மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Saturday, June 21, 2025

சித்தர்கள் ஆட்சி - 461 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - ஈரோடு சத்சங்க வாக்கு ( April 2024 ) - பகுதி 5

இறைவா நீயே அனைத்தும்.

இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும். 





அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய - ஈரோடு சத்சங்க வாக்கு ( April 2024 ) - பகுதி 5

ஆதி ஈசனின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 

(இவ் தொடர் சத்சங்க வாக்கின் முந்தைய பதிவுகள்:- 

1. சித்தர்கள் ஆட்சி -  450 - பகுதி 1
2. சித்தர்கள் ஆட்சி -  451 - பகுதி 2
3.     சித்தர்கள் ஆட்சி -  458 - பகுதி 3
4.     சித்தர்கள் ஆட்சி -  460 - பகுதி 4
5.     சித்தர்கள் ஆட்சி -  461 - பகுதி 5

)

அடியவர் 4 :- ஐயா அடுத்து நான் என்ன செய்ய வேண்டும்.


குருநாதர் :- அப்பனே உன் கடமையைச் செய். போதுமானது. 


(தனி வாக்குகள்)


அடியவர் 6 :- ( சில தனி உரையாடல்கள் ) 


குருநாதர் :- ( மனக்குழப்பங்கள்) இவ்வாறெல்லாம் வைத்துக் கொள்ளக் கூடாது. ஒரே மனமாக இருக்க வேண்டும். 


குருநாதர் :- ( அங்கு ஒரு அடியவரை எழுப்பி ,  மற்ற அடியவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு எடுத்துரைக்க அருளினார்கள்) 


அடியவர் 6 :- ( உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேளுங்கள்) 


அடியவர் 7 :- ( என்ன வேண்டும் என்பதை மிக அழகாக கருணைக் கடலிடம் வேண்டினார்கள். இதுதான் பக்குவத்தின் உச்சம் என்பது) 


( …………… ) இந்த ஜென்மத்தோட போதும். பிறவாமை வேண்டும். பிறவாமை இல்லை என்றால் ( மீண்டும் பிறவி எடுத்தால் குருநாதா ) உங்களை என்றும் மறவாமை வேண்டும். ஒவ்வொரு ஜென்மத்திலும் எப்பொழுதும், கணப்பொழுதும் எங்களை விட்டு நீங்கள் விலகாமை வேண்டும். 


குருநாதர் :- அம்மையே அவள் மட்டும் அப்படிப் பேசுகின்றாள். ஏன் நீ இப்படிப் பேசவில்லை? 


(தனி வாக்குகள்) 


குருநாதர் :- அம்மையே இன்னும் கூறு அவள்தனக்கு. 


அடியவர் 7 :- (குருநாதர்) அவங்க ( நம்மை ) பாத்துக்குவாங்க. இருந்தாலும் நம்ம வேண்டுதலையே நம்ம அவங்களுக்கு சமர்ப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஐயா எனக்கு நல் வாழ்வு கொடுங்கள். ஏற்றமான வாழ்வு கொடுங்கள். என்னை விட்டு கணப்பொழுதும் நீங்கி விடாதீங்க. இதுதான் என்னுடைய மிகப்பெரிய வேண்டுதல்.


சுவடி ஓதும் மைந்தன் :- (இவ் அடியவரை எடுத்துரைக்க வைத்து , இதே போல் குருநாதர் கேட்டவை போல் உரைக்கச் சொன்னார்கள். அவ்வடியவரும் இதனை அவ்வாறே வழிமொழிந்தார்கள்) 


அடியவர் 7 :- நல்வாழ்க்கை எனக்கு கொடுங்க. 

அடியவர் 6 :- ( வழிமொழிந்தார் அவ்வாறே) 


அடியவர் 7 :- ஏற்றம் மிகு வாழ்க்கையைக் கொடுங்க. 

அடியவர் 6 :- ( வழிமொழிந்தார் அவ்வாறே) 


அடியவர் 7 :- என்னால் என் குடும்பமும் சுற்றமும் நன்றாக இருக்க வேண்டும்.

அடியவர் 6 :- ( வழிமொழிந்தார் அவ்வாறே) 


அடியவர் 7 :- என் தாய், தந்தை, சகோதரி (சகோதரன்) சந்தோஷமாக இருக்க வேண்டும். 

அடியவர் 6 :- ( வழிமொழிந்தார் அவ்வாறே) 


அடியவர் 7 :- (இனி) எனக்கு பிறவி வேண்டாம். பிறவி இருந்தால் நீங்க என் கூடவே இருக்க வேண்டும். 

அடியவர் 6 :- ( வழிமொழிந்தார் அவ்வாறே) 


அடியவர் 7 :- என் உடல், பொருள், மனசு எல்லாம் நல் செயல் ஆற்ற வேண்டும். 

அடியவர் 6 :- ( வழிமொழிந்தார் அவ்வாறே) 


அடியவர் 7 :- தான தர்மங்கள் செய்ய வழி விட்டு நில்லுங்கள். 

அடியவர் 6 :- ( வழிமொழிந்தார் அவ்வாறே) 


அடியவர் 7 :- ஒரு கனம் கூட கெட்டதை நினைக்கக்கூடாது. 

அடியவர் 6 :- ( வழிமொழிந்தார் அவ்வாறே) 


அடியவர் 7 :- இது என்றைக்குமே என் உடம்பில் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். 

அடியவர் 6 :- ( வழிமொழிந்தார் அவ்வாறே)


( தனி நபர் வாக்குகள்) 


( நம் அன்பு குருநாதர், ஆலயங்களில் இறைவனிடத்தில் எப்படி வேண்ட வேண்டும் என்ற மகத்தான பாடம் எடுத்தார்கள்)


குருநாதர் :- (அம்மையே) மீண்டும் ஏதாவது சொல்.


அடியவர் 7 :- நான் Job கேட்டதற்கு எனக்கு இன்று ஒரு நல்ல கருத்து சொல்லியிருங்கீங்க. நான் இதைக் கட்டாயமாக follow பன்றேன். நீங்க என்னென்ன எல்லாம் நிறை குறை சொல்லியிருக்கின்றீர்களோ, அதை நான் தீர்க்கமாகக் கடைபிடிக்கின்றேன்.  எங்கேயாவது நான் தடுமாறும் இடத்தில் என்னை கை பிடித்து கூட்டிட்டு போங்க.


அடியவர் 6 :- (அப்படியே சொல்ல முயன்றார்)


குருநாதர் :- அம்மையே இது போலத்தான் இறைவனிடத்தில் நீ கேட்க வேண்டும்.


சுவடி ஓதும் மைந்தன் :- ( இது போலத்தான் ஆலயங்களில் இறைவனிடத்தில் வேண்ட வேண்டும் என்று மிக அருமையான விளக்கம் அளித்தார்கள் ) 


குருநாதர் :- ஆனாலும் அம்மையே இதுபோல் இவர்கள் கேட்கவில்லை இறைவனிடத்தில். ஏதோ செல்வது, ஏதோ வருவது. இறைவனும் அமைதியாகத்தான் இருக்கின்றான்.  


( தனி நபர் வாக்குகள் ) 


குருநாதர் :- அம்மையே ஒன்றைச் சொல்கின்றேன் அனைவருக்குமே. இறைவனிடத்தில் எதையுமே வேண்டத் தேவையில்லை. இறைவனுக்கு (அனைத்தும்) தெரியும். ஆனாலும் இப்படி நிச்சயம் மனதில் நினைத்தாலே மனதில் இன்னும் அறிவுகள் பெருகும் அம்மா. இன்னும் உயர்ந்து விடலாம். 


சுவடி ஓதும் மைந்தன் :- (தனி வாக்கில் ஒரு கேள்வி அதற்குப் பதில் அளித்தார்கள்) இறைவனிடத்தில் எதையும் கேட்கக் கூடாது. இது நீங்க கேட்டதுக்கு பதில் வந்தது பார்த்தீர்களா? (இறைவன் முன்) அமைதியாக நிற்க வேண்டும். ஆனாலும் இப்படி நீங்க வேண்டும் போது அறிவு அது plus ஆகும். அப்படி plus point ஆக ஆகும் போது …


குருநாதர் :- அம்மையே சக்திகள் இருக்கும் அம்மா அங்கு (ஆலயத்தில்). இவ்சக்திகளைச் சிறிதளவே மனதில் உந்தனுக்கு (என்று)  நீ வேண்டாமல், அடுத்தவர்களுக்காக அதாவது நல்லதையே நினைக்கும்பொழுது சில நல்சக்திகள் நிச்சயம் அதாவது இவ்வாயில் வரும் சக்திகளையும் கூட கூட்டி , இன்னும் பெருக்கி , இன்னும் அதிக பலப்படுத்தி,  இன்னும் உயர் நிலை அடைவார்கள். ஆனாலும் இதைக்கூட இறைவன்தான் அனுமதிக்க வேண்டும்.


சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கம் - ஆலயத்தில் மற்றவர்கள் நலனுக்காக வேண்டும் போது ஆலயத்தில் உள்ள நல்ல சக்திகள் நமது வாயில் புகும். அதனுடன் நீங்கள் ஏதாவது வேண்டினால் அந்த சுய வேண்டுதலுக்கு சக்திகள் பெருகும். ஆனால் இப்படிச் செயல்பட இறைவன் அனுமதிக்க வேண்டும். )


(இதுவரை யாரும் சொல்லாத ரகசியம் இந்த வாக்கு. குருநாதர் கருணைக்கடலின் திருவடிகள் போற்றி! போற்றி! போற்றி! ) 

குருநாதர் :- ( இப்போது மீண்டும் சில நல்ல கருத்துக்களை அங்கு அவ்இரு அடியவர்களையும் சொல்ல வைத்தார்கள்.) 


அடியவர் 7 :- பிறவாமை வேண்டும். 

அடியவர் 6 :- (வழிமொழிந்து,   அவ்வாறே உரைத்தார்) 


அடியவர் 7 :- பிறவி உண்டு உண்டேல், உனை மறவாமை வேண்டும். 

அடியவர் 6 :- (வழிமொழிந்து,   அவ்வாறே உரைத்தார்) 


அடியவர் 7 :- கனப்பொழுதும் உங்களையே நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்.

அடியவர் 6 :- (வழிமொழிந்து,   அவ்வாறே உரைத்தார்)



அடியவர் 7 :- நான் முன் ஜென்மக் கர்ம வினையால்,  இந்த மானிடப் பிறவி எடுத்துள்ளேன். 

அடியவர் 6 :- (வழிமொழிந்து,   அவ்வாறே உரைத்தார்) 


அடியவர் 7 :- உங்கள் பாதத்தில் சரணாகதி அடையனும்னா, அந்த கர்மாவை கழிக்க நீங்க (என்) கூட இருக்க வேண்டும். 

அடியவர் 6 :- (வழிமொழிந்து,   அவ்வாறே உரைத்தார்) 


அடியவர் 7 :- என்னுடைய உடல், என்னுடைய பொருள், என்னுடைய அங்கங்கள், என்னுடைய ஒவ்வொரு உயிர் அணுக்கள் எல்லாமே தர்ம செயலை நோக்கிப் போக வேண்டும்.  

அடியவர் 6 :- (வழிமொழிந்து,   அவ்வாறே உரைத்தார்) 


அடியவர் 7 :- தீய காரியங்களை எதையும் நான் செய்யக் கூடாது. 

அடியவர் 6 :- (வழிமொழிந்து,   அவ்வாறே உரைத்தார்) 


அடியவர் 7 :- தான, தர்மத்தை நோக்கி என்னை ஓட வைத்துக் கொண்டே இருங்கள். 

அடியவர் 6 :- (வழிமொழிந்து,   அவ்வாறே உரைத்தார்) 


அடியவர் 7 :- அற வழியில் இருப்பவர்களுடன் என்னைச் சேர்ந்து இருக்க வையுங்கள். 

அடியவர் 6 :- (வழிமொழிந்து,   அவ்வாறே உரைத்தார்) 


அடியவர் 7 :- கணப்பொழுதும் என்னை விட்டு நீங்கி விடாதீர்கள். 

அடியவர் 6 :- (வழிமொழிந்து,   அவ்வாறே உரைத்தார்) 


அடியவர் 7 :- என் குடும்பத்துடன் இருங்க. 

அடியவர் 6 :- (வழிமொழிந்து,   அவ்வாறே உரைத்தார்) 


அடியவர் 7 :- எங்க வீட்டுக்குள்ளேயே இருங்கள். 

அடியவர் 6 :- (வழிமொழிந்து,   அவ்வாறே உரைத்தார்) 


அடியவர் 7 :- குல தெய்வ ஆசியிலிருந்து எல்லா தெய்வத்தோட ஆசியும் வாங்கிக் கொடுங்கள். 

அடியவர் 6 :- (வழிமொழிந்து,   அவ்வாறே உரைத்தார்) 


அடியவர் 7 :- எல்லா தெய்வ சக்தி கூடவும் எங்களை ஒன்றெனக் கலந்து இருக்க வையுங்கள். 

அடியவர் 6 :- (வழிமொழிந்து,   அவ்வாறே உரைத்தார்) 


அடியவர் 7 :- அகத்தீசா இதுதான் உங்களை மன்றாடி பாதத்தில் விழுந்து வணங்கிக் கேட்கின்றேன். 

அடியவர் 6 :- (வழிமொழிந்து,   அவ்வாறே உரைத்தார்) 


குருநாதர் :- அம்மையே(அடியவர் 6 - உனக்கு)  இவ்வளவு செல்லிக் கொடுத்தாளே,  நீ அகத்தியனிடம் என்ன கேட்கின்றாய் என்று ( அடியவர் 7 - அவளிடம் கேட்டு எந்தனுக்கு) கூறு?


அடியவர் 6 :- ( அடியவர்#7 அவரை நோக்கி அகத்தீசப்பாவிடம் என்ன வேண்டும் உங்களுக்கு ) 


அடியவர் 7 :- ( அகத்தீசப்பா) நான் இன்று உங்களை தரிசிக்கிறது , மாபெரும் பாக்கியமாக நினைக்கின்றேன். நான் அவரிடம் (அடியவர் 6) என்ன சொல்லியிருக்கின்றேனோ அதையேதான் நினைக்கின்றேன். உங்களோட தரிசனம் எனக்கு (……….. ) . அப்போ அதைப் பொருட்படுத்தாதது என்னுடைய மிகப் பெரிய கர்ம வினை சுவாமி. அதற்கப்புறம் ( ……. ) மூலம் உங்கள் அருமை பெருமையெல்லாம் தெரிஞ்சு, இன்றைக்கு உங்க பின்னாடி வந்துக்கிட்டு இருக்கிறேன் சாமி. 


குருநாதர் :- அம்மையே ( அடியவர் 6 ) , கேட்டாயா ? இதனால்தான் அனுபவம் தேவை. இவ்அனுபவம் எப்படி வந்தது என்பவையெல்லாம் யான் ஆராய்ந்தேன். கத்தனும் கொடுத்துவிட்டான். அனுபவம் கொடுத்து விட்டால், அவள்தனே அனைத்தும் தெரிந்து கொண்டு , பின் சரியான பாதையில் சென்று , அனைத்தும் வெற்றி உண்டு. என்னையும் வந்தடைவாள். லோபாமுத்திரையோடு யானும் காட்சியளிப்பேன். இவ்வாறு பக்குவங்கள் பெற்றிருந்தால் மட்டுமே, நிச்சயம். 

அவ்வாறு பக்குவங்கள் பெற்றிருக்கவில்லை என்றால் நிச்சயம். ஏதோ ஒரு ரூபத்தில் துன்பத்தைக் கொடுத்து யானே பக்குவப் படுத்தி பின் நல்முறையாகவே. 


அதனால்தான் சொல்கின்றேன் நிச்சயம் யான் கூட உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?????  இறைவன் கூட உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்????   நிச்சயம் செய்யப் போவதில்லை என்றெல்லாம்!!!!. 


இதனால் புண்ணியப் பாதையிலே நன்றாகச் சென்று, அதாவது எவ்வாறு என்பதைக் கூட பின் தெரியாவிடினும் யான் சொல்லிக்கொடுத்து குழந்தைபோல் இவ்வாறு செய் என்றெல்லாம். அவ்புண்ணியப் பாதைக்கு உங்களை அழைத்துச் சென்றுவிட்டால், அவ்புண்ணியமே உங்களைப் பாதுகாக்கும். இதை பலமுறை எடுத்துரைத்து விட்டேன். 


( நம் குருநாதர், நம் அன்புத் தந்தை, கருணைக்கடல், பிரம்ம ரிஷி, அகத்திய மாமுனிவர் அருளால்  April 2024 ஆம் ஆண்டு ஈரோட்டில், சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் திரு.ஜானகிராமன் அவர்கள் மூலம் ஜீவ நாடியில் உரைத்த அடியவர்கள் சத்சங்க கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்…..) 



(இங்கு வெளியிடப்படும்  அனைத்து வாக்குகளையும் அடியவர்கள் அனைவருக்கும் முற்றிலும் இலவசமாக , கட்டணம் ஏதும் இல்லாமல் , அகத்திய மாமுனிவர் குருகுலச் சேவையை ஒரு வகுப்பு எடுத்து,  உலகம் முழுவதும் அனைவருக்கும் சொல்லுங்கள். உங்களுக்கு முதல் வகை உயர் புண்ணியங்கள் உண்டாகும். இங்கு வெளியிடப்படும்  வாக்குகள் அனைத்தும், நம் வருங்காலத் தலைமுறைகளை நன்கு வாழவைக்கும் மகத்தான உயர் புண்ணிய இறை வாக்குகள். அன்ன சேவை செய்யும் அடியவர்கள் அனைவரும் அன்ன சேவை செய்யும் இடங்களில் (1) முதலில் அவசியம் கட்டாயமாகச் சிவபுராணம் படித்து, (2) அதன் பின் இங்கு வெளியிடப்படும் வாக்குகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லி, மக்களுக்குப் புரிய வைத்து, நன்கு வாழ வழி சொல்லி  (3) அதன் பின் அன்னமிட,  (4) அவ் சேவையில் பங்கு பெறும் அடியவர்களுக்கு உயர் தர முதல் வகைப் புண்ணியங்கள் உண்டாகும். அடியவர்கள் இதனைக் கெட்டியாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்வில் கர்மங்கள் இல்லாத , உயர் தர முதல் வகைப் புண்ணியங்கள் மலரட்டும். இவ்வுலகில் தர்மம் செழித்து ஓங்குக. ) 


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!


சர்வம் சிவார்ப்பணம்!!!!!

No comments:

Post a Comment