஷ்டங்கள் ஒன்றும் செய்யவில்லை அவர்களிடத்தில்.... ஈசனே அழைத்துக் கொண்டான் இப்பொழுது கூட  ஈசனிடத்திலே இருக்கின்றார்கள்.

-24/4/2022 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு.

பக்தி நீங்கள் செலுத்துகின்றீர்கள் ஆனால்... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வினை!!! ஏன்?? 

உண்மையான பக்தியை செலுத்தினால் ஆனாலும் நிச்சயம்  கருணை மிகுந்த என் ஈசன் உன்னை அணைத்துக் கொள்வான் உன் இல்லத்திற்கே வருவான் யானும் உன் இல்லத்திற்கே வருவேன்...... வருவான் என் மைந்தன் அகத்தியன் கூட...

ஒன்றை சொல்கின்றேன்!!! சித்தர்களை, சித்தர்களை நம்பினோர்கள்.. ஆனாலும் சித்தர்கள் நிச்சயம் பல பரீட்சைகளை மேற்கொண்டு தோல்விகளை தோல்விகளை ஏற்படுத்தி நிச்சயம்  ஓர் நாள் அழிவில்லாத வாழ்க்கையை ஏற்படுத்துவார்கள்.

ஆனால் என் மணாளன் ஈசனோ!!! அப்படி இல்லை!!! உடனே கொடுத்து விடுவான்.

ஆனால் நிச்சயம் அதற்கு தகுந்தாற்போல் நீ நடந்து கொள்ளவில்லையென்றால் பறித்துவிடுவார். இதுதான் மெய். 


ஆனாலும் பல சோதனைகள் உண்டு மனிதனுக்கு வரும் காலங்களில்.

அவற்றையெல்லாம் எப்படித் தேற்றிக் கொள்வது என்றால்... சொல்லி விடுகின்றேன்....

நிச்சயம் வாயில்லா ஜீவராசிகளை நீங்கள் நிச்சயம் பார்க்க வேண்டும் திரும்பவும் , திரும்பவும் யானும் இதைத்தான் செப்புவேன்... தன்னைப் போல பிறரை எண்ணும் குணம் இருந்தால் என் மணாளன் அவ் உள்ளத்தில் அழகாக அமர்ந்திருப்பான்.

மனிதன் இப்படி இருக்க!!! எவ்வாறு ??கஷ்டங்களை நீங்கள் கடந்து வர....??

கடந்து வரவேண்டும் என்றால் நிச்சயம் பக்திகள்!! அன்புகள்!!கருணைகள்!! நீங்கள் செலுத்த வேண்டும்.

அப்படி இல்லை என்றால் நிச்சயம் ஒன்றும் செய்ய இயலாது மனிதனை.

தான் எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேற்றும் என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள். ஆனால் நிச்சயம் என் மணாளன் நிச்சயம் பின் மனம் பின் மனம் வந்துவிட்டாலே கொடுப்பான் எதனையும்.

முதலில் நல்லதை நினையுங்கள்!!! நல்லதை செய்யுங்கள்!!!! நல்ல படியாகவே அனைத்தும் முடியும். முடியும் என்பது எனது வாக்கு!!!!

உண்மையாக இரு!!!! உண்மையாகவே அன்பைச் செலுத்து.. ஒரு குறையும் வராது....

""உன்  அன்னையவளாகவே இருந்து யான் நிச்சயம் காப்பேன்!!!! அனைத்தையும் கொடுப்பேன்.!!!

இவையறிந்து கூற இவை அறிந்து கூட அதனால் இவ்வுலகத்தில் ஒன்றுமில்லை.!! ஒன்றுமில்லை !!!

உன்னால், இறைவனுக்கு எதை கொடுக்க முடிகின்றதோ..!?. அவ்வாறு கொடு!!!! இறைவன் உந்தனை நிச்சயம் காசுகள் கேட்கவில்லை!!! அன்பைத்தான் கேட்கின்றான்!!! அதை நீ முதலில் கொடு!!! அதை கொடுத்தாலே நிச்சயம் மனமிரங்கிசெல்வான். 

என் ஈசன் கடுமையாக எச்சரித்து விட்டான்!!!

கிரகங்களே!!!!!  இவையன்றி கூற நிச்சயமாய் இவ்வுலகத்தில் உண்மையை  பின் பேசுபவர்களுக்கு நீங்கள் ஒரு தீங்கும் செய்யக் கூடாது.

அப்படி புறம்பாகச் செய்தால் அவர்களுக்கு அங்கேயே தண்டனைகள் கொடுங்கள் நிச்சயமாய்  ஏற்படுத்துங்கள் என்றுகூட.

ஆனால் இதில் சனிதேவனோ முந்திக் கொண்டான்..... யான் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றேன்....

அதனிடையில் ராகுவும் முந்திக் கொண்டான்... கேதுவும் முந்திக்கொண்டான்... யாங்கள் நிச்சயம் கஷ்டத்தை மனிதருக்கு அள்ளித் தருவோம் . ஆனாலும் உண்மையாக இருந்தால் அவ் கஷ்டத்தையும் கூட பின் பேரின்பமாக மாற்றுவோம்!!! உன்னிடத்தில் (ஈசனிடத்தில்) சேர்ப்பதற்கான வழிகள் செய்வோம்.

அதனால் இதில் கூட சனியோ!! ராகுவோ!!! கேதுவோ!!!! இவர்கள் நிச்சயம் ஒரு சாதகத்தில் வந்தால் அவர்கள் கணக்கை எப்படி என்று கூட தெரியாமல் தெரியாமல் கர்மத்தை கழித்து விடுவார்கள்... 

ஆனால் அவ் கர்மத்தை போக்க.... பல பரிகாரங்களாம்!?

முட்டாள் மனிதர்களே!!!!! சிந்தித்துக் கொள்ளுங்கள்!!!!

சனி!! ராகு!! கேது!! இவர்களுக்கு பலம் எப்பொழுதும் அதிகமாக கொடுத்துவிட்டான். என் மனதில் உள்ள ஈசனே!!!

அதனால் அவர்கள் வந்தடைந்தால்(சாதகத்தில்) மனிதர்கள் எப் பரிகாரம் செய்தாலும் நிச்சயம் பலிக்காது.... 

மனிதனே!! உண்மையான ஞானியாக,  எதை அறிந்து கூட உண்மையான பக்தனாக இருந்துவிடு!!!

"நமச்சிவாயா"" என்று என் மணாளனை அழைத்துக் கொண்டே இரு!!! பக்தியோடு!!!.

நிச்சயம் என் மணாளன் எதையும் கேட்கவில்லை... அன்பு தானே கேட்கின்றான்!!!

அதைக் கூட உங்களால் அளிக்க முடியவில்லை!!!

பின்  எப்படி இறைவன் காப்பாற்றுவான்??? எப்படி சித்தர்கள் காப்பாற்றுவார்கள்???

இதை உணர்ந்து ஆனாலும்...இதை எதை என்று தெரியாமலே... ஆனால் கிரகங்கள் பிடிக்கும் பொழுது ஒருவன் சந்நியாசியாக மலையின் மீது போய் அமர்ந்து விட்டால் கிரகங்கள் நிச்சயம் ஒன்றும் செய்யாது.

ஆனாலும் அதற்கும் பந்த பாசங்களில் ஈடுபடக்கூடாது..!!

நிச்சயமாய் தவத்தை மேற்கொண்டால்....எந்தனுக்கு எதுவும் தேவையில்லை!! ஈசனே கதி என்று இருந்தால் கிரகங்கள் நிச்சயம் வேலை செய்யாது.

அதில் கூட ஆணவம் எல்லாம் வந்து விடக்கூடாது!!கூடாது இதனால்தான் பல ரிஷிகளும் பல ஞானியர் களும் எதை என்று கூறாமலே... நிச்சயம் கஷ்டங்கள் வரும் பொழுது அமைதியாக பல மலைகள் மீதும் காடுகள் மீதும் தவங்களை மேற்கொண்டனர்.

இதனால்(கிரகங்களின்) தாக்கம் குறைந்து விட்டது. ஆனால் எளிதில் கூட... அதனால் நினைத்ததை எளிதில் நடத்தி விடலாம்.

நிச்சயம் கிரகங்கள் கொடுக்கும் கஷ்டங்களை மனிதனால் தடுக்க இயலாது!!

அப்படி தடுத்து விட்டாலும் இரு மடங்கு வந்துவிடும். தெரிந்து கொள்ளுங்கள்.

பக்தி!! பக்தி என்பது மனதில் தான் இருக்க வேண்டும் திரும்பவும் சொல்கின்றேன். யான் பக்தியானவன்!!! யான் பற்றுள்ளவன் என்றெல்லாம் சொல்பவன் நீங்களே தெரிந்து கொள்ளுங்கள் ஒரு பழமொழியை திரும்பவும் சொல்கின்றேன்.... நிறைகுடம் எப்பொழுதும் தளும்பாது என்பதைக் கூட... முன்னோர்கள் வகுத்தது!!! இதை இதனை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்.

ஞானியானவன் நிச்சயம் அனைத்தும் தெரிந்தவன் யாரிடமும் பேச மாட்டான்!! அமைதியாக இருப்பான் அனைத்தும் நடக்கும் என்று சொல்லிவிடுவான்.

உண்மையான படைப்பை படைத்தவனை நம்பு!!!! இவையன்றி கூற இதையென்றும் ஆனால் படைத்ததை எப்பொழுதும் நம்ப வேண்டாம்!!!

நிச்சயம் குருவாக பின் சித்தர்களை தொழுங்கள்..அவனே அனைத்தும் என்று இருங்கள் நிச்சயமாய் பல சித்தர்களும் செப்பி விட்டார்கள்.... மனிதனை நம்பிவிடாதே!!!! மனிதனை நம்பிவிடாதே !!!எளிதில் என்றுகூட!!!!!

ஒருவன் நிச்சயமாய் மனிதர்களுக்கு நாம்தம் நல்லதையே செய்வோம். நிச்சயம் நிச்சயம் மனிதர்களுக்காகவே வாழ்வோம்...

இப்படி எல்லாம் இருக்கின்றதே !! இவ்வுலகம் அதை மாற்றுவோம்!!! என்று  எவன் ஒரு மனிதன் எண்ணுகின்றானோ!? அவனைத் தான் சித்தர்கள் தேர்ந்தெடுப்பார்களே தவிர  மற்றவை எல்லாம் வீண்!!!!

நிச்சயம் அன்பை செலுத்தி.. நிச்சயம் அனைத்தும் விட்டு விட்டு !!! நீயே கதி !!!  என்று உண்டு என்று சென்றுவிட்டாலே.... யாங்கள் நிச்சயமாய் அவந்தனுக்கு கற்பிப்போம்.

ஆனால் அதற்கு மனிதனில் கோடியில் ஒருத்தன் தான் தகுதியானவனாக உள்ளான்.

பிறருக்காக உழையுங்கள்!!

எதையென்று கூற எதையும் எதிர்பாராது இருங்கள். உங்கள் கடமையை நீங்கள் சரியாக செய்து வந்தாலே யாங்கள் நிச்சயம் உங்களை பின் கட்டி அணைத்து அனைத்தும் கொடுப்போம்.

பல வாக்குகளை இனியும் சித்தர்கள் செப்புவார்கள்.. ஏனென்றால் மனிதன் சரியான பாதையில் செல்வதற்காக சில வழிகளையும் செப்புவார்கள்.. 

நிச்சயம் யாங்கள் இதையென்று கூற இதனையும் பின் என் மணாளன் எடுத்துச் சொல்வான்.. பல பல மனிதர்களுக்கு.

முதலில் நன்றாக கருணை மிகுந்தவனாக வாழ வேண்டும்.
நற்செயல்கள் செய்ய வேண்டும். என்பதற்காகவே செய்து கொண்டு வந்தாலே போதுமானது!!!

இறைவன் தானாகவே சொல்வான்!!!!


-8/5/2022 அன்று பார்வதி தேவி அம்பாள் உரைத்த பொதுவாக்கு வாக்குரைத்த ஸ்தலம் .காக்கும் சிவன் காசிகங்கை கரை