“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Thursday, June 29, 2023

சித்தர்கள் ஆட்சி - 100 : அகத்திய பிரம்ம ரிஷி புகழ் மாலை - (பொதிகையில் சித்தர் புலத்தியர் உரைத்த புகழ் மாலை)

 


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!!



காலம் காலமாக இறைவன் மீது கொண்ட பக்தியை வெளிப்படுத்த அடியவர்கள் பாடலாகவும் பதிகமாகவும் மனமுருக பாடி இறைவனை தொழுது பக்தி நெறியை செலுத்தினர்!!!!!


எந்த இனமாக இருந்தாலும் சரி எந்த மொழியாக இருந்தாலும் சரி இறைவனை மனதுருக வேண்டி பாடுவது எல்லா காலகட்டங்களிலும் நடந்திருக்கின்றது எல்லாம் மொழிகளிலும் இருக்கின்றது!!!!



இறைவனுக்கு சொந்தமான மொழிகளில் அதுவும் தமிழில் தேவாரம் திருவாசகம் பன்னிரு திருமுறைகள் நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் திருமுருகாற்றுப்படை கந்தர் அனுபூதி கந்தர் அலங்காரம் என நாயன்மார்கள் ஆழ்வார்கள் முதற்கொண்டு நக்கீரர் அவ்வையார் அருணகிரிநாதர் என இறைவனை மனதார தொழுது நடந்து அழுது காதலாகி கசிந்து உருகி பதிகங்களை பாடினர் அந்த பதிகங்களின் வழியாக நாமும் அதை படித்து நாமும் பாடி இறைவனை வழிபாடு செய்கின்றோம்.



அந்த வகையில் நம் குருநாதர் அகத்தியர் பெருமானை குறித்து அகத்தியர் அடியவர்கள் பாடல்களாகவும் எழுதி அவர் மீது கொண்டுள்ள பக்தியை மனதில் எண்ணி  பதிகங்களாகவும் எழுதி போற்றி துதித்து பாடி வணங்கி வருகின்றனர்.



இதில் முக்கிய சிறப்பு அம்சம் என்னவென்றால் நம் குருநாதர் அகத்தியர் பெருமான் சீடரான புலத்திய மகரிஷி நம் குருநாதரை எண்ணி எண்ணி மனம் உருகி உருகி வணங்கி வணங்கி பொதிகை மலை உச்சிதனில் தன் வாக்கின் மூலம் நம் குருநாதன் மேல் கொண்ட பக்தியை காதலாகி கசிந்து உருகி உரைத்த வாக்கே ஒரு மிகப்பெரிய பொக்கிஷம் ஆகும்.


பக்திமான்கள் ஞானிகள் மனிதர்கள் எழுதிய பாக்களை நாம் கேட்டிருக்கின்றோம் படித்திருக்கின்றோம்.



ஆனால் பிறப்பு இறப்பு வயது மூப்பு காலம் இவற்றையெல்லாம் கடந்து வாழும் சித்தர்களில் நம் குருநாதரின் சீடராக இருந்து கொண்டு அகத்திய பெருமானை குறித்து புகழ் மாலை சூட்டி புலத்தியரின் இந்த வாக்கினை நாம் அனைவரும் அன்றாடம் குருவை நினைத்து தொழுது வணங்கி பிரார்த்தனைகள் பூஜைகள் செய்யும் பொழுது புலத்தியர் மகரிஷி எப்படி எல்லாம் தன் குருநாதரை உருகி பாடினாரோ!!!!


அதே மாதிரி நம்மை அந்த இடத்தில் வைத்துக்கொண்டு நம் குருநாதரை புலத்திய மகரிஷியின் வாக்கினை வாக்காக பார்க்காமல் ஒரு பதிகம் என கருதி அனுதினமும் பாடி வணங்கி வருவோம்!!!



சித்தர்களின் போக்கு சிவன் போக்கு மட்டுமல்ல சித்தர்களின் வாக்கும் சிவன் வாக்கு ஆகும்.


மாணிக்கவாசகர் மனமுருகி பாடிய பொழுது அதை ஏற்றுக் கொண்டு தன் கைப்பட எழுதி அரவணைத்த எம்பெருமான் ஈசன் கருணையை நாம் அறிவோம்.


மனிதனாகப் பிறந்து மாணிக்கவாசகனார் பக்தியுடன் எழுதியதை ஏற்றுக் கொண்ட ஈசன் அதுபோல் சித்தராக இருந்து பாடிய பதிகத்தை நம் குருநாதரும் பெருமையோடு ஏற்றுக் கொள்வார் நாமும் இலக்கிய மகரிஷியின் இந்த வாக்கினை அனுதினமும் அகத்திய மகரிஷி போற்றி திரு அகவல் போல எண்ணி அன்றாட வழிபாட்டின் போது இந்த வாக்கினை அதாவது இந்த பதிகத்தை பாடி நாமும் தொழுவோம்!!!


இந்த வாக்கினை இசை ஆர்வம் உள்ளவர்கள் இதை பாடலாகவும் ராகத்துடன் கூடிய இசையாக வெளிப்படுத்தி அனைவருக்கும் தெரியப்படுத்தினாலும் மிக்க பெரும் உபகாரமாக இருக்கும் காலம் காலமாக கடந்து நிற்கும் அகத்தியர் போற்றி பாடல்களில் புலத்திய மகரிஷியின் புகழ் மாலையாக பாடிக்கொண்டே இருக்கும் வருங்கால சமுதாயமும்!!!!!






 அகத்தியர் கூடத்தில் புலத்தியரின் புகழ் மாலை!








புலத்தியனின் புகழ்மாலை!!!! 


உலகத்திற்கெல்லாம் ஆதிகுருவான எங்கள் அகத்தியனை பணிகின்றோம் 


குருவா!!!!!!! 


முதல்வா!!!!!! 


முத்தமிழ் இறைவா!!!!! 


இறைவா!! என் மனதில் அன்பான வடிவத்தில் குடி கொண்டிருக்கும் பின் அனைத்தும் நீயே!!!!!


முத்தா!!! 


முதல்வா!!!! 


இளஞ்செழியனே!!!!!! 


கந்தா!!!! 


கடம்பா!!!!! 


ஈசா!!!!!! 


அனைத்தும் நீயே!!!!!


வருபவருக்கெல்லாம் அள்ளிக் கொடுப்பவனே!!!!!


அனைத்தும் நீயே!!!!!


ஏமாற்றுபவர்களையும் கூட திருடர்களையும் கூட பின் அரவணைத்து செல்லும் என் குருநாதருக்கு மிஞ்சிய குரு இவ்வுலகத்தில் இல்லை!!!!!


என் குருவானவனே!!!!! எதை அனைத்தும் தெரிந்தவன் அனைத்தும் தெரிந்தவன்!!!!!


அனைத்து தெய்வத்திற்கும் கூட பின் உபதேசம் செய்பவன்!!!!!


ராமனுக்கும் கூட!!! சீதைக்கும் கூட!!!! கிருஷ்ணனுக்கும் கூட!!!! பஞ்ச பாண்டவர்களுக்கும் கூட!!!! இன்னும் ஏனைய ஞானிகளுக்கும்!!!!!


பல பல பல சீடர்களையும் கூட உருவாக்கும் தகுதி!!!! என் மைந்தன் இனிமேலும் என் மைந்தன் பாதுகாத்துக் கொண்டிருக்கும் இறைவா என் மனதில் உள்ள குறைகளையும் நீக்குவாயாக!!!!


நீக்குவாயாக மனிதர்களை வரும் காலங்களில் கலியுகத்தில் நிச்சயம் நல்வழி படுத்துபவனே உன்னை வணங்குகின்றேன் லோபா முத்திரையோடு!!!!!


அன்பானவனே!!!!!


பண்பானவனே!!!!!


பாசத்திற்கு அடையாளமே!!!!


கருணை உள்ளம் கொண்டவனே!!!!!


உன்னை யான் எப்படி பாடுவது!???

எப்படி துதிப்பது????


உன்னை அகத்தியா என்று சொல்வதற்கும் பின் எவை என்று கூட யான் எத்தனை ஜென்மத்தில் புண்ணியங்கள் செய்தேனோ!!!!!!!!!!!!!!! 


(அகத்தியா என்று சொல்வதற்கு எத்தனை ஜென்மங்கள் நாங்கள் புண்ணியம் செய்தோமோ)



இவ் புலத்தியன்  இவ் அடிமை என்னையும் கூட இத் திருடனையும் கூட அதாவது பின் நாயினின் கூட அதாவது இன்னும் விலங்கினின் கூட கீழானவனையும் கூட பின் சீடனாக அதாவது புலத்தியனை சீடனாக ஏற்று கொண்டமைக்கு.... எவை யான் உன்னை எப்படி எதை அறிந்து !!!!! 


 ( நாயிற்கடையேனின் கடையேனுக்கும் கடையேன் ஆகிய திருடர்கள் எங்களையும் உங்களை வணங்க வைத்த )


இறைவா!!! இறைவா!! நீயே அனைத்தும்!!!!


நீயே ஈசன்!!!!!


நீயே விஷ்ணு!!!!


நீயே பிரம்மா!!!!


அறிந்து அறிந்து அனைத்தும் உன்னிடத்திலே இருக்கின்றது!!!!!!!!!!!!!! அதை வைத்துக் கொண்டும் நிச்சயம் ஒன்றும் தெரியவில்லையே என்றெல்லாம் ஒன்றும் தெரியவில்லை என்றெல்லாம் கருணை உள்ளம் படைத்தவனே!!!


அனைவருக்கும் உதவிகள் செய்யும் உன்னுடைய அருளால் அருளால் இவ்வுலகத்தை வெல்வாய்!!! அனைத்து சித்தர்களையும் கூட வெல்வாய்!!!! வென்று விட்டாய்!!!!

அனைத்து சீடர்களையும் கூட வென்று விட்டாய்!!! 


என் மனதில் அழகாகவே குடி கொண்டிருக்கின்றாய் இறைவா!!!!!


அகத்தியா!!!!!!


அப்பா!!!!!!! 


எதை என்றும் அறிய அறிய உன்னை அகத்தியன் என்பதா?????


இறைவன் என்பதா???!


இன்னும் கருணை என்பதா?????


அன்பிற்கு அன்பான வடிவம் என்பதா????


பாசம் என்பதா?????


புரியவில்லை புரியவில்லை நிச்சயம் எதை என்று அறிய அறிய!!!


இன்னும் இன்னும் எப்பிறப்பு எடுத்தாலும் நீ எதை என்று உடம்பினுள் உயிர் இருக்கின்றதா? உயிருக்குள் உடம்பு இருக்கின்றதா? என்பதை எல்லாம் தெரியப்படுத்த ஆளில்லை இவ்வுலகத்தில்!!!!!!


அகத்தியனை அதாவது என் தந்தையை நிச்சயம் இவ்வுலகத்தில் யார் தெரிந்திருக்கக் கூடியவர்கள் நிச்சயம் இன்னும் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் என் (நம்) அப்பன் அதாவது என் குருவானவனை பற்றி யாரும் இவ்வுலகத்தில் தெரிந்திருக்க கூடியது ஒரு துளி கூட இல்லை!!!


என்(நம்) தந்தை அகத்தியனை வழிபடுவதற்கும் கூட (நாங்கள்) நீங்கள் ஏதோ ஒரு தலத்தில் எதை என்றும் அறிய அறிய பிறந்து பின் எவை என்று கூட அதனால் பல பிறவிகள் கடந்து கடந்து வந்தால் தான் என் குருவானவனையும் கூட அகத்தியா என்ற பெயரை அழைத்து நீங்கள் முற்று ( முக்தி) 


( நாங்கள் அழைத்தால் எங்களுக்கு முக்தி) 



எவை என்று கூட பின் அதாவது என் தந்தையை அகத்தியா என்று அழைத்து விட்டாலே போதுமானது மோட்ச பிறவி தான் உங்களுக்கு!!!!!!!!


(அப்பா என்று அகத்தியனை அன்போடு அழைத்தால் நமக்கு மோட்சமே) 



அனைவருக்குமே!!!!!!! 


அப்படிப்பட்டவன்!!!! (நம்) என் குருவானவன்!!!!!


ஆதி குருவானவன்!!!!!


கருணை வடிவானவன்!!!!


எங்கும் பரந்து நிற்பவன்!!!!

ஒளி வடிவமாக!!!!!!


அப்பா!!!! என்று அழைத்தாலே ஓடோடி வருபவன்!!!!!


உலகத்தில் உள்ள அனைத்தும் கற்று உணர்ந்தவன்!!!!!


இன்னும் சொல்லத்தான் போகின்றான் இவ்வுலகத்தில் புதுமையான விஷயங்களை உலகத்திற்கு கொண்டு வந்து இவ்வுலகத்தையே மாற்றப் போகின்றான் என் குருநாதன்!!!!


குருநாதா!!!!!! குருநாதா!!!!!


போதும் உன்னுடைய பொறுமை பொறுத்தார் பூமி ஆள்வார் என்றெல்லாம்.... நீ எந்தனுக்கு (எங்களுக்கு) சொல்லி சொல்லி வளர்த்தாய்!!!


இன்னும் பொறுக்க வேண்டாம் மனிதர்களுக்கு நல்வழிப்படுத்தி இன்னும் பல கஷ்டங்களையும் நீக்கி இன்னும் எதை எதையோ செய்து கொண்டு வா!!!!!!


பின் குரு முனியே!!!!! குரு முனியே!!!!


 வெற்றி !!!வெற்றி !!!இன்னும் உந்தனுக்கே!!!!!


ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!


Wednesday, June 21, 2023

சித்தர்கள் ஆட்சி - 99 : அகத்திய பிரம்ம ரிஷி பதிகம்

 


அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை எந்தை அகத்திய பிரம்ம ரிஷி வாஅழ்க


அகத்திய பிரம்ம ரிஷி அடியவர் ஒருவர் எழுதிய அகத்திய பிரம்ம ரிஷி பதிகத்தை, காயத்திரி மந்திரத்தை இங்கு சமரப்பிக்கின்றோம். 

🙏🙏🙏🙏

ஓம் கங்கணபதயே நம


ஓதிமலையப்பனே போற்றி 


ஓம் கும்பமுனி யாய வித்மஹே கும்ப மலை வாசாய தீமஹி

தந்நோ கும்பேஸ்வர புத்ர பிரசோதயாத்


அகத்தியர் பதிகம் 


அகத்தியம் வாழ்க அகத்தீசன் தாள் வாழ்க நொடியின் நொடிப்பொழுதும் எம்மை பிரியோன் தாள் வாழ்க

தென்திசை சமன் செய்த குரு நாதன் தாள் வாழ்க அட்டமாசித்தருளி அண்ணிப்பான் தாள் வாழ்க

உருவன் அருவன் சித்தனடிவாழ்க



விந்திய கர்வம் தடுத்தாண்ட விடை நேசனடி வெல்க

நம்பியோரை கைவிடாத நன்நெறியோன் கழல்கள் வெல்க

புனிதன் புண்ணியன் பூங்கழல்கள் வெல்க

நின்னை நினைத்தாலே உள் உருகும் கருணைக் கழல்கள் வெல்க

 நின்னை பற்றியோர் இடர்களையும் சித்தன் கழல்கள் வெல்க



குருவடி போற்றி குருநாதன் அடிபோற்றி அகத்தியன் அடிபோற்றி ஆசான் அடி போற்றி சுவடியில் வந்துதிக்கும் சூட்சும னடிபோற்றி மாயையை ஒழித்து ஞானம் அருளும் அண்ணல் அடிபோற்றி பொதிய மலை அரசன் அகத்தீசனடி  போற்றி


வற்றாத ஞானம் அருளும் மலை போற்றி கும்பமுனி நீ எம் குருவாய் வந்ததினால் நின் கருணையால் நின் பாதம் வணங்கி இப்பிறவி முழுவதும் உன் திருநாமம் உரைத்து எங்கள் வினை தீர போற்றி வணங்குவோம் யாம்.


கமண்டலம் ஏந்தி கருணை விழியோடு நீ தோன்றாத் துணையனாய் நாடியில் வந்தெய்தி 

எங்கள் கற்பனைக்கும் கணக்கிற்கும் எட்டாத அருள் வழங்கி நஞ்சு அடங்கிய நாகத்தின் மேல் ஒளிரும் மாணிக்கமாய் இருள் சூழ்ந்த எங்கள் மனதில் ஒளியாய் இருப்பவன்

எத்தனை பிறவிப் பெருங்கடல் நீந்தி வந்தோம் யாமறியோம் ஐயனே 

கடுகின் மணியளவு புண்ணியம் செய்திருப்போம் இல்லையெனில் நின் திருநாமம் உரைக்கவோ நின் திருப்பாதங்களை பற்றவோ எமக்கேது பாக்கியம்

தடுமாறி தத்தளித்த எம்மை கரையேற்றி காத்தது நீ அல்லவா

தும்பை மலரோனே தூயவனே நவகோடி சித்தர்கள் எல்லாம் அய்யனே அகத்தியா என போற்றும் புண்ணியனே சிவனின் புதல்வனே விண்ணும் மண்ணும் சேர்ந்தளந்தாலும் அளவிடமுடியாதவனே  அடியவர் மனதில் அன்பால் அடங்கிநிற்பவனே

இறை தூதனே மறை நாயகனே கள்ளமும் கபடமும் மிகுந்து நிற்கும் இவ்வுலகில் உன்னருள் மட்டுமே ஆறுதல் அளிக்குதய்யா 

எவ்வறிவும் இல்லாத எங்களுக்கு மெய்ஞானம் அளிக்கும் ஞான உபதேசிகனே


நாடி வருவோர்க்கு நாடியில் வந்தெய்தி

நலம் அருளும் நன்னெறியோனே 

சத்தியனே நித்தியனே உத்தமனே

விதியினை மாற்றுவாய் வினைகளை அகற்றுவாய் ஞானப் பாதை காட்டிடுவாய் வீடுபேறு தந்திடுவாய்

மலரின் மடியில் தேங்கிநிற்கும் தேன் போல எங்கள் மனதின் மடியில் ஊறி நிற்கும் அமுதே பிறவியின் துன்பம் போக்கும் எங்கள் குரு தேவனே யுகயுகமாய் விண்ணோரும் மண்ணோரும் வணங்கி வழிபடும் வல்லோனே

பாசி படர்ந்து மூடிய குளமாய் வினைகளால் மூடி மும்மலம் சேர்ந்து வஞ்சகம் நிரம்பி வழியும் இந்த பாவ உடலில் உம்மை வணங்கி உள்ளே அகத்திய ஜோதி ஏற்றினோம் மன இருள் போக்கும் ஒளியே உன்னையே நினைத்து மனம் உருகுதே உருகியே கரைகிறதே

அற்ப்பர்கள் எங்கள் வினை மாற்றி எம்மை தேற்றி 

எண்ணிலடங்கா இன்பமருளும் இகபரனே எம் அரனே ஆண்டவனே உன்னை அறிய முடிந்த இப்பிறவியே எங்கள் புண்ணிய பிறவி உன் அருளால் உம்மை அறிந்தோம்

சங்கடங்கள் தீர்க்கும் சத்குருவே சகலமும் அறிந்த சமரனே சாந்தனே

யுத்த களத்தில் தசரத மைந்தன் தத்தளித்து நின்றபோது தக்க சமயத்தில் ஆதித்ய ஹிருதயம் அருளி மனக்கிலேசம் போக்கியவனே

எங்கள் போக்கிடமும் உன் திருவடிகளே

தாயின் அன்பும் தந்தையின் பண்பும் ஒரு குணத்தில் இணைந்தால் அதுவே குரு உறவாம் கும்பமுனியே குழந்தை மனதோனே

நீயே எம் குரு கும்பிடுகிறோம் உன்னை எங்கள் செருக்கழித்து வாழ்வினை செம்மையாக்குவாய்

அகத்தீசா என்று அழைத்தால் அப்பனே மைந்தனே அம்மையே மகளே என்று அன்பு காட்டி கருணை செய்கிறாய் கண்ணீர்           பெருகுதய்யா

கருணாமூர்த்தியே கற்பகத்தருவே கண்கண்ட தெய்வமே காலத்தை வென்றோனே காக்கும் கடவுளே

ஆதி சித்தனை தந்தையாக உமாசங்கரியை தாயாக குகனை குருவாக தமிழை கருவாக கொண்டவா

பச்சை வண்ணோன் பிரியனே மயில்வாகனனின் மனசாட்சியே

ஒழுக்கம் என்றால் அகத்தியன் அகத்தியன் என்றால் ஒழுக்கம் என்று பார்வதி தேவியின் பாராட்டு பெற்றவனே


கல்யாண தீர்த்தம் எங்கள் கவலையெல்லாம் தீர்க்கும் பாபநாசம் எங்கள் பாவங்களை நாசமாக்கும் அகத்தீஸ்வரம் எங்கள் அகத்தில் ஈஸ்வரம் ஊறவைக்கும் பலராமபுரம் பலகோடி புண்ணியங்களை தந்துவிடும் பொதிகை மலை எங்கள் வினை பொதிகளை எல்லாம் கரைத்துவிடும்



தரணி காக்க பரணி தந்தாய் காடுகள் காக்க காவிரி தந்தாய் உடற்பிணியினை போக்க சித்த வைத்தியம் தந்தாய் மனப்பிணியைப் போக்க ஜீவநாடியில் வந்தாய் வழிகாட்டி அருள் ஊட்டி பாலை மனதை சோலை ஆக்கினாய்



அழியும் இவ்வுடலுக்கு

ஆயிரமாயிரம் அழியும் ஆசைகள்

அழியும் எதுவும் வேண்டாம் அகத்தியா அழியாத உன் கருணை மட்டுமே எங்களுக்குப் போதும் அகத்தியப்பா 

அழியும் உடல் அக்னிக்கு அர்ப்பணம் அழியாத எங்கள் ஆத்மா அகத்தியனுக்கு சமர்ப்பணம்



பிறவிகள் இனி வேண்டாம் அகத்தியா வினையின் பயனாக இனி பிறந்தாலும் உன் பிள்ளையாகவே பிறக்கவேண்டும் அகத்தியா அகத்தீசா அகத்தியப்பா 

உன் காலடி நிழலிலேயே வாழ வேண்டும் வரம் தருவாய் குருதேவா உன் புனித பொற்பாதங்கள் போற்றி போற்றி


கும்ப மலை வாசனே போற்றி போற்றி

சதுரகிரி சஞ்சாரியே போற்றி போற்றி

பொதிகை மலை அரசனே போற்றி போற்றி தாமிரபரணி தாயே போற்றி போற்றி காவேரி தாயே போற்றி போற்றி அம்மை லோபமுத்ரா உடனுறை அகத்தீஸ்வரா போற்றி போற்றி நின் திருவருளால் வளம் பெற்று வாழட்டும் வையகம் ஓங்கி செழித்து பரவட்டும் அகத்தியம்🙏🏼🙏🏼🙏🏼



🌹சுபம் 🌹

Tuesday, June 13, 2023

சித்தர்கள் ஆட்சி - 98 : ஆதி ஈசன் வர்ணஜால தரிசனம்

 


*எந்தை அகத்திய பிரம்ம ரிஷி நமச்சிவாய வாஅழ்க*


ஆதி ஈசன் இறைவன் எழுதிய திருவாசகத்தில் உள்ள முதல் பாடலில் ஒரு வரி வரும்


*நிறங்கள் ஓர் ஐந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய் எம்பெருமான்*


இந்த வரிக்கு விளக்கம் புரிய வேண்டும் எனில் இறைவன் அருள் செரிந்து உள்ள இந்த வீடுயோ பதிவை பார்க்கவும்


(நன்றி பரமசிவம் ஐயா, மதுரை)


*இந்த தீபம் மாயவரம் அருகில் சிவாலயம் ஒன்றில் அட்டவீராட்டம் தளத்தில் ஏற்றும் பொழுது பூஜை இறுதி நிலையில் இவ்வாறு தொடர்ந்து ஒளி ஆற்றல்கள் பல்வேறு வர்ணஜாலங்களை நிகழ்த்தியது இதில் எந்தவித கிராபிக்ஸ் ஒர்க் இல்லை அனைத்தும் இறை அருளின் வெளிப்பாடு இதை நமது அன்பர் சாதாரணமாக கணித்து வீடியோ எடுத்தது. *


எந்தை அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-


சில உண்மைகளை கொடுத்து இறைவன் இருக்கின்றான் என்பதை தெரிவி போதுமானது

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

சித்தர்கள் ஆட்சி - 97 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - ஜாதகத்தின் லாபம் புண்ணியத்தின் மூலமே

 


*எந்தை அகத்திய பிரம்ம ரிஷி வாஅழ்க*


(இனி சோதிடமே யாரும் பார்க்கத்தேவை இல்லை..எந்தநாளும்)


*அனைவருக்கும் பொது*

உங்கள் ஜாதகத்தில் லக்கினம் (1ஆம் பாவம்). அதன் லாபம் ஸ்தானம் 11ஆம் பாவம். 


உங்கள் லாபத்தை பார்ப்பதை விட , லாபத்தின் லாப ஸ்தானத்தை நன்கு இயக்க தானாகவே லாபம் வரும். 


அதாவது 11ஆம் இடத்துன் லாப பாவம் உங்கள் தர்ம பாவம் (9ஆம் இடம்)

உதாரணம்:-


கும்ப லக்கினம்/ராசி:-


1ஆம் பாவம் - கும்பம்

11ஆம் பாவம் - தனுசு 


இப்பொது இந்த லாப ஸ்தானமான தனுசு ராசிக்கு லாபம் ஸ்தானம் எது என்று பார்க்க வேண்டும்


1 - தனுசு

11 - துலாம். 


இந்த துலாம் ராசி இப்போது கும்ப லக்கினத்திறக்கு 9 ஆம் பாவம் ஆக வரும். 


ஆக, ஒருவர் ஜாதகத்தில் லாபம் நிறைய தர்மத்தை உடும்பு பிடியாக பிடித்து தர்மம் செய்து புண்ணியங்களை பெருக்க பெருக்க, லாபம் இறை அருளால் தானாக வரும். 

( இதன் நாடி வாக்கு ) 

*அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு*

அப்பனே அவனவன் கர்மா அவனவனே அனுபவிப்பான்!!

அப்பனே அவனவன் புண்ணியம் அவனவனே அனுபவிப்பான்!!

*பதினொன்றில் கூட உயர்ந்த ஸ்தானத்தை எவை என்று கூட நீ  ஒன்பதில் செய்தாயோ... அதை எவை என்று கூட அனைத்தும் அப்பனே வட்டியாகவே உந்தனுக்கு எவை என்று கூட 11ல் வரும்பொழுது நிச்சயம் பின் சனியவன் கொடுப்பான் என்பேன் அப்பனே!!!!!*

(சித்தன் அருள் - 1343 - அன்புடன் அகத்தியர்)


🙏🙏🙏🙏🙏🙏🙏


தர்ம பாவத்தை தர்மம் செய்து இயக்க லாபம் வட்டியுடன் திரும்ப உந்தனுக்கே வரும். 


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

சித்தர்கள் ஆட்சி - 96 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - 7 ஆம் அறிவு





*எந்தை அகத்திய பிரம்ம ரிஷி வாஅழ்க*


*1ஆம் அறிவு* - காமம்

*2ஆம் அறிவு* - பொறாமை

*3ஆம் அறிவு* - ஆசை

*4ஆம் அறிவு* - இறைவா!!!!  நீயே எந்தனுக்கு பின் நான்கு திசைகளிலும் கூட!!! யாரும் இல்லை!!! யான்அனாதையே

*5ஆம் அறிவு* - புண்ணியம்

*6ஆம் அறிவு* - இறைவனை உணர்தல் ( இறைவா!!!உன்னைத்தவிர எந்தனுக்கு எதுவும் தேவை இல்லை ) 

*7ஆம் அறிவு* - இறைவனை அடைதல்

*8ஆம் அறிவு* - அஷ்டமா சித்தி

*9ஆம் அறிவு* - ………

*10ஆம் அறிவு* - …….


( அகத்திய பிரம்ம ரிஷி அருளிய நாடி வாக்கு ) 👇



சித்தன் அருள் - 1257 - அன்புடன் அகத்தியர் - சபரிமலை சபரிநாதன் சன்னதி!


சபரிமலை 18 படி விளக்கம்!! 


இங்கு முதல் படி என்னதான்? குறிக்கின்றதென்றால் அப்பனே பின் காமம்!! 


காமத்தை ஒழித்து விட்டாலே அடுத்த படி பின் ஏறிவிடலாம் அப்பனே!!!


ஆனால் முதல் படியிலே தோல்வியை அடைந்து விடுகின்றான் மனிதன்!!!


அப்படி இருக்கையில் இவ் ஐயனும் எப்படிதான்!!!??? கொடுப்பான்?? என்பேன் அப்பனே!!!!


அப்பனே அடுத்தது அடுத்த படி பொறாமை... அப்பனே அடுத்த படியில் பின் பொறாமையை விலக்கவேண்டும் என்பேன் அப்பனே!!!! 


ஆனால் அதையும் மனிதர்கள் விலக்குவதில்லை என்பேன் அப்பனே பின் இரண்டாவது படியிலும்தோல்வி அடைந்து விடுகின்றான்!!!!


மற்றொரு படியில் அப்பனே( மூன்றாம் படி) ஆசைகள்!!!!


அப்படி ஆக வேண்டும் இப்படி ஆக வேண்டும் என்பது அதாவது மூன்றாவது படி அப்பனேஅப்பொழுதே தோல்வி அடைந்து விடுகின்றான் என்பேன் அப்பனே!!!


இவ் மூன்று படிகளுமே அப்பனே முக்கியமானவை!!!


இவ் மூன்று படிகளில் கூட இவ்வாறு நினைக்காது பின் எதையென்று ஏறினால் அப்பனே....வெற்றிஅடுத்த நான்காவது படிக்கு சென்று விடலாம்!!!!


ஆனால் மூன்று படிகளிலே மனிதன் தோல்வியடைவதால் அப்பனே ஐய்யனும் கூட அமைதியாக தான்இருக்கின்றான்!!! புரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!


எதை எதை என்று அறிய அறிய அப்பனே நான்காவது படி என்பது அப்பனே!!!!


இறைவா!!!!  நீயே எந்தனுக்கு பின் நான்கு திசைகளிலும் கூட!!! யாரும் இல்லை!!! யான்அனாதையே என்று சொல்லி ஏறினால் மட்டுமே அவனுடைய லீலைகள் பின் தொடரும் என்பேன்அப்பனே!!!!


அதாவது எதை எதை என்று அறிய அப்பனே ஐந்தாவது பின் படி என்பது கூட புண்ணியத்தைக்குறிக்கும்!!! 


எதை என்று அறிய அறிய!!!!


பின் எவை என்று கூற பின் ஐயனே!!!! எந்தனுக்கு அதாவது புண்ணியத்தை யான் பல செய்யவேண்டும் அதனை தா!!!! என்று உணர்ந்தால் நீ ஐந்தாவது படியில் வெற்றி பெற்று விடலாம்என்பேன் அப்பனே!!!


ஆனால் ஐந்தாவது படியிலும் தோல்வி அடைந்து விடுகின்றான் நான்காவது படியிலும் கூடதோல்வியடைந்து விடுகின்றான் அப்பனே!!!!


இப்படி இருக்க ஐயன் எப்படித் தான் கொடுப்பான்??? என்பேன் அப்பனே!!!!


எதை எதை என்று அறிந்து அறிந்து அப்பனே பல மனிதர்களுக்கும் கொடுத்து இருக்கின்றான்!!! ஆனால் படிகளில் ஏறும் பொழுது கூட அப்பனே எதை என்று உணர்ந்து!! உணர்ந்து!!!


ஐயப்பா!!!!! ஐயனே!!! என்று தான் ஏறிக் கொண்டிருக்கின்றார்கள் இன்னும் கூட பல மனிதர்கள்!!!! என்பேன் அப்பனே!!! நலமாகவே இதை இதை என்று அறிவதற்கு கூட அப்பனே எதை என்று அறியஅறிய 


இவ் ஆறு(6) எதை எதை என்று அறிய அறிய அப்பனே அனைத்தும் தேவையில்லை ஐய்யப்பா!!!! அனைத்தும் தேவை இல்லை என்று ஒரு வார்த்தை சொல்லிவிட்டால்


அவந்தன் ஏழாவது அறிவிற்கு சென்று விடுகின்றான்!!! 


ஐயனே வந்து பின் கையைப் பிடித்து அழைத்து அனைத்து படிகளிலும் ஏற்றி விடுவான் என்பேன்அப்பனே!!!


இதுதான் சூட்சமம் என்பேன் அப்பனே!!!!!


ஆறு படிகள் வரை சொல்லிவிட்டேன் அப்பனே இன்னும் எதையென்று அறிந்து அறிந்து  பின்எவையென்று உணர்ந்து உணர்ந்து பின் ஏழாவது எதை எதை என்று அறிய அப்பனே பின்சொல்கின்றேன் அப்பனே!!!!! 


இவ் ஆறு படிகளை கடக்க வேண்டும் எதை என்று அறிய அறிய இவ் ஆறு படியை இப்படி கடந்தால்தான் மட்டுமே அப்பனே இவ் ஐயப்பனே எதையென்று உணர்ந்து உணர்ந்து நல்விதமாக கையைபிடித்து  அனைத்து படிகளிலும் ஏறச் செய்து அப்பனே வெற்றியை நல்குவான் அப்பனே!!!!


இதுதான் ரகசியம் என்பேன் அப்பனே!!!!


🙏🙏🙏🙏🙏🙏


——————————-


நாடி வாக்கின்  விளக்கம்:

*மனிதனின் 5ஆம் அறிவு மிக அதி அவசியம். இதை வைத்தே பல சாதனைகள் புரிய இயலும். இந்த 5ஆம் அறிவை மனிதன் பயண்படுத்தியதாக சரித்திரமே இல்லை. இந்த 5ஆம் அறிவு சரியான முறையில் பயன்படுத்தினால் அவனது பல சகத்திகளை அதிகரித்து அவனை சாதனையாளனாக்கும். உலகத்தை ஆள வைக்கும்*

*6ஆம் அறிவு குறைந்த பட்சம் 1 மணி நேர தியானம். ஆலயங்களில் இந்த 6ஆம் அறிவு இறைபலங்களை பலமடங்கு அதிகரிக்கும்*

*தானமும் (5ஆம் அறிவு) , தவமும் (6ஆம் அறிவு) செய்வாராகின் வானவர் நாடு (7ஆம் அறிவு இறை) வழி திறக்குமே* - ஔவை பாட்டி


*7ஆம் அறிவை அடைந்த உடன், இறைவன் கருணையால் 8ஆம் அறிவு(அஷ்டமா சித்தி)திறக்கும்.*


விதியின் வசம் - 1,2,3ஆம் அறிவு


*மனிதன் வசம் - 4,5,6ஆம் அறிவு*


*மனிதன் நினைத்தால் நிச்சயமாக விதியை 4,5,6ஆம் அறிவில் மூலம் வெல்ல இயலும். இதுவே சித்த ரகசியம்.*


1,2 3ஆம் அறிவு - பணம், வேலை, கடன், இல்லரம், மனிதன் சந்திக்கும் அனைத்து பிரச்சினைகள். 


இந்த 3 அறிவுக்கு மட்டும் அவனது முழு சிந்தனை ஓங்குவதால் கர்மங்கள் மழை போல சேரந்து கொண்டே இருக்கும். 


குறைந்த பட்சம் 5ஆம் அறிவான புண்ணியத்தை கையில் எடுத்தால் மட்டுமே நல் வாழ்வு. 


இந்த 5ஆம் அறிவை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற பதிவு

👇👇👇👇👇👇👇👇👇


https://siththarkalatchi.blogspot.com/2023/05/94.html?m=0






Monday, June 5, 2023

சித்தர்கள் ஆட்சி - 95 : இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க ( திருவாசகம் - சிவபுராணம்)







*எந்தை அகத்திய பிரம்ம ரிஷி வாழ்க*


திருவாசகத்தில் உள்ள சிவபுராணத்தில் உள்ள ஒரு மகத்தான வரியின் உலகம் அறியாத சிதம்பர ரகசுயம் அதன் ஆழ்ந்த பொருள் விளக்கம். அனைத்து சிவனடியவர்களுக்கும், திருவாசகம் ஓதும் அனைவருக்கும் இந்த சிதம்பர ரகசியத்தை பகிருங்கள். 




இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க


இதன் முழு அர்த்தம் ஈசன் நம் அனைவர் உடலில் நெஞ்சில்-இதயத்தில் உள்ளார். அதை விளக்கும் மகத்தான நாடி வாக்கு:- (சித்தன் அருள் - 1319 - அன்புடன் அகத்தியர் - பழனி வாக்கு!. )


*அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-*


அப்பனே எதை என்று அறிய அறிய பல வழிகளிலும் கூட அன்புகள் செலுத்தபட வேண்டும் அப்பனே 

இறைவனிடத்தில் அன்புகள் செலுத்த செலுத்த அப்பனே இதயத்தில் ஓர் அணு உள்ளதப்பா!!!!!!! 


அதாவது அப்பனே எதை எதை என்று அறிய அறிய அப்பனே அவ் அணுவிற்குள் சிறிய அப்பனே எதை என்று அறிய அறிய அதாவது சிறிய எவை என்று அறியாமல் துரும்பை போல் உள்ளே பின் இருக்குதப்பா!!!


ஆனாலும் அவைதன் எவையென்று அறியறிய *அப்பனே அவைதனை நீ நிச்சயம் ஆட வைக்க வேண்டும் என்பேன் அப்பனே!!!!! 


அவைதனை ஆட வைக்க எவ்வாறு என்பதையும் கூட அப்பனே நிச்சயம் திருத்தலங்களை கூட சென்றடைய வேண்டும் என்பேன் அப்பனே!!! 


ஏன்??  சித்தர்கள் இவ்வாறு திருத்தலங்களை அமைத்தார்கள் என்பதையும் கூட யான் எடுத்துரைக்கின்றேன் அப்பனே!!!! 


அதாவது அணுவின் உள்ளே அப்பனே சிறு துரும்பானது அப்பனே ஆட்டமிட வேண்டும் என்பேன் அப்பனே!!!! 


அவ் ஆட்டம் (சிவ நடனம்) தொடங்கினால் தான் அப்பனே அனைத்தும் தெரியவரும் என்பேன் அப்பனே!!! 


அவ் பின் ஆட்டம் (சிவ நடனம்) தொடங்குவதற்கு அப்பனே பல திருத்தலங்களில் கூட சக்திகள்!!!!  எதை எதை என்று அறிய அறிய பல கிரகங்களின் சக்திகளும் நட்சத்திரங்களின் சக்திகளும் அப்பனே இன்னும் அப்பனே பதிந்துள்ளது என்பேன் அப்பனே!!!


அங்கு செல்ல செல்ல அப்பனே அது ஆட்டம் அப்பனே மிஞ்சும் என்பேன்!!! அதாவது ஆட்டம் எதை எதை என்று அறிய அறிய அப்பனே நிச்சயம் ஆடும் என்பேன் அப்பனே!!


இவ்வாறு ஆடும்பொழுது ( நெஞ்சில் சிவ நடனம்) அப்பனே உடம்பில் உள்ள எதை என்று அறிய அறிய சில அழுக்குகள் (கர்ம வினைகள்) அப்பனே தானாகவே வெளியே சென்று விடும் என்பேன் அப்பனே.


🙏🌸🙏🌸🙏🌸🙏🌸🙏🌸

👇👇👇👇👇👇👇👇👇👇


(இறை) சக்திகள் அதாவது எதை என்று அறிய அறிய இவ்வாறு (சிவ நடனம்) ஆடும்பொழுது அப்பனே சக்திகள் அப்பனே உள்ளிழுக்கும் என்பேன் அப்பனே.

பின் எதை எதை என்று அறிய அறிய அப்பனே இதனால்தான் இதற்கும் கூட """""""சிதம்பர ரகசியம்!!!!! என்பது தத்துவத்தை கொண்டு அப்பனே!!! 


👆👆👆👆👆👆👆👆👆

🙏🌸🙏🌸🙏🌸🙏🌸🙏🌸


அதனைப் பற்றியும் கூட அப்பனே அங்கு சிதம்பரத்தில் உரைக்கின்றேன் ஒரு நாள் நிச்சயம் அப்பனே!!!!


இவ்வாறு (சிவ நடனம் அந்த அணுவின் மூலம்) ஆடும்பொழுது அப்பனே நிச்சயம் அனைத்து திறமைகளும் வந்து சேருமப்பா!!!!!


நிச்சயம் அப்பனே அதனை ஆடுவதற்கு தான் எதை என்று அறிய அறிய எவை என்று கூட *(அந்த ஈசன் அணுவை சிவ நடனத்தால்) ஆட்டுவிற்பதற்கு தான் இறைவன் தேவை என்பேன் அப்பனே!!!*


அவ்வாறு பின் எங்கு சென்றாலும் எதை என்று அறிய அறிய அப்பனே அதை ஆட்டிப்படைக்கவில்லை என்றால் அப்பனே வீணாகப் போய்விடும் என்பேன் அப்பனே!!!!


இதனால்தான் அப்பனே உண்மையான பக்திகள் செலுத்துபவர்களுக்கு அங்கும் இங்கும் அலைந்து திரிந்தால் அப்பனே அது ஆடும் என்பேன் அப்பனே!!!


இவ்வாறு ஆடும்பொழுது சக்திகள் அப்பனே பெருகும் என்பேன் அப்பனே!!!


நோய்களும் எதை என்று அறிய அறிய அதனால் தான் அப்பனே திருத்தலங்கள் முன்பே அமைத்தார்கள் அப்பனே எதை எதை என்று அறிய அப்பனே மனிதனுக்கு எவை என்று கூட மனிதரிடத்தில் அனைத்து திறமைகளையும் வைத்துக்கொண்டு ஆனாலும் தெரியாமல் அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றான் அப்பனே!!! எவ்வாறு என்பதையும் கூட!!!


இதனால் அப்பனே நிச்சயம் உண்மை நிலையை உணருங்கள் அப்பனே!!! 


தெய்வத்தைக் கூட எப்படி வணங்குவது என்பதை கூட தெரியாமல் அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றான் அப்பனே பின்பு தெய்வத்தையே திட்டுகிறது!!! எதை எதை என்று அறிய அறிய மனிதன்!!!!....... இல்லை இல்லை அதாவது தெய்வம் இல்லை என்று சொல்லிவிடுவது அப்பனே!!!


இக் கலியுகத்தில் அப்பனே நிச்சயம் அவ் அணுவில் உள்ளே அப்பனே ஆட்டம் செல்லாதப்பா!!!


அதனால்தான் அப்பனே பல திருத்தலங்களை கூட எவை என்று கூட அப்பனே நீ இறைவனை கூட அப்பனே எவை என்று கூட  எதை எதை என்று அறிய வணங்காவிடிலும்....... ஆனாலும் அப்பனே திருத்தலத்திற்கு சென்று எப்படியாவது தங்கி அதாவது பின் அப்பனே எவை எவை என்று அறிய அறிய தங்கும் பொழுது அப்பனே அது தானாகவே ஆடும் என்பேன் அதன் உள்ளே!!!! சொல்லிவிட்டேன் அப்பனே எதை எதை என்று அறிய அறிய!!!!


ஆனாலும் இப்படியே எவை என்று கூட ஆடும் பொழுது அப்பனே பல பல இறை சக்திகள் அப்பனே பின் உடலில் புகும் பொழுது அப்பனே அனைத்தும் நிறைவேறும் என்பேன் அப்பனே!!!!!

(—- 4/4/2023 பங்குனி உத்திர ஆரம்ப நாளில் பிரம்ம முகூர்த்தத்திலே குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு - வாக்குரைத்த ஸ்தலம் : பழனிமலை தண்டாயுதபாணி சன்னிதானம். )


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


அனத்து ஈசன் அடியவர்களுக்கும் , அவர்கள் குழுக்களுக்கும் இந்த பதிவை அனுப்புவதே சிவ புண்ணியம்.


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏