அகத்திய மஹரிஷி பாதம் காப்பு
கலி / கலி புருஷன் நம் கண்ணுக்கு தெரியா நிரந்தர (Covid) கொரோனா. நமக்கு தெரியாமலேயே பாதிப்புக்கள் அதிகம்.
அதை அழிக்க ஒரே வழி திருவாசகம் ஒவ்வொரு இல்லத்திலும் ஓதுதல் அவசியம். ஒவ்வொரு இல்லத்திலும் மன நிறைவு, மகிழ்ச்சி எப்போதும் நிலைக்க திருவாசகம் ஒதுதல் அதி மிக அவசியம். உங்கள் இல்லத்தில் சிவன் அடியவர்களை அழைத்து அவர்களை கொரவித்து , ஈசனாக பாவித்து அன்னம் அளித்து வர, இறைவன் அருளால் மிக்க நலம் விழையும்.
இது தொடர்பாக இறை , குரு நாதர் நாடி வாக்குகள் நமது ஆழ் சிந்தனைக்கு இங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
நன்றி: - சித்தன் அருள் வலைதளம் , நாடி அருளாளர் திரு.ஜானகிராமன் அய்யா அவர்கள்.
=========================================================
20/10/21 பௌர்ணமி அன்று ஆதி சித்தன் சிவன் உரைத்த பொதுவாக்கு. இடம்: கங்கைகரை காசி.
யானே என்பதற்கிணங்க யான் எழுதிய சிவ புராணத்தையும் ஓதுக.ஓதுக! ஓதுக! ஓதிக்கொண்டே இருக.
=========================================================
11/11/2021 அன்று கந்தன் ஜீவநாடியில் உரைத்த பொது வாக்கு
வாக்குரைத்த ஸ்தலம். மாதேஸ்வரன் மலை கர்நாடகா.
என் தந்தை ஈசனே திருவாசகத்தை எழுதினான் எழுதினான் என்பதற்கிணங்க அனைத்து விஷயங்களும் அதிலேயே அடங்கி உள்ளது.அது ( திருவாசகம் ) பெரும் பொக்கிஷம் ஆனாலும் அதனை கூட உணராமல் செய்து கொண்டிருக்கின்றான் மனிதன்.
=========================================================
14/12/2021 அன்று ஏகாதசி திதியில் குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு.
அனுதினமும் பின் திருவாசகத்தை இல்லம் அதில் பின் அனைத்து சிவனடியார்களையும் அழைத்து வந்து ஓதுதல் வேண்டும். இவ்வாறு ஓதுதல் வேண்டும் என்பதே உறுதியானது. இவ்வாறு பின் ஓதி வந்தால் கலிபுருஷனும் ஈசனுக்கு பயப்பட்டு பின் ஒதுங்கி விடுவான் என்பது மெய்யே.
- அகத்திய மஹரிஷி
=========================================================