மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Monday, March 21, 2022

சித்தர்கள் ஆட்சி - 54 : ஆதி வாலை பரமேஸ்வரி ஜீவ நாடி வாக்கு



 ஆதி வாலை பரமேஸ்வரி ஜீவ நாடி  - 16/2/2020 




(அகத்திய மஹரிஷி அடியவர் ஒருவருக்கு உரைக்கப்பட்ட நாடி வாக்கில் அன்னை தன்னைப்பற்றி உரைத்த பொது வாக்கு.)


நாடி உரை ஆரம்பம்


ஆதி மூல கணநாதனின் அம்சமும் நானே!

ஆறுமுகன் வடிவமாய் இருப்பவள் நானே!

முப்பெரும் தேவராய் வந்ததும் நானே!

முப்பெரும் தேவியின் தோற்றமும் நானே!

நானேதான் ஏதும் இல்லா இடத்திலும் உள்ளேன். நானேதான் இருக்கும் இடம் மறைந்தே உள்ளேன். வந்தவளும், வருபவளும் வரமாகவும் உள்ளேன்.  

வற்றாத அருளாக பரசிவமாக உள்ளேன். 

உள்ளேன் சித்தர்களின் ஆதித்தாயாய் யானும். 

உள்ளேன் நம்புவோரக்கு சேயாய் யானும். பாவையாய், பார்வையாய், பரம்பொருளாய் யானும். 

பாசமுள்ள சேய்களுக்கு அடிமையே யானும். 

யானுமே அழைத்திடாது வரவும் மாட்டேன். யானும் அழைத்தாலும் வந்திடவும் மாட்டேன். 

தான் அதுவான தத்துவத்தை உணர்த்தவும் மாட்டேன். தவமான ஜோதியை மறைக்கவும் மாட்டேன்.  

மாட்டேன் என எது நிலையிலும் உரையேன். மாட்டேன் என எவருக்கும் உரையேன்.  

உலகிலே எல்லோரும் என் சேயே உண்மை. 

உலகிலே பெருமை சிறுமை எனக்கில்லை உண்மை.  

உண்மையான சத்தியத்தை உணர்ந்தவள் நான் மட்டும்.  உண்மையான சத்தியத்தை உரைப்பவளும் நான் மட்டும்.  

நிலமதில் தர்மவழி, நீதி வழி வருபவருக்கு நித்தியத்தை, சத்தியத்தை உரைத்து மகிழ்வேன். 

மகிழ்வேன் நல்ரோரை காணும்கால் யானும். மன்னிப்பேன் திருந்திவரும் மாந்தரை எல்லாம். 

அருளாளர் ஆத்துமாவில் உறைந்திடும் ஓர் சக்தி அன்னை யானே அறிய வேண்டும் உலகிறக்கு சொன்னேன். சொன்னேன் சத்தியத்தை இன்று நாள் யானும். 

தேடித்தேடி பல வாக்கு கேட்டாய். வேலவன் வழி வந்திட்ட சித்தரை எல்லாம் பணிந்தாய். பணிந்தாய் எல்லோரும் ஒன்றுதான் மகனே. பரசிவமே, பாலாவே எல்லாவாவும் இருக்க. அகத்தியன் யார? ஆறுமுகன் யார்? ஆதி சிவன் யார்? அன்னை யார்? அனைத்தும் நானடா அறியவில்லை எவரும். எவரும் உணரந்திடா சத்தியத்தை சொன்னேன். எவரும் உரைத்திடா சத்தியமும் சொன்னேன்.  

என் சேய்கள் யார் என உணரவில்லை நீயும். எனை நினையா ஞானியரை தொழுபவரும் என் சேயே.  அறிவிலே தெளிவு கொள் அகந்தையை வளர்த்துக்கொள். 

அகத்தியனே எல்லாமும் அமைதி கொள் குழந்தாய்.

உத்தமனே நம்பினால் எதையும் தருவோம். தருவோம் அண்டத்தையே ஆட்டிவிக்கும் வித்தை. தரமாட்டோம் நம்பிக்கை இல்லார்க்கு நாங்கள். நானேதான் நாங்களாக உள்ள உண்மை. நானே வந்து சொல்லிவிட்டேன் அறிவாய் , தெளிவாய்.  

 அடிமை இல்லை மகன் நீயும் பிறவிகண்ட எவருக்கும்.  அடிமை நீ நான் நீ என உணராவரைக்கும்.  உணராவரையும் உள் ஒளி பெருகிடாது உனக்கு. 

உனக்குமே பிரம்மாண்டம் அருளாய்த்தெரிந்தால் உண்மை இல்லை சாதாரண நிலை யான் உனக்கு.  

உனக்குமே சாதாணமாய் இருப்பேன் என நினைத்தால் உண்மை இல்லை மாபிரம்மாண்டம் யான் உணர்வாய். 

உணர்வாய் உணரத்துவேன் மகனே உனக்கு. உணர்வால், உணர்ச்சியால் கட்டுடா சக்தி யான். 

சத்தியத்திற்க்கு கட்டுப்பட்ட திருட்டு மாயை யான். சத்திய ஜோதி நானடா அறிந்தவர் எவரும் இல்லை. எவரும் இல்லை எனை காட்ட உந்தனுக்கு உலகில்.  எவரும் இல்லை எனை உணர்த்த உந்தனுக்கு உலகில். 

கடும் தவத்தை இயற்றிடடா அகத்தியன் பேரில். கருணைபட வெளிக்காட்டி மகிழ்வேன் அன்னை. 

அன்னை யானும் அவதாரம் பலவும் எடுத்தேன்.  அருளாளர் வடிவெல்லாம் நானே நானே. 

தனித்து நீ பார்த்து விட்டால் தனித்தே நிற்ப்பேன்.  தானே அனைத்தென உணர ஓர்மையாகிடுவேன். ஓர்மையாகிவிடுவேன் உன்னுள்ளும் யான் அன்றே. 

ஓர் எழுத்து உண்மையும் நானே நானே. ஊமை எழுத்து ரகசியமும் நானே. உலகை ஆளும் அருள் நிலையும் நானே நானே. நானே சத்தியத்தை உரைத்து மகிழந்தேன். 

நானே இட்டமுடன் உன்னுள் வாழ்வேன். யாவருக்கும் அடிமை இல்லா வாழ்வாய் வாழ்வாய்.  யாவரில் எனையும் சேர்த்தே சொன்னேன் உனக்கு. உனக்குமே பட்ட கல்வி, பயின்ற கல்வி , பயிலும் கல்வி உலகிலே எனையன்றும் உணரத்திடாது. 

நான் விரும்பா, எனை அறியார் எவரும் உலகில் நானே நீயாய் உள்ளதை அறிவாய்.

-அருள் ஆசி முற்றே-

-சுபம்-