அகத்திய மஹரிஷி பாதம் காப்பு
அகத்திய மஹரிஷி பொது நாடி வாக்கு:
வாசிக்கப்பட்ட இறை தலம் :- மதுரை பசுமலையில் சக்தி மாரியம்மன் தளத்தில் அமைந்துள்ள அன்னை லோபாமுத்திரை உடன் உறை அகத்திய மஹரிஷி ஆலயம்
நாடி அருளாளர்:- திரு.ஜானகிராமன் ஐயா அவர்கள்.
6-September-2021, திங்கள் கிழமை
குருநாதர் நாடி வாக்கு ஆரம்பம்:-
ஆதி ஈசன் பொற்ப்பாதத்தை தொழுது உரைக்கின்றேன் அகத்தியன்.
நலன்களே என் அருள்களால் நலமே மிஞ்சும் என்பேன். மிஞ்சும் என்பேன் யான் வாரத்திற்க்கு ஒரு முறை இங்கு தங்கித்தங்கி செல்கின்றேன்.பின் அவ்நாளும் ( அந்த நாளை ) பின் நல்முறைகளாக உரைக்கின்றேன். பின் குரு வாரம் என்கின்றார்களே அவ்வாரத்தில் ( ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் ) யான் தங்கித்தங்கி சென்றிருக்கையில் பின் அப்பொழுது கூட அனைவரும் நல்முறைகளாக வந்தார்கள் பலர். பல என்பேன் அதனால் பல பல பேர்களுக்கும் ஆசிகள் தந்து கொண்டேதான் இருக்கின்றேன். மேன்மைகள் பெறும். ஆனாலும் சில கட்டங்கள் வந்து வாட்டுவதறக்கும் எவ்வாறு எனபதையும் புரியுதல் நிலை ஏற்றவாறு அன்றொரு தினத்தில் ( வியாழன் ) நல்முறைகளாக இங்கு அமர்ந்து வந்து துவில் வந்து சென்றுவிட்டால் ஆனாலும் சென்றுவிட்டு நல்முறையாய் பின் ஓர் மாதத்திற்க்கு (30 நாட்கள்) இயலாதவருக்கு அண்ணம் அளித்து வந்தால் என்னுடைய அருள் ஆசிகள் பலம்.அனைத்தும் (கெட்ட கர்மா) விலகிப்போகும். ஆனாலும் இவை அன்றி இப்படியே செய்ய பின் மதுரை நல்முறைகளாக வாழும் மீனாட்சி தாயும் பின் அதன்உள்ளே ( மதுரை மீனாட்சி ஆலயத்தின் உள்ளே) ஓர் மாதம் அங்கும் தங்கி இருக்க பின் நல் முறைகளாகவே திருப்பரங்குன்றம் நல்முறைகளாகவே அங்கும் ஓர் மண்டலம் (48 நாள்) தரிசிக்க பின் பழமுதிர்ச்சோலையும் (48 நாள்) தரிசிக்க , இவை ( கட்டங்கள்/கர்மா ) அனைத்தும் ஒவ்வொன்றும் நீங்கி நல் முறைகளாக நினைத்ததை நிச்சயமாய் நடை பெறும் என்பேன். யான் சொல்வதை சரிமுறையாக கேட்க்க ஒரு துன்பம் இல்லை என்பேன். துன்பமில்லை என்பேன் இவ்வாலயத்தின் சிறப்பு கூட இது. எவ்வாறு என்பதை கூட மிஞ்சிப்பார்க்கும் அளவிறக்கு வரும் காலங்களில் யான் வந்து கொண்டுதான் இருப்பேன் இங்கு. ஏனென்றால் நல்முறைகளாக என்னுடைய பக்தர்கள் எவ்வாறு எனபதையும் கூட என்மேல் அன்பு காட்டி நல்முறைகளாக உறுவாக்கினார் என்பது மெய். அதனால் நல் முறைகளாக அவர்களுக்கும் என்னுடைய ஆசிகள் பல பல என்பேன். பல பல என்பேன் சித்தர்களின் அனுக்கிரகமும் பல கோடி என்பேன். இதனால் நல்முறைகளாகவே திருமூலனும் நல்முறைகளாகவே அருணகிரியும் வந்து வந்து செல்கின்றார் என்பேன். ( இவ்வாலயத்தில் சித்தர் திருமூலர் , அருணகிரிநாதர் இருவருக்கும் நுழைவு மேல் தளத்தில் உருவசிலை இறை அருளால் அமையப்பெற்றது.இங்கு வருபவர்கள் அவசியம் அவர்களை வணங்கி ஆசி பெறுங்கள்). என்பேன் எதனால் என்பதைவிட யான் இருக்கும் இடத்தில் அனைத்து சித்தர்களும் வருவார்கள் என்பது மெய். அதனால் யான் சொன்னேன். பின் நல் முறைகளாக அன்போடு ஏற்படுத்தியது இத்தலம். அவ்வாறு ஏற்படுத்தினால் நிச்சயமாய் அன்போடு நல்முறைகளாகவே எவை வேண்டும் என்று மனதில் எண்ணிக்கொண்டே என்னை வணங்கினால் போதும். யான் கொடுப்பேன் அனைத்தும். இதனையன்றி பின் அதைவேண்டும் இதைவேண்டும் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு இருந்தால் நிச்சயம் அதனை யான் ஏற்க்க மாட்டேன் இத்தலத்தில். அதனால் தான் அன்போடு வாருங்கள் ஏனென்றால் என்னை அன்போடே உருவாக்கியவர்கள் நல் முறைகளாக என் பகத்தர்கள். அதனால் அன்போடுதான் வணங்கவேண்டும். நல்முறைகளாக இன்னும் பல சூட்சமங்கள் உண்டு என்பேன் உண்டு என்பேன். நல்முறைகளாகவே எவ்வாறு என்பதையும் கூட இங்கு நிச்சயமாய் வரும் தைப்பூசம் அன்று வெகு சிறப்பாக நடைபெற வேண்டும் முருகன் பாடலை பாடி நல்முறைகளாக 3 தினங்களாக இங்கு நல்முறைகளாக முருகனும் வந்து வலம் வருவான். இன்னும் இத்தலம் சிறப்பு பெரும் என்பேன்.
நல்முறையாக ஏற்றங்கள் உண்டு என்பேன். உண்டு என்பேன். நல்முறைகளாகவே இவையன்றியும் கூட இன்னும் சில சில மனிதர்களுக்கும் எவை வேண்டும் என்று கூட நினைக்காமல் வந்து வணங்குகின்றனர். ஆனாலும் அவர்களுக்கும் யான் நல் ஆசிகள் கொடுத்துக்கொண்டேதான் வந்திருக்கின்றேன். அனைவருக்கும் இங்கு வருபவர்களுக்கும் அனைவருக்கும் என்னுடைய ஆசிகள் நிச்சயம் கிட்டும். ஆனாலும் அதை உணரவதற்க்காக யான் கட்டங்களை ஏற்ப்படுத்துவேன் சில. அதையும் தாண்டி வர நல்முறையான ஆசிகள் என்பேன்.
ஆசிகள் என்பேன் ஏனென்றால் இதனையும் சமநிலை படுத்த பின் ஒன்றும் தெரியாமலே வருகின்றனர். அதனால்தான் சிறிது கட்டங்கள். அவ்வனுபவத்தின் மூலம் இறைவனை நிலையான பொருளை நிச்சயம் அவர்கள் கண்டுபிடித்து நல்முறையாக மனம் மாற்றங்கள் அடைய யான் சில சோதனைகள் செய்வேன். அதனையும் மீண்டு நல் முறைகளாக வந்துவிட்டால் அப்பனே அற்ப்புதங்கள். அப்பனே இவ்வுலகில் எதுவும் பெரிதில்லை அப்பா. இறை அருளே மிகப்பெரியது. அவ்விறையருளை பெற்று விட்டால் அனைத்தும் இறைவனே தருவான் என்பேன்.
அதனால் எவையும் கேட்கப்பட தேவையில்லை என்பேன். அன்பை மட்டும் செலுத்துங்கள். அன்பை மட்டும் செலுத்துங்கள்.இதுவே போதுமானது. எதையும் எவைஎன்றும் எதனைஎன்றும் மனிதனால் பெற முடியாது என்பேன். இறைவன் நினைத்தால்தான் அனைத்தும் நடக்கும் என்பேன். அதனால்தான் சொல்கின்றேன். பின் நல்முறைகளாகவே அன்போடு அகத்தியா நல்முறையாய் முருகா பின் ஈசா என்றெல்லாம் வணங்கி வந்தாலே அவன்தனை பின் பெயர் வைத்து அழைத்தாலே ஓடோடி வந்து விடுவான். ஆனால் அதற்க்கு தகுந்தாற்போல் மனிதர்கள் ஒழுக்கச்சீலர்களாக வாழ வேண்டும் என்பேன். ஒழுக்கம் நல் முறைகளாக இருந்துவிட்டால் அவனைத்தன் தேடி அனைத்தும் வந்துவிடும். ஒழுக்கம் இல்லை என்றால் அப்பனே எது வந்தாலும் நிறக்காது என்பேன். அப்பனே இதனால்தான் எவ்வாறு என்பதைக்கூட வள்ளுவன் சிறப்பாக கூறி இருக்கின்றான். அப்பனே இக்காலத்திலும் ஒழுக்கச்சீலர்களாக அப்பனே இருப்பவர்கள் கூட அழிந்து போவார்கள் எதனை என்று கூறும் அளவிற்க்கு கூட. ஆனாலும் ஒழுக்கம் நல்முறைகளாக இருந்து விட்டால் அவனிடம் நற்ப்பண்புகள் பெருகும். பெருகும் அவனிடத்தில் ஆசைகள் இருக்காது என்பேன். இதனால் அன்புடன் இறைவனை வணங்குவான். அனைத்தும் இறைவன் கொடுப்பான் என்பேன்.
No comments:
Post a Comment