மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Saturday, December 18, 2021

அகத்தியர் ஆலயம் மூன்றாம் கந்த நாடி- 7/1/2020

 



மூன்றாம் கந்த நாடி- 7/1/2020


(மதுரை பசுமலையில் பிப்ரவரி7ஆம் தேதி 2020ஆம் ஆண்டு குடமுழுக்கு விழா காண உள்ள அகத்திய மஹரிஷி ஆலயம் குறித்த முருகப்பெருமான் நாடியில் அருளிய வாக்கு)



வல்லான வகையான முறையான அமைப்பில் வந்ததொரு பாண்டிமாநகர நாடும் சீர்புகழும் நலமதுவும் உண்டு நண்மை கண்டன்ன் அகத்தியன் ஆலயம் அரும்ப குடமுழுக்கு செய்தி அது கந்தன் மகிழ்ந்தேன்.

சீருண்டு முறையாக கந்தசீடனது தனக்கும் அகத்தியனுக்கும் சிறப்புறவே ஓர் ஆலயம் அமைவது தொண்டர்கள் அனைவருக்கும் பரிபூரன ஆசிர்வாதம் உண்டு உண்டு. நலமாக கந்த சீடன் தனக்கு ஓர் ஆலயம் அமைப்பதில் கந்தனுக்கு மகிழ்ச்சியே தான்.

சிறப்புண்டு நலமாக இதை அமைக்கும் குழுமம் என்ன செய்ய வேண்டும் என்ற ஒரு கேள்விதன்னை அது தொடுத்ததால் லாபம் ஆகும். நலமுண்டு கிருத்திகை நன்நாள் இன்றும் உறைகின்ற நேரத்தில் மகிழ்ந்து உரைக்கும் நிலை அதுவும் கண்டன்ன் லாபம் லாபம். 

சீருண்டு முறையாக லாபம் மார்கழி ஆயில்யம் முதல்ஆகவே நண்மை முன்னர் அனுகூலம் கன்டனன் குருவின் பூசை அனுகூலம் ஆனபடி கண்டேன் ஆதலால் நட்ப்பாக கண்டதொரு வேளை முடித்தது விட்டிடலாம்.

குடமுழுக்கு கண்ட பின்னே ஒவ்வொரு ஆயில்யம் வரும் நேரம் முறையாக நண்மை நிலை அகத்தியன் ஜென்மம் நட்சத்திரம் தன்னில் முழுத்திருமஞ்சனத்தோடு அன்னதான தருமங்கள் செய்வதே இந்த குழுவிற்க்கு பணியது என்பேன்.ஓர் வருடம் அப்படியே செய்து வரலாம்.

( இவ்வாலயத்தில் நடக்க உள்ள அற்புத மகிமை திருவிளையாடல்கள் எல்லாம் பின்வருமாறு கந்தன் உரைத்துள்ளார். நன்கு படித்து மகிழ்க.)

பிள்ளை இல்லாதோர் பிள்ளை பெறுதல், கணவன் மனைவி சந்தோஷப்படுதல், மணம் ஆகாதோர் மணம் அமைக்கப்பெறுதல், பணி இல்லாதோர் பணி அமைக்கப்பெறுதல், பணம் இல்லாதோர் பணம் கிடைக்கப்பெறுதல், அருள் பெறுவோர் அருள் கிடைக்கப்பெறுதல், பொருள் கேட்ப்போர் பொருள் கிடைக்க பெறுதல், அவர் அவர் இச்சை எப்படியோ அப்படி அகத்தியன் படி அளப்பான். அனுகூலம் இது எல்லாம் திருவாதிரை மண்டலத்தில் பதிந்து சித்தர்கள் மண்டலத்தில் பதிந்து இருக்கும் செய்தி. முறையாக ஈசன் அருளும் பரிபூரணமாக கிட்டும்.

செய்யும் தானம் அன்னதானம் பூசை முறையாக நல்லதாம். அடியார்களை ஒன்று கூட்டி சிறப்புறவே நல்லதோர் அகத்தியன் புகழ்பாடி சீராக அவ்வாலயம் தன்னில் எல்லோரும் செல்ல முடியாவிட்டாலும் அவர் அவர் உரிய நிதி திரட்டி முறையாக அவ்வாலயத்தில் ஒவ்வொரு மாதமும் ஆயில்ய பூசை தனை அமர்த்த வேணும் செய்ய வேணும் என்பதே இந்நேர கட்டளை என்பேன் கேட்டு நட என்று கந்தன் பகர்ந்தார்.

----------------------கந்த நாடி முற்றே -----------------------------------------------