மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Tuesday, February 8, 2022

சித்தர்கள் ஆட்சி - 49 : ஆதி ஈசன் புகழ் பாடும் திருக்குறள் - மறை பொருள் ரகசியம் குருநாதர் அருளால் வெளியான பொக்கிஷம்


குருநாதன் பொதிகை வேந்தன் அகத்திய மஹரிஷி பாதம் காப்பு






திருச்சிற்றம்பலம்

ஆதி கணபதி பாதம் காப்பு
ஆதி அம்மை அப்பன் பாதம் காப்பு.
வள்ளி தெய்வானையோடு அன்பாக அமர்ந்திட்ட ஐயன் அழகன் பாதம் காப்பு
குருநாதன் பொதிகை வேந்தன் அகத்திய மஹரிஷி பாதம் காப்பு
திருவள்ளுவப்பெருமான் பாதம் காப்பு
திருக்குறள் - கடவுள் வாழ்த்து ( 1-10)பொருள் உரை
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
எழுத்துக்கள் எல்லாம் அ என்ற அகரத்தில் தொடங்குகின்றன. அ என்ற எழுத்தே முதல் எழுத்து .

அது போல ஆதி பகவன் என்று அகத்திய மஹரிஷியின் சீடர் திருவள்ளுவப்பெருமான் அழைக்கும் எம்பெருமான் ஆதி ஈசன் அவர் முதன்மை இறைவனே அனைத்து உயிர் உள்ள (அசையும் ) மற்றும் உயிர் அற்ற ( அசையா ) அடங்கிய இந்த உலகத்திற்கு முதன்மை ஆனவர் ஆவர்.

ஆதி ஈசன் பொற்பாதம் போற்றி போற்றி போற்றி !
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
ஒருவர் என்னதான் கல்வி அதிகம் படித்து இருந்தாலும் அவர்கள் ஆதி இறைவன் ஈசன் பொற்பாதங்களை , நல்ல தூய அறிவாக இவுலகத்திற்கு விளங்கும் திருவடிகளை வணங்காமல் அவர்கள் கற்ற கல்வியினால் என்ன பயன் ?

அகத்திய மஹரிஷியின் சீடர் திருவள்ளுவப்பெருமான் இங்கு உலகோரை ஆதி இறைவன் ஈசன் பொற்பாதங்களை நித்தமும் வணங்கும்படி உள் பொருளுடன் அனைவருக்கும் அறிவுறுத்தி உள்ளார்.

ஆதி ஈசன் பொற்பாதம் போற்றி போற்றி போற்றி !
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்
நமது மனமாகிய மலர் போன்ற உள்ளத்தில் என்றும் நிறைந்து நீக்கமற அருளாக விளங்கும் ஆதி ஈசன் திருவடிகளை எப்பொழுதும் தன் சிரம் மேல் வைத்து வணங்குபவர்கள் மற்றும் அஃதே நினைப்பவர்கள் இந்த பூவுலத்தில் நெடும் காலம் நிலையாக புகழ் ஓங்கி வாழ்வார்கள்.

அகத்திய மஹரிஷியின் சீடர் திருவள்ளுவப்பெருமான் இங்கு உலகோரை ஆதி இறைவன் ஈசன் பொற்பாதங்களை பணிந்து திருவடி தீட்சை நித்தமும் வாங்கும்படி உள் பொருளுடன் அனைவருக்கும் அறிவுறுத்தி உள்ளார்.

ஆதி ஈசன் பொற்பாதம் போற்றி போற்றி போற்றி !
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
எந்தவிதமான விருப்பும் வெறுப்பும் இல்லாத ஆதி ஈசனின் பொற்பாதங்களை தனது தூய மனதால் எப்பொழுதும் நினைப்பவர்களுக்கு எக்காலத்திலும் , எப்போதும் , எவ்விடத்திலும் உலகத் துன்பம் ஒருபோதும் ஏற்படுவது இல்லை.


அகத்திய மஹரிஷியின் சீடர் திருவள்ளுவப்பெருமான் இங்கு உலகோரை ஆதி இறைவன் ஈசன் பொற்பாதங்களை பணிந்து திருவடி தீட்சை நித்தமும் நினைத்து வணங்கும்படி உள் பொருளுடன் அனைவருக்கும் அறிவுறுத்தி உள்ளார்.

ஆதி ஈசன் பொற்பாதம் போற்றி போற்றி போற்றி !
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
இவ்வுலகின் ஒரே உண்மைப்பொருள் ஆகிய எம்பெருமான் ஆதி ஈசனின் திருவடிகளை பணிந்தவர்கள் அவரின் மெய் புகழையே எபோழுதும் விரும்புகின்றவர்களிடம் , அறம் ( நல்வினை ) பாவம் ( தீவினை) என்ற அறியாமை என்னும் இருளினால் உண்டாகும் இருவகை வினையும் வந்து சேர்வதில்லை.

அகத்திய மஹரிஷியின் சீடர் திருவள்ளுவப்பெருமான் இங்கு உலகோரை ஆதி இறைவன் ஈசன் பொற்பாதங்களை பணிந்து நித்தமும் நினைத்து வணங்கி விதியை வெல்லும் எளிய மார்க்கத்தை உள் பொருளுடன் அனைவருக்கும் அறிவுறுத்தி உள்ளார்.

ஆதி ஈசன் பொற்பாதம் போற்றி போற்றி போற்றி !
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்
எம்பெருமான் ஆதி ஈசனின் பாதம் பணிந்து தனது உடல் , வாய், கண், மூக்கு, செவி ஆகிய புலன்களின் வழியாக உருவாகும் தீய ஆசைகளை ஒழித்து ஆதி ஈசன் வழி ஒழுக்கம் உள்ள நேர்மையான வழியில் செல்பவர்கள் வாழ்வு நிலையான நல்வாழ்வாக மிக்க புகழுடன் அமையும்.

அகத்திய மஹரிஷியின் சீடர் திருவள்ளுவப்பெருமான் இங்கு உலகோரை ஆதி இறைவன் ஈசன் பொற்பாதங்களை பணிந்து நித்தமும் நினைத்து வணங்கி ஐம் புலன்களை நல்ல வழியில் செலுத்தி நலவாழ்வு வாழும் மார்க்கத்தை உள் பொருளுடன் அனைவருக்கும் அறிவுறுத்தி உள்ளார்.

ஆதி ஈசன் பொற்பாதம் போற்றி போற்றி போற்றி !
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது
ஆதி ஈசன் முதன்மை ஆனதால் அவருக்கு இணையான ஒருவர் இந்த 1008 அண்ட பேரண்டத்தில் எங்குமே இல்லை. தனக்கு ஈடு இணை இல்லாத எம்பெருமான் ஆதி ஈசன் திருப்பாதங்களை சேர்ந்தவர்கள் அதாவது எப்பொழுதும் நினைப்பவர்கள் தவிர மற்றவர்களுக்கு அவர்களின் மனக்கவலையைப் போக்குவது கடினம்.

அகத்திய மஹரிஷியின் சீடர் திருவள்ளுவப்பெருமான் இங்கு உலகோரை ஆதி இறைவன் ஈசன் பொற்பாதங்களை பணிந்து நித்தமும் நினைத்து வணங்கி கொடிய மனக்கவலையை வெல்லும் எளிய மார்க்கத்தை உள் பொருளுடன் அனைவருக்கும் அறிவுறுத்தி உள்ளார்.

ஆதி ஈசன் பொற்பாதம் போற்றி போற்றி போற்றி !
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
அறக்கடலாக விளங்கும் எம்பெருமான் ஆதி ஈசன் திருப்பாதங்களை எப்பொழுதும் நினைப்பவர்கள் தவிர மற்றவர்களுக்கு பிறவி என்னும் கடலை கடப்பது கடினம்.

அகத்திய மஹரிஷியின் சீடர் திருவள்ளுவப்பெருமான் இங்கு உலகோரை ஆதி இறைவன் ஈசன் பொற்பாதங்களை பணிந்து நித்தமும் நினைத்து வணங்கி இந்த பிறவியை வெல்லும் எளிய மார்க்கத்தை உள் பொருளுடன் அனைவருக்கும் அறிவுறுத்தி உள்ளார்.

ஆதி ஈசன் பொற்பாதம் போற்றி போற்றி போற்றி !
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
எட்டு விதமான உத்தம குணங்கள் உடைய எம்பெருமான் ஆதி ஈசன் திருவடிகளை வணங்காதவர்கள் நிலை எப்படிப்பட்டது எனில் எவ்வாறு உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம் புலன்கள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஆதி ஈசன் திருவடிகளை வணங்காதவர்கள் அடைவர்.

அகத்திய மஹரிஷியின் சீடர் திருவள்ளுவப்பெருமான் இங்கு உலகோரை ஆதி இறைவன் ஈசன் பொற்பாதங்களை பணிந்து நித்தமும் நினைத்து வணங்கி இந்த மனித பிறப்பு முழு வாழ்வாக விளங்க உள் பொருளுடன் அனைவருக்கும் அறிவுறுத்தி உள்ளார்.

ஆதி ஈசன் பொற்பாதம் போற்றி போற்றி போற்றி !

எண்குணங்களாவன:

1. தன்வயத்தன் ஆதல்
2. தூய உடம்பினன் ஆதல்
3. இயற்கை உணர்வினன் ஆதல்
4. முற்றும் உணர்தல்
5. இயல்பாகவே பாசங்களின் நீங்குதல்
6. பேரருள் உடைமை
7. முடிவு இல் ஆற்றல் உடைமை
8. வரம்பு இல் இன்பம் உடைமை

என இவை. இவ்வாறு சைவாகமத்துக் கூறப்பட்டது. ‘அணிமா” வை முதலாக உடையன எனவும், “கடையிலா அறிவை” முதலாக உடையன எனவும், உரைப்பாரும் உளர்.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
எம்பெருமான் ஆதி ஈசன் திருவடிகளை எப்பொழுதும் வணங்குபவர்கள் இந்த கொடிய பிறவி என்னும் கடலை கடந்து முக்தி என்ற பேரின்பத்தை ( பிறவா நிலையை) அடைவார்கள். வணங்காத மற்றவர்கள் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்துக்கொண்டே இருப்பார்கள். வணங்காதவர்கள் பிறவி கடலை கடக்க இயலாது.

அகத்திய மஹரிஷியின் சீடர் திருவள்ளுவப்பெருமான் இங்கு உலகோரை ஆதி இறைவன் ஈசன் பொற்பாதங்களை பணிந்து நித்தமும் நினைத்து வணங்கி இந்த மனித பிறப்பு நிறைந்து முக்தி அடைய உள் பொருளுடன் அனைவருக்கும் அறிவுறுத்தி உள்ளார்.

ஆதி ஈசன் பொற்பாதம் போற்றி போற்றி போற்றி !
ஆதி ஈசன் குறித்து கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் திருவள்ளுவர் சித்தர் எழுதிய பெயர்கள்
1. ஆதிபகவன்1. இவ்வுலகுக்கு எண்ணையும், எழுத்தையும் முதன் முதல் அறிவித்ததனால் ஆதிபகவன்.
2. வாலறிவன்2. வினையின் சிறிது காலம் ஆட்பட்டு, தன் முயற்சியால் அவ்வினையின் நீங்கியதால் தூய அறிவு என்னும் கேவல ஞானத்தை அடைந்ததனால் வாலறிவன்.
3. மலர்மிசை ஏகினான்3. அவ்வாறு பகவான் கேவல அறிவு (தூய அறிவு) பெற்றதைத் தன் அவதி ஞானத்தால் அறிந்த தேவேந்திரன் அவருக்கு ”சமவசரண” அமைத்து, அவர் எழுந்தருள பாத அடிகளில் தாமரை மலரை அமைக்கிறான். பகவான் அந்த தாமரை மலரிகளில் நடந்ததனால் மலர்மிசை ஏகினான்.
4. வேண்டுதல் வேண்டாமை இலான்4. காமம் வெகுளி மயக்கம் என்ற முக்குற்றத்தினை அகற்றினதால் வேண்டுதல் வேண்டாமை இலான்.
5. தனக்குவமை இல்லாதான்5. தேவர்களால் பூஜிக்கப்பட்டவனும், “சமவசரணம்” என்னும் கோட்டத்தில் எழுந்தருளியச் சிறப்புப் பேறுப்பெற்றவனானதால் தனக்குவமை இல்லாதான்.
6. பொறிவாயில் ஐந்தவித்தான்6. நம்மைபோல் தாய் வயிற்றில் பிறந்து, வினைகளுக்குக் காரணமான ஐம்பொறிகளையும் அடக்கினதாலே பொறிவாயில் ஐந்தவித்தான்.
7. இருவினை சேரா இறைவன்7. காதி, அகாதி என்ற இருவினைகளை தன்னிடம் சேரா நின்றதால் இருவினை சேரா இறைவன்.
8. அறவாழி அந்தணன்8. சமவசரணம் என்னும் திருக்கோயிலில் மண்ணுயிர் முதலான அனைத்து உயிர்களும் உய்ய அறம் உரைத்ததனால் அறவாழி அந்தணன்.
9. எண்குணத்தான்9. எட்டு வினைகளை வென்று எட்டுக் குணங்களைப் பெற்றதனால் எண்குணத்தான்.
10. இறைவன்10. பிறவி என்னும் பெறுங்கடலை கடக்க புணையாக மக்களுக்குத் விளங்கியதால் இறைவன் (தீர்த்தங்கரர்).
திருச்சிற்றம்பலம்
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
நான்மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்.
சைவ மகுடம்
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
அண்ணாமலை எம் அண்ணா போற்றி!
கண்ணாரமுதக் கடலே போற்றி.
சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
பராய்த்துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீரார் திருவையாறா போற்றி
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி
பாகம் பெணுரு ஆனாய் போற்றி
தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்றெனக்கு ஆரமுதானாய் போற்றி
குவளைக் கண்ணி கூறன் காண்க அவளுந்
தானும் உடனே காண்க காவாய் கனகத் திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
இன்பமே சூழ்க!
எல்லோரும் வாழ்க!!
திருச்சிற்றம்பலம்
பதிப்பு உரிமை :- இந்த பதிப்பு / பதிவு சிவன் சொத்து.

 

No comments:

Post a Comment