மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Monday, December 20, 2021

சித்தர்கள் ஆட்சி - 5

 


அகத்திய மஹரிஷி பாதம் காப்பு

குரு நாதர் அகத்திய மஹரிஷி , அன்னை உலோபாமுத்திரை இருவரையும் இனைந்து புகழ் பாடும் பாடல் ஒன்றை பார்ப்போம்.

உமை நிகர் ஒருத்தி உள்ளாள்
      உலோபாமுத்திரையே யன்னாள்

நமை நிகர் ஒருத்தன் உள்ளான்
       நலத்தமிழ் முனியே யன்னான்

இமையவர் அறமின் என்ன
      எந்தையே அருளிச் செய்யக்

கமைமிகு தவம்பேறுற்றார்
       கழலிணைக் கன்பு செயவாராம்.

        ⁃மண்ணிப்படிக்கரைப் புராணம்


இந்த உலகில் உமைக்கு, அம்பிகை சிவகாமி சுந்தரிக்கு நிகராக ஒருத்தி உள்ளாள் என்றால் அது உலோபாமுத்திரையே.எமக்கு ( சிவபெருமான் ) நிகரானவர் ஒருவர் தமிழ் மொழிக்கு மூலமான தமிழ் முனிவர் அகத்திய மஹரிஷியே ஆவார்.

இப்படி சிவபெருமானின் மூலம் இந்திராதி தேவர்களுக்கு அருளிய அருள் வாசகத்தின் படி , சிவபெருமானே எனக்கு நிகரானவர் என்று போற்றப்பட்டுவர்  என்றால்
நமது குருநாதர் தமிழ் முனிவர் பொதிகை வேந்தன் அகத்திய மாமுனி பெருமை விவரிக்க இயலா.

🙏*குருவடி சரணம்*🙏
🙏*குரு பாதுகை சரணம்*🙏


அகத்திய மஹரிஷி புகழ் ஓங்குக

No comments:

Post a Comment