“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Sunday, August 25, 2024

சித்தர்கள் ஆட்சி - 391 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 7

 


இறைவா !!!!! நீயே அனைத்தும்.


அன்புடன் அகத்திய மாமுனிவர் - மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 7

( இவ் தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்:-

சித்தர்கள் ஆட்சி -  379 - பகுதி 1
சித்தர்கள் ஆட்சி -  381 - பகுதி 2
சித்தர்கள் ஆட்சி -  382 - பகுதி 3
சித்தர்கள் ஆட்சி -  383 - பகுதி 4 
சித்தர்கள் ஆட்சி -  389 - பகுதி 5
சித்தர்கள் ஆட்சி -  390 - பகுதி 6 ) 


நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர்:- அப்பனே அவ்வெற்றிக்கும் யான்தான் பொறுப்பு. அப்பனே அதனால்தான் , புரியாதவர்களை யான் வாக்குகளே செப்புவதில்லை. அப்பனே புரிந்து கொண்டு ஏதாவது ரூபத்தில் நிச்சயம் அப்பனே மனிதனைத்  திருத்துவதற்கே சித்தர்கள் யாங்கள் தயாராகி பின் அடித்து வந்து கொண்டே இருக்கின்றோம். ஏனென்றால் அப்பனே மனிதனைத்  திருத்தாவிடில் , வாயில்லா ஜீவராசிகள் கூட அழிந்துவிடும் என்பேன் அப்பனே. அப்பனே இதனால் அப்பனே மாற்றங்கள் ஏற்றங்கள். இதனால் இறைவன் பெயரைச் சொல்லியே மனிதன் ஏமாற்றுகின்றான் அப்பனே இறைவன் எங்கு பார்க்கப்போகின்றான்  என்று. இதற்குச்  சரியான உதாரணம் நீ கூற வேண்டும்.


அடியவர் :- பல ஆசிரமங்கள் இருக்கின்றதே..


நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர்:- அப்பனே ஆசிரமங்கள் எதற்கு?


அடியவர் 1 :- இறைவனைக் காண….


நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர்:- அப்பனே உன்னை ஏமாற்றி விட்டார்கள் அப்பனே. அப்பனே மனிதன் , இறைவன் எங்கு இருக்கின்றான் என்று அப்பனே ஏற்கனவே யான் உரைத்து விட்டேன் அப்பனே. மீண்டும் ஞாபகத்தில் வைத்துக்கொள் அப்பனே. அதாவது பின் வாயில்லா ஜீவராசியைப் பலியிடுகின்றான் அப்பனே. இறைவன் பெயரைச் சொல்லியே. அப்பொழுதெல்லாம் இவ்வாறுதான் நடந்து கொண்டிருக்கின்றது. இறைவன் மீது பழி போட்டால் பின் அவ்பாவம் போய்விடும் என்று.


சுவடி ஓதும் மைந்தன் :- மனிதன் எவ்வளவு சுயநலக்காரன் என்று உதாரணம் செல்கின்றார் குருநாதர். ஐயா புரியுதுங்களா?


அடியவர்கள்:- புரியுது ஐயா.


நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர்:- அப்பனே அப்படியே வந்திட்டப்பா இது. மூட நம்பிக்கை அப்பனே. அப்பனே இன்னும் பல மூட நம்பிக்கை இருக்கின்றதப்பா. அவை எல்லாம் யாங்கள் ஒழிப்போம் அப்பனே கலியுகத்தில். அப்பனே அவ் மூட நம்பிக்கையை ஒழித்தால்தான் மனிதன் மனிதனாக வாழ்வான் அப்பனே. அப்பொழுதுதான் இறை ஆசிகள் கிடைக்கும் அப்பனே. அதுவரை கிடைக்காதப்பா.


அடியவர்கள் :- ( அமைதி )


நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர்:- அப்பனே தேர்ச்சி பெற வேண்டும் என்றால் என்ற செய்ய வேண்டும்.


அடியவர் 3:- நன்றாகப்  படிக்க வேண்டும்.

அடியவர் :- நன்றாகப்  படிக்க வேண்டும்.


நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இதைப் புரிந்து கொண்டாயா?


அடியவர்கள் :- ( அமைதி )

அடியவர்  :- கர்மாவை அனுபவிக்க வேண்டும் என்று கூறுகின்றார் ( நம் குருநாதர் ).


நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இதற்குத்  தீர்வுகள் இவ்வுலகத்தில் மனிதரிடத்தில் எவரிடத்திலும் இல்லையப்பா.


சுவடி ஓதும் மைந்தன் :- மனிதர்கள் யாராலும் கர்மங்களை நீக்க முடியாது. எவரிடத்திலும் இல்லை என்று சொல்கின்றார் ( நம் குருநாதர் ).


நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர்:- அப்பனே அவை, இவை என்றெல்லாம் சொல்லலாம் என்பேன் அப்பனே. ஆனாலும் அப்பனே ( மனிதன் ) வாய் கூசாமல் பேசுவானப்பா. அப்பனே வருவார்களப்பா அனைத்தும் செய்துவிட்டு, அப்பனே காதலிப்பான். அப்பனே திருமணம் செய்வான். அப்பனே குழந்தைகள் பெற்றுக்கொள்வான். அப்பனே பின் அவந்தனக்கு அனைத்தும் வெறுப்பாகிவிடும். பக்திக்குச் சென்றால் அப்பனே ஏதோ பிழைத்துக் கொள்ளலாம் என்று வருவானப்பா. இதெல்லாம் பக்தி இல்லையப்பா. பின் ( அவ் போலி சாமியார் ) சொன்னதும் நடக்காதப்பா. பின் அவனிடத்தில் சென்று பின் கர்மத்தையும் பெற்றுக் கொள்ள வேண்டும் அப்பா. இதுதான் நடக்குமப்பா இவ்கலியுகத்தில்.


சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா வேறு கேள்வி ஏதும் இருந்தால் கேளுங்கள்.


அடியவர் 4 :- உண்மையான பக்தி எது?


நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர்:- அப்பனே உண்மையான உடம்பு எது?


அடியவர் 4:- ஏற்கனவே  ஐயா ( ஒரு வாக்கில் ) சொன்னது. உள் உடம்பு…


நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர்:- அப்பனே உண்மையான உடம்பு இல்லையப்பா. அப்பனே இவ்வுடம்புக்கும் சொந்தக்காரன் இறைவன் அப்பா. இதிலிருந்து என்ன புரிகின்றது? 


அடியவர்கள் :- எதுவுமே நிரந்தரமில்லை, எதுவுமே செய்யக்கூடாது….


நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர்:- அப்பனே பக்தியை ஏன் செலுத்துகின்றாய் அப்பனே?


அடியவர் 4:- இறைவனைப்  பார்க்க..


நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர்:- அப்பனே பக்தியைச்  செலுத்தினாய். ஏன் கஷ்டங்கள் வருகின்றது?


அடியவர் 5:- சுயநலமாக இருப்பதால்..


நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர்:- அப்பனே சுய நலமானதும் முன் ஜென்மத்தில் பாவங்கள், இவ் ஆன்மா அதனால்தான் அப்பனே. (அவ் பாவம்) அதற்குத் தகுந்தாற்போலே அப்பனே சேமிப்புத்திறன் மூளையில் சொருகிவிடுகின்றான் இறைவன் அப்பனே. இதைப் பல உரைகளிலும் யான் எடுத்து உரைத்துவிட்டேன் அப்பனே.


சுவடி ஓதும் மைந்தன் :- Memory card. ஐயா செல்கள் எல்லாம் ஏற்கனவே  கண்டுபிடித்து விட்டார்கள். அப்போ செல் memory card முளையில் இறைவன் சொருகி விட்டார். அந்த memory cardக்கு ஏற்றபடி நீங்கள் நடக்கின்றீர்கள் (அனுபவிக்கின்றீர்கள்). நம்ப எல்லாம் ( இறைவன் கட்டுப்பாட்டில் இயங்கும் ) ரோபோ போல.


நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர்:- அப்பனே எண்ணம் சீராக இருந்தாலே போதுமானதப்பா. சில தவறுகள் தெரியாமல் செய்து விடுகின்றான் மனிதன் அப்பனே. அதுவும் சேமிப்பாக வைத்துக்கொள்ளும் அப்பா.


சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கங்கள் )


நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர்:- அப்பனே நீங்கள் பேசுவதும் , கோபம் கொள்வதும் ( அனைத்தும் memory cardல் பதிவாகும் ) , அதனால்தான் அப்பனே பல ஞானியர்கள் அப்பனே தன்னை அறிந்து விட்டால் ஒன்றுமே பேசமாட்டார்கள் அப்பனே.

அப்பனே அதாவது கஷ்டங்களுக்கு யார் சொந்தக்காரன் என்றால் மனிதன். இதை அனைவரிடத்திலும் தெரிவி.


சுவடி ஓதும் மைந்தன்:- ஐயா memory ஏறிக்கொண்டே போகக்கூடாது.


நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இதனால் பல தவறுகள் செய்து கொண்டே இருப்பான் அப்பனே. ( மூளையில் உள்ள அவ் ) செல் பின் நிரம்பிவிடும். அப்பனே இறந்து விடுவான் என்பேன் அப்பனே. மீண்டும் திடீரென்று (இறந்து போன ) அவ் ஆன்மா பின் சுற்றி அலையும் அப்பா, எங்குச்  செல்வது என்று கூற ஆனால் இறைவன் கொடுக்க மாட்டான் என்பேன் அப்பனே. மற்றொரு உடம்பில் பின் நுழைந்து விடும் என்பேன் அப்பனே. அதற்குத்  தகுந்தாற்போல் ஆட்டுவிக்கும் என்பேன் அப்பனே. இதுவும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது அப்பனே.


சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கம் அளித்தார்கள். அதாவது பல தவறுகள் செய்து , ஆசைகள் பல வைத்து அதனால் இறைவன் உடம்பில் வைத்த memory card நிரம்பி இறந்து போன முன்னோர்கள் ஆன்மா இறைவனைச்  சுற்றிச் சுற்றி அலையும். இறைவன் அதற்கு வழி கொடுக்க மாட்டார். அப்போது அவ்ஆன்மா வம்சத்தின் அடுத்த வாரிசுகள், வம்சத்தில் வாழ்பவர்கள் உடலில் புகுந்து விடும். அப்போது அவ் ஆன்மாவின் இச்சைக்கு, ஆசைக்கு ஏற்ப வம்ச வாரிசுகள் ஆட்டுவிக்கப்படுவார்கள். அப்போது பல கர்மங்கள் அவர்களுக்கு உண்டாகும். இது அங்கங்கே நடந்து கொண்டே இருக்கின்றது என்று குருநாதர் சொல்கின்றார்கள். )


நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இதுவும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது ஒவ்வொரு இல்லத்திலும் கூட. அப்பனே அப்பொழுது பேய் போல், பேய் என்பது என்ன?


அடியவர் :- முழுமை அடையாத …


நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர்:- அப்பனே உன் மனம்தானப்பா.


சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கம் அளித்தார்கள். இறந்து போன அவ் ஆத்மா உங்கள் உடம்பிலிருந்தால், அவ் ஆன்மா உங்கள் மனதை ஆட்டுவித்து உங்கள் மனம் போன போக்கில் போய்க்கொண்டே இருப்பீர்கள். உங்கள் கர்மாவை கழிக்காமல் அவ் முன்னோர்கள் ஆசைகளுக்காகவே வாழ நேரிடும்.)


நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர்:- அப்பனே அவ் மனதை அடக்குவதே இறைவன். அதனால்தான் அப்பனே என் பக்தர்கள் அனைவருக்கும் மூட நம்பிக்கை ஒழிப்பதற்கு வழி சொல்லி, உயர்ந்த வாழ்க்கை கொடுப்பேன் அப்பனே.


சுவடி ஓதும் மைந்தன் :- ( சில விளக்கங்கள். )


அடியவர்கள் :- ( புரிதல்கள் )


நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இப்போது ( உயர்ந்த வாழ்க்கை ) கொடுத்துவிடுவேன் அப்பனே.

ஆனாலும் உன் சந்ததிகள் அதே போலத்தான் பயன்படுத்தி மீண்டும் கஷ்டத்தை பின் எவை என்று அறிய அறிய..


சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கங்கள் அளித்தார்கள். இப்பொழுது உங்கள் கர்மங்களைக்  கழிக்காமல் உயர்ந்த வாழ்க்கை கொடுத்தால், உங்கள் வருங்கால சந்ததிகள் உங்கள் கஷ்டங்களைச்  சுமக்க நேரிடும். எப்படி எனில் உங்கள் கர்மாவுடன் ஆன்மாவாக  நீங்கள் அலையும் பொழுது, உங்கள் முன்னோர்கள் உங்கள் உடம்பில் புகுந்து இப்போது செய்வது போல, நீங்கள் உங்கள் சந்ததிகளின் உடம்பில் புகுந்து அவர்களைக்  கஷ்டங்களுக்கு உள் ஆக்குவீர்கள். இது தேவையா என்று குருநாதர் சொல்கின்றார்கள்.)


( அடியவர்கள் திதி கொடுப்பதன் அவசியத்தை இங்கு உணர வேண்டும். உங்கள் முன்னோர்களை முக்தி அடைய வைப்பது மிகவும் அவசியம். இங்கு சொல்வது போல நீங்கள் கொடுக்கும் திதி உங்கள் உடம்பில் அவர்களை இறங்க விடாது. 2023 மதுரை வாக்கில் இராமேஸ்வரம் வழிபாடு குறித்து மிக அழகாக நம் குருநாதர் எடுத்துரைத்துள்ளார்கள். முதலில் தனுஷ்கோடி  சென்று அதன்பின் ஆதி ஈசன் இராமநாதசுவாமி  தரிசனம் செய்ய வேண்டும். அப்போது உங்கள் முன்னோர்கள் ஆதி ஈசனிடம் முக்தி அடைந்து விடுவார்கள்.

(1) சித்தன் அருள் 1513 மதுரை வாக்கு பகுதி 25.

(2) சித்தன் அருள் 1449 - ராமேஸ்வரம் செல்வதின் முக்கியத்துவம்.

(3) மேலும் சித்தன் அருள் - 1654 - அன்புடன் அகத்தியர் - கீரிமலை நகுலேஸ்வரம் கோயில். காங்கேசன்துறை யாழ்ப்பாணம் வடக்கு. ஸ்ரீலங்கா. இந்த பதிவில் திதி கொடுக்காதமையால் உங்களுக்கு வரும் கஷ்டங்களை மிக அழகாக விஞ்ஞான பூர்வமாக எடுத்து உரைத்து உள்ளார்கள்.


மேலும் திதி கொடுப்பதன் ரகசியங்களை அடியவர்கள் எளிதாகப்  புரிந்து கொள்ள "சித்தர்கள் ஆட்சி" என்ற YouTube தளத்தில் பின் வரும் பதிவு ( YouTube playlist ) உள்ளன. இந்த பதிவுகளையும் பார்த்து , புரிந்து உங்கள் முன்னோர்களுக்கு மறவாமல் திதி கொடுக்கவும்.


திதி அவசியம் கொடுங்கள் - உங்கள் முன்னோர்களுக்கு

https://www.youtube.com/playlist?list=PLr-rfmzhELfqJ2pcgkYdRtTR1Klec6JV3 

( YouTube playlist )


இந்த வாக்குகளைப் படித்து முழுமையாகப்  புரிந்து உங்கள் முன்னோர்களுக்குத்  திதி மறவாமல் கொடுக்கவும்.)



அடியவர்கள் :- ( நீடித்த அமைதி )


நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர்:- அப்பனே சித்தனை நம்பினோர் வீண் போவதில்லை என்பேன் அப்பனே. ஆனால் கஷ்டங்கள் வரும் அப்பா. ( அதுவும் அனுபவித்துத்  தீர்க்கவேண்டிய கர்மங்களுக்காக மட்டுமே ). அப்பனே அனைத்தும் எங்களுக்குத் தெரியும் அப்பா. அதாவது நீ நோய்வாய் பட்டுள்ளாய் என்பதைக்கூட அப்பனே எங்களுக்குத் தெரிந்து இரவில் உன் தலைமேல் தட்டினால் அனைத்தும் போய்விடுமப்பா. பின் ஔஷதங்களே ( மருந்துகளே ) தேவை இல்லை. 



அப்பனே இப்பிறவியிலும் அதாவது இச்சென்மத்திலும் கூட அப்பனே கலியுகத்திலும் கூட பலபேரை யான் காப்பாற்றியுள்ளேன் பல பல வழிகளிலும் கூட. அப்பனே இதனால் உங்களைக் காப்பாற்ற மாட்டேனா என்ன?


ஆனாலும் அப்பனே அறிவுகள் வளரவில்லையே. அதனால்தான் கவலை.


அடியவர்கள் :- ( அமைதி )


நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர்:- அப்பனே யோசித்தீர்களா அப்பனே? ஏன் எதற்குத்  தோல்விகள்? ஏன் எதற்குக்  கஷ்டங்கள்? அதை யோசித்தாலே போதுமானதப்பா. அப்பனே இறைவன் அருகில் வந்துவிட்டு அனைத்தும் மாற்றிவிடுவானப்பா.


( நீண்ட நேரம் ஏறத்தாழ 2 மணி நேரம் சுவடி தொடர்ந்து  சுவடி ஓதும் மைந்தன் படித்ததால் அங்கு தேநீர் பரிமாறும் நேரம் வந்தது.)


சுவடி ஓதும் மைந்தன்:- ஐயா முதலில் பக்குவங்களைக்  குருநாதர் தருகின்றார் அனைவருக்கும். அந்த பக்குவம் கொடுக்காமல் ஒன்றுமே செய்ய இயலாது.


நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர்:- அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட இன்னும் இன்னும் பக்தன் புதுப்புதுவான வித்தையும் காட்டுவானப்பா. அப்பனே இதனால் பல பெண்களையும் கூட ( பல போலிச் சாமியார்கள் ) பக்தன் என்று சொல்லிச் சொல்லி ஏமாற்றியும் வைத்திருக்கின்றான் அப்பனே. அவனுக்கெல்லாம் தண்டனை கொடுப்பதா? இல்லையா? நீங்களே கூறுங்கள் என்பேன் அப்பனே.


அடியவர்கள் :- (ஒருமித்த குரலில்) கண்டிப்பாக தண்டிக்க வேண்டும் ஐயா.


நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர்:- அதனால்தான் அப்பனே உங்களை நீங்கள் நம்புங்கள் என்று சொல்லியிருக்கின்றேன். அப்பனே பின் நம்பாமல் சென்றாலும் உன்னை ஏமாற்றிவிடுவான் என்பேன் வாழ்க்கை. அவ்வளவுதான் வாழ்க்கை. அப்பனே பின் ஏமாற்றியதாக இருந்தாலும் பின் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் ( அவ் போலி சாமியார் என்ற பக்தன் தன்னிடம் உள்ள ) பாவத்தை தேடிக் கொடுத்துவிடுவான் அப்பனே.


சுவடி ஓதும் மைந்தன் :- ஏமாற்றினால் பரவாயில்லை. மீண்டு வந்துவிடலாம். ஆனால் அவர்கள் பாவத்தை சேர்த்துக்  கொடுத்துவிடுவார்கள். (அதை கழிப்பது கடினம்)


நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர்:- அப்பனே உண்மை ( பக்தன் ) ஞானி அப்பனே அன்பு, பொறுமை, கோபம், அதாவது அன்பு நிறைந்திருப்பான். பொறுமை நிறைந்திருக்கும். கோபங்கள் வராது. அனைவரும் ஒன்றே. அனைவரும் இறைவனின் குழந்தைகள். இறைவன் போட்ட பிச்சை என்று அனைத்திற்கும் காரணம் இறைவன். இறைவனை வேண்டிக்கொள் என்றுதான் சொல்வான் அப்பனே.


ஆனாலும் அப்பனே இன்றைய நிலைமையில், என்னால் அனைத்தும் முடியும். யான்தான் செய்கின்றேன் என்று அல்லாமல் இன்னும் இன்னும் அப்பனே புதுப்புது கதைகள் எல்லாம் விடுவானப்பா. அவை எல்லாம் பொய்யப்பா.


அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட அதனால்தான் அப்பனே சித்தர்கள் இப்படியே விட்டு விட்டால் சித்தர்களே இல்லை என்று மனிதன் ஒத்துக்கொள்வானப்பா.


அப்பனே சித்தன் பெயரை வைத்துக் கொண்டு ஏமாற்றுகின்றான் என்றால் சித்தன் பின் சித்தன் கண்டு கொள்ளப்போகின்றானா என்ன என்று. ஆனால் அப்பனே இப்பொழுது அடிகள் பலமாக விழுந்திருக்கையில் , அப்பனே இன்னும் அப்பனே பின் (அடி) விழத்தான் போகின்றது அப்பொழுது புரிந்து கொள்வான் சித்தன் யார் என்று.


அப்பனே இன்னும் பொய்கள் கூறுவானப்பா. அகத்தியன் தான் யான் என்று. அப்பனே போகன்தான் யான் என்று. யான் மறு பிறவி அகத்தியன் என்று கூற அப்பனே. அப்பப்பா!!!!! அப்பா!!!!


அப்பனே அவன் காமக்கொடூரன் என்பேன் அவந்தனை. 


அப்பனே ஆனாலும் இப்படித்தான் அப்பனே பொய்கள் கூறிக்கொண்டிருக்கின்றார்கள் உலகத்தில்.


அப்பனே இன்னும் இன்னும் கலியுகத்தில் அதாவது பக்தியைப் பொய்யாக்குவான் என்பேன் அப்பனே.


அப்பனே இதனால் என்னுடைய பக்தர்களுக்கு பல பல உண்மைகளைத் தெரிவித்து , அப்பனே நிச்சயம் அப்பனே அடிப்பேன்.


சுவடி ஓதும்  மைந்தன் :- ஐயா, அப்போ சில பக்தர்களை நானே ஏற்படுத்தி அந்த பொய்யான பக்தர்களை எல்லாம் அழிப்பேன் என்று சொல்கின்றார்.


நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர்:- அப்பனே நம்தனக்கு மீறிய சக்தி ஒன்று உள்ளது என்பதை கூட அப்பனே பின் அறிந்து கொள்ளவே இல்லையே பக்தன். அப்பனே இறைவன் அங்கங்கு திரிந்து கொண்டுதான் இருக்கின்றான் அப்பனே. நிச்சயம் அப்பனே யான் சொல்வேன் அப்பனே. அவனைப் பார்பதற்கும் வழிகள் சொல்வேன் அப்பனே. ஆனால் நீங்கள் பொறுதிருக்க வேண்டும். அப்பனே சொல்லிவிட்டால் அதையே ஏக்கங்கள் கொண்டு அப்பனே பின் கடமையில் கண்ணாக நீங்கள் இருக்க மாட்டீர்கள்.


( நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர் அருளால் March 2024 மதுரையில் நடந்த கேள்வி,பதில் வாக்குகள் தொடரும்….)


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!


சர்வம் சிவார்ப்பணம்!!!!!

Saturday, August 24, 2024

சித்தர்கள் ஆட்சி - 390 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 6




இறைவா !!!!! நீயே அனைத்தும்.

அன்புடன் அகத்திய மாமுனிவர் - மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 6

( இவ் தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்:- 

சித்தர்கள் ஆட்சி -  379 - மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 1

சித்தர்கள் ஆட்சி -  381 - மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 2

சித்தர்கள் ஆட்சி -  382 - மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 3

சித்தர்கள் ஆட்சி -  383- மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 4 

சித்தர்கள் ஆட்சி -  383- மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 5

)

நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர்:-  ( அடியவருக்கு தனி வாக்குகள். அதன் பின் ஒரு பொது வாக்கு) அப்பனே பெண் சாபம் பொல்லாதப்பா. பின் நீங்கள் கேட்கலாம் ஆண்கள் சாபம் எப்படி என்று. 

அடியவர்கள் :- ( அமைதி )

நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர்:-  அப்பனே இதற்கும் காரணங்கள் உண்டு சொல்கின்றேன். அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே. இப்படிச் சொன்னால்தான் அப்பனே சில மாற்றங்கள் ஏற்படும் என்பேன் அப்பனே. அதனால் அதாவது நிற்க வைத்து அப்பனே அனைவரிடத்திலும் தெரியும்படி சொல்கின்றேன் என்று நினைத்துவிடாதே அப்பனே. அப்பனே இவ் அகத்தியன் பின் அனைத்திற்கும் அப்பனே காரணங்களோடுதான் பேசுவான். 

( வணக்கம் அடியவர்களே, நம் பாவங்களைப் பிறரிடம் சொன்னால் பாவங்கள் மிக வேகமாக்க் கரைந்து ஓடும். அதே போல் செய்த புண்ணியங்களைச் சொன்னால் மிக மிக அதி வேகமாகச் சென்று விடும். பொதுவாக சத்சங்கத்தில் ஒருவர் பாவத்தை அனைவர் முன்னால் எடுத்துச் சொல்ல அதி வேகமாக நீங்கும் என்பதே சூட்சுமம். பல ஜென்மங்கள் எடுத்தாலும் கரைய இயலாத பாவங்கள் விரைவில் நீங்க ஓர் அருமையான வாய்ப்பு சத்சங்கத்தில் அடியவர்கள் கலந்து கொண்டு பாவங்கள் நீங்கப் பெற்று , குருநாதரிடம் புண்ணிய ஆசி பெறுவது என்று உணர்க. வாருங்கள் கருணைக்கடல் அருளும் ஞான அமுத வாக்கின் உள் சொல்வோம். ) 

எழுந்து நின்ற அடியவர் :- ( சரி என்ற புரிதலுடன் உணர்த்தினார் சுவடி ஓதும் மைந்தனுக்கு) 

நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர்:-  அப்பனே திருமணம் என்றால் அனைவரும் ஒன்று கூடுகின்றீர்களே, எதற்கு?

அடியவர்கள்:- ஆசீர்வாதங்கள் , வாழ்த்த, மனதார வாழ்த்த….

நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர்:-  அப்பனே சுபம் என்றால் அனைவரும் வந்து விடுவார்கள் அப்பனே. பாவம் என்றால் அனைவரும் தூர ஓடுகின்றார்கள் அப்பனே. இதுதான் அப்பனே மனித வாழ்க்கை. இதிலிருந்தே புரிந்து கொள்ள வேண்டும் அப்பனே. சுபம் அப்பனே அதாவது மனிதன் சுகத்தோடு இருப்பதனால்தான் அப்பனே மனிதன் வருவானப்பா. அப்பனே கஷ்டங்கள் வந்துவிட்டால் யாரும் வர மாட்டார்கள் அப்பா. அப்பனே யாங்கள்தான் ( சித்தர்கள்தான் ) வர வேண்டும். அப்பனே இப்பொழுது புரிகின்றதா? திருமணம் வைத்தே பல விசயங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

அப்பனே மனிதன் அதை , இதை என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருப்பான் அப்பனே. ஆனால் பாவத்தை, பாவத்தால்தான் அழிக்க முடியும். ஆனாலும் இரக்கம் எங்களுக்கும் இருக்கின்றது அப்பனே. ஆனால் இதில் கூட மனிதன் வந்து நுழைந்து அப்பனே பின் தடுத்துவிடுகின்றான் அனைத்தும். 

அப்பனே திருத்தலத்திற்கு எதற்காகச் செல்லவேண்டும் கூறு? 

அடியவர் 1 :- இறைவனை பார்க்க…

நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர்:-  அப்பனே, அப்படி இல்லையப்பா. அப்பனே அனைவரும் ஒன்றாக இருக்கின்றார்கள் எதை என்று அறிய அறிய பாசத்தோடு என்றெல்லாம் அப்பனே உணர்ந்து கொள்ள வேண்டும். 

சுவடி ஓதும் மைந்தன் :- எல்லா கடவுளும் ஒன்றாக ஒரே இடத்தில் உள்ளார்கள். இது எல்லாம் அன்பை, பாசத்தைக் காட்டுவதற்காகவே. இதுபோல் நாம் அனைவரும் இருக்க வேண்டும். 

நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர்:-  அப்பனே ஒருவர் ஒருவர் சண்டைபோடுகின்றார்களா என்ன அங்கு? அப்பனே. இதிலாவது புரிந்து கொள்ள வேண்டும் மனிதன் அப்பனே. புரிந்து கொள்வதே இல்லை அப்பனே. இவை எல்லாம் புரிந்து கொண்டால் நிச்சயம் வெற்றியாளனாக வலம் வரலாம் இவ்வுலகத்தில்.

( வணக்கம் அடியவர்களே. இப்போது நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர் நம் முன்னோர்கள் கடைப்பிடித்த , மறைந்துபோன ஒரு எளிய ரகசிய சூட்சுமத்தை நமது பிரச்சினைகள் நீங்க எடுத்துரைத்தார்கள். அந்த சூட்சுமம் அறிவோம் வாருங்கள்.) 

அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே இன்னும் இன்னும் சித்தர்கள் ஏன் திருத்தலத்தை உருவாக்கினார்கள் அப்பனே. செப்புகின்றேன் அப்பனே. ஆனாலும் எங்கெல்லாம் கிரகங்கள் கூட, நட்சத்திரங்கள் கூட அப்பனே அதிக சக்தி விழுகின்றதோ , அங்குதான் யாங்கள் திருத்தலங்கள் ஏற்படுத்தினோம் அப்பனே. அங்கு சென்று அமர்ந்து தியானங்கள் பலமுறையும் எவை என்று அறிய அறிய ஒருவனுக்கு பிரச்சினை ஏற்பட்டால் அப்பனே ஒரு 100 வருடங்களுக்கு முன்பே , திருத்தலத்தில் தங்குவான் என்பேன் அப்பனே. அவ் வேகம் அவன்மீது விழும்பொழுது சில தரித்திரங்கள் நீங்கும் அப்பா. ஒரு 5 நாட்களில் அப்பனே அனைத்து பிரச்சினைகளும் விடுபடும் அப்பனே. ஓடிவிடுவானப்பா. ஆனால் இன்றைய நிலையில் அதுபோல் இல்லையப்பா. 

( வணக்கம் அடியவர்களே, இந்த ஆதிகால ரகசிய சூட்சுமத்தை உங்கள் வாழ்வில் பயன்படுத்தி உங்கள் இன்னல்கள், துன்பங்கள் யாவும் நீங்கி வெற்றி பெறவும்.) 

அப்பனே ஒவ்வொரு கிரகங்களை எவை என்று புரியாமல் கூட, அறியாமல் கூட அப்பனே பின் பிறக்கும்பொழுதே அப்பனே ( கிரகங்களின் )  துகள்கள் ( மனித உடம்பில் ) , இதை பற்றி இன்னும் எடுத்துரைக்கின்றேன் அப்பனே. இன்னும் பின் வாக்குகள் இருக்க அப்பனே நிச்சயம் நீங்கள்… ( அடியவருக்கு தனி வாக்குகள்) 

அப்பனே பிறப்பதும், இறப்பதும் , வாழ்வதும் அனைத்தும் இறைவனிடத்திலே , அதாவது அப்பனே இன்றைய அளவில் கூட எப்பொழுதுமே யான் சொல்லிக்கொண்டே இருக்கின்றேன் அப்பனே. உயிர் கூட உங்களுக்கு சொந்தமானது இல்லையப்பா. அனைத்தும் நீங்கள் சொந்தம் என்று நினைக்கின்றீர்கள் அப்பனே. எப்படியப்பா? இதுதான் தன்னை அறிதலா?????? 

அப்பனே இதனால் மனிதன் இன்னும் மூட நம்பிக்கையிலே ஒளிந்திருக்கின்றான் அப்பனே. அதனால்தான் வெற்றி பெறுவதே இல்லை. பக்தியில் இருந்து கொண்டு. அதைச் செய்தால் இதை நடக்கும். அவைச் சொன்னால் இவை நடக்கும் என்று. அப்பனே அதாவது அவனைப் பற்றியே தெரியாதபொழுது, அதாவது அப்பனே இவ்மந்திரத்தைக் கூறினால் அனைத்தும் கிடைக்குமாம் அப்பனே. 

விசித்திரமானவன்தான் மனிதன் என்பேன் அப்பனே. மனிதன் சொல்வது அப்பனே அதாவது பக்தியை நோக்கி பொய்களாக சொல்லிக்கொண்டிருப்பான் அப்பனே. பணத்தை ஈட்டுவான் என்பேன் அப்பனே. ஆனால் அவ் பணமே அவந்தனக்கு கடைசியில் திசை திருப்பி , அவன் கர்மத்தை சேர்த்துக்கொண்டு அப்பனே பல கஷ்டங்களைக் கொடுத்து அப்பனே மீண்டும் இறைவனிடத்தில் வருவானப்பா. எப்படியப்பா தர்மம் பின் நியாயம் அப்பனே? இவ்கலியுகத்தில் தர்மம், நியாயம் இவை எல்லாம் மறைந்துகொண்டே வருமப்பா. அப்பனே ஆனால் அப்பொழுது இறைவனை விட்டு விட்டால் அப்பனே இது நியாயமா? 

அப்பனே …( தனி வாக்குகள் ) 

அப்பனே விதியில் என்ன உள்ளது என்பதைத் தெரிந்து கொண்டால் ஆனால் தெரிவதே இல்லை. 

( இந்த வாக்கு மிக முக்கியமான ஒன்று. உங்கள் விதி என்ன என்று அறிவது மிக அவசியம். அதற்கு புண்ணியங்கள் அவசியம். நீங்கள் செய்யும் புண்ணியங்களே உங்கள் விதியை குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர் மூலம் உணர வைக்கும். அதன் பின் தோல்வி என்பதே கிடையாது. எந்நாளும் வெற்றியே. புண்ணியங்கள் அவசியம் செய்க.) 

( அடியவருக்கு மீண்டும் தனி வாக்குகள் ) 

அப்பனே இதனால்தான் அப்பனே மனிதன் புரிந்து கொள்ளாமல் வாழ்ந்து வருகின்றான். அதாவது பழமொழியும் உண்டு. தன் வினையும் தன்னைச் சுடும் என்று. 

அப்பனே பிறர் வினையும் தன்னைச் சுடும். இதற்கு எடுத்துக்காட்டாக நீ நிச்சயம் விளக்கம் தர வேண்டும்.

அடியவர் 1:- பணம் ஏமாற்றி…

அடியவர் 2:- பிறர் தவறு…

அடியவர் 3:- மற்றவர்கள் தவறான ஒரு செயல் செய்து அதில் வரும் பணத்தை எனக்கு கொடுத்து , அந்த பணத்தை நாம் நல்லது செய்கின்றோம். ஆனால் ( அந்த பாவ பலன்களை ) அதற்கு பலன் நம்ம அனுபவிக்குறோம். 

நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர்:-  அப்பனே இதுதான் செல்கள் பரிமாற்றம். இதனால்தான் செல்களை அழிப்பதற்கு முருங்கை இலைக் கூட பயன்படுத்த வேண்டும் என்பேன் அப்பனே. மாதத்திற்கு ஒரு முறை நிச்சயம் அப்பனே வெறும் வயிற்றில் நல்முறையாகவே கசக்கி பின் குடித்து விட்டாலே , பின் உடம்பில் உள்ள செல்கள் அதிலே அதாவது பிறர் மீது அண்டாதப்பா.  அப்பனே ஆனால் தெரிந்தும் செய்யக்கூடாது. 

சுவடி ஓதும் மைந்தன்:- குருநாதர் சொல்லிவிட்டார் ( சூட்சுமத்தை ) ஆனால் தெரிந்து ( கர்மங்களை ) செய்யக்கூடாது. ஐயா புரியுதுங்களா? 

அடியவர்கள் :- புரியுது. 

நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர்:-  அப்பனே இயக்கம் ஏன்? அதாவது அப்பனே பின் வண்டி அதாவது ஓட்டுனராக நீயே இருக்கின்றாய் அப்பனே. ( வாகனத்தை ) ஓட்டி , இதனால் தானாகவே எதையாவது கண்டால் அப்பனே கால்கள் தானாகவே போய் விடுகின்றது. ஏன், எதற்கு? 

சுவடி ஓதும் மைந்தன் :- வண்டி ஓட்டும் பொழுது ஏதாவது குறுக்கே வந்தால் உடனே பிரேக் பிடிக்கின்றீர்கள்.உங்கள் கால்கள் தானாக போகின்றது. எதற்கு தானாக ( பிரேக் பிடிக்க ) போகின்றது என்று கேட்கின்றார் ( நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர்). யாராவது ( பதில் ) சொல்லலாம். 

அடியவர் :- மிதித்துக் கொன்று விடக்கூடாது என்று…

நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர்:-  அப்பனே யோசித்துத்தான் அப்பொழுது நீ காலை அங்கே வைப்பாயா? 

அடியவர்கள்:- தானாகவே கால்கள் அங்கு போகும் ( பிரேக் பிடிக்க). 

நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர்:-  அப்பனே, ஏன்? இதற்குத்தான் பதிலளிக்கச் சொன்னேன். 

அடியவர்கள் :- ( அமைதி ) 

நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர்:-  அப்பனே இதன்மூலம் நீங்கள் உணரலாம் என்பேன் அப்பனே. பின் உயிர்தான் உங்களுக்குச் சொந்தம். உடம்புத்தான் அனைத்தும் இறைவன் கட்டுப்பாட்டில் அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன்:- இதிலிருந்தே நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். எல்லாமே இறைவன் கட்டுப்பாட்டில் நடக்கும் நிகழ்வுகள். இறைவன்தான் அந்த நேரங்களில் அப்படி நம்மை இயக்குகின்றார் (நாம் யோசிக்காமலேயே).

நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர்:-  அப்பனே அப்பொழுது கூட இறைவன் அமைதியாக விட்டுவிடுவதில்லை அப்பனே. படைத்து எவை என்று அறிய அறிய திடீரென்று அப்பனே ஏதாவது மனிதனால் பாவம் என்பதற்காக ( மனிதனில் உடலில் ) ஒரு செல்லைப் புகுத்தி விடுகின்றான் அப்பனே. அதையும் மீறிச் செய்தால்தான் அப்பனே கஷ்டங்கள். 

( அடியவர்களே, இறைவன் மனிதனைப் படைக்கும் பொழுதே இது பாவம் என்று அறிவுறுத்த ஒரு செல்லை மனிதனின் உடம்பில் வைத்துப் படைக்கின்றார். அந்த செல் மனிதனுக்கு எது பாவம் என்று உணர்த்திக்கொண்டே இருக்கும். அந்த செல் மூலம் உள் மனசாட்சியாக வழியாக வ உணர்த்துதலை மீறி மனிதன் செயல்கள் செய்யும் போது அது பாவமாக மாறுகின்றது. உதாரணம் :- உயிரைக் கொல்லக்கூடாது என்று மனம் [ அந்த இறைவன் புகுத்திய செல்கள் மூலம் ] . சொல்லும். அதையும் மீறி மாமிசம்/அசைவ உணவு உண்டால் அது பாவமாகி கடுமையான கர்மாவாக வடிவெடுத்து , பழி வாங்கும் நவ கிரகங்கள் மூலம் கஷ்டங்கள் வடிவமாக. அசைவம் தவிர்க்கவும். மனசாட்சியே இறைவன். ) 

நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர்:-  அப்பனே சில பேர்கள், அதாவது சில பேர்கள் இல்லை. பல பேர்கள் அப்பனே அதை உபயோகிப்பதே இல்லை அப்பனே. மீண்டும் இவ்ஆன்மா வந்து விடுகின்றது இவ்வுலகத்திற்கு அப்பனே.

அதனால்தான் அப்பனே, தன்னை உணருங்கள், தன்னை உணருங்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கின்றேன் அப்பனே. அதனால்தான் புதுப்புது வார்த்தைகளைச் சொல்லி அப்பனே, மனிதனைத் திருத்தி அப்பனே நல்லொழுக்கத்தோடு அப்பனே கர்மாவும் இல்லாமல் இவ்சித்தர்கள் வாழ வழி வகை செய்வார்கள் என்பேன் அப்பனே. அதனால் அப்பனே யான் ஒன்றும் சொல்லமாட்டேன் அப்பனே. அங்கு செல், இங்கு செல் அப்பனே. ஆனாலும் முதலில் கர்மத்தை நீக்கினால்தான் அப்பனே பின் வாழ்க்கை உண்டு என்பது அர்த்தம்.

அப்பனே விரும்பியதை எல்லாம் கொடுத்துவிட்டால் அப்பனே நீதானப்பா இறைவன். அப்பனே இது சரியா ? தவறா?  

அடியவர்கள் :- ( சிறு புரிதல் பேச்சுக்கள் )

நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர்:- அப்பனே துன்பம் ஒன்று வைத்தால்தான் அப்பனே இறைவனை நோக்கி வருகின்றான் அப்பனே. ஏன் அப்பனே , அனைவருக்கும் ஏதோ ஒரு துன்பமப்பா. அதனால்தான் ஓடி வந்து வாக்குகள் கேட்டுக்கொண்டு இருக்கின்றீர்கள். அப்பனே. பின் அனைத்தும் கொடுத்துவைட்டால் அப்பனே நீங்கள் வருவீர்களா என்ன அப்பனே. அதனால் இறைவன் உங்களைவிடக் கணக்குப் போடுவதில் வல்லவனப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா ஏன் இங்கு அனைவரும் வந்துள்ளீர்கள் ?

அடியவர்கள் :- துன்பங்கள், பிரச்சினைகள்…

நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர்:-  அப்பனே இவை எல்லாம் புரிந்துகொண்டால்தான் வருங்காலத்தில் வாழ முடியும். அதுவும் கலியுகத்தில் அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன் :- ( சிறு புரிதல் விளக்கம் ) 

நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர்:-  அப்பனே புரிந்து கொள்ளாமல் வாழ்ந்தால் அப்பனே, இறைவனைக் கூட பார்க்க முடியாது அப்பனே. 

அப்பனே இறைவனைப் பார்த்து விட்டால் அப்பனே , தானாகவே அச்செல்லானது ஒட்டிக்கொள்ளும் என்பேன் அப்பனே. காந்தம் போல் இறைவனை நோக்கி. பின் மோட்சம்தான்.

சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கம் அளித்தார்கள். இறைவனால் உடலில் புகுத்தப்பட்ட ஒரு செல் இறைவனின் தரிசனம் உணர்ந்து பார்த்தமையால் , நம் உடலில் இருந்து இறைவனிடத்தில் ஒட்டிக்கொள்ளும். உடனே மோட்சம் கிட்டும் அப்பிறவியிலேயே.) 

நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர்:-  அப்பனே இதனால்தான் அப்பா, அங்கு சென்றால் , இங்கு சென்றால் , ( அவ்செல்கள் ) அப்பனே சில வகையில் மாற்றம் அடையும் என்பேன் அப்பனே. மீண்டும் வந்துவிடும் அப்பா. 

( ஒரு அடியவருக்குத் தனி வாக்குகள் ) 

( நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர் அருளால் March 2024 மதுரையில் நடந்த கேள்வி,பதில் வாக்குகள் தொடரும்….) 

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!

Thursday, August 22, 2024

சித்தர்கள் ஆட்சி - 389 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 5




இறைவா !!!!! நீயே அனைத்தும்.

அன்புடன் அகத்திய மாமுனிவர் - மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 5


( இவ் தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்:- 

சித்தர்கள் ஆட்சி -  379 - மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 1

சித்தர்கள் ஆட்சி -  381 - மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 2

சித்தர்கள் ஆட்சி -  382 - மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 3

சித்தர்கள் ஆட்சி -  383- மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 4 )

நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இதனால் பல விசயங்களை அறிந்து கொள்ளவில்லை என்பேன் அப்பனே. ஆனாலும் புண்ணியங்கள் சேமிப்புகளாக வைத்துக்கொண்டே வருகின்றது. 


அப்பனே அதிகம் புண்ணியங்கள் செய்தாலும் இறைவன் அழைத்துக் கொள்வான் தன்னிடத்தில். 


அதிகம் பாவம் செய்தாலும் இறைவன் அழைத்துக்கொள்வான். அப்பொழுது எப்படி வாழ்வது என்று நீங்கள் சிந்தித்தீர்களா? 


அடியவர்கள்:- ( அமைதி )

சுவடி ஓதும் மைந்தன்:-  சில விளக்கங்கள்.


அடியவர்:- அதுதான் சொர்க்கம், நரகம் என்பதா? 


அடியவர் 1:- புண்ணியம் அதிகமாகிவிட்டால் இறைவன் அழைத்துக்கொள்வார். பாவம் அதிகமாகிவிட்டால் அந்த ஆத்மாவை அழித்து…


நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர்:- அப்பனே கண்களில் ஓரத்தில் இரு செல்கள் இருக்குமப்பா. அப்பனே பாவம் , புண்ணியம் என்பது கூட. புண்ணியப் பாதையில் சென்று கொண்டே இருந்தால் மற்றொரு செல்லானது அப்பனே கஷ்டத்தை ஆரம்பிக்கும் அப்பா. இதே போலத்தான் அப்பனே சமநிலைப் படுத்தி , ஒவ்வொன்றாக அப்பனே சமநிலைப் படுத்திக் கொண்டே வரும் என்பேன் அப்பனே. இதனால் இன்பம் , துன்பம் எவை என்று அறிய அறிய சில காலம் துன்பம் வருவது,  அப்பனே இன்பமும் வருமப்பா. இது உண்மை. 


சுவடி ஓதும் மைந்தன் :- சில புரிதல் விளக்கங்கள்.


நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இவை எல்லாம் யாராலும் மாற்ற முடியாதப்பா. எங்களைப்போன்ற சித்தர்களால் மட்டுமே. 


அப்பனே நீங்கள் அனைவரும் இறைவன் கட்டுப்பாட்டில் அப்பனே. அப்பனே அதனால் யான் பெரியவன், அனைத்தும் எந்தனுக்குத் தெரியும் என்றெல்லாம் பின் வாய் பேசலாம் என்பேன் அப்பனே.  இறைவனுக்குத் தெரியும் என்பேன் அப்பனே. 


அப்பனே இதனால் ஏன் அப்பா திருமணங்கள் நீட்டிக்கொண்டே போகின்றது? எந்தனுக்குத் திருமணம் ஆகவில்லையே என்று சிலரும் ஏங்கிக்கொள்வார்கள் என்பேன் அப்பனே. ஆனால் ராகு கேதுக்களின் தன்மை அதிகமாக இருக்கும் பொழுது சுலபமாக நடக்காதப்பா. பிரச்சனைகள் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி இருபானம் நவா ( 29ஆம் வயதில் ) அப்பொழுது நடந்தால்தான் பின் தீர்க ஆயுள் என்பேன். ஆனாலும் இப்பொழுது நிலமையில் தாய் தந்தையர் அப்பனே எடுத்து ஏதோ நடத்திவிடுவோம் என்று அப்பனே ( திருமணம் 29 வயதிற்குள் செய்து விடுகின்றனர்). ஆனால் இருபான் நவயின் மேலே ( 29 வயதிற்கு மேல் ) துன்பம் பல உண்டப்பா அப்பனே. பல பேருக்கு இப்படித்தான் இங்கு நடந்து கொண்டிருக்கின்றது.


அப்பனே திருமண பாக்கியம் வேண்டி…


சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, யார் எல்லாம் திருமணம் வேண்டும் என்று வந்தவர்கள் ( சுவடியின் ) முன்னே வாருங்கள். 


திருமணம் வேண்டி வந்த அடியவர்கள்:- (எழுந்து முன்னே வந்தனர்)


நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர்:- திருமணம் ஆகியும் பின் பிரச்சினைகள்…


சுவடி ஓதும் மைந்தன்:- ஐயா , திருமணம் ஆகியும் பிரச்சினை உள்ளவங்க வாருங்கள் ( சுவடியின் முன்னே ). 


நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர்:- பின் குழந்தை பாக்கியம்…


சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா குழந்தை பாக்கியம் வேண்டி வந்தவர்கள் ( சுவடியின் முன்னே வரவும் )


நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இங்கு ஒருவன் கேள். 

( எழுந்து வந்த அடியவர்களையே கேள்வி கேளுங்கள் என்று குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளினார்கள்) 


அடியவர் 1:- ( கேள்வி கேட்க முற்பட்டார்.அதற்குள்…):


நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர்:-  அப்பனே ஏற்கனவே உரைத்து விட்டேன். நீ அப்படியே நில்.


அடியவர் 2:- கேட்கச்சொன்னாங்க


நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர்:-  அப்பனே ஏன் இதை யான் கேட்கச் சொன்னேன் அப்பனே. எந்தனுக்குத் தெரியாதா? 


அடியவர் 2:- ( அமைதி ) 


சுவடி ஓதும் மைந்தன்:- ஐயா இதுக்கு பதில் சொன்னால்தான் அடுத்து ( வாக்கு அகத்திய மாமுனிவர் உரைப்பார்கள்). சொல்லுங்க ஐயா. 


அடியவர் 2:- ஐயா வழி காட்ட வேண்டும். 


நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர்:-  அப்பனே இதையும் சொல்லிவிட்டேன் அப்பனே. பின் வழிகள் காட்டவில்லை என்றால் அப்பனே நீ எங்கேயோ போய் இருப்பாய் அப்பனே. ( கருணைக்கடல் இவ் அடியவருக்குத் தனி வாக்குகள் உரைத்தார்கள் ). 



நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர்:- 

வருங்காலத்தில் பக்தி என்ற பெயரில் நுழைந்து பெண்களை ஏமாற்றுவானப்பா. 

( இவ்வாக்கு இங்கு பொது வாக்காக உரைத்தது.  ) 


அப்பனே நலமாக வாழ்க்கை உண்டு அப்பனே என் ஆசிகளாலும் அன்பினாலும். 


அப்பனே நிச்சயம் என் பேச்சைக் கேட்காதவர்கள் அப்பனே கஷ்டத்திற்கு உள் ஆவார்கள் அப்பா. அப்பனே யாங்கள் சொன்னால் ஈசனே ஏற்றுக்கொள்வானப்பா. நீ ஏனப்பா? இதனால்தான் அப்பனே, மனிதன் சொல்வதைக் கேட்டுவிட்டாய் அப்பனே. 


( இந்த வாக்கை , இதுவரை அகத்திய மாமுனிவர் மைந்தன் திரு.ஜானகிராமன் அவர்களிடம் சுவடி வாக்குகள் வாங்கிய அனைவருக்கும் தனக்கான வாக்காக எண்ணி இதுவரை குருநாதர் உரைத்த வாக்கை மீண்டும் மீண்டும் கேட்டு அதை உடனே செயல்படுத்துக. வாக்கை மீண்டும் கேட்காத பலர் அதில் குருநாதர் உரைத்ததைச் செயல்படுத்தாமல் கஷ்டங்கள் படுகின்றனர்,  தன் கர்மங்களை எப்படிப் போக்குவது? ஏன் என்றே புரியாமல்.  உங்களுக்கான வாக்குகளை நீங்கள் தட்டச்சு செய்து வைத்துக்கொள்வது உங்களுக்கு அதி மிக்க நன்மை தரும். தட்டச்சு செய்து அதன்படி செயலபடவும்.) 


துன்பங்கள் இருந்தால்தான் கர்மத்தை நீக்க முடியும் என்பேன் அப்பனே. (கர்மத்தை நீக்கி விட்டதால்) மெது மெதுவாக நல்லது நடக்கும் அப்பா.


இதனால் அனைவருக்குமே எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அப்பனே அனைத்திற்கும் காரணம் இறைவன் என்று யார் ஒருவன் சொல்கின்றானோ, அப்பனே ( அவன்தனை ) இறைவனே காப்பாற்றி விடுவான். 


( அடியவர்களே இந்த வாக்கு மகத்தான வாக்கு.  நம் அனைவருக்குமே என்று உணர்க.) 


( நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர் அருளால் March 2024 மதுரையில் நடந்த கேள்வி,பதில் வாக்குகள் தொடரும்….) 


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!


சர்வம் சிவார்ப்பணம்!!!!!

Friday, August 16, 2024

சித்தர்கள் ஆட்சி - 388 - ஈரேழு உலகத்தையும் காத்து அருளக் கூடிய மன்னன் நமச்சிவாயன் ஆதி ஈசனாரின் முதல் சட்டம்!!!!! மாமிசம் , அசைவம் உண்பவர்களுக்கு அகத்திய மாமுனிவரின் கடைசி எச்சரிக்கை!!!!!


 



இறைவா நீயே அனைத்தும்

அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு!

Source: சித்தன் அருள் - 1662 - முன்னைநாதர் ஆலயம்!

22/7/2024 அன்று குருநாதர் அகத்தியப் பெருமான் உரைத்த பொது வாக்கு - வாக்குரைத்த ஸ்தலம்: முன்னேச்சுவரம். அருள்மிகு வடிவாம்பிகை சமேத முன்னைநாதர் ஆலயம்.  சிலாபம்.குருநாகல். புத்தளம் மாவட்டம். வட மேற்கு மாகாணம். ஸ்ரீ லங்கா.

ஆதிமூலனின் பொற் கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!

அப்பனே எம்முடைய ஆசீர்வாதங்களப்பா!!!

சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே 

ஒரு உயிரை பின் கொன்று அப்பனே அதன் மாமிசத்தை உண்ணாதீர்கள் உண்ணாதீர்கள் என்றெல்லாம் அப்பனே 

ஏன் எதற்கு அப்பனே பின் மாமிசத்தை அப்பனே பின் உண்டால் அப்பனே எதை என்று அறிய அறிய ஆனால் முன்னேறவும் முடியாதப்பா 

அப்பனே முன்னேற்றம் போல் இருக்கும் என்பேன் அப்பனே ஆனால் அனைத்தையும் அழித்துவிடும் என்பேன் அப்பனே 

ஆனாலும் சிலர் கேள்வி கேட்பார்களப்பா!!!

பின் அதாவது அவன் உண்ணுகின்றானே!!...... அவன் நன்றாகத்தான் இருக்கின்றான் என்று சொல்வான் அப்பனே... நன்றாகத்தான் இருக்கின்றான் என்று ஆனாலும் அப்பனே அவனுடைய விதி பின் எங்களை அதாவது யாங்கள் தான் ஆராய்ந்து அப்பனே எவை என்று கூட நகைப்போம்...

இப்படி பேசுபவர்கள் எல்லாம் அப்பனே முட்டாள்கள் என்பேன் அப்பனே 

அறிந்தும் கூட பைத்தியக்காரன் என்பேன் அப்பனே..

பின் எவை என்றும் புரிய புரிய அப்பனே இதனால் அப்பனே நீதி தர்மத்தை காப்பாற்றுங்கள் என்பேன் அப்பனே.... இவையெல்லாம் காப்பாற்றினால் தான் அப்பனே நிச்சயம் அப்பனே நீடுழி வாழ முடியுமப்பா!!!

இல்லையென்றால் அப்பனே நிச்சயம் வாழ முடியாதப்பா!!!

சொல்லிவிட்டேன் அப்பனே!!

முதலில் அப்பனே என் பக்தர்கள் அப்பனே முதலில் என்ன எவை என்று அறிய அறிய... இப் புவி தன்னில் வாழ்வதற்கு அப்பனே முதலில் பின் தெரிந்து கொள்ளுங்கள் என்பேன் அப்பனே 

தெரியாமல் அப்பனே எவை சொன்னாலும் எவ் மந்திரங்கள் சொன்னாலும் அப்பனே எதை என்று கூற பின் எங்கு சென்றாலும் அப்பனே ஒன்று நடக்காது என்பதெல்லாம் சொல்லிக்கொண்டே இருக்கின்றோம் அப்பனே 

ஆனாலும் அப்பனே அகத்தியனிடம் அன்பாக வந்து விட்டீர்கள் அப்பனே... ஆனாலும் அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே எவை என்று அறிய அறிய 

முதலில் அப்பனே நீதி நேர்மை நியாயத்தோடு அப்பனே தர்மத்தை கடைபிடியுங்கள் என்பேன் அப்பனே 

மாமிசத்தை உண்ணாதீர்கள் என்பேன் அப்பனே 

அப்பனே எவன் ஒருவன் மாமிசத்தை உண்ணுகின்றானோ அப்பனே பின் எங்களை வணங்கியும் அப்பனே பிரயோஜனம் இல்லையப்பா!!! பிரயோஜனமில்லை!!!

அப்பனே இதனால் மண்ணை தின்பது போல் என்பேன் அப்பனே!!!

ஆனாலும் அப்பனே பின் எவ்வாறு எதை என்று அறிய அகத்தியன்!!!

எவை என்று அறிய அறியப்பின் மூலன் (திருமூலர்) இன்னும் அப்பனே பின் கந்தன் பல பல வகைகளும் கூட அப்பனே எடுத்துரைக்கின்றார்கள் என்பேன் அப்பனே

ஆனாலும் அப்பனே இதை விட்டு விடுகின்றார்கள் மாமிசத்தை உண்ணக்கூடாது என்று அப்பனே!!!

ஆனால் இதுதானப்பா கர்மா அப்பனே!!!

ஆனால் காசுகள் வந்துவிட்டால் போதும் என்று எண்ணுகின்றான் மனிதன் அப்பனே அதாவது புத்திகெட்ட மனிதனப்பா....

அப்பனே மாமிசத்தை உண்டால் எதைக் கற்றுக் கொண்டாலும் அப்பனே வீணப்பா!!!

அப்பனே மாமிசத்தை உண்பவர் பின் தலைகீழாக மாறும் என்பேன் அப்பனே பல பல பின் எவை என்று அறிய அறிய அப்பனே பல பல நபர்களும் பின் எங்கெங்கே எவை என்று அறிய அப்பனே..... பார்த்தீர்களா அப்பனே பின் பல வகையில் கூட அப்பனே மாமிசத்தை உண்டு தான் வந்து கொண்டிருக்கின்றார்கள் அப்பனே...

ஆனாலும் அப்பனே அவை தன் அப்பனே... அவர்கள் முன்னேறவும் முடியாது அப்பனே அவர்களைச் சார்ந்தோரும் முன்னேற முடியாது.... அப்பனே இவ் நாட்டையும் முன்னேற்ற பாதையில் அப்பனே செலுத்திட முடியாதப்பா!!

அப்பனே பின் எவை என்று அறிய அறிய இதனால் அப்பனே முதலில் அதை நீக்கினாலே போதுமானதப்பா 

அப்பனே தானாகவே அப்பனே பின் எவை என்று அறிய அறிய அப்பனே... அனைத்து உறுப்புகளும் செயல்பட்டு அப்பனே பின் புத்திகள் வரும் அப்பா....

அப்பனே இதனால் அப்பனே எப்படி பேசுவது என்பதெல்லாம் அப்பனே எவை என்று அறிய அறிய கூர்ந்து ஆராய்ந்து அப்பனே பேசிட்டு பின் வார்த்தையினாலே ஜெயித்து விடலாம் என்பேன் அப்பனே 

எதை என்று அறிய அப்பனே இதனால் அப்பனே பின் எதை என்று அறிய அறிய அதாவது நீ எவை என்று ஒரு உயிரைக் கொல்கின்றாய் அல்லவா... அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே அதன் மூலமாகவே அப்பனே உந்தனுக்கும் அதே போல தான் கதி!!!

திடீரென்று எதை என்று அறிய அப்பனே எதை என்று புரிய புரிய அப்பனே

இதனால் அப்பனே வருகின்றது அப்பனே.....

அனைவரும் அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் 

சட்டம் இயற்றுகின்றார்கள் இவ்வுலகத்தில் அப்பனே 

ஆனால் ஈசனும் சட்டம் இயற்றிக் கொண்டுதான் இருக்கின்றான் அப்பனே 

ஏன்? எதற்கு? எதை பின் எவை என்று உண்ணுகின்றானோ அவந்தன் எதை என்று கூட எப்படி?? எதை என்று அறிய அறிய எப்படி வெட்டுகின்றானோ அதேபோலத்தான் அப்பனே வரும் காலங்களில் அப்பன மனிதனும் கூட அப்படித்தான் என்பேன் அப்பனே...

(வாயில்லா ஜீவராசிகளை எப்படி வெட்டுகின்றார்களோ அவர்களுக்கு அதேபோலத்தான் அவர்களும் வெட்டுப்பட்டு அனுபவிக்க வேண்டும் என்பது ஈசனுடைய சட்டம்)

இதுவும் ஈசனுடைய சட்டம்தான் என்பேன் அப்பனே !!!

பின் எதை என்று புரிய புரிய அப்பனே இதனால் அப்பனே மனிதர்களுக்கு மட்டும் தான் சட்டம்!!!

எவை என்று அறிய அறிய ஈசனும் இனிமேல் அப்பனே சட்டத்தை போடுவானப்பா அப்பனே.....

அவ் சட்டத்தை மிஞ்சினால் அவ்வளவுதான் என்பேன் அப்பனே !!

ஆபத்துக்கள் மிக மிக அதிகம் அப்பா...

அப்பனே ஏனென்றால் அப்பனே கட்டுப்பாடுகள் ஈசன்!!!!

(நேரடியாக ஈசனின் கட்டுப்பாட்டில் சட்டங்கள் இதனால் அதன் விதிகள் கடுமையாக இருக்கும்)

அப்பனே ஏனென்றால் எவை என்று கூற ஒருவனை நியமித்தாலும் அப்பனே பின் அதாவது இவ் நாட்டை எதை என்று அறிய அறிய ஆள அரசன் ஆக்கினாலும் அப்பனே அவன் பேச்சை யாரும் மதிக்கப் போவதில்லை என்பேன் அப்பனே 

அதனால் ஈசனே அப்பனே கட்டளை பின் சட்டங்கள் இடுவான் என்பேன் அப்பனே 

இவ்வாறு தான் அப்பனே முதலில்.... இனிமேல் சொல்கின்றேன் அப்பனே இங்கிருந்தே அப்பனே எவை என்றும் அறிய அறிய 

யார் ஒருவன் மற்ற உயிரை கொன்று அப்பனே சாப்பிடுகின்றானோ... அவந்தனை  அப்பனே அப்படியே மனிதன் கொல்வான் அப்பா!!!

அப்பனே இதை தெரிந்து கொள்ள வேண்டும் அப்பனே எப்படி கத்தி!!!. பின் கத்தி கதறி எவை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய அப்பனே (ஜீவராசிகளை வெட்டி வீழ்த்துவது)

பின் ஜீவராசிகள் விழுகின்றதோ!!!!!... அதேபோலத்தான் அப்பனே பின் கைகளும் உடையுமப்பா!! கால்களும் உடையும் அப்பா

அதை உண்ணுபவர்களுக்கும் அப்பனே பின் புத்திகளும் தேயுமப்பா... அதை மட்டுமில்லாமல் அப்பனே பின் எவை என்று கூற பற்களும் இருக்காதப்பா அவை மட்டும் இல்லாமல் கண்களும் மங்கிப் போகும் அப்பா மங்கிப்போகும் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே 

இது ஈசனின் முதல் சட்டம் என்பேன் அப்பனே எவை என்று அறிய அறிய 

இதனால் அப்பனே பின் பரிபூரணமாக எதை என்று கூற அப்பனே பின் அமைதியாக பின் இறைவனை வணங்குங்கள் என்பேன் அப்பனே 

இறைவனே அனைத்தும் செய்வான் என்பேன் அப்பனே 

திருந்துங்கள் திருந்துங்கள் அப்பனே

பின் திருந்தாவிடில் அப்பனே!!!

பின் எச்சரிக்கை!!!!!.... கடைசியாகவே!!!...... விடுவிக்கின்றேன்!!!

(Last warning கடைசி எச்சரிக்கை) 

எதை என்று கூட இங்கிருந்தே எச்சரிக்கையை விடுகின்றேன் அப்பனே!!!!

ஆசிகள்!!!  ஆசிகள் இன்னும் விளக்குகின்றேன் என் பக்தர்களுக்கு !!!

ஆசிகள் ஆசிகளப்பா!!! ஆசிகள்!!

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!