மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Sunday, May 1, 2022

சித்தர்கள் ஆட்சி - 61 : பள்ளி குழந்தைகளுக்கு திருவாசகம் சிவபுராணம் வகுப்பு

 


       அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடன் உறை அகத்திய மஹரிஷி









 இன்று , மே 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதுரை பசுமலையில் அமைந்துள்ள ஶ்ரீ சக்தி மாரியம்மன் ஆலயத்தில்  பள்ளி குழந்தைகளுக்கு நடந்த திருவாசகம் சிவபுராணம் வகுப்பு நடந்தது. இதன் மூலம் பக்தி எனும் இறை ஒழுக்கம். இதன் தொடர்பாக பின் வரும் காகபுசண்ட மஹரிஷி அளித்த வாக்கு நமக்கு நல்ல விழிப்புணர்வு உண்டாக்கும். 

👇👇👇👇👇👇👇👇

பக்தியை கடைபிடியுங்கள்!!!

பக்தியை கடைப்பிடித்தால் ஒழுக்கங்கள் நிறையும்!!!

ஒழுக்கங்கள் நிறைந்தால் குடும்பங்கள் செழிப்புகள் அடையும்.

குடும்பங்கள் செழித்தால்.. இவ் நாட்டில் உள்ள அனைத்தும் மாறும்.

முதலில் குழந்தைகளுக்கு கற்றுத் தாருங்கள் ஒழுக்கங்களை...!!! 

இதையன்றி கூற இவை ஆனாலும் பின் அவ் ஒழுக்கங்கள் கற்றுக் கொடுக்கவில்லை என்றால்  உந்தனை நிச்சயம் ஒழுக்கம் இல்லாமல் அக்குழந்தைகள் உன்னையே அழித்துவிடும்.

- 22/4/2022 அன்று காகபுஜண்டர் ரிஷி உரைத்த பொது வாக்கு 
(  நாடி உரை மூலம்  https://siththanarul.blogspot.com/2022/05/1127.html) 

🙏🌸🙏🌸🙏🌸🙏🌸🙏

பள்ளி குழந்தைகளுக்கு திருவாசகம் வகுப்பை உங்கள் அருகில் உள்ள ஆலயங்களில் எடுக்க உதவி புரியுங்கள் என உங்கள் முன் மானசீகமாக இந்த செய்தியின் மூலம் மண்டியிட்டு சிரம் தாழ்த்தி இரு கை ஏந்தி வேண்டுகின்றோம். 

திருவாசகம் ஓதும் பெரியோர்களே, உங்கள் ஆதி சிவன் ஞானத்தை பள்ளி குழந்தைகளுக்கு அளித்து அருள் ஆட்சி நடக்க உதவி புரிய வேண்டுகின்றோம்.

இந்த செய்தியை உண்மைப்பொருள் மெய்ப்பொருளை உலகம் உணர, உலகெங்கிலும் உள்ள அனைத்து குழுக்களுக்கும் பகிர வேண்டுகின்றோம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment