மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Monday, March 21, 2022

சித்தர்கள் ஆட்சி - 53 : திருவாசகம் - 04 - போற்றித் திருஅகவல்

 






திருச்சிற்றம்பலம்

ஆதி கணபதி பாதம் காப்பு
ஆதி அம்மை அப்பன் பாதம் காப்பு
ஆதி வாலை தாய் பாதம் காப்பு
வள்ளி தெய்வானையோடு அன்பாக அமர்ந்திட்ட ஐயன் அழகன் பாதம் காப்பு
குருநாதன் பொதிகை வேந்தன் அகத்திய மஹரிஷி பாதம் காப்பு
மாணிக்கவாசப்பெருமான் பாதம் காப்பு
சிறப்புப் பாயிரம்
தொல்லை இரும்பிறவிச் சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே - எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்
திருவாசகம் - 04 - போற்றித் திருஅகவல்பதவுரைபொருளுரை
1- 10 ஆதி சிவபெருமானின் மலர் அடி இணையின் அருமையும் எளிமையும் - ஆதி சிவனைப் போற்றுதல், வாழ்த்துதல்
நான்முகன் முதலா வானவர் தொழுது எழநான்முகன் = படைக்கும் கடவுள் பிரமதேவர்

தொழுது எழ = வணங்கி எழுந்து நிற்க
நான்கு முகங்களை உடைய பிரம்ம தேவர் போன்ற வானத்து தேவர்கள் வணங்கி எழுந்து நிற்க
ஈர் அடியாலே மூவுலகு அளந்துஈர் அடியாலே = வாமன அவதாரமான திருமால் தனது இரண்டு திருவடிகளாலேயே

மூவுலகு அளந்து = மூன்று உலகங்களையும் ( மண் , விண் , காற்று ) அளந்து
வாமன அவதாரமான திருமால் தனது இரண்டு திருவடிகளாலேயே மூன்று உலகங்களையும் ( மண் , விண் , காற்று ) அளந்து
நால் திசை முனிவரும் ஐம்புலன் மலரப்நால் திசை முனிவரும் = இந்த உலகில் உள்ள நான்கு திசைகளில் உள்ள அனைத்து முனிவர்களும்

ஐம்புலன் மலரப் = தங்கள் ஐந்து புலன்களால் ஒரு பூ மலர்வது போல மகிழ்ந்து
இந்த உலகில் உள்ள நான்கு திசைகளில் உள்ள அனைத்து முனிவர்களும் தங்கள் ஐந்து புலன்களால் ஒரு பூ மலர்வது போல மகிழ்ந்து
போற்றி செய் கதிர்முடித் திருநெடுமால் அன்றுபோற்றி செய் = வணங்குதல் செய்யப் பெற்ற

கதிர்முடித் = ஒளி உடைய திருமுடியை உடைய

திருநெடுமால் அன்று = அழகிய திருமால் அந்தநாளில்
வணங்குதல் செய்யப் பெற்ற ஒளி உடைய திருமுடியை உடைய அழகிய திருமால் அந்தநாளில்
அடிமுடி அறியும் ஆதரவு அதனில்அடி = ஆதி ஈசனின் திருவடி

முடி = முடிவு

அறியும் = அறிய வேண்டும்

ஆதரவு அதனில் = விருப்பத்தால்
ஆதி ஈசனின் அனலான பிழம்பின் திருவடி அதனின் முடிவை அறிய வேண்டும் என்ற விருப்பத்தால்
கடும் முரண் ஏனம் ஆகிமுன் கலந்துகடும் முரண் = மிக்க வலிமை உடைய

ஏனம் = பன்றி ( வராகம் )

முன் கலந்து = ( வாமனன் உருவத்தில் மூன்று உலகங்களையும் அளந்தவன். எனவே ஆதி ஈசனின் திருவடி முடிவை அறிதல் எளிய செயல். நான்முகன் பிரம்மனோ அது போல மூன்று உலகங்களையும் அளந்து பயிற்சி ஏதும் எடுக்கவில்லை. எனவே திருமால் ஆகிய நான் வெல்வது உறுதி என்று எண்ணி ) முற்பட்டு பூமியில் புகுந்து
மிக்க வலிமை உடைய பன்றி ( வராகம் ) ஆகி உருவம் கொண்டு முற்பட்டு பூமியில் புகுந்து
ஏழ்தலம் உருவ இடந்து பின் எய்த்துஏழ்தலம் = பூமிக்கு கீழ் உள்ள ஏழு உலகங்கள் ( அதலம், விதலம், சுதலம், தராதலம், மகாதலம், இரசாதலம், பாதாலம் )

உருவ = ஊடுருவுதல்

இடந்து = பிளந்து

எய்த்து = ஏழு உலகங்கள் சென்றபின்பும் ஆதி ஈசன் திருவடி முடிவினை காணாமல் அதற்கு மேலும் கீழே செல்ல இயலாமல் களைப்படைந்து
பூமிக்கு கீழ் உள்ள ஏழு உலகங்களை ஊடுருவி அதனை பிளந்து அதன் பின் ஏழு உலகங்கள் சென்றபின்பும் ஆதி ஈசன் திருவடி முடிவினை காணாமல் பின்னே அதற்கு மேலும் கீழே செல்ல இயலாமல் களைப்படைந்து
"ஊழி முதல்வ" ! சயசய ! என்றுஊழி முதல்வ = பேரழிவான ஊழி காலத்தை நடத்தும் முதல்வனே , ஆதி ஈசனே

சய = வெற்றி

சயசய என்று = வெல்க வெல்க என்று
பேரழிவான ஊழி காலத்தை நடத்தும் முதல்வனே , ஆதி ஈசனே உந்தன் திருவடி வெல்க வெல்க என்று
வழுத்தியும் காணா மலர்அடி இணைகள்வழுத்துதல் = பரவுதல் , துதித்தல்

காணா = காண இயலாத

மலர்அடி இணைகள் = தாமரை மலர் போன்ற திருவடிகள்
ஆதி ஈசனை துதித்தும் காண இயலாத தாமரை மலர் போன்ற திருவடிகள்
வழுத்துதற்கு எளிதாய் வார் கடல் உலகினில் 10வழுத்துதற்கு எளிதாய் = துதிப்பதற்கு எளிதாய்

எளிதாய் வார் கடல் உலகினில் = ஏழு வகை சமுத்திரம் சூழ்ந்த உலகினில்
எம் ( திருமால் ) போன்றவர்கள் துதிப்பதற்கு எளிதாய் , ஏழு வகை சமுத்திரம் சூழ்ந்த உலகினில்
11 - 25 ஆதி சிவன் அருளால் பிறவியின் அருமையும் , கருவில் இருந்து பிறக்கும் வரை உள்ள துன்பங்களில் இருந்து தப்பி பிழைத்தலும்
யானை முதலா எறும்பு ஈறாயயானை முதலா = இந்த உலகத்தில் மிகப்பெரிய உயிரினமான யானை முதலாக

எறும்பு ஈறாய = இந்த உலகத்தில் மிகச்சிறிய உயிரினமான எறும்பு வரையிலாக
மிகப்பெரிய உயிரினமான யானை முதல் மிகச்சிறிய உயிரினமான எறும்பு வரையிலாக
ஊனம் இல் யோனியின் உள்வினை பிழைத்தும்யோனி = கருப்பை

ஊனம்இல் யோனியின் = ஊனம் + இல் யோனியின் = கேடு இல்லாத கருப்பையினுள்

உள்வினை பிழைத்தும் = உண்டாகும் உள் வினையில் இருந்து தப்பித்தும்
கேடு இல்லாத கருப்பையினுள் உண்டாகும் உள் வினையில் ( ஆணின் விந்து பல போட்டி போட்டு கடைசியில் தப்பி ஒன்று மட்டும் சுரோணிதத்துடன் கலக்கும் வினை) இருந்து ஆதி ஈசன் கருணையினால் தப்பித்தும்
மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்துமானுடப் பிறப்பினுள் = இந்த மனித பிறப்பினுள்

உதரம் = அடி வயிறு , கருப்பை

மாதா உதரத்து = தாயின் வயிற்றில்
இந்த மனித பிறப்பினுள் தாயின் வயிற்றில்
ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்ஈனம் = ஹீனம் என்னும் வடசொல் ஈனம் என்று ஆனது. குறை என்று பொருள்

ஈனம் இல் = குறை இல்லாத

கிருமி = புழு - தகப்பன் இடம் இருந்து தாய்க்கு செல்லும் வெண்பால் அதில் உள்ள உயிர் அணுக்கள் இங்கு கிருமி என்று உருவகப்படுத்தப்பட்டுள்து

செரு = போர்

கிருமிச் செருவினில் = தந்தையின் வெண்பால் தாயின் கர்ப்பப்பையில் சுக்கிலமாக சென்று பல சிறிய விந்து எனும் புழுக்களாக பரிணமிக்கும். அவை ஒவ்வொன்றும் கருப்பையின் உள்ளே இடம் பெற்றுக்கொள்ள வேண்டி தத்தமுடன் போர் புரியும். இதனை கிருமிச் செரு என்பர்.
குறை இல்லாத தந்தையின் விந்து அணு போரில் ஆதி ஈசன் கருணையினால் தப்பி பிழைத்தும்
ஒரு மதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்ஒரு மதி = முதல் மாதத்தில்

தான்றி = எல்லை

இருமை = மிகுதி
தாயின் வயிற்றில் முதல் மாதத்தில் தந்தையின் வெண்பால் தாயின் செம்பால் உடன் கலந்து முதல் மாதத்தில் ஒரு தான்றிக்காய் அளவில் இருக்கும். அவை இரண்டும் ஒன்று படாமல் வேறுபட்டிருக்குமாயின் கருச்சிதைவு உண்டாகும். அந்த கருச்சிதைவில் ஆதி ஈசன் கருணையினால் பிழைத்தும்
இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்இருமதி = இரண்டாம் மாத

விளைவின் = நிகழ்வின் போது

ஒருமையில் பிழைத்தும் = தாயின் செம்பாலும் தந்தையின் வெண்பாலும் சேர்ந்த பின்னர் பிற சுக்கில அணுக்கள் கருவின் உள் புகுத்தலால் உண்டாகும் கெட்ட வினையில் இருந்து தப்பித்தும்
இரண்டாம் மாத நிகழ்வின் போது தாயின் செம்பாலும் தந்தையின் வெண்பாலும் சேர்ந்த பின்னர் பிற சுக்கில அணுக்கள் கருவின் உள் புகுத்தலால் உண்டாகும் கெட்ட வினையில் இருந்து ஆதி ஈசன் கருணையினால் தப்பித்தும்
மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்மும்மதி தன்னுள் = மூன்றாம் ( சந்திர ) மாதத்தில்

அம்மதம் பிழைத்தும் = கரு வளர்தலின் பொருட்டு கர்ப்பபையில் சுரக்கும் மதநீர் அதிகமாகுதலில் இருந்து தப்பியும்
மூன்றாம் ( சந்திர ) மாதத்தில் கரு வளர்தலின் பொருட்டு கர்ப்பபையில் சுரக்கும் மதநீர் அதிகமாகுதலில் இருந்து ஆதி ஈசன் கருணையினால் தப்பியும்
ஈர் இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும்ஈர் இரு திங்களில் = நான்கு மாதத்தில்

பேர் இருள் பிழைத்தும் = கருப்பையின் உள்ளே உண்டாகும் கொடுமையான இருளில் இருந்து தப்பித்தும்
நான்கு மாதத்தில் கருப்பையின் உள்ளே உண்டாகும் கொடுமையான இருளில் இருந்து ஆதி ஈசன் கருணையினால் தப்பித்தும்
அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்அஞ்சு திங்களில் = ஐந்தாம் மாதத்தில்

முஞ்சுதல் = சாதல் / இறத்தல்

முஞ்சுதல் பிழைத்தும் = கர்ப்பப்பையில் உண்டாக்கிய மதநீரும் அதன் கழிவாகிய கரிய பகுதியும் அதிகமாக அவற்றில் இருந்து சாகாமல் தப்பியும்
ஐந்தாம் மாதத்தில் கர்ப்பப்பையில் உண்டாக்கிய மதநீரும் அதன் கழிவாகிய கரிய பகுதியும் அதிகமாக அவற்றில் இருந்து சாகாமல் ஆதி ஈசன் கருணையினால் தப்பியும்
ஆறு திங்களில் ஊறு அலர் பிழைத்தும 20ஆறு திங்களில் = ஆறாம் மாதத்தில்

ஊறு அலர் = உடல் உறுப்புக்கள் உருவாகுவதாகிய விரிவு
ஆறாம் மாதத்தில் பிண்டமாக இருந்த கரு , கை முதலிய உடல் உறுப்புக்கள் வளர்வதனால் உண்டாகும் விரிவு அதனால் கர்ப்பைப்பை இடம் கொள்ளாமல் கரு சிதைவில் இருந்து ஆதி ஈசன் கருணையினால் தப்பியும்
ஏழு திங்களில் தாழ் புவி பிழைத்தும்ஏழு திங்களில் = ஏழாம் மாதத்தில்

தாழ் = தாழ்ப்பாள் / தாழக்கோல் , திறவுகோல் . இங்கு கருவாய் என்று பொருள் கொள்க

புவி = பூமி
ஏழாம் மாதத்தில் கரு உறுப்புக்கள் முழுவதும் அமையப்பெற்றதனால் அந்த கருவை தாங்காமாட்டாமல் கருவாய் திறந்து கருச்சிதைவு அடைந்து பூமியில் வெளிப்படுவதில் இருந்து ஆதி ஈசன் கருணையினால் தப்பியும்
எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்எட்டுத் திங்களில் = எட்டாம் மாதத்தில்

கட்டமும் = கஷ்டம்
எட்டாம் மாதத்தில் கரு விரைவாக நன்கு வளர்ந்து , அந்த கரு வளர்வதற்கு எதுவாக சுரந்த மதநீரில் கழிவு மலம் அதிகமாக்குதலிலும் , தாய் உண்னனும் உணவில் அடைச்சியாலும் நெருக்குண்டு வருந்தும் அந்த துன்பங்களில் இருந்து ஆதி ஈசன் கருணையினால் தப்பித்து
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்ஒன்பதில் = ஒன்பது மாதத்தில்

வருதரு = எட்டாம் மாதத்தில் உண்டாகிய துன்பம் ஒன்பதாம் மாதத்தில் அதிகமாகி
ஒன்பது மாதத்தில் , எட்டாம் மாதத்தில் உண்டாகிய துன்பம் ஒன்பதாம் மாதத்தில் அதிகமாகி அதில் இருந்து ஆதி ஈசன் கருணையினால் தப்பி பிழைத்தும்
தக்க தசமதி தாயொடு தான்படும்தக்க தசமதி = பத்தாம் மாதத்தில்

தாயொடு தான்படும் = தாய் உடன் தான் பட்ட
கரு நிறைவு அடைந்து உயிர் சென்மம் எடுக்கும் பத்தாம் மாதத்தில் தாய் உடன் தான் பட்ட
துக்க சாகரம் துயர் இடைப்பிழைத்தும்துக்க சாகரம் = தாய் உயிர் உண்டாகும் பொது உண்டாகும் பெரும் துன்பமான பெரும் துன்பக்கடல்

துயர் = பிரவசத்தின் பொது நான் அடைந்த துன்பம்
தாய் உயிர் உண்டாகும் பொது உண்டாகும் பெரும் துன்பமான பெரும் துன்பக்கடல் மற்றும் பிரவசத்தின் பொது நான் அடைந்த துன்பம் இவற்றில் இருந்து ஆதி ஈசன் கருணையினால் பிழைத்தும்
26 - 58 ஆதி சிவன் அருளால் பசி, காமம், கல்வி, வறுமை, செல்வம் முதலியவற்றில் இருந்து தப்பி பிழைத்தல்
ஆண்டுகள் தோறும் அடைந்த அக்காலைஆண்டுகள் தோறும் = இந்த உலகில் பிறந்த பின்னர் ஒவ்வொரு வருடங்களாக

அடைந்த அக்காலை = வளர்ச்சி அடைந்து வரும் காலத்தில்
ஆதி ஈசன் கருணையினால் எவ்வளவோ இடையூறுகள் நீங்கி பிறந்து பின்னர் ஆண்டுகள் தோறும் வளர்ச்சி அடைந்து வரும் காலத்தில்
ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும்ஈண்டியும் இருத்தியும் = நெருக்கியும் , இருத்தியும் ( பிள்ளைகள் வளரும் காலத்தில் அவர்கள் மீது வைக்கப்படும் கட்டுப்பாடுகள் மற்றும் சிரமங்கள் )


எனைப்பல பிழைத்தும் = எவ்வளவோ பல துன்பங்களுக்கு ஆதி ஈசன் அருளால் தப்பித்தும்
நெருக்கியும் , இருத்தியும் எவ்வளவோ பல துன்பங்களுக்கு ஆதி ஈசன் அருளால் தப்பித்தும்
காலை மலமொடு கடும்பகல் பசி நிசிகாலை மலமொடு = காலைப்பொழுது மலம் கழிக்கும் துன்பம்

கடும்பகல் பசி = உச்சி சூரியன் நடமாடும் வெப்பம் மிகுந்த நண்பகல் பசி

நிசி = இரவு

காலைப்பொழுது மலம் கழிக்கும் பொழுதிலும் , வெப்பம் மிகுந்த நண்பகலில் உச்சி சூரியன் நடமாடும் வேளையில் பசிகும் பொழுதிலும்
வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும்நிசி வேலை நித்திரை = இரவு வேலை உறக்கத்திலும்

யாத்திரை = போக்குவரத்திலும்
இரவு வேலை உறக்கத்திலும் , போக்குவரத்திலும் ஆதி ஈசன் கருணையினால் தப்பித்தும்
கரும்குழல் செவ்வாய் வெள்நகைக் கார்மயில் 30குழல் = கூந்தல்

கரும்குழல் = கருமேகம் போன்ற கரிய கூந்தலையும்

செவ்வாய் = சிவந்த வாயினையும் ( கோவைக்கனி / பவளம் போன்ற சிவந்த வாய் )

வெள்நகை = வெள்ளி / முத்து போன்ற பற்களையும்

கார்மயில் = மழை காலத்து மயில் போலவும்
கருமேகம் போன்ற கரிய கூந்தலையும், பவளம் போன்ற சிவந்த வாயினையும் , முத்துப்போன்ற பற்களையும்,மழை காலத்து மயில் போலவும்

( கோடையில் மழை காணாது வாடி வருத்தமுடன் இருந்த மயில் , மழையை கண்டவுடன் மிக்க மகிழ்ந்து உள்ளக்கிளர்ச்சி அடைந்து தோகை விரித்தாடி பளபளப்பாக இருக்கும் மயில் போல காம வெப்பத்தால் அல்லல் பட்டு இளமை ததும்பும் வனப்புஅமைந்த ஆடவரைக் கண்டபோது உள்ளக்கிளர்ச்சி உண்டாகி கூந்தலை அவிழ்த்து விரித்தும் கோதியும் அசந்து ஒதுங்கி மெதுவாக சென்று ஓரிடையில் சாயல் காட்டி நிற்கும் மங்கை என்று பொருள் கொள்க.)
ஒருங்கிய சாயல் நெருங்கி உள் மதர்த்துக்ஒருங்கிய சாயல் = ஒன்று கூடிய மென்மை

நெருங்கி = நெருக்கமாகி , செறிந்து

உள் மதர்த்து = உள்ளக்களிப்பு கொண்டு
ஒன்று கூடிய மென்மை உடன் நெருக்கமாகி உள்ளக்களிப்பு கொண்டு
கச்சு அற நிமிர்ந்து கதிர்ந்து முன் பணைத்துகச்சு = முலையை மூடிக் கட்டிய துகிலுடை

கச்சு அற நிமிர்ந்து = பெண்களின் உள் மேலாடை அரைப்பட்டிகை அறும்படி அண்ணாந்து

கதிர்ந்து = ஒளியாக வெளிப்பட்டு

முன் பணைத்து = முன்பக்கம் பருத்து
பெண்களின் உள் மேலாடை அரைப்பட்டிகை அறும்படி அண்ணாந்து ஒளியாக வெளிப்பட்டு முன்பக்கம் பருத்து
எய்த்து இடைவருந்த எழுந்து புடைபரந்துஎய்த்து இடைவருந்த எழுந்து = இடுப்பின் மெல்லிடை இளைத்து வருந்தும்படி எழுச்சி பெற்று

புடை = சுற்றுப்புறங்களில்

பரந்து = பரந்து பரவி
இடுப்பின் மெல்லிடை இளைத்து வருந்தும்படி எழுச்சி பெற்று சுற்றுப்புறங்களில் பரந்து பரவி
ஈர்க்கு இடைபோகா இளமுலை மாதர்தம்ஈர்க்கு இடைபோகா = ஈர்குச்சியும் கூட இடையே நுழையமுடியாத நெருக்கத்தினை கொண்ட

இளமுலை மாதர்தம் = இளைய முலைகளை உடைய பெண்களுடைய
ஈர்குச்சியும் கூட இடையே நுழையமுடியாத நெருக்கத்தினை கொண்ட இளைய முலைகளை உடைய பெண்களுடைய
கூர்த்த நயனக் கொள்ளையில் பிழைத்தும்கூர்த்த = நுண்ணிய பார்வை உடைய மாதர்களின்

கொள்ளை = சூறையாடல்

நயனக் கொள்ளையில் = காதல் புரியும் கவர்ச்சி களவினில் இருந்து
நுண்ணிய பார்வை உடைய மாதர்களின் காதல் புரியும் கவர்ச்சி களவினில் இருந்து தப்பித்தும்
பித்த உலகர் பெரும் துறைப் பரப்பினுள்பித்த உலகர் = பித்து பிடித்தாற்போல் மயக்கம் கொண்ட இந்த உலகத்தவர்கள் ஈடுபடும்

பெரும் துறைப் பரப்பினுள் = பல தரப்பட்ட எண்ணப்பரப்புகளுக்குள்
பித்து பிடித்தாற்போல் மயக்கம் கொண்ட இந்த உலகத்தவர்கள் ஈடுபடும் பல தரப்பட்ட எண்ணப்பரப்புகளுக்குள்
மத்தம் களிறு எனும் அவாவிடைப் பிழைத்தும்மத்தம் களிறு = மதம் கொண்ட யானை

அவா = ஆசை

அவாவிடை = அவா இடை = ஆசைக்கு இடையில்
மதம் கொண்ட யானை என்று சொல்லத்தக்க ஆசைக்கு இடையில் தப்பித்தும்
கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும்கல்வி = கல்வி என்கின்ற

பல்கடல் = பலவாகிய கடல் போன்ற பயிலக்கூடிய கலைகளுக்கு நடுவில்
கல்வி என்கின்ற பலவாகிய கடல் போன்ற பயிலக்கூடிய கலைகளுக்கு நடுவில் தப்பித்தும்
செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும்அல்லல் = துன்பம்செல்வம் என்று சொல்லக்கூடிய துன்பத்தில் இருந்து தப்பியும்
நல்குரவு என்னும் தொல்விடம் பிழைத்தும் 40நல்குரவு என்னும் = வறுமை என்கின்ற

தொல்விடம் = தொல் + விடம் = பழைய + விஷம்
வறுமை என்கின்ற மிகப்பழமையான நஞ்சில் இருந்து தப்பியும்
புல்வரம்பு ஆய பலதுறை பிழைத்தும்புல்வரம்பு = புல்லை அடிமட்ட எல்லையாக கொண்ட ( புல்லாகி, பூடாய், புழுவாய், மரமாகி, பல்விருகமாகிப், பறவையாய், பாம்பாகி, ...)

ஆய = ஆகிய

பலதுறை = பலபிறவிகளின் உள்ளே இருந்து
புல்லை அடிமட்ட எல்லையாக கொண்ட பிறவி ஆகிய பலபிறவிகளின் உள்ளே இருந்து தப்பித்தும்
தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகிதெய்வம் என்பதோர் = தெய்வம் என்ற ஒரு பொருள் உண்டு என்ற ஒரு

சித்தம் உண்டாகி = நினைப்பை உருவாக்கி
( மேலே கூறியவாறு தப்பித்து பின்னர் ) தெய்வம் என்ற ஒரு பொருள் உண்டு என்ற ஒரு நினைப்பை உருவாக்கி
முனிவு இலாதது ஓர் பொருள் அது கருதலும்முனிவு = வெறுப்பு / வெறுத்தல் ( பாசம் , பிறவி முதலியவற்றை வெறுத்தல் )
வெறுப்பு இல்லாமல் உள்ள ஒரு பொருள் அதன் மேல் நாட்டம் உண்டாக்குதலும்
ஆறு கோடி மாயா சக்திகள்ஆறு கோடி = மிகப்பல்வாய் உள்ள காமம் , வெகுளி,உலோபம், மயக்கம் , செருக்கு , பொறாமை என்ற ஆறு தீய குணங்கள் மூலம் உண்டாகும் பல கோடி என்று பொருள் கொள்க
காமம் , வெகுளி,உலோபம், மயக்கம் , செருக்கு , பொறாமை என்ற ஆறு தீய குணங்கள் மூலம் உண்டாகும் பல கோடி மாயா சக்திகள்
வேறு வேறு தம் மாயைகள் தொடங்கினமாயைகள் = செய்கைகளை
வேறு வேறாக தமது செய்கைகளை செய்ய தொடங்கின ( அதாவது அந்த ஆறு மாயா சக்திகள் தாங்களே தெய்வங்கள் என்று மாயை காட்டி அதன் இருந்து பிழைத்தும் )
ஆத்தம் ஆனார் அயலவர் கூடிஆத்தம் ஆனார் = நட்பானவரும்

அயலவர் = நட்பு எல்லையில் இல்லாத அயலவர் , பிறரும்

கூடி = கலந்து
நட்பானவரும் , நட்பு எல்லையில் இல்லாத பிறரும் ஒன்று கலந்து
நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறினர்நாத்திகம் = இறை மறுப்பு கொள்கை.

நாத்திகம் பேசி = கடவுள் இல்லை என்று பேசி

நாத்தழும்பு = நாவில் உள்ள வடு

நாத்தழும்பு ஏறினர் = நாவில் தனக்குத்தானே சூடு வைத்துக்கொண்டனர்
கடவுள் இல்லை என்று பேசி நாவில் தனக்குத்தானே சூடு வைத்துக்கொண்டனர்
சுற்றம் என்னும் தொல்பசுக் குழாங்கள்சுற்றம் என்னும் = உறவினர் என்னும்

தொல் = மிகப்பழமையான

பசு = பாசத்தால் கட்டப்படும் உயிர்

பசுக் குழாங்கள் = பசு கூட்டங்கள்
உறவினர் என்று சொல்லக்கூடிய மிகப்பழமையான பசு கூட்டங்கள்
பற்றி அழைத்துப் பதறினர் பெருகவும்பற்றி அழைத்துப் = நம் கையை பற்றி பிடித்து அழைத்து

பதறினர் பெருகவும் = வெகு பற்றுதலுடன் சுற்றிக்கொண்டார்கள்
நம் கையை பற்றி பிடித்து அழைத்து வெகு பற்றுதலுடன் சுற்றிக்கொண்டார்கள்
விரதமே பரம் ஆக வேதியரும் 50பரம் = மேன்மை

விரதமே பரம் ஆக = விரதம் ஒன்றே மிகவும் மேன்மை ஆனது என்று

வேதியரும் = வேதங்கள் ஓதுபவர்களும்
விரதம் ஒன்றே மிகவும் மேன்மை ஆனது என்று வேதங்கள் ஓதுபவர்களும்
சரதம் ஆகவே சாத்திரம் காட்டினர்சரதம் = உண்மை

சரதம் ஆகவே = உண்மையான ஒன்று என்று

சாத்திரம் காட்டினர் = சாத்திர நூல்களை எடுத்து காட்டினார்கள்

உண்மையான ஒன்று என்று சாத்திர நூல்களை எடுத்து காட்டினார்கள்
சமய வாதிகள் தம்தம் மதங்களேசமய வாதிகள் = ஆன்மீக சமயவாதிகள் எல்லோரும்

தம்தம் மதங்களே = தங்கள் மதங்களே
ஆன்மீக சமயவாதிகள் எல்லோரும் தங்கள் மதங்களே
அமைவது ஆக அரற்றி மலைந்தனர்அமைவது ஆக = வீடு பேரு என்னும் முக்தி தரும் நெறி உள்ளதாக

அரற்றுதல் = சொற்போர் புரிதல்

மலைதல் = மயங்குதல்

அரற்றி மலைந்தனர் = வாய்விட்டு சொற்போர் புரிந்து மயங்கினர்
வீடு பேரு என்னும் முக்தி தரும் நெறி உள்ளதாக வாய்விட்டு சொற்போர் புரிந்து மயங்கினர்
மிண்டிய மாயா வாதம் என்னும்மிண்டிய = நெருங்கிய

மாயா வாதம் = பொய் வாதம் ( பௌத்தரின் கொள்கை. உலகம் அனைத்தும் மாயை என்று கூறும் கொள்கை.)
நெருங்கிய பொய் வாதம் என்னும்

(பௌத்தரின் கொள்கை. உலகம் அனைத்தும் மாயை என்று கூறும் கொள்கை.)
சண்ட மாருதம் சுழிந்து அடித்துத் தாஅர்த்துசண்ட மாருதம் = கடும்காற்று

சுழிந்து அடித்து = சுற்றி அடித்து வீசி

ஆஅர்த்து = ஆரவாரிக்கப்பட்டு
கடும்காற்று சுற்றி அடித்து வீசி ஆரவாரிக்கப்பட்டு
உலோகாய தமெனும் ஒள் திறப்பாம்பின்
உலோகாய தமெனும் = உலோகாயுதன் என்னும்

உலோகாயுதன் = சார்வாகம் அல்லது லோகாயதம் அல்லது நாத்திகம் ஆகும்.சார்வகம் என அழைக்கப்படும் உலகாயதம் இந்தியாவில் தோன்றிய ஒரு மெய்யியல் கோட்பாடு. உலகை நோக்கி பொருள்முதல்வாத அனுபவாத அணுகுமுறையை இது முன்னிறுத்துகிறது. கடவுள், மாயை, பிறவிச்சுழற்சி, ஆன்மா போன்ற சமய நம்பிக்கைகளையும் மீவியற்கை விளக்கங்களையும் இது மறுக்கிறது. உலகாயதம் இவ்வுலக வாழ்வில் நம்பிக்கையும், "உலக உடன்பாட்டு சிந்தனையும்" கொண்டது.இந்தச் சிந்தனை வாழ்வில் பேரின்ப வீடு காண்பதை விட உலகியல் இன்பத்தை முதன்மைப்படுத்துகிறது.

ஒள் திறப்பாம்பின் = ஒள் திறல் பாம்பின் =


ஒள் = மிக்க பிரகாசமான

திறல் = வலிமை
உலோகாயுதன் என்னும் மிக்க பிரகாசமான வலிமை உடைய பாம்பின்
கலா பேதத்த கடுவிடம் எய்திகலா பேதத்த = கலை சாஸ்திர வேறுபாடுகளை உடைய

கடுவிடம் = கொடிய நஞ்சு

எய்தி = நிரம்பி
கலை சாஸ்திர வேறுபாடுகளை உடைய கொடிய நஞ்சு நிரம்பி
அதில் பெருமாயை எனைப்பல சூழவும்அதில் பெருமாயை = அதில் உள்ள பெரும் மாயை எனும் பெரும் சூழ்ச்சிகள்

எனைப்பல சூழவும் = எவ்வளோவோ நம்மை வந்து சுற்றவும்
அதில் உள்ள பெரும் மாயை எனும் பெரும் சூழ்ச்சிகள் எவ்வளோவோ நம்மை வந்து சுற்றவும்
59 - 87 ஞான ஆசிரியப்பெருமான ஆதி சிவனை உறுதியாக பற்றிக்கொள்ளுதல்
தப்பாமே தாம் பிடித்தது சலியாத்தப்பாமே = முன்பு கூறப்பட்ட கொள்கையிலிருந்து தவறாமல்

தாம் பிடித்தது சலியாத் = தாம் பிடித்த கடவுள் கொள்கையில் இருந்து சலிப்படைந்து விட்டுவிடாமல்
முன்பு கூறப்பட்ட கொள்கையிலிருந்து தவறாமல் தாம் பிடித்த கடவுள் கொள்கையில் இருந்து சலிப்படைந்து விட்டுவிடாமல்
தழலது கண்ட மெழுகு அது போலத் 60தழல் = நெருப்பு

தழலது = தழல் அது = நெருப்பு அதை
நெருப்பு அதை கண்ட மெழுகு , அது போல
தொழுது உளம் உருகி அழுது உடல்கம்பித்துதொழுது = வணங்கி

கம்பித்தல் = நடுங்குதல்
உள்ளம் உருகி ஆதி ஈசனை வணங்கி , அழுது உடல் நடுக்கம் அடைந்து
ஆடியும் அலறியும் பாடியும் பரவியும்ஆடியும் = ஆதி ஈசனை நினைத்து ஆனந்த கூத்தை ஆடியும்

பரவியும் = வழிபட்டும்
ஆதி ஈசனை நினைத்து ஆனந்த கூத்தை ஆடியும் , வாய் விட்டு ஓலமிட்டு அறியும் , இன்னிசை பாடல்களை பாடியும் , ஆதி ஈசனை வழிபட்டும்
கொடிறும் பேதையும் கொண்டது விடாதெனகொடிறும் = குறடு (ஒரு பொருளைப் பிடித்து இழுக்க, பிய்த்தெடுக்க, அல்லது வெட்டப் பயன்படும் ஒரு கருவி)

பேதை = அறிவிலி ( சூதுவாது அற்றவன் , தரித்திரன் )
பற்றுக்குறடும் அறிவிலியும் தாம் பிடித்தவற்றை நெகிழவிடாது எனும் பழமொழிக்கு ஏற்ப தாம் பிடித்த ஆதி ஈசன் மீது உள்ள கடவுள் கொள்கையை விடாமல்
படியே ஆகி நல் இடைஅறா அன்பின்படி = தன்மை

நல் இடைஅறா அன்பின் = நல்ல இடைவிடாத ஆதி ஈசன் மீது உள்ள அன்பினால்
தன்மை ஆகி , நல்ல இடைவிடாத ஆதி ஈசன் மீது உள்ள அன்பினால்
பசுமரத்து ஆணி அறைந்தால் போலக்பசுமரத்து ஆணி = மிக்க இளமையான மரத்தில் அடிக்கும் ஆணி

மிக்க இளமையான மரத்தில் அடிக்கும் ஆணி அறைந்தால் போல
கசிவது பெருகிக் கடல் என மறுகிகசிவது பெருகி = கசிவு அது பெருகி = உள்ளம் மிக அதிகமாக உருகி அது பெருகி

கடல் என மறுகி = கடல் போல அலை வீசி சுழன்று
உள்ளம் மிக அதிகமாக உருகி அது பெருகி , கடல் போல அலை வீசி சுழன்று
அகம் குழைந்து அனுகுலமாய் மெய் விதிர்த்துச்அகம் குழைந்து = மனம் நெகிழ்ச்சி அடைந்து

அனுகுலமாய் மெய் விதிர்த்து = அதற்கு ஏற்றாற்போல இந்த உடல் நடுங்கி
மனம் நெகிழ்ச்சி அடைந்து , அதற்கு ஏற்றாற்போல இந்த உடல் நடுங்கி
சகம் பேய் என்று தம்மைச் சிரிப்பசகம் = உலகம்

இந்த அறியாமை உலகம் இவரை பேய் பிடித்திருக்கின்றது என்று சிரித்து பரிகசித்து
நாண் அது ஒழிந்து நாடவர் பழித்துரைநாண் அது ஒழிந்து = வெட்கம் என்னும் நாணத்தை விட்டொழித்து

நாடவர் பழித்துரை = நாட்டில் உள்ளவர்கள் தம்பை பழித்து சொல்லும்
வெட்கம் என்னும் நாணத்தை விட்டொழித்து , நாட்டில் உள்ளவர்கள் தம்பை பழித்து சொல்லும்
பூண் அது ஆகக் கோணுதல் இன்றிச் 70பூண் அது ஆக = அணிகலன் ஆக

கோணுதல் இன்றி = மனம் கோணுதல் இல்லாமல்
அணிகலன் ஆக அணிந்து எந்த வித மனம் கோணுதல் இல்லாமல்
சதுர் இழந்து அறிமால் கொண்டு சாரும்சதுர் இழந்து= நான் , தான் என்னும் தன் முனைப்பை இழந்து

அறி = அறிவு ; மால் = ஆசை , மயக்கம்

அறிமால் கொண்டு = உண்மையான சிவ ஞானம் என்னும் அறிவை அடைய ஆசை கொண்டு
தான் என்னும் தன் முனைப்பை இழந்து , உண்மையான சிவ ஞானம் என்னும் அறிவை அடைய ஆசை கொண்டு
கதியது பரமா அதிசயம் ஆகக்கதியது =கதி அது = வீடு பேரு என்ற முக்தி அது

வீடு பேரு என்ற முக்தி அது மிகப் பெரிய அதிசயம் ஆக
கற்றா மனம் எனக் கதறியும் பதறியும்கற்றா மனம் என = கன்று+ஆ = கற்றா மனம் என = இளம் கன்றை காணாது தேடும் தாய் பசு போல மனம் என்று
இளம் கன்றை காணாது தேடும் தாய் பசு போல மனம் ஆதி ஈசனை கதறியும் பதறியும்
மற்று ஓர் தெய்வம் கனவிலும் நினையாதுமற்று ஓர் தெய்வம் = ஆதி ஈசன் தவிர மற்ற எந்த தெய்வத்தையும்
ஆதி ஈசன் தவிர மற்ற எந்த தெய்வத்தையும் கனவிலும் நினையாமல்
அருபரத்து ஒருவன் அவனியில் வந்துஅருபரத்து ஒருவன் = அடைதற்கு அரிய மேம்பட்ட ஒருவன்

அவனியில் = இப்புவியில்
அடைதற்கு அரிய மேம்பட்ட ஒருவன் ஆதி ஈசன் இப்புவியில் வந்து
குருபரன் ஆகி அருளிய பெருமையைச்குருபரன் ஆகி = ஆதி ஈசன் குருவாக ஆகி

ஆதி ஈசன் குரு மூர்த்தி ஆகி அருள் செய்த பெருமையை
சிறுமை என்று இகழாதே திருவடி இணையைப்சிறுமை என்று இகழாதே = எளிதில் கிடைத்த உபதேசம் என்று இகழாமல்

திருவடி இணையை = ஆதி ஈசனின் இரண்டு திருவடிகளை
எளிதில் கிடைத்த உபதேசம் என்று இகழாமல் ஆதி ஈசனின் இரண்டு திருவடிகளை
பிறிவினை அறியா நிழல் அது போலபிறிவினை அறியா = பிறிவு என்பதை அறியாத

பிறிவு என்பதை அறியாத உடலை விட்டு என்றும் நீங்காத நிழல் போல
முன் பின்னாகி முனியாது அத்திசைமுன் பின்னாகி = முன் ஆகவோ அல்லது பின் ஆகவோ தொடர்ந்து

முனியாது அத்திசை = இடறுகள் வந்தாலும் அதனால் மனம் தளராது ஆதி ஈசன் குருமூர்த்தி வீற்றிருக்கும் திசையை நோக்கி வணங்கி

முன் ஆகவோ அல்லது பின் ஆகவோ தொடர்ந்து , இடறுகள் வந்தாலும் அதனால் மனம் தளராது ஆதி ஈசன் குருமூர்த்தி வீற்றிருக்கும் திசையை நோக்கி வணங்கி
என்பு நைந்து உருகி நெக்கு நெக்கு ஏங்கி 80என்பு நைந்து உருகி = உடலின் வன்பொருளாகிய எலும்பு அது தன வலிமை கெட்டு உருகி

நெக்கு = நெகிழ்ந்து

ஏங்கி = இறங்கி

உடலின் வன்பொருளாகிய எலும்பு அது தன வலிமை கெட்டு உருகி , மனம் அது நெகிழ்ந்து , நெகிழ்ந்து இறங்கி
அன்பு எனும் ஆறு கரை அது புரளகரை அது புரள = இரு கரைகளிலும் புரண்டு ஓட
ஆதி ஈசனின் மீது அன்பு என்ற ஆறு அது இரு கரைகளிலும் புரண்டு ஓட
நன்புலன் ஒன்றி நாத என்று அரற்றிநன்புலன் ஒன்றி = உடலின் நல்ல ஐந்து புனல்களும் ஒன்றுபட்டு ,

நாத என்று அரற்றி = ஆதி ஈசனே என் தலைவனே என்று புலம்பி
உடலின் நல்ல ஐந்து புனல்களும் ஒன்றுபட்டு , ஆதி ஈசனே , என் தலைவனே என்று புலம்பி
உரை தடுமாறி உரோமம் சிலிர்ப்பஉரை தடுமாறி = சொற்கள் தடுமாறி

உரோமம் சிலிர்ப்ப = உடல் உரோமங்கள் சிலிர்க்க
சொற்கள் தடுமாறி , உடல் உரோமங்கள் சிலிர்க்க
கரமலர் மொட்டித்து இருதயம் மலரக்கரமலர் மொட்டித்து = மலர் போன்ற இரு கரங்களை குவித்து

இருதயம் மலர = அகத்தின் தாமரையான இருதயம் மலர்ந்து விரிய
மலர் போன்ற இரு கரங்களை குவித்து , அகத்தின் தாமரையான இருதயம் மலர்ந்து விரிய
கண்களி கூர நுண் துளி அரும்பகண்களி கூர = கண்கள் ஆனந்த களிப்பு மிக

நுண் துளி அரும்ப = அதனால் கண்களில் ஆனந்த நீர் துளிகள் ததும்ப
கண்கள் ஆனந்த களிப்பு மிக , அதனால் கண்களில் ஆனந்த கண் நீர் துளிகள் ததும்ப
சாயா அன்பினை நாள்தொரும் தழைப்பவர்சாயா அன்பினை = மனம் சாயாமல் சற்றும் தளராத பேரன்பினை

நாள்தொரும் தழைப்பவர் = அனுதினமும் வளர்ப்பவர்களுக்கு
மனம் சாயாமல் சற்றும் தளராத பேரன்பினை அனுதினமும் வளர்ப்பவர்களுக்கு
தாயே ஆகி வளர்த்தனை போற்றிவளர்த்தனை = வளர்த்த ஆதி சிவனுக்கு

தாய் போல ஆகி வளர்த்த ஆதி சிவனுக்கு வணக்கம்
88 - 225 ஆதி சிவனை போற்றி போற்றி வணங்கி மகிழ்தல்
மெய் தரு வேதியன் ஆகி வினைகெடக்மெய் தரு வேதியன் = உண்மைப்பொருள் ஆன மெய்ப்பொருள் உணர்ச்சியினை தரும் மறையோனாக வந்து

வினைகெட = இந்த பிறவியின் வினைகள் கெட்டு ஒழிய

உண்மைப்பொருள் ஆன மெய்ப்பொருள் உணர்ச்சியினை தரும் மறையோனாக வந்து இந்த பிறவியின் வினைகள் ( சஞ்சிதம் , ஆகாமியம் ) கெட்டு ஒழிய
கைதரவல்ல கடவுள் போற்றிகைதரவல்ல = உதவி செய்ய வல்ல

உதவி செய்ய வல்ல கடவுளுக்கு வணக்கம்
ஆடக மதுரை அரசே போற்றி 90ஆடகம் = பொன்மயமாக

ஆடக மதுரை = பொன்மயமாக இருக்கின்ற மதுரை
பொன்மயமாக இருக்கின்ற மதுரை அரசனுக்கு வணக்கம்
கூடல் இலங்கு குருமணி போற்றிகூடல் = = நான்கு மாடங்கள் கூடியிருந்தமையால் மதுரைக்கு கூடல் என்ற பெயர் உண்டு

இலங்குதல் = விளங்குதல்

குருமணி = நிறம் சிறந்த மணி
நான்கு மாடக்கூடலாகிய மதுரை நகரில் நிறம் சிறந்த மாணிக்க மணி போல விளங்கும் ஆதி ஈசனுக்கு வணக்கம்
தென் தில்லை மன்றினுள் ஆடி போற்றிதென்தில்லை = அழகிய தென் தில்லை

மன்று = சிதம்பரத்துள்ள கனகசபை

அழகிய தென் தில்லை நகரமான சிதம்பரத்தில் உள்ள கனகசபை அதனில் திரு நடனம் ஆடிய ஆதி ஈசனுக்கு வணக்கம்
இன்று எனக்கு ஆர் அமுது ஆனாய் போற்றிஆர் அமுது = அரிய அமுதம்இன்று என்னுள் இருந்து உறும் அரிய அமுதம் ஆன தேனே என் ஆதி ஈசனே உனக்கு வணக்கம்
மூவா நான்மறை முதல்வா போற்றிமூவா = என்றும் பயனுள்ள , நிலைத்த ஒரு தன்மையான

நான்மறை = நன்கு வேதங்கள் ( ரிக் , யஜுர் , சாம மற்றும் அதர்வண வேதங்கள் )

என்றும் பயனுள்ள , நிலைத்த ஒரு தன்மையான நன்கு வேதங்களுக்கும் தனால்வனான ஆதி ஈசனே உந்தனுக்கு வணக்கம்
சேவார் வெல்கொடிச் சிவனே போற்றிசேவார் = சே + ஆர்
சே = ரிஷபம்
ஆர் = நிறைதல்
வெல்கொடி = வெற்றி கொடி
ரிஷபம் ( காளை ) பொருந்திய வெற்றி கொடி உடைய ஆதி சிவனுக்கு வணக்கம்
மின் ஆர் உருவ விகிர்தா போற்றிமின் ஆர் உருவ = ஆதி ஈசன் ஒளி பொருந்திய உருவமுடவர்

விகிர்தா = வேறுபாடு = அன்பால் உள்ளம் உருகி வழிபடுபவர்களுக்கு ஆதி ஈசன் பல்வேறு உருவங்களை எடுத்து அருள் பாலிப்பவர்
ஒளி உருவம் பொருந்திய ஆதி ஈசனே , அன்பால் உன்னை உள்ளம் உருகி வழிபடுபவர்களுக்கு பல்வேறு உருவங்களை எடுத்து அவர்களுக்கு அருளும் ஆதி ஈசனே உந்தனுக்கு வணக்கம்
கல் நார் உரித்த கனியே போற்றிகல் நார் உரித்தல் = கல்லில் இருந்து நார் உரிப்பது என்ற அரிதான இயலவே இயலாத செயல்

கல்லில் இருந்து நார் உரிப்பது என்ற அரிதான இயலவே இயலாத செயல். அதுபோல எங்கும் கிடைக்காத அரிய சுவைக்க இயலாத சுவையை அருளும் கனிபோல விளங்கும் ஆதி ஈசனே உந்தனுக்கு வணக்கம்
காவாய் கனகக் குன்றே போற்றிகாவாய் = காத்து அருள்வாய்

கனகம் = பொன். இறைவன் பொன் மலை போன்று இருப்பதால் கனக குன்று என்று இங்கு அழைக்கப்பட்டார்
என்னைக் காத்து எந்நாளும் அருளும் பொன் மலை போன்ற ஆதி ஈசனுக்கு வணக்கம்
ஆ ஆ என்தனக்கு அருளாய் போற்றிஆ ஆ = அதிசய விரக்கச்சொல்.
ஆ ! ஆ ! என்று வியக்கத்தக்க பேற்றினை எனக்கு அருள்வாய் ஆதி ஈசனே உந்தனுக்கு வணக்கம்
படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி 100படைப்பாய் காப்பாய் துடைப்பாய் = மூன்று தொழில்கள் ( இதனுள் அருளால் , மறைத்தாலும் அடங்கும் )இந்த அண்ட பேரண்டத்தில் உள்ள ஈரேழு பதினான்கு உலகங்களையும் உருவாக்கி, காத்து அழிக்கும் ஆதி ஈசனே உந்தனுக்கு வணக்கம்
இடரைக் களையும் எந்தாய் போற்றிஇடரைக் களையும் = பிறவி துன்பம் என்னும் துயரங்களை நீக்கும்

எந்தாய் = என் தந்தை
எனது பிறவி துன்பம் என்னும் துயரங்களை நீக்கும் என் தந்தை ஆதி ஈசனுக்கு வணக்கம்
ஈச போற்றி இறைவா போற்றிஈசன் = சகல ஐசுவரியங்களை உடையவன்

இறைவா = எங்கும் தங்குபவன் (நிறைந்த) , தலைவன்
சகல ஐசுவரியங்களை உடைய ஆதி ஈசனுக்கு வணக்கம்.

எங்கும் நிறைந்த என் தலைவன் ஆதி ஈசனுக்கு வணக்கம்
தேசப் பளிங்கின் திரளே போற்றிதேசம் = தேஜஸ் என்பதன் திரிபு = ஒளி

பளிங்கு = ஒளியும் , களங்கம் இன்மையும் , மற்ற பொருள்களின் உருவினை தன இடத்தே காட்டும் தன்மையும்
மிக்க ஒளியுடைய பளிங்கின் குவியல் தொகுதிகளை போன்ற ஆதி ஈசனுக்கு வணக்கம்
அரைசே போற்றி அமுதே போற்றிஅரைசே = தேவர்களுக்கு அரசன்
தேவர்களுக்கு எல்லாம் அரசன் ஆனா ஆதி ஈசனுக்கு வணக்கம். உயிர்கள் எல்லாவற்றிற்கும் அமிர்தமான ஆதி ஈசனுக்கு வணக்கம்
விரை சேர் சரண விகிர்தா போற்றிவிரை = மணம்

சரண = சரணம் புகுவதற்கு உண்டான ஆதி ஈசனின் திருவடிகள்

விகிர்தா = வேறு வேறு தோற்றமாக விளங்குபவனே
அடியவர்கள் சரணம் புகுவதற்கு உண்டான மணம் வீசும் திருவடிகள் கொண்டு வேறு வேறு தோற்றமாக விளங்குபவனே ஆதி ஈசனே உந்தனுக்கு வணக்கம்
வேதி போற்றி விமலா போற்றிவேதி = வேதிப்பவன். மறுபடுத்துபவன் .

விமலா = மாசற்றவன்
உயிர்களை அவற்றின் மும்மலம் எனும் தன்மையில் இருந்து அதனை ( மும்மலம் ) நீக்கி மறுபடுத்துபவன் ஆதி ஈசனுக்கு வணக்கம் !

மாசற்ற ஆதி ஈசனுக்கு வணக்கம் !
ஆதி போற்றி அறிவே போற்றிஆதி = இறைவன் ஆதி சக்தியோடு இருப்பதனால் ஆதி . இதையே திருவள்ளுவரும் ஆதிபகவன் முதற்றே யுலகு என்றார். எனவே ஆதி என்பதற்கு பொருள் முதலே எனுமாம்.
ஆதி சக்தி உடன் கூடிய ஆதி ஈசனுக்கு வணக்கம் !

உயிர்களின் அறிவுக்கு அறிவாக விளங்கும் ஆதி ஈசனுக்கு வணக்கம் !
கதியே போற்றி கனியே போற்றிகதி = வீடு பேற்றினை அளிக்கும் முக்தி என்னும் கதி

வீடு பேற்றினை அளிக்கும் முக்தி என்னும் கதி ஆனா ஆதி ஈசனுக்கு வணக்கம் !
கனியின் சுவை போன்ற ஆதி ஈசனுக்கு வணக்கம் !
நதிசேர் செஞ்சடை நம்பா போற்றிநதிசேர் செஞ்சடை நம்பன் = பகிரதன் பொருட்டு பெருக்கு எடுத்து வந்த ஆகாய கங்கை தரையில் விழுந்தது. அதனை சிதையாமல் இறைவன் தனது சிவப்பு சடையில் ஏற்று அதன் செருக்கை அடக்கி அதன் பின் தரையில் கங்கை ஆறாக உலாவ விட்ட ஆதி ஈசன்

பகிரதன் பொருட்டு பெருக்கு எடுத்து வந்த ஆகாய கங்கை தரையில் விழுந்தது. அதனை சிதையாமல் இறைவன் தனது சிவப்பு சடையில் ஏற்று அதன் செருக்கை அடக்கி அதன் பின் தரையில் கங்கை ஆறாக உலாவ விட்ட ஆதி ஈசனுக்கு வணக்கம்
உடையாய் போற்றி உணர்வே போற்றி 110உடையாய் = எப்பொருளும் உடையவன் , எம்மை அடிமையை உடையவனே

உணர்வே = மெய்யுணர்வை அளிக்கும்
எப்பொருளும் உடையவன் , எம்மை அடிமையாய் ஆட்கொண்ட ஆதி ஈசனுக்கு வணக்கம் !

மெய்யுணர்வை அளிக்கும் ஆதி ஈசனுக்கு வணக்கம் !
கடையேன் அடிமை கண்டாய் போற்றிகடையேன் = எல்லோருக்கும் கீழ்ப்பட்டவன்

இந்த உலகில் உள்ள எல்லோருக்கும் கீழ்ப்பட்டவன் ஆன இந்த அடியவனின் தொண்டினையும் ஏற்று கடைக்கணித்து கண்டுகொண்டு ஏற்றுக்கொண்ட ஆதி ஈசனுக்கு வணக்கம் !
ஐயா போற்றி அணுவே போற்றிஐயன் = ஐயா = வழிபாட்டிற்கு உடையவன்
வழிபாட்டிற்கு உடைய ஆதி ஈசனே போற்றி !

அணுக்களுக்கு அணு போன்ற நுண்ணிய ஆதி ஈசனே போற்றி !
சைவா போற்றி தலைவா போற்றிசைவா = சிவ சம்பந்தம் உடையது சைவம்.அற நெறியில் நிற்பவர் சைவர்.சிவபெருமான் திருவையாற்றில் சைவனாகி வந்த வரலாறு கீர்த்தித்திருவகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதனால் சைவா என்று இங்கு ஆனது.
சிவ சம்பந்தம் மற்றும் அறநெறியை அளிக்கும் ஆதி ஈசனுக்கு வணக்கம் !

இந்த அடிமையை ஆட்கொண்ட தலைவனே என் ஆதி ஈசனே உந்தனுக்கு வணக்கம் !
குறியே போற்றி குணமே போற்றிகுறி = லிங்கம்

குணமே = எண்குணங்களாவன:

1. தன்வயத்தன் ஆதல்
2. தூய உடம்பினன் ஆதல்
3. இயற்கை உணர்வினன் ஆதல்
4. முற்றும் உணர்தல்
5. இயல்பாகவே பாசங்களின் நீங்குதல்
6. பேரருள் உடைமை
7. முடிவு இல் ஆற்றல் உடைமை
8. வரம்பு இல் இன்பம் உடைமை

என இவை. இவ்வாறு சைவாகமத்துக் கூறப்பட்டது. ‘அணிமா” வை முதலாக உடையன எனவும், “கடையிலா அறிவை” முதலாக உடையன எனவும், உரைப்பாரும் உளர்.
லிங்க வடிவமாக எங்கும் நிறைந்து இருக்கும் ஆதி ஈசனுக்கு வணக்கம் !


எட்டு வகை குணங்களாக எங்கும் நிறைந்து இருக்கும் ஆதி ஈசனுக்கு வணக்கம் !
நெறியே போற்றி நினைவே போற்றிநெறி = நல்வழி , நன்னெறி , சிவஞானம்

இந்த அடிமைக்கும் மற்ற உயிர்கள் எல்லாவற்றுக்கும் நல்வழி , நன்னெறி ஆக இருக்கும் ஆதி ஈசனே வணக்கம் !

என் நினைவில் நீக்கமற நிறைந்து அருளும் ஆதி ஈசனே உந்தனுக்கு வணக்கம் !
வானோர்க்கு அரிய மருந்தே போற்றிவானோர்க்கு = தேவர்களுக்கு

தேவர்களுக்கு கிடைப்பதற்கு அரிய மருந்து போன்ற ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
ஏனோர்க்கு எளிய இறைவா போற்றிஏனோர்க்கு = அன்பு கொண்ட அனைவருக்கும்அன்பு கொண்ட அனைவருக்கும் அறுக்கும் எளிய இறைவா என் ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
மூவேழ் சுற்றமும் முரண்உறு நரகுஇடைமூவேழ் சுற்றமும் = மூ வேழ்(7) சுற்றமும் = 3 X 7 = 21. இருபத்தி ஒன்று தலைமுறையாக சுற்றம் உள்ள உறவுகள்.
இதை இரண்டு வகையாக கொள்ளலாம் .
(1)தந்தையின் முந்தைய ஏழு தலைமுறை, தாயின் முந்தைய ஏழு தலைமுறை தனது வாரிசுகளின் ஏழு தலைமுறை. ஆக மொத்தம் 21 தலைமுறை.
(2) தனக்கு முன்னே பத்து தலைமுறை , தனக்குப்பின்னே பத்து தலைமுறை மற்றும் தாமும் ஆக மொத்தம் 21 தலைமுறை.

முரண்உறு நரகு இடை = ஒன்றுக்கொன்று மாறுபட்ட மிகவும் கொடிய துன்பத்தை தரும் நரகங்களுக்கு இடையில்
ஆதி ஈசனால் ஆட்கொள்ளப்பட்டவர்களின் இருபத்தியொறு தலைமுறை சுற்றத்தவர்களும் ஒன்றுக்கொன்று மாறுபட்ட மிகவும் கொடிய துன்பத்தை தரும் நரகங்களுக்கு இடையில்
ஆழாமே அருள் அரசே போற்றிஆழாமே = ஆழ்ந்துபோகாமல்

ஆழ்ந்துபோகாமல் அருளும் என் அரசன் ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
தோழா போற்றி துணைவா போற்றி 120தோழா = அடியவர்கள் நண்பன்

துணை = துணை புரிபவன்
அடியவர்களுக்கு அன்பு நண்பன் போல விளங்கும் ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !

ஆதி ஈசனை தோழனாக பெற்ற அடியவர்களுக்கு எல்லா காலத்திலும் துணை புரியும் ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
வாழ்வே போற்றி என் வைப்பே போற்றிவாழ்வே = அன்பர்களுக்கு இன்ப வாழ்க்கையை அருளும் ஆதி ஈசன்

வைப்பு = புதை பொருள்
அன்பர்களுக்கு இன்ப வாழ்க்கையை அருளும் ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !

அன்பர்களுக்கு கிடைத்த புதை பொருள் போன்ற ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
முத்தா போற்றி முதல்வா போற்றிமுத்தன் = முக்தி . விடுபட்டவன் என்பது பொருள்.இறைவன் இயல்பாகவே பாசங்கள் அனைத்தும் நீங்கினவன். அதனால் அவனை முத்தன் என்று அழைப்பர்.

முதல்வா = எல்லாவற்றிற்கும் முதல்வனாக இருப்பவனே
இயல்பாகவே பாசங்கள் அனைத்தும் நீங்கினவன் ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !

எல்லாவற்றிற்கும் முதல்வனாக இருப்பவனே ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
அத்தா போற்றி அரனே போற்றிஅத்தன் = அனைத்து உயிர்களுக்கும் தந்தை

அரன் = மும்மலங்களான பந்த பசங்களை அழிப்பவன்

அனைத்து உயிர்களுக்கும் தந்தையான ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !

மும்மலங்களான பந்த பசங்களை அழிக்கும் ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
உரைஉணர்வு இறந்த ஒருவ போற்றிஉரைஉணர்வு இறந்த ஒருவ = இறைவன் வாக்கிற்கும் மனதிற்கும் எட்டாதவன் அதனால் உரைஉணர்வு இறந்த ஒருவன் என்று இங்கு அழைக்கப்பட்டார்.

ஒருவன் = ஒப்பற்றவன்
வாயால் சொல்லவும் மனதால் நினைக்கவும் அடங்காத ஒப்பற்ற ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
விரிகடல் உலகின் விளைவே போற்றிவிளைவு = பலன்

பறந்து விரிந்த கடல் சூழ்ந்த இந்த உலகின் இன்ப வாழ்வின் பயனாக உள்ள ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
அருமையில் எளிய அழகே போற்றிஅருமையில் எளிய = அன்பராக உள்ளவர்களுக்கு எளியவன்

உந்தன் மீது அன்புஇல்லாதவருக்கு அரியவனாகவும் , உன்மீது அன்பாய் உள்ளவர்களுக்கு எளியவனாகவும் விளங்கும் ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
கருமுகி லாகிய கண்ணே போற்றிகருமுகில் = நீருண்ட கரிய மழை பொழியம் மேகம்நீருண்ட கரிய மழை பொழியம் மேகம் போல அருளை பொழியும் ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
மன்னிய திருவருள் மலையே போற்றிமன்னிய = நிலைபெற்ற ( இறைவன் திருவருள் ஒன்றே நிலையானது )

திருவருள் மலையே = திரு அருள் புரியும் மலை போன்ற
இந்தவுலகில் நிலைபெற்ற திரு அருள் புரியும் மலை போன்ற ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
என்னையும் ஒருவ னாக்கி இருங்கழல்என்னையும் = உனது அடியவனான என்னை

இருங்கழல் = உனது திருவடிகளை
உனது அடியவனான என்னையும் உன் அடியவர்கள் சிறந்த ஒருவன் ஆக்கி உனது திருவடிகளை
சென்னியில் வைத்த சேவக போற்றி 130சென்னியில் = தலையில்

சேவகன் = வீரன்
எந்தன் தலையில் வைத்த வீரன் ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றிதொழுதகை துன்பம் =
(1) தொழு தகை துன்பம் - தொழுதலை தடுக்கும் துன்பம்
(2) தொழுத கை துன்பம் - தொழுத கையினை உடைய அடியவருக்கு துன்பம்
அன்பினால் உன்னை திலும் அடியவர்களின் துன்பம் அதனை நீக்கும் ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
அழிவிலா ஆனந்த வாரி போற்றிஆனந்த வாரி = ஆனந்தக்கடல்
என்றும் அழிவே இல்லாத மெய் இன்பம் அருளும் ஆனந்தக்கடல் ஆன ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
அழிவதும் ஆவதும் கடந்தாய் போற்றிஅழிவதும் ஆவதும் = ஒடுக்கமும் தோற்றமும்

கடந்தாய் = கடந்தவனே

ஒடுக்கமும் தோற்றமும் அனைத்தும் கடந்தவனே என் ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
முழுவதும் இறந்த முதல்வா போற்றிமுழுவதும் இறந்த = எல்லாவற்றையும் கடந்த

எல்லாவற்றையும் கடந்த ஆதி முதல்வனே ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
மான்நேர் நோக்கி மணாளா போற்றிமான்நேர் நோக்கி = மான் நேர் பார்வை ஒத்த உமை அம்மையின்
மான் நேர் பார்வை ஒத்த உமை அம்மையின் மணவாளனே ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
வானகத் அமரர் தாயே போற்றிவானகத் அமரர் = விண்ணுலகில் உள்ள தேவர்கள்

விண்ணுலகில் உள்ள தேவர்கள் அனைவருக்கும் என்றும் தாய் போல காக்கும் ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம்
பார்இடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றிபார்இடை = இந்த பூலோகத்தில்

ஐந்தாய்ப் பரந்தாய் = ஐந்து தன்மைகளாக எங்கும் பரவி இருக்கும்

பூமிக்கு ஒலி,ஸ்பரிசம்,வடிவம்,சுவை,மணம் ஆகிய ஐந்து இயல்புகள் உண்டு.
இந்த பூலோகத்தில் ஐந்து பஞ்ச பூதத்தன்மைகளாக எங்கும் பரவி இருக்கும் ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றிதண்ணீருக்கு ஒலி, ஸ்பரிஸம், வடிவம், சுவை ஆகிய நான்கு இயல்புகளும் உண்டு.

( மணம் கிடையாது )
நீரில் நான்கு தன்மைகளாக நிகழ்ந்து இருக்கும் ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றிநெருப்புக்கு சப்தம், ஸ்பரிசம், உருவம் ஆகிய மூன்று இயல்புகள் உண்டு.

( சுவை,மணம் இரண்டும் கிடையாது )
நெருப்பின் இடத்தில் சப்தம், ஸ்பரிசம், உருவம் ஆகிய மூன்று இயல்புகள் ஆக உள்ள ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி 140வளியிடை = காற்றில்

காற்றுக்கு இரு குணங்கள் உண்டு. ஒன்று ஒலி. மற்றொன்று தொடு உணர்வு. . அது பற்றில்லாது இருக்கும் இயல்புடையது. அது எங்கும் அசைந்து செல்வது. ஆனால் அது எந்த இடத்தையும் பற்றிக்கொள்வது இல்லை. ஏழையோ, பணக்காரனோ மனிதனோ, விலங்கோ தாவர இனமோ. பிராணிகள் இனமோ எல்லோரிடமும் எந்த சுயநலமுமில்லாமல் எந்த பாரபட்சமும் இல்லாமல் எல்லோருக்கும் தன்னை வழங்குகிறது. அனைவருக்கும் அன்பாய் காற்றாக வந்து வீசுகிறது, காற்றில்லாது. இனிய இசை உருவாகாது.

காற்றில் ஒலி மற்றும் தொடு உணர்வு என்னும் இரண்டு பண்புகளாக மகிழ்ந்து நின்ற ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றிவெளியிடை = ஆகாயம்

ஆகாயம் ஒலியைத் தனது இயல்பாகக் கொண்டுள்ளது.
ஆகாயத்தில் ஓசை என்று ஒரு பண்பாக நிற்கும் ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
அளிபவர் உள்ளதது அமுதே போற்றிஅளிபவர் உள்ளதது = அன்பினால் பக்தியுடன் வணங்கும் அடியவர்களின்
அன்பினால் பக்தியுடன் வணங்கும் அடியவர்களின் உள்ளத்தில் ஊரும் அமுதம் ஆன ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
கனவிலும் தேவர்க்கு அரியாய் போற்றிதேவர்க்கு அரியாய் = தேவர்களுக்கு அரியவனானவனே
தேவர்கள் பதவி இன்பம் உடையது. அவர்கள் இன்பத்தை சிந்திப்பதால் அவர்கள் கனவில் ஆதி ஈசன் காட்சி கிடைப்பது அரிது
கனவில் கூட தேவர்களுக்கு அரியவனானவனே ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
நனவிலும் நாயேற்கு அருளினை போற்றிநனவிலும் = விழி திறந்த தூங்காத நிலையில்

ஆதி ஈசன் திருப்பெருந்துறையில் மாணிக்க வாசகப்பெருமானுக்கு அருளியது விழித்த பகல் பொழுதில்தான்
விழி திறந்த தூங்காத நிலையிலும் நாயை விட கீழான எளியவனான எனக்கு அருள் பொழிந்த ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
இடைமருது உறையும் எந்தாய் போற்றிஇடைமருது = திருவிடைமருதூர்

எந்தாய் = என் தந்தை
திருவிடைமருதூர் திருத்தலத்தில் அருள் புரிந்துவரும் எந்தது தந்தையே ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
சடைஇடைக் கங்கை தரித்தாய் போற்றிசடைஇடைக் கங்கை = சடையில் கங்கைசடையின் இடையில் கங்கையை கொண்டவனே , தரித்தவனே , ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
ஆரூர் அமர்ந்த அரசே போற்றிஆரூர் = திருவாரூர்
திருவாரூர் திருத்தலத்தில் விருப்பம் கொண்டு அமர்ந்து அருள் புரியும் அரசனே ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
சீர் ஆர் திருவையாறா போற்றிசீர் ஆர் = அழகு பொருந்தியஅழகு பொருந்திய திருவையாற்றில் அருள் புரியும் ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
அண்ணாமலை எம் அண்ணா போற்றிஅண்ணாமலை = திருவண்ணாமலை திருத்தலம்

அண்ணா = அண்ணல் = பெருமையில் சிறந்தோன்

திருவண்ணாமலை திருத்தலம் அதனில் பெருமையில் சிறந்தோன் ஆகா அருள் புரியும் ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
கண் ஆர் அமுதக் கடலே போற்றி 150ஆர் = நிறைந்த
எனது கண் முழுவதும் நிறைந்த அமுதக்கடல் போன்ற ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
ஏகம்பத்து உறை எந்தாய் போற்றிஏகம்பத்து = திருவேகம்பகம் ( காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோவில் . இறைவர் திருப்பெயர்: ஏகாம்பரேஸ்வரர், ஏகாம்பரநாதர்.இறைவியார் திருப்பெயர்: சிநேகவல்லி )
காஞ்சிபுரத்தில் உள்ள திருவேகம்பகம் என்ற திருத்தலத்தில் உறையும் ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
பாகம் பெண் உரு ஆனாய் போற்றிபாகம் பெண் உரு = அர்த்தநாரீஸ்வரர்இடப்பாகத்தில் உமை அம்மையை பெண் உருவாக கொண்ட ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
பராய்த் துறை மேவிய பரனே போற்றிபராய்த் துறை = திருப்பராய்த்துறை ( திருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர் கோயில் அப்பர், சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது திருச்சி மாவட்டத்தில் திருவரங்கம் வட்டத்தில் உள்ள திருப்பராய்த்துறை கிராமத்தில் அமைந்துள்ளது.)

மேவிய = பொருந்திய , எழுந்தருளிய

பரன் = மேலோன்
திருப்பராய்த்துறை தலத்தில் எழுந்தருளிய மேலோன் ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றிசிராப்பள்ளி = திருச்சிராப்பள்ளி

மேவிய = பொருந்திய , எழுந்தருளிய
திருச்சிராப்பள்ளி எழுந்தருளிய ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
மற்று ஓர் பற்று இங்கு அறியோன் போற்றிமற்று ஓர் பற்று = சிவனை அல்லாமல் வேறு ஒரு பற்று வைக்கக்கூடிய தெய்வம்
சிவனை அல்லாமல் வேறு ஒரு பற்று வைக்கக்கூடிய தெய்வம் அடியேன் அறியேன் ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
குற்றாலத்து எம் கூத்தா போற்றிகுற்றாலத்து = திருக்குற்றாலம்

திருக்குற்றாலம் தலத்தில் எழுந்து அருளியுள்ள என் கூத்தனே ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
கோகழி மேவிய கோவே போற்றிகோகழி = திருவாடுதுறையில்

மேவிய = எழுந்தருளிய

திருவாடுதுறையில் எழுந்தருளிய என் அரசனே ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
ஈங்கோய் மலை எந்தாய் போற்றிஈங்கோய் மலை = திருஈங்கோய்மலை அல்லது ஈங்கோய்மலை என்பது, இப்போது திருவிங்கநாதமலை என்னும் பெயருடன், திருச்சி – நாமக்கல் சாலையில் உள்ளது. திருவிங்கநாதமலை மரகதாசலேஸ்வரர் கோயில்

திருஈங்கோய்மலையில் அருளும் என் தந்தை ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
பாங்கு ஆர் பழனத்து அழகா போற்றிபாங்கு ஆர் = அழகு பொருந்திய

பழனத்து = பழனம் = திருப்பழனம் ( திருப்பழனம் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் திருநாவுக்கரசரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 50வது தலம் ஆகும்)
அழகு பொருந்திய திருப்பழனம் தலத்தில் அருள் புரியும் அழகனே ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
கடம்பூர் மேவிய விடங்கா போற்றி 160கடம்பூர் = திருக்கடம்பூர் ( திருக்கடம்பூர் - மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது கடலூர் மாவட்டத்தில் உள்ள மேலக்கடம்பூரில் அமைந்துள்ளது. இந்திரன் வழிபட்ட அமுதகலசமும், முருகன் வழிபட்டு வில்லும் பெற்ற தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).)

விடங்கா = விடங்கன் = வி+டங்கன். டங்கம் = உளி. விடங்கன் = உளியினால் செதுக்கப்படாதவன்.
திருக்கடம்பூர் தலத்தில் எழுந்து அருளும் உளியினால் செதுக்கப்படாதவன் ஆன ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
அடைந்தவர்க்கு அருளும் அப்பா போற்றிஅடைந்தவர்க்கு = திருவடிகளை சரண் அடைந்தவர்களுக்கு
உனது திருவடிகளை சரண் அடைந்தவர்களுக்கு அருளும் என் அப்பனே ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
இத்தி தன்னின் கீழ் இருமூவர்க்குஇத்தி தன்னின் கீழ் = கல்லால மரத்தின் கீழ் ( பட்டமங்கையில்)

இருமூவர்க்கு = 2 X 3 = கார்த்திகை பெண்கள் ஆறு பேர்களுக்கு
கல்லால மரத்தின் கீழ் ( பட்டமங்கையில்) கார்த்திகை பெண்கள் ஆறு பேர்களுக்கும்
அத்திக்கு அருளிய அரசே போற்றிஅத்திக்கு = ( கடம்ப வனத்தில் ) வெள்ளை யானைக்கும்
( கடம்ப வனத்தில் ) வெள்ளை யானைக்கும் அருளிய அரசே ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
தென்னாடுடைய சிவனே போற்றிதென்னாடுடைய = தமிழ் நாட்டில் பாண்டிநாடுதெற்கில் உள்ள பாண்டிநாட்டினை உடையவனே ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
எந் நாட்டவர்க்கும் இறைவா போற்றிஎந்நாட்டவர்க்கும் = எந்த நடவருக்கும்

உலகில் உள்ள எந்த நடவருக்கும் இறைவனே ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
ஏனக் குருளைக்கு அருளினை போற்றிஏனம் = பன்றி
குருளை = விலங்கின் பிள்ளைபெயர்

பன்றிக்குட்டிகளுக்கு தாயாய் அருளிய திருவிளையாடல் புராணம்
பன்றிக்குட்டிகளுக்கு தாயாய் வந்து அருளிய ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
மானக் கயிலை மலையாய் போற்றிமானம் = பெருமை

பெருமை மிக்க கயிலை மலையை உடைய ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
அருளிட வேண்டும் அம்மான் போற்றிஅருளிட வேண்டும் = அருள் செய்யவேண்டும்
அம்மான் = தகப்பன்

அருள் செய்யவேண்டும் நீ எந்தன் தகப்பன் ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
இருள் கெட அருளும் இறைவா போற்றிஇருள் = ஆணவ இருள் எனும் மாயை

ஆணவ இருள் எனும் மாயை கெட அருளும் ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி 170தளர்ந்தேன் = அடியேன் தளர்வு அடைந்தேன்

தமியேன் தனியாக உள்ள நான்
தனியாக உள்ள நான் தளர்வு அடைந்தேன். என் தளர்வை நீக்குவாய் ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
களம் கொளக் கருத அருளாய் போற்றிகளம் = நிலைத்த இடம்

அடியேன் நிலையான ஒரு இடம் பெறவும் , உன்னையே நினைத்து உருகவும் அருள் செய்வாய் ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
அஞ்சேல் என்று இங்கு அருளாய் போற்றிஅஞ்சேல் = அஞ்சாதே
இங்கு = இவ்வுலகத்தில்

அஞ்சாதே என்று இவ்வுலகத்தில் அருள்வாய் எந்தன் ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
நஞ்சே அமுதா நயந்தாய் போற்றிநஞ்சே = பாற்கடலின் நஞ்சு

பாற்கடலின் நஞ்சு அதனை அமுதமாக விரும்பி ஏற்ற ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
அத்தா போற்றி ஐயா போற்றிஅத்தா = தந்தை
ஐயா = வழிபாட்டுக்கு உரித்தான
தந்தை ஆனா ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
வழிபாட்டுக்கு உரித்தான ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
நித்தா போற்றி நிமலா போற்றிநித்தா = நித்தம் = என்றும் உள்ளவனே
நிமலா = தூயவனே
என்றும் உள்ளவனே ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
தூயவனே ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
பத்தா போற்றி பவனே போற்றிபத்தா = தலைவன்.
பவன் = எல்லா உயிர்களும் தோன்றுதலுக்கு இடமானவனான்
தலைவன் ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
எல்லா உயிர்களும் தோன்றுதலுக்கு இடமானவன ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
பெரியாய் போற்றி பிரானே போற்றிபெரியாய் = பெரியவற்றுக்கு எல்லாம் பெரியவனே
பிரானே = எல்லாப்பொருள்களுக்கும் இறைவன்
பெரியவற்றுக்கு எல்லாம் பெரியவனே ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
எல்லாப்பொருள்களுக்கும் இறைவன் ஆன ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
அரியாய் போற்றி அமலா போற்றிஅரியாய் = அன்பர் அல்லாதவருக்கு காண்பதற்கு அரியவன்
அமலா = மலமற்றவன். நிர்மலமானவன்

அன்பர் அல்லாதவருக்கு காண்பதற்கு அரிய ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
நிர்மலமானவன் ஆன ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
மறையோர் கோல நெறியே போற்றிமறையோர் கோல = அந்தணர் கோலத்தில் வந்து

அந்தணர் கோலத்தில் வந்து அறநெறி உரைத்த ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
முறையோ தரியேன் முதல்வா போற்றி 180முறையோ = இது முறையோ என்று ஓலம் இடுதல் ( மறையோனாக வந்து என்னைத்தவிர அனைவரையும் உன் உடன் அழைத்து சென்றது முறையோ ? என்று ஓலமிடுதல்
தரியேன் = பொறுக்கமாட்டேன்
மறையோனாக வந்து என்னைத்தவிர அனைவரையும் உன் உடன் அழைத்து சென்றது முறையோ? அடியேன் இதை பொறுக்கமாட்டேன் என் ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
உறவே போற்றி உயிரே போற்றிஉறவே = சுற்றமானவனே
உயிரே = உயிருக்கு உயிராய்

சுற்றமானவனே ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
உயிருக்கு உயிராய் விளங்கும் ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
சிறவே போற்றி சிவமே போற்றிசிறவே = சிறந்த பொருள் ஆனவனே
சிவமே = மங்கலமானவனே
சிறந்த பொருள் ஆனவனே ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
மங்கலமானவனே ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
மஞ்சா போற்றி மணாளா போற்றிமஞ்சா = ஆற்றல் உடையவனே
மணாளா = அழகுடையவனே

ஆற்றல் உடையவனே ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
அழகுடையவனே ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
பஞ்சு ஏர் அடியாள் பங்கா போற்றிபஞ்சு = செம் பஞ்சுக்குழம்பு
ஏர் = அழகு
பங்கா = உமை அம்மையை இட பக்கத்தில் கொண்டவர்
செம் பஞ்சுக்குழம்பு கூடிய அழகான திருவடிகளை உடைய உமை அம்மையை இட பக்கத்தில் கொண்ட ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
அலந்தேன் நாயேன் அடியேன் போற்றிநாயேன் = நாயை விட கீழானவன்

அலந்தேன் நாயை விட கீழானவன் என்னை பிரிந்த ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
இலங்கு சுடர் எம் ஈசா போற்றிஇலங்குதல் = விளங்குதல்

சுடர் ஒளி போல விளங்கும் என் ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
சுவைத்தலை மேவிய கண்ணே போற்றிசுவைத்தலை = ஒரு திருத்தலம் ( விபரம் அறியப்படவில்லை )

சுவைத்தலை என்ற திருத்தலம் அதனில் எழுந்து அருளிய கண் போன்ற ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
குவைப்பதி மலிந்த கோவே போற்றிகுவைப்பதி = இந்த திருத்தலத்தை பற்றி விபரம் காணப்படவில்லை

மலிதல் = மிகுதல்
குவைப்பதி என்னும் திருத்தலத்தில் மிகுந்து இருந்த ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
மலை நாடு உடைய மன்னே போற்றிமலை நாடு = சேர நாடு

சேர நாடு உடைய எங்கள் அரசன் ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
கலை ஆர் அரிகேசரியாய் போற்றி 190அரிகேசரி = ஒரு சிவத்தலம் எங்கு உள்ளது என்று அறியப்படவில்லை

கலைகள் , கலைஞர்கள் மிக்க அரிகேசரி என்ற சிவத்தலம் அதனில் உள்ள ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
திருக்கழுக் குன்றில் செல்வா போற்றிதிருக்கழுக் குன்றில் = திருக்கழுக்குன்றம்
திருக்கழுக்குன்றம் தலத்தில் வீற்றிருக்கும் செல்வனே ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
பொருப்பு அமர் பூவணத்து அரனே போற்றிபொருப்பு அமர் பூவணத்து = திருப்பூவணம்

திருப்பூவணம் அந்தனில் எழுந்து அருளிய ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
அருவமும் உருவமும் ஆனாய் போற்றிஅருவமும் = உருவமற்ற நிலை

உருவமற்ற நிலை மற்றும் உருவம் உள்ள நிலை என்று இரு நிலைகளை ஆன ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
மருவிய கருணை மலையே போற்றிமருவிய = காலப்போக்கில் சொல் வடிவம்


காலப்போக்கில் கருணையே வடிவான மலைபோல விளங்கும் ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
துரியமும் இறந்த சுடரே போற்றிதுரியம் எளிதாக சொல்வதென்றால் தியானத்தில் உயிர் எங்கிருந்து செயல்படுகிறது என்கிற நிலை.

துரியம் என்பது ஐந்து அவத்தைகளுள் ஒன்று.

1)நனவு : இது வடமொழியில் சாக்கிரம் என்ற‌ சொல்லப்படும். இந்நிலையில் உயிர் புருவ நடுவிலிருந்து செயல்படும்.
2) கனவு : சொப்பனம் என்று கூறப்படும். இந்நிலையில் கண்டத்திலிருந்து உயிர்
செயல்படும்.
3)உறக்கம் : சுழுத்தி என்று கூறப்படும்.இந்நிலையில் உயிர் இருதயத்திலிருந்து செயல்படும்.
4) பேருறக்கம் : இது துரியம் என்று கூறப்படும். இந்நிலையில் உயிர் உந்தியிலிருந்து
செயல்படும்.
5)உயிர்ப்படக்கம் : துரியாதீதம் என்று கூறப்படும். இந்நிலையில் உயிர் மூலாதாரத்திலிருந்து
செயல்படும்.
துரியம் என்ற நான்காம் நிலையை கடந்த ஒளி வடிவினனே ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
தெரிவு அரிது ஆகிய தெளிவே போற்றிதெரிவு அரிது ஆகிய = பருப்பொருளாலும் , நுண்பொருளாலும் அறிதற்கு அரிது ஆகிய
பருப்பொருளாலும் , நுண்பொருளாலும் அறிதற்கு அரிது ஆகிய நீ\, உனது அருளால் மட்டும் உன்னை பற்றி தெளியப்படும் ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
தேளா முத்தச் சுடரே போற்றிதேளா முத்து = துளை இடப்படாத முத்து

துளை இடப்படாத முத்து போன்ற ஒளி உடைய ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
ஆள் ஆனவர்களுக்கு அன்பா போற்றிஆள் ஆனவர்களுக்கு = இறைவனை வணங்குபவர்களுக்கு

வணங்குபவர்களுக்கு அன்பான ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
ஆரா அமுதே அருளா போற்றிஆரா அமுதே = தெவிட்டாத அமுதே

தெவிட்டாத அமுதம் போன்ற அருளை உடைய ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
பேர் ஆயிரம் உடைப் பெம்மான் போற்றி 200பெம்மான் = பெருமைக்குரிய மகன் , பெருமகன்

ஆயிரம் திருநாமங்களை உடைய பெருமானே ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
தாளி அறுகின் தாராய் போற்றிதாளி = ஓர்படர்கொடி அறுகம்புல்வகை நீண்ட தாளினை உடையது


நீண்ட தாளினை உடையது அறுகம்புல் மலையை அணிந்த ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
நீள் ஒளி ஆகிய நிருத்தா போற்றிநீள் ஒளி = திருமாலும் , பிரமனும் ஆடி முடி கனத்த அளவு நீண்ட ஒளியுடைய

திருமாலும் , பிரமனும் ஆடி முடி கனத்த அளவு நீண்ட ஒளியுடைய கூத்தனே ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
சந்தனச் சாந்தின் சுந்தர போற்றிசந்தனச் சாந்தின் = திருமேனியில் சாட்டப்பட்ட சந்தனம்

திருமேனியில் சாட்டப்பட்ட சந்தன கலவையின் அழகினை உடையவனே ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
சிந்தனைக்கு அரிய சிவமே போற்றிசிந்தனைக்கு அரிய = சிந்தனைக்கு எட்டாத

சிந்தனைக்கு எட்டாத சிவமே , என் ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
மந்திர மாமலை மேயாய் போற்றிமந்திர மாமலை = ஆகமங்களை வெளிப்படுத்திய மலை ஆனா மகேந்திர மலை

ஆகமங்களை வெளிப்படுத்திய மலை ஆனா மகேந்திர மலையில் நிறைந்தவனே ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
எந்தமை உய்யக் கொள்வாய் போற்றிஉய்யக் கொள்வாய் = ஆட்கொள்வாய்

என்னை ஆட்கொள்வாய் எந்தன் ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
புலிமுலை புல் வாய்க்கு அருளினை போற்றிபுலிமுலை = ஒரு புலியின் முலையை
புல் வாய்க்கு = மான் குட்டிக்கு
ஒரு புலி தன் முலையை ஒரு மான் குட்டிக்கு ஊட்டி விடும்படி அருளிய ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
அலைகடல் மீ மிசை நடந்தாய் போற்றிமீமிசை = மீது

( திருவிளையாடல் புராணம் ) அலைகடல் மீது வலைவீசி நடந்த ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
கரும் குருவிக்கு அன்று அருளினை போற்றிகரும் குருவிக்கு அன்று = கரும் குருவிக்கு அன்று மிர்துன்ஜ்ஜய மந்திரம் உபதேசித்துகரும் குருவிக்கு அன்று மிர்துன்ஜ்ஜய மந்திரம் உபதேசித்து அருளிய ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
இரும் புலன் புலர இசைந்தனை போற்றி 210இரும் புலன் புலர = இறைவனை அடைந்த அடியவர்களுக்கு அவர்களின் ஐம்புலன்களும் இன்பமாக தோன்றாது ஒழியும்
மிக வலிய ஐந்து புலன் வேட்கைகளும் ஒழித்து அருளும் ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
படி உறப் பயின்ற பாவக போற்றிபடி = நிலவுலகம்

பாவக = தோற்றம் உடையவனே
இந்த பூமியில் பல திருவுருவங்கள் காட்டிய ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
அடியொடு நடு ஈறு ஆனாய் போற்றிஅடியொடு நடு ஈறு = முதலும் , நடுவும் , முடிவும்

முதலும் , நடுவும் , முடிவும் ஆன ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
நரகொடு சுவர்க்க நானிலம் புகாமல்நரகொடு சுவர்க்க நானிலம் = நரகம், சுவர்க்கம் , புவியுலகம்
நரகம், சுவர்க்கம் , புவியுலகம் மறுபடி புகாமல்
பரகதி பாண்டியற்கு அருளினை போற்றிபரகதி = வீடுபேற்றினை

வீடுபேற்றினை பாண்டியனுக்கு அருளிய ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
ஒழிவற நிறைந்த ஒருவ போற்றிஒழிவற நிறைந்த = எங்கும் நீக்கமற நிறைந்த

எங்கும் நீக்கமற நிறைந்த ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
செழு மலர்ச் சிவபுரத்து அரசே போற்றிசெழு மலர்ச் = செழுமையான மலர்கள் நிறைந்த
செழுமையான மலர்கள் நிறைந்த சிவபுரத்து அரசே ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
கழு நீர் மாலைக் கடவுள் போற்றிகழு நீர் மாலை = செங்கழுநீர் மலை
செங்கழுநீர் மலை அணிந்த ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
தொழுவார் மையல் துணிப்பாய் போற்றிதொழுவார் = உன்னை வணங்குபவர்களின்

மையல் = மயக்கத்தை
உன்னை வணங்குபவர்களின் மும்மல மயக்கத்தை நீக்கும் ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
பிழைப்பு வாய்ப்பு ஒன்று அறியா நாயேன்பிழைப்பு வாய்ப்பு ஒன்று = இந்த உலகத்தில் பிழைக்கும் வாய்ப்பு ஒன்று

இந்த உலகத்தில் பிழைக்கும் வாய்ப்பு ஒன்றும் அறியாத நாயை விட கீழோனான அடியேன்
குழைத்த சொல்மாலை கொண்டருள் போற்றி 220குழைத்த சொல்மாலை = அடியேன் குழைத்த சொல்மாலை ஆகிய பாடல்களை

அடியேன் குழைத்த சொல்மாலை ஆகிய பாடல்களை ஏற்றுக்கொண்டு அருளிய ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
புரம்பல் எரித்த புராண போற்றிபுரம்பல் எரித்த புராண = திரிபுரங்களை எரித்த பழையோன்

திரிபுரங்களை எரித்த பழையோன் ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
பரம் பரம் சோதிப் பரனே போற்றிபரம் = மேலான

மேலான மேலான சுடர்விடும் ஒளியுடைய மேலோனே ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
போற்றி போற்றி புயங்கப் பெருமான்புயங்கப் பெருமான் = பாம்பை அணியாக உடைய பெருமானே

பாம்பை அணியாக உடைய பெருமானே ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் ! வணக்கம் !
போற்றி போற்றி புராண காரணபுராண காரண = மிகப் பழமையான காரணப்பொருளை உடையவனே
மிகப் பழமையான காரணப்பொருளை உடையவனே ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் ! வணக்கம் !
போற்றி போற்றி சய சய போற்றி 225சய சய = வெல்க வெல்க

ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் ! வணக்கம் ! வெல்க வெல்க ஆதி ஈசனே உந்தனுக்கு இந்த அடியவனின் வணக்கம் !
திருச்சிற்றம்பலம்
பதிப்பு உரிமை :- இந்த பதிப்பு / பதிவு சிவன் சொத்து.


No comments:

Post a Comment