6/9/2021 அன்று மதுரை பசுமலை அகத்திய மஹரிஷி ஆலயத்தில் , குருநாதர் அகத்திய மஹரிஷி உரைத்த வாக்கு.
நிலையானது இறைவன் அருளே. மற்றவை எல்லாம் நிலை அற்றது. ஆனால் முட்டாள் மனிதன்நிலையற்றதையே தேடிக்கொண்டு இருக்கின்றான். நிலை இல்லாத்தை தேடிப்போனால் மோசம்போய்விடுவான் மனிதன். ஆனாலும் நல்முறைகளாக அனைத்தும் நீயே ( இறைவா ) என்று கூறிவிடுஅதுவும் நன்முறையாகவே நடக்கும். அப்பனே அனைத்தும் எந்தன் இல்லை , இறைவாஉன்னிடத்திலேயே ஒப்படைத்து விடுகின்றேன் என்று ஒரு நிலையை யோசித்தால் பின் இறைவன்பாரத்துக்கொள்வான். ஆனாலும் ஒருவன் கூட அவைபோல் நினைப்பதும் இல்லை. இதுவரை யான் பார்ததும் இல்லை.
நல்முறைகளாக பிறருக்காக வாழவேண்டும் என்ற கொள்கையைபிடித்தால் உந்தனுக்காக இறைவன் வாழ்வான். அதை விட்டு விட்டு தான் மட்டும் நன்றாக இருக்கவேண்டும் என்று என்னினால் இது நிச்சயம் முடியாது என்பேன்.
No comments:
Post a Comment