“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Sunday, June 30, 2024

சித்தர்கள் ஆட்சி - 381:- அன்புடன் அகத்திய மாமுனிவர் - மதுரை வாக்கு ( March 2024) - பகுதி 2


 

இறைவா!!!! அனைத்தும் நீ


அன்புடன் அகத்திய மாமுனிவர் - மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 2


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:-அப்பனே இதையும் நானே எடுத்துரைத்து விட்டேன். 


அடியவர்:- துன்பப்பட்டால்தான் இறைவனை..


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே இதே போலத்தான் அப்பனே உன் வாயை அமைதியாக வைத்திருந்தால் துன்பமே வந்திருக்காது அப்பனே. ( தனி வாக்கு) 


அடியவர்:- ( சில கேள்விகள் , தனி வாக்கு)


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே உன்னை யான் எழச்சொன்னேன். அவன் எதற்கு எழுந்தான் கூறு? 



அடியவர்:- ( சில உரையாடல்கள், தனி வாக்கு) 


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அதனால்தான் அப்பனே தகுதி ஒன்று வளர்த்துக் கொள்ள வேண்டும் அனைவருமே அப்பனே. தகுதி வளர்த்துக்கொள்வதற்குத் துன்பம் தேவைப்படுகின்றதப்பா. 


அடியவர்:- கண்டிப்பாகத் துன்பம் கொடுக்கவேண்டும் ஐயா. துன்பம் கொடுத்தால்தான் திருந்தமுடியும். 


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- ( சாவின் விளிம்பிற்குச் சென்ற ஒருவரை நம் குருநாதர் கருணைக் கடல் அகத்திய மாமுனிவர் பிழைக்க வைத்துள்ளார்கள். இது அந்த அடியவருக்கே புதிய தகவல் இங்கு.) 


சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன், அடியவர்கள்:- ( பல உரையாடல்கள் தனி வாக்கு ) 


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- இதனால் தான் அப்பனே இறைவன் பார்த்துக்கொண்டே இருக்கின்றான் அப்பனே. யார் யாருக்கு எப்பொழுது பின் கொடுக்க வேண்டும் என்று, அப்பனே அப்பொழுது கொடுப்பான் அப்பனே. அப்பொழுது வாங்கிக்கொண்டால் அப்பனே நிச்சயம் அப்பனே பொறுத்தார் பூமி ஆள்வார் என்ற பழமொழியும் உண்டு அப்பனே. தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே. இருவரும் உட்கார். ( நின்ற இருவரையும் குருநாதர் அமரச் சொன்னார்கள்) 


அப்பனே பின் தொடர்சியாகக்கூறு?

( முன்பு தொடங்கிய உரையாடலை மீண்டும் தொடங்க உத்தரவு இட்டார்கள்) 


அடியவர்:-  ( அங்கு உள்ள அடியவர்களைப் பார்த்து ) ஐயா ( நீங்கள் அனைவரும் ) உங்களை எப்படி நீங்கள் அறிகின்றீர்கள். உணர்கின்றீர்கள். ஒவ்வொருவராக்க் கூறுங்கள்? 



அடியவர் 1  :- அகத்தியர் அருள் இல்லாமல் நாங்கள் இல்லை


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இதுதான் அப்பனே முதலில் அப்பனே தன்னை உணர வேண்டும் அப்பனே. யாரும் தன்னை உணரவில்லை அப்பா இங்கு இருப்பவர்கள் சொல்லிவிட்டேன் அப்பனே. அப்பொழுது துன்பங்கள் எப்படியப்பா வராமல் போகும்? சொல்லுங்கள் நீங்களே? 


சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் :- ( விளக்கம் ) 


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே உன்னை நீ அறிந்தால் அப்பனே எப்படி இருப்பாய் அப்பா நீ கூறு? 


அடியவர்:- என்னுடைய அறிவு முழுமை ஆகிவிடும். இறைவனை உணரலாம். 


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இதுவரை அப்பனே இறைவனை நீ உணரவே இல்லை அப்பனே நீ. அப்படித்தானே பொருள் இது? 


அடியவர்:- ஆத்மாவை இன்னும் முழுமையாகத் தூய்மைப் படுத்துகின்ற முயற்சியில்….


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே ஆத்மா என்றால் என்ன?


அடியவர்:- அணு…


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இதைப்பற்றி யான் கேட்கவே இல்லை அப்பனே. 


அடியவர்:- ( அமைதி ) 


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே ஆன்மா அப்பொழுது என்ன? 


அடியவர்:- உயிர்த்துகள்கள் எல்லாம் சேர்ந்தது..


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே ஆத்மா என்பதுதான்டா ஆன்மா. 


அடியவர்:- ( சில உரையாடல்கள் ) 


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே ஒவ்வொரு நாளும் நீங்கள் அனைவருமே செத்துச் செத்துத்தான் வந்து கொண்டியிருக்கின்றீர்கள் அப்பனே. இதற்கு யாராவது ஒருவன் சரியாகப் பதில் கூற வேண்டும்? 


அடியவர்:- செல்கள் அழிந்து பிறக்கின்றது. 


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே சரியான பதில் இது இல்லை. 


அடியவர் 2 :- தினசரி உறக்கம் தான் , நாம் இயங்குவது அறிவினை (தத்துவம்) மூலம் இயங்குகின்றோம். அவ் அறிவினை தினசரி ஆன்மாவைத் தூங்க வைத்து மறுநாள் தேவையான சக்தி கொடுத்து இயங்க வைக்கின்றது….


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இதுவும் சரியான பதில் அப்பனே ஓரளவுக்குத்தான் என்பேன் அப்பனே. ஆனால் உங்களுக்குத் தெரியாதப்பா.  யானே கூறுகின்றேன் அப்பனே. இப்பொழுது ஆத்மா என்று சொல்லிவிட்டான் அப்பனே. நீங்கள் அனைவருமே பாவ புண்ணியம் செய்தவர்கள்தான் அப்பனே. அப்படி இருந்தால்தான் புண்ணியம் , பாவம் எதை என்றும் புரிந்து புரிந்து உலகத்தில் அப்பனே பிறக்க முடியும் அப்பனே. 


( அடியவர்களே , இப்போது உலகம் அறியாத உங்களின் தூக்கம் குறித்த ரகசியம் ஒன்றை உரைத்து அருளினார்கள் கருணைக் கடல். ) 


நீங்கள் அனைவரும் உறங்கிக்கொண்டுள்ளீர்கள் அல்லவா அப்பனே அப்பொழுது இவ்ஆன்மா அப்பனே இறைவனை நோக்கிச்சென்று யான் இவ்வளவு நல்லது செய்தேன்,  இவ்வளவு தீயது செய்தேன் என்றெல்லாம் அப்பனே அங்கு கைக்கட்டி பதில் கூறி வருமப்பா. இதனால்தான் அப்பனே புண்ணியங்கள் செய்யுங்கள்,  செய்யுங்கள் என்றெல்லாம் ( யாங்கள் தொடர்ந்து கூறுகின்றோம்). 


இவ் ஆன்மா அங்கு செல்லும் பொழுது யான் புண்ணியம் செய்திருக்கின்றேன் என்று அப்பனே இறைவன் எழுதிக்கொள்வானப்பா. அவ்வளவுதான் என்பேன் அப்பனே. புரிகின்றதா? 


இவை எல்லாம் யாருக்கும் தெரியாதப்பா. இறைவனை வணங்கினால் அனைத்தும் கிடைத்து விடுமாம் அப்பனே. அனுதினமும் இவ்ஆன்மா இறைவனைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றது என்பேன் அப்பனே. அப்பொழுது ஏன் திருத்தலங்களுக்குச் செல்கின்றீர்கள் என்று கூறுங்கள்? 


( இது குறித்து வாக்கு ஓன்றை குருநாதர் முன்பு உரைத்துள்ளார்கள். அந்த வாக்கு :-


சித்தன் அருள் - 1585 - அன்புடன் அகத்தியர் - மீர் கட், கங்கை கரை!



9/3/2024 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு. வாக்குரைத்த ஸ்தலம்: காக்கும் சிவன் காசியில் மீர் காட் கங்கை கரையில்.



அப்பனே ஒவ்வொரு நாளும் அப்பனே பின் செத்து செத்து தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அப்பனே.... எவை என்று அறிய அறிய அப்பனே


எவை என்று புரியப் புரிய அப்பனே எதை என்று அறிய அறிய நீங்கள் உறங்கும் பொழுது அப்பனே உன் ஆன்மா எதை என்று அறிய அறிய மேல் லோகத்திற்கு சென்று விடுமப்பா.....


அங்கே வரிசையாக நின்று அப்பனே எதை என்று அறிய அறிய பிரம்மாவிடம் தீர்ப்புகள் எதை என்று கூட யான் என்ன செய்தேன்? எதை என்று புரிய  புரிய எந்தனுக்கு பின் முக்தியை கொடு!!! கொடு !!!என்றெல்லாம் அவ் ஆன்மா ஏங்கிக் கொண்டிருக்கும் அப்பனே !! அவை இவை என்றெல்லாம் அப்பனே


ஏற்கனவே உரைத்து விட்டேன் அப்பனே பின் எதை என்று அறிய அறிய இவ்வாறு இருக்கும் பொழுது அப்பனே ஒவ்வொரு நாளும் அப்பனே செத்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே !!!!


ஆனால் பிரம்மாவிற்கும் அவ் ஆன்மாவிற்கும் சண்டை வரும் பொழுது பின் மூண்டும் எவை என்று அறிய அறிய காலையில் எழுந்திருக்கும் பொழுது அப்பனே பிரம்மா கொடுத்து விடுவானப்பா கட்டளைப்படி.... இவந்தனை முடித்து விடலாம் என்று!!!அப்பனே!!! முடித்து விடுவான் அப்பனே !!! பின் ஆன்மா மீண்டும் மேல் நோக்கி சென்று அப்பனே அலைந்து திரிந்து ஏன் எதற்கு என்றெல்லாம் அப்பனே எவை என்று அறிய அறிய பின் சாதாரணமாக பிரம்மாவிடம் எடுத்துக் கூறி கூறி அப்பனே பாசக்கயிற்றை பின் எமதர்மன் எவை என்று கூட வீசிக்கொண்டு எதை என்று அறிய அறிய அப்பனே சித்திரகுப்தனிடம் பின் கணக்கை அதிகமாக எதை என்று அறிய அறிய அப்பனே முடித்துவிடு!!! என்றெல்லாம் அப்பனே எவை என்று கூட)


( வாருங்கள் வாக்கின் உள் செல்வோம் ) 


சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன்:- ( விளக்கம் அளித்தார்கள் ) 


அடியவர் 2:- அறிவை பன்படுத்தனும். இறைவனை நோக்கி செலுத்தவேண்டும். 


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே கலியுகத்தில் பக்தியைப் பொய்யாக்குவதே மனிதனுடைய வேலை என்பேன் அப்பனே. 


அடியவர் 2:- மாயையில் உள்ளார்கள்..


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே அறிவுகளே இல்லையப்பா. இதனால் கலியுகத்தில் போராட்டங்கள்தான் அப்பனே. அப்பனே ஏற்கனவே கணிக்கப்பட்டதப்பா. அப்பனே கலியுகத்தில் கெட்டது நடக்க வேண்டும் என்று அப்பனே. 


சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் :- ( சில விளக்கங்கள் ) 


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இதை எவ்வாறு மாற்றுவது நீ கூறு அப்பனே?


அடியவர் 2:- எல்லோருடைய அறிவும் பன்படனும். 


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இதனால்தான் அப்பனே மனிதனுக்கு அறிவு என்பதே மங்கிவிட்டது என்பேன் அப்பனே. அதனால்தான் அப்பனே இறைவன் துன்பம் கொடுத்துத்தான் நல்வழிப்படுத்துவான் என்பேன் அப்பனே. இது தவறா?


அடியவர் 2:- ( தவறே இல்லை) நிச்சயமாக நிச்சயம். 100க்கு 100 உண்மை. 


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே நீங்கள் செய்த தவறுகள் நீங்களே இறைவனிடத்தில் முறையிடுகின்றீர்கள் அப்பனே. மீண்டும் அப்பனே (தவறு செய்துவிட்டு , இறைவனிடத்தில்..) எப்படியப்பா? 


சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் :- ( விளக்கம் அளித்தார்கள். மனிதன் தவறு செய்து விட்டு தினமும் தூங்கும்போது இறைவனிடத்தில் சென்று அனைத்தும் ( தவறு உள்பட) கூறி விட்டு, பின் மனிதன் ஆலயங்களுக்குச் சென்றால் எப்படி அப்பா நியாயம் ஆகும்? புண்ணியம் செய்து கொண்டே வந்தால் விதியை மாற்றலாம்.) 


அடியவர்கள்:- ( அமைதி )


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே விதியை மாற்றுவதற்கும் தகுதியானவர்கள் யார்?


அடியவர்கள் அனைவரும்:- சித்தர்கள். 


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இப்பொழுதும் அறிவு மங்கிவிட்டது. நீங்கள்தான் அப்பனே. 


சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் :- ( விளக்கம் அளித்தார்கள். ஆன்மா தினமும் இரவில் இறைவனிடம் சென்று புண்ணியக் கணக்கைச் சொல்லிவிட்டு வரும். அதற்குத் தகுந்தாற்போல் இறைவன் விதியை மாற்றுவார். மனிதர்கள்  அனுதினமும் செய்யும் நல்லவைகளே விதியை அழகாக மாற்றும். புண்ணியங்கள் செய்து கொண்டே இருந்தால் தானாகவே விதியை இறைவன், குருநாதர் மாற்றி அமைப்பார்கள்.) 


அடியவர்கள்:- ( அமைதி )


அடியவர் 3:- நல்லது செய்தால் நல்லது நடக்கும். 


அடியவர் 2:- ஞானத்திற்கு விளக்கம் என்னவென்றால் அறிவின் துணை கொண்டு இறை நிலையை உணர்வதே ஞானம். 


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே அவை உணர்வதே இல்லை அப்பனே. அப்படி உணர்ந்துவிட்டால் மற்றவர் சொல்வதை நீ கேட்கமாட்டாயப்பா. 


அடியவர் 2:- பைத்தியக்காரனாகிவிடுவான்…


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- 

( தனி வாக்கு) 


அடியவர் 2:- ( அமைதி ) 


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இறைவனை எதன் மூலம் கானலாம்? 


அடியவர்:- அன்பால்…


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே அதைப் பல பல வழிகளிலும் கூட ஞானியர்களும் உரைத்துவிட்டனர். ஆனால் கேட்கின்றீர்களா நீங்கள்? அப்பனே.


அடியவர்:- ( அமைதி ) 


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே முதலில் தாய் தந்தையோடு பாசத்தில் ( பாசத்தோடு ) இருங்கள் என்று. ஆனால் இருப்பதே இல்லையப்பனே. இறைவன் மீது அப்பனே பின் நேரடியாக ( பாசத்தோடு ) இருந்துவிட்டால் என்ன பயன் அப்பா? 


சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் :- ( விளக்கம் அளித்தார்கள். அம்மா, அப்பாவுடன் பாசத்தோடு இல்லாமல், 

இறைவன் மீது மட்டும் பாசம் வைத்து என்ன பயன் என்று குருநாதர் கேட்கின்றார். ஐயா புரியுதுங்களா?) 


அடியவர்:- ( அமைதி ) 


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இல்லத்தில் சண்டைகள், சச்சரவுகள் பின் இருந்து பின் இறைவனிடத்தில் சென்றாலும் இறைவன் ஆசிர்வதிப்பானப்பா. எப்படி ஆசிர்வதிப்பான் என்றால் அப்பனே பின் அப்படியே இரு. அங்கேயே சென்று விடு. வந்தாலும் வீண் என்று. 


அடியவர்:- ( அமைதி ) 


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இன்று போய் நாளை வா என்ற கதைதான். 


சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் :- ( தாய் , தந்தையரை மதிக்காமல் ) அப்ப நீங்க கேட்டாலும் கொடுக்க மாட்டார். 


அடியவர் 4 :- முன்னோர்களுக்கு ( தர்ப்பணம் ..) மரியாதை கொடுக்க வேண்டும். 


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே அதைக் கொடுப்பதே இல்லை அப்பனே. ( பெற்றோர்களுக்கு உரிய மரியாதை) அதைக் கொடுத்திருந்தால் அப்பனே (உன்) பிள்ளைக்குக் கஷ்டங்களை வந்திருக்காது என்பேன் அப்பனே. 


அடியவர் 4:-  ( தனி உரையாடல்கள் ) 


சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் :- ஐயா உங்கள் பிள்ளை உங்களுக்கு மரியாதை கொடுத்திருந்தால் உங்கள் பிள்ளைக்குக் கஷ்டங்கள் வந்திருக்காது. 



( அடியவர்களே, இங்கு இந்த வாக்கை பொதுவாக்காக எடுத்துக் கொள்ள வேண்டும். பல இல்லங்களில் தாய், தந்தையரை மதியாததால் அவ்பிள்ளைகள் கஷ்டங்கள் படுகின்றனர். தாய் தந்தையை மதிக்கும் பிள்ளைகள் அனைத்தும் சாதிக்கின்றனர். அனுபவத்தில் உணர இயலும்) 


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- தந்தையானவனும் , தாயானவனும் அப்பனே எவர், யார்? 


அடியவர் 4:- இறைவன்


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே அனைவருமே அதாவது தன் பிள்ளையை விட்டுக்கொடுக்காமல்தான் செப்புவார்கள் அப்பனே. 


அடியவர்:- ( சில தனி கேள்வி ) 


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:-  ( விதியை அழகாக எடுத்துரைத்தார்கள் ) 


அடியவர்:-


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- நிச்சயம் தாய், தந்தையரைத் தெய்வமாக நினைத்துக்கொள்பவர்களுக்குக் கஷ்டம் என்பதே வராதப்பா. ( தாய் தந்தையை மதிக்காததனால் பலர் கஷ்டங்கள் படுகின்றனர்). 


அடியவர்:- ( சில தனி உரையாடல்கள், அதன் பதில்கள் ) 


( நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளால் March 2024 மதுரையில் நடந்த கேள்வி,பதில் வாக்குகள் தொடரும்….) 


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!


சர்வம் சிவார்ப்பணம்!!!!!

Thursday, June 27, 2024

சித்தர்கள் ஆட்சி - 380 - அகத்திய மாமுனிவர் வாக்கு - ( ஏன் திருவண்ணாமலையை பௌர்ணமி அமாவாசை திதிகளில் (கிரிவலம்) சுற்றிப் பார்த்தால் கஷ்டங்கள் வருகின்றது? )

 










சித்தர்கள் ஆட்சி - 379 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - மதுரை வாக்கு ( March 2024) - பகுதி 1




இறைவா!!!! அனைத்தும் நீ


அன்புடன் அகத்திய மாமுனிவர் - மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 1

YouTube link :- https://youtu.be/hcJ-Jt0pyTo

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- விதியில் வந்தவை அப்பனே பின்  பொறுத்திருந்துதான் நீக்க முடியும். அப்பனே எண்ணங்கள் அப்பனே ஆராய்ந்துதான் நீக்க முடியும் என்பேன் அப்பனே. அதனால்தான் அப்பனே எதை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே சில புண்ணியங்கள் செய்தாலும் அப்பனே ஏன் எதற்குக் கஷ்டங்கள் வருகின்றது என்று பார்த்தால் அப்பனே எதை என்று புரிந்தும் கூட அறிந்தும் கூட விதியின் தன்மையே என்பேன் அப்பனே. 


விதியின் தன்மையைக் கூட அப்பனே அதாவது இரண்டு இரண்டு என்றே அப்பனே இரவு பகல் அப்பனே அறிந்தும் கூட அப்பனே இரவை பகலால் வெல்ல  முடியுமா அப்பனே ? பகலை பின் இரவால் வெல்ல முடியுமாஅப்பனே? மாறி, மாறி இன்பம் துன்பம். 


அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன். இதை அனைவருமே எடுத்துக் கொள்ள வேண்டும் அப்பனே. இதை பல வாக்கியத்தில் கூட யான் எடுத்துரைத்துவிட்டேன் அப்பனே. அப்பனே கஷ்டங்கள் இல்லை என்றால் அப்பனே இறைவன் எதை என்று புரியப்புரிய அப்பனே அதி விரைவிலேயே அப்பனே உங்களை மேல் லோகத்திற்கு அழைத்துக்கொள்வான் அப்பனே. 


அப்படி இன்பமே வந்தாலும் அப்பனே, இவன் தனக்கு அனைத்தும் கொடுத்து விட்டோமே என்று எண்ணி அவன்  இறைவன் பக்கத்தில் அப்பனே பின் அதாவது உயிரை எடுத்துக்கொள்வான் அப்பனே. இப்பொழுது புரிகின்றதா அப்பனே? 


அப்பனே துன்பம் வந்து கொண்டே இருந்தால்தான் ஆயுள் நீடிக்கும் என்பேன் அப்பனே. துன்பம் வரவில்லை என்றால், அப்பனே இன்பமே வந்து கொண்டிருந்தால் அதிவிரைவில் ஆயுளை முடித்துவிடுவான் இறைவன் அப்பனே . இப்பொழுது என்ற கூறுகின்றீர்கள் ? துன்பம் வர வேண்டுமா? இன்பம் வர வேண்டுமா?


அடியவர்கள்:- ( சற்று நேரம் சலசலப்பு, அமைதி..) 


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:-  அதனால்தான் அப்பனே எனை நம்பிக்கொண்டே வந்தவர்களும் கூட அப்பனே ஏன் துன்பத்தைக் கொடுக்கின்றேன் என்று அப்பனே புரிகின்றதா என்பேன் அப்பனே ????


அத்துன்பத்தை அப்பனே கடந்தால்தான் அப்பனே ஆயுள் நீட்டிக்குமப்பா. அதனால்தான் என் பிள்ளைகளுக்கும் கூட ஆயுள் நீட்டிக்கின்றேன் என்று யான் மௌனத்தைக் காத்துக்கொண்டிருக்கின்றேன் அப்பனே.


விதி, மதி அப்பனே அதை வைத்து அதாவது அப்பனே விதியை மதியால் வெல்லலாம் என்பேன் அப்பனே. அதை வெல்வது ( சித்தர்கள் ) எங்களால் மட்டுமே முடியும் என்பேன் அப்பனே. இதனால் ஒரு நொடி போதுமப்பா அப்பனே உங்களை மாற்றுவதற்கு. ஏன் யான் மாற்றவில்லை அப்பனே கூறுங்கள். உடனடியாக அப்பனே இறைவனிடத்தில் செல்ல வேண்டுமா என்று யோசியுங்கள் சிறிது அப்பனே?.


இறைவன் செய்வது அப்பனே நல்லதிற்கே. ஆனால் மனிதன் நினைப்பது அப்பனே  தீயவற்றுக்கே அப்பனே சொல்லி விட்டேன். 


அடியவர்கள்:- ( அமைதி ) 


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் :- அப்பனே உணர்ந்து கொள்ளுங்கள்.  ஏன் அனைவரையும் ஒன்றாக பின் அழைத்து வந்து கூறுகின்றேன். ஆனாலும் சிலர் பின் பயந்து அப்படி எதை என்று கேட்டால் பின் இப்படி என்றெல்லாம்.


ஆனாலும் அப்பனே தெரியாமலேயே கேட்கின்றேன் அப்பனே. மருத்துவனிடம் சென்று பொய் சொல்லலாமா என்று அப்பனே. அதனால் அப்பனே ஒரு குறை அப்பனே மற்றவரிடத்தில் அப்பனே பின் கூறும் பொழுது அக்குறை தீருமப்பா. அப்பனே புண்ணியங்கள் மட்டும்,  யான் புண்ணியங்கள் செய்தேன் என்று மட்டும் எல்லாம் கூறுகின்றீர்கள் அப்பனே. ஆனால் அப்பனேஅதே போலத்தான் அப்பனே சொல்லிக்கொண்டே இருக்கின்றேன் அப்பனே. பாவத்தைக்கூட நீங்கள் செப்பவில்லை என்றாலும் யான் செப்பினால் அப்பனே, அதாவது சித்தர் காறித்துப்பினால் பாவம் போகும் அப்பா. அவ்வளவுதான் என்பேன் அப்பனே.


அடியவர்கள் :- ( அமைதி ) 


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அதனால்தான் அப்பனே அனைவரையும் ஒன்றாக இனைத்தேன் அப்பனே. தனித்தனியாக என்னாலும் கூற  முடியும் என்பேன் அப்பனே. ஆனாலும் அவ் தத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் அப்பனே. அதனால் பாவத்தை முதலில் போக்க வேண்டும் அப்பனே.  போக்காவிடில்அப்பனே, இதனால்தான் அப்பனே புரிந்து கொள்ளுங்கள் அப்பனே. 


இறைவன் அப்பனே யார் ஒருவனுக்கு அப்பனே எதை என்று அறிய அறிய இளவயதில் பல கஷ்டங்கள் எண்ணி எண்ணி இறைவன் கொடுக்கின்றான். அதாவது கஷ்டங்கள் கொடுப்பது எவ்வாறு என்பதற்கு இணங்க அப்பனே அனைத்தும் முன்னேறுவதற்காகவே அப்பனே. 


இன்பத்தை ஏன் இறைவன் கொடுக்கின்றான் என்றால் அப்பனே துன்பத்திற்குப் பின் அடியோடு அப்பனே அழைத்துச்  செல்லத்தான் என்பேன் அப்பனே.


அதனால் துன்பம் வருவதே சிறப்பு என்பேன் அப்பனே. அப்பனே அனைத்தும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அறிந்து கொள்ள வேண்டும். பாவத்தைக் கழிக்க வேண்டும் என்றெல்லாம்

 எண்ணுகின்றீர்கள் அப்பனே. அதனால்தான் அப்பனே இவ்வாறு நீங்கள் நினைத்ததை அடைந்து விட வேண்டும் என்றால் அப்பனே நிச்சயம் அப்பனே துன்பத்திற்கு அப்பனே ஆளாக வேண்டும் என்பேன் அப்பனே. சொல்லிவிட்டேன் அப்பனே. 


துன்பம் இல்லாமல் எதைக் கொடுத்தாலும் அவை நிச்சயம் அப்பனே தங்காதப்பா சொல்லி விட்டேன் அப்பனே.


அடியவர்கள் :- ( அமைதி ) 


சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் :- எல்லோருக்கும் ஐயா இது. புரிஞ்சிகோங்க ஐயா. 


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே தெரிந்து கொண்டு வாழுங்கள். அப்பனே என் பக்தர் ஆயினும் இன்னும் அப்பனே தெரியாமல் வாழ்ந்து வருகின்றார்கள். அப்பனே பின் அகத்தியன் அதைச் செய்வான் , இதைச் செய்வான் என்று. ஆனால் நிச்சயம் செய்வான் அப்பா. அப்பனே பிறக்கும் பொழுதே அப்பனே அதாவது பாவ மூட்டையை முதுகில் சுமந்து கொண்டு. 


அப்பனே மனிதன் அதாவது நீங்கள் செல்லும் பொழுது நிழல் எப்படித் தொடர்கின்றதோ அதே போலத்தான் பாவமும் பின்னே வருகின்றதப்பா. அப்பப்பா அறிந்தும் கூட உலகத்தில் எதை என்று கூற தெரியாமலே வாழ்ந்து வருகின்றார்கள் அப்பனே. ஆனாலும் நிச்சயம் சிறிது சிறிதாகவே போக்க முடியும் என்பேன் அப்பனே. 


சிறிது சிறிதாக பின் போக்கினால் தான் மட்டுமே , அப்பனே ஒன்றைச் சொல்லுகின்றேன் அப்பனே அனைவருக்குமே அப்பனே.


உடனடியாக எந்தனுக்குக் கொடுக்க வேண்டும். துன்பத்தை உடனடியாக அளிக்க வேண்டும் என்று. அப்பனே அப்பொழுது சிறு குழந்தையாகப் பிறக்கின்றாய். உடனடியாக 20 வயது பின் எவை என்று கூற இளைஞனாக மாற்றலாமா?


நீங்கள் கூறுங்கள் அப்பனே. இப்படித்தான் மனிதன் இப்பொழுது திரிந்து பின் வலம் வந்து கொண்டிருக்கின்றான். 


அதனால் அப்பனே யோசியுங்கள். யோசியுங்கள் அப்பனே. அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே. இறைவனை நீங்கள் தொடுகின்றீர்கள் அப்பனே.இதனால் துன்பம் வரும் பொழுதுதான் இறைவனை சிறிது சிறிதாக இறைவனை நெருங்குகின்றீர்கள் என்று அர்த்தம். இன்பமே வந்து கொண்டிருந்தால்  நிச்சயம்  இறைவனை பின் வந்து அடைய முடியாதப்பா. 


அப்பொழுது இறைவனை நெருங்க வேண்டுமென்றால் ஒரே வழி அப்பனே துன்பம்தானப்பா. அப்பொழுது எதனை ஏற்றுக் கொள்வீர்கள்? அப்பனே நீங்களே கூறுங்கள்.


பல அடியவர்கள் :- துன்பம்…


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே துன்பமும், அப்பனே துன்பத்தால் அடிக்க வேண்டும் என்பதைக்கூட ஏற்கனவே சொல்லிவிட்டேன் அப்பனே. இன்பத்தை அப்பனே துன்பத்தால் அழிக்க வேண்டும். யாராவது பதில் கூறுங்கள் இதற்கு?


சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் :- ஐயா யாராவது கூறுங்கள்? உங்களுக்கு ஒரு chance கொடுத்துள்ளார்.


அடியவர்கள்:-  ( அமைதி ) 


சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் :- இன்பத்தைத் துன்பத்தால் அழிக்கனுமாம். கூறுங்கள் யாராவது? 


அடியவர் :- மன வைராக்கியத்தால்…


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே அப்பனே கல்வி கற்றாயா? 


சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் :- கல்வி கற்றாயா என்று (குருநாதர்) கேட்கின்றார் ஐயா. படிச்சிட்டு வந்தீங்களா? 


அடியவர் :- கற்றுக்கொண்டு உள்ளோம் ஐயா.


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே ஆசிரியன் கேட்கவேண்டும் என்றால் இப்படித்தான் கேட்பாயா? அப்பனே. முதலிலேயே அப்பனே இன்னும் அப்பனே பக்குவப்படுத்த  இப்பொழுதே எதை என்று கூறினாய் அப்பனே. மீண்டும் ஒரு வார்த்தை கூறு?


சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் :- இப்போ என்ன கூறினீர்களோ, அதை இன்னொரு முறை கேட்கச் சொல்கின்றார் ( நம் குருநாதர் ). 


அடியவர்:- ஐயா கற்றுக்கொண்டு உள்ளேன். 


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இன்னும் கற்றுக்கொள்ளவே இல்லையப்பா. அப்பனே வயதை ஆகிவிட்டது. எப்படியப்பா? அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன். அப்பனே பின் அதாவது பள்ளிக்குச் செல்கின்றாய் அப்பனே. ஆசிரியன் ஒரு கேள்வி கேட்கின்றான் உன்னைப்பார்த்து. அப்பனே அப்பொழுது நீ எப்படிச் சொல்வாய்? இப்படி உட்கார்ந்துதான் சொல்வாயா அப்பனே? அப்பனே இப்பொழுதே உந்தனுக்கு அதாவது பின் இன்னும்  பூஜ்ஜியத்திலேயே இருக்கின்றாய் அப்பனே. இப்படிப் பின் பூஜ்ஜியத்தில் இருந்து பின் எவை என்று கூற அழைத்து வருவது எவ்வளவு கஷ்டங்கள் என்று நீயே சிந்தித்துப்பார் மகனே. 


சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் :- ஐயா புரியுதுங்களா? அப்ப zeroலேயே இருக்கிறீங்களாம். என்னப்பா கற்றுக்கொண்டாய் என்று கேட்கின்றார்.


அடியவர்:- ( எழுந்து நின்றார் ) 


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே எதற்கு எழுந்தாய் அப்பனே?


அடியவர்:- ஐயா, விடை சொல்வதற்கு ..

அடியவர் 2:- ஆசிரியர் முன் ..


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே இதை முதலிலேயே வந்திருந்தால் அப்பனே ஏன் பின் யான் சொல்லிய பிறகு வந்திருக்கின்றது ( எழுந்து நின்றது ) என்று விளக்கம் தர வேண்டும் நீ அனைவருக்குமே. 


அடியவர்:- ( எழுந்து நின்றவர் ) கேள்வி கேட்கும்போது அதற்கு உரிய மரியாதையோடு சொல்ல வேண்டும். 


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் :- அப்பனே ஏன்?  இதை நீ நிச்சயம் தெரிவிக்க வேண்டும் அப்பனே. மரியாதை தேவை இல்லை. ஆனாலும் அப்பனே பின் என் பக்தர்கள் ஆயினும் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் அப்பனே அவை மனதில் இருந்தாலே போதுமானதப்பா.  ( அடியரவரின் தனிப்பட்ட கேள்வி பதில் வாக்கு முடிந்தவுடன் பொது வாக்கு ஆரம்பமானது) 


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் :- ஆனால் அப்பனே ஒரு பழமொழியும் உண்டு. தன்வினை தன்னைச் சுடும் என்று. 

அப்பனே அதனால் அவர்களுக்குத் தெரிவதில்லை என்பேன் அப்பனே. அனைத்தும் அப்பனே இறைவன் சேமிப்புத்திறன் என்றெல்லாம் அப்பனே உடம்பில் வைத்துள்ளானப்பா. சேகரித்துக்கொள்ளும் அப்பா. ஆனால் கடைசியில் அப்பனே இவை எல்லாம் சொல்லிவிட்டு பின் இறைவனிடத்தில் செல்வானப்பா. பின்பு  அப்பனே அவ்செய்தி  அப்பனே தொடங்கிவிடுமப்பா. அப்பொழுது அறிய எப்படியப்பா அனைத்தும் நடக்கும் என்பேன். கூறு நீயே?. 


சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன்  :- எல்லோருக்கும் பொது இது. அப்போ நீங்க சொல்றதெல்லாம் memoryயாகிக்கிட்டு இருக்கு உடம்புக்குள்ள. நீங்க திரும்பி இறைவனிடம் செல்லும் போது நீங்க சொன்ன அனைத்தும் memoryல இருந்து அது இறைவனிடம் ஒலிக்கும். நீங்க பேசிய அனைத்தும் ( உண்மை, பொய், சூது, வஞ்சம், பிறரைக் குற்றம் கூறுதல், பொறாமைப் படுதல் இன்னும்) இறைவன் கேட்பார். அப்போ எப்படி இறைவன் நல்லது செய்வார் என்று கேட்கின்றார். 


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் :- அப்பனே இதனால்தான் அப்பனே மனிதனுக்கு இன்னும் வாழக்கற்றுத் தந்தாலும் தன் போன போக்கில்தான் அப்பனே செல்கின்றான். அதனால்தான் அப்பனே ஈசனே ஒரு அடியை அடித்து , அப்பனே மற்றொன்றும் சொல்கின்றேன் அப்பனே. 


பின் இறைவன் அனைவரையும் படைத்தான் அப்பனே. அதாவது  அப்பனே நல் முறையாகவே அப்பனே. ஆனால் இறைவன் படைத்தாற்போல் மனிதன் இல்லை என்பேன் அப்பனே. மீண்டும் பின்  துன்பத்தைக் கொடுத்து மீண்டும் அவன்தன் இடத்திற்கு அழைத்துக்கொள்கின்றான் அப்பனே. இது நியாயமா,  நீங்கள்தான் அப்பனே. இதுதான் உண்மையப்பா. அதனால் பின் கஷ்டங்களைக் கொடுப்பது இறைவன் தானப்பா. எப்படியப்பா இறைவன் ( உங்கள் பாவங்களை ) நீக்க முடியும் அப்பனே சொல்லி? அதனால் அடி கொடுத்துத்தான் நீக்குவான் என்பேன் அப்பனே. இதற்குப் பரிகாரங்களாம்? எப்படியப்பா நீங்கும் அப்பா? கூறுங்கள் நீங்களே? 


அனைத்து அடியவர்கள் :- ( அமைதி ) 


சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன்  :- இறைவன் தான் கஷ்டம் வைக்கின்றார். திரும்பி இறைவனிடமே போனால் எப்படியப்பா என்று சொல்கின்றார். 


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் :- 

((அடியவர்களே, நமது பல கடினமான கண்டம் போன்ற கொடுமையாக விதியில் உள்ள பல கஷ்டங்களை எல்லாம், நம் அன்பு குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர் நாம் அறியாமலேயே நீக்கி நாம் நல்வாழ்வு வாழ அருளுகின்றார்கள். அது தொடர்பான முக்கிய வாக்கு))


அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட இதனால் அப்பனே சனீஸ்வரன்  அப்பனே உன் கால் கைகளை இதன்முன்னே உடைத்திருக்க வேண்டும் என்றெல்லாம் யோசித்தான் அப்பனே. ஆனாலும் யான் தடுத்து நிறுத்தினேன். ஆனாலும் அப்பனே அவை எல்லாம் பின் மனிதனுக்கு தெரியாதப்பா. ஒன்றுமே நடக்க வில்லை என்றுதான் புரியுமப்பா.


நாடி அருளாளர்:- (விளக்கம்)


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் :- அப்பனே அனைவருக்கும் ஒரு புது விசயத்தைக் கூறுகின்றேன் அப்பனே.



 ((( வணக்கம் அடியவர்களே, தர்ம தேவன் காலம், ஏழரைச் சனி தேவன் காலம் என்றால் என்ன?: நமது இராசிக்கு முந்தைய இராசியில் சனி தேவன் வந்து அமரும்போது ஏழரைச் சனி தேவன் பிடிக்கிறர் என்று சொல்கிறோம். முந்தைய இராசியில் இரண்டரை வருடம், நமது ஜென்ம இராசியில் இரண்டரை வருடம், நமது இராசிக்கு அடுத்த இராசியில் இரண்டரை வருடம் என ஆக மொத்தம் ஏழரை வருடம் சனி தேவன் தாக்கத்தினைப் பெறுவதை ஏழரைச் சனி தேவன் காலம் என்கிறோம்.)))


(((((( சித்தன் -அருள் -1590 - அன்புடன் அகத்தியர் - கிரிஜாத்மஜ் கணபதி மந்திர் லேன்யாத்ரி அஷ்ட விநாயகர் குகை கோயில்!  இடைக்காடர் சித்தர் வாக்கு :- தர்மத்தை தர்ம தேவதையை பற்றி ஏன் பின் கேவலமாக பேசுகின்றீர்கள்?????


தர்ம தேவதை!!! சனியவன். தர்ம தேவன்!!!! சனியவன்.  பின் நீங்கள் சொல்லி அனுப்பலாமே !!!! { ஜோதிடர்கள் ஜோதிடம் பார்க்க வருகின்ற மக்களுக்கு } தர்ம தேவதை சனியவன் ஆனால் இவ் தர்ம தேவனுக்கு இவை எல்லாம் பிடிக்கும் என்று யார் ஒருவன் சொல்கின்றானோ அவன் தான் ஜோதிடன். ஆனால் சொல்வதில்லையே!!!! )))))


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் :- அப்பனே ஏழரை தன்னில் அப்பனே அப்பனே நீ எதைச்செய்கின்றாயோ அதைச் சனீஸ்வரன் பார்த்துக்கொண்டே இருப்பான் அப்பனே. முதுமையில் கொடுத்து விடுவான் அனைத்தும் கூட அப்பனே கர்மத்துக்கு தகுந்தாற்போல.  அதனால்தான் அப்பனே ஏழரை பின் தீய வழிகளில் அழைத்துச்செல்லும் என்பேன் அப்பனே. ஆனாலும் மனப்பக்குவத்தை ஏற்படுத்திக்கொண்டு இறைவன் பாதையில் மனம் செல்லுமேயானால் அப்பனே பின் வாழ்க்கையில் கடைப்பகுதியில் அப்பனே உயர்ந்து வாழலாம் என்பேன் அப்பனே. இதை அனைவருமே தெரிந்து கொள்ள வேண்டும் அப்பனே ஏழரை தன்னில் கூட. 


சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் :- ( தனிப்பட்ட விளக்கம் ) 


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் :- 

(ஏழரைச் சனிதேவன் தொடர்பான வாக்கு தொடர்கின்றது….) 

அப்பனே இதே போலத்தான் பல முறையும் இல்லத்தில் குழப்பம் ஏற்படுத்த வேண்டும், ஒரு ஒருவர் பிரிய வேண்டும் என்றெல்லாம் அப்பனே சனீஸ்வரன் என்னிடத்தில் கேட்பான் என்பேன் அப்பனே. ஆனாலும் அப்பனே சனீஸ்வரனிடத்தில் சொல்லிவிட்டேன். எதைச் செய்தாலும் என்னிடத்தில் கேட்டுச் செய் என்று. ஆனாலும் எவை என்று புரியப்புரிய “ மாமுனிவரே!!!” அதாவது பின் எவை என்று அறிய அறிய “ஈசன் இட்ட கட்டளைப்படிதான் யான் செய்வேன்” என்று. ஆனாலும் பின் அமைதியாக பின் “சனீஸ்வரனே, பின் உந்தனுக்கும் பல உதவிகள் செய்துள்ளேன். மறந்து விட்டாயா?” என்று. 


பின் “அகத்தியனே எதை என்றும் புரியப் புரிய இப்படிச் சொல்லிச்  சொல்லித்தான் அப்பனே எவை என்றும் புரியப்புரிய அதாவது இப்படிச் சொல்லிச் சொல்லித்தான் என்னைக்கூடத் தலை குனிய வைக்கின்றாய் என்று”


( தனிப்பட்ட வாக்கு ) 


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் :- அப்பனே ஏன் உனை நிற்க வைத்தேன்? 


அடியவர் :- (குருநாதர்) கேள்வி கேட்டார்கள். உட்கார்ந்து பதில் சொன்னதால்…


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் :- அப்பனே அப்படி இல்லையப்பா. கற்றுக்கொள்வதற்கு என்று நீதான் முதலில் கூறினாய் என்பேன் அப்பனே. இப்பொழுது என்ன சொல்லப்போகின்றாய் அதற்குப் பதில்? 


அடியவர் :- ( அமைதி ) 


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் :-  அப்பனே புரிகின்றதா? யாரையும் திருத்த முடியாதப்பா. அவரவர் திருந்திக்கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே. 


சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் :- நம்ம சொல்லி யாரையும் திருத்த எல்லாம் முடியாது. அவரவர் திருந்தனும். 


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் :-   அப்பனே , ஒன்றைச் சொல்கின்றேன். அனைவருமே நன்றாகக்  கேட்டுக்கொள்ளுங்கள் அப்பனே. பாவம் சுமந்து வந்திருக்கின்றான் அப்பனே. இறைவனே பாவத்தை அதாவது அனுபவிக்க பின் இவ்வுலகத்தில் மனிதனைப் பிறக்க வைத்தான் அப்பனே. அப்பொழுது அவ்வளவு சுலபமாகப் பாவம் கரைந்துவிடுமா என்ன? அவ்வளவு சுலபமாக இறைவன் தன் தலத்திற்கு அழைத்து வருவானா என்ன? கூறுங்கள் நீங்களே? 


சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன்  :- ஐயா புரியுதுங்களா? 


அடியவர் :- புரிகின்றது ஐயா


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் :-  அப்பனே அறிந்தும் கூட பின் புரிந்தும் கூட அப்பனே இதனால்தான் அப்பனே மனிதன் மூட நம்பிக்கையில் ஒளிந்துள்ளான். அதை எடுத்துக் கொள்ளவே அப்பனே யாங்கள் வருவோம். அப்பனே வந்து கொண்டே இருக்கின்றோம் அப்பனே. இன்னும் சித்தர்கள் அப்பனே எவை என்று கூற அப்பனே வாக்குகள் செப்பும் பொழுது தெளிவு பெறுவீர்கள் அப்பனே. வெற்றியும் பெறுவீர்கள் என்பேன் அப்பனே. முதலில் உன்னை அறியுங்கள் அப்பனே. 


அப்பனே உன்னை நீ எவ்வாறு அறிந்தாய் கூறு? 


அடியவர் :- எனக்குள்ளே இருந்து எல்லாமாய் வழி நடத்துவது அகத்தியப் பெருமான் அருளே என்று நான் உணர்கின்றேன் ஐயா. 


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் :-  அப்பனே, பின் அனைவரையும் கேள் இதனை அப்பனே?


சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் :- இது சரிதானா என்று அனைவரையும் கேட்கச் சொல்கின்றார். 

( மேலும் சில விளக்கங்கள் அளித்த பின்னர்) 


அடியவர் :- நீங்கள் எல்லாம் உங்களை எப்படி உணர்கின்றீர்கள் என்று ( குருநாதர் ) ஐயா கேட்கின்றார்கள். ஒவ்வொருவராகச் சொல்லுங்கள். 


அடியவர் 1:- ( நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் ) ஐயாவை வணங்குகின்றோம். 


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் :- அப்பனே இறைவனைக்கூட வணங்குகின்றீர்கள். என்ன பிரயோஜனம்?


அடியவர் :- ( அமைதி ) 


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் :-  அப்பனே இறைவனை எதற்கு வணங்குகின்றீர்கள்? அனைவருமே கூற வேண்டும். 


அடியவர் 2 :- ஐயா பெரும்பாலும் எல்லாரும் சுயநலமாக வணங்குகின்றார்கள்.


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் :-  அப்பனே புரிகின்றதா அப்பனே. சுயநலமாக வணங்கினால் அப்பனே பின் அள்ளிக் கொடுப்பானப்பா துன்பத்தை.


அடியவர்கள் :- ( பலத்த சிரிப்பு இங்கு ) 


அடியவர் 4 :- பொதுவாக ( வணங்கவேண்டும் ) 


சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் :- அப்போ, சுயநலமாக வணங்கக்கூடாது. அள்ளிக் கொடுத்து விடுவாராம் துன்பத்தை, எடுத்துவிட்டு போப்பா என்று. 


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் :-  அப்பனே அள்ளிக் கொடுப்பது பின் நன்மையா? தீமையா? 


அடியவர் 5:- நன்மை


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் :-  அப்பனே நன்மை என்று சொன்னாயே முன் நின்று எழுந்து நில்.


சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் :- நன்மை என்று எதற்குச் சொன்னீர்கள் என்று சொல்லுங்கள் ஐயா


அடியவர் 5:- ( எழுந்து நின்றார் ) துன்பத்தைக் கொடுத்தால்தான் இறைவனை உணர முடியும். 


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் :-  அப்பனே, யான் சொல்லிக் கொடுத்ததைத்தான் நீ சொல்லிக் கொண்டிருக்கின்றாய் அப்பனே. 


சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் :- அகத்தியர் சொன்னதைத்தான் நீங்க சொல்றீங்க. வேற ஏதாவது சொல்லுங்க ஐயா. 


அடியவர் 4:- ஐயா துன்பம் பட்டால்தான் ஐயா பக்குவம் வரும். 


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் :-  அப்பனே இதையும் நானே எடுத்துரைத்து விட்டேன்.


( March 2024 மதுரையில் நடந்த சத்சங்கம் தொடரும்….) 


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!


சர்வம் சிவார்ப்பணம்!!!!!