“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Friday, September 13, 2024

சித்தர்கள் ஆட்சி - 395 :- புரட்டாசி , ஐப்பசி , கார்த்திகை, மார்கழி , தை மாதம் அகத்திய மாமுனிவர் அடியவர்கள் செய்யவேண்டிய வழிபாடுகள்.

 



இறைவா நீயே அனைத்தும்.

புரட்டாசி , ஐப்பசி , கார்த்திகை மாதம் அகத்திய மாமுனிவர் அடியவர்கள் செய்யவேண்டிய வழிபாடுகள். 

அவசியம் அனைத்து அடியவர்களுக்கு பகிரவும்.


அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 

=================================================

(1)புரட்டாசி மாத வழிபாடு தொடர்பான வாக்குகள் 

=================================================

(1.1) புரட்டாசி மாதத்தில் தடைகள் ,துன்பங்கள் , தாமதங்கள் நீங்கி வாழ்வில் வெற்றி அடைய, நல் முறையில் வாழ

https://www.youtube.com/watch?v=CoOvUantDSw

சித்தன் அருள் - 1441 , 1179 - குருநாதர் அகத்தியபெருமான் உத்தரவு!

(1.2) புரட்டாசி, ஐப்பசி , கார்த்திகை , மார்கழி , தை மாத ரகசியங்கள்.கர்ம வினை நீக்கும் விஞ்ஞான ரகசியங்கள்

https://www.youtube.com/watch?v=5adiVnEF2c0

சித்தன் அருள் - 1188 - திருமலை திருப்பதி!

அடியவர்கள் இந்த வாக்கை பலமுறை மீண்டும் மீண்டும் படித்தால் மட்டுமே இதன் ரகசியங்களை புரிந்துகொள்ள இயலும். 


(1.3) நம் கர்ம வினை நீக்கும் பெருமாளின் விஞ்ஞான புரட்டாசி மாத ரகசியங்கள்

https://www.youtube.com/watch?v=HwK1HzPnQdU

சித்தன் அருள் - 1191 - திருமலை திருப்பதி!


(1.4) ஏன் முன்னோர்கள் அதனை காந்தகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் இறைவனிடத்தில் ஒட்ட வைக்க வேண்டும்?

https://www.youtube.com/watch?v=u05x_glg3-s

சித்தன் அருள் - 1563  பொதுவாக்கு!


(1.5)அகத்திய மாமுனிவர் உரைத்த முன்னோர்கள் தர்பண ரகசியங்கள்

https://www.youtube.com/watch?v=xSW68Jpfxwo

சித்தன் அருள் - 1566 - அயோத்யா வாக்கு!


(1.6) புரட்டாசி, ஐப்பசி மாதத்தில் முன்னோர்கள் வழிபாடு.காவிரி நதி - ரகசியங்கள்

https://www.youtube.com/watch?v=nZf6y4kVppo

சித்தன் அருள் 1490 -அன்புடன் அகத்திய மாமுனிவர் திருப்பதி வாக்கு 

===================================================

(2) புரட்டாசி - நவராத்திரி தொடர்பான வாக்குகள் :-

===================================================

(2.1) நவராத்திரி எதற்காக கொண்டாடுகிறார்கள்? 

https://www.youtube.com/watch?v=dhnjL-8qcgA

சித்தன் அருள் - 1533 - 19/10/2023 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு வாக்குரைத்த ஸ்தலம் :மானசா தேவி மலைக்கோவில். ஹரித்துவார். உத்தர்கண்ட் மாநிலம். 


(2.2) சுக்கிர கடாட்சம் பெறும் நவராத்திரி ரகசியங்கள் 

https://www.youtube.com/watch?v=tuTXHEDs8Ws

சித்தன் அருள் - 1533 - அன்புடன் அகத்திய மாமுனிவர் - மானசா தேவி மலைக்கோவில். ஹரித்துவார். உத்தர்கண்ட் மாநிலம்.

சித்தன் அருள் - 1225 - அன்புடன் அகத்திய மாமுனிவர் - பஞ்சவடி வாக்கு - 2



(2.3) நவராத்திரி சூட்சும ரகசியங்கள்

https://www.youtube.com/watch?v=qnkDoDPvw9Q

சித்தன் அருள் - 1461 - அன்புடன் அகத்திய மாமுனிவர் - பொதுவாக்கு!


(2.4) நவராத்திரி வாக்கு

https://www.youtube.com/watch?v=zpYXIbTe_R0

சித்தன் அருள் - 1190 - நவராத்திரி வாக்கு!


(2.5) நவராத்திரி வழிபாட்டு ரகசியங்கள்

https://www.youtube.com/watch?v=o9wZB4GIDb8

நவராத்திரி வழிபாட்டு ரகசியங்கள்  கிரகங்களின் , முன்னோர்களின் தாக்கங்களில் இருந்து உங்களை காத்துக்கொள்வது எப்படி?

சித்தன் அருள் - 1668 - காசி மீர்காட் கங்கை கரை!


==================================

(3) ஐப்பசி மாத  ரகசியங்கள்:- 

==================================

(3.1) அன்புடன் அகத்திய மாமுனிவர் உரைத்த ஐப்பசி மாத அறிவியல் ரகசியங்கள்

https://www.youtube.com/watch?v=K66nCQA4Tr4

சித்தன் அருள் - 1201 - அன்புடன் அகத்தியர்  மாமுனிவர் உத்தரவு!


(3.2) அகத்திய மாமுனிவர் உரைத்த உங்களின் பல பாவங்கள் போகும் ஐப்பசி மாத ரகசியங்கள்

https://www.youtube.com/watch?v=n1hf37fx3BU

அன்புடன் அகத்திய மாமுனிவர் உரைத்த உங்களின் பல பாவங்கள் போகும்   ஐப்பசி மாத ரகசியங்கள் 

சித்தன் அருள் - 1034 

(3.3) புரட்டாசி, ஐப்பசி மாதத்தில் முன்னோர்கள் வழிபாடு.காவிரி நதி - ரகசியங்கள்

https://www.youtube.com/watch?v=nZf6y4kVppo

சித்தன் அருள் 1490 -அன்புடன் அகத்திய மாமுனிவர் திருப்பதி வாக்கு 


====================================

(4) கார்த்திகை மாத  ரகசியங்கள்:- 

====================================


(4.1) கார்த்திகை மாதத்தில் ஏன் திருவண்ணாமலைக்கு இத்தனை சிறப்புக்கள்,கூட்டங்கள்?

https://www.youtube.com/watch?v=yUWJzvhW70g

சித்தன் அருள் - 1237

( 4.2 ) திருவண்ணாமலை கார்த்திகை தீப ரகசியங்கள்.

https://www.youtube.com/watch?v=vI_Pn62dYCY

சித்தன் அருள் - 1057

அப்பன் அண்ணாமலையார் , அன்னை உண்ணாமலை தேவியை கார்த்திகை தீபம் ஏற்றும் வேளையில் தரிசனம் காணும் ரகசியங்கள். 


====================================

(5) மார்கழி , தை மாத  ரகசியங்கள்:- 

====================================

(5.1) மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் - உலகம் அறியாத ரகசியம்

https://www.youtube.com/watch?v=ztausP0vTPI

சித்தன் அருள் - 1263 - திருப்பதி வைகுண்ட ஏகாதசி வாக்கு!

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!

Tuesday, September 10, 2024

சித்தர்கள் ஆட்சி - 394 :- அன்புடன் நந்தியம்பெருமான் முருகப்பெருமானை அழைத்த வாக்கு



“இறைவா!!! நீயே அனைத்தும்”

அன்புடன் நந்தியம்பெருமான் முருகப்பெருமானை அழைத்த வாக்கு

YouTube link:-

https://youtu.be/Rd097RwR3FY




22/7/2024 அன்று நந்தியம்பெருமான் முருகனை அழைத்த வாக்கு!!!

முருகா !!! வா ! வா ! என்று அழைத்த ஸ்தலம் மாதம்பே முருகன் கோயில் கொழும்பு ரோடு புத்தளம். ஸ்ரீலங்கா. 

ஆதி குருவான மகேஸ்வரனை வணங்கி மனதில்!!!

தோன்றுவதெல்லாம் இடமே முருகா !! உந்தன் இடமே!!!

உந்தன் இடமே!!! ஈசனுக்கும் பின் பார்வதி தேவிக்கும் என் மனதில் நீயும் பின் குடிகொண்டு கணபதியின் பேரருளாலே சொல்கின்றேன் பின் நந்தியனே!!!!!!!!!

அடையன் இடையன்
இதைப்போல் உருவாகும் என்பது 

என்பது என்ன கேள்வி 
கேட்டாலும் முருகா !!
உனை பாட மனம் இல்லையோ!!!!!

மனமிருந்து தத்தளிக்கும் 
மனிதர்களுக்கு இடமில்லையோ ??

இடமில்லையோ ??

உலகத்தில் ஏற்றோர் பின் தாழ்வோர்.... தாழ்வு பணிந்து 
ஏற்றோர் இடமில்லையே!!!

முருகா !! உன் நிலை தன் நிலை அறிந்து மக்களை 
தன் பக்கத்தில் ஈர்த்து
முருகா !! உன்னை காண 
ஓடோடி வந்து! ஓடோடி வந்து !
மனிதனை மனிதனைக் காண 
ஓடோடி வா!!!

முருகா!! உன் திருநாமம் கொண்டு மனிதன் இயங்குகின்ற பொழுதுள்!!

கலியுக வரதனே வா !! வா!!!

முத்து குமரனே வா வா

அல்லல் அறுக்கும் கலியுக வரதனே வா!! வா !! 

மனிதனுக்கு அருள் ஈந்து கொடுக்க வா வா !

வா வா முருகா ! குழந்தை !

குழந்தை வடிவாக வா வா !

மனிதனின் மனதை மாற்ற ஓடோடி வா! முருகா !!

முருகா! ஞானத்தை அள்ளித் தர வா வா !!

முருகா! குறைகளை போக்குவாய் முருகா !

முருகா ! முருகா !!

அடியேனுக்கு அருள் தருவாய் முருகா !!

மனிதனுக்கு ஏற்றங்கள் தருவாய்! முருகா !

குறை உள்ள உலகில் குறை இல்லாத வாழவைக்கும் முருகா !

மனிதனை மனிதன் விழுங்கும் இவ்வுலகத்தில் !!...

 இவ்வுலகத்தில் குறையில்லாத முருகா 
குகனே வா வா !!

குழந்தை வா வா !!

குழந்தை ரூபத்திலே இருந்து மனிதனுக்கு எல்லாம் பின் குருவாக இருந்து கலியுகத்தை காக்க வா வா !!

வா !வா !முருகா!! உந்தனையே பணிந்து பணிந்து உள்ளுருகும் பக்தர்களுக்கு எல்லாம் அருள் தருவாய் !
அருள் தருவாய் வா! வா! முருகா !!

குகனே செந்தில் ஆண்டவனே!!
பழனியில் வீற்றிருக்கும் குழந்தாய் !!

உனைக் காண இன்னும் ஓடோடி வருவார்கள் முருகா !!

முருகா!! முத்துக்குமரனே! என் பிள்ளையே !!

வருவாய்! நலன்கள் அருள்வாய்!!

இன்னும் இன்னும் இத் தேசத்தில் இன்னும் குறைகள் நிறைந்த வாழ்க்கை மனிதன் வாழ போகின்ற நேரத்தில் 
முருகா!!

 மனிதனின் பின் பாவங்கள் நீயே! ஏற்று உன்னை நம்பினோர் உன்னை 
நம்பி நம்பி வந்து 

வருவோரை கைவிடமாட்டாய் கைவிட மாட்டாய்!! குழந்தாய் !!

குழந்தை மனதிலே இருந்து யான் பல பல மக்களுக்கு உரைக்கும் சித்தர்களும் எண்ணிலடங்கா ஜீவராசிகளுக்கும் இன்னும் பன்மடங்கு உயர்வை தா தா முருகா!

முருகா! முருகா! 
முத்து குமரா !
வடிவேலா! சிங்காரவேலா !
அமுத வடிவானவனே !
வள்ளி தெய்வானையோடு அன்பாக பறந்திட்ட முருகா !!

ஓடோடி வா  ! முருகா !
ஓடோடி வா ! முருகா !
மக்கள் நலனை கருதி ஓடோடி வா ! முருகா !
மக்கள் கவலைகள் பின் போக்க ஓடோடி வா! முருகா !

மக்கள் பின் பாவத்தை கலைக்க ஓடோடி வா! முருகா!

மனிதனுக்கு புத்திகள் கீழ்நோக்கி செல்லச் செல்ல 
மேல்நோக்கி எடுத்துச் செல்ல வா ! வா !முருகா !

கருணை மிகுந்த முருகா !!
அன்பு மிகுந்த முருகா !!
பின் பாசம் மிகுந்த முருகா !!
ஓடோடி வா மகனே !!

மகனே வா !! 
குழந்தை ரூபத்திலே!!

 குழந்தை ரூபத்திலே வந்து மனிதனை மனிதன் தின்னும் காலம்!!
 இக்கலியுகத்தை மாற்ற வா வா!!
                   

ஓடோடி வா! கலியுக வரதனே!
 கந்தா!

கந்தா !! கடம்பா!!! பின் ஈசன் ( மற்ற/ இரண்டாவது) மறுமகனே !!! 

அறிந்தும் இவைதன் புரிந்த பின் 
திருமாலின் பின் நெற்றியில் 
அமர்ந்திருக்கும் முருகனே ! வா வா !!

வா வா!! பிரம்மன் தலையில் எழுந்திருக்கும் அமைதியாய் வீற்றிருக்கும் முருகா..!!

குழந்தாய் வா வா !!
அருள்கள் தருவாய்
 வா! வா !!

பரமேஸ்வரியின் மடியில் அமர்ந்திருக்கும் முருகா !!

குகனே !சிறு குழந்தையே !வா வா !!

வள்ளி தெய்வானையோடு அன்பாக அமர்ந்திட்ட பின் குகனே! வா வா !!

வா வா முருகா !!
அன்பிற்கு அடைக்கலம் ஆனவனே !! வா வா முருகா !!

முருகா முருகா !!
வெற்றியை தருவாய் முருகா !!

மனிதன் தவறு செய்தாலும் அதை ஏற்றுக் கொண்டு பின் பின் பாவங்களை போக்கி அருள்வாய் குகனே !!

குகனே வா வா !!
பல பித்து பிடித்தும் மக்களுக்கு !!...........

பின் பித்துக்களை எடுத்து பின் அறிந்தும்  பின் புரிந்தும் தவறு செய்தாயினும் அவர்களை மன்னித்து ஓடோடி ! வா முருகா !!!

 முருகா !! முருகா கலியுக வரதனே !!!

கலியுகத்தில் மக்கள் இன்னும் கீழ்நோக்கி செல்கையில் 
பல கஷ்டங்கள் பட்டு பட்டு 
எழுந்திருக்கும் பொழுது 
காப்பாற்ற வா வா !!!

மயில்மீது வா வா!! முருகா !!

 பின் சேவல் வடிவோனே
 வா வா !!!

வா வா !! அருள் தந்து பின் அணைத்து கொள்ள வா வா முருகா!! 

என் மனதில் வீற்றிருக்கும் அன்பான முருகா !!

அன்பான முருகா !!
அழகான முருகா !!

முருகா !முருகா !!
குகனே! முருகா!!

முத்துக்குமாரா! முருகா!! 

முருகனை அடிபணிந்தோர் ஏதும் வாழ்வில் எல்லையில் பின் தோல்வியுற்றாலும் ஏற்கப் பின்!!....
பின் அதனையும் அறிந்து கூட தோல்வியில் வாழ்க்கை முடிவதில்லை!!

அறிந்தேன்!!!

எப்பிறப்பு எடுத்தாலும் மனிதனுக்கு எல்லாம் பின் 
தாழ்வு நிலைகள் வந்தால் 
ஓடோடி வந்து மயில் மீது பின் வாகனத்தோடு வந்து அருள் புரிந்து பின் பன் மடங்கு உயர 
வைக்கும் முருகா வா! வா !!!

வா ! வா !குழந்தாய்!! இன்னும் 
அருள்கள் பின் ஈந்து பின் 
மக்களைக் காப்பாற்ற வா வா !!

இன்னும் மலை மேல் அமர்ந்து பின்பு யோசிக்கின்றாயே ???? முருகா...!!!

மனிதனைக் காக்க ஓடோடி வா !!!

இவ் நிலைமையில் பின் தாழ்வுகள் !!.....

பின் தாழ்வை நோக்கி இன்னும் மடிவார்கள் மனிதர்கள்...
மனிதர்கள் மடிந்து மடிந்து பின் போவார்கள்!!...........

உன்னை நம்பினோர் மடிந்து மடிந்து போகையில் !...........

உந்தனுக்கு சந்தோஷமா???? முருகா  !!????

முருகா!!!!...
உன் தாள் பணிகின்றேன் !!!!!

மலை மீது வீற்றிருக்கும் 
மயில் வாகனனே!!!!!!!!

மயில் வாகனத்தில் வந்து !!!!
பல கோடி மக்களை 
காப்பாற்றுவாய்!! முருகா!!!

முத்துக்குமரனே!!!
அடியவனை பணிந்து 
பணிந்து பணிந்து 
ஓடோடி உனை நம்பியே 
வருகின்றானே மனிதன் 
அவர்களைக் காக்க 
ஓடோடி வா !!!!!!

பல துன்பங்கள் பின் 
பல நோய்கள் பின் 
பிள்ளை வரங்கள் பின் 
எவை என்று அறிந்தும் 
அறிந்தும் அறிந்தும் கூட 
பின் நீயே கொடுப்பாய் !!

கலியுகத்தில் உன்னாலே 
காக்க முடியும் முருகா!!

முருகா முருகா !!
சேவல் கொடியோனே!!! முருகா 
அன்னையின் தந்தையின் 
அன்புக்கு வடிவான முருகா !!!

பின் கணபதியின் தலையில் 
வீற்றிருக்கும் முருகா !!

ஆனை மேல் அழகாக ஓடி வந்து மெதுவாகாயினும்
பின் காப்பாற்று! முருகா !!

முருகா !!முருகா!! வேலவன் !முருகா!! முத்துக்குமரன் !! முருகா!
விளையாட்டு முருகா !!
பின் வெவ்வேறு வடிவமாக 
வந்து வந்து இக்கலியுகத்தில்
மக்கள் அறிந்தும் பின் உண்மைகளை தெரியாமல் வாழ்ந்து வந்தாலும் அவர்கள் புத்தியை பின் மாற்றி அருள்வாய் குகனே !!

குகனே !!ஓடோடி வா !!
மறைந்திருந்த பொருளை பின் 
அறிந்தும் பின் அறியாமலும் 
பின் இதை என்று புரியாமலும் 
வாழ்கின்ற மனிதனை பின் காப்பாற்ற ஓடோடி வா !!!

மனிதனை பின் பள்ளத்திலிருந்து மேடேற்ற 
வா வா முருகா !!!

முருகா !! முருகா!!
முருகா முருகா !!
முத்துக்குமரா.... வடிவேலா !!!

துன்பத்தை போக்கும் பின் அன்புக்கும் கருணைக்கும் பாசத்திற்கும் பின் ஓடோடி வா !!!

மக்களைக் காப்பாற்ற ஓடோடி வா !!

அழிவு நிலைக்கு செல்கின்றது 
இவ்வுலகத்தின் நோக்கமாயினும்!!!.....

அதையும் கூட நீயும் கூட பின் அறிந்தும் கூட பின் பிரம்மாவிடம் எடுத்துக்கூறி 
பிரம்மனுக்கே பின் சாபங்கள் இருந்தபோதிலும் காப்பாற்ற பின் புகுந்த முருகா!!!

அதேபோல் மனிதனை மனிதன் குணத்தையும் பின் மாற்றி அருள் கூர்ந்து பின் மனதில் நிறுத்தி வா வா!! முருகா !!

முருகா !முருகா !!
வடிவேல்! முருகா !
முத்துக்குமரா !வடிவேலா !!
சிங்காரவேலா !!
சிங்காரவேலா !!

அழகாக வந்து பின் மாற்றத்தை உருவாக்கு!!!!

பின் உலகத்தில். 
அரிய பின் கொடிய நோய்கள் வந்து மனிதனை தாக்குகின்ற 
நேரத்தில் ஓடோடி வா!! முருகா !!!!!!
 
வா !வா ! முருகா !! 
உன்னையே நினைத்து குழந்தை வரத்தை கேட்டு 
இன்னும் நோய்களைப் போக்க 
பின் மனிதர்கள் அல்லாடும் பொழுதும் மலையின் மீது பின் நின்று பார்க்கின்றாயே ??!!!!!! முருகா !!!!

இதுதான் உன் விளையாட்டா ?????  முருகா !!!........

வா வா முருகா!!!
வடிவேல் முருகா!!
முத்துக்குமரா!!.........

உன் மேல் பாசம் பொழிந்து 
யான் உன்னை வளர்த்ததற்கு 
அறிந்தும் கூட வா வா !!! முருகா !!!!

இத் தேசம் அழியப் போகின்ற நிலையில் இன்னும்.... 

அப்பா யான் உன்னை வளர்த்தேனே!!! அதற்காக ஓடோடி வா !!!!!!

ஓடோடி வா !!!!

மனிதன் எவ்வளவு தவறுகள் செய்திருந்தாலும் அதை மன்னித்து 
மீண்டும் அவர்களுக்கு 
புத்தியை கொடுத்து பின் 
உயர்த்தி நின்று பின் 
தேசத்தை காப்பாற்ற ஓடோடி வா !!!!

கலியுக வரதனே !! கந்தா கடம்பா!! வா வா !!!!

நின்று நின்று பின் வள்ளி தெய்வானையோடு பின் பக்க பலமாக வந்து... யாங்களும் உங்கள் பின்னே வந்து 
முருகா !!!!

முருகா!! முருகா !!!
அருள்வாய் முருகா !!!

முருகா!!!!

=============================================

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!

குருநாதர் அகத்திய பெருமான் லங்கா யாத்திரைக்கு செல்க என்று உத்தரவு தந்திருந்தார்... இதில் பஞ்ச ஈஸ்வர தலங்களான 

  1. திரு கோனேஸ்வரம் திருநகுலேஸ்வரம்
  2. திருக்கேதீஸ்வரம் 
  3. திரு முன்னேஸ்வரம்
  4. நாகபூசணி தீவு ஆலயம் 
  5. மாதம்பே முருகன் கோயில் இங்கு எல்லாம் செல்ல வேண்டும் என்று ஜீவநாடியில் உத்தரவு தந்திருந்தார்.

இதில் முருகனின் கண்டி கதிர்காமம் ஏற்கனவே கதிர்காமத்திற்கு உத்தரவு இருந்தாலும் இந்த முறை வாக்குகளில் அடுத்த முறை செல்ல சொல்லி உத்தரவு தந்தார் 

மற்றும் பஞ்ச ஈஸ்வர தலத்தில் ஒன்றான தொண்டீஸ்வரம் அங்குதான் உள்ளது .

குருநாதர் இலங்கை யாத்திரையில் இன்னும் பல புனிதமான இடங்களுக்கும் ஆலயங்களுக்கும் செல்ல வைத்து அங்கும் வாக்குகள் நல்கினார். 

இலங்கை வாக்குகளில் அனைத்திலும் இந்த உலகத்தின் மற்றும் இலங்கை தேசத்திற்கு வரும் ஆபத்து குறித்து குருநாதர் அனைத்து வாக்குகளிலும் எதிர்காலத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்பதை வாக்குகளில் கூறியிருந்தார். 

இந்த உலகத்திற்கு பெரிய பெரிய துன்பங்கள் வரும் அதிலிருந்து காப்பாற்ற முருகனால் மட்டுமே முடியும் என்று வாக்குகளை குருநாதர் கூறியிருந்தார்

குருநாதர் நல்லூர் கந்தசாமி ஆலயத்திலும்
சிவவாக்கியர் திருக்கேதீஸ்வரத்திலும்

முருகன் வந்து அனைத்தையும் மாற்ற வேண்டும் என்று விண்ணப்பம் போல குறிப்பாகவும் வாக்குகள் தந்திருந்தார்கள்.

இதில் முத்தாய்ப்பாக மாதம்பே முருகன் கோயில்..... அதிக பழமையான காலங்களும் வரலாறும் இல்லை இந்த ஆலயம் எழுப்பி 15 வருடங்கள் ஆகின்றன. 

வள்ளி தெய்வானையோடு இந்த ஆலயத்தில் முருகன் வீற்றிருக்கின்றார். 

இந்த ஆலயத்திற்கு யாத்திரையில் கடைசியாக செல்ல முடிந்தது. 

அதற்கு முன்பாக முன்னேஸ்வரம் ஆலயத்தில் வழிபாடு செய்து விட்டு வெளியே வரும் பொழுது ராஜகோபுரத்திற்கு எதிரே அடியவர்கள் வாகனத்தை நோக்கி ஒரு செவலை நிறத்தில் ஒரு கால் ஊனமுற்ற பசு வாகனத்தினருகே வந்தது. 

முன்னேஸ்வரம் ஆலயத்தில் விஷு சித்திரை கனி போல பல்வேறு பழங்களை கோடையில் வைத்து இறைவனை பூஜிக்கும் வழிபாட்டு முறை அங்கு உள்ளது அதனால் அப்படி பூஜை செய்து திருப்பிக் கொண்டு வந்த பழங்கள் அப்படியே இருந்தது.

அந்த பழங்களை அந்தப் பசு அடியவர்களிடமிருந்து வாங்கி உண்டது. 

அடியவர்களும் அந்த பசுவினை வணங்கி விட்டு !!!

மாதம்பே முருகன் ஆலயத்திற்கு சென்று முருகனை போற்றி!!! தொழுது வணங்கிய பொழுது முருகப்பெருமான் தான் அணிந்திருந்த மாலையை பூக்களை சரசரவென கீழே சொரிந்து அருள் செய்தார். 

அதன் பிறகு ஆலயத்திற்கு உள்ளே ஓரிடத்தில் அமர்ந்து அகத்திய மைந்தன் திரு ஜானகிராமன் அவர்கள் நாடி சுவடியை பிரித்த பொழுது... நந்தியெம் பெருமான் ஜீவனாடியில் வந்து முருகனை வா வா !!! என்று பாடலாக பாடினார். 

திரு ஜானகிராமன் ஐயா அவர்கள் நாடி வாசிக்கும் பொழுது தொடர்ச்சியாக சில புண்ணிய சேத்திரங்களில் அதிவேகமாக வாக்குகள் வரும் !!

மூச்சு கூட விடாமல் திரு ஜானகிராமன் அய்யா வாக்குகள் படிப்பார். சில ஆலயங்களில் ஒரு நொடிக்கு மூன்று வார்த்தைகள் வேகமாக அதி வேகமாக ஜீவனாடியில்  அக்ஷ்ரங்கள் பொன்னிற எழுத்துக்கள் வரும்!!! அவ்வளவு வேகத்தையும் ஜானகிராமன் ஐயா அவ்வளவு வேகத்தில் அதனை ஓதுவார். 

நந்தி எம்பெருமான் ஜீவ நாடியில் வந்து பாடலாக பாடுவதை அகத்தியர் மைந்தன் திரு ஜானகிராமன் அய்யாவும் அவருடைய குரலும் உடல் மொழியும் மாறி பாடலாகவே பாடினார் அற்புதமாக இருந்தது அந்த கணங்களும் அனுபவமும். 

இந்த உலகத்தை காப்பாற்ற முருகா வரவேண்டும் நீ வந்து காப்பாற்ற வேண்டும் என்று விண்ணப்பம் வாக்குகளாக இலங்கை யாத்திரை வாக்குகள் இருந்தது. இதை அடியவர்கள் தொடர்ந்து கவனித்து படித்து வருபவர்களுக்கு புரிந்திருக்கும். 

சமீபத்தில் கூட பெங்களூரு சத்சங்கத்தில் பக்தர்கள் அனைவரும் ஆறுபடை வீடுகளுக்கும் தோரணமலை தோரணமலை செல்வதற்கு முன் குற்றாலத்தில் நீராடி சென்று முருகனை வழிபட வேண்டும் என்று வாக்குகள் தந்திருக்கின்றார். 

(பெங்களூர் சத்சங்க வாக்குகளும் விரைவில் வெளிவரும்)

முருக வழிபாடு அனுதினமும் கந்தர் அனுபூதியும் கந்த சஷ்டி கவசமும் ஓதி வர வேண்டும் என்றும் உத்தரவு தந்திருக்கின்றார் குருநாதர். 

நந்தியெம் பெருமான் வா வா என்று பாடலாக பாடி முருகனை அழைத்த இந்த வாக்கினை அனைவரும் பிரிண்ட் அவுட் எடுத்து வைத்து அவரவர் பூஜை அறையில் வைத்துக்கொண்டு முருக வழிபாட்டினை மேற்கொள்ளும் பொழுது அனுதினமும் பாடலாக பாடி பிரார்த்தனை செய்யலாம். 

அகத்தியர் பக்தர்கள் இசைஞானம் உள்ளவர்கள் இந்த பாடல் வாக்கினை இசை அமைத்து சமூக வலைத்தளங்களிலும் அடியவர்களுக்கும் பகிரலாம். நந்தியம்பெருமானின் முருகா  வா வா என அழைத்த பாடல் உலகமெங்கும் பரவட்டும். அனைத்து ஆலயங்களிலும் கூட்டுப் பிரார்த்தனைகளிலும்  ஒலிக்கட்டும்.

திருப்புகழ் முற்றோதல் நிகழ்வின் போதும் படித்து பாடி வணங்கலாம்

மாதம்பே முருகன் ஆலயத்தில் நந்தியெம்பெருமான் வாக்கு தந்த பிறகு குருநாதர் அகத்தியர் பெருமானும் வந்து அனைவருக்கும் எம்முடைய ஆசிகள் கந்தனும் வந்து விட்டான்... ஆசிகள் ஆசிகள் இன்னும் யான் வழி நடத்துவேன் என்று வாக்குகள் நல்கினார். 

அதற்கு முன்பு குருபூர்ணிமா அன்று நாக பூசணி ஆலயத்தில் குருநாதரிடம் குரு பூர்ணிமா தின வணக்கங்களையும் நமஸ்காரங்களையும் நன்றிகளையும் தெரிவித்த பொழுது 

அப்பனே எதை என்று கூற யான் சொல்லியதை கேட்டாலே!!!!! யான் சொல்லியவற்றை நல்முறையாக கடைப்பிடித்து வந்தாலே....அப்பனே அதுவே எந்தனுக்கு நீங்கள் காட்டும் நன்றி அப்பா..... வேறொன்றும் எங்களுக்கு தேவையில்லை அப்பனே 

மனிதர்கள் கஷ்டங்கள் இல்லாமல் வாழ யாங்கள் வழிகாட்டிக் கொண்டே இருக்கின்றோம் அதை கடைபிடித்தாலே போதுமானது அப்பா... என்று ஆசீர்வாதம் செய்தார். 

புதுப்புது வியாதிகள் நுண்ணுயிர்கள் தாக்குதல் கதிர் வீச்சு தாக்குதல் பூமி சுற்றும் வேகம் பூகம்பங்கள் நிலச்சரிவு மழை வெள்ளம் என தற்போது இந்த உலகத்தை வாட்டி எடுத்து வருகின்றது. 

குருநாதர் அகத்தியப் பெருமான் கூறியபடி ஜீவகாருண்யத்தை கடைப்பிடித்து தான தர்மங்கள் செய்து புண்ணியங்களை சேர்த்துக்கொண்டு குருநாதர் வாக்குகளில் கூறும் ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்து ... இந்த உலகத்தில் மாற்றங்கள் ஏற்பட அனைவரும் சேர்ந்து குருநாதர் அகத்தியர் பெருமான் சொல் பேச்சு நடப்போம். 

முருகன் வரட்டும் இந்த உலகத்தை காக்கட்டும்!!!!

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!

Monday, September 2, 2024

சித்தர்கள் ஆட்சி - 393 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 9


 இறைவா !!!!! நீயே அனைத்தும்.

அன்புடன் அகத்திய மாமுனிவர் - மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 9

( இவ் தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்:-

சித்தர்கள் ஆட்சி -  379 - பகுதி 1
சித்தர்கள் ஆட்சி -  381 - பகுதி 2
சித்தர்கள் ஆட்சி -  382 - பகுதி 3
சித்தர்கள் ஆட்சி -  383 - பகுதி 4 
சித்தர்கள் ஆட்சி -  389 - பகுதி 5
சித்தர்கள் ஆட்சி -  390 - பகுதி 6
சித்தர்கள் ஆட்சி -  391 - பகுதி 7
சித்தர்கள் ஆட்சி -  392 - பகுதி 8
)

நம் குருநாதர்:- ( ஒரு அடியவரைக்  காலையில் 5 மணிக்குத்  தினமும் எழச் சொன்னார்கள். அப்படி எழுந்தால் யான்  நன்றாகச் செய்வேன் என்று உரைத்தார்கள்.  இத்துடன் இவ் அடியவர் தாய், தந்தைக்குச்  சேவை செய்யச் சொன்னார்கள். தாய் , தந்தைக்குச்  செய்யும் சேவை மகத்தான புண்ணியங்களை எளிதில் பெற்றுத்தரும் என்பதை அங்கு உள்ள அடியவர்கள் நன்கு உணர்ந்தனர்) 

அடியவர்  7:- ( அழகாகக்  குருநாதர் உரைத்தவற்றை எடுத்து உரைத்தார் அவ் அடியவருக்கு.) 

நம் குருநாதர்:- அப்பனே உன் பக்கத்தில் உள்ளோனை, அப்பனே உன் பிள்ளைகளை அழை. 

அடியவர் 10:- ( பிள்ளைகளை அழைத்தார் ) 

நம் குருநாதர்:- ( தனி வாக்குகள். இவ் அடியவர் குருநாதரை நம்பிக்கொண்டு உள்ளவர். தாய் , தந்தைக்குச்  சேவை செய்பவர்களே உலகத்திற்குச்  சேவை செய்ய இயலும். அதன் பின் பொது வாக்கு ஆரம்பமானது. )

நம் குருநாதர்:- அப்பனே சில பேருக்கு வேலை எளிதில் கிடைத்து விடுகின்றது. சிலபேருக்கு கிடைப்பதில்லை. ஏன் அப்பனே? பின் யாராவது சொல்லலாம் அப்பனே. 

அடியவர் 4:- பாவ கர்மா அதிகமாக உள்ளதால்..

நம் குருநாதர்:- அப்பனே அறிவு அறிவு என்று சொல்கின்றார்களே, அதுதான் அப்பனே. நீ நன்றாப்படித்தால் நன்றாக வேலை வருகின்றது. அப்பனே அவை மட்டும் இல்லாமல் படிப்பதற்குச்  சென்று பல வேலைகள் செய்கின்றார்கள் தவறான வேலைகள். பின் சரஸ்வதி அப்பனே உயர்த்துவாளா என்ன? பின் சரஸ்வதி இங்கு அருள் கொடுத்தால்தான் அறிவு, மலைமகள், திருமகள் எல்லாம் அப்பனே. இவை எல்லாம் அறிவின் வழியே வருகின்றது என்பேன் அம்மையே.

நம் குருநாதர்:- அப்பனே பல பேர்கள் ஏன் வேலைக்குச் செல்கின்றார்கள்? ஏன் செல்வதில்லை அப்பனே? 

அடியவர் 4:- கஷ்டங்கள் இல்லை. 

அடியவர் 12:- தேவைகள் இல்லை. Commitment இல்லை. 

நம் குருநாதர்:- (தனி வாக்குகள்) 

நம் குருநாதர்:- அனைத்தும் பார்த்துக்கொண்டே இருக்கின்றேன். அனைவரையும் பார்த்துக்கொண்டே இருக்கின்றேன். வேறு ஏதும் வேண்டுமா?

அடியவர் 12:- லோபாமுத்ரா அம்மாவிடமும், அப்பாவிடமும் எல்லோருக்கும் ஆசீர்வாதம்  வேண்டும். 

நம் குருநாதர்:- யான் வந்துவிட்டாலே பின் லோபாமுத்திரையும் வந்து விடுவாள் அம்மையே.

நம் குருநாதர்:- ( தனுசு , மீனம் தொடர்புடையவர்களை அழைத்தார்கள் ) 

நம் குருநாதர்:- ( தனி கேள்வி, பதில் வாக்குகள். எவ் கஷ்டங்கள் வந்தாலும் ஆலயங்களுக்குச்  சென்று வர நன்று. ஆலயங்கள் உள்ளே செல்ல முடியவில்லை என்றால் கூட ஆலய வாசல் படியையாவது நின்று விட்டு வர வேண்டும் என்று வாக்கு உரைத்தார்கள். ) 

நம் குருநாதர்:- சுய நலத்திற்காக மட்டும் இறைவனை வணங்கக்கூடாது என்பேன். அப்பனே அனைவருக்குமே ஒன்று சொல்கின்றேன் அப்பனே. முதலில் பணத்திற்காக விளையாடுவார்கள் அப்பா. யான் அதைச்செய்கின்றேன், இதைச் செய்கின்றேன் என்று. லட்சுமி ஒருவனிடம், ஒருவளிடம்  பணம் கொடுப்பாள் அப்பா. அதை அதை உன்னால் பயன்படுத்தவில்லை என்றால் தான் அப்பனே அது மற்றவனிடத்தில் சென்றுவிடும் அப்பா. மீண்டும் வருமா அப்பா? நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.

நம் குருநாதர்:- பணத்தாசைகள் மனிதனை விட்டுவிடாது என்பேன் அப்பனே. பணம் சென்றுவிட்டால் மீண்டும் நிச்சயம் யாங்களே வழிநடத்தினால்தான்  உண்டு.

சுவடி ஓதும் மைந்தன்:- ஐயா கவனம். பணம் போய்விட்டால் வராது. ஏன் பணத்தை கொடுக்கின்றீர்கள் என்று கேட்கின்றார். அந்த பணத்துக்கு சித்தர்கள் மனம் வைத்து ( திரும்பி வர ) உதவி செய்யவேண்டும் என்று உரைக்கின்றார். 

நம் குருநாதர்:- ( பொது வாக்கு ) அப்பனே பணத்தின் மீது இருக்கும் பக்தி இறைவனிடத்தில் இல்லையே!!! அப்பனே அவ்வாறு சென்றிருந்தால்தான் நீங்களும் இங்கு வந்திருக்கின்றீர்கள் அப்பனே. முதலிலேயே சொல்லிவிட்டேன் அப்பனே. கஷ்டம் ஒன்று கொடுத்தால்தான் இறைவனிடத்தில் வருகின்றார்கள் அப்பனே. கஷ்டம் கொடுக்கவில்லை என்றால் இறைவன் யாரோ!!! ( தனி வாக்குகள் ) 

நம் குருநாதர்:- அப்பனே செல்களைப்பற்றி சொன்னேன் அப்பனே. அதைப்பற்றி நீ எடுத்துரை? 

( நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர் அருளால் March 2024 மதுரையில் நடந்த கேள்வி,பதில் வாக்குகள் தொடரும்….)

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!

Sunday, September 1, 2024

சித்தர்கள் ஆட்சி - 392 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 8




 இறைவா !!!!! நீயே அனைத்தும்.


அன்புடன் அகத்திய மாமுனிவர் - மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 8

( இவ் தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்:-

சித்தர்கள் ஆட்சி -  379 - பகுதி 1
சித்தர்கள் ஆட்சி -  381 - பகுதி 2
சித்தர்கள் ஆட்சி -  382 - பகுதி 3
சித்தர்கள் ஆட்சி -  383 - பகுதி 4 
சித்தர்கள் ஆட்சி -  389 - பகுதி 5
சித்தர்கள் ஆட்சி -  390 - பகுதி 6
சித்தர்கள் ஆட்சி -  391 - பகுதி 7

நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர் :-  அப்பனே நல்வழிகள் பிறக்கும் அப்பா. ( இப்போது குருநாதர் ஒரு அடியவரை நோக்கி ) அப்பனே அறிவுகள் தெளிவுகள் இன்னும் நன்மைகளாகவே முடியும் அப்பா. அப்பனே வழி நடத்துவேன். ஒவ்வொன்றாகக்  கொடுக்கின்றேன். அப்பனே ஓர் நிலைமைக்கு எடுத்து வந்துவிட்டேன். அப்பனே உந்தனுக்கு என்ன தேவையப்பா? 

அடியவர் 7:- ( ஒன்றும்  தேவையில்லை என்பது போலத்  தலையசைத்தார் ) 

நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர் :- அப்பனே பின் அது போலவே அனைவருக்கும் கேட்டுச்சொல் அப்பனே? 

அடியவர் 7:- ( மற்ற அடியவர்களை ) உங்களுக்கு என்ன வேண்டும்? எதுக்காக அகத்தியரை நாடி வந்துள்ளீர்கள்? 

அடியவர் 9:- மனசு சஞ்சலமாகவே இருக்கு. மன நிம்மதியே இல்லை. எதற்கெடுத்தாலும் ஒரு பயம் இருக்கு. இறைவன்கிட்டயே நம்பிக்கை இன்னும் இல்லை. எப்படி நம்பிக்கை ஏற்படுத்துவது  என்று தெரியவில்லை. 

நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர் :- அப்பனே இதுவரை யான் என்ன சொல்லிக்கொண்டிருந்தேன் அப்பனே. இவள்தன் தூங்கிக்கொண்டிருந்தாளா என்று முதலில் கேளு. பின்பு உரை அனைத்தும். 

அடியவர் 9 :- எல்லாமே இறைவன்தான் செய்கின்றார் என்று சொல்றாங்க. அப்ப நம்ம என்ன?

அடியவர் 7:- முதலில் குருநாதர் என்ன சொன்னாங்க? ஏன் நாம் நம்மை உணரவில்லை? அறிவை பற்றிப்  பேசிக்கொண்டிருக்கின்றார்கள் குருநாதர். அந்த அறிவை வைத்து நம்மை நாம் ஏன் உணரவில்லை. அறிவின் துணை கொண்டுதான் இறைவனை அடையனும். அப்படி இருக்கையில் அந்த அறிவை நாம் உணரவில்லை. அந்த அறிவை உணராமல் நாம் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றோம். சரிங்களா. 

அந்த அறிவுதான் யோசிக்கின்றது. இப்போது நீங்கள் சொன்னீர்கள் ஒரு வார்த்தை இல்லையா? எனக்கு அந்த இறை நம்பிக்கை வரவில்லை என்று. அந்த நம்பிக்கை என்பது என்ன? அது ஒருவித அறிவுதான். அதை எப்படி இறைவனிடம் செலுத்த வேண்டும் என்பதை இங்கே இவ்வளவு தூரம் குருநாதர் எடுத்துச் சொல்கின்றார் பாருங்கள். அப்படின்றப்போ இறைவன் நம்மள சுற்றி் இயங்கிக்கொண்டிருக்கின்றான். ஒரு வாரத்தைச்  சொன்னார் குருநாதர். இறைவன் நம்முடன் இருக்கின்றார். நம்மிடையே  இயங்கிக்கொண்டு, நடமாடிக்கொண்டு உள்ளார். ஆனால் நம்ம அதை நம்ம மறுக்கின்றோம். நம்ம என்றால் நம் அறிவு இறைவனை மறுக்கின்றது. அந்த நம்ப மறுக்கின்ற அறிவை நம்ம இன்னும் இறை பக்கம் செலுத்தி அதை உறுதிப்படுத்தனும். இறைவன் இருக்கின்றார். நம்முடன் வாழ்கின்றார். இல்லை என்றால் நமக்கு இப்படி குருநாதர் மூலம் வாக்கு கிடைக்குமா. 

குருநாதர் தான் இருந்த இடத்திலிருந்து  பட் ,பட்டென்று  அனைத்தும் சொல்கின்றார். ஒவ்வொருவரின் முக்காலத்தையும் சொல்கின்றார். இதெல்லாம்  யாரால் சொல்ல முடியும்? முக்காலம் உணர்ந்த ஞானிகள் அவர்கள். நமக்கு இதெல்லாம் தெரியுமா? அவங்களால எப்படி எல்லாம் எடுத்து சொல்ல முடியுது? அகத்தியர் ஒரு இறைவர். இறைவன் இருக்கின்றார் என்பது நமக்கு கூப்பிட்டு உணர்த்துகின்றார். நீ உணர்ந்துகொள்  என்று. மனப்பாடம் செய்யுங்கள் நீங்கள். 

தினமும் இறைவன் இருக்கின்றார். நம்மை சுற்றி இயங்கிக்கொண்டு உள்ளார் என்று. நாம் இறைவனை வணங்கவேண்டும். பிற உயிர்களுக்கு தீங்கு செய்யக்கூடாது என்று  மீண்டும் மீண்டும் நீங்கள் உங்கள் மனதில் உறு ஏற்ற ஏற்ற அறிவு என்பது மாறும். 

அறிவு என்பது கட்டுக்கடங்காத ஒரு காளை. அதை அடக்குவது என்பது எளிதல்ல. அதற்கு குருவருளும், திருவருளும் நிச்சயமாக வேண்டும். அதனால் அவர்களை பிரார்த்தனை  , வேண்டி  செய்யச் செய்ய அறிவு கொஞ்சம் கொஞ்சமாகப் பண்படும்.

நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர் :- அப்பனே இன்னும் கேள். இவள்தான் அறிவாளி என்று கேட்டிருப்பாள் ( நினைத்துக்கொண்டு இருக்கின்றாள்). 

அடியவர் 9:- அறிவாளி என்று நினைக்கவில்லை ஐயா. இறைவனே எல்லாம் செய்கின்றான். எல்லாம் பார்த்துக்கொள்கின்றான். இறைவனால் மட்டும் எல்லாம் செய்ய முடியும் என்றால் ( இவ் அடியவர் பேசி முடிப்பதற்குள் குருநாதர் குறுக்கிட்டு…) 

நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர் :- அப்பனே இறைவனுக்கே மரியாதை கொடுப்பதில்லை இவள் இறைவனை எப்படி வணங்குவாள் கூறு?

அடியவர்கள் :- ( ஒருமித்த குரலில் ) இறைவன் செய்கின்றார். இறைவன் பார்த்துக்கொள்வார். இப்படிச்  சொல்ல வேண்டும் ( மரியாதையாக இறைவனை ) 

நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர் :- அப்படி இருந்தால் தாய் தந்தையருக்கு மதிப்பு கொடுப்பாளா? நீயே கேளப்பா?  ( இறைவனுக்கே மதிப்பு தராதபோது , தாய் தந்தையரை எப்படி மதிக்க முடியும்? ) 

அடியவர்  7:- தாய், தந்தைதான் இறைவன். அதாவது ஒரு சூட்சுமம் ஒன்று உண்டு. 

நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர் :- அப்பனே ஒன்றும் சொல்லத் தேவை இல்லை. முதலில் தாய் தந்தையருக்கு மதிப்பு கொடுக்கின்றாளா என்று கேள்? 

அடியவர் 7:- தாய், தந்தைக்கு மதிப்பு கொடுக்கின்றீர்களா? 

அடியவர் 9:- ( இனி ) உண்மையாக இருக்கின்றேன். 

நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர் :- அப்பனே இதை முதலில் சொல்லிவிட்டேன். 

சுவடி ஓதும் மைந்தன் :- தாய், தந்தையை மதிக்காதவர்கள் இறைவனைப்  பார்க்கவும் முடியாது. இறைவனை உணர்ந்து கொள்ளவும் முடியாது.

நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர் :- அப்பனே எப்படி இப்படி கேள்விகள் கேட்கலாம் என்று நீ கூறப்பா? 

அடியவர் 7 :- குருநாதர் சொல்வது உங்களுக்குப்  புரிகின்றதா? நீங்க உங்கள் முதல் கேள்வியை எப்படி ஆரம்பித்தீர்கள். இறைவனை உங்களால் நம்பமுடியவில்லை என்று ஆரம்பித்தீர்கள். (இறைவனை) நம்புவதற்கு முதலில் என்ன செய்ய வேண்டும். முதலில் நம் தாய் தந்தையரை மதிக்க வேண்டும். நம்மளை பெற்ற தாய் , தந்தையை மதித்தால்தான் இறைவனை நம்மால் உணர முடியும். நாம் மதிக்காத போது இறைவனை நிச்சயம் உணர முடியாது. அந்த அருளை நமக்குக்  கொடுக்க மாட்டார்கள். 

நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர் :- அப்பனே, பின் கூறு. இன்னும் கூறு.

அடியவர் 7:- தாய், தந்தை ஏன் முக்கியம் என்று குருநாதர் திரும்பத் திரும்பச் சொல்கின்றார் என்றால்…

நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர் :- அப்பனே, இறைவனிடத்தில் நேரடியாகச் சென்றுவிட்டாள் அப்பனே. முதலில் தாய் தந்தையரைப் பற்றி கூறச் சொல். 

அடியவர் 7:- உங்கள் தாய் தந்தையைப் பற்றிச் சொல்லுங்கள். 

அடியவர் 9:- ( அமைதி ) 

நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர் :- அப்பனே ஏன் உந்தனை ( அடியவர் 7) நிற்க வைத்தேன் அப்பனே. இதைப் பற்றியும் ரகசியமாக சொல்கின்றேன். 

அடியவர் 7:- ( நின்று கொண்டே கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்கள்). 

அடியவர் 9:- ( தாய், தந்தையைப்  பற்றி விவரித்தார்கள்.  ) 

நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர் :- ( இவ் அடியவருக்குத்  தனிப்பட்ட வாக்குகள் உரைத்தார்கள். அதில் சில பொது வாக்குகளும் உரைத்தார்கள். அந்த பொது வாக்குகள்) 

அப்பனே கோபப்பட்டாலே நோயின் தாக்கம் அதிகரிக்கின்றதப்பா. முதல் தெய்வம் தாய். ( தாயிடம் கோபம் கொள்வது தவறு. அப்படி கோபம் கொள்பவர்களுக்கு ) அப்போது இறைவன் கஷ்டத்தைக்  கொடுப்பானா? கொடுக்க மாட்டானா? 

அடியவர்கள் :- ( அமைதி ) 

நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர் :- அப்பனே மற்றவர்களுக்காக உழைக்கின்றீர்கள், பணத்தைச்  சம்பாதிக்கின்றீர்கள் அப்பனே. ஆனால் தாய், தந்தையருக்கு உழைத்து பின் புண்ணியத்தைச்  சம்பாதிக்க மறந்து விடுகின்றார்கள் அப்பனே. 

அடியவர் 7:- நம் கண்ணுக்குத்  தெரிந்து புண்ணியத்தைச்  சம்பாதிக்கும் source அப்பா, அம்மா. 

நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர் :- புண்ணியம்தான் நல்வழிப்படுத்தும். அப்பொழுது புண்ணியம் செய்யாமல் எவை நடந்தேறும்? 

அடியவர் 7:- ( விளக்கம் அளித்தார்கள். இதனிடையில்…. ) 

நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர் :- அப்பனே உன் முன்னே உள்ளவனைத்  தலை மீது குட்டு. அப்பனே பலமாகக்  குட்ட வேண்டும். 

அடியவர் 7:- ( குருநாதா!!!!! என்று பயத்துடன் குட்டினார் ) 

நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர் :- அப்பனே இதுவரை யான் என்ன சொல்லிக்கொண்டிருக்கின்றேன் என்று அவனை எழுப்பி உன்னிடத்தில் கூறச்சொல்?

அடியவர் 7:- ( கேள்வி கேட்டார் ) 

அடியவர் 10:- கவனிக்கவில்லை. 

நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர் :- அப்பனே ஞாபகம் எங்கே அப்பனே? ஆனால் ( நாடி வாக்கு கேட்க ) வந்துவிட்டான். 

அடியவர் 10 :- ( அமைதி ) 

நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர் :- அப்பனே இதுபோலத்தான் திருத்தலத்திற்குச் சென்று அப்பனே அமைதியாக இறைவனை நினைத்து தியானம் செய்யாமல் எதை எதையே எண்ணிக்கொண்டிருக்கும் பொழுது இறைவன் வருவானப்பா. போய் விடுவான் அப்படியே. 

( அடியவர்களே, இந்த வாக்கு மிக முக்கிய வாக்கு. இந்த அடியவரை வைத்து மகத்தான ஒரு பாடத்தை நம் அனைவருக்கும் உரைத்துள்ளார்கள் நம் குருநாதர். தரிசனம் மட்டும் போதாது. நாம் திருத்தலத்திற்குச்  சென்று குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாவது அந்த ஆலய இறைவன், இறைவியை நினைத்து அவசியம் தியானம் செய்வது  மிக அவசியம். அப்போதுதான் இறைவன்  நமக்கு இறையருள் செய்து நன்கு கிட்டி வாழ்வில் உயர இயலும். அப்படி இல்லையெனில் இறைவன் உங்களிடத்தில் வந்து அருள் செய்யாமல் சென்று விடுவார். அடியவர்கள் இந்த வாக்கை நன்கு உணர்ந்து இனிமேல் ஆலயங்களில் தியானங்கள் செய்து இறையருள் பெறுக.) 

நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர் :-  ( தனி வாக்குகள் உரைத்த பின் அடியவரை ( # 10 ) அமரச் சொன்னார்கள்) 

( நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர் அருளால் March 2024 மதுரையில் நடந்த கேள்வி,பதில் வாக்குகள் தொடரும்….)

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!