“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Wednesday, June 25, 2025

சித்தர்கள் ஆட்சி - 462 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் இட்ட அவசர உத்தரவு - மதுரை சத்சங்கம் 22.06.2025:-


இறைவா நீயே அனைத்தும்.  

இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்!


















அன்புடன் அகத்திய மாமுனிவர் இட்ட அவசர உத்தரவு - மதுரை சத்சங்கம் 22.06.2025:-

https://siththanarul.blogspot.com/2025/06/1884.html


வரும் ஆறு ஏழு மாதங்கள் மிகவும் கஷ்டமான காலகட்டங்கள்(July 2025 - Jan 2026) :-


ராகு கிரகம் புவியை நெருங்கிக் கொண்டே இருக்கின்றது. இதனால் நிச்சயம் அழிவுகள். அது மட்டும் இல்லாமல் சண்டைகள், அது மட்டும் இல்லாமல் மனது தீயவழியில் செல்லும். ராகு கிரகம் பூமியை நெருங்கி விட்டால் அதில் இருந்து ஒரு விசை நிச்சயம் வரும். அவ் விசையானது புகை வடிவில் இருந்து பின் அது அனைவரின் கண்களுக்கு தெரியாது. நிச்சயம் மனிதனை அவ்விசை நெருங்க மனிதன் பின் உடனடியாக இறந்து விடுவான். இன்னும் அழிவுகள் தான் அதிகம் என்பேன். 

வரும் ஆறு ஏழு மாதங்கள் மிகவும் கஷ்டமான காலகட்டங்கள் ஆயிரக்கணக்கான மக்கள் இறப்பார்கள். இந்த அழிவுகளில் இருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும் அழிவை தடுத்து நிறுத்த வேண்டும்.

ராகுவானவன் ராகு கிரகம் அதாவது பூமியை ஒரு பக்கம் நெருங்கும் போது இன்னொரு பக்கம் கேது பகவானும் நெருங்குகின்றது. இதனால் அனைவருக்கும் மனக்குழப்பங்கள் அதிகமாகும். இதனால் இறை நம்பிக்கை குறைவாகும். ராகு கேது பூமியை விட மிகப்பெரிய கிரகங்கள் இவை பூமியை நெருங்கும் போது அப்படியே நின்று விடும்.  

சித்திரை மாதத்தில் இருந்து ராகு கிரகம் வேகம் எடுத்து பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. சூரிய வட்டத்தில் இருந்து மற்ற கிரகங்களும் கூட சுழல்கின்ற பொழுது ராகுவும் கேதுவும் வேகமாக வருகின்ற பொழுது கிரகங்கள் சுழற்சியில் ஏதாவது ஒன்றில் உராய்ந்து விட்டால் அதாவது மோதி விட்டால் கடும் விளைவுகள் ஏற்படும். 

கிரகங்கள் மாறுபட்டு அவை இதன் சுழற்சி வட்டத்தில் சரியாக சுழலாமல் இடித்துக் கொண்டு இடித்துக் கொண்டு , இப்படி எடுத்துக் கொண்டு செல்கின்ற பொழுது மிகப்பெரிய ஒரு சக்தி அதி வேகமாக பூமியை அதாவது மனிதர்கள் எங்கு எங்கு கூட்டமாக இருக்கின்றார்களோ, அங்கு வந்து தாக்கி விடும் அப்பா அவ் சக்தி. இதனால் கும்பல் கும்பலாகவே மக்கள் இறப்பார்கள். 

இதை ஏற்கனவே தெரிவித்து விட்டேன் முன்பே. கிரகங்கள் இவ்வாறு வேகமாக ஈர்த்து கொண்டு வருகின்ற பொழுது நட்சத்திரங்களும் பலமிழந்து விழுந்து பூமியை தாக்கும் இதனால் பூமியில் வெடி வெடிக்கும் அதாவது எரி கற்கள் தீ பிழம்புகள் பூமியை தாக்கும். 

ஒரு பக்கத்தில் இருந்து ராகுவும், மற்றொரு பக்கத்திலிருந்து கேதுவும் பூமியை தாக்க வேகமாக, இவை இரண்டும் இரண்டு பக்கத்தில் இருந்து தாக்கினால் என்னவாகும்? 

இதனால் உலகத்தை காக்க வேண்டும்.உங்களுடைய சிறு சிறு பிரச்சனைகளை விட இவை பெரியது.


அதை எவ்வாறு நிறுத்த வேண்டும்?


இதனால்தான் நவ கிரக தீபத்தை மற்றவர்களுக்காக ஏற்ற சொன்னேன் அப்பனே. (இடை விடாமல் என் பக்தர்கள் அனைவரும் ) அதை ஏற்றி வர வேண்டும். அப்பனே இதனால் அழிவுகளில் இருந்து மற்றவர்களை காக்க முடியும். 


1) அனைவரும் சேர்ந்து நிச்சயம் கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும். சிவபுராணத்தை பாடுதல் வேண்டும்.மக்கள் அனைவரும் 50 /100 / 200 / 500 /1000 அளவில் ஒன்று கூடி கூட்டுப் பிரார்த்தனை இறைவனிடம் சிவபுராணம் ஓதி பிரார்த்தனை செய்ய வேண்டும்.பூமியை தாக்க வந்து கொண்டிருக்கும் ராகுவானவனை கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழி  இவ் சிவபுராணம் பாடல் என்பேன் அப்பனே.  கோளாறு பதிகம், தேவாரம், திருவாசகம், விநாயகர் அகவல் படிக்க வேண்டும். 


2) நவகிரக தீபம் நவ கிரக காயத்ரி மந்திரம் ஓதி வழிபாடு செய்ய வேண்டும். மற்றவர்களுக்காக இந்த உலகம் நன்மை பெற வேண்டும் நன்றாக இருக்க வேண்டும் என வேண்டி, வணங்கி, சுயநலமாக இல்லாமல் பிரார்த்தனை செய்தல் வேண்டும். 

3) ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு விசை உண்டு. பாவத்தை நசுக்கும் பாபநாசத்தில் இவ்வாறு அனைவரும் ஒன்று கூடி கூட்டுப் பிரார்த்தனை சிவபுராணம் பாடினால் தியானங்கள் செய்தால் மக்களுக்கு நடக்கும் அழிவுகள் குறைக்கப்படும்.  அடுத்து  திருவண்ணாமலையில் ( ஒன்று கூடி கூட்டுப் பிரார்த்தனை சிவபுராணம் பாடி தியானங்கள்) செய்ய வேண்டும். 

4) கடல் அலைகள் நிச்சயம் ராகுவானவன் பூமியை நெருங்குகின்ற பொழுது, நிச்சயம் ராகுவானவன் எவ்வளவு வேகத்தில் பூமியை நெருங்குகின்றானோ, அவ்வளவு வேகத்தில் கடல் நீரும் ஊருக்குள் நுழைந்து விடும். இதை தடுக்க உண்மையான நதிகள் இருக்கும் கரையோரங்களில் மக்கள் அனைவரும் ஒன்று கூடி சென்று சிவபுராணம் பாடிக்கொண்டே இருங்கள். நீரால் ஏற்படும் அழிவை இப்படி தடுக்க வேண்டும்!. நதிக்கரையோரம் இருப்பவர்கள், கடலோரம் இருப்பவர்கள் அனைவரும் ஒன்று கூடி கூட்டுப் பிரார்த்தனை செய்து, சிவபுராணம் படித்து வரவேண்டும். 


5)அனைவரும் ஆடி மாதம் பூர்த்தியாகும் வரை அம்பாள் ஆலயத்திற்கு சென்று அபிராமி அந்தாதி அம்பாளின் பாடல்களை பாடி வந்தால் உங்கள் வாழ்க்கை சிறப்பு பெறும்.  இதன் பலன் என்னவென்று யான் பிறகு தெரிவிப்பேன். நீங்கள் பலனை எதிர்பார்க்காமல் இதை செய்து வர வேண்டும். ஆனி ஆடி மாதத்தில் அபிராமி அந்தாதி ஓதுபவர்கள் சிறப்பு மிக்கவர்கள் புண்ணிய சாலிகள் என்பேன்.


உங்களுக்காக நான் போராடுகின்றேன் மற்றவர்களுக்காக நீங்கள் போராடுங்கள் என்பேன் அவ்வளவுதான் அப்பனே.

உங்களுக்காக சுயநலமாக வாழ கூடாது மற்றவர்களுக்காக வாழ வேண்டும். 


நாங்கள் சொல்வதை பயன்படுத்தினால் நீங்கள் எங்கள் பிள்ளைகள். 

அதை விட்டுவிட்டு சுயநலமாக வாழ்ந்தால் நாங்கள் உங்களுக்கு ஒன்றுமே செய்ய மாட்டோம்.

வாக்குகளை மக்களுக்கு அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும் மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். 

இவை என் பக்தர்களுக்கு இவை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்பேன் அப்பனே.

அனைவருக்கும் ஆசிகள்!!!!

----------------------


அன்புடன் அகத்திய மாமுனிவர் இட்ட அவசர உத்தரவு - மதுரை சத்சங்கம் 23.06.2025:-

https://siththanarul.blogspot.com/2025/06/1886.html


நிச்சயம் மீண்டும் ஒரு சந்தர்பத்தை கொடுத்தேன் அப்பனே.

அப்பனே உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் யான் கொடுக்கின்றேன் அப்பனே. 

பணம் வேண்டுமா? திருமணம் வேண்டுமா? இன்னும் என்னென்ன வேண்டும்?? என்று.

அப்பனே யான் சொல்லிய வேலையை சரியாகச் செய்க அப்பனே. 

அப்பனே ஒன்றை மட்டும் கடைசியில் சொல்கின்றேன். அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். 

அப்பனே வேலை கொடுத்திருக்கின்றேன் உங்களுக்கு.

அவ் வேலையை நீங்கள் சரியாகச் செய்தால், உங்கள் வேலையை யானே செய்வேனப்பா.

யான் மற்றவர்களுக்காக வணங்குங்கள் என்று சொன்னேன் அப்பனே. 

ஆனால் நீங்கள் எதை என்று புரிந்து கொள்ள (இயலவில்லை).

ஆனாலும் நிச்சயம் அப்பனே அதாவது கூலி ( ஊதியம் ) கொடுக்கின்றேன் உங்களுக்கு.

அதனால் வேலை கண்டிப்பாக, நிச்சயமாக செய்தால் உங்களுக்கு கூலி கொடுப்பேன். சொல்லிவிட்டேன்.

இதுதான் இப்பொழுது நிலைமைக்கு செப்ப முடியுமப்பா. 


அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன். யான் சொல்லியதை நிச்சயம் பின் இயக்கிட்டால் ( செயல்படுத்தினால் ) சிறப்பாக அனைத்தும் செய்வேன். அனைத்தும் செய்வேன். மீண்டும் மீண்டும் இதையே தெரிவிப்பேன். அனைவருக்கும் வாக்குகள் உண்டு. 

அப்பனே என்னுடைய ஆசிர்வாதங்கள் அப்பனே. யான் சொல்லியதை ஏற்று நட. தாயே! அப்பனே! நிச்சயம் அப்பனே, அனைவரும் ஈசனை வேண்டிக்கொண்டு செல்லுங்கள்.

அகத்தியன் சொல்லியிருக்கின்றான் இவையெல்லாம். நிச்சயம் முழு முயற்சியோடு யாங்கள் செய்கின்றோம்.  

அனைவரும் ஈசனிடத்தில் சென்று நிச்சயம் யான் அதாவது அகத்தியன் சொல்வதை நிச்சயம் செய்கின்றேன். நிச்சயம் அறிந்தும் கூட யான் அகத்தியன் சொல்வதை நிச்சயம் செய்கின்றேன். நிச்சயம் நீயே அனைத்தும் கொடு என்று அனைவருமே சொல்லுங்கள். அப்பப்பா, சிறு குழந்தைகளுக்குப் போல் சொல்கின்றேன் அப்பனே.

-------------------------------

வணக்கம் அடியவர்களே, 

இந்த உலகத்தில் எதுவும் இலவசமாக கிடைத்தால் மதிப்பில்லை போல!!!

மனிதகுலம் நன்மை பெற குருநாதர் கூறிய அனைத்தையும் செய்து வந்தால் நலம் பெறலாம் வாக்குகள் கிடைக்கும் குருநாதர் நமக்கு நம்முடைய ஆத்மாவிற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து தருவார். 

குருநாதரை கூறிவிட்டார் நீங்கள் வேலையை செய்யுங்கள் அதற்கான கூலியை தருகின்றேன் என்று 

இந்த அளவுக்கு சித்தர்களை பேச வைத்து விட்டோம்!! இதுவே வருத்தத்திற்குரியது!!

இதனால் அனைவரும் கூட்டுப் பிரார்த்தனை மற்றும் நவகிரக தீபம் அனைவரும் முடிந்த வரை ஒன்றாக இணைந்து சேர்ந்து அனைவரும் செய்து இந்த உலகம் நன்மை பெற பாடுபடுவோம்.

















ஓம் அன்னை லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!


Saturday, June 21, 2025

சித்தர்கள் ஆட்சி - 461 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - ஈரோடு சத்சங்க வாக்கு ( April 2024 ) - பகுதி 5

இறைவா நீயே அனைத்தும்.

இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும். 





அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய - ஈரோடு சத்சங்க வாக்கு ( April 2024 ) - பகுதி 5

ஆதி ஈசனின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 

(இவ் தொடர் சத்சங்க வாக்கின் முந்தைய பதிவுகள்:- 

1. சித்தர்கள் ஆட்சி -  450 - பகுதி 1
2. சித்தர்கள் ஆட்சி -  451 - பகுதி 2
3.     சித்தர்கள் ஆட்சி -  458 - பகுதி 3
4.     சித்தர்கள் ஆட்சி -  460 - பகுதி 4
5.     சித்தர்கள் ஆட்சி -  461 - பகுதி 5

)

அடியவர் 4 :- ஐயா அடுத்து நான் என்ன செய்ய வேண்டும்.


குருநாதர் :- அப்பனே உன் கடமையைச் செய். போதுமானது. 


(தனி வாக்குகள்)


அடியவர் 6 :- ( சில தனி உரையாடல்கள் ) 


குருநாதர் :- ( மனக்குழப்பங்கள்) இவ்வாறெல்லாம் வைத்துக் கொள்ளக் கூடாது. ஒரே மனமாக இருக்க வேண்டும். 


குருநாதர் :- ( அங்கு ஒரு அடியவரை எழுப்பி ,  மற்ற அடியவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு எடுத்துரைக்க அருளினார்கள்) 


அடியவர் 6 :- ( உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேளுங்கள்) 


அடியவர் 7 :- ( என்ன வேண்டும் என்பதை மிக அழகாக கருணைக் கடலிடம் வேண்டினார்கள். இதுதான் பக்குவத்தின் உச்சம் என்பது) 


( …………… ) இந்த ஜென்மத்தோட போதும். பிறவாமை வேண்டும். பிறவாமை இல்லை என்றால் ( மீண்டும் பிறவி எடுத்தால் குருநாதா ) உங்களை என்றும் மறவாமை வேண்டும். ஒவ்வொரு ஜென்மத்திலும் எப்பொழுதும், கணப்பொழுதும் எங்களை விட்டு நீங்கள் விலகாமை வேண்டும். 


குருநாதர் :- அம்மையே அவள் மட்டும் அப்படிப் பேசுகின்றாள். ஏன் நீ இப்படிப் பேசவில்லை? 


(தனி வாக்குகள்) 


குருநாதர் :- அம்மையே இன்னும் கூறு அவள்தனக்கு. 


அடியவர் 7 :- (குருநாதர்) அவங்க ( நம்மை ) பாத்துக்குவாங்க. இருந்தாலும் நம்ம வேண்டுதலையே நம்ம அவங்களுக்கு சமர்ப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஐயா எனக்கு நல் வாழ்வு கொடுங்கள். ஏற்றமான வாழ்வு கொடுங்கள். என்னை விட்டு கணப்பொழுதும் நீங்கி விடாதீங்க. இதுதான் என்னுடைய மிகப்பெரிய வேண்டுதல்.


சுவடி ஓதும் மைந்தன் :- (இவ் அடியவரை எடுத்துரைக்க வைத்து , இதே போல் குருநாதர் கேட்டவை போல் உரைக்கச் சொன்னார்கள். அவ்வடியவரும் இதனை அவ்வாறே வழிமொழிந்தார்கள்) 


அடியவர் 7 :- நல்வாழ்க்கை எனக்கு கொடுங்க. 

அடியவர் 6 :- ( வழிமொழிந்தார் அவ்வாறே) 


அடியவர் 7 :- ஏற்றம் மிகு வாழ்க்கையைக் கொடுங்க. 

அடியவர் 6 :- ( வழிமொழிந்தார் அவ்வாறே) 


அடியவர் 7 :- என்னால் என் குடும்பமும் சுற்றமும் நன்றாக இருக்க வேண்டும்.

அடியவர் 6 :- ( வழிமொழிந்தார் அவ்வாறே) 


அடியவர் 7 :- என் தாய், தந்தை, சகோதரி (சகோதரன்) சந்தோஷமாக இருக்க வேண்டும். 

அடியவர் 6 :- ( வழிமொழிந்தார் அவ்வாறே) 


அடியவர் 7 :- (இனி) எனக்கு பிறவி வேண்டாம். பிறவி இருந்தால் நீங்க என் கூடவே இருக்க வேண்டும். 

அடியவர் 6 :- ( வழிமொழிந்தார் அவ்வாறே) 


அடியவர் 7 :- என் உடல், பொருள், மனசு எல்லாம் நல் செயல் ஆற்ற வேண்டும். 

அடியவர் 6 :- ( வழிமொழிந்தார் அவ்வாறே) 


அடியவர் 7 :- தான தர்மங்கள் செய்ய வழி விட்டு நில்லுங்கள். 

அடியவர் 6 :- ( வழிமொழிந்தார் அவ்வாறே) 


அடியவர் 7 :- ஒரு கனம் கூட கெட்டதை நினைக்கக்கூடாது. 

அடியவர் 6 :- ( வழிமொழிந்தார் அவ்வாறே) 


அடியவர் 7 :- இது என்றைக்குமே என் உடம்பில் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். 

அடியவர் 6 :- ( வழிமொழிந்தார் அவ்வாறே)


( தனி நபர் வாக்குகள்) 


( நம் அன்பு குருநாதர், ஆலயங்களில் இறைவனிடத்தில் எப்படி வேண்ட வேண்டும் என்ற மகத்தான பாடம் எடுத்தார்கள்)


குருநாதர் :- (அம்மையே) மீண்டும் ஏதாவது சொல்.


அடியவர் 7 :- நான் Job கேட்டதற்கு எனக்கு இன்று ஒரு நல்ல கருத்து சொல்லியிருங்கீங்க. நான் இதைக் கட்டாயமாக follow பன்றேன். நீங்க என்னென்ன எல்லாம் நிறை குறை சொல்லியிருக்கின்றீர்களோ, அதை நான் தீர்க்கமாகக் கடைபிடிக்கின்றேன்.  எங்கேயாவது நான் தடுமாறும் இடத்தில் என்னை கை பிடித்து கூட்டிட்டு போங்க.


அடியவர் 6 :- (அப்படியே சொல்ல முயன்றார்)


குருநாதர் :- அம்மையே இது போலத்தான் இறைவனிடத்தில் நீ கேட்க வேண்டும்.


சுவடி ஓதும் மைந்தன் :- ( இது போலத்தான் ஆலயங்களில் இறைவனிடத்தில் வேண்ட வேண்டும் என்று மிக அருமையான விளக்கம் அளித்தார்கள் ) 


குருநாதர் :- ஆனாலும் அம்மையே இதுபோல் இவர்கள் கேட்கவில்லை இறைவனிடத்தில். ஏதோ செல்வது, ஏதோ வருவது. இறைவனும் அமைதியாகத்தான் இருக்கின்றான்.  


( தனி நபர் வாக்குகள் ) 


குருநாதர் :- அம்மையே ஒன்றைச் சொல்கின்றேன் அனைவருக்குமே. இறைவனிடத்தில் எதையுமே வேண்டத் தேவையில்லை. இறைவனுக்கு (அனைத்தும்) தெரியும். ஆனாலும் இப்படி நிச்சயம் மனதில் நினைத்தாலே மனதில் இன்னும் அறிவுகள் பெருகும் அம்மா. இன்னும் உயர்ந்து விடலாம். 


சுவடி ஓதும் மைந்தன் :- (தனி வாக்கில் ஒரு கேள்வி அதற்குப் பதில் அளித்தார்கள்) இறைவனிடத்தில் எதையும் கேட்கக் கூடாது. இது நீங்க கேட்டதுக்கு பதில் வந்தது பார்த்தீர்களா? (இறைவன் முன்) அமைதியாக நிற்க வேண்டும். ஆனாலும் இப்படி நீங்க வேண்டும் போது அறிவு அது plus ஆகும். அப்படி plus point ஆக ஆகும் போது …


குருநாதர் :- அம்மையே சக்திகள் இருக்கும் அம்மா அங்கு (ஆலயத்தில்). இவ்சக்திகளைச் சிறிதளவே மனதில் உந்தனுக்கு (என்று)  நீ வேண்டாமல், அடுத்தவர்களுக்காக அதாவது நல்லதையே நினைக்கும்பொழுது சில நல்சக்திகள் நிச்சயம் அதாவது இவ்வாயில் வரும் சக்திகளையும் கூட கூட்டி , இன்னும் பெருக்கி , இன்னும் அதிக பலப்படுத்தி,  இன்னும் உயர் நிலை அடைவார்கள். ஆனாலும் இதைக்கூட இறைவன்தான் அனுமதிக்க வேண்டும்.


சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கம் - ஆலயத்தில் மற்றவர்கள் நலனுக்காக வேண்டும் போது ஆலயத்தில் உள்ள நல்ல சக்திகள் நமது வாயில் புகும். அதனுடன் நீங்கள் ஏதாவது வேண்டினால் அந்த சுய வேண்டுதலுக்கு சக்திகள் பெருகும். ஆனால் இப்படிச் செயல்பட இறைவன் அனுமதிக்க வேண்டும். )


(இதுவரை யாரும் சொல்லாத ரகசியம் இந்த வாக்கு. குருநாதர் கருணைக்கடலின் திருவடிகள் போற்றி! போற்றி! போற்றி! ) 

குருநாதர் :- ( இப்போது மீண்டும் சில நல்ல கருத்துக்களை அங்கு அவ்இரு அடியவர்களையும் சொல்ல வைத்தார்கள்.) 


அடியவர் 7 :- பிறவாமை வேண்டும். 

அடியவர் 6 :- (வழிமொழிந்து,   அவ்வாறே உரைத்தார்) 


அடியவர் 7 :- பிறவி உண்டு உண்டேல், உனை மறவாமை வேண்டும். 

அடியவர் 6 :- (வழிமொழிந்து,   அவ்வாறே உரைத்தார்) 


அடியவர் 7 :- கனப்பொழுதும் உங்களையே நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்.

அடியவர் 6 :- (வழிமொழிந்து,   அவ்வாறே உரைத்தார்)



அடியவர் 7 :- நான் முன் ஜென்மக் கர்ம வினையால்,  இந்த மானிடப் பிறவி எடுத்துள்ளேன். 

அடியவர் 6 :- (வழிமொழிந்து,   அவ்வாறே உரைத்தார்) 


அடியவர் 7 :- உங்கள் பாதத்தில் சரணாகதி அடையனும்னா, அந்த கர்மாவை கழிக்க நீங்க (என்) கூட இருக்க வேண்டும். 

அடியவர் 6 :- (வழிமொழிந்து,   அவ்வாறே உரைத்தார்) 


அடியவர் 7 :- என்னுடைய உடல், என்னுடைய பொருள், என்னுடைய அங்கங்கள், என்னுடைய ஒவ்வொரு உயிர் அணுக்கள் எல்லாமே தர்ம செயலை நோக்கிப் போக வேண்டும்.  

அடியவர் 6 :- (வழிமொழிந்து,   அவ்வாறே உரைத்தார்) 


அடியவர் 7 :- தீய காரியங்களை எதையும் நான் செய்யக் கூடாது. 

அடியவர் 6 :- (வழிமொழிந்து,   அவ்வாறே உரைத்தார்) 


அடியவர் 7 :- தான, தர்மத்தை நோக்கி என்னை ஓட வைத்துக் கொண்டே இருங்கள். 

அடியவர் 6 :- (வழிமொழிந்து,   அவ்வாறே உரைத்தார்) 


அடியவர் 7 :- அற வழியில் இருப்பவர்களுடன் என்னைச் சேர்ந்து இருக்க வையுங்கள். 

அடியவர் 6 :- (வழிமொழிந்து,   அவ்வாறே உரைத்தார்) 


அடியவர் 7 :- கணப்பொழுதும் என்னை விட்டு நீங்கி விடாதீர்கள். 

அடியவர் 6 :- (வழிமொழிந்து,   அவ்வாறே உரைத்தார்) 


அடியவர் 7 :- என் குடும்பத்துடன் இருங்க. 

அடியவர் 6 :- (வழிமொழிந்து,   அவ்வாறே உரைத்தார்) 


அடியவர் 7 :- எங்க வீட்டுக்குள்ளேயே இருங்கள். 

அடியவர் 6 :- (வழிமொழிந்து,   அவ்வாறே உரைத்தார்) 


அடியவர் 7 :- குல தெய்வ ஆசியிலிருந்து எல்லா தெய்வத்தோட ஆசியும் வாங்கிக் கொடுங்கள். 

அடியவர் 6 :- (வழிமொழிந்து,   அவ்வாறே உரைத்தார்) 


அடியவர் 7 :- எல்லா தெய்வ சக்தி கூடவும் எங்களை ஒன்றெனக் கலந்து இருக்க வையுங்கள். 

அடியவர் 6 :- (வழிமொழிந்து,   அவ்வாறே உரைத்தார்) 


அடியவர் 7 :- அகத்தீசா இதுதான் உங்களை மன்றாடி பாதத்தில் விழுந்து வணங்கிக் கேட்கின்றேன். 

அடியவர் 6 :- (வழிமொழிந்து,   அவ்வாறே உரைத்தார்) 


குருநாதர் :- அம்மையே(அடியவர் 6 - உனக்கு)  இவ்வளவு செல்லிக் கொடுத்தாளே,  நீ அகத்தியனிடம் என்ன கேட்கின்றாய் என்று ( அடியவர் 7 - அவளிடம் கேட்டு எந்தனுக்கு) கூறு?


அடியவர் 6 :- ( அடியவர்#7 அவரை நோக்கி அகத்தீசப்பாவிடம் என்ன வேண்டும் உங்களுக்கு ) 


அடியவர் 7 :- ( அகத்தீசப்பா) நான் இன்று உங்களை தரிசிக்கிறது , மாபெரும் பாக்கியமாக நினைக்கின்றேன். நான் அவரிடம் (அடியவர் 6) என்ன சொல்லியிருக்கின்றேனோ அதையேதான் நினைக்கின்றேன். உங்களோட தரிசனம் எனக்கு (……….. ) . அப்போ அதைப் பொருட்படுத்தாதது என்னுடைய மிகப் பெரிய கர்ம வினை சுவாமி. அதற்கப்புறம் ( ……. ) மூலம் உங்கள் அருமை பெருமையெல்லாம் தெரிஞ்சு, இன்றைக்கு உங்க பின்னாடி வந்துக்கிட்டு இருக்கிறேன் சாமி. 


குருநாதர் :- அம்மையே ( அடியவர் 6 ) , கேட்டாயா ? இதனால்தான் அனுபவம் தேவை. இவ்அனுபவம் எப்படி வந்தது என்பவையெல்லாம் யான் ஆராய்ந்தேன். கத்தனும் கொடுத்துவிட்டான். அனுபவம் கொடுத்து விட்டால், அவள்தனே அனைத்தும் தெரிந்து கொண்டு , பின் சரியான பாதையில் சென்று , அனைத்தும் வெற்றி உண்டு. என்னையும் வந்தடைவாள். லோபாமுத்திரையோடு யானும் காட்சியளிப்பேன். இவ்வாறு பக்குவங்கள் பெற்றிருந்தால் மட்டுமே, நிச்சயம். 

அவ்வாறு பக்குவங்கள் பெற்றிருக்கவில்லை என்றால் நிச்சயம். ஏதோ ஒரு ரூபத்தில் துன்பத்தைக் கொடுத்து யானே பக்குவப் படுத்தி பின் நல்முறையாகவே. 


அதனால்தான் சொல்கின்றேன் நிச்சயம் யான் கூட உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?????  இறைவன் கூட உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்????   நிச்சயம் செய்யப் போவதில்லை என்றெல்லாம்!!!!. 


இதனால் புண்ணியப் பாதையிலே நன்றாகச் சென்று, அதாவது எவ்வாறு என்பதைக் கூட பின் தெரியாவிடினும் யான் சொல்லிக்கொடுத்து குழந்தைபோல் இவ்வாறு செய் என்றெல்லாம். அவ்புண்ணியப் பாதைக்கு உங்களை அழைத்துச் சென்றுவிட்டால், அவ்புண்ணியமே உங்களைப் பாதுகாக்கும். இதை பலமுறை எடுத்துரைத்து விட்டேன். 


( நம் குருநாதர், நம் அன்புத் தந்தை, கருணைக்கடல், பிரம்ம ரிஷி, அகத்திய மாமுனிவர் அருளால்  April 2024 ஆம் ஆண்டு ஈரோட்டில், சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் திரு.ஜானகிராமன் அவர்கள் மூலம் ஜீவ நாடியில் உரைத்த அடியவர்கள் சத்சங்க கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்…..) 



(இங்கு வெளியிடப்படும்  அனைத்து வாக்குகளையும் அடியவர்கள் அனைவருக்கும் முற்றிலும் இலவசமாக , கட்டணம் ஏதும் இல்லாமல் , அகத்திய மாமுனிவர் குருகுலச் சேவையை ஒரு வகுப்பு எடுத்து,  உலகம் முழுவதும் அனைவருக்கும் சொல்லுங்கள். உங்களுக்கு முதல் வகை உயர் புண்ணியங்கள் உண்டாகும். இங்கு வெளியிடப்படும்  வாக்குகள் அனைத்தும், நம் வருங்காலத் தலைமுறைகளை நன்கு வாழவைக்கும் மகத்தான உயர் புண்ணிய இறை வாக்குகள். அன்ன சேவை செய்யும் அடியவர்கள் அனைவரும் அன்ன சேவை செய்யும் இடங்களில் (1) முதலில் அவசியம் கட்டாயமாகச் சிவபுராணம் படித்து, (2) அதன் பின் இங்கு வெளியிடப்படும் வாக்குகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லி, மக்களுக்குப் புரிய வைத்து, நன்கு வாழ வழி சொல்லி  (3) அதன் பின் அன்னமிட,  (4) அவ் சேவையில் பங்கு பெறும் அடியவர்களுக்கு உயர் தர முதல் வகைப் புண்ணியங்கள் உண்டாகும். அடியவர்கள் இதனைக் கெட்டியாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்வில் கர்மங்கள் இல்லாத , உயர் தர முதல் வகைப் புண்ணியங்கள் மலரட்டும். இவ்வுலகில் தர்மம் செழித்து ஓங்குக. ) 


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!


சர்வம் சிவார்ப்பணம்!!!!!

Wednesday, June 18, 2025

சித்தர்கள் ஆட்சி - 460 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - ஈரோடு சத்சங்க வாக்கு ( April 2024 ) - பகுதி 4

இறைவா !!!!! நீயே அனைத்தும்.

                                        இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்





அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய - ஈரோடு சத்சங்க வாக்கு ( April 2024 ) - பகுதி 4

ஆதி ஈசனின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 

(இவ் தொடர் சத்சங்க வாக்கின் முந்தைய பதிவுகள்:- 

1. சித்தர்கள் ஆட்சி - 450 - பகுதி 1
2. சித்தர்கள் ஆட்சி - 451 - பகுதி 2
3.     சித்தர்கள் ஆட்சி - 458 - பகுதி 3
4.     சித்தர்கள் ஆட்சி - 460 - பகுதி 4

)

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா கேளுங்கள் ஐயா.


அடியவர் 4 :- ( யோசித்தபடி) ஐயா அதை எப்படிக் கேட்பது? ( என்று தெரியவில்லை ) 


குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் 1 :- ( இந்த அடியவர் சிந்தனை ஓட்டத்தைப் புரிந்து கொண்டு, அடியவர் சார்பில் அழகாகத் தொகுத்துப் பின்வருமாறு கேட்டார்கள் நம் குருநாதரிடம் ) 

ஐயா என்ன கேட்க வருகின்றார் என்றால், எனக்கு எல்லாமே புரிகின்றது. என் முன் ஜென்ம வினைப்படி நான் சுக துக்கங்களை அனுபவித்து வந்து கொண்டிருக்கின்றேன். இனி எப்போது அடுத்த வளர்ச்சி என்பது அவர் கேள்வி ஐயா.

குருநாதர் :- அப்பனே மலர்ச்சியும் கொடுத்து விட்டேன் அப்பனே. இல்லையென்றால் அப்பனே இவன்தன் இங்கேயே இருந்திட வேண்டும் என்பேன் அப்பனே. அப்பனே  …(  தனி வாக்குகள்). அப்படிச் செய்யவில்லை இவ் அகத்தியன். 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் 1 :- ஐயா (உங்களை, உங்கள் குடும்பத்தை ) அவ்வளவு பெரிய ஆபத்திலிருந்து (நம் அன்பு குருநாதர்) காப்பாற்றியுள்ளார். 

குருநாதர் :- அப்பனே கேள் இன்னும். 

அடியவர் 4 :- நமக்காக எந்த பிரார்த்தனையும் செய்ததில்லை. இப்பொழுது அல்ல. எப்போதுமே செய்ததில்லை. 

குருநாதர் :- அப்பனே இப்பொழுதுதான் கேட்டாய் அப்பனே. இவையெல்லாம் நியாயமா என்று கூறு?

அடியவர்கள் :- ( சிரிப்பு அலைகள் )

குருநாதர் :- அப்பனே நிச்சயம் அடுத்தவர்களுக்காகப் பாடு பட்டவர்கள் , நிச்சயம் ஓர் நாள் அப்பனே சுகம் அப்பனே உண்டு. 

சுவடி ஓதும் மைந்தன் :- அடுத்தவர்களுக்காக நாம் வேண்டிக்கொண்டால் , அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று, அவர்களுக்கு உதவி செய்தீர்கள் என்றால் கண்டிப்பாகச் சுகம் உண்டு என்று (அகத்திய மாமுனிவர்) சொல்கின்றார் ஐயா. 

சுவடி ஓதும் மைந்தன் :- கேளுங்கள் ஐயா. ஐயா இதுதான் ஜீவ நாடி என்பது. இதுவரைக்கும் நேரில் நீங்கள் பார்க்கவில்லை என நினைக்கின்றேன். உங்களை cross question ( குறுக்கு விசாரனை நம் குருநாதர்) அவர் கேட்பார்கள் ஐயா. 

அடியவர் 4:- ( தனி கேள்விகள் , வாக்குகள் )

குருநாதர் :- அப்பனே ஆனாலும் ( தனி வாக்குகள் விதி ரகசியங்கள்)  அதாவது ஒரு தந்தையும் கூட ___ எவ்வாறு என்பதையும் கூட அப்பனே அனைத்தும் நல்லவைதான் செய்யவேண்டும் என்றெல்லாம் மனம் உருகியதையெல்லாம் அதாவது யுகம் யுகங்களாகப் பார்த்துக்கொண்டே வருகின்றேன் அப்பனே. 

ஆனாலும் அப்பனே எனை நம்பியவர்கள் எதை என்றும் புரியப் புரிய ஆனால் அப்பனே விதியில் என்ன உள்ளது (என்பது) எந்தனுக்கு மட்டுமே புரியும் அப்பனே. அதனால்தான் என் பக்தர்களை பக்குவப் படுத்தி கடைசியில் நல்லதைச் செய்வேன். கவலையை விடு. 

சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கங்கள். விதியில் உள்ள துன்பங்களை எல்லாம் கழித்த பின்பு , குருநாதரே அனைத்தையும் நடத்தி அருளுவார்கள் என்று எடுத்து உரைத்தார்கள்.) 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் 1 :-  ஐயா ( அப்படிச் செய்யும் போது) எந்த ஒரு தடங்கல்களும் வராது. 

அடியவர் 4 :- ஐயா கால நிர்ணயம் ஏதும் உண்டா? இல்லை நான் ரொம்ப நாள் wait பன்னனுங்களா? 

குருநாதர் :- ( தனிப்பட்ட வாக்குகள். அதில் ஒரு முக்கிய வாக்கு ..) அப்பனே காலங்கள் நேரங்கள் அனைத்தும் என்னிடத்தில். (தனி வாக்குகள்) பொறுத்திரு அப்பனே. யானே முடித்து வைக்கின்றேன். அப்பனே ஆனாலும் உன் கடமையைச் செய்ய வேண்டும். 

சுவடி ஓதும் மைந்தன் :- ( மேலும் வாக்குகளைக் கேட்க உற்சாகப் படுத்தினார்கள். அதனுடன் குருநாதர், அவர்கள் அழைத்ததால் தான் அங்கு இவ் அடியவர்கள் வர முடிந்தது என்று உரைத்தார்கள். ) 

அடியவர் 6 :- (காலம் சென்ற முன்னோர்கள் வழிபாடு குறித்து கேள்வி ஒன்று கேட்டார்கள். அதாவது முன்னோர்கள் அதனை ஏற்றுக் கொண்டார்களா என்று கேள்வி கேட்டார்கள். ஒரு முறை இவர்கள் முன்னோர் கனவில் வந்துள்ளார்.) 

குருநாதர் :- இதே போல் அனுதினமும் நீ நிச்சயம் செய்திருந்தால் நிச்சயம் உன் சொப்பனத்திலே வந்து சொல்லிருப்பான். 

சுவடி ஓதும் மைந்தன் :- (விளக்கங்கள்)

குருநாதர் :- அப்பனே (உங்களுக்கு) பக்குவங்கள் இல்லாமல் யான் எதைச் செய்தாலும் வீணாகப் போய்விடும் அப்பனே. 

( பல முக்கிய தனி வாக்குகள் ) 

குருநாதர் :- ( ஒரு அடியவருக்கு முரண்பாடாக கடுமையாக விதியில் உள்ளது. இப்படிப்பட்ட விதியை மாற்றுவதற்குக் குருநாதர் போராடித்தான் நடத்த வேண்டும் என்றும், இவ்விதியின் ரகசியங்கள் யாருக்கும் தெரிய வாய்ப்பே இல்லை என்றும் மனிதர்களிடத்தில் (விதி தெரியாமல் ஜோதிடர்கள்) இடத்தில் சென்றால் குழப்பி விடுவார்கள் என்றும், இப்படிப்பட்ட விதி மாற்றங்களைச் செய்ய குருநாதர், சித்தர்கள் உதவி மனிதர்களுக்கு அவசியம் தேவை என்றும் , விதியில் உள்ளதை சித்தர்களைத்தவிர யாரும் எடுத்துரைக்க இயலாது என்றும், அப்படி எடுத்துரைத்தாலும் தோல்வியில் போய் முடிந்து விடும் என்றும் எடுத்து உரைத்தார்கள் நம் அன்பு கருணைக் கடல்.)

(ஜீவ நாடி மர்மங்கள்)

குருநாதர் :- தன் பிள்ளை நன்றாக இருக்க வேண்டும் என்று அனைவரும், தந்தை  நினைக்கின்றார்கள் அப்பனே. அதே போலத்தான் அப்பனே. (உங்களின் அன்புத் தந்தையாக) யான் அனைத்தும் (உங்களுக்கு வாக்குகளாக) சொல்வேன் அப்பனே. ஆனால் சில பாவங்கள் கூட சுவடியைக்கூட அதாவது எதை என்று அறிய அறிய யான் சொல்லி விடுகின்றேன் அப்பனே. அதாவது அதைப் படித்தாலும் அப்படித்தான் அப்பனே. பாவத்தை நெருங்க விடமாட்டேன் (எனது இவ் சுவடியை ஓதும் என் மைந்தனான ஜானகிராமன்) இவந்தனையும் கூட. 

சுவடி ஓதும் மைந்தன் :- புரிகின்றதா ஐயா. ஐயா (எதிர்காலத்தில் விதியில் கடுமையாக நடக்க உள்ளதை) சில ரகசியங்கள் சொல்லிவிட்டால் , (நம் குருநாதரால்  எளிதாக) easyஆகச் சொல்லிவிடுவார். (சுவடி ஓதும்) என்னையும் அதாவது இவனையும் பாவத்தில் சேர்க்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்கின்றார். 

குருநாதர் :- அப்பனே கேட்கின்றாயா?

சுவடி ஓதும் மைந்தன் :- ஏதாவது கேளுங்கள். 

அடியவர் 4 :- (தெளிவு நிலை)

குருநாதர் :- அப்பனே புரிகின்றதா? எதற்காக என்னைத் தேடி வந்தாய் என்பதை? அப்பனே இதுதானப்பா புண்ணியம். 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா தெரிகின்றதா? நீங்கள் அப்படி இல்லையென்றால் நீங்க பல இடங்களுக்கு (விளக்கங்கள் தேடி) போய்க் கொண்டே இருந்திருக்க வேண்டும். ஆனால் இப்போது (உண்மை நிலை) தெரிகின்றதா? இந்த விசயங்களை யாரும் சொல்ல மாட்டார்கள் என்று சொல்கின்றார் ஐயா. விதியில் உள்ளதை யாரும் சொல்ல மாட்டார்கள். (சித்தர்களால் மட்டுமே சொல்ல இயலும்.) 

அடியவர் 4 :- இவங்க தினப்படி என்ன செய்ய வேண்டும்? 

குருநாதர் :- அப்பனே யான் மாற்றுகின்றேன் என்று சொல்லி விட்டேன் அப்பனே? மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும் அப்பனே? இதைத்தான் கூறுகின்றாய். 

அடியவர் 4 :- அது சரிங்க ஐயா. Surrender ஆகின்றேன் ஐயா. ( உங்கள் முன் பணிகின்றேன்.) தினமும் routine என்ன செய்ய வேண்டும். 

(  #######     விநாயகர் அகவல் பாடல் ரகசியங்கள்    ####### ) 

குருநாதர் :- அப்பனே விநாயகனின் சீதக்களப என்னும் பாடலை அப்பனே விநாயகப் பெருமானின் அருகில் தீபம் ஏற்றிப் பாடச்சொல் அப்பனே. பின் போதுமானது. அதுமட்டும் இல்லாமல் அனுதினமும் விநாயகப் பெருமானுக்கு ஏதாவது புஷ்பத்தைச் சாற்றி, அப்பனே பின் வணங்கி வரச்சொல் அப்பனே. நிச்சயம் நவ முறை சுற்றச்சொல் அப்பனே. நிச்சயம் பிள்ளையோனும் மகிழ்ந்து அனைத்தும் செய்வான் அப்பனே. ஞானத்தை அள்ளித் தருவான் என்பேன் அப்பனே. இன்னும் சிறப்பான வாழ்க்கை உண்டு. 


(அன்புடன் அகத்திய மாமுனிவர் அளித்த வாக்கு - சித்தன் அருள் 1668 - காசி மீர்காட் கங்கை கரை. விநாயகர் அகவல் பாடலில் உள்ள முழு அதி ரகசியம் அதனைத் தெரிந்து கொள்ள இந்த பதிவினை படியுங்கள். 

அடியவர்களுக்காக இட்ட விநாயகர் அகவல் பாடல் கானொளி ( YouTube link ) :- 

https://youtu.be/tOvBaBg6Ih4

அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு

சித்தன் அருள் - 1764 - திதியில் செய்ய வேண்டியவை!

(# சங்கடஹர சதுர்த்தி ரகசியம் #) :- 

“சங்கடஹர சதுர்த்தி அன்று அப்பனே பின் பிள்ளையோனுக்கு,  நல்முறையாக 9 குடங்களில் நீர் நிரப்பி,  அவனை குளிப்பாட்டினால் யோகங்கள் வரும் அப்பா.”

சங்கடஹர சதுர்த்தி அன்று ஆலயத்தில் அரச மரத்தடியில் இருக்கும் பிள்ளையாருக்கு ஒன்பது குடங்கள் அல்லது ஒன்பது தீர்த்த சொம்புகளில் நீர் நிரப்பி 9 முறை விநாயகருக்கு அபிஷேகம் செய்து வர வேண்டும்... ஆலயங்களுக்குச் சென்று செய்ய முடியாதவர்கள் வீட்டில் இருக்கும் கணபதி சிலைக்குச் செய்து வரலாம். விநாயகப் பெருமானை  இவ்வாறு அபிஷேகம் செய்தால் யோகங்கள் உங்களுக்கு வரும் என்று குருநாதர் வாக்கு.

அடியவர்கள் பயன்படுத்திக் கொள்க. வாருங்கள் மீண்டும் வாக்கின் உள் செல்வோம். )

அடியவர் 4 :- ஐயா ஒரு கேள்வி கேட்கலாமா?

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா கேளுங்க ஐயா. அவர் அருமையாக வந்து நிற்கின்றார் (நம் குருநாதர்). 

அடியவர் 4 :- நான் ஏதாவது தவறு செய்கின்றேனா? ஏதும் திருத்திக் கொள்ள வேண்டுமா? அதனால் time waste ஆகுதுங்களா? 

குருநாதர் :- அப்பனே எழுந்து எழுந்து உட்கார். பார்ப்போம். 

அடியவர் :- ( குரு நாதர் உரைத்தவாறு உடனே செயல்பட ஆரம்பித்தார்)

மற்றொரு அடியவர் :- ( சில கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார்)

சுவடி ஓதும் மைந்தன் :- அவருக்கு வாக்கு போய்க் கொண்டிருக்கும் போது நீங்கள் கேட்கக் கூடாது அம்மா. உங்களுக்கும் குருநாதர் வாக்கு உரைப்பார்கள். (சற்று பொறுங்கள் தாயே!). 

( சில மணித்துளிகள் அடியவர் #4 எழுந்து எழுந்து உட்கார்ந்து கொண்டே இருந்தார்கள். அதன் பின் இறைவன், குருநாதர் வாக்கு உரைக்க ஆரம்பித்தார்கள்.)

குருநாதர் :- அப்பனே இப்பொழுது என்ன ஞாபகம் வருகின்றது?

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா இப்போது எழுந்து எழுந்து உட்கார்ந்தீர்களே, (அப்போது அந்த நேரத்தில் ) என்ன ஞாபகம் வந்துள்ளது என்று கேட்கின்றார் ஐயா. 

அடியவர் 4 :- சொல்லத் தெரியவில்லைங்க. இப்பதான் (எழுந்து எழுந்து உட்கார்ந்து ) முடித்தேன். 

சுவடி ஓதும் மைந்தன் :- எழுந்து எழுந்து உட்கார்ந்த அந்த நேரத்தில் என்ன ஞாபகம் வந்தது என்று சொல்லுங்கள் ஐயா.

அடியவர் 4 :- நீங்க சொன்னவற்றை follow பன்னேன்ங்க. ( எழுந்து எழுந்து உட்கார்ந்ததை). 

குருநாதர் :- அப்பனே அதனால் பின் சொல்லியதைச் செய்.  மீதி எல்லாம் பார்த்துக்கொள்கின்றேன் யான். 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்படி உட்கார்ந்து எழுந்த போது ஏதாவது நினைத்தீர்கள் என்றால் நீங்க இங்க கேட்கலாம். அதேபோல் (நீங்கள்) போய்க்கொண்டே இருங்கள் என்று சொல்கின்றார் ஐயா. (உங்களை) நான் பார்த்துக்கொள்வேன் என்று கூறுகின்றார். அடுத்த கேள்வி ஐயா?

அடியவர் 4 :- தினமும் ஒரு நாளை எப்படி (கடக்க) pass பன்னவேண்டும் என்று தெரிந்தால் இந்த (மாதிரி) சிக்கல் வராது ஐயா.

குருநாதர் :- அப்பனே அதனால்தான் (இறை வழங்கும் கஷ்டங்கள், சோதனைகள் என்ற) அலைக்கழிப்புக்கள். இப்பொழுதே இவ்வாறு இருக்கின்றாய். மீண்டும் கொடுத்தால் தாங்க மாட்டாய் அப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா புரியுதுங்களா? ( அங்குள்ள மற்றொரு அடியவரைப் பார்த்து) ஐயா கொஞ்சம் explain பன்னுங்கய்யா. 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் 1 :- நான் சொல்வதை மட்டும் கேட்டு இதையே followபன்னுங்க என்று சொல்கின்றார் ஐயா. 

சுவடி ஓதும் மைந்தன் :- (இன்னும்) கேளுங்கள் ஐயா. 

அடியவர் 4:- ஒவ்வொருத்தரும் வளர்கின்ற குழந்தைகள் இருக்கின்றார்கள். இப்போ parents வந்து எல்லாமே தெரியிரதில்லை. இல்லைங்களா?  அப்போ அவங்க இடத்தில் இருந்து guide பன்னுவது எப்படி? 

குருநாதர் :- அப்பனே ஒரு குழந்தை எழுந்து நிற்கின்றது அப்பனே. நீதான் அப்பனே எழுந்து நிற்கச்சொன்னாயா என்ன?

அடியவர் 4 :- இல்லைங்க ஐயா. 

குருநாதர் :- அப்பனே அடிபட்டு , வீழ்ந்து எழுந்து நின்றால்தான் அனைத்தும் தெரியும் அப்பனே. அதுபோலத்தான் அப்பனே. சில மனிதர்களை யாங்கள் விட்டுவிடுவோம் அப்பனே. பின் அடித்து , மனக்குழப்பம் எவ்வாறு என்பதையெல்லாம் அப்பனே, கடைசியில் வந்து நிற்பானப்பா எங்களிடத்தில் அப்பனே. ( உலகில் அனைத்தும் பட்டுத் தெரிந்து சித்தர்களிடம் வருவார்கள்.) 

( சித்தர்களே, இறைவனே மனிதர்களின் அன்னை , தந்தை என்ற ரகசியம்)

அப்பொழுது தீவிரமாக தன் தாயவளைக் கூட பிடித்துக் கொண்டால் சிறிது சிறிதாகத் தூக்கி விடுவாள். அதே போலத்தான் யாங்களும். 

அதனால் கெட்டியாகப் பிடித்துக்கொள். ( அகத்தியன் ) என்னைப் பிடிக்க வில்லையென்றாலும், இறைவனைப் பிடித்துக்கொள். 

( நம் குருநாதர், நம் அன்புத் தந்தை, கருணைக்கடல், பிரம்ம ரிஷி, அகத்திய மாமுனிவர் அருளால்  April 2024 ஆம் ஆண்டு ஈரோட்டில், சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் திரு.ஜானகிராமன் அவர்கள் மூலம் ஜீவ நாடியில் உரைத்த அடியவர்கள் சத்சங்க கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்…..) 

(இங்கு வெளியிடப்படும் பல சத்சங்க வாக்குகளை அடியவர்கள் அனைவருக்கும் இலவசமாக , கட்டணம் ஏதும் இல்லாமல் , அகத்திய மாமுனிவர் குருகுலச் சேவையை ஒரு வகுப்பு எடுத்து,  உலகம் முழுவதும் அனைவருக்கும் சொல்லுங்கள் - முதல் உயர் வகைப் புண்ணியங்கள் உண்டாகும். நம் வருங்காலத் தலைமுறைகளை நன்கு வாழவைக்கும் மகத்தான உயர் புண்ணிய இறை வாக்கு இவ்வாக்குகள். அன்ன சேவை செய்யும் அடியவர்கள் அனைவரும் அன்ன சேவை செய்யும் இடங்களில் முதலில் அவசியம் கட்டாயமாக சிவபுராணம் படித்து, இவ் சத்சங்க வாக்குகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லி, மக்களுக்குப் புரிய வைத்து, அதன் பின் அன்னமிட,  அவ் சேவையில் பங்கு பெறும் அடியவர்களுக்கு உயர் தர முதல் வகைப் புண்ணியங்கள் உண்டாகும். உங்கள் வாழ்வில் புண்ணியங்கள் மலரட்டும். இவ்வுலகில் தர்மம் செழித்து ஓங்குக.)

ஓம் அன்னை  ஸ்ரீ   லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சர்வம் சிவார்ப்பணம்!




Sunday, June 15, 2025

சித்தர்கள் ஆட்சி - 459 :- நால்வர் துதி

இறைவா நீயே அனைத்தும்.   
இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்.




நால்வர் துதி:- 
பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடி போற்றி!
வாழி திருநாவலூர் வந்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி! போற்றி!


பாடல் பொருள் விளக்கம் :-
நால்வர் துதி என்பது சைவ சமயத்தின் நான்கு முக்கியமான அடியார்களைப் போற்றும் பாடல் ஆகும். இது உமாபதி சிவாச்சாரியார் இயற்றியது. 
இந்தப் பாடலில் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரின் புகழ்கள் பாடப்படுகின்றன. 

நால்வர் துதியின் விளக்கம்: 
1)பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி:
பூழியர்கோன் (அப்பர்) திருநாவுக்கரசர், அவர் வெப்பம் நீக்கிய புகலி (சீகாழி) நகரின் இறைவன் என்று போற்றுகிறார்.

2)ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி:
கல் மிதவையாகி கடலைக் கடந்த நம்பியாரூரர் (சுந்தரர்), அவரது திருவடிகளை வணங்குகிறார்.

3)வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி:
நாவலூரில் அவதரித்த வன்தொண்டர் (சுந்தரர்), அவரது பாதங்களைத் துதிக்கிறார்.

4)ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி:
திருவாதவூரார் (மாணிக்கவாசகர்), காலங்கள் தோறும் நிலைத்திருக்கும் அவரது திருவடிகளை போற்றுகிறார்.


ஓம் அன்னை  ஸ்ரீ   லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சர்வம் சிவார்ப்பணம்!

Saturday, June 14, 2025

சித்தர்கள் ஆட்சி - 458 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - ஈரோடு சத்சங்க வாக்கு ( April 2024 ) - பகுதி 3

 இறைவா !!!!! நீயே அனைத்தும்.

இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்



ஆதி ஈசனின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 

(இவ் தொடர் சத்சங்க வாக்கின் முந்தைய பதிவுகள்:- 


1. சித்தர்கள் ஆட்சி - 450 - பகுதி 1
       2. சித்தர்கள் ஆட்சி - 451 - பகுதி 2
       3.      சித்தர்கள் ஆட்சி - 458 - பகுதி 3

)

குருநாதர் :- ( ஒரு அடியவருக்கு நீண்ட தனி வாக்குகள் பல உரையாடல்களுடன்.)

அப்பனே தன் நிலைமைக்கு, தன் சக்திக்கு ஏற்ப்பவாறுதான் இறைவன் அனைத்தும் செய்வான் அப்பனே. புரிகின்றதா? 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா புரிகின்றதா? (திறமை) ஒன்றும் இல்லாதவர்களுக்கு (வேலை) கொடுத்து விட்டால் அங்க ( அவர்களால் வேலையில் திறமையாக ) 

ஒன்றும் செய்ய முடியாது. 

அடியவர்கள் :- புரிகின்றது ஐயா.

குருநாதர் :- இதனால்தான் அப்பனே, திருமணங்கள் கூட அப்பனே இறைவனே தடுத்து நிறுத்துகின்றான் அப்பனே. ஏன் எதனால் என்றால் வாழ்க்கை நிச்சயம் வாழத்தெரியாமல் வாழ்வார்கள் அப்பனே. பின்பு பிரிவு நிலை ஏற்படும் என்பேன் அப்பனே. அதனால்தான் இறைவனே நிறுத்தி வைக்கின்றான். ஆனாலும் அப்பனே இதற்குப் பரிகாரங்கள் பரிகாரங்கள் என்று ஓடுகின்றார்கள். 

இதனால் ராகு கேதுக்கள் செவ்வாய் இன்னும் தோடங்கள் ( தோஷங்கள் ) என்றெல்லாம் சொல்லி , மக்களைத் திசை திருப்பி, காசுகளைப் பறித்து அப்பனே ஆனாலும் கடைசியில் பார்த்தால் ஒன்றும் நடப்பதில்லை. அப்படி நடந்தாலும் பிரிவு நிலை ஏற்பட்டுவிடுகின்றதப்பா. 

அவ் பக்குவங்களை ஏற்படுத்தித்தான் மணங்களும் இறைவன் முடிப்பான். அனைவரும் புரிந்து கொள்ளுங்கள். 

என்ன ஏது என்றெல்லாம் இறைவன் அப்பனே அதாவது மனிதன் யோசிப்பதைவிட இறைவன் கோடி மடங்கு யோசிக்கின்றானப்பா. 

இதனால்தான் அப்பனே தெரியாமல் வாழ்ந்தவர் எல்லாம் அப்பனே தெரிந்தவர்கள். அதாவது அவர்களும் தெரியாதவர்கள்தான். ஆனாலும் சரியாகப் பயன்படுத்தி , திசை திருப்பி, அப்பனே கர்மத்தில் அப்பனே விட்டுவிடுகின்றார்கள். என்ன லாபம்? 

(அதாவது திருமணம் நடக்கக் கூடாது என்பவர்களை ஜோதிடத்தின் மூலம் திசை திருப்பி, அவர்களிடம் பணம் பறித்து, திருமணம் செய்ய வைத்து, அவர்களைக் கர்மத்தில் நுழைத்து விடுகின்றனர். எனவே இதே காரணங்களால் அங்கு ஒரு அடியவருக்குத் திருமணம் அதனைத் தாமதப்படுத்தி குருநாதர் அமைதி காத்துள்ளேன் என்று உரைத்தார்கள்.) 

குருநாதர் :- அப்பனே அனைவருக்குமே எம்முடைய ஆசிகள் அப்பனே. ஆனால் அனைவருக்கும் நல் நேரங்கள்தான் அப்பனே. ஆனாலும் ஏன் இப்படி நடக்கின்றது என்று கூட நீயும் கேட்கலாம் அப்பனே. இதனால்தான் அப்பனே தான் தன் செய்த எவை என்று அறிய அறிய. 

அப்பனே ஏன் எதற்கு என்றால் அறிந்தும் உண்மைதனைக் கூட அப்பனே சனீஸ்வரனிடத்திலும் கூட யான் சொல்லிவிட்டேன். தன் மகனை எதையும் செய்யாதே என்று அப்பனே. சனீஸ்வரனும் சரி என்று சொல்லிவிட்டான் அப்பனே. அப்பொழுது தீய நேரமானாலும், நல் நேரமே அப்பனே. 

( தீயவை நடக்க இருந்த இவ் அடியவருக்கு நல்லதே நடந்தது.) 

குருநாதர் :- அதனால்தான் அப்பனே எண்ணம்போல் வாழ்க்கை என்று. இதற்கு எடுத்துக்காட்டாக அப்பனே நீயும் கூறும். 

(இப்போது யாரும் இதுவரை உலகம் அறியாத மனதில் நுழைந்து இறைவன் அருளாட்சி செய்யும் அற்புத நிகழ்வு ஒன்று நடந்தேறியது) 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் 1 :- (அங்குள்ள ஒரு அடியவரைப் பார்த்து) ஐயாவை வைத்தே சொல்லலாம். ஆசிரியர் பணியில் உள்ளார்கள். எல்லா குழந்தைகளுக்கும் , மொத்த வகுப்பிற்கும் வாழ்க்கை எப்படி வாழ வேண்டும்? பெண்கள் எப்படி இருக்க வேண்டும்? பெண்கள் கர்ப்ப காலத்தில் எந்த மாதிரி பூசைகள் செய்தால்,  குழந்தைகள் சொல் பேச்சு கேட்கும் என்று எல்லாம் நிறைய குழந்தைகளுக்குச் சொல்லி இருக்கின்றார்கள்.  அப்படி எல்லோருக்கும் நல்லது செய்ததால், ஐயாவோட குடும்பத்தை, (குருநாதர்) ஐயன் வந்து காத்து அருளியுள்ளார்கள். 

குருநாதர் :- அப்பனே, இதையும் யான்தான் பேசவைத்தேன் அப்பனே. புரிகின்றதா அப்பனே. இதனால் குற்றம் எங்கு உள்ளது என்பதை நீயோசி. 

சுவடி ஓதும் மைந்தன் :- இதை பேச வைத்தது நான்தான் என்று உரைக்கின்றார். (ஐயா இங்கு அவர் உங்கள் மனதில் நுழைந்து பேச வைத்துள்ளார்.)

குருநாதர் :- அப்பனே அவரவர் வழியில் அவர்கள் சென்று கொண்டிருந்தாலே போதுமானது. யாங்கள் வந்து நிச்சயம் வழி நடத்துவோம் அப்பனே. மீறிச் சென்றால்தான் அப்பனே. 

இதனால் மீறிச்சென்றாலும் அப்பனே எதை என்று தெரியாமலும், அறியாமலும் இருந்தாலும் பின் சண்டை, சச்சரவுகள் , பின் மீண்டும் நேராக சென்று கொண்டிருந்தால் என்ன இருக்கும்? 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா நேராக போய்க்கொண்டே இருந்தால் என்ன இருக்கும் என்று கேட்கின்றார் ஐயா. 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் 1 :-  ஏதாவது ஒரு இடத்தில் முட்டி நின்றுவிடுவோம். 

குருநாதர் :- அப்பனே இதுதான் வாழ்க்கையப்பா. அப்பனே ஆனாலும் நேராகச் சென்றால் அப்பனே இறைவனை அடைய வேண்டும். அதற்கு என்ன வழி? 

சுவடி ஓதும் மைந்தன் :- நேராக போய்க்கொண்டே இருக்க வேண்டும். முட்டி கீழே விழுகின்றீர்கள். ஆனாலும் போய்கொண்டே இருக்க வேண்டும். அதற்கு என்ன வழி என்று (குருநாதர்) கேட்கின்றார்? 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் 1 :-  ஐயன் உத்தரவுப்படி அறப்பணிகள், தான தர்மங்கள், இறை நம்பிக்கை ….

குருநாதர் :- அப்பனே தன் கடமை என்னவென்று யோசித்து, யோசித்து எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் சரியான வழியில் அதாவது நேரான வழியில் சென்று கொண்டே இருந்தாலே இறைவனை கண்டுவிடலாம் அப்பா. ஆனால் அப்பனே அவ்வாறு கண்டுவிடுவதே இல்லையப்பா மனிதன். 

சுவடி ஓதும் மைந்தன் :- ஒரே (நேர்கோட்டில் சென்று கொண்டே) தன் கடமையை செய்து கொண்டு,  ( அங்குள்ள ஒரு அடியவரை உதாரணம் காட்டி, உங்களுக்கு ) இப்போது என்ன கடமை? நீங்க படிக்க வேண்டிய வயதில் படித்துக்கொண்டு , (வேலைக்கு போக வேண்டிய நேரத்தில் ) வேலைக்கு, அதாவது அந்தந்த நேரத்தில் முயற்சி எடுத்து , முயற்சி எடுத்து, முடியவில்லை என்றாலும் அதனை சரி செய்து சரியான வழியில் சென்று கொண்டே இருந்தால் , ஒரு நாள் நேராக இறைவனிடமே சென்று விடுவீர்களாம். 

குருநாதர் :- அப்பனே அப்படி சென்றால்தான் அப்பனே உத்தமம். அப்படி செல்லாவிடில்தான் இறைவனை நாடுகின்றார்கள். புரிகின்றதா இப்பொழுது? 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்போ, தன் கடமையை யார் சரியாக செய்ய வில்லையோ அவங்கதான் (இறைவனை நாடுகின்றனர்). ஐயா, கொஞ்சம் differentஆக  இருக்கு( நம் அனைவருக்கும் முற்றிலும் புதிய வாக்கு இது) . புரியுதுங்களா ஐயா? அப்போ தன் கடமையை யார் சரியாக செய்கின்றார்களோ, அவங்க Direct ஆக இறைவனிடம் போகலாமாம். ஐயா இது எப்படி ( புரிந்து கொள்வது என்றால்) சொல்கின்றார் என்றால் நாம் கீழே விழுந்து கும்பிட்டாலும் , என்ன செய்தாலும் (இறைவன்) ஆசிகள் கிடைப்பது (கடினம்). அப்ப, தன்னோட கடமை என்ன? அதை செய்து கொண்டே கரக்டாக போய்க்கொண்டே இருந்தோம் என்றால் , இறைவனிடமே directஆக போய் பேசலாமாம். ஐயா புரியுதுங்களா? 

அடியவர் 4 :- அவங்கவங்க அவங்க வேலையை செய்கின்றார்கள்தானே? 

சுவடி ஓதும் மைந்தன் :- ம்..

அடியவர் 4 :- அதில் ஏன் இடையூறு செய்கின்றார்கள்? 

குருநாதர் :- அப்பனே இப்பொழுதுதான் சொன்னேன் அப்பனே. அதாவது வாகனத்தை ஒருவன் இயக்குகின்றான் அப்பனே. இடையே ஏன் நிறுத்துகின்றான் கூறு?

அடியவர் 4 :- எங்க நான் நிறுத்துகின்றேன்? அது நிற்கின்றது இல்லையா. (அதாவது) இடிக்கின்றதில்லையா?

குருநாதர் :- அப்பனே , எப்படியப்பா (அதுவாகவே தானாக) நிறுத்தும்? அப்பனே காவலாளிகள் நிறுத்தினால் என்ன செய்வாய் அப்பனே? பின் (நிற்காமல்) நீயே சென்றுவிடுவாயா என்ன? 




சுவடி ஓதும் மைந்தன் :- ஒரு வண்டி செல்கின்றது. வாகனம் இயக்குகின்றோம். ஒரு காவலாளி ஏன் நிறுத்தி வைக்கின்றார் என்று கேட்கின்றார். ஐயா நீங்க சொல்லுங்க ஐயா. 

அடியவர் :- சோதனை செய்வதற்காக…

குருநாதர் :- அப்பனே பக்குவத்தைக் கொடுத்தால்தான் அப்பனே அடுத்த படி ஏற முடியும் அப்பா. அப்பனே நீயும் தெரியாமலே கேட்கின்றாய் அப்பனே, தெரிந்து வைத்தும். 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப, சோதனை. போய்க்கொண்டே இருக்கின்றீர்கள் நேர் வழியில். ஏன் நிறுத்துகின்றீர்கள். நீங்கள் (அப்படியே) போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதானே? ஐயா புரியுதுங்களா? அங்கு அவர்கள் சோதனை செய்கின்றார்கள். இது போல்தான் நாம் நேர் வழியில் செல்லும் பொழுது…

(இப்போது சுவடி ஓதும் மைந்தன் அங்குள்ள அடியவர்களை மேலும் கேள்வி கேட்க ஊக்குவித்தார்கள்.)

ஐயா (மேலும் கேள்விகளை) கேளுங்கள். இந்த சமயம் (நீங்கள் கேள்விகள் கேட்க) நல்ல சமயம். 

அடியவர் 4 :- செய்துகொண்டே இருப்பார்களா? 

சுவடி ஓதும் மைந்தன் :- இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?  நீங்கள் அடுத்த படிக்கு , ஒரு பெரிய நிலைக்குச் செல்வதற்கு இந்த சோதனை இருந்தால்தான் அடுத்த படியைப் பிடிக்க முடியும். இந்த சோதனை இல்லை என்றால் அதைப் பிடிக்க முடியாது.

அடியவர் 4 :- எப்படி உணர்ந்து கொள்ளமுடியும், அடுத்த அடுத்த படிக்குச் செல்வதை?

குருநாதர் :- அப்பனே உணர்ந்து கொண்டேதான் வருகின்றாய் அப்பனே.

அடியவர் 4 :- (எங்கள் வாழ்க்கையில்) எங்கே முன்னே போனாலும் இடிக்குதுல்ல? (தடைகள் பல வருகின்றது. முன்னே போக முடியவில்லை). 

குருநாதர் :- அப்பனே சோதனை செய்பவன் , அப்பனே அங்கேயா நீ நின்று விடுகின்றாய் அப்பனே? மீண்டும் கிளம்பிவிடுகின்றாய் அல்லவா அப்பனே?

( நம் பலரின் உள் குரல் இவ் அடியவர் இப்போது உரைத்த பதில்/கேள்வி. இந்த இடத்தில் இதனை உங்கள் உரையாடலாக நினைத்து வாக்கினை உள்வாங்கப் பல புரிதல்கள் உங்களுக்கு உண்டாகும்.)

அடியவர் 4 :- (எனக்கு) எங்கே போனாலும் பரம்பதத்தில் ( பரம்பதம் விளையாட்டில்) பாம்பு கடிச்சு முதல் கட்டதிற்கு வருவோம் இல்லையா? அந்த கதைதான் இப்போது நடந்து கொண்டிருக்கின்றது. 




குருநாதர் :- அப்பனே அப்படி இருந்தால்தான் அப்பனே என்னிடத்தில் வரவும் முடியும் அப்பா. இப்பொழுது என்னையும் கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்கின்றாய் அப்பா. 

அடியவர்கள் :- ( பலத்த சிரிப்புக்கள் ) 

அடியவர் 4 :- (பரம்பத விளையாட்டில்) முதல் இடத்திலேயே இருந்தால் கூட பரவாயில்லை…(நல்ல உயரம் சென்று அங்கிருந்து அல்லவா கீழே விழுந்து கொண்டே இருக்கின்றேன். மனசு வலிக்கின்றது.) 

குருநாதர் :- அப்பனே அதாவது பாவத்தைக் கரைத்துக் கொள்பவனே, என்னிடத்தில் வருகின்றானப்பா. 

(நமது வாழ்க்கை என்ற பரம்பதம் விளையாட்டில் பாம்பு கடித்து கீழே விழுந்தால் , ஆரம்பித்த முதல் கட்டத்திற்கே வந்தால் - பாவம் கரைகின்றது என்று பொருள் கொள்க.) 

குருநாதர் :- இப்படி நீ கஷ்டங்கள் படவில்லையென்றால் ஏனப்பா நீ வந்து என்னிடம் வாக்குகள் கேட்கப் போகின்றாய்? அகத்தியனா? யாரோ ஒருவன் என்று சென்று கொண்டிருப்பாய் அப்பனே. இதனால்தான் அப்பனே அதாவது உந்தனுக்கு இப்பொழுது கொடுத்திருக்கின்றது நல்லதா? தீயதா ? நீயே யூகித்துக் கொள் அப்பனே. அப்பனே எழுந்து நின்றவனே இதைக் கேள் அவனிடத்தில் நீயே. 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் 1 :- உங்களுக்குச் சோதனைகள் நிறைய வந்துள்ளது , அதைக் கடந்து வந்துள்ளேன் என்று சொல்கின்றீர்கள்,  இல்லையா? இந்த சோதனைகளைக் கொடுத்ததில் உங்களுக்கு நன்மையா தீமையா என்று ஐயன் (குருநாதர்) கேட்கின்றார். 

அடியவர் 4 :- எனக்கு எது வந்தாலும் ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் அடுத்த தேவை என்று ஒன்று உள்ளது அல்லவா? அதை வந்து நமக்கு…..

குருநாதர் :- அப்பனே தேவை இப்பொழுது உந்தனுக்கு அதாவது தண்ணீர் வேண்டும் என்பேன் அப்பனே. நேரடியாக உள்ளே செல் பார்ப்போம்? 

அடியவர் 4:- புரியவில்லை ஐயா. 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா உங்களுக்கு இப்போது தண்ணீர் தாகம் தேவை  என்று (பொதிகை வேந்தன்) நான் சொல்கின்றேன். (நீங்கள் இப்போது இந்த வீட்டில்) நேராக உள்ளே சென்று குடித்து விடுவீர்களா என்று கேட்கின்றார். ஐயா புரியுதுங்களா? 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் 1 :- (இந்த வீட்டில்) கேட்டுத்தானே தண்ணீர் குடிப்பீர்கள்? 

அடியவர் 4 :- ஆமாம். கேட்டுத்தான் (வாங்கி) குடிப்பேன். 

குருநாதர் :- அப்பனே (நீ உள்ளே சென்று) நேரடியாக ஏன் அருந்தக்கூடாது? 

சுவடி ஓதும் மைந்தன் :- இந்த வீட்டில் எங்கு தண்ணீர் உள்ளது என்று தெரியும். அப்படி இருக்கையில் ஏன் நேரடியாக உள்ளே சென்று அருந்தக்கூடாது என்று கேட்கின்றார். 

அடியவர் 4 :- நம்ம வீடு என்றால் (யாரையும் கேட்காமல்) எடுத்துக்கொள்ளலாம். ஆனால் வெளியே போனால் கேட்டுத்தான் வாங்க வேண்டும். 

குருநாதர் :- அப்பனே இப்படித்தான் இறைவன் மனிதனைப் படைக்கின்றான் அப்பனே. அதனால் அவன் கட்டுப்பாட்டில்தான் ஒவ்வொரு ஆன்மாவும் என்பேன் அப்பனே. பாவ புண்ணியங்களுக்கு ஏற்பவாறுத்தான் இறைவனும் இயக்குவான் என்பேன். புரிகின்றதா? அப்பனே இன்னும் கேள்?

அடியவர் 4 :- ஐயா இதை எப்படி நாங்கள் உள்ளே உணர்ந்து கொள்வது? 

குருநாதர் :- அப்பனே இப்பொழுது இதுவரை உணர்ந்து கொண்டுதான் வந்துவிட்டாய் அப்பனே. இதுவரை பின் பாவத்தில் மிதந்துதான் வந்து கொண்டு இருந்தாய். இப்பொழுதுதான் அதாவது யான் மீட்டெடுக்கவில்லை என்றால் அப்பனே, நீ ஏற்கனவே பைத்தியமாகி இருப்பாய் என்பேன் அப்பனே. 

அடியவர் 4 :- (வாழ்க்கை என்ற பரம்பதம் விளையாட்டில் பல முறை கீழே விழுந்த வலியினால்) ஏறக்குறைய அப்படித்தான் இருக்கின்றேன். ஒன்னும் வித்தியாசம் இல்லைங்க. 

அடியவர்கள் :- (பலத்த சிரிப்புக்கள்)

அடியவர் 4 :- இன்னும் நடக்க வேண்டிய ஒரு டைம்ல ( time ) வந்து delay ஆகி…..

குருநாதர் :- அப்பனே உடம்பே உன்னிடத்தில் இல்லை அப்பா. நீ கேள்விகள் கேட்கின்றாய்!

( நம் குருநாதர், நம் அன்புத் தந்தை, கருணைக்கடல், பிரம்ம ரிஷி, அகத்திய மாமுனிவர் அருளால்  April 2024 ஆம் ஆண்டு ஈரோட்டில், சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் திரு.ஜானகிராமன் அவர்கள் மூலம் ஜீவ நாடியில் உரைத்த அடியவர்கள் சத்சங்க கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்…..) 

(இங்கு வெளியிடப்படும் பல சத்சங்க வாக்குகளை அடியவர்கள் அனைவருக்கும் இலவசமாக , கட்டணம் ஏதும் இல்லாமல் , அகத்திய மாமுனிவர் குருகுலச் சேவையை ஒரு வகுப்பு எடுத்து,  உலகம் முழுவதும் அனைவருக்கும் சொல்லுங்கள். நம் தலைமுறைகளை நன்கு வாழவைக்கும் மகத்தான வாக்குகள். அன்ன சேவை செய்யும் அடியவர்கள் அனைவரும் அன்ன சேவை செய்யும் இடங்களில் முதலில் அவசியம் கட்டாயமாக சிவபுராணம் படித்து, இவ் சத்சங்க வாக்குகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லி பின் அன்னமிட அவ் அடியவர்களுக்கு உயர் தர முதல் வகைப் புண்ணியங்கள் உண்டாகும். புண்ணியங்கள் மலரட்டும். தர்மம் செழித்து ஓங்குக. ) 

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!