“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Friday, March 28, 2025

சித்தர்கள் ஆட்சி - 437:- அன்புடன் அகத்திய மாமுனிவர் - கோவை வடவள்ளி ஆலயத்தில் உரைத்த சத்சங்க வாக்கு ( April 2024 ) - பகுதி 4

                                     இறைவா !!!!! நீயே அனைத்தும்.

இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்



அன்புடன் அகத்திய மாமுனிவர் - கோவை வடவள்ளி ஆலயத்தில் உரைத்த சத்சங்க வாக்கு ( April 2024 ) - பகுதி 4

( இவ் தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்
1. சித்தர்கள் ஆட்சி - 431 - பகுதி 1
        2. சித்தர்கள் ஆட்சி - 434 - பகுதி 2
        3. சித்தர்கள் ஆட்சி - 436 - பகுதி 3
        4. சித்தர்கள் ஆட்சி - 437 - பகுதி 4
)

குருநாதர் :- அப்பனே இறைவனை கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் அப்பனே. இது கலியுகமப்பா. அப்பனே போராட்ட காலங்களப்பா. அப்பனே ஏமாற்றும் காலங்களப்பா. சொல்லிவிட்டேன் அப்பனே. இதனால் அப்பனே பல நோய்களும் வருமப்பா. அப்பனே சண்டைகள் வருமப்பா. இன்னும் யான் பெரியவன், நீ பெரியவன் என்று ஒவ்வொருவரும் அடித்துக் கொள்வார்களப்பா. இதனால் அப்பனே இயற்கையும் மாறி என்னென்னவோ செய்யுமப்பா. அப்பனே இரவு பகலாகும். சூரியன் சந்திரனாகும். அப்பனே நட்சத்திரங்களும் கூட கீழே விழுமப்பா. எரிகற்களும் கூட அங்கங்கே விழுமப்பா. அப்பனே மாய்ந்து போவார்கள் என்பேன் அப்பனே. சொல்லிவிட்டேன் அப்பனே. தர்மத்தைப் பாதுகாக்க பின் நன்று நன்று. 

அப்பனே தர்மத்தை எப்படிப் பாதுகாப்பது என்று, அருகில் உள்ளவனை எழு.
( நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர் அங்கு ஒரு அடியவரை எழச்சொல்லி அனைவருக்கும் தர்மத்தை எப்படி பாதுகாக்க வேண்டும் என்று எடுத்து உரைக்க உத்தரவு இட்டார்கள்)

அடியவர் :- ( உரைக்க ஆரம்பித்தார் ) 

குருநாதர் :- அப்பனே மேல் நிலை என்றால் என்ன? கீழ் நிலை என்றால் என்ன? 

அடியவர் :- ( மேல் நிலை - இறைவனை அடைதல் , சித்தர்கள் செய்ய அஷ்டமா சித்துக்கள். ) 

குருநாதர் :- அப்பனே என்னிடத்தில் வந்துவிட்டாலே பிள்ளையைப் போல பாதுகாத்து அனைத்தும் செய்வேன் அப்பனே. அனைவரிடத்திலும் குறைகள் உள்ளது. அவையெல்லாம் நிச்சயம் முருகனே தீர்த்து வைப்பான் அப்பனே. ஏறுங்கள் பழனிதன்னில்

சுவடி ஓதும் மைந்தன் :- ( அனைவரும் பழனி செல்ல வேண்டும் என்று எடுத்து உரைத்தார்கள் )

( நம் குருநாதர் கருணைக் கடல் இப்போது பழனி மலை ரகசியங்கள் உரைக்க ஆரம்பித்தார்கள்)

குருநாதர் :- அப்பனே இதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால்,  பின் நம்தன் பழனிக்குச் சென்றால்தான் நன்மை நடக்குமா என்றெல்லாம் எண்ணக்கூடாது. அப்பனே கருமம் அதாவது பழனிதன்னில் பல பல சித்தர்களும் கூட சமாதியோடு அதாவது பின் உடம்பு இல்லையப்பா. ஆனால் உயிரோடு இருக்கின்றார்கள் அப்பனே. அங்கு சென்றால் அப்பனே அவர்கள் அதாவது  காற்று உங்கள் மேல் படுமப்பா. அப்பனே தரித்திரம் நீங்கும். அப்பனே புண்ணியம் கிட்டும். அப்பனே நீங்கள் உயர்ந்துவிடலாம் என்பேன் அப்பனே. அதனால்தான் தான் சொன்னேன் அப்பனே.   அதால் பழனிக்குப் போகச்சொன்னார்கள். அகத்தியன் பின் சொன்னானே. இவ்வாறு இவனை வணங்கிதானா நன்மை கிட்டும் என்றெல்லாம் எண்ணக்கூடாது அப்பனே. இப்படியும் நினைப்பார்கள் அப்பனே இவ்வுலகத்தில், இக்கலியுகத்தில் அப்பனே. இப்படியும் நினைக்கின்ற மனிதன் இருக்கின்றான் அப்பா,  முட்டாள்தனமாக அப்பனே. அதனால்தான் மனிதன் முன்னுக்கு வருவதேயில்லை மனிதன். 

அடியவர்கள் :- (அமைதி)

( நம் குருநாதர் கருணைக்கடல் இப்போது உலகம் அறியாத மருத மலையில் ஓர் உயர் ஞானி குறித்த ரகசிய வாக்கு ஒன்றை உரைத்தார்கள்

குருநாதர் :- அதனால் எவ்வவ் இடத்திற்கு எங்கு சென்றால் நன்மைகள் என்பதை எல்லாம். அதாவது மருதமலையிலே அறிந்தும் ஒரு ஞானி இருக்கின்றான். அவ் ஞானியைப் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். 

அப்பனே எழைக்குடிலில் பிறந்தானப்பா. அப்பனே இதனால் அவர்கள் ஆனாலும் தாய், தந்தையரோ அறிந்தும் முருகனுக்கு சேவை செய்து கொண்டே இருந்தார்கள். ஆனாலும் பல உண்மைகள் எடுத்துரைக்க, எடுத்துரைக்க. அதாவது முருகா அறிந்தும் கூட,  அதாவது அவர்களுக்கு குழந்தை வரங்கள் இல்லை. ஆனாலும் கடைசியில் கிடைத்தது. அதாவது 50 வயதிற்கு மேலே. 

ஆனாலும் முருகனிடம் சரணடைந்து , முருகா!!!!!!  இப்பிள்ளையை எப்படிப் பேணிக்காப்பது? எங்களுக்கே வந்தாகிவிட்டது. ஆனாலும் குழந்தையும் கொடுத்து விட்டாய்.  எங்களால் ஒன்றும் செய்யமுடியவில்லையே என்று , அதாவது முருகன் அடியிலேயே விட்டுவிட்டு, முருகா !!!!!! நிச்சயம் எங்களால் இனியும் உயிர்வாழ முடியாது என்று, ஆனாலும் அங்கிருந்து அவள்தன் மனைவியோ ஏன் இப்படி என்று? 

ஆனாலும் முருகனுக்காகவே சேவை செய்துவிட்டோம். முருகன் ஏதாவது வழியை நடத்துவான் என்று, நிச்சயம் நடந்தும்,  அங்கும் இங்கும் எங்கோ சென்று, கடைசியில் செந்தூரை அடைந்தார்கள் நலமாகவே. 

அங்கே ஆனாலும் இன்னும் விளக்கங்களோடு அக்குழந்தையும் கூட ( வயது முதிர்ச்சியினால் பெற்றோர்கள் மருத மலையில் முருகப்பெருமானிடத்தில் விட்டுவிட்டனர் ) , இதனால் அக்குழந்தை அங்கே அழுது புலம்பியது. ஆனாலும் பசிக்கின்றது என்பதையெல்லாம் , ஆனாலும் மனிதன் என்ன சொன்னான் தெரியுமா? இவன்தன் அனாதை. இவன்தன் பின் பிடித்துக்கொண்டால் தரித்திரம் என்று. 

அப்பனே! இப்படித்தான் இருக்கின்றார்களப்பா மனிதன் அப்பனே. ஆனாலும் முருகனை வணங்குவான். ஆனாலும் பின் அருகில் உள்ளவற்றை கண்கூடாகவே அப்பனே புண்ணியங்கள் செய்யாமல் மறந்துவிடுவானப்பா. இதனால் மருதமலை முருகனே !!!!!! அக்குழந்தையை மறு வேடத்தில் வந்து அழகாகத் தூக்கினான். 

அனைவருமே ஆச்சரியப்பட்டனர் அங்கும் இங்கும் கூட. அதாவது இக்குழந்தையைத் தீண்டினாலே தரித்திரம். இவன்தனக்கு என்ன ஆகப்போகின்றது என்று. இதுதானப்பா மனிதனின் நினைப்பு. 

அப்பனே! இறைவன் யார் என்பதைக்கூட உணர்ந்து கொள்வதே இல்லையப்பா. அப்பனே ( இறைவன்! ) உங்கள் அருகில் வந்தாலும்,  நீங்கள் மாயையில் சிக்கிக்கொண்டிருக்கின்றீர்கள் அப்பனே. அதாவது அவைவேண்டும். இவை வேண்டும். திருமணம் வேண்டும். இவையெல்லாம் நினைத்துக்கொண்டிருந்தால் அப்பனே, இறைவன் எங்கப்பா கண்ணுக்குத் தெரிவான்? ஆனால் இறைவனை மட்டும் நினைத்துக்கொண்டால், அப்பனே இவையெல்லாம் அற்ப சுக வாழ்க்கையப்பா. சுலபமாக கொடுத்து விடுவான் அப்பனே. திருமணமா? எடுத்துக்கொள். குழந்தையா எடுத்துக் கொள். ஆனாலும் எதற்காக இறைவனிடம் நீங்கள் வேண்டுகின்றீர்களோ அதை நிச்சயம் தரமாட்டான் அப்பனே. அதாவது பின் மாய வாழ்க்கைக்கு. அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே. எதையும் வேண்டாதீர்கள் அப்பனே. படைத்தவனுக்குத் தெரியும் அப்பனே. உந்தனுக்கு எதைச் செய்ய வேண்டும், எப்பொழுது தர வேண்டும், எக்காலத்தில் தர வேண்டும் , அப்பனே எங்கு வைத்து தர வேண்டும் என்பவை எல்லாம் தெரியும் அப்பனே. எங்கு கொடுக்க வேண்டும், எங்கு உயிரை எடுக்க வேண்டும் என்பதெல்லாம் தெரியும் அப்பனே!. மிகப்பெரியவனப்பா இறைவன்!!!!!
அதை மீறி உங்களால் நடத்திட முடியுமா என்ன அப்பனே ? கூறுங்கள் அப்பனே! கூறுங்கள் ????!

அடியவர்கள் :- ( ஆழ்ந்த சிந்தனை. அமைதி. ) 


( நம் குருநாதர் கருணைக்கடல் பிரம்ம ரிஷி அகத்திய மாமுனிவர் அருளால்  April 2024, கோவை வடவள்ளி அகத்திய மாமுனிவர் ஆலயத்தில் உரைத்த சத்சங்க கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்….)

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!