“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Saturday, October 26, 2024

சித்தர்கள் ஆட்சி - 406 :- திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் 83 பெருக்கச் சஞ்சலித்து (திருச்செந்தூர்)

 

இறைவா நீயே அனைத்தும் 

திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் 83 பெருக்கச் சஞ்சலித்து  (திருச்செந்தூர்)


பெருக்கச்சஞ் சலித்துக்கந்

     தலுற்றுப்புந் தியற்றுப்பின்

          பிழைப்பற்றுங் குறைப்புற்றும் ...... பொதுமாதர்


ப்ரியப்பட்டங் கழைத்துத்தங்

     கலைக்குட்டங் கிடப்பட்சம்

          பிணித்துத்தந் தனத்தைத்தந் ...... தணையாதே


புரக்கைக்குன் பதத்தைத்தந்

     தெனக்குத்தொண் டுறப்பற்றும்

          புலத்துக்கண் செழிக்கச்செந் ...... தமிழ்பாடும்


புலப்பட்டங் கொடுத்தற்கும்

     கருத்திற்கண் படக்கிட்டும்

          புகழ்ச்சிக்குங் க்ருபைச்சித்தம் ...... புரிவாயே


தருக்கிக்கண் களிக்கத்தெண்

     டனிட்டுத்தண் புனத்திற்செங்

          குறத்திக்கன் புறச்சித்தந் ...... தளர்வோனே


சலிப்புற்றங் குரத்திற்சம்

     ப்ரமித்துக்கொண் டலைத்துத்தன்

          சமர்த்திற்சங் கரிக்கத்தண் ...... டியசூரன்


சிரத்தைச்சென் றறுத்துப்பந்

     தடித்துத்திண் குவட்டைக்கண்

          டிடித்துச்செந் திலிற்புக்கங் ...... குறைவோனே


சிறக்கற்கஞ் செழுத்தத்தந்

     திருச்சிற்றம் பலத்தத்தன்

          செவிக்குப்பண் புறச்செப்பும் ...... பெருமாளே.


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!


Thursday, October 24, 2024

சித்தர்கள் ஆட்சி - 405 :- ஆதிசங்கரர் அருளிய ஶ்ரீ கால பைரவாஷ்டகம்

 

இறைவா நீயே அனைத்தும் 

ஆதிசங்கரர் அருளிய ஶ்ரீ கால பைரவாஷ்டகம்

மரணபயம் நீங்கிட:

தேவராஜ ஸேவ்யமான பாவனாங்க்ரி பங்கஜம்
வ்யாலயக்ஞசூத்ர மிந்துசேகரம் க்ருபாகரம்
நாரதாதியோகிப்ருந்த வந்திதம் திகம்பரம்
காசிகா புராதினாத காலபைரவம் பஜே. ( 1 )

காசிநகர் வாழ் காலபைரவா! நின் மாண்பினைப் பாடுகிறேன் – நினது தாமரைப் பாதங்களில் தேவேந்திரன் வந்து பணிந்து வணங்குகிறான்; நீ அணிகின்ற யக்ஞோபவீதமோ நச்சினைக் கக்கிடும் அரவம் அன்றோ; நினது சடாமுடியை அலங்கரிப்பதோ பாலொளிவீசும் முழுநிலவு; அருட் பார்வையை அள்ளி வீசும் நினது ஒளிவீசும் நயனங்கள்; நாரத முனிவரும் ஏனைய இசை வாணர்களும் நயம்பட இசைக்கும் புகழுடையாய்; திக்குகள் அனைத்தையும், ஆடையாய் அணிந்த எழிலுறு மேனியனே! நின்னைப் பாடுகின்றேன்.

வேண்டுவன கிடைக்க:

பானுகோடி பாஸ்வரம் பவாப்திதாரகம் பரம்
நீலகண்ட மீப்ஸிதார்த்த தாயகம் த்ரிலோசனம்
காலகால மம்புஜாக்ஷ மக்ஷசூல மக்ஷரம்
காசிகா புராதினாத காலபைரவம் பஜே. ( 2 )

காசி நகராளும் காலபைரவா! நின் புகழை என் நாவால் உரக்கப் பாடுகின்றேன். கோடி சூரியர் நாடிய ஒளிக்கதிர் வீசிடும் ஞாயிறே; மீண்டும் மீண்டும் வந்து பிறக்கும் கேட்டினை அழிப்பாய்; பிரபஞ்சத்தின் அதிபதியே நீலகண்டா! எங்கள் பெற்றியைப் போற்றி வரம் தரும் கருணையே; முக்கண் உடைய மூலப் பரம்பொருளே; காலனையழித்த கருணை வள்ளலே; தாமரைக் கண்ணா; அழிவற்ற ஆயுதம் கரங்களில் தாங்கிய கருணையே நீதான் நிலையானவன்..

சூல டங்க பாச தண்ட பாணி மாதிகாரணம்
ஷ்யாமகாய மாதிதேவ மக்ஷரம் நிராமயம்
பீமவிக்ரமம் ப்ரபும் விசித்ர தாண்டவப்ரியம்
காசிகா புராதினாத காலபைரவம் பஜே ( 3 )

காசி நகரையாளும் காலபைரவா நின் புகழினைப் பாடுகின்றேன். கடிந்திடும் கோடரி கைக்கொண்டு, பாசக் கயிற்றினை பற்றிய கையுடன், இப்புவனந்தனை படைத்துக் காத்திடும் பேரருள் கருணையே! சாம்பல் பூசிய கவின்மிகு உடலுடன், தேவாதி தேவா தேவருள் தலைமையே! அழிவினை அழிக்கும் அழியாச் செல்வமே; நோய்நொடிதனையே நெருங்காமல் செய்து உடல்நலம் காக்கும் உத்தமத் தலைவா! வலிமையனைத்தும் ஒருங்கே கொண்ட பிரபஞ்சத்தைப் படைத்து, சிற்சபைதனிலே தாண்டவமாடும் தனிப்பெரும் இறைவா!

மோட்சம் கிடைக்க:

புக்திமுக்திதாயகம் ப்ரசஸ்த சாரு விக்ரஹம்
பக்தவத்ஸலம் ஸ்திரம் ஸமஸ்தலோக விக்ரஹம்
நிக்வணன் மனோக்ஞஹேம கிங்கிணீலஸத்கடிம்
காசிகா புராதினாத காலபைரவம் பஜே. ( 4 )

காசி நகராளும் காலபைரவரைப் புகழ்வேன்! மனதில் தோன்றும் விருப்புகளையும், அதனை அடையும் மார்க்கங்களையும் காட்டி அருள்புரியும் தேவா! மனதை கொள்ளை கொள்ளும் எழிலுடை தோற்றமுடையாய்! பணிவோர் தம்மை பரவசப்படுத்தும் கருணைக் கடலே! நிரந்தரப் பொருளே! பல்லிடந்தோறும் பற்பல தோற்றம் பயின்றிடும் தேவே! இடையில் ஒளியுமிழ் பொன்னணியுடனே மணிகள் ஒலிக்க நடமிடும் இறைவா!

தர்மசேது பாலகம் த்வதர்மமார்க்க நாசகம்
கர்மபாச மோசகம் சுசர்ம தாயகம் விபும்
சுவர்ணவர்ண கேசபாச சோபிதாங்க நிர்மலம்
காசிகா புராதினாத காலபைரவம் பஜே. ( 5 )

காசி நகரில் கருணை வழங்கும் காலபைரவர் புகழினை இசைப்பேன். நேர்மை வழிதனை நிலைத்திடச் செய்வோன்; அறவழி பிறள்வோரை அழித்திடும் காலன்; கர்ம வினைகள் விளைத்திடும் செயல்கள் அனைத்தையும் அழித்துக் காப்போன்; அளிக்கும் நலன்களை அடக்கமோடு அளிப்போன்; அற்புதத்திலும் அற்புதமானவன்; அணியும் அணிகலன் அனைத்தும் ஒளிருகின்றன பொன்னின் நிறத்தில்.

மோட்சம் கிடைக்க:

ரத்னபாதுகா ப்ரபாபிராம பாத யுக்மகம்
நித்யமத்விதீயமிஷ்ட தைவதம் நிரஞ்சனம்
ம்ருத்யு தர்பநாசனம் கராளதடம்ஷ்ட்ர மோக்ஷனம்
காசிகா புராதினாத காலபைரவம் பஜே. ( 6 )

காசி நகராளும் காலபைரவர் புகழினைப் பாடுவேன்; பொன்னாலான காலணி இரண்டும் மின்னிடும் கால்களை யுடையோன்; நிரந்தரமானவன்; ஈடில்லை இவருக்கு மாற்றார் எவரும்; விரும்பியதனைத்தையும் விரைந்து அருள்பவன்; தனக்கென விருப்பம் எதுவும் இலாதவன்; இறப்பையும் வென்ற மேலோனாவன்; ஆன்ம விடுதலையைத் தன் பற்களால் தருபவன்.

பாவங்கள் அழிய:

அட்டஹாச பின்னபத்மஜாண்ட கோசஸந்ததிம்
த்ருஷ்டிபாத நஷ்டபாப ஜாலமுக்ரசாஸனம்
அஷ்டஸித்தி தாயகம் கபாலிமாலிகந்தரம்
காசிகா புராதிநாத காலபைரவம் பஜே. ( 7 )

காசி நகராளும் காலபைரவர் புகழினைப் பாடுவேன். படைப்புத் தேவன் தாமரைச் செல்வன் பிரம்மன் படைத்த அனைத்தையும் தன் கர்ஜனையால் மட்டுமே உடைக்கும் ஆற்றல் படைத்தோன்; பாவங்கள் அனைத்தையும் தன் கருணைப் பார்வையால் கருகிடச் செய்வோன்; ஆள்பவரில் இவனே ஆண்மையாளன் எனும் பெருமையைப் பெற்றோன்; அட்டாங்க சித்தி* அருளும் பெரியோன்; கபால மாலையை அணிந்திடும் பெற்றியன். (*அட்டாங்க சித்தி என்பது: அனிமா, மஹிமா, லகிமா, கரிமா, ப்ராப்தி, ப்ரகாம்யா, ஈசத்வா, வசித்வா எனும் சித்திகளாம்).

நீதி கிடைக்க:

பூதஸங்க நாயகம் விசாலகீர்த்தி தாயகம்
காசிவாசி லோகபுண்ய பாப சோதகம் விபும்
நீதிமார்க்ககோவிதம் புராதனம் ஜகத்பதிம்
காசிகா புராதிநாத காலபைரவம் பஜே. ( 8 )

காசி நகராளும் கற்பகமாம் காலபைரவரைப் பாடுகின்றேன். பேய்க்கணங்கள் அனைத்துக்கும் அதிபதியானவனே! அளவற்ற புகழினை அள்ளித் தெளிப்பவனே! காசியில் வாழ்வோர் பிணிகளை நீக்கி, பாவங்கள் போக்கி பவித்திரமாய்ச் செய்வோனே! ஒளிமயமானவனே! நல்வழி காட்டிடும் நலம் தரும் நாயகனே! காலத்தை வென்ற நிரந்தரமானவனே! பிரபஞ்சத்தைப் படைத்துக் காத்து வழிநடத்தும் வல்லோனே! நின் பாதம் பணிகின்றேன்.

… பல ஸ்ருதி …

சகல செல்வங்களும் பெற தினமும் ஜபிக்க வேண்டிய கால பைரவ மந்திரம்:

கால பைரவாஷ்டகம் படந்தியே மனோஹரம்
க்ஞானமுக்திஸாதனம் விசித்ர புண்ய வர்த்தனம்
ஸோகமோஹ தைன்யலோப கோபதாப நாசனம்
தே ப்ரயாந்தி காலபைரவாங்க்ரி ஸன்னிதிம் த்ருவம்

காலபைரவரின் புகழ்பாடும் இவ்வெட்டு வசீகரப் பதிவினையும் படித்து ஆன்ம விடுதலை எனும் அரும்பொருளை உணர்ந்தோர் எல்லோரும், பாவ வழி மறந்து நற்செயல்கள் புரிந்து, துக்கம் அழிந்து, பற்றும் பாசமும் ஒழித்து, ஆசையும், கோபமும் துறந்து பரம்பொருளாம் காலபைரவரின் பாதரவிந்தங்களை அடைவர் என்பது திண்ணம்.


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!


சித்தர்கள் ஆட்சி - 404 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 15

                            இறைவா !!!!! நீயே அனைத்தும்.





அன்புடன் அகத்திய மாமுனிவர் - மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 15

( இவ் தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்:-


சித்தர்கள் ஆட்சி -  379 - பகுதி 1
சித்தர்கள் ஆட்சி -  381 - பகுதி 2
சித்தர்கள் ஆட்சி -  382 - பகுதி 3
சித்தர்கள் ஆட்சி -  383 - பகுதி 4 
சித்தர்கள் ஆட்சி -  389 - பகுதி 5
சித்தர்கள் ஆட்சி -  390 - பகுதி 6
சித்தர்கள் ஆட்சி -  391 - பகுதி 7
சித்தர்கள் ஆட்சி -  392 - பகுதி 8
சித்தர்கள் ஆட்சி -  393 - பகுதி 9
சித்தர்கள் ஆட்சி -  398 - பகுதி 10
சித்தர்கள் ஆட்சி -  400 - பகுதி 11
சித்தர்கள் ஆட்சி -  401 - பகுதி 12
சித்தர்கள் ஆட்சி -  402 - பகுதி 13
சித்தர்கள் ஆட்சி -  403 - பகுதி 14
சித்தர்கள் ஆட்சி -  404 - பகுதி 15


( நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய இவ் மதுரை தொடர் வாக்குகளின் முதல் 12 பகுதிகள்  2024ஆம் ஆண்டில் மார்ச் மாதம் 17 ஆம் தேதி நடந்த சத்சங்கம் ஆகும். மறுநாள் (18-3-2024) காலையில் மீண்டும் சத்சங்கம் ஆரம்பம் ஆனது.  பகுதி 13 முதல் இவ்வாக்குகள் தொடர்கின்றது.)

நம் குருநாதர்:- அம்மையே அறிந்தும் அறிந்தும் இதை யான் சொல்லி விட்டேன். காகம் அதிகாலையிலே அம்மையே பார்த்தீர்களா? அம்மையே கோழியின் தன்மையும் கூட பார்த்தீர்களா? இன்னும் பறவைகளின் குணத்தைப் பார்த்தீர்களா? தன் தன் கடமையைச் செய்து நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கின்றது. ஆனால் மனிதன் மட்டும் எப்படியம்மா இருக்கின்றான். பார்?

சுவடி ஓதும் மைந்தன்:- ( விளக்கங்கள் )

அடியவர்:- (குருநாதர்) அப்பா ஏற்கனவே சொல்லி இருக்காங்க ஐயா. இறைவனுக்குப் பிடித்த வாழ்க்கை மனிதன் வாழ்வதில்லை. 

நம் குருநாதர்:- அம்மையே இதேபோலத்தான் சிறு வயதில் தன் பிள்ளையைச் செல்லமாக வளர்ப்பான் தந்தை. ஏதாவது கெடுதல் செய்து விட்டால் மனம் வருந்துவான், அடிப்பான்.  இதே போலத்தான் இறைவன் தாயே. 

சுவடி ஓதும் மைந்தன் :- ( உரையாடல்கள் )

நம் குருநாதர்:- அம்மையே, அப்பனே இது தவறு என்று யார் சொல்வீர்களாக இங்கு? 

அடியவர்கள்:- தவறு என்று சொல்ல மாட்டோம். 

அடியவர் 1:- ஐயா ( இறைவன் அடிக்கும் போது ) முதல்ல தாங்குகின்ற வலிமையை கொடுங்கள் ஐயா. 

அடியவர்கள்:- ( பலத்த சிரிப்புக்கள் ) 

நம் குருநாதர்:- அம்மையே ஒன்று நீ  நிச்சயம் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். தாங்கும் அளவிற்குச் சக்தியைக் கொடுத்துத்தான்,  இறைவனே கஷ்டத்தை வரவழைப்பான். இறைவன் ஒன்றும் பின் முட்டாள் இல்லை தாயே. 

அடியவர் :- கண்டிப்பாக ஐயா

மற்றொரு அடியவர் :- ( கை தட்டல் ) 

சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கங்கள் )

அடியவர்கள் :- ( பலத்த சிரிப்புக்கள் ) 

அடியவர் :- வலி உச்சக் கட்டமாகும் பொழுது புலம்புகின்றோம். 

நம் குருநாதர்:- அப்பனே இதனால் உச்சம். இன்பத்திலும் கூட உச்சம். துன்பத்திலும் உச்சம். பின் இவ்வாறு செல்லும் பொழுதுதான் மனிதன் பைத்தியமாகி விடுகின்றான். அறிந்தும் கூட அவ் பைத்தியத்திற்குத்தான் இறைவன் கண்களுக்குக் காட்சியும் அளிக்கின்றான். தெரிந்துவிட்டால் , அவந்தனுக்கு மீண்டும் ஞாபகத்தில் வந்து விடும். எதுவுமே தேவை இல்லை. பைத்தியக்காரனாகவே நடித்துவிடுவோம் என்று நடித்துவிடுவான். இது போலத்தான் பல பல ஞானியர்களும் திரிந்து கொண்டிருக்கின்றார்கள் இவ்வுலகத்தில். 

அடியவர்:- ஆமாங்க. 

அடியவர் 2:- இறைவனை உணர்ந்துவிட்டோம் என்றால்,  நம்ம படுகின்ற கஷ்டம் எல்லாம் பெரிதாகத் தோன்றாது என்று சொல்கின்றார். அதுதானே? பிரச்சினை எல்லாம் சின்னதாகப் போய்விடும். 

சுவடி ஓதும் மைந்தன்:- ஆம். அதுதான். 

நம் குருநாதர்:- அறிந்தும் நல்விதமாக அப்பனே எதை யான் தர? 

அடியவர்கள்:- கஷ்டத்தை கொடுங்க அகத்தீசப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :- ( இதனிடையில் அங்கு ஒரு அடியவர் வாக்கு கேட்டார். அவ் அடியவருக்கு வாக்கு வரவில்லை. சுவடி ஓதும் மைந்தன் உடனே இவ் அடியவரை இந்த கேள்விக்குப் பதில் சொல்லுங்கள். உங்களுக்கு அப்படியே தொடர்ச்சியாக வாக்குகள் வர வாய்ப்பு என்று அவ் அடியவரின் நிலை கண்டு கருணையுடன் எடுத்துரைத்தார்கள்.)

நம் குருநாதர்:- எதை என்றும் அறிய அறிய புண்ணியத்தைத் தர வேண்டும். புண்ணியத்தைத் தர வேண்டும் என்றால் எப்படித் தருவது? நீங்கள் சொன்னீர்களே, கஷ்டம். 

அடியவர்கள்:- ( அமைதி )

நம் குருநாதர்:- ஆனால் உங்களுக்கு அனைத்துமே இறைவன் கொடுத்திருக்கின்றான். ஆனாலும் வாயில்லா ஜீவராசிகளுக்குக் கூட , யார் அதை கண்டுகொள்வார்கள்? நீங்கள் கூறுங்கள்?

அடியவர்கள் :- ( சில உரையாடல்கள், புரிதல்கள் )

நம் குருநாதர்:- அதனால்தான் , தன்னால் முடியவில்லையே என்று சில ஜீவராசிகளுக்கும் உணவு கொடுத்துக்கொண்டே இருந்தால் நிச்சயம் புண்ணியம் பெருகும். எங்களுடைய ஆசிகளும் அதி விரைவிலேயே கிட்டும். பாவமும் போகும். புண்ணியம் பெருகும். இதனால் நீங்கள் செய்த தர்மங்கள் நிச்சயம் பின் உன் இல்லத்தையும் பின் சந்ததிகளையும் காப்பாற்றும். மற்றவர்கள் அதாவது உங்கள் பிள்ளைகள் கூட கஷ்டத்தில் இருக்கும் பொழுது இறைவனே வந்து ஏதோ ஒரு ரூபத்தில் நிச்சயம் உதவிகள் பின் செய்திட்டு சென்று கொண்டே இருப்பான். இதுதான் சத்தியமான உண்மை.

அப்படி இல்லை என்றால் இறைவன் கூட உதவி செய்ய மாட்டான் தாயே. 

( இவ் இடத்தில் ஒரு அடியவர் பல குழப்பங்கள். கருணைக்கடல் அவ் மர்மங்கள் அதனை எடுத்து விளக்கினார்கள். இதற்கு பரிகாரங்கள் எடுபடாது. யானே நீக்குகின்றேன் என்று கருணைக்கடல் அருளினார்கள்.) 

நம் குருநாதர்:- நிச்சயம் கர்மாத்தை யார் சம்பாதிக்கின்றான்? நீங்களே சொல்லுங்கள்?

அடியவர்கள் :- ( மனிதர்கள்) நாங்க தான் ஐயா. 

நம் குருநாதர்:- பின் கர்மத்தை சம்பாதித்து மீண்டும் இறைவனிடத்தில் சென்றால் இறைவன் என்ன செய்வான். கூறுங்கள் நீங்களே? 

அடியவர்கள்:- துன்பம்தான் ஐயா.

நம் குருநாதர்:- ஆனால் தந்தை செய்வது நல்லதிற்காகவே. பின் நல்லதிற்காகவே எண்ண வேண்டும். இறைவன்தான் அனைவருக்குமே தந்தை. இப்பொழுது பின் அதாவது என் தந்தை என் அம்பாள் என்று கூறிக்கொண்டிருக்கின்றீர்கள். ஆனாலும் இவை எல்லாம் ஓர் நாள் மாறிவிடும். ஆனால் உயர்ந்த வகையான தந்தை இறைவனே. நிச்சயம் அப்படி அதாவது சில ஆண்டுகளிலேயே ஒரு தந்தையானவன் தன் பிள்ளை மீது பாசம் பொழிந்து விடுகின்றான். ஆனாலும் அறிந்தும் கூட இறைவன் மிகப்பெரியவன். பின் அவன்தனுக்கு அழிவுகளே இல்லை. அப்பொழுது நீங்கள், உங்கள் மீது, பாசத்தைப் பொழிந்து நீங்கள் தவறான வழிகளில் சென்று விடுவீர்கள் என்று அவர்களுக்கும் தெரியும். அதாவது இறைவனுக்கு. இதனால்தான் தவறு வழியில் செல்லக்கூடாது என்று சில கஷ்டங்களை ஏற்படுத்தி, நல்வழிப்படுத்துகின்றான் இறைவன். ஆனால் மனிதர்களோ, கஷ்டம் கஷ்டம் என்று மீண்டும் இறைவனிடத்திற்கே செல்கின்றான். இது நியாயமா? தர்மமா?

அடியவர்கள் :- ( ஆழ்ந்த புரிதல்கள், சிந்தனை ஓட்டங்கள் )

நம் குருநாதர்:- அதனால் அப்பனே ஞானியாகப் பிறந்தாலும் கஷ்டங்கள் உண்டு. தண்டனை உண்டு. 

அறிந்தும் அறிந்தும் இறைவனுக்கும் கஷ்டங்கள் உண்டு. அப்பனே இறைவனுக்கே கஷ்டமா என்று யாராவது பின் கூறுவீர்களா? 

அடியவர்:- நம்ம எல்லாம் செய்யும் தவற்றைப் பார்த்து சுவாமியே வருத்தப்படுகின்றார். நம்ம குழந்தைகளே இப்படி தவறு செய்கின்றார்களே. எப்படி இவர்களை திருத்துவது ? என்று சுவாமியே வருத்தப்படுகின்றார் நம்மைப் பார்த்து. 

நம் குருநாதர்:- அப்பனே வருத்தப்பட்டு ஆனால் இறைவன் ஒரு நிலைமைக்கு வந்து விடுகின்றான். துன்பம் கொடுத்தால்தான் இவன் திருந்துவான் என்று. 

அம்மையே, அப்பனே துன்பம் இல்லையென்றால் இறைவனைக்கூட யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். 

அடியவர்:- கண்டு கொள்ளமாட்டார்கள். 

நம் குருநாதர்:- துன்பம் என்பது மிகப்பெரிய வெற்றியைக் கொடுக்கும்.

அப்பனே இங்கு யான் வெற்றி என்பது, புண்ணியத்தைக் குறிக்கின்றேன். அறிந்தும் கூட அவ் புண்ணியங்கள் நீங்கள் பெற்றுவிட்டால் இறைவன் எதையுமே செய்யத்தேவை இல்லை. யானும் எதையுமே செய்யத் தேவை இல்லை. யானும் எதையுமே செய்யத் தேவை இல்லை. அப்பொழுது இறைவன் எதையும் செய்ய மாட்டான். சொல்லிவிட்டேன். 

அடியவர்கள்:- ( சில புரிதல் உரையாடல்கள் ) 

நம் குருநாதர்:- இதனால் கஷ்டத்தை அள்ளித் தந்து கொண்டே இருந்தால் , நிச்சயம் இறைவன் தன் பிள்ளையாக ஏற்றுக் கொள்கின்றான் என்று அர்த்தம். ஆனால் மனிதனே, ஐயோ இவ்வளவு கஷ்டங்களா? இறைவன் இருந்தும் என்ன பயன் என்று கூறுகின்றார்கள். இதுதான் மனிதனுடைய முட்டாள் குணம். 

அடியவர்:- கஷ்டம் வந்தால் அருள் கிடைக்கும் என்று சொல்கின்றீர்கள். உதாரணமாக மூக்கு அடைத்துள்ளது. கஷ்டமாக உள்ளதை. நான் தியானம் செய்தால் அருள் கிடைக்கும் என்று நினைக்கின்றேன். ஆனால் இந்த மூக்கடைப்பு கர்ம வினையினால். 

நம் குருநாதர்:- அப்பனே தியானம் என்பது என்ன? 

அடியவர்:- தியானம் என்பது விழித்த நிலை.

அடியவர் 1:- மனதை ஒருமுகப் படுத்துவது. 

நம் குருநாதர்:- அப்பனே மனதை ஒரு நிலைப்படுத்துவது. அப்பனே பின் எவ்வாறு அதற்கு மூக்குகள் வேண்டுமா? அறுத்து விடலாமா?

அடியவர்கள்:- ( சிரிப்பு ) 

அடியவர்:- மூக்கு அடைத்ததனால் தியானம் செய்ய முடியவில்லையே. 

நம் குருநாதர்:- அப்பனே இவை எல்லாம் கேட்பாய் என்பது எனக்குத் தெரியும் அப்பனே. அதற்காகத்தான் வயிற்றின் மேலே பாவம் உள்ளது என்று சொல்லிவிட்டேன் அப்பனே. இதற்கு என்ன பதில் கூறுகினலறாய் அப்பனே. 

அடியவர்:- பாவங்கள் தான் நோயாக வருகின்றது. 

சுவடி ஓதும் மைந்தன் , அடியவர்கள் :- ( உரையாடல்கள் ) 

நம் குருநாதர்:- அப்பனே முதலில் மனதைக் கட்டுப்படுத்து அப்பனே. சரியாகவே அனைத்தும் போய்விடும். எதற்குத் தியானங்கள் அப்பனே? 

அடியவர்:- தியானம் என்பது கர்ம வினையை , நோயைத்ட தாங்கிக்கொள்ள சக்தி கிடைப்பது. 

நம் குருநாதர்:- அப்பனே தியானம் என்பது எதற்கு என்று தெரியுமா அப்பனே? இவைதன் ஞானிகளுக்கே பொருந்தும் என்பேன் அப்பனே. அனைத்தும்  கட்டுப்படுத்த வேண்டும் அப்பனே. ஆனால் இப்பொழுது தியானம் என்று செய்துவிட்டு அனைத்தும் தேடிக்கொண்டிருக்கின்றான் ஆசைகள் அப்பனே. இதன் பெயர் தியானமே இல்லையப்பா!!!!

சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கங்கள் ) 

அடியவர்கள்:- எல்லாம் வேண்டுதலுக்காகத் தியானம். 

அடியவர்:- ஆழமாகத் தியானம் என்றால் நீங்க சொன்ன மாதிரி ஆகிவிடும். நம்ம மேலோட்டமாக செய்கின்றோம். அதை வைத்து….

நம் குருநாதர்:- அப்பனே, நீ தியானமே செய்யாதே அப்பனே. யான் பார்த்துக்கொள்கின்றேன். 

அடியவர்கள் :- ( பலத்த சிரிப்பு ) 

அடியவர் 3:- தியானம் இறைவனை அடைவதற்கு. 

அடியவர் 4:- சுயநலமாக இருப்பதனால் தியானம் இப்போ அது…

சுவடி ஓதும் மைந்தன்:- சுயநலமாக இருப்பதால் பலிக்காது. 

நம் குருநாதர்:- அப்பனே ஞானிபோல் நடிப்பானப்பா. தியானம் செய்வது போல் நடிப்பானப்பா இக் கலியுகத்தில் அப்பனே. ஆனால் ஒன்றும் தெரியாதப்பா. 

( நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர் அருளால் March 2024 மதுரையில் நடந்த கேள்வி,பதில் வாக்குகள் தொடரும்….)

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!

Sunday, October 20, 2024

சித்தர்கள் ஆட்சி - 403 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 14

                              இறைவா !!!!! நீயே அனைத்தும்.



அன்புடன் அகத்திய மாமுனிவர் - மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 14

( இவ் தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்:-


சித்தர்கள் ஆட்சி -  379 - பகுதி 1
சித்தர்கள் ஆட்சி -  381 - பகுதி 2
சித்தர்கள் ஆட்சி -  382 - பகுதி 3
சித்தர்கள் ஆட்சி -  383 - பகுதி 4 
சித்தர்கள் ஆட்சி -  389 - பகுதி 5
சித்தர்கள் ஆட்சி -  390 - பகுதி 6
சித்தர்கள் ஆட்சி -  391 - பகுதி 7
சித்தர்கள் ஆட்சி -  392 - பகுதி 8
சித்தர்கள் ஆட்சி -  393 - பகுதி 9
சித்தர்கள் ஆட்சி -  398 - பகுதி 10
சித்தர்கள் ஆட்சி -  400 - பகுதி 11
சித்தர்கள் ஆட்சி -  401 - பகுதி 12
சித்தர்கள் ஆட்சி -  402 - பகுதி 13
சித்தர்கள் ஆட்சி -  403 - பகுதி 14

( நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய இவ் மதுரை தொடர் வாக்குகளின் முதல் 12 பகுதிகள்  2024ஆம் ஆண்டில் மார்ச் மாதம் 17 ஆம் தேதி நடந்த சத்சங்கம் ஆகும். மறுநாள் (18-3-2024) காலையில் மீண்டும் சத்சங்கம் ஆரம்பம் ஆனது.  பகுதி 13 முதல் இவ்வாக்குகள் தொடர்கின்றது.) 

நம் குருநாதர்:- ( அடியவருக்குத் தனி வாக்கு. அதன் பின் பொது வாக்கு ஆரம்பம் ஆனது)

அம்மையே கவலைகள் இல்லாமல் இரு. ஒரு தந்தையானவன் தன் பிள்ளைக்கு என்ன செய்ய வேண்டுமோ நிச்சயம் செய்வேன். இவை அனைவருக்குமே பொருந்தும். அதனால் அவை இவை என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்காதீர்கள். இதனால் விதியில் உள்ளவை அழகாக அனைவருக்குமே நடந்து கொண்டிருக்கின்றது என்றுதான் யான் சொல்லுவேன். ஆனாலும் அவை மீறி கஷ்டத்தில் போய் விட்டால், யான் அழைத்து வந்து நிச்சயம் என் அருகில் நிற்க வைப்பேன். எவை என்று கூற  பிரம்மாவிடம் சண்டையிட்டு பின்  விதியைக்கூட மாற்றுவேன். சோதனைகளாக இருந்தாலும் ஓர் நாள் நிச்சயம் இன்பமாக மாறிவிடும். இன்பமாகவே பின் வாழ்க்கை போய்க்கொண்டே இருந்தால் யாரும், எதை என்று அறிய அறிய யான்தான் இறைவன் என்று சொல்லிவிடுவான். அதனால்தான் துன்பம் என்ற நிலைக்கு இறைவன் பின் மனிதனைத் தள்ளி நிச்சயம் சிறிது காலம் துன்பம் அனுபவி என்று இறைவனே கொடுத்தால் யார் என்ன செய்ய முடியும் தாயே? சொல்.

அடியவர்கள்:- ( அமைதி )

சுவடி ஓதும் மைந்தன்:- (விளக்கங்கள்)

நம் குருநாதர் :- அம்மையே சனீஸ்வரன் உந்தன் அருகிலேயே இருப்பான் எப்பொழுதும். அம்மையே (சனீஸ்வர தேவன்) அவர் கொடுத்தாலும்,  அடித்தாலும் யார் தாங்குவது. நீ நிச்சயம் விளக்க வேண்டும்?. அவனைப் பற்றி எடுத்துரை?

சுவடி ஓதும் மைந்தன்:- சொல்லுங்கம்மா சனீஸ்வர பகவானைப் பற்றி.

அடியவர்:- தருமவான் என்று சொல்றாங்க அவரைப்பத்தி. எந்த சனி நடந்தாலும், தர்மத்தோடும், நீதியோடும், நேர்மையோடும் நடந்து வந்தால் அந்த ஏழரைச்சனியாக இருந்தாலும் , அஷ்டமசனியாக இருந்தாலும் அந்த இறுதி கட்டத்தில உங்க மேல தப்பு இல்லை என்றால் உங்களை நிரூபிக்கக் கூடிய தர்மவான் அப்படி என்று சனீஸ்வரரை சொல்றாங்க. நவகிரகங்களில் ஒருத்தர். சூரிய பகவானின் புத்திரன்….

நம் குருநாதர்:- அம்மையே எதை என்று அறிய அறிய தர்மத்திற்கு ஏற்றவாறுதான் இப்பொழுது நடந்து கொண்டிருக்கின்றான் சனியவன் என்பேன் . இன்னும் ஈர் ( 2 ) வருடங்கள் பின் மனிதனை பாடாய்ப் படுத்துவான். அம்மையே படுத்தலாமா? வேண்டாமா?

அடியவர்:- தமது இஷ்டம். தாங்க முடியவில்லை. ( குருநாதர் ஏற்கனவே உரைத்தது போல ஞான வாழ்க்கை அவ்வளவு சுலபமில்லை. பல இன்னல்கள் பட்டு, பட்டு மனக்குழப்பங்கள் பட்டு...) 

நம் குருநாதர்:- அம்மையே அப்பொழுது இவ்வுலகத்தில் தவறு செய்து கொண்டிருக்கின்றார்கள் ஏராளமான மக்கள். அவர்களை எல்லாம் விட்டு விடலாமா?

அடியவர் :- தந்தையே , எனக்கு தெரியாது. உங்கள் இஷ்டம். 

நம் குருநாதர்:- அம்மையே, அப்பனே இதனால் நிச்சயம் கர்மாக்கள் மனிதனிடத்தில் அதிகமாயிற்று இக்கலியுகத்தில். அதனால்தான் இறைவனே பல மனிதர்களைச் சனியிடத்தில் பின் சரியாகவே பின் அதாவது நீதிபதியாக இருந்து, பின் வழி நடத்து என்று. இதனால் கலியுகத்தில் இன்னும் ஓர் வருடம், அல்லது ஈர் (2) வருடம் பல மனிதர்களுக்குக் கஷ்டங்கள்தான் தோன்றும். ஆனாலும் நிச்சயம் சித்தர்கள் அருள் பல பேர்களுக்கு இருப்பதால் நிச்சயம் யாங்கள் நல்வழிப் படுத்துவோம். 

ஆனாலும் சனீஸ்வரனும் என்னிடத்தில் அறிந்தும் அறிந்தும் கூட அகத்திய மாமுனிவரே, இவ்வாறே செய்து கொண்டிருந்தால் எப்படி  என்று.  ஆனாலும் மனிதனுக்கு யான் புத்தியைக்கொடுத்து , நல்வழிப்படுத்தி, பல புண்ணிய காரியங்களில் ஈடுபடுத்தி பின் புண்ணியத்தை செய்யச் சொல்கின்றேன் என்றெல்லாம் பின் வாக்குகள் பிரம்மாவிடம் கொடுத்துவிட்டேன். 

அதனால்தான் என்பக்தர்களுக்கு ஏதும் இல்லாவிடினும் சரி வாயில்லா ஜீவராசிகள் ஏதாவது கொடுத்துக்கொண்டே இருங்கள் என்றெல்லாம் எடுத்துரைத்துக் கொண்டுள்ளேன். அதைக் கூட கேட்காமல்   எவை என்று அறிய அறிய திரிந்து வருகின்றானே, அப்பொழுது எப்படி பாவம் போகும் சொல்? தாயே நீயே, அனைவரும் இதைக் கூறுங்கள்? 

சுவடி ஓதும் மைந்தன் :- என்னுடைய பக்தர்கள் என்னால் முடியவில்லை என்றாலும் ஒரு எறும்புக்குக் கூட (அன்னம்) இடுங்கள் என்று சொல்கின்றார். அதை வைத்து நான் பிரம்மாவிடம் சொல்லிவிடுவேன். அப்பா அவன் புண்ணியம் செய்துள்ளான் என்று. இல்ல சனீஸ்வரனிடம் சொல்லிவிடுவார். அவன் ( என் பக்தன் ) அதை செய்திட்டான் என்று. அப்போ நம் கையில் புண்ணியம் இருக்க வேண்டும். 

நம் குருநாதர்:- அதாவது மூட நம்பிக்கையிலேயே ( மனிதன் ) ஒளிந்துள்ளான் என்றெல்லாம் நேற்றைய பொழுதில் சொல்லி விட்டேன். அவ் மூட நம்பிக்கையை ஒழிக்க வேண்டும் என் பக்தர்கள். 

இயற்கை (உணவு ) வகைகளை  உட்கொள், உட்கொள் என்று யான் சொல்லிக்கொண்டே இருக்கின்றேன். ஆனாலும் கேட்பதில்லை. நோய் வந்த பிறகு, நோய் வந்து விட்டது என்று என்னிடத்தில் ஓடி வருகின்றான். இது நியாயமா? 

சுவடி ஓதும் மைந்தன்:- ( விளக்கங்கள்) 

நம் குருநாதர்:- அம்மையே விதியை யாரால் வெல்ல முடியும்? கூறு? நிச்சயம் கூற வேண்டும்? 

அடியவர்:- தமது ஆசி, அருள் பெற்றவர்கள்..

நம் குருநாதர்:- அம்மையே அனைவருமே எம்முடைய ஆசிகள் பெற்றவர்கள்தான். ஏன் கஷ்டங்கள் பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். அனைவரிடத்திலும் கேளு? 

அடியவர்:- இன்னும் அப்பாகிட்ட நெருங்கி..

நம் குருநாதர்:- அம்மையே கஷ்டங்கள் கொடுத்தால்தான் இறைவனை நிச்சயம் நெருங்குவான் மனிதன். அப்படி நெருங்கி விட்டால் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட இதனால் அம்மையே இக்கலியுகத்தில் மனிதன் பிறந்துவிட்டாலே புண்ணியத்தை விட பாவம்தான் அதிக அளவில் இருக்கின்றது தாயே. அப்பொழுது பாவத்தின் சம்பளம் என்ன தாயே? 

அடியவர்கள்:- பிறவி கொடுப்பீங்க

நம் குருநாதர்:- அனைவரையும் கேட்டுப்பார். ஒரு பிறவியே எவ்வளவு கஷ்டங்கள் என்று கூற. அடுத்த பிறப்பு ஒன்று வேண்டுமா? 

அடியவர்கள் :- ( வேண்டாம் )

நம் குருநாதர்:- அதனால் தாயே முதலில் என்னிடத்தில் வருபவர்களுக்குக் கூட முதலில் கர்மத்தைத்தான் யான் அழிப்பேன். எதையும் கொடுக்க மாட்டேன். யான் என்ன கொடுப்பது தாயே. கர்மத்தை அழித்து விட்டால் தானாகவே அனைத்தும் நடந்துவிடும். புண்ணியம் பின் மேலோங்கும். 

அடியவர்கள்:- கர்மத்தை அழித்து விடுங்கள். 

நம் குருநாதர்:- அதனால்தான் யான் மௌனம் சாதித்து முதலில் கர்மத்தை எப்படி எல்லாம் அழிப்பது என்பதையெல்லாம் மனிதரிடத்தில் கூறிக்கொண்டே வருகின்றேன். அதை அழித்து விட்டாலே போதும். நிச்சயம் நிம்மதியான வாழ்க்கையும் பின் ( கிட்டும் ). என்னாலும் விதி தன்னை மாற்ற முடியும். ஆனாலும் பின் கடைசியில் அவ்விதியானது ஓர் நாள் நிச்சயம் அனுபவித்தே ஆகவேண்டும். இப்பொழுது எதை (முதலில்) அனுபவிக்க வேண்டும்? கூறுங்கள். பாவமா? புண்ணியமா? 

அடியவர்கள் :- ( ஒருமித்த குரலில் ) பாவம். கர்மா. அனுபவிச்சு தீர்த்துவிடனும். 

நம் குருநாதர்:- அம்மையே மரண தண்டனை என்று வைத்துக்கொள் ஒருவனுக்கு. ஆனாலும் அதன் மூலம் வேறு எதுவுமே யான் செய்துவிடுவேன். ஆனால் பிரம்மனுக்கு மரண தண்டனை முடிந்துவிட்டது என்று. 

ஆனாலும் பின் 100%. (அதனை) பத்து சதவீதமாகக்  குறைத்து அவை எல்லாம் எந்தனுக்குத் தெரியும். 

அம்மையே நிச்சயம் பாதி பாவம். பாதி புண்ணியம் எங்குள்ளது என்பதை நிச்சயம் நீ தெரிவிக்க வேண்டும். ஏனென்றால் அனைத்தும் தெரிந்தால்தான் மோட்சம், முக்தி பெற முடியும். ஒன்றும் தெரியாமல் வந்து விட்டால் என்னிடத்தில் மீண்டும் நீ பிறக்க நேரிடும் தாயே. அதனால்தான் என் பக்தர்களுக்கு அனைத்தும் தெரிந்து கொள்ள யான் நிச்சயம் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றேன். 

( இது உலகோர் அனைவருக்கும் பொது. முக்தி / மோட்சம் கிடைக்க வேண்டும் என்றால் அவசியம் குருநாதர் ( “அன்புடன் அகத்தியர்” ) வாக்குகள் அனைத்தையும் அவசியம் தெரிந்து தெளிய வேண்டியது அவசியம்.)  

இதனால்தான் அம்மையே அனைவருக்குமே கஷ்டங்கள்தான். உடம்பு (பிறவி) எடுத்து விட்டால்  கஷ்டம் தாயே. 

இதனால் படைக்கும் பொழுதே பிரம்மா , இவன் வாழ்க்கையில் பாதி கஷ்டம் , பாதி இன்பம் படவேண்டும் என்று ( விதியை எழுதுவார்). இதனை அறுபதிலிருந்து அல்லது எழுபதிலிருந்து பின் கூட்டிக் கழித்தால் தெரியும் என்பேன். 

( 30 அல்லது 35 வயது வரைக்கும் கஷ்டம். அதன் பின் இன்பம். அல்லது முதலில் இன்பம் பின் கஷ்டம். அவரவர் விதியை பொருத்து ) 

அம்மையே வயிற்றிற்கு மேல் உள்ளவை பாவம். வயிற்றிற்கும் கீழ் உள்ளவை புண்ணியம். அம்மையே அப்பொழுது எது பெரியது இக்கலியுகத்தில்? 

(  அடியவர்கள், நன்கு சிந்திக்கவும் இவ் மகத்தான வாக்குகளை.) 

அம்மையே பின் எவ்வாறு பாவம் கொல்லும் என்பதைக்கூட நீங்கள் சிந்தித்துக் கொள்ளுங்கள். 

அறிந்தும் கூட ஆனாலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சினை கலியுகத்தில். ஆனாலும் யான் அறிவேன். ஏன் பிரச்சினை வருகின்றது தாயே நீ கூற வேண்டும்? 

அடியவர்:- நம்ம செய்யும் வினைகளினால் வருகின்றது

அடியவர் 1:- ஆசைப்படுகின்றோம். 

நம் குருநாதர்:- எதை என்றும் அறிய அறிய யாராவது ஒருவனை, ஒருவளை எதை என்றும் புரியப் புரிய எந்தனுக்கு எதுவுமே தேவை இல்லை. உம்மைடைய ஆசிகள் மட்டும் போதும் என்று சொன்னால் அனைத்தும் நான் செய்வேன். ஆனால் சொல்வதற்கு ஆள் இல்லை தாயே. 

அடியவர்:- (அனைத்து அடியவர்கள் அமைதி. ஆனால் விதியில் ஞான வாழ்க்கை என்ற அடியவர் ஒருவர் மட்டும்) உங்கள் ஆசிகள் மட்டும் போதும். நீங்க மட்டும் போதும். எனக்கு நிறைய செய்கின்றார் குருநாதர். 

நம் குருநாதர்:- அம்மையே செய்து கொண்டே இருக்கின்றேன். ( இவ் அடியவருக்குத் தனி வாக்குகள்) ஆனால் நீ என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பு ஆனால் செய்வதாலும் சில பாவங்கள். ஆனாலும் எப்படிச் செய்ய வேண்டும் என்று தெரிவதில்லை இதனால்தான் குழப்பங்கள். 

தன் பாவத்திற்கு ஏற்ப்பவே செய்ய வேண்டும். அப்பொழுதுதான் புண்ணியங்கள் பெருகும். 

அறிந்தும் அறிந்தும் அனைவருமே இறைவனின் குழந்தைகள். ஆனால் ஏன் கஷ்டப்படுகின்றார்கள்?

அடியவர்:- செய்த பாவம்.

நம் குருநாதர்:- அப்பனே அதை என்னால் நீக்க முடியும். 

அடியவர்கள்:- ஆசை, எதிர் பார்ப்புகள். 

நம் குருநாதர்:- அப்பனே இவைதன் அனைவருமே சொல்லிவிட்டதுதான். 

அடியவர்:- அகங்காரம்.

நம் குருநாதர்:- அப்பனே இவையும் இல்லை

அடியவர்:- வாழத் தெரியாமல்… 

நம் குருநாதர்:- அப்பனே இவையும் இல்லை. இதனால் நிச்சயம் எதையும் பின் உள்நோக்கி , பின் வெளிநோக்கி அறிந்தும் கூட,  அறிந்த பின்னும் என்ன? அறியாமல் பிறகும் என்ன? அறிந்து கொள்வதற்கு இதனால் கஷ்டங்கள் என்று ஒன்று கொடுத்தால் நிச்சயம் அனைத்தும் தெரிந்து விடும். (கஷ்டம்) மோட்சத்திற்கும் வழி வகுக்கும். பல உண்மைகள் தெரிய வரும். பல உண்மைகள் தெரிய வந்தால்தான் இவ் ஆன்மா மன சாந்தி அடையும். இன்பமாகவே சென்று கொண்டிருந்தால் மன சாந்தி அடையாது. மீண்டும் மீண்டும் ( பிறவி உண்டாகும்). தாயே, தந்தையே அனைவரையும் பார்த்தே கேட்கின்றேன். அனைவருமே புரியாமல் பின் அவை இவை என்றெல்லாம்.  இவைதன் கொடுப்பதற்கு யான் தயாராக இருக்கின்றேன். ஆனாலும் நீங்கள் கர்மத்தை மட்டுமே கேட்பீர்கள் அம்மையே, அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன்:- ( விளக்கங்கள் ) 

நம் குருநாதர்:- அம்மையே தந்தையானவன் கர்மத்தைக் கொடுப்பானா என்ன?

அடியவர் :- (கொடுக்க) மாட்டாங்க. 

நம் குருநாதர்:- ஆனாலும் கர்மாதான் உங்களுக்குச் சந்தோசமாகத் தோன்றும். 

சுவடி ஓதும் மைந்தன்:- ( விளக்கங்கள். ஞானியர்களுக்கு சந்தோசம்,  அது மனிதர்களுக்குக் கஷ்டம். மனிதர்களின் சந்தோசம், அது ஞானியர்களின் கஷ்டம்.) 

நம் குருநாதர்:- இதனால் ஞான நிலையைப் பெற வேண்டும். நிச்சயம் இறைவன் படைத்து விட்டான். இறைவன் அனைத்தும் சரியாகச் செய்துகொண்டே வருகின்றான். ஆனால் நீங்கள்தான் செய்வதில்லை. 

சுவடி ஓதும் மைந்தன்:- ( விளக்கங்கள் ) 

நம் குருநாதர்:- அம்மையே அறிந்தும் அறிந்தும் இதை யான் சொல்லி விட்டேன். காகம் அதிகாலையிலே அம்மையே பார்த்தீர்களா? அம்மையே கோழியின் தன்மையும் கூட பார்த்தீர்களா? இன்னும் பறவைகளின் குணத்தைப் பார்த்தீர்களா? 


( நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர் அருளால் March 2024 மதுரையில் நடந்த கேள்வி,பதில் வாக்குகள் தொடரும்….)

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!